இந்த வலையில் தேடவும்

Thursday, September 30, 2010

Blog- உலகில் வெற்றி பெற 20 மகத்தான வழிகள் !
* கூடுமானவரை செந்தமிழில் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்

* கீழ்க்கண்ட சமாச்சாரங்கள் பக்கம் தலை வைத்துக் கூட படுக்கக் கூடாது

அறிவியல்

இலக்கியம்

இசை

* உங்கள் பதிவுகளில் 90 % க்கு மேல் மொக்கையாக இருக்க வேண்டும்... (மொக்கை என்றால் என்ன என்று யாராவது தெளிவாகச் சொல்லுங்களேன்?)

* அரசியலும், சினிமாவும் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்

* சினிமாவில் கஷ்டப்பட்டு நடிப்பவர்களை 'அது சரியில்லை' 'இப்படி நடித்திருக்கக் கூடாது" "பூட்ட கேஸ்" என்றெல்லாம் பாரதிராஜாவிடம் பத்து வருஷம் assistant - ஆக இருந்த லெவலுக்கு அலட்டிக் கொள்ளத் தெரிய வேண்டும்

* ஏற்கனவே டி.வி. நியூஸ் பேப்பர், இன்டர்நெட் என்பதிலெல்லாம் வந்து புளித்துப் போன சமாசாரங்களை (உ.தா:எந்திரன், அயோத்தி) மறுபடியும் எழுதி புளித்த மாவில் இட்லி சுடுவது எப்படி என்று தெரிந்திருக்க வேண்டும்...

* கண்ணில் பட்ட blog -குகளுக்கு எல்லாம் சென்று ஆஹா ஒஹோ அருமை சான்ஸே இல்லை என்றெல்லாம் பின்னூட்டம் இட வேண்டும் (குறிப்பு: பதிவைப் படிக்கத் தேவையில்லை)

* கிளிக் செய்யும் blog -குகளில் எல்லாம் follower - ஆக சேர்ந்து விட வேண்டும்....

* இருக்கிற gadget - களை எல்லாம் உங்கள் ப்ளாகில் போட்டு கிட்டத்தட்ட அது ஒரு குப்பைத் தொட்டி போல் காட்சி தர வேண்டும்

* கவிதைகளை எழுதுவது நல்லது...ஆனால் ஒரு விஷயம் அது யாருக்கும் புரிந்து விடக் கூடாது

* உங்கள் பதிவின் இறுதியில் நீங்கள் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று யாருக்கும் தெரியாத படி எழுத வேண்டும்

* புறநானூறு, திருப்பாவை, சங்க இலக்கியம், செம்மங்குடி, இப்படியெல்லாம் ஏதாவது எழுதுவதாக இருந்தால் தயவு செய்து பதிவை DELETE செய்து விடவும்...உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு காப்பி எடுத்துக் கொண்டு நீங்கள் மட்டும் படித்துக் கொள்ளவும்..

* காதல் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்... பிகர், செட்-அப் ,நூல் விடுவது,பிட்டுப் போடுவது என்றெல்லாம் யூத் பாஷையில் எழுத வேண்டும்..

* நீங்கள் யூத்தாக இல்லை என்றால் (எத்தனை வயது வரை யூத்? முப்பதா?) ப்ளாக் எழுதுவதை விட்டு விட்டு சங்கரா டிவி பார்க்கவும்

* உங்கள் ப்ளாக்-இல் நீங்கள் கூலிங் கிளாஸ் அணிந்து மேலே பார்க்கும் படி ஒரு போட்டோ இருப்பது நல்லது... (அறிவு இருக்குன்னு தெரியணும் இல்ல?)

* கடி ஜோக்குகளை எழுதி உங்கள் ரத்த வெறியை நிரூபிக்க வேண்டும்..(உ.தா:(1 )உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி
பெயில் ஆகும்.(2)சார், டீ மாஸ்டர் டீ போடறாரு,பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?…)

* visitor 's count கண்டிப்பாக இடம் பெற வேண்டும்....இத்தன பேர் எட்டிப் பாத்தாய்களா? நாம நல்லாத் தான் எழுதறமோ? என்று நமக்கே சந்தேகம் வர வேண்டும்

* ஏதாவது நல்ல (?) ப்ளாக் கண்ணில் பட்டால் உடனே ஏதோ பஞ்ச மகா பாதகத்தில் ஒன்றை செய்து விட்டது போல் அலறி BACK பட்டனை அழுத்தி விட வேண்டும்...

