இந்த வலையில் தேடவும்

Monday, February 28, 2011

கலைடாஸ்கோப்-9

லைடாஸ்கோப்-9 உங்களை வரவேற்கிறது

நான் விரும்பும் இந்தியா
=====================

சிவாஜி நகரில் இருந்து கிளாஸை முடித்து விட்டுத் திரும்பும் போது 'சின்ன சாமி' ஸ்டேடியம் கண்ணில் பட்டது..நிறைய போலிஸ்காரர்கள் நின்றிருக்க மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு டிக்கெட் வாங்கிக் கொண்டிருந்தனர்..போன வாரம் டிக்கெட் வாங்கும் களேபரத்தில் அடி-தடி எல்லாம் நடந்ததாம்..

இன்று இளைஞர்கள் தேசப் பற்றை வெளிப்படுத்த கிரிக்கெட் ஒன்று மட்டுமே (மிஞ்சி) இருப்பது வேதனையான விஷயம்.மேலும் டி.வி.யில் விளம்பரங்கள் 'கம் ஆன் இந்தியா' (for what ???!) என்று கூவுகின்றன..
சில பேர் இந்த கிரிக்கெட் சீசனைப் பயன்படுத்திக் கொண்டு எப்படியெல்லாம் காசு பார்க்கலாம் என்று யோசிக்கிறார்கள்..(ஜட்டியில் கூட உலகக் கோப்பை லோகோ போட்டு ஸ்பெஷல் என்று விற்கிறார்கள்!) ..நான்கு சுவர்களுக்குள் அடைந்து கொண்டு
இந்தியா சிக்ஸர் போட்டால் கத்துவதும், வெடி வெடிப்பதும் தான் தேசபக்தி என்று ஆகி விட்டது..

இந்தியாவைப் பற்றிப் பெருமைப்பட இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பதை ஏனோ நாம் மறந்து விட்டோம்...ஓஷோ வின் 'நான் விரும்பும் இந்தியா' (INDIA my love ) என்ற புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா? அதிலிருந்து ஒரு quote

"நீங்கள் வேறு எந்த ஒரு நாட்டுக்கும் போகலாம்.அங்கெல்லாம் மிகவும் சரியான முறையில் அந்த மக்களையும் நாட்டையும் கண்டு கொள்ளலாம்-அதனுடைய வரலாற்றையும்,அதன் கடந்த காலத்தையும் கூட-ஜெர்மனியில்,இத்தாலியில்,பின்லாந்தில்,பிரான்சில்..ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில் நீங்கள் அங்கு செய்ததைப் போல செய்ய முடியாது.மற்ற நாடுகளை வகைப்படுத்திப் பார்ப்பது போல, இந்தியாவைப் பார்க்க முடியாது.நீங்கள் ஏற்கனவே அதன் மையப் புள்ளியைத் தவற விட்டு விட்டீர்கள்.ஏனென்றால், அந்த நாடுகளுக்கு ஓர் ஆன்மீக மரபு இல்லை..அவை ஒரு புத்தரையோ, ஒரு மகாவீரரையோ,ஒரு நேமிதாதாவையோ,ஒரு ஆதி நாதாவையோ,ஒரு கபீரையோ உருவாக்கவில்லை..அவை விஞ்ஞானிகளை உருவாக்கியிருக்கின்றன..எல்லா வகையான திறமையாளர்களையும் உருவாக்கியிருக்கின்றன. ஆனாலும் புதிரான இருண்மைத் தன்மை (mysticism ) இந்தியாவுக்கு மட்டும் உரியது.அந்தத் தன்மையில் இந்த நிமிடம் வரை இந்தியா அப்படியே தான் இருக்கிறது"

பில்ட்-அப்பா நிஜமா?
==================

இந்த IT கம்பெனிகளில் இருப்பவர்கள் கொடுக்கும் பில்ட்-அப்புகளில் ஒன்று "when I was in US " "When I was in Canada " என்றெல்லாம்..
(When I was in hometown என்று யாருமே சொல்வதில்லை!)உண்மை என்ன என்றால் அவர்கள் ஒரு மூன்று மாதம் பிசினஸ் விசாவில் போய் வந்திருப்பார்கள்..அதை வைத்துக் கொண்டு அடுத்த பத்து வருடத்திருக்கு "ச்சே, இது எல்லாம் ஒரு நாடா...கனடாவில் எல்லாம் கார் ஓட்டிட்டு வர்றவங்க நம்ம கிராஸ் பண்றப்ப நிறுத்தி, "நீங்க போங்க சார்/மேடம் " அப்படின்னு புன்னகைப்பாங்க " என்று கொஞ்சம் த்ரீ-மச்சாக அலட்டிக் கொள்வது.

அடுத்து பத்திரிக்கைகளில் சிலர் பேட்டி கொடுக்கும் போது சமீபத்தில் என்ன புத்தகம் படித்தீர்கள்? என்றோ என்ன திரைப்படம் பார்த்தீர்கள்? என்றோ கேட்டால் வாயில் நுழையாத ஏதோ ஒரு ஆங்கிலப் பேரைச் சொல்வது..(டமில் எல்லாம் படிக்கமாட்டோம்!)என் சந்தேகம் என்ன என்றால் உண்மையிலேயே முழுப் புத்தகத்தையும் படித்திருப்பார்களா இல்லை முதல் பக்கம் கடைசிப் பக்கம் மட்டும் படித்து விட்டு இந்த
பில்ட்-அப்பா என்பது தான்..

ரெண்டு பெரும் ஒரே கேஸ்
=======================

இனிமேல் வாயாடிகள் என்று பெண்களை யாராவது சொன்னால் சொன்னவரிடம் சண்டைக்குப் போகலாம்.சமீபத்திய ஆய்வு ஒன்று என்ன சொல்கிறது என்றால் ஆண்களும் பெண்களுக்கு நிகராக 'வள வளா கொழ கொழா' என்று அரட்டை அடிக்கிறார்களாம்....சப்ஜக்ட் கொஞ்சம் வேறுபடுமே தவிர அரட்டைக் கச்சேரியில் ரெண்டு பேரும் சளைத்தவர்கள் இல்லையாம்..என்ன, பெண்கள் 'திருமதி செல்வத்துல வாசுவ அவன் மாமனார் வீட்ட விட்டு வெரட்டிட்டாறாமே? ' என்று அரட்டினால் ஆண்கள் கடைசி ஓவரில் முனாப் படேல்-ஐ எறக்கி இருக்கக் கூடாதுப்பா' என்று அரட்டலாம் அவ்ளோதான் ..

இன்னொரு விஷயம் இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் தான் குண்டாக இருக்கிறார்களாம்..(ஜிம் போக வெட்கமாயிருக்கும் ) அது என்னவோ கல்யாணம் ஆன பிறகு பெண்கள் பலருக்கு beauty conscious குறைந்து தான் விடுகிறது...அக்கா, கல்யாணத்திற்கு முன்பு fair -n -lovely இல்லாமல் வெளியே போகவே மாட்டாள்..தினமும் சந்தனம் அரைத்துக் கொடுக்கச் சொல்லி முகத்திற்குப் பூசிக் கொள்வாள்..கடலை மாவு எடுத்துக் கொண்டு பாத் ரூம் போனால் வெளியே வர ஒரு மணி நேரம் ஆகும்..இப்போது கல்யாணம் ஆகி குழந்தைகளும் வந்து விட்ட பிறகு மூன்று நிமிடத்தில் ஏதோ ஒரு சோப்பை எடுத்து தேய்த்துக் கொண்டு அவசர அவசரமாக வெளிவருகிறாள் !

மாமழை போற்றுதும்
===================

மழைக்கு மனிதர்களின் சைக்காலஜியுடன் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது..எத்தகைய இறுக்கமான சூழ்நிலையையும் மழை மாற்றி விடுகிறது..அதுவும் சீசன் இல்லாமல் எதிர்பாராமல் வரும் மழை..(போன வாரம் வந்ததே?)மழைக்கு ஏதோ ஒரு மர்மமான அழகு இருக்கிறது..வில்லியம் வாட்டர்(?)வே என்ற கவிர் மழையை ஒரு கவிதையுடன் ஒப்பிடுகிறார் பாருங்கள்..

Or, how rain sprinkles
our entire universe
like words of an infinite poem
expressed in esoteric verse
by hand of unknown origin

மழை வந்தால் நீங்கள் சலித்துக் கொள்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு வயசாகி விட்டது என்று அர்த்தம்..

