இந்த வலையில் தேடவும்

Monday, March 25, 2013

கலைடாஸ்கோப்-87

லைடாஸ்கோப்-87 உங்களை வரவேற்கிறது.


சென்னையில் ஒரு blog நண்பர் இருக்கிறார். (பேரை சொல்லக் கூடாது என்று கண்டிப்பாக சொல்லி விட்டார்!) சென்னை விப்ரோவில் இருக்கிறார். அடிக்கடி மெயில் செய்து சந்தேகங்களைக் கேட்பார். இல்லை என்றால் 'ரொம்பவே போர் அடிக்கிறது பாஸ், எதாச்சும் சுவாரஸ்யமான மேட்டர் சொல்லுங்க" என்பார். நானும் 'உளுந்து வடையின் உள்ளே உள்ள ஓட்டை வடைக்கு சொந்தமானதா, பிரபஞ்சத்துக்கு சொந்தமானதா என்று யோசியுங்கள் என்றோ , James while John had had had had had had had had had had had a better effect on the teacher இது எப்படி சரியான வாக்கியம் என்று யோசியுங்கள் என்றோ ஏதோ சொல்லி எஸ்கேப் ஆகி விடுவேன். இந்த முறை, MATH ERROR அல்லது 1/0 அல்லது முடிவிலி பற்றி சொல்லுங்கள் என்றார். அவருக்கு சொன்னதை இங்கே பகிர்கிறேன் :

முடிவிலி (infinity )என்பது அறிவியலாளர்களையும் , கணித அறிஞர்களையும்,  ஏன் ஆன்மீக வாதிகளையும் ரொம்பவே தொந்தரவு செய்து வந்துள்ளது.தன்னுடைய எல்லைக்குள் வராததை, தன்னுடைய கற்பனைக்குள் சிக்காததை மனித மனம் மிகவும் சங்கடத்தோடு அணுகுகிறது.

முடிவிலியுடன் எதை சேர்த்தாலும் முடிவிலியே வரும்; முடிவிலியில் இருந்து எதை  நீக்கிலாலும் முடிவிலியே வரும் என்று கற்பனை செய்வது கஷ்டமாக இருக்கிறது. கணித மொழியில் X+1 =X அல்லது X-1 = X என்ற சமன்பாடுகளுக்கு எந்த தீர்வும் இல்லை.


X + 1 = X


இரண்டு பக்கமும் X ஆல் வகுக்க,


1 +1/X = 1 அல்லது 1/X  = 0  ; X =1/0 என்று வருகிறது. எனவே முடிவிலியை, ஒரு வடிவத்தில் கொண்டு வரவும், கணித ரீதியாக அணுகவும் 1/0 என்று குறிப்பிடுகிறோம்.  கால்குலேட்டர்கள் 1/0=? என்று கேட்டால் வெறுமனே MATH ERROR என்று சொல்லி விடும். அதை மேலும் ஆழமாகப் பார்த்தால் சில விஷயங்கள் புலனாகும்.

வகுத்தல் என்பது தொடர்ச்சியான கழித்தல். 10 / 2 = 5 என்றால் பத்தில் இருந்து தொடர்ச்சியாக 2 ஐ ஐந்து முறை 'எடுக்க' முடியும் என்று சொல்கிறோம் .  இதை 1/0 என்பதற்குப் பார்த்தால் ஒன்றில்  இருந்து நாம் எதையுமே எடுப்பதில்லை (0) எனவே , அதிலிருந்து பூஜ்ஜியத்தை முடிவில்லாமல் எடுத்துக் கொண்டே இருக்கலாம். எனவே 1/0 =∞. 1/∞ = ஒன்றில் இருந்து மிக மிகப் பெரிய எண் ஒன்றை பூஜ்ஜிய முறை எடுக்கலாம் என்று வருகிறது. 1/∞ =0