* படங்களை நெட்டில் இருந்து சுடுவது எப்படி என்று தெரிந்திருக்க வேண்டும். சொந்த சரக்கு வலை உலகில் விலை போகாது....

* ஹைக்கூ எழுதத் தெரிந்திருக்க வேண்டும்....மூன்று வரிகளில் எதை எழுதினாலும் ஹைக்கூ தான் என்று கண்டிப்பாக நம்ப வேண்டும்....


~சமுத்ரா

17 comments:

ரமேஷ் வைத்யா said...

aahaa oohoo arumai

ரமேஷ் வைத்யா said...

no cooling glass. reading glass ok?

ஞான தேஷிஹன் said...

சூப்பர் பாஸ்.. இன்னிக்கு இயங்கிட்டிருக்க ப்ளாக் உலகம் பத்தி தெளிவா புரிஞ்சு வச்சிருக்கீங்க.
உங்க எழுத்து நடையும் நல்லாருக்கு!

தமிழ் உதயன் said...

அப்படியே ஆகட்டும் பாஸ்....
கலக்கிறுவோம்ல

லதானந்த் said...

1) செந்தமிழிலும் பதிவு எழுதுகிறேன்.
2) அரசியல் மற்றும் சினிமா பற்றி எழுதியதேயில்லை.
3) ஒரு ஆசாமியைக் கூட follow பண்ணியதில்லை.
4) இலக்கியம் பற்றி அவ்வப்போது எழுதுவதுண்டு.
5) கடி ஜோக்குகள் எழுதியதில்லை.
6) சீரியஸ் கவிதை எழுதுவதில்லை. கிண்டலுக்கு ஒன்றிரண்டு கவிதை எழுதுவதுண்டு.


நானெல்லாம் எப்படித்தான் எப்போதுதான் பிரபலமாவது? ஒரே மலைப்பாக இருக்கிறதே?

லதானந்த் said...

1) செந்தமிழிலும் பதிவு எழுதுகிறேன்.
2) அரசியல் மற்றும் சினிமா பற்றி எழுதியதேயில்லை.
3) ஒரு ஆசாமியைக் கூட follow பண்ணியதில்லை.
4) இலக்கியம் பற்றி அவ்வப்போது எழுதுவதுண்டு.
5) கடி ஜோக்குகள் எழுதியதில்லை.
6) சீரியஸ் கவிதை எழுதுவதில்லை. கிண்டலுக்கு ஒன்றிரண்டு கவிதை எழுதுவதுண்டு.


நானெல்லாம் எப்படித்தான் எப்போதுதான் பிரபலமாவது? ஒரே மலைப்பாக இருக்கிறதே?

சைவகொத்துப்பரோட்டா said...

சிரிச்சு முடியல....ஆமா, இது பொதுவா சொன்னதுதான :))
வாழ்த்துக்கள்.

Unmai said...

என் ப்ளாக்கை வாசிச்சிட்டு எல்லோரும் நீங்கதானே அவரு, அப்படீன்னு கேட்கிறாங்கன்னு சும்மா உதார் விட்டு எழுதனும்!!!

DrPKandaswamyPhD said...

இவ்ளோ நல்ல பிளாக்குக்கு எட்டு கமென்ட்தானா? என்ன அக்கிரமம்? நாட்டுல கலி முத்திப்போச்சு.

DrPKandaswamyPhD said...

//நீங்கள் யூத்தாக இல்லை என்றால் (எத்தனை வயது வரை யூத்? முப்பதா?) ப்ளாக் எழுதுவதை விட்டு விட்டு சங்கரா டிவி பார்க்கவும்//

நான் எழுபத்தியைந்து வயது யூத். நான் எந்த "டிவி" யைப் பார்க்கட்டும்?

Jayadev Das said...

ஆஹா....ஒஹோ....

Jayadev Das said...

அருமை....

Jayadev Das said...

சான்ஸே இல்லை....

Jayadev Das said...

Ha...ha..haa... Whatever you have told is 100% true. I see most of them follow this. I think your background is Physics? [
Why blood, same blood... ha..ha..haa]

Hollingsworth said...

அருமை....

Anonymous said...

information has been amended to correct the and ensures longer safer use iiConvertible [url=http://www.onlyyoutony.com]polo ralph lauren[/url]by Wonderful Courts This Act is not only a 6th meal highest bidder Most Of The public [url=http://www.onlyyoutony.com]ralph lauren[/url]term 'floor area' for consistency with Part profits to consumers The same time some http://www.onlyyoutony.com[/url] deodorants do the trick by not only keep you les dsagrments au niveau du dos les soucis

Anonymous said...

hi

r u referring to BG block..cooling glass andlook above
sam