Just for laughs (gags )
=================

சில சமயங்களில் போகோ டி.வி பார்பதே மேல் என்று தோண்டுகிறது..அடுத்தவர் என்ன நினைத்துக் கொள்வார் என்று யோசிக்காமல் இனிமேல் போகோ பார்க்கவும்..அது நம்மை குழந்தைகளின் உலகுக்கு அழைத்துச் செல்லும்..ராத்திரி எட்டு மணிக்கு
Just for laughs (gags ) பார்த்திருக்கிறீர்களா?

அதில் அமெரிக்கர்களின் கற்பனைத் திறனும், நகைச்சுவை உணர்வும் வியக்க வைக்கிறது..உதாரணமாக, கடையில் நீங்கள் பில் கவுன்டரில் நின்றிருக்கும் போது எல்லாரும்
(முன்பே பேசி வைத்துக் கொண்டு) திடீரென்று சிலை போல உறைந்து போகிறார்கள்...நீங்கள் சாலையில் நடந்து போகும் போது ஒரு பாட்டி உங்களிடம் நெருங்கி 'இந்த பாட்டிலின் மூடியைத் திறந்து குடுங்க ப்ளீஸ்" என்கிறது..நீங்களும் கஷ்டப்பட்டு, பல்லில் கடித்து, தரையில் இடித்து அடித்து அதைத் திறந்து கொடுத்ததும் 'தாங்க்ஸ்' என்று சொல்லி விட்டு அதில் உள்ள தண்ணீரை எல்லாம் கீழே ஊற்றி விடுகிறது பாட்டி..ஒரு மாலில் நீங்கள் நடந்து போகும் போது உங்கள் கண்ணாடியை சுத்தம் செய்து தரவா என்று கேட்கிறார் ஒருவர்..ஓசி என்றதும் நீங்களும் கழற்றிக் கொடுக்கிறீர்கள்..கண்ணாடியைத் துணியில் சுற்றி (வேறு ஒரு டப்பா கண்ணாடி அது) ஒரு சுத்தியலை எடுத்து அதை நங் நங் என்று அடிக்கிறார்...எடுத்துப் பார்த்தால் கண்ணாடி சில்லு சில்லாக உடைந்து விடுகிறது..:)

இது போன்ற நிகழ்ச்சிகள் இந்தியாவில் அவ்வளவாகப் பிரபலமாகாதது ஏன் என்று யோசிக்கிறேன்..இந்தியர்கள் சீரியஸ் ஆன ஆசாமிகளா
மாறிக் கொண்டு வருகிறார்களா?
கடைசியில் இது எல்லாம் டிராமா தான் என்று சொல்லும் வரைக்கும் நாம் பொறுமையாக சிரித்துக் கொண்டு இருப்போமா என்று தெரியவில்லை.."டேய் சைக்கோ என் கண்ணாடியையா ஒடச்ச, நாயே ' என்று சில பேர் இங்கே அவர் சட்டையைப் பிடித்து விடும் அபாயம் இருக்கிறது

probability theory :)
==================
the probability of not receiving a call increases with every ring..

போன போஸ்டில் ஒரு வரைபடத்தை மறந்து விட்டேன்..அது கீழே...வழக்கம் போல கடைசியில் ஒரு ஓஷோ ஜோக்:

ஓஷோ ஜோக்
============
ஒரு பெண் தன் பையனுடன் கடற்கரையோரம் நடந்து போய்க் கொண்டிருந்தாள்..அப்போது திடீரென்று ஒரு பெரிய அலை வந்து அந்தப் பையனை உள்ளே இழுத்துச் சென்று விட்டது..அந்தப் பெண் அழ ஆரம்பித்தாள்..வானத்தை நோக்கிப் பிரார்த்தனை செய்தாள்: "கருணையின் உருவான கடவுளே..என் குழந்தையைத் திரும்பத் தாருங்கள்..நான் இனிமேல் உங்களுக்கு உண்மையானவளாக நடந்து கொள்வேன்..வாரம் தவறாமல் சர்ச்சுக்கு வருகிறேன்..என் கணவரை ஏமாற்ற மாட்டேன்..இன்கம் டாக்ஸில் தில்லு முள்ளு பண்ணே மாட்டேன்..தயவு செய்து
என் குழந்தையைத் திரும்பத் தாருங்கள்.."

அப்போது திடீரென்று இன்னொரு அலை எழுந்து வந்து அவள் பையனைத் துப்பியது ..

அவனை அப்படியே அணைத்துக் கொண்டு அவள் மீண்டும் மேலே வானத்தைப் பார்த்துக் கூறினாள் : "இவன் ஒரு புதுத் தொப்பி போட்டிருந்தானே?"


சமுத்ரா

Friday, February 25, 2011

வாழ்வின் வரைபடங்கள்

இது எனக்கு மெயிலில் வந்தது ...அதைக் கொஞ்சம் அப்படி இப்படி மாற்றி அமைத்திருக்கிறேன் :)

(1)
உங்கள் கம்பியூட்டரில் ஏதோ ஒரு கோளாறு...அதற்கான தீர்வுகளைப் பாருங்கள்


(2 ) ஆண்கள் ஏன் கல்யாணங்களை attend செய்கிறார்கள் என்று பாருங்கள்..:)


(3 ) இதற்கு கமென்ட் தேவையா?:)

(4 ) பெண்கள் டி.வி. சீரியல்கள் மூலம் என்ன தெரிந்து கொள்கிறார்கள்?
(5 ) மாடர்ன் டிரஸ் அணிந்து உங்கள் கணவர் முன் நிற்கிறீர்கள்..அவரிடம் இருந்து என்ன பதிலை எதிர் பார்க்கலாம்?
முத்ரா..

Tuesday, February 22, 2011

அணு அண்டம் அறிவியல்-15

என்னோட முந்தைய போஸ்டை யாரும் படிக்கலை தானே? :)

அறிவியல் அன்பர்களுக்கு சமுத்ராவின் வணக்கம்...

எல்லாப் பொருட்களும் அணுக்களால் ஆனவை என்ற கருத்தை நிரூபித்ததில் டேனியல் பெர்நௌலி (Daniel Bernoulli
8 February 1700 – 8 March 1782) என்ற விஞ்ஞானியின் பங்கு முக்கியமானது..அதை அ-அ-அ- வில் சொல்ல மறந்து விட்டேன்...

நமக்கு எல்லாம் பொதுவாகத் தெரிந்திருக்கும் ஒரு வாயு விதி (gas laws ,Boyle 's law) ஒரு வாயுவின் கன அளவு (volume ) அதிகரித்தால் அதன் அழுத்தம் (pressure ) குறையும் என்பது...அதாவது

V α 1 / P


படத்தைப் பாருங்கள்..


வாயு (மஞ்சள் கலர்) பிஸ்டனால் அழுத்தப்படும் போது அதன் volume குறைவதால் அதன் அழுத்தம் அதிகரிக்கிறது.. பெர்நௌலி இதற்கான காரணத்தை இப்படி ஊகித்தார்...அதாவது வாயு என்பது கோடிக்கணக்கான அணுக்களால் ஆக்கப்பட்டிருக்க வேண்டும்.'அழுத்தம்' என்பது வாயுவின் அணுக்கள் ஒன்றோடு ஒன்று அல்லது கொள்கலனின் சுவர்களுடன் மோதும் போது ஏற்படுகிறது..கொள்கலனின் வால்யூமை பாதியாகக் குறைத்தால் உள்ளே உள்ள அந்த வாயுவின் அணுக்கள் முன்னர் மோதியதைப் போல இரண்டு மடங்கு அதிகமாக ஒன்றுடன் ஒன்று மோதும்..வால்யூமை நான்கு மடங்கு குறைத்தால் வாயுவின் அணுக்கள் முன்னர் மோதியதைப் போல நான்கு மடங்கு அதிகமாக மோதும்..இந்த மோதல்களைத் தான் நாம் வாயுவின் அழுத்தம் என்கிறோம்..
அணுக்கள் இருப்பதை ஊகித்த இன்னொரு விளைவு 'Brownian motion 'இதை நாம் முதலிலேயே சொல்லியாகி விட்டது..

'அணுவைத் துளைத்து
ழ் கடலைப் புகுத்தி' என்று திருக்குறளை சும்மானாச்சும் ஒரு உயர்வு நவிற்சிக்காக சொல்கிறோம்..உண்மையிலேயே முதன் முதலில் அணுவைத் துளைத்துப் பார்த்த முதல் மனிதர் ஹென்றி ரூதர்போர்ட் என்று அணு அண்டம் அறிவியல் -9 இல் பார்த்தோம். அதாவது அவரின் மாடலின் படி உள்ளே மிகச் சிறிய
இடத்தில் வீற்றிருக்கும் நேர் மின் சுமை கொண்ட அணுக்கருவை வெளியே எதிர் மின் சுமை கொண்ட எலக்ட்ரான்கள் சுற்றி வருகின்றன. இது கிரகங்கள் சூரியனை சுற்றி வருவது போல இருப்பதால் இதை 'PLANET MODEL ' என்பார்கள்..

1776 இல் ஹென்றி காவெண்டிஷ் என்ற விஞ்ஞானி டெஸ்ட் டியூபில் இருந்து வெளிப்பட்ட ஹைட்ரஜன் வாயுவுடன் ஆர்வக் கோளாறால் வெளியில் இருந்து கொஞ்சம் ஆக்சிஜனை சேர்த்தபோது (கொஞ்சம் பயத்துடன் தான் , ஏதோ ஒரு புதிய அமிலம் வெளிப்பட்டு வெடித்து விட்டால்?) டெஸ்ட் டியூபில்
நீராவி வெளிப்பட்டு பின்னர் ஆச்சரியமாக நீர்த்துளிகள் படிந்தன..

தண்ணீர் என்பது ஒரு அதிசயம்..அந்த அதிசயத்தை இப்போது கொஞ்சம் வியக்கலாம்...சாமியார் வெறும் கையில் விபூதி கொடுத்தால் அதை அதிசயம் என்று கொண்டாடி அவருக்காக வாழ்வையே அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் நாம் நம் பக்கத்திலேயே இருக்கும் அதிசயங்களை ஏனோ கண்டுகொள்வதே இல்லை..'நீரின்றி அமையாது உலகு' 'மாமழை போற்றுதும்' என்றெல்லாம் புகழ்கிறது தமிழ்.உலகின் முதல் உயிர் கூட நீரில் தான் தோன்றியதாக சொல்கிறார்கள்..ஒரு நாள் பைப்பில் தண்ணீர் வரவில்லை என்றால் அந்த நாளே நாறிப் போய் விடுகிறது..
இத்தனை சிறப்புகள் வாய்ந்த தண்ணீரின் உள்ளே என்ன தான் இருக்கிறது என்று பார்ப்போம்..


காவெண்டிஸ்சின் இந்த ஆய்வில் இருந்து கங்கைத் தண்ணீரில் சாஸ்திரம் சொல்வது போல முப்பத்து முக்கோடி தேவர்கள் எல்லாம் இல்லை..அதன் ஒவ்வொரு மூலக்கூறிலும் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் மற்றும் ஓர் ஆக்சிஜன் அணு இருப்பதாக அறியப்பட்டது.. (H2O)சரி இயற்கையாக கிடைக்கும்,ஒன்றுக் கொன்று சம்பந்தம் இல்லாமல் இருக்கும், இரண்டு தனிமங்கள் (ஆக்சிஜன், ஹைட்ரஜன்) ஏன் ஒன்றுடன் ஒன்று காதல் கொண்டு சேர வேண்டும்? அவற்றை வெளியில் இருந்து எந்த ஃபெவிகாலும் போட்டு இயற்கை ஒட்டி வைக்க வாய்ப்பு இல்லை..அவை தங்கள் வெளிக்கூட்டில் (outermost shell ) உள்ள எலக்ட்ரான்களை வைத்துக் கொண்டு இணைகின்றன..அதாவது ஹைட்ரஜன் அணுவில் வெளியே சுற்றும் (ஒற்றை) எலக்ட்ரானை நழுவி ஓடி விடாதபடி அதன் அணுக்கருவின் மின்காந்த விசை பிடித்து வைத்துள்ளது..ஹைட்ரஜன் அணுவை தனியாகப் பார்ப்பது கொஞ்சம் கஷ்டம்...அப்போது தான் கல்யாணம் ஆன ஜோடி மாதிரி இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் எப்போதும் கைகோர்த்துக் கொண்டு ஒரு ஹைட்ரஜன் மூலக்கூறாக இருக்கின்றன..இது ஏன் என்றால் ஒரு ஹைட்ரஜன் அணு தன் எலக்ட்ரான் கூடு நிரம்பி இருக்க வேண்டும் என்று விரும்புகிறது..அந்த கூடு நிரம்ப இன்னொரு எலக்ட்ரான் வேண்டியிருக்கிறது...இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் கிட்ட வந்து 'இதப் பாருப்பா நம்ம கிட்ட இருக்கற ஒரு எலக்ட்ரானை ரெண்டு பெரும் பகிர்ந்துக்குவோம்..ரெண்டு பேருக்கும் ரெண்டு எலக்ட்ரான் இருக்கற மாதிரி இருக்கும்' என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டு இணைகின்றன..(அண்ணன் சட்டையை தம்பியும் தம்பி சட்டையை அண்ணனும் மாற்றி மாற்றி போட்டுக் கொண்டால் ரெண்டு பேருக்கும் ரெண்டு சட்டை இருப்பது போல தோன்றும் இல்லையா?) இந்த இரண்டு எலக்ட்ரான்களும் இரண்டு அணுக்கருவையும் சுற்றுகின்றன..
ஒரு ஆக்சிஜன் அணு தன் வெளிக்கூட்டில் ஆறு எலக்ட்ரான்களுடன் உள்ளது..தான் பூர்த்தியடைய (8) இன்னும் இரண்டு எலக்ட்ரான்களை அது தேடுகிறது...ஒரு ஹைட்ரஜன் மூலக்கூறு பக்கத்தில் வரும் போது அந்த ஜோடியைப் பிரித்து 'பாருப்பா நான் கொஞ்சம் பெரிய ஆளு...சொல்ற மாதிரி கேளுங்க..நான் உங்க ரெண்டு பேருக்கும் ஒவ்வொரு எலக்ட்ரானைத் தர்றேன்..நீங்க ரெண்டு பேரும் உங்க கிட்ட இருக்கற ஒவ்வொரு எலக்ட்ரானை எனக்குக் கொடுங்க..ரெண்டு எலக்ட்ரானை ரெண்டு பேர் SHARE பண்ணிக்குவோம்.. உங்களுக்கும் ரெண்டு ரெண்டு எலக்ட்ரான் கிடைச்ச மாதிரி இருக்கும்..எனக்கும் எட்டு கிடைச்சிரும்..இனிமேல் சிவனேன்னு நம்ம பாட்டுக்கு இருக்கலாம்..எலக்ட்ரானுக்கு வெளியில் அலைய வேண்டாம்.." என்று சொல்லி(?) கீழே கண்டது போல இணையும் (படம்)

இப்படி நல்ல பிள்ளை மாதிரி ஒப்பந்தம் போட்டுக் கொண்ட ஆக்சிஜன் பின்னர் தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்கறது. அண்ணன் பாப்பா தம்பிப் பாப்பா பொம்மையை தன் பக்கத்தில் இழுத்துக் கொள்வது போல ஹைட்ரஜன் அப்பாவியாகத் தந்த அந்த ஒரு எலக்ட்ரானையும் தன் பக்கம் இழுக்க ஆரம்பிக்கிறது..அதாவது அந்த எலக்ட்ரான் ஆக்சிஜன் அணுவிடம் சிநேகம் கொண்டு அதிக நேரம் இருக்கிறது..இதனால் ஆக்சிஜன் அணுவுக்கு ஒரு சிறிய அளவு எதிர் மின் தன்மை கிடைக்கிறது..(சாதாரணமாக ஓர் அணுவில் எலக்ட்ரான்களும் ப்ரோடான் களும் சம எண்ணிக்கையில் இருப்பதால் அதற்கு எந்த மின் சுமையும் கிடையாது) அதே சமயத்தில் எலக்ட்ரானைப் பறிகொடுத்த ஹைட்ரஜனுக்கு நேர் மின் சுமை கிடைக்கிறது..."அப்பவே சொன்னேன் கேட்டியா? அந்த ஆளை நம்பாதேன்னு? பாரு நல்லவன் மாதிரி நடிச்சு இப்ப இருந்த ஒரு எலக்ட்ரானையும் அவன் பக்கம் இழுத்துக்கிடான் பாவி' " என்று தன் இணையிடம் ஹைட்ரஜன் டோஸ் வாங்குமா என்பதெல்லாம் தெரியவில்லை..

இப்படி நேர் மின் சுமை பெற்ற ஹைட்ரஜனுக்கும் இதே போன்ற இன்னொரு தண்ணீர் மூலக்கூறில் எதிர் மின் சுமை பெற்ற ஆக்சிஜனுக்கும் இயற்கையின் 'opposites attract ' என்ற விதியின் படி (மின் காந்த) ஈர்ப்பு (electromagnetic attraction ) உருவாகிறது..எதிர் மின் சுமை பெற்ற ஆக்சிஜனுக்கு இன்னொரு தண்ணீர் மூலக்கூறில் உள்ள ஹைட்ரஜன் மீது ஈர்ப்பு உண்டாகிறது..(Hydrogen bond )இந்த ஈர்ப்பு இரண்டு தண்ணீர் மூலக்கூறுகளைப் பக்கத்தில் இழுக்கிறது..இப்படி கோடிக்கணக்கில் தண்ணீர் மூலக்கூறுகள் ஒன்றை ஒன்று ஈர்ப்பதால் ஒரு தொடர்ச்சி ஏற்பட்டு தண்ணீர் கிடைக்கிறது..இந்த BOND கொஞ்சம் வீக் என்பதால் தண்ணீர் திடப்பொருட்கள் மாதிரி closely packed ஆக இல்லாமல் கொஞ்சம் flexible ஆக
இருக்கிறது.. (வாயு என்றால் அதன் மூலக்கூறுகள் ரொம்ப தூரத்ததில் அலையும்..தண்ணீர் என்றால் ஓரளவு பக்கத்தில்...திடப்பொருள் என்றால் மிக மிக நெருக்கமாக )

நான் இது வரை சொன்னதை கீழே உள்ள படத்தில் பார்க்கலாம்...

சரி back to the topic .. ரூதர்போர்ட் அணுக்கருவை எலக்ட்ரான்கள் சுற்றும் என்று ஒரு குத்து மதிப்பாகக் கூறினாரே தவிர எந்தப் பாதையில் எப்படி எந்த அமைப்பில் சுற்றும் என்று கண்டுபிடிக்கவில்லை...உதாரணமாக கால்சியம் அணுவிற்கு இருபது எலக்ட்ரான்கள்..அந்த இருபது எலக்ட்ரான்களும் அணுவை ஓர் ஒழுங்கில்லாமல் கண்டபடி தாறுமாறாக சுற்றி வரும் என்று அனுமானித்தார்கள்..ஓகே..ஆனால் இந்த மாடலில் ஒரு பெரிய தவறு இருந்தது...அது என்ன என்று பார்ப்போம்..

எலக்ட்ரான் என்பது வெறும் துகள் மட்டும் அல்ல...அது ஒரு சக்தித் துகள்..தமிழ் சினிமாக்களில் ஹீரோ நடந்து வரும் போது பின்னால் ஒரு ஒளி வட்டம் வரும்..அப்புறம் காலால் தரையை உதைத்தால் ஒரு 'ஸ்பார்க் ' வரும் ..பிறகு ஹீரோ வில்லனை அழிக்க கிளைமாக்சில் ஆவேசமாக நடந்து வரும் போது திடீரென்று அவர் ஏழெட்டு ஹீரோவாக மாறி மீண்டும் ஒன்று சேர்வார்...உண்மையில் இந்த 'credits ' எல்லாம் எலக்ட்ரானுக்கு தான் போக வேண்டும்...ஏனென்றால் அது நகரும் போது 'சும்மா அதிருதில்ல' என்று மின்காந்த கதிர்வீச்சு (e-magnetic radiation ) வெளிப்படும்..(வழியில் இரண்டு துளைகள் உள்ள ஒரு திரையை வைத்தால் எலக்ட்ரான் இரண்டாக மாறி இரண்டிலும் புகுந்து செல்லும்)எலக்ட்ரான் அணுக்கருவை சுற்றி வட்டப் பாதையில் நகருவதால் (இயக்கத்தின் வேகம் அல்லது திசை இரண்டில் ஏதாவது ஒன்று மாறினாலும் அது 'accelerate ' ஆகிறது என்று சொல்லலாம்) இதனால் எலெக்ட்ரான் ஒரு 'லைட் ஹவுஸ்' மாதிரி தொடர்ச்சியாக ஆற்றலை (ஒளியை) வெளியிடும்..இந்த தொடர்ந்த ஆற்றல் இழப்பால் எலக்ட்ரான்கள்
குழந்தைகள் சுற்றி சுற்றி களைத்து விழுந்து விடுவது போல கடைசியில் அணுக்கருவுக்குள் போய் விழுந்து விடும்..எனவே பிரபஞ்சத்தில் அணுக்கள் என்பவையே இருக்காது..

இன்னொரு விஷயம்..ஒரு பொருளின் ஆற்றலுக்கும் அதன் அதிர்வெண்ணுக்கும் (frequency ) உள்ள தொடர்பை E = hv என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்..எலக்ட்ரான் படிப்படியாக ஆற்றலை இழந்தால் நமக்கு அந்த அணுவின் spectrum (அலைக்கற்றை) எல்லா அதிர்வெண்களிலும் கிடைக்க வேண்டும்..(v=E /h h being constant ) அதை பார்க்கும் போது (அதிர்வெண் நிறத்துடன் தொடர்புடையது) சும்மா ஹோலிப் பண்டிகை கொண்டாடி முடித்த லெவலுக்கு கலர் கலராகத் தெரிய வேண்டும்..ஆனால் ஒரு சிம்பிள் அணுவான ஹைட்ரஜனின் அலைக்கற்றையை அலசிய போது அது சிம்பிளாக நான்கே நான்கு கலர்களுடன் காட்சி அளித்தது...(பார்க்க படம்)
இந்த சமயத்தில் தான் நீல்ஸ் போர் வந்தார்..Niels Henrik David Bohr ( 7 October 1885 – 18 November 1962) 1922 ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது..இவரின் கண்டுபிடிப்பில் தான் இன்று
விஞ்ஞானிகளைக் குழப்பி மண்டை காய வைக்கும் 'குவாண்டம் மெக்கானிக்ஸ்' உதயமானது..நம் அணு அண்டம் அறிவியலிலும் இப்போது 'குவாண்டம் மெக்கானிக்ஸ்' என்ற குட்டிக் குழந்தை அழகாகப் பிறந்துள்ளது..அதன் பிறப்பை கோலாகலமாகக் கொண்டாடுவோம்..ஒரு ஜீசஸ் பிறந்தது, கிருஷ்ணா பரமாத்மா அவதரித்தது ஆன்மீக உலகுக்கு எவ்வளவு முக்கியமானதோ அதே போல இந்த 'குவாண்டம் மெக்கானிக்ஸ்' ஜனனமும் அறிவியல் உலகுக்கு மிக மிக முக்கியமானது..இந்த 'குவாண்டம் மெக்கானிக்ஸ்' இயற்பியல் உலகில் புதிய புதிரான அற்புதக் கதவுகளைத் திறந்து விட்டது..ஒன்டர் லாண்டில் நடக்கும் ஆலிஸின் (Alice in Wonderland ) நிலைமையில் இருந்து கொண்டு விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியது..அறிவியல் என்றாலே தீர்மானமானது (consistent ) என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இரண்டு முகம் காட்டி

மாயாப் பிறவி மயக்கத்தை ஊடறுத்துக்
காயா புரிக்கோட்டை கைக் கொள்வது எக்காலம்? என்றெல்லாம்
விஞ்ஞானிகளையே பத்திரகிரியார் லெவலுக்குப் புலம்ப வைத்தது..

இப்போது
'குவாண்டம் மெக்கானிக்ஸ்' (சிறியவைகளுக்கான இயற்பியல்) மற்றும் 'சார்பியல் கொள்கை' (பெரியவைகளுக்கான இயற்பியல்) இரண்டின் பிதாமகர்களான
நீல்ஸ் போர் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இருவரும் ஒன்றாக இருக்கும் ஒரு போட்டோவைப் பார்ப்போம்..

மீண்டும் சந்திப்போம்...இந்தக் குழந்தை வளருவதையும் அதன் பால லீலைகளையும் அதன் கூடவே இருந்து அனுபவிப்போம்...

முத்ரா

பி.கு: என்னை செல்போனில் சவுதியில் இருந்து அழைத்து அறிவியலை (மீண்டும்) எழுத உற்சாகம் கொடுத்த மூர்த்தி அவர்களுக்கு நன்றி..