1/∞ என்பதை ஒரு பொருளை முடிவில்லாத நபர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பது என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொருவருக்கும் மிக மிக மிகக் குறைவான பொருளே (கிட்டத்தட்ட பூஜ்ஜியம்) கிடைக்கும் அல்லவா. எனவே  1/∞ =0 என்று சொல்லலாம். 1/0 என்பதை ஒரு பொருளை 'பூஜ்ஜிய' நபர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பது என்று வைத்துக் கொண்டால் என்ன வரும்? யோசிக்க முடியவில்லை அல்லவா? ஒரு பொருளை பூஜ்ஜிய நபர்களுக்கு எப்படிப் பகிர்ந்து கொடுப்பது? அப்படிப் பகிர்ந்து கொடுத்தாலும்  மீண்டும் அந்தப் பொருள் அப்படியே இருக்கும் அல்லவா? எனவே இந்திய கணிதவியலாளர் மஹாவீரர் , X /0 = X ஒரு எண்ணை பூஜ்ஜியத்தால் வகுத்தால் அந்த எண்ணே வரும் என்கிறார். அதாவ்து 1 / 0 = 1. இன்னொரு விதத்தில் சொன்னால் 1 / 0 = 1 என்றால் பூஜ்ஜியத்தை 1 முறை ஒன்றில்  இருந்து கழித்தால் ஒன்றும் இல்லை. ஆனால் நம் காமன் சென்ஸ் , பூஜ்ஜியத்தை ஒரு முறை ஒன்றில் இருந்து கழித்தால் ஒன்று தானே வரும் (1-1.0=1)என்று கேட்கும். ஒரு முறை கழித்தால் ஒன்று வரும். இரண்டு முறையும் ஒன்றுதான் வரும்...பத்து முறை, நூறு முறை , லட்சம் முறை, கோடி முறை இப்படி தொடர்ச்சியாக பிரபஞ்சத்தின் ஆயுள் வரை தொடர்ந்து இடை விடாமல் கழித்துக் கொண்டிருந்தால் ஒன்று வராமல் பூஜ்ஜியம் வந்து விடும்.எறும்பு ஊரக் கல்லும் தேயும்...பூஜ்ஜியம் ஒன்றும் இல்லை தான்... ஆனால் அதை நாம் முடிவில்லாமல் ஒன்றில் இருந்து கழிக்கும் போது அதுவும் ஒரு கணிசமான தொகையாக மாறி விடுகிறது. இதை கணித மொழியில் 1 - 0 . ∞ = 0 என்று எழுதலாம். எனவே 0 . ∞ = 1 அல்லது        ∞ = 1 / 0

தத்துவத்தில், முடிவிலி, 'ஜீனோ' புதிர் என்று சொல்லப்படும்  ஒரு விஷயத்தில் வருகிறது. பந்தயத்தில் மெதுவாக ஓடும் ஒருவர், வேகமாக ஓடும் ஒருவரை முந்திச் செல்ல முடியாது என்று இது சொல்கிறது. இருவருக்கும் இடையே உள்ள தூரத்தை இரண்டாக பகுக்க முடியும். அந்த தூரத்தை மீண்டும் இரண்டாக பகுக்க முடியும். இப்படி , முடிவில்லாத தூரங்களின் தொகுப்பை கடக்க வேண்டும் என்பதால் முந்த முடியாது. ஆனால் இந்த லாஜிக்கை எல்லாம் இயற்கை பார்ப்பதில்லை!Nature has her own logic! அப்போதைய கிரேக்க தத்துவ வாதிகள் லாஜிக்கின்படி ஒரு ஆண் மற்றொரு ஆணையே விரும்ப வேண்டும் என்று கருதினர்..ஆனால் இயற்கை ஆண் ,பெண்ணை விரும்பச் செய்கிறது!


முடிவிலியின் விஷயத்தில் ஒரு ஆறுதலான விஷயம் என்ன என்றால் ஒரு சார்புக்கு முடிவிலி 'எல்லை' என்ன என்பதை நிர்ணயிக்க முடியும்.

1 + 1/2 + 1/4 + 1/8 + 1/16...........இந்த தொடரின் எல்லை '2' என்று சொல்ல முடியும்....(ஆனால் 1+1/2+1/3+1/4+1/5....என்பதற்கு குறிப்பிட்ட எல்லை இல்லை என்பதை கவனியுங்கள்) 

பல்கோணம் ஒன்றுக்கு வட்டமே எல்லை என்று சொல்வதைப் போல! பலகோணத்தின் பக்கங்களை அதிகரிக்க அதிகரிக்க அது வட்டத்தை நெருங்குகிறது. மேலும், ஆச்சரியமாக வட்டம் ஒன்றின் எல்லை மீண்டும் நேர்கோடாகிறது !படத்தைப் பாருங்கள்!வட்டத்தின் மையம் விலகிச் செல்லச் செல்ல , அதன் ஆரம் அதிகரித்து , முடிவில்லாத தூரத்தில் மையம் கொண்டுள்ள வட்டத்தின் வளைவு நேர்க்கோடாக மாறி விடுகிறது. ஆம், எல்லாமே ஒரு வட்டம்!முடிவிலியில் ஒரு குழப்பமும் உண்டு.

உதாரணம் 1-1+1-1+1-1+1-1.......∞ என்பதன் மதிப்பு என்ன?? பூஜ்ஜியம் தானே?-இதையே 1 + (-1+1) + (-1+1) +(-1+1).....என்று எடுத்துக் கொண்டால் இதன் மதிப்பு 1 என்று வரும்..அப்படியானால் 1=0???!?.ப.பு :-கவிஞர் வாலியின் 'ராமானுஜ காவியம்'..

வாலியின் பாண்டவர் பூமி , கிருஷ்ண விஜயம் போன்ற கவிதை நூல்கள் வரிசையில் மற்றுமொரு விருந்து!வாலியின் வழக்கமான எதுகை, மோனை, சந்தம் கொஞ்சும் எழுத்து நடை!

சில சுவாரஸ்ய உதாரணங்கள்:


*வனம் முழுக்க  
விழுங்கி விட்டதாக
மார்தட்டிக் கொண்டிருந்த  
மையிருட்டின் முகத்தில்
அவ்வப்போது - 
கரியை அப்பிக் கொண்டிருந்தன  
வால் பகுதியில்  
விளக்குகளை வைத்தபடி
செடிக்குச் செடி 
சிறகடித்துப் பறந்த 
சின்னச் சின்ன மின்மினிகள்!*வெட்டவெளிப் பொட்டலெனும்
புற்றிலிருந்து புறப்பட்ட-
வெளிச்சக் கரையான்கள்
வெகு வேகமாக
உண்ண உண்ண
இற்று விழுமளவு  
இருட்டுமரம் உளுத்தது ;  
உடன்  
ஊருலகு வெளுத்தது!

*அவதார புருஷர்களாகி  
அவனிக்கு வந்தவர்களே-  
அரிதார புருஷர்களாகி  
ஆடவேண்டியதை ஆடிவிட்டு
ஏறியிருக்கின்றனர் வானம்;  
எம்மாத்திரம் நீயும் நானும்?

*மெய்ப்பொருள் யாதெனில்  
மெய்ப்பொருள் ஒன்றே
மெய்ப்பொருள் - மற்றபடி -
கைப்பொருள் என்பதும்  
பைப் பொருள் என்பதும்  
பொய்ப் பொருள்!

ஹ்ம்ம்..இரண்டே இரண்டு சிறு குறைகளைத் தவிர வேறேதும் இல்லை இந்த ராமானுஜ காவியத்தில்

* ஒவ்வொரு வாக்கியத்துக்கும் எதுகை எழுதியே தீருவேன் என்று எழுதியிருப்பது . நீண்ட இடைவெளிகளுக்குப் பிறகு சந்தங்கள் வருவது. உதாரணம்:


ராமானுஜா ! 
ரொம்பவும் ரோசக்காரனடா நீ!  
அப்படியிருப்பது அதிசயமல்ல...

மன்னன் முனிய - 
ஊர்விட்டு மழிசை 
முனிவர் சென்றதுபோல்-
மானமுடைய மாந்தர் மண்டிக் கிடக்கின்ற
தேசுடைய - 
தொண்டை தேசக்காரனடா நீ!


இன்னொன்று முடிக்கும் போது தெரியும் ஒரு தலைபோகும்  அவசரம். .ராமானுஜரின் இளமைக் கால சம்பவங்களை விலா வாரியாக விளக்கி விட்டு , அவர்  முக்தி அடைவதை அரைப் பக்கத்துக்குள் சொல்லிவிடும் அவசரம் ஏனோ?

* ராமானுஜரின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்வமான சம்பவங்கள்:- ( இந்தப் புத்தகத்தை படிப்பதற்கு முன் இவை எனக்குத் தெரியாது!)

=திருமாலின் சிவந்த கண்களை குரங்கின் குதத்துடன் ஒப்பிடுகிறார் ராமானுஜரின் குரு யாதவப் பிரகாசர். (கப்யாசம் புண்டரீகம்). இதை ராமானுஜர் மறுக்க, அவருக்கும் குருவுக்கும் தொடங்குகிறது பனிப்போர். ஒரு கட்டத்தில் யாதவப் பிரகாசர் ராமானுஜரை கொலை செய்யத் துணியும் அளவு முற்றுகிறது.

= ஆளவந்தாரைக் காண்பதற்கு ஸ்ரீரங்கம் செல்கிறார் ராமானுஜர். ஆனால் அவர், ராமானுஜர் வரும் முன்பே முக்தி அடைத்து விடுகிறார். ஆளவந்தாரின் பூத உடலை மட்டுமே ராமானுஜரால் தரிசிக்க முடிகிறது. அவர் சடலத்தில் கையின் மூன்று விரல்கள் மட்டும் மடங்கிக் காணப்படுகின்றன. ராமானுஜர் எல்லார் முன்னிலையிலும் மூன்று உறுதி மொழிகளை எடுத்துக் கொண்டதும் மூன்று விரல்களும் ஒவ்வொன்றாக நிமிர்கின்றன!

=  தன் மனைவி மீது அவ்வளவு பாசம் உறங்காவில்லி என்பவனுக்கு.  ஒருநாள் தெருவில் தன் மனைவிக்கு குடை பிடித்துக் கொண்டு, அவள்   பாதத்துக்கு தன் அங்க வஸ்திரத்தை கம்பளமாக விரித்துக் கொண்டு செல்கிறான். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ராமானுஜர் அவனை மடத்துக்கு அழைத்து ' மனையாள் மீது இத்தனை பிரியமா?' என்கிறார். உறங்காவல்லி , "ஆம், ஸ்வாமி , அவளது அழகிய கண்களுக்கு நான் அடிமை" என்கிறான். ராமானுஜர் அவனை ரங்கநாதர் கோயிலுக்கு அழைத்துச் சென்று திருமாலின் கண்ணழகைக் காட்டுகிறார். அதைப் பார்த்து பிரமித்துப் போகும் உறங்காவல்லி, ராமானுஜரின் சீடனாக மாறி விடுகிறான்.

= வரதாழ்வான் என்னும் பக்தன் ஒருவன். அவன் இல்லாத நேரம் பார்த்து அவன் அகத்துக்கு வந்துவிடுகிறார் ராமானுஜர். வீட்டிலோ பரம தரித்திரம். வரதாழ்வான் மனைவி உடையவரை உபதரிசித்து ஸ்நானம் செய்து வந்ததும் திருவமுது தயாராய் இருக்கும் என்று சொல்லிவிடுகிறாள் . வீட்டில் அரிசி, பருப்பு, புளி மிளகாய், மேகி நூடுல்ஸ்  ஒன்று கிடையாது. ஓடுகிறாள் வணிகன் கடைக்கு...வணிகனுக்கு அவள் மீது ஒரு கண்...'நீ என் வீட்டுக்கு மளிகை சாமான் அனுப்பினால் யதிராஜர் குடற்பசி தீர்ப்பேன்; அப்படியே இன்று இரவு உன்னிடம் வந்து உன் உடற்பசி தீர்ப்பேன்' என்கிறாள். அவனும் வாயெல்லாம் பல்லாய் இளித்து, வேண்டுமட்டும் சாமான் அனுப்புகிறான். அவளும் எதிராஜருக்கு இன்சுவை விருந்து படைக்கிறாள் .வரதாழ்வானும் வீடு திரும்பி ஸ்வாமிகளை சேவிக்கிறான். பிறகு நடந்ததை அறிந்த ராமானுஜர், தன் பிரசாதத்தை வணிகனிடம் கொடுத்து விடும்படி சொல்லி விடைபெறுகிறார்.

அன்று இரவு, வரதாழ்வான் மனைவியை வணிகனின் வீட்டில் விடச் செல்கிறான். பிரசாத்தை உண்டதும் வணிகனுக்கு தன்  கண் முன் சாட்சாத் நாராயணனும் திருமகளும் நிற்பதாகத் தோன்றுகிறது. மனம் மாறும் வணிகன் இனி பரஸ்த்ரீகளை ஏறெடுத்தும் பாரேன் என்று சத்தியம் செய்கிறான்.

=சிறுவயதில் இருக்கும்  ஆளவந்தாருக்கும் , பண்டித கர்வம் நிறைந்திருக்கும் ராஜகுரு ஆக்கியாழ்வானுக்கும் நிகழ்ந்த வாதம் சுவாரஸ்வம். நான் மூன்று வாக்கியங்கள்சொல்வேன் அவற்றை நீங்கள் மறுத்தால் போதும் ' என்கிறார் ஆளவந்தார்.

1. உங்கள் தாய் ஒரு  மலடியல்ல.
2. நம் ராஜா நீதி நெறி தவறாமல் ஆள்பவன்.
3. நம் அரசி பதிவிரதை.

 

இந்த விஷயங்களை மறுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக் கொள்கிறான் ஆக்கியாழ்வான்.

உம்மால் மறுக்க முடியுமோ என்று அரசன் கேட்க , ஆளவந்தார்,

1. ஒரு மரம் தோப்பல்ல. ஒரு பிள்ளையும் பிள்ளை அல்ல. ஒரு பிள்ளை பெற்றவள் காலம் பூராம் என் பிள்ளைக்கு என்னாகுமோ ஏதாகுமோ என்று கவலையுடனே காலம்தள்ளுவதால் ஒரு பிள்ளை பெற்றவளும் மலடி தான்

2. மக்கள் செய்யும் பாவம் மன்னனை சேரும் என்பதால் நீதிமானான நம் அரசரும் தார்மீகர் இல்லை என்று வாதம் மறுக்கப்படுகிறது.

3. வைதீக முறைப்படி விவாகம் புரிந்து கொண்ட ஒரு பெண் முதல் நாள் சந்திரனுக்கு சொந்தம்; இரண்டாம் நாள் கந்தர்வனுக்கும் மூன்றாம் நாள் அக்கினுக்கும் சொந்தமாகி நான்காம் நாளில்தான் தன் கணவனுக்கு உரிமையாகிறாள். எனவே என் மூன்றாம் வாக்கியமும் பொய் என்று மறுக்கப்படுகிறது.

ராஜகுருவை வாதத்தில் வென்றதால் அவருக்கு ராஜ்ஜியத்தில் பாதி அளிக்கப்படுகிறது. பின்னர் ஆளவந்தார் ராஜ்ஜியத்தை துறந்து விட்டு , ஸ்ரீவைஷ்ணவராகிறார்.

 சரி. ராமானுஜரின் விஷயத்தில் சில சந்தேகங்கள் :

* ராமானுஜர் எல்லா வர்ணத்தவர்களையும் ஆதரிக்கிறார். ஏன், டில்லியில் இஸ்லாமிய பெண் ஒருத்தியைக் கூட  அரவணைத்து துலுக்க நாச்சியாராய் உயர்த்துகிறார். ஆனால்,சைவர்கள் மீது மட்டும் ஏன் வெறுப்பு? திருப்பதி தெய்வம் சிவனா விஷ்ணுவா என்ற சண்டையைத் தீர்க்க , சைவர்களும் வைணவர்களும் இரவில் சிவ சின்னங்களையும் விஷ்ணு சின்னங்களையும் உள்ளே  வைத்து கதவைப் பூட்டுகிறார்கள் .  மறுநாள் தெய்வம் விஷ்ணு சின்னங்களை எடுத்து அணிந்து கொண்டிருக்க, திருப்பதி தெய்வம் பெருமாளே என்று ஊர்ஜிதமாகிறது. சில பேர் , ராமானுஜர் தான் இரவில் பாம்பாக மாறி கருவறைக்கு உள்ளே சென்று சிவ சின்னங்களை உடைத்துப் போட்டார் என்றும் சொல்வார்கள்.

* தமது உற்ற நண்பர்களான கூரத்தாள்வானையும் , பெரிய நம்பியையும் அதோ கதியாக கொடுங்கோல் மன்னனிடம் விட்டு விட்டு ராமானுஜர் அவசரம் அவசரமாக மேல்கோட்டை செல்லும் அவசியம் என்ன? அரசனிடம் சென்று பேசி இருக்கலாமே?

 * ஸ்ரீ ரங்கத்தில் இருக்கும் ராமானுஜரின் 'தானான திருமேனி' அவரது mummify செய்யப்பட அசல் திருமேனி என்று சொல்கிறார்கள். இது எந்த அளவு உண்மை?

  ராமானுஜர், மத்வாச்சாரியார், அதி சங்கரர் இவர்களது தத்துவங்கள் பற்றியும் பேச வேண்டியிருக்கிறது. சங்கரரது அத்வைதம் (இருமை அற்றது) முன்பே தோன்றி விட்டது. (8ஆம் நூற்றாண்டு) பிறகு, அத்வைதம் மற்றும் த்வைதம் இரண்டுக்கும் compromise செய்து கொள்ளும் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் தோன்றுகிறது. (10 ஆம் நூற்றாண்டு ) பிறகே த்வைதம் மத்வாசாரியாரால் 12 ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப் படுகிறது. இது கொஞ்சம் இடிக்கிறது. லாஜிக்கின் படி த்வைதம் - அத்வைதம் - விசிஷ்டாத் வைதம் என்று இருக்க வேண்டும். maybe , இவர்களுக்கு முன்னரே இந்தக் கொள்கைகள் இருந்திருக்க வேண்டும்...இவர்கள் இதை முழுமூச்சோடு பரப்பியிருக்க வேண்டும்..


