இந்த வலையில் தேடவும்
Friday, October 8, 2010
நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-2
1 ஆப்பிரிக்கன் ஒருவன் ஒரு காய்கறி கடைக்கு சென்று "எனக்கு ஒரு பாதி முட்டை கோஸ் வேண்டும்" என்றான் கடைக்காரன் அதற்கு பாதி கோசெல்லாம் விற்பதில்லை என்றான்... இல்லை பாதி தான் வேண்டும் என்று அவன் அடம் பிடிக்கவே "இருங்கள், உள்ளே சென்று என் முதலாளியை கேட்கிறேன்" என்று சென்றான்... அவன் பின்னேயே வந்தது தெரியாமல் கடைக்காரன் முதலாளியிடம் "ஒரு கருப்பு நாய் பாதி முட்டை கோஸ் வேண்டும் என்று அடம் பிடிக்கிறது என்றான்... பின்னால் ஏதோ சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்து உடனே "மேலும் இங்கே நிற்கும் இந்த அழகான பெரிய மனிதருக்கு அதன் இன்னொரு பாதி வேண்டுமாம்" என்றான் ...
செய்தி: மனிதன் மிக மிக தந்திரமானவன்....man is very very cunning ...
2 மறதி ப்ரொபசர் ஜான் ஒரு நாள் வீடு மாற்றினார் ...காலேஜில் இருந்து திரும்பி வரும் போது ஞாபகம் இருக்கட்டும் என்று அவர் மனைவி புது முகவரியை நிறைய துண்டுச் சீட்டுகளில் எழுதி அவரின் எல்லா பாக்கெட்டுகளிலும் போட்டு வைத்தார்...காலேஜில் எல்லா துண்டு சீட்டையும் பயன்படுத்தி விட்டு அவர்சாயங்காலம் காரில் வீடு திரும்பினார்...பழைய வீட்டுக்கு வந்ததும் தான் அவர் வீடு மாற்றி விட்டது தெரிந்தது எங்கே போவது என்று தெரியாமல் வீதியில் விளையாடிக் கொண்டு இருந்த ஒரு சிறுமியைப் பார்த்து "ஏ பாப்பா ப்ரொபசர் ஜானோட புது வீடு தெரியுமா?" என்றார்...அதற்கு அந்த சிறுமி " அடுத்த தெருவில் முதல் வீடு அப்பா" என்றாள்...
செய்தி: மனிதன் தான் யார் என்பதையே மறந்து விட்டான்....
~சமுத்ரா
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அழகாய் நகைச்சுவைகளை தமிழில் பதித்திருக்கிறீர்கள்!
Post a Comment