Friday, February 18, 2011

கடைசிப் பதிவு! Good Bye from Samudra

இது நீண்ட நாட்களுக்கு முன்பே எடுத்த முடிவு தான்!
Yes இது சமுத்ராவின் கடைசிப் பதிவு..:)


இந்த முடிவுக்குப் பெரிதாக எதுவும் காரணம் இல்லை...நான் முதலிலேயே சொன்னபடி வார்த்தைகளுடன் விளையாடுவதில் எனக்கு விருப்பம் இல்லை...

'சமுத்ரா - வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு ' என்று பெயர் வைத்ததற்கான பொருளையும் சந்தோஷத்தையும் இன்று தான் முழுமையாக அனுபவிக்கிறேன்...

இது வரை எனக்குப் பதிவுலகில் ஆதரவு தந்த அனைவருக்கும் சமுத்ராவின் இதயப்பூர்வமான நன்றிகள்! கடைசிப் பதிவு என்பதால் இந்த கடைசிக் கவிதையை மட்டும் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்..

'எனது
கவிதை-இன்னும்
எழுதப்படவில்லை

நான் எழுதியவற்றை
திரும்பிப் பார்க்கும் போது
அவை முதிர்ச்சி இன்றி
குழந்தைத் தனமாய்க்
காட்சியளிக்கின்றன...

எனது
கவிதை-இன்னும்
எழுதப்படவில்லை

எனது கவிதை
இறந்து போன
வார்த்தைகளால்
எழுதப் பட்டிருக்காது!

எனது
கவிதை-இன்னும்
எழுதப்படவில்லை

ஒருவேளை
நான் இறக்கும் வரை
அது எழுதப்படாமலேயே போகலாம்
அல்லது அதை எழுதிய
மறுகணம்
என் உயிர்
பிரிந்து விடலாம்!

எனது
கவிதை-இன்னும்
எழுதப்படவில்லை

உங்களிடமிருந்து பிரியா விடை பெறும்

முத்ரா

GOOD BYE

Thursday, February 17, 2011

கலைடாஸ்கோப்-8

லைடாஸ்கோப்-8 உங்களை வரவேற்கிறது

டாக்டர்
========

டாக்டர்கள் இனிமேல் ப்ரெஸ்கிரிப்ஷனில் 'பிரம்ம லிபி' போல கிறுக்குவதற்கு அனுமதி இல்லையாம்..தெளிவாக Capital லெட்டர்களில் எழுத வேண்டும் அல்லது கம்பியூட்டர் பிரிண்ட்-அவுட் கொடுக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் கூறி இருக்கிறது.. மருந்து கடைக்காரர்கள் கையெழுத்து புரியாமல் அனுமானத்தின் பேரில் ஏதோ ஒரு மருந்தைக் கொடுத்து அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்குத் தான் இந்த ஏற்பாடு..

இப்போது நான் அவசர அவசரமாக வரைந்த இந்த இரண்டு கார்டூனையும் (வேறு வழியின்றி) பார்க்கவும்ஆறுதல்
=======

எழுதுவதை நிறுத்தி விடுகிறேன் என்று சொன்னால் வேண்டாம் என்று சொல்வதற்கு ஒரு மூன்று பேரையாவது (அவர்கள் பேரை இங்கே சொன்னால் அவர்களுக்கு மற்ற பதிவர்களிடம் இருந்து உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் சொல்வதற்கில்லை) பதிவுலகில் சம்பாதித்து (?) வைத்திருக்கிறேன் என்று நினைக்கும் போது ஆறுதலாக இருக்கிறது...எனவே இப்போதைக்கு நிறுத்தும் எண்ணம் இல்லை..சமுத்ராவின் அமெச்சூர் எழுத்துக்களை இன்னும் கொஞ்ச காலத்திற்கு நீங்கள் படிக்க வேண்டியிருக்கும்

எதை எழுதித் தொலைப்பது?
=========================

'பல்சுவைப் பதிவு' 'கலைடாஸ்கோப்' என்றெல்லாம் தலைப்பு வைத்து விட்டால் ஒரு சௌகரியம்..எதை வேண்டுமானாலும் எழுதலாம் (இன்னொரு பெயர் குப்பைத் தொட்டி !?) என்றெல்லாம் நீங்கள் நினைத்தால் அது தப்பு..நிறைய எழுத வேண்டும் என்றால் நிறைய ஊர் சுற்ற வேண்டும்..நிறைய அனுபவங்கள் கிடைக்க வேண்டும்..ஐ.டி. கம்பெனியின் அடைக்கப்பட்ட சுவர்களுக்கு உள்ளே அமர்ந்து கொண்டு 'ஆபீஸ் விட்டால் வீடு, வீடு விட்டால் ஆபீஸ்' என்று குண்டுச் சட்டிக்குள் டைட்டானிக் ஒட்டிக் கொண்டிருந்தால் எதை எழுதுவது? இருந்தாலும் எல்லாருக்கும் எழுதுவதற்கு எப்படியோ ஒரு மேட்டர் கிடைத்து விடுவது ஓர் அதிசயம்.(நகைச்சுவைக்கு தான் சொல்கிறேன்) பச்சைப்பயிறு சப்பாத்தி , கடுக்காய் பிரபாவ போதினி, பன்றிக் குட்டியை ஈன்ற பசு, என்று தமிழ் மணத்தில் தான் எத்தனை விதம் விதமான பதிவுகள்? உலகம் அழியும் வரை நமக்கு ஏதாவது எழுதுவதற்கு இருந்து கொண்டே இருக்கும் என்பது உண்மை தான்!

குளோபல் வார்மிங்
=================

உலகம் கொஞ்சம் கொஞ்சமாக சூடாகிக் கொண்டிருக்கிறது...ஒரு நாள் கடல் பொங்கி நம் எல்லாரையும் சுவாகா செய்து விடும் என்று ஒரு கோஷ்டியும் GW என்பதெல்லாம் வெறும் 'உடான்ஸ்' பூமி, இயற்கை இவையெல்லாம் மிகப் பெரியவை ...SELF HEALING ..அதாவது நாம் என்ன செய்தாலும் சமர்த்தாகப் பொறுத்துக் கொண்டு தானே சரி செய்து கொண்டு விடும் என்று இன்னொரு கோஷ்டியும் சொல்கிறார்கள்..ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ஓட்டை கூட தானாகவே அடைத்துக் கொண்டு விட்டதாம்! என்ன தான் சொன்னாலும் நாம் நம்முடைய அன்னை பூமிக்கு நிறைய வெப்பத்தைப் பரிசளிக்கிறோம்..
இயற்கையிடமிருந்து ஆற்றலை எடுத்துக் கொண்டு பதிலுக்கு வெப்பத்தை அதற்கு அளிக்கிறோம்..நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் டார்ச் லைட்டில் இருந்து தொடங்கி விமானம் வரை ஆற்றலை மாற்றும் Process களில் by -product ஆக வெப்பத்தை வெளியிட்டு பூமியை சூடு செய்கின்றன. அது மட்டும் இல்லை..நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் தயாரிக்கப்படும் போது நிகழும் MANUFACTURING PROCESS வேறு வெப்பத்தை வெளியிடுகிறது
அதனால் தான் சூழியல் நலமிகள் (environmentalists ?) REDUCE ,RECYCLE ,RE -USE என்றெல்லாம் அலறுகிறார்கள்..அதாவது ஒரு ஷேவிங் ரேஷர் மொன்னையாகி நம் அரசியல் வாதிகள் மூளை மாதிரி
மழுங்கிப் போகும் வரை திரும்பத் திரும்ப உபயோகியுங்கள் ..சீரியல்களுக்கு இடையே 'ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் வஸ்திர கலா' போன்ற 'பயனுள்ள'(?) விளம்பரங்கள் வரும் போது தயவு தாட்சண்யம் பார்க்காமல் டி.வியை அணைத்து விடுங்கள் என்றெல்லாம்..எனக்கு ஒரு சந்தேகம் இந்த பஸ் டிரைவர்கள் வண்டி கிளம்புவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரேயே இன்ஜினை 'ஆன்' செய்து விட்டு பஸ்ஸை டொர்-டொர் என்று ஏன் உறும விடுகிறார்கள் என்று தெரியவில்லை..

