இந்த வலையில் தேடவும்

Thursday, October 7, 2010

மஹிதர் நீ மறைந்து விடு! -1

கோவணத்தாண்டி சொல்வது:

எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி

பஞ்சாயக் காரர்ஐவர் பட்டணமுந் தானிரண்டு

அஞ்சாமற் பேசுகின்றாய் ஆக்கினைக்குத் தான்பயந்து

நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா!

நிலைகடந்து வாடுறண்டி!




விக்ரம் சொல்வது:

அன்று கூட்டம் அதிகம் இல்லை... மாலை சுமார் நாலரை மணிக்கு அவன் என் அலுவலகத்திற்கு வந்திருந்தான்....நன்றாக உடையணிந்து பார்பதற்கு நாகரீகமாகத் தான் இருந்தான்,,,,ஓ நான் யார் என்பதே இன்னும் சொல்லவில்லை அல்லவா? ம்...நான் ஒரு so called சைக்கியார்டிஸ்ட்...பேர் விக்ரம்... ஆமாம் இது ஒரு அழுக்கான வேலை தான்....இன்னொருத்தர் வீட்டுக் குப்பைத் தொட்டியை எட்டிப் பார்பதற்கு சமம்....எட்டிப் பார்ப்பது மட்டுமல்ல...சில சமயம் அதைப் போட்டுக் குடைந்து ஆராய்ச்சி வேறு செய்ய வேண்டும்...என்னிடம் வரும் பெரும்பாலான கேசுகள் அலுப்புத் தட்டக் கூடியவை..."சார் என் புருஷன் ராத்திரி தூக்கத்துல வேற யாரோ பேரை சொல்றார்....சார் எனக்கு உயரத்தில் போனால் அப்படியே அங்கிருந்து குதித்து விட வேண்டும் போல் தோன்றுகிறது, (அப்படியே குதிச்சு தொலைய வேண்டியது தானே?) சார் எனக்கு ஆபீசில் பெண்களிடம் பேசுவது என்றாலே கை நடுங்குகிறது என்றெல்லாம் பல தரப் பட்ட கேசுகள்..... ஒன்று சொல்கிறேன் ...எங்கள் JOB ஒரு உடற்கூறு மருத்துவரைக் காட்டிலும் சவாலானது சார்....அவர் குப்பனுக்கு BP என்றாலும் சுப்பனுக்கு BP என்றாலும் ஒரே டைலாண்டின் கொடுத்து சமாளித்துவிட முடியும்....ஆனால் நாங்கள் அப்படியா? அவன் குலம் என்ன கோத்திரம் என்ன? என்று நதி மூலம் ரிஷி மூலம் எல்லாம் தேடிப் போக வேண்டும்....என்ன பேஜாரான வேலை சார் இது?


அவன் வந்து அமர்ந்தான்....இவன் என்ன ஆரம்பிக்கப் போகிறானோ என்ற கிலியுடன் 'சொல்லுங்க சார்' என்றேன்....சார் என் பெயர் மஹிதர் ...கொஞ்சம் விலாவாரியாகப் பேச வேண்டும்....வேற ஏதாவது அப்பாயின்மென்ட் இருக்கா? என்றான்....நான் எனது P .A தரங்கிணியை அழைத்து
அப்பாயின்மென்ட் ஏதாவது இருக்கா என்றேன்..."இப்ப இல்லை சார் ஏழு மணிக்கு ஒண்ணு இருக்கு...என்றாள்....

ஏழு மணி வரை பொழுது போகட்டுமே என்று, "சொல்லுங்க என்றேன்".....

சார் மூணு மாசத்துக்கு முன்னால் எனக்கு ஒரு கனவு வந்தது

என்னடா இவன் ஏதாவது
மெண்டல் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்து விட்டானா என்று நினைத்துக் கொண்டு "அதுக்கு தான் இவ்ளோ பில்ட்-அப்பா? " என்றேன்

"இல்லை சார்...கொஞ்சம் புல்லா சொல்லிடறேன்"... என்றான் (அதெப்படி'கொஞ்சம்'
புல்லா சொல்ல முடியும்?....?)

அவன் சொல்ல ஆரம்பித்தான்....

~தொடரும்....

1 comment:

எல் கே said...

இவ்ளோ சின்னதா எழுதினா அப்புறம் நான் என் ப்ராப்ளம் சொல்லுவேன்