அத்வைதம், உலகத்தை மாயை என்று சொல்கிறது. பிரம்மம் அல்லது நிர்குணப் பிரம்மமே எல்லாம் ,நான், நீ ,நான்-கடவுள் ஆர்யா எல்லாமே பிரம்மம் தான். நான், நீ, நான் ஒரு ஜீவாத்மா போன்ற பேதங்கள் மாயையினால் ஏற்படுகின்றன. மற்றபடி எல்லாமே பிரம்மம் தான். இந்த  வேறுபாடுகள் அவித்யையால் (அறியாமை) ஏற்படும் தோற்றப் பிழைகள் மட்டுமே. துணிக்கடை ஒன்றின் கண்ணாடியில் நீங்கள் உங்களைப் பார்க்கும் போது பல்வேறு பிம்பங்கள் தோன்றுமே..அப்படி பரமாத்மாவின் பிம்பங்கள் தான் நாம் என்கிறது அத்வைதம். ஒரு விதத்தில் இது உளுந்து வடையின் ஓட்டை போன்றது...வெட்டவெளி பரமாத்மா..அதை உளுந்து வடை தனக்குள் சிறை பிடிக்க முயல்வது போல ஜீவாத்மா.. இரண்டும் ஒன்றே...அல்லது, ஒரு காலிப்  பானையை குளத்தில் முங்கினால்  பானையின் உள்ளே இருக்கும் தண்ணீரும் வெளியே இருக்கும் தண்ணீரும் ஒன்றுதானா? ஒன்றுதான் என்கிறது அத்வைதம்.

'மாயை' என்பதற்கு சங்கரர் கொடுக்கும் உதாரணம் பாம்பு மற்றும் கயிறு. கயிறு, பாம்பு போலத் தோற்றமளிப்பது. ஆனால் ஓஷோ, இந்த உதாரணம் சரியானது அல்ல என்கிறார். ஒரு முறை இது பாம்பு அல்ல என்று தெரிந்து விட்டால் அதற்குப் பிறகு பார்க்கும் ஒவ்வொரு முறையும் அது கயிறு தான். மாயை என்பது தண்ணீரில் அழுத்தி வைக்கப்பட்டுள்ள ஒரு கோலைப் போன்றது. அது வளைந்து தெரிகிறது. எத்தனை முறை பார்த்தாலும்! கோல் , வளையவில்லை என்று நம் அறிவு சொன்னாலும், அது நம் கண்களுக்கு வளைந்தே தெரிகிறது. அது போல மாயை!


ஸ்ரீ ஜெயதீர்த்தர் 


இதற்கு இன்னொரு extreme -ஆன த்வைதம், கொஞ்சம் infinity யின் பக்கம் வருகிறது..ஆம்..பரமாத்மா ஜீவாத்மா என்ற இணை கோடுகள் கண்டிப்பாக ஒன்றை ஒன்று ஒரு நாள் தொடும் ..ஆனால் அதற்கு முடிவில்லாத தூரம் பயணிக்க வேண்டும். they meet at infinity..ஜீவனின் எல்லை பரமாத்மா ..ஜீவன் பரமாத்மாவாக இயலாது! ஏன் ,ஒரு ஜீவாத்மா இன்னொரு ஜீவாத்மாவில் இருந்தும் இன்னொரு ஜடப்பொருளில் இருந்தும் கூட வேறுபட்டது; 

கடல்நீரும் உங்கள் மினரல் வாட்டர் பாட்டிலில் உள்ள நீரும் ஒன்றுதானா என்றால் ஒன்று அல்ல? of course ,ஒருநாள் எல்லாத் தண்ணீரும் கடலை சேர்ந்தே ஆக வேண்டும். சேர்ந்த பிறகு இரண்டும் ஒன்று ஆகலாம். (கடலிலே மழை வீழ்ந்த பின் எந்தத்துளி மழைத்துளி !) ஆனால் அவ்வாறு ஒன்று சேர்வது எண்ணிறைந்த படிநிலைகள்  நிறைந்த ஒரு பயணம். தன் ஆன்மீக சாதகத்தைப் பொறுத்து கடவுளுடன் ஒரு ஜீவன் நெருங்க மட்டுமே முடியும். ஒன்றாக இயலாது. அதிக பட்சம் தாரதம்யத்தின் படி சமனா என்று அழைக்கப்படும் லக்ஷ்மியின் இடத்தை எட்ட முடியும்..but , நாராயணன்! முடியாது! அவன் சர்வோத்தமன்! எந்த நிலையிலும் பேதம் இருந்தே தீரும்.  

விசிச்டாத்வைதம் ,இரண்டிற்கும் கொஞ்சம் இசைந்து கொடுத்து ஜீவன் என்பது பலூனில் அடைக்கப்பட்ட காற்று..அது , வெளியே உள்ள காற்றில்  (ஈஸ்வர) இருந்து பொதுவாக வேறுபட்டது. ஆனால் முக்தி அடைந்த ஜீவன் பலூனில் இருந்து வெளியே வந்த காற்று போல..மீண்டும் அதை கண்டுபிடுத்து அதே காற்றை அதே பலூனில் அடைப்பது கடினம்.எனவே ஒரு ஜீவனின் அறியாமை நிலையில் பேதம் நிலவுகிறது...ஞானம் அடைந்தபின் ஜீவனும் பரமனும் ஒன்றே என்கிறது...சரி..don't get சீரியஸ்!  தித்யா சானலின்  சில நிகழ்ச்சிகள் புன்னகைக்க வைக்கின்றன..

$ டாடி எனக்கொரு டவுட்டு:
சில சமயம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்ல முடிவதில்லை.

இந்த நிகழ்ச்சி ஒரு அப்பாவிடம் ஸ்கூல் பையன் ஏடாகூடமாக சந்தேகம் கேட்பது போல இருக்கிறது.பையன் கேட்கும் டவுட்டுகளில் சில:

* வாக்கிங் போனால் வெயிட் குறையும் அப்படீன்னா யானை தினமும் காட்ல வாக்கிங் போகுதே...அதுக்கு ஏன் குறைய மாட்டேங்குது?

* தலையை அடமானம் வைத்தாவது இதை செய்வேன் அப்படீங்கறாங்களே ,எந்த அடகுக் கடையில் தலையை அடகு வைக்க முடியும்? தலையை அடகு வெச்சுட்டு வெறும் உடம்போட எப்படி இருக்க முடியும்?

* ஆட்டுக்கு வாலை அளந்து வெச்சுருக்கான் அப்படீங்கறாங்களே, அப்படின்னா, மாட்டுக்கு குதிரைக்கெல்லாம் அளக்காமலா வெச்சிருக்கான்??

*கணக்குல புலி அப்படீங்கறாங்களே, கணக்குல சிங்கம் கணக்குல காண்டாமிருகம் அப்படியெல்லாம் ஏன் சொல்றதில்லை?


$ கொஞ்சம் நடிங்க பாஸ் :

எத்தனை நடிகர்களை நாம் விமர்சித்திருப்போம்? அந்த இடத்துல அதர்வாவுக்கு  expression பத்தலை மச்சி! 'தமிழ்நாட்டில் ஏழு கோடி பேர் சினிமா விமர்சகர்களாக இருக்கிறார்கள் ' என்று கிண்டலடிக்கிறது ஒரு ட்விட்டு ..ஆனால் நம்மை நடிக்கச் சொன்னால்? அப்போது தான் நடிப்பது எத்தனை கஷ்டம் என்று தெரியும்.இந்த  நிகழ்ச்சியில் நிறைய பேர் நடிக்க வராமல் சொதப்புகிறார்கள்.

நடிப்பு என்பது ordinary அல்லது extra -ordinary ? 'இயல்பான நடிப்பு' என்பது ஒரு ஆக்ஸிமோரான் :) உதாரணமாக, சினிமாவில் காதலன் ஒருவன் காதலியிடம் உருகி உருகி காதலாகிக்  கண்ணீர் மல்கி டயாலக் பேசினால் ஆஹா எத்தனை இயல்பா இருக்கு என்போம். அதையே நிஜத்தில் ஒரு காதலன் காதலியிடம் செய்தால் அவள் 'சும்மா நடிக்காதே' என்று சொல்ல பெரும்பாலும் சாத்தியம் இருக்கிறது..


  
$ சொல்லுங்கண்ணே சொல்லுங்க:-
இமான்  அண்ணாச்சியின் இந்த நிகழ்ச்சி எல்லாரையும் சிரிக்க வைக்கிறது. ஜுஜுபி மேட்டர் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பல விஷயங்கள் நமக்கு உண்மையில் தெரியவே இல்லை என்று விளங்க வைக்கிறது..'wi -fi ' எதன் மூலம் வேலை செய்கிறது? கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படுபவர் பெயர் என்ன? 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்றால் என்ன? மொரார்ஜி தேசாய் யார்? என்றெல்லாம். சில சமயம் இங்க்லீஷ் சொற்களுக்கு  தமிழில் என்ன என்று கேட்டும் தர்ம சங்கடப் படுத்துகிறார் இமான். DVD player , projector இவற்றுக்கு தமிழில் என்ன?