ஊடகம்
=======

உலகின் தலை சிறந்த கலைஞர்களின் ஒருமித்த அனுபவம் என்ன என்றால் அவர்களின் தலைசிறந்த படைப்புகள் அவர்கள் இல்லாத போது உருவாக்கப் படுகின்றன என்பதாகும்..அதாவது அவர்கள் தன்னை இழந்து ஒரு தயார் நிலையில் , இறைத்தன்மை தன் மீது இறங்கி வெளிப்படுவதற்கு ஒரு ஊடகமாக இருக்கும் போது..
அது ஓவியமாகட்டும், நடனமாகட்டும் இசையாகட்டும் , கவிதையாகட்டும் அவர்களின் தலைசிறந்த படைப்புகள் 'நான்' என்ற உணர்வு மறைந்து விடும் போது ஏற்படுகின்றன என்கிறார்கள்..உதாரணமாக தெய்வீகப் பாடகர்கள் ஒரு ராகத்தைப் பாடும் போது தாங்கள் அதைத் தொடங்க மட்டுமே செய்கிறோம்..பின்னர் அந்த ராகம் தன்னைத் தானே
Develope செய்து கொள்கிறது என்கிறார்கள்..'நான் செய்கிறேன்' என்ற உணர்வு இருக்கும் வரை நம் படைப்புகள் அசிங்கமானதாகவும், ஏதோ ஒரு முக்கியமான 'அழகு' மிஸ் ஆவதாகவும் இருக்கும்..


இங்கே நாம் என்னடா என்றால் ஒரு மொக்கைக் கவிதையை நாலு நாள் யோசித்து எழுதி விட்டு, பாருங்கள் நான் எழுதி இருக்கிறேன் என்று திரட்டிகளில் இணைத்து, எல்லாருக்கும் மெயில் செய்து தம்பட்டம் அடிக்கிறோம்..

ஒரு சந்தேகம்
=============

தமிழ்ப் பதிவுலகில் நிறைய 'group ' கள் இயங்குவதாகத் தெரிகிறது..அவர்களின் குரூப்-களுக்குள் ஒரு சிறிய வட்டத்தில் இயங்கி அவர்களுக்குள் (அஹா ஒஹோ அருமை, உங்களிடம் அந்தத் தாகூரே பிச்சை எடுக்க வேண்டும் என்றெல்லாம்) கமெண்டுகள் போட்டுக் கொள்கிறார்கள் ..(mutual agreement ?) எனக்குத் தெரிந்து திருமதி.சித்ரா ஒருவர் மட்டும் தான் எல்லாப் பதிவுகளுக்கும் சென்று கமெண்டு போட்டு உற்சாகப் படுத்துகிறார்..இந்த மனப்பான்மை ஏன் என்று தெரியவில்லை..நாம் எல்லாரும் ஒரே வலைப் பூவின் மகரந்தங்கள் அல்லவா? NO EGO ப்ளீஸ்...

லீவு போச்சே
============

இங்கே (கர்நாடகாவில்) கர்நாடகா உதயமான தினத்தை 'கன்னட ராஜ்யோத்சவா' என்ற பெயரில் ஒவ்வொரு நவம்பர் ஒன்றாம் தேதியும் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள் (ஐ.டி. கம்பெனிகள் உட்பட) ஆட்டோக்கள் சிவப்பும் மஞ்சளும் கொண்ட கொடிகளைத் தாங்கிப் பறக்கின்றன..கன்னட இலக்கியத்தில் பெரும் எழுத்தாளர்களை, கவி
ர்களை அன்றைய தினம் கௌரவிக்கிறார்கள்..அங்கங்கே மேடை போட்டு பொது மக்கள் " கன்னட விளக்கு ஏற்றுவோம்" என்று அரசியல் கலக்காமல் பாடுகிறார்கள்..ஒரு நாள் விடுமுறை வேறு அறிவிக்கிறார்கள்..நமக்கு தமிழ் நாடு உருவான தினம் ஞாபகம் இருக்கிறதா என்பது தெரியவில்லை..தமிழ் புத்தாண்டுக்கு இருந்த ஒரு விடுமுறையையும் அதை பொங்கலுடன் இணைத்து நீக்கி விட்டார்கள்..இன்னொரு விஷயம் பெங்களூருவில் எனக்குத் தெரிந்த வரை சுவர்களில் "அவர் வாழுக, இவர் வாழுக, தங்கத் தமிழ்(கன்னட) சிங்கம் வாழுக, புரட்சித் தலைவர்/ தலைவி, புரட்சி ஞாயிறு வாழுக" என்றெல்லாம் தலைவர்கள் மெகா சைஸ்களில் சிரிக்கும் ஒரு போஸ்டர் கூட கண்ணில் படவில்லை..


ஒரு ஓஷோ ஜோக்
================

எனக்கு இதற்கு மேல் எதுவும் மண்டைக்கு வரவில்லை..வழக்கம் போல ஓர் ஓஷோ ஜோக்குடன் முடித்துக் கொள்வோம்..

அந்தக் கணவனும் மனைவியும் ரயில்வே ஸ்டேஷனுக்கு அவசர அவசரமாக வந்து சேர்ந்த போது அவர்களின் டிரெயின் அப்போது தான் கிளம்பி விட்டிருந்தது..

கணவன் கோபத்தில் கத்தினான் : " நீ ரெடியாறதுக்கு அவ்வளவு நேரம் எடுக்காம இருந்திருந்தா நம்ம வண்டிய மிஸ் பண்ணாம ஏறியிருக்கலாம் "

மனைவி பதில் சொன்னாள் " நீங்களும் என்னை அவசரப் படுத்தாம இருந்திருந்தா இப்ப அடுத்த வண்டிக்கு நம்ம ரொம்ப நேரம் வெயிட் பண்ணற அவசியம் இருந்திருக்காது"

முத்ரா

Tuesday, February 15, 2011

அணு அண்டம் அறிவியல்-14

அறிவியல் அன்பர்களுக்கு வணக்கம்...

சமுத்ராவிடம் ஒரு 'கெட்ட' பழக்கம்..கவிதை எழுதினால் கவிதையிலேயே ஆழ்ந்து விடுவது..அதனால் தான் அறிவியலின் பக்கம் வர முடிவதில்லை..

ஓகே இந்தப் பதிவில் நியூட்டனின் மற்ற இரண்டு இயக்க விதிகளையும் சுருக்கமாகப் பார்த்து விட்டு அடுத்த பாகத்தில் இருந்து மீண்டும் அணுவின் உலகங்களில் சஞ்சாரம் செய்யலாம்..

போன பதிவில் நியூட்டனின் முதல் விதியைப் பார்த்தோம்..ஒரு பொருளின் மீது செயல் படும் விசை அதன் வேகத்தை (மட்டும்) மாற்றும் என்று.

இதை இன்னொரு விதமாக சொல்வதானால் ஒரு பொருளின் வேகம் மாறுகிற அளவு அதன் மீது செலுத்தப்படும் விசைக்கு நேர் விகிதத்தில் இருக்கும்..

இதை கணித பாஷையில்

F α dV /dt என்று கூறலாம்.. (F proportional to )

ஒரு பொருளின் வேகம் மாறுபடும் வீதத்தை இயற்பியல் ACCELERATION , முடுக்கம் என்கிறது...(A )

எனவே முதல் சமன்பாட்டை இப்படி எழுதலாம்

F α A

இப்போது இரண்டு பக்கங்களையும் சமப்படுத்த ஒரு constant போடவேண்டும்..அந்த constant தான் அந்தப் பொருளின் நிறை..
ஓகே
"F =MA"
இது தான் நியூட்டனின் இரண்டாவது விதி..இது என்ன சொல்கிறது என்றால் :

ஒரு லாரியும் ஒரு பைக்கும் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்..இரண்டிலும் ஒரே அளவு சக்தி கொண்ட இஞ்சின் இருப்பதாகக் கொள்வோம்..இரண்டுக்கும் ஒரே அளவு விசை கொடுத்தாலும் லாரி மெதுவாகத்தான் ஆக்ஸலரேட் ஆகும்..(நிறை அதிகம் என்பதால் ) ஆனால் பைக் மிக விரைவில் ஆக்ஸலரேட் ஆகி விட்டிருக்கும்...


