இந்த வலையில் தேடவும்

Thursday, October 21, 2010

நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-11

ஒரு நாள் அரசாங்க அலுவலகம் ஒன்றில் கண்காணிப்பாளர் பார்வையிட வந்தார்...

ஒரு டேபிளில் இரண்டு பேர் சும்மா உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்...

அதில் ஒருவனைப் பார்த்து " உனக்கு என்ன வேலை?" என்றார் ...

"ஜாயின் பண்ணி ஆறு மாசம் ஆச்சுங்க...இன்னும் சும்மா தான் உட்கார்ந்திருக்கேன் " என்றான்

இன்னொருவனைப் பார்த்து "உனக்கு என்ன வேலை?" என்றார்...

அவனும் "ஜாயின் பண்ணி ஆறு மாசம் ஆச்சுங்க...இன்னும் சும்மா தான் உட்கார்ந்திருக்கேன்" என்றான்...

அவர் மிகுந்த கோபத்துடன் " உங்க ரெண்டு பேர்ல ஒருத்தரை இப்பவே வேலையிலிருந்து தூக்கறேன்....யாருய்யா ஒரே வேலைக்காக ரெண்டு பேரைப் போட்டது?" என்று கத்தினார்...


%%%%%%%
அறிவு ஜீவிகள் மூன்று பேர் தங்கள் ஞாபக சக்தி பற்றி பேசிக் கொண்டிருந்தனர்...

ஒருவன் "நான் ஆறு மாசக் குழந்தையாக இருந்த போது யார் யார் என்னை எப்படிக் கொஞ்சினார்கள் என்று மிகச் சரியாகச் சொல்ல முடியும்" என்றான்.....

இன்னொருவன் "இதெல்லாம் பெரிய விஷயமா? நான் பிறந்த நாள் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது...என்னை டாக்டர் முதுகில் தட்டியது கூட நினைவிருக்கிறது " என்றான்


மூன்றாமவன் " ப்பூ, நீங்கெல்லாம் வேஸ்ட்...எனக்கு நான் ஒரு நாள் ராத்திரி எங்க அப்பா கூட போய் மறுநாள் காலைல எங்க அம்மா கூட திரும்பி வந்தது கூட ஞாபகம் இருக்கு" என்றான்....

~சமுத்ரா

No comments: