இந்த வலையில் தேடவும்

Friday, October 1, 2010

ஒரு பதிவரின் புலம்பல்கள்

கேள்வி: blog ஆரம்பிக்க வேண்டும் என்ற (விபரீத) எண்ணம் எப்படி வந்தது?
பதில் : ஒரு நாள் ஜோசியர் என் ஜாதகத்தில் சனி திசை நடப்பதாகச் சொன்னார்.....மறு நாள் ஆபீசில் தப்பித் தவறி தமிழில் ஒரு ப்ளாக்-ஐப் பார்த்துத் தொலைத்த போது....



கே: தங்கள் ப்ளாக்-ஐ தமிழ் மொழியில் தொடங்கியதன் காரணம்?
ப: (தமிழ் என் ரத்தத்தில் ஊறிய .........)ஹி ஹி அது ஒண்ணு தான் கொஞ்சம் உருப்படியா வரும்....


கே: தங்கள் blog -ஐ எத்தனை பேர் follow - செய்கிறார்கள்?
ப: நான்கு பேர்..... ( நாலு பேர் போற்ற நடந்து கொள்வது என்பது இது தானோ?)



கே: Blog -ஐ தொடங்கியதால் உங்களுக்கு ஏற்பட்ட நன்மைகள்?
ப: ஒன்றிரண்டு நல்ல மறு மொழிகள்....



கே:
Blog -ஐ தொடங்கியதால் உங்களுக்கு ஏற்பட்ட தீமைகள்?
ப: * gmail mania .....(அதாங்க கமெண்ட் வந்திருக்கா என்று ஒரு நிமிடத்திற்கு 70 முறை ஜிமெயில் செக் செய்வது...INBOX என்ற பட்டனை தொடர்ந்து அழுத்துவது )

*ஆபீசில் வேலைகளை ஒழுங்காகச் செய்யாமல் மானேஜரிடம் டோஸ் வாங்குவது....

*கண் எரிச்சல்...

*சில மொக்கை ப்ளாக்-களைப் படித்து அரை லிட்டர் ரத்தம் போனது...

* நாளைக்கு என்ன எழுதலாம் என்று யோசித்து (?) இரவில் தூக்கம் கெடுவது....

*Google transliteration சில சமயம் கொடுக்கும் எரிச்சல்கள் ..... உ.தா:'TYPE ' என்று அடித்தால் "டிபே" என்று வருவது...(google -இன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? )

*பிளாக்கர் சில சமயம் கொடுக்கும் தொல்லைகள் ....(உ.தா: எழுதும் போது ஒழுங்காகக் காட்டி விட்டு பப்ளிஷ் பண்ணியதும் மகாவிஷ்ணு திடீரென்று வளர்ந்தது போல் கொட்டை எழுத்துகளில் வருவது)


கே: வலை உலக மக்கள் எதை விரும்புகிறார்கள்?
ப: ம்...இது உண்மையிலேயே உளவியல் முதுகலை வகுப்பில் இடம் பெற வேண்டிய Ph .D topic ....யாரோ ஒருவர் திருவள்ளுவர் ரேஞ்சுக்கு ரெண்டு வரி எழுதினால் 75 கமெண்ட் வருகிறது.... நாம் உலகம் சுற்றும் வாலிபன் லெவலுக்கு google -இன் கடைசி பக்கம் வரை தேடி ஆராய்ச்சி எல்லாம் செய்து பக்கம் பக்கமாக எழுதினால் சாஸ்திரத்திற்கு ரெண்டு கமெண்ட் வருகிறது......(அதுவும் well said , keep it up மாதிரி)


கே: மொக்கை என்றால் என்ன?
ப: இதைத் தெரிந்து கொள்ள வலை உலகில் நிறைய அனுபவம் வேண்டும் ...அடுத்த கேள்வி..


கே: வலை உலகில் பிரபலமடைய சில டிப்ஸ் ப்ளீஸ்?
ப: என் முந்தைய பதிவைப் பார்க்கவும்


கே: Blog - என்பதை யார் கண்டு பிடித்தார் என்று தெரியுமா?
ப: அந்த ஆளைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன்


கே: பிற பதிவர்களுக்கு உங்கள் அறிவுரை ஏதாவது?
ப: வள்ளுவர் ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால்


மொக்கை இல்லாத பதிவு காக்கையின்

எச்சம் போல் எண்ணப்படும்


கே: வலை உலகில் கிடைத்த நண்பர்கள் பற்றி?

ப: google - இல் ஒரு நாள் 'ஷில்பா' என்பவர் 'hi ur blog is good' என்று ping செய்தார்....உடனே உற்சாகமாகி "hi , thanks ! where r u " என்ற ரேஞ்சுக்கு உரையாடல் தொடர்ந்தது...உரையாடலின் முடிவில் தான் அவர் 59 வயது aanti (பாட்டி?) என்று தெரிந்தது.... பேர மாத்துங்கப்பா.....கல்யாணமானதும் கணவன் பெயரைப் போடுவது போல் 40 வயது தாண்டியதும் 'ஆண்டி' என்று எல்லாப் பெண்களும் பின்னால் சேர்த்துக் கொள்ள ஒரு சட்டம் போடச் சொல்லி மன்-மோகனுக்கு கடிதம் எழுதியுள்ளேன்....ஷில்பாவைத் தவிர வேறு எந்தப் பாக்களும் இது வரை நண்பவில்லை...


கே: திரட்டிகளில் blog -ஐ இணைத்துள்ளீர்களா?
ப: ஆமாம்....google -இல் tamil blog aggregator என்று டைப் செய்து வந்த எல்லா சைட்டுகளிலும் இணைத்துள்ளேன் .....ஜிமெயில் இல் forgotton password என்று மெயில்கள் வந்தது தான் மிச்சம்...


கே: அடுத்ததாக நீங்கள் எழுதப் போகும் பதிவு பற்றி?
ப: அறிவியல், சங்கீதம் என்றெல்லாம் (சின்னப்புள்ளை தனமாக) எழுதாமல் மொக்கையில் முக்கி சக்கை போடு போடலாம் என்று இருக்கிறேன்.....


கே: கடைசியாக உங்களைப் பற்றி...நிஜப் பெயர்,ஊ
ர் , படிப்பு,வேலை ?
ப: கேள்விகளுக்கு நன்றி.....



~ சமுத்ரா






5 comments:

Anonymous said...

LOL. I like it.

VELU.G said...

அறிவியல் பற்றி நிறைய எழுதியிருப்பீங்க போல இருக்கு

படிச்சிட்டு வர்றேன்

Anonymous said...

If you are think to stop write about the science, please don't stop. Other than paper books there is no good reference are not available in the net for science in tamil(correct me if I am wrong). Future is internet.

Thanks
Gokul

பனித்துளி சங்கர் said...

நகைச்சுவை ததும்புகிறது பதிவின் அனைத்து இடங்களிலும் . கலக்கல் . வாழ்த்துக்கள் நண்பரே தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன் !

Radhakrishnan said...

ஹா ஹா