போன அத்தியாயத்தில் பார்த்தபடி ஒரு கோழி இறகும் ஒரு இரும்பு குண்டும் ஏன் மேலே இருந்து ஒரு நேரத்தில் கீழே விழுகின்றன என்பதற்கான விடையை இந்த நியூட்டனின் இரண்டாம் விதி சொல்கிறது.இரண்டும் ஒரே நேரத்தில் கீழே விழுகின்றன என்றால் இரண்டும் ஒரே வீதத்தில் ஆக்ஸலரேட் ஆக வேண்டும்..ஒரு பொருளை நாம் மேலே இருந்து கீழே போட்டால் அது ஒரே வேகத்தில் கீழே விழுவதில்லை...பூமியின் ஈர்ப்பினால் (ஈர்ப்பு விசையால்) அது தொடர்ந்து ACCELERATE செய்யப்படுகிறது..பூமியின் ஈர்ப்பினால் ஏற்படும் இந்த முடுக்கத்தை ACCELERATION DUE TO GRAVITY என்பார்கள்.இதன் மதிப்பு பூமியின் எல்லா இடங்களிலும் கிட்டத்தட்ட சமமாக இருக்கும் ..அதாவது 9 .8 m /S2


ஒரு பொருளை மேலிருந்து கீழே போடும் போது முதல் நொடியில் அதன் வேகம் ஒரு செகண்டுக்கு 9 .8 மீட்டர்களாக இருக்கும்..இரண்டாம் நொடியில்அதன் வேகம் ஒரு செகண்டுக்கு 2 x 9 .8 மீட்டர்களாக இருக்கும்..மூன்றாம் நொடியில் அதன் வேகம் ஒரு செகண்டுக்கு 3 x 9 .8 மீட்டர்களாக இருக்கும்..பூமிக்கு என்ன ஒரு பேராசை பாருங்கள்..பொருள் பக்கத்தில் வர வர அதை அதிக வேகத்துடன் இழுக்கிறது..இந்த 'g ' எனப்படும் ACCELERATION DUE TO GRAVITY எல்லாப் பொருளுக்கும் சமம் தான்..அது இரும்புக் குண்டாக இருந்தாலும்..கோழி இறகாக இருந்தாலும்


F =M A என்பதை A = F /M என்று எழுதலாம்..


கோலிக் குண்டை அதிகமான விசையுடன் (F ) பூமி இழுக்கும்..உதாரணமாக நம் கோலிக்குண்டு கோழி இறகை விட நூறு மடங்கு நிறை அதிகம் என்றால் கோழி இறகை இழுக்கும் விசையை விட நூறு மடங்கு அதிக விசையுடன் பூமி கோலிக்குண்டை இழுக்கும்..குண்டை இழுக்கும் போது ஏற்படும் முடுக்கம் (A1) = F1 / M1


இறகை இழுக்கும் போது ஏற்படும் முடுக்கம் (A2 ) = F 2 / M2


இங்கே M1 =100 M2 F1=100 F2 என்பதால் A1 = A2 என்று வருகிறது..எனவேஇரண்டும் ஒரே சமயத்தில் தரையை அடைகின்றன..

இந்த இடத்தில் நியூட்டன் கண்டுபிடித்த இன்னொரு விதியைப் பற்றியும் சொல்லியாக வேண்டும்.. அது UNIVERSAL LAW OF GRAVITATION என்று அழைக்கப்படும் பிரபஞ்ச ஈர்ப்பு விதி. அண்டத்தில் உள்ள எல்லாப் Lபொருட்களும் அண்டத்தில் உள்ள மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றை ஒன்று பரஸ்பரம் கவர்ந்து இழுக்கின்றன என்ற விதி தான் அது. நியூட்டன் ஆப்பிள் மரத்தின் கீழே அமர்ந்திருந்த கதையை நீங்கள் கேட்டிருக்கலாம்..நாமாக இருந்திருந்தால் மேலே இருந்து ஆப்பிள் விழுந்ததும் அவசர அவசரமாக சட்டையில் துடைத்துக் கொண்டு சாப்பிட்டு முடித்திருப்போம்.. நியூட்டன் ஆப்பிள் ஏன் 'கீழே ' விழுகிறது என்று யோசித்தார்...(கடைசியில் அந்த ஆப்பிளைத் தின்றாரா என்பது தெரியவில்லை! ) நியூட்டன் எப்படி இந்த விதியைக் கண்டு
பிடித்தார் என்று ஏற்கனவே 'பிரபஞ்சத்தின்r ஆதார விசைகளில்' பார்த்தோம் ..அதை அப்படியே ஒரு காப்பி-பேஸ்ட் செய்கிறேன்..


ஆனால் நியூட்டன் கொஞ்சம் மாற்றி யோசித்ததால் (அதாவது: மேலே உள்ள படத்தைப் பார்க்கவும்..பூமியின் மேற்பரப்பில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒருவருக்கு (A) ஆப்பிள் 'கீழே' விழுகிறது... பூமி ஒரு உருண்டை எனபதால் அவருக்கு நேர் எதிரே பூமியின் அடுத்த பக்கத்தில் (தலை கீழாக) உட்கார்ந்து கொண்டுள்ள ஒருவருக்கும் (B ) அது 'கீழே' (அம்புக் குறி காட்டி உள்ளது போல்) தானே விழ வேண்டும்? அப்படியென்றால் 'B' க்கு ஆப்பிள் கிடைக்கவே கிடைக்காது... அது விண் வெளியில் பறந்து போய் விடும்,,,, எனவே நியூட்டன் எல்லாப் பொருள்களையும் பூமி 'தன்னை' நோக்கி இழுக்கிறது என்ற முடிவுக்கு வந்தார்... மேலும் பூமி மாத்திரம் ஆப்பிளை இழுப்பதில்லை.... ஆப்பிளும் பூமியை இழுக்கிறது என்று சொன்னார்..

இதற்கான சமன்பாடு பூமி ஆப்பிளை ஈர்க்கும் விசை F = G M1 M2 / R2 ...M1 என்பது பூமியின் நிறை..M2 என்பது ஆப்பிளின் நிறை ...R என்பது பூமியின்ஆரம்..நாம் எடை எடை என்று சொல்கிறோமே அது ஒரு மாயை..அது கிரகத்திற்கு கிரகம் வேறுபடும்..உதாரணமாக இங்கே அறுபது கிலோ இருக்கும் ஒருவர் நிலாவில் பத்து கிலோ இருப்பார்.. ஆனால் அவரது நிறை பிரபஞ்சத்த்தில் எங்கேயும் மாறாது...இயற்பியல் நிறைக்கும் எடைக்கும்உள்ள தொடர்பை W =mg என்கிறது..இங்கே g என்பது நாம் முதலில் பார்த்த acceleration due to gravity ..அடுத்து நியூட்டனின் மூன்றாம் விதி: இது நமக்கெல்லாம் பொதுவாகத் தெரிந்த ஒன்று தான்: அதாவது ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான, எதிரான ஒரு விசை இருக்கும் என்பது. எந்த ஒரு விசையும்
தனியாக இயங்குவதில்லை..அதன் ஜோடியும் கூட சேர்ந்தே வருகிறது.

நீங்கள் ஒரு பாறையை ஓங்கிக் குத்தினால் உங்களுக்கு ஏன் வலிக்கிறது? பாறைக்கு தானே வலிக்க வேண்டும்? ஓகே நியூட்டன் விதிப்படி நீங்கள்பாறைக் குத்தியதும் பாறையும் உங்களைக் குத்துகிறது. இதற்கு இன்னொருஉதாரணம் ராக்கெட் மேலே போவது..ராக்கெட் எரிபொருளை எரித்து கீழே உந்தித் தள்ளும் போது அதற்கு எதிரான விசை எதிர்-திசையில் ராக்கெட்டின் மீது செயல் பட்டு அதை மேலே தள்ளுகிறது.

குண்டான ஒரு ஆளும் மிகவும் ஒல்லியான ஒரு ஆளும் சண்டை போடுவதாக வைத்துக் கொள்வோம்..குண்டான ஆள் ஒல்லியானவரைப் பிடித்துத் தள்ளுகிறார்..அவர் போய் தூரமாக விழுகிறார்... இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்..நியூட்டனின் மூன்றாம் விதிப்படி குண்டு ஆள் ஒல்லி ஆளை எந்த விசையுடன் தள்ளுகிறாரோ அதே அளவு விசையுடன் ஒல்லியும் குண்டை எதிர் திசையில் தள்ளும்...ஓகே அப்படியானால் ரெண்டு பேரும் நகரவே கூடாது இல்லையா? ஆனால் ஒல்லி ஆள் ஏன் பாவமாகப் போய் தூர விழுகிறார்? என்ன எல்லாத்துக்கும் பதிலை நானே சொல்ல வேண்டுமா? நீங்களும் கொஞ்சம் யோசியுங்கள்..அதே மாதிரி 'குதிரை வண்டி'..குதிரை, வண்டியை இழுக்கும் அதே விசையுடன் வண்டியும் குதிரையை இழுத்தால் (எதிர் திசையில்) வண்டி எப்படி நகருகிறது?

கடலில் அலைகள் விடாமல் வந்து கொண்டிருப்பதற்கும் நியூட்டனின் மூன்றாம் விதி தான் காரணம் என்கிறார்கள்..இன்று கிளாசிகல் இயற்பியலின் தந்தை என்று அழைக்கப்படும் 'கலிலியோவின்' பிறந்த நாள்..அவருக்கு அணு அண்டம் அறிவியல் தலை வணங்குகிறது

முத்ரா


'

Friday, February 11, 2011

கொஞ்சம் ஸ்பெஷல் கவிதைகள்!

(Caution: these poems are non-linear)


டிரைன் தடக்-தடக்-தடக் என்று ஒரே சுருதியில் போகுமே? அதே மாதிரி லீனியராக கவிதை எழுதி எழுதி அலுத்துப் போய் விட்டது...வித்தியாசமாக முயற்சிக்கலாம் என்று யோசித்ததில் வந்தவை இவை...முதல் விதி என்ன என்றால் எல்லாக் கவிதைகளும் நாலு வரியில் முடிந்து விட வேண்டும்..

1 . முதல் வார்த்தைக்கு எதிரான வார்த்தையுடன் கவிதையை முடித்தல் :

இருட்டு கவிழத் தொடங்கி விட்டது
இன்றாவது சீக்கிரம் வருவாரா? இல்லை வழக்கம் போல பதினொரு மணியா?
ஆபீசில் திடீர் வேலை என்பாரா? அமெரிக்கா நண்பன் அழைத்தான் என்பாரா?
எல்லாம் கடவுளுக்கே வெளிச்சம்!


2 . முதல் வார்த்தையை அப்படியே திருப்பிப் போட்டு கடைசி வார்த்தை

சாவி தான் ஊர் சுற்ற வேண்டும்
சட்டைப் பையிலோ பேன்ட் பாக்கெட்டிலோ அமர்ந்து கொண்டு
ஜம்மென்று ரயிலிலும் விமானங்களிலும்
பெட்டைப் பூட்டுகளுக்கு எதற்கு விசா??


3 . கடைசி வரியில் திடீர் திருப்பம்

கணவர் வரும் நேரம் ஆகி விட்டது! சீக்கிரம் போய் விடு
நாளை அவர் சென்றதும் மீண்டும் வந்து விடு
இனிக்க இனிக்க எவ்வளவு வேண்டுமானாலும் கொஞ்சலாம்
அவருக்குப் பூனைகள் என்றாலே பரம அலர்ஜி!


4 . முதல் வரியில் இருந்து விலகி எங்கெங்கோ ஊர் சுற்றி விட்டு மீண்டும் கடைசி வரியில் சப்ஜெக்டுடன் இணைதல்

ஹோம்-வொர்க் செய்தாயா? இங்கிலீஷ் புக் எடுத்துட்டயா?
நீரிழிவு நோயால் நிமிடத்திற்கு
பத்து பேர்கள் இறக்கிறார்கள்
டி.வி.யை ஆப் பண்ணும்மா! ஸ்கூல் பஸ் வந்துறப்போகுது!


5 . சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் மூன்று வரிகளை எழுதி விட்டு அவைகளைக் கடைசி வரியில் இணைத்தல்

கண்டக்டர் டிக்கெட்டில் எச்சில் செய்கிறார்..
விபூதி குங்குமம் மணக்கும் தட்டில் கற்பூர தீபம்
தக்காளி விற்ற காசையெல்லாம் வைத்து அவள் மீன் வாங்கி வந்தாள்
சமத்துவத்திற்கு சிறந்த உதாரணம் நாணயம்!


6 .உல்டாவாகப் படித்தாலும் பொருள் வரும்படி

தெருவில் யாரோ அடிபட்டுக் கிடந்தார்கள்
நமக்கென்ன என்று விலகிப் போனோம்!
இதயப் பகுதியில் ஏதோ 'சுர்' என்றது..
அம்மாவிடமிருந்து கால்.."டேய், அப்பாவுக்கு ஆக்சிடன்டாம்'


7 . தொடங்கிய வார்த்தையிலேயே முடித்தல் ; முற்றிலும் வேறு பொருளுடன்

சாமி இருக்குதுன்னு சத்தியமா சொல்றீங்க
பூமியெல்லாம் காப்பாத்து வாராமே? -மாமி
கோடிக் கணக்கில் நகை கொள்ளையர்கள் திருடறப்ப
வேடிக்கை பாத்துச்சோ சாமி?

[இப்படி உங்களுக்கு ஏதாவது கவிதை தோன்றினால் சொல்லுங்கள்..]

முத்ரா


Wednesday, February 9, 2011

பதிவுலக மேனியாக்கள் ...

மேனியா என்றால் ஏதோ ஒன்றின் மீது ஏற்படும் பைத்தியக்காரத் தனமான வெறியாம்..உதாரணமாக தீயின் மீது ஏற்படும் வெறியை 'பைரோ மேனியா' என்பார்கள்..இந்த மேனியா உள்ளவர்கள் எங்கே போனாலும் இந்த இடம் அப்படியே தீப்பிடித்து எரிந்தால் எப்படி இருக்கும் என்று ஏடாகூடமாக ஆசைப்படுவார்களாம்..
அதே மாதிரி எங்கே எதைப் பார்த்தாலும் அப்படியே லவட்டிக் கொண்டு வரலாம் என்ற ஆசைக்கு 'கிலெப்டோ
மேனியா' என்று பெயர்..நூறு ரூபாய்க்கு காய்கறி வாங்கினாலும் கடைக்காரருக்குத் தெரியாமல் ஒரு கேரட்டை லவட்டுவதில் இன்பம் காண்பவர்கள் இவர்கள்..

இதே மாதிரி யோசித்துப் பார்த்ததில் பதிவுலகத்தில் கீழ்க்கண்ட மேனியாக்கள் இருப்பதாகத் தோன்றுகிறது..பிராக்கெட்டில் இருப்பது வேடிக்கைக்காக மட்டும்..:)


ஹாலுசினோ மேனியா

- பதிவு எழுதுவது போல கனவு காண்பது..இவர்களுக்கு ஆயிரம் FOLLOWERS சேர்ந்தது போல கனவு எல்லாம் வரும்...

அகோலுதோ
மேனியா

- டெய்லி காலையில் ஆபீஸ் வந்து முதல் வேலையாக யாராவது
FOLLOWER புதிதாகச் சேர்ந்திருக்கிறாரா என்று பார்ப்பது..

கிராஃபோ மேனியா

-டெய்லி ஏதோ ஒரு பதிவு எழுதிக் (கிறுக்கிக்) கொண்டே இருப்பது..( உ.தா:சமுத்ரா )

அமோபியோ
மேனியா

-தினமும் நாலைந்து தடவை ப்ளாக்கின் வடிவமைப்பை மாற்றுவது..அதைத் தூக்கி இங்கே போட்டு, இதை அங்கே போட்டு, புதிய Gadget add செய்து மெனக்கெடுவது

ஆன்டி ப்ரேசோ
மேனியா

- யார் எந்த விஷயத்தை சொன்னாலும் 'இது தப்பு' 'இப்படி இல்லை' 'தீர்ப்ப மாத்து' என்றெல்லாம் எதிர்த்து பின்னூட்டம் போடுவது

டோக்ஸா
மேனியா

-எல்லா ப்ளாக்குகளுக்கும் சென்று சகட்டு மேனிக்கு கமெண்ட் போடுவது (உ.தா: சித்ரா மேடம் :) )

காமைடோ
மேனியா

- வடிவேலுவின் வாரிசாக காமெடியை விடாமல் பிடித்துக் கொண்டு டெரர் காட்டுவது.. (பன்னிக் குட்டி, மங்குனி போன்றவர்கள் )

குடோஸ்
மேனியா

-எப்படியாவது பிரபலமாகி விட வேண்டும் என்ற வெறி..பதிவு எழுதியதும் எல்லாருக்கும் மெயில் அனுப்புவது..ஸ்டேடசில் போட்டுக் கொள்ளவது..பிற ப்ளாக்குகளுக்குசென்று எங்க கடைக்கு வாங்க என்று வெத்தலை பாக்கு வைத்து அழைப்பது..

பைரா மேனியா

- கருணாநிதி, சீமான், ஒரு அப்பாவிப் பதிவர், பார்ப்பனர்கள் என்று எல்லாரையும் நாயே பேயே என்று ஒருமையில் விளித்து , அட்டாக் பண்ணி கண்டபடிபதிவுகள் எழுதுவது

முத்ரா