பிரம்மச்சாரியாகவே இருந்த இந்தியப் பிரதமர் யார்?

ஒரு காலேஜ் மாணவி சொன்ன பதில்: டாக்டர். அப்துல் கலாம்!

சில சமயம் விடுகதையும் கேட்கிறார்:

"வீட்டுக்குள்ளேயே இருப்பாள்; வினோதமாய்ப் பேசுவாள்; வந்தவரை வா என்பாள்; அவள் யார்"?

"ஓராயிரம் வீரர்களுக்கு ஒரே ஒரு கால்" அது என்ன?

கூகிள் இருக்கும் தைரியத்தில் நாம் எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முயற்சிப்பதே இல்லை என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். நமக்கு ஒரு விஷயத்தைப் பற்றி நன்றாகத் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருப்போம்..அனால், அதைப் பற்றிப் பேசச் சொன்னால் ஒரு நாலு வரிக்கு மேல் நாக்கு படுத்து விடும்..'இதுவா, இதெல்லாம் சப்பை மேட்டர்..எனக்குத் தெரியாததா ' என்று அலட்சியமாய் இருப்பது எத்தனை அறியாமை!நாம் ஓட்டும் கார் எப்படி ஓடுகிறது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? இதே விஷயம் உறவுகளுக்கும் பொருந்தும்.நம் மனைவியைப் பற்றி, கணவனைப் பற்றி , குழந்தைகளைப் பற்றி எல்லாம் தெரியும் என்று அலட்சியமாக இருக்கிறோம்..'அவன் அப்படியெல்லாம் பண்ண மாட்டான்!" ஒரு நாள் அவர்கள் மாறுபட்டுப் போனால், மாலையும் கழுத்துமாய் வந்து காலிங் பெல்லை அடித்தால் பின்னர்  கலங்குகிறோம்.ப்ரூ விளம்பரம் சொல்வதைப் போல ' உங்களுக்குப் பிரியமானவர்களை உங்களுக்கு எத்தனை நல்லாத் தெரியும்?'

எனவே never take things for granted!ஒரு விஷயம் உங்களுக்கு எத்தனை நன்றாகத் தெரிந்திருந்தாலும், finger டிப்பில் இருந்தாலும்  அதைப் பற்றி பேசும் முன் அல்லது அதை exhibit செய்வதற்கு முன் ஒரு முறை ரிவைஸ் செய்து பார்த்து விடுங்கள். 'பாடச் சொன்னால் உடனே பல்லவியை ஆரம்பித்து விடாதே...ஒரு முறை முழு லிரிக்சையும் மனசுக்குள் சொல்லிக் கொண்டு எல்லாம் தெரிந்தால் மட்டுமே பாடு!' இது பாட்டி சொல்லிக் கொடுத்த அட்வைஸ்..

மனவ்யால கிஞ்சராதடே என்று நளின காந்தியில் ஜம்மென்று ஆரம்பித்து விட்டு கர்மகாண்டமதா என்று சரணம் நாக்குக்கு வரவில்லை என்றால் கர்ம காண்டம் ஆகி விடும்!குரல் அங்கே இங்கே மக்கர் பண்ணினாலும் ஆடியன்ஸ் பொறுத்துக் கொள்வார்கள்.. நடுவில் லிரிக்ஸ் மறந்து விட்டால் அது ஒரு விதமான அவமானம்!சரி...

இந்த மாதிரி நிகழ்ச்சிகளும் ஆதித்யாவில் தான் வருகின்றன.

நம்ம அடுத்த காலர் யாருன்னு பார்ப்போம்!

'ஹலோ!'

'ஹலோ, யார் பேசறது?'

'நான் ஆகாஷ்'

'என்ன பண்ணறீங்க ஆகாஷ்?'

'நானா?'

'இல்லை..உங்க வீட்டு ஆட்டுக்குட்டி..டி .வி.வால்யூம் கம்மி பண்ணுறீங்களா? '

'நான்.. சிக்ஸ்த் படிக்கறேன்'

'சரி..இன்னிக்கு என்ன கடிஜோக் சொல்லப் போறீங்க?'

'சாமிக்கும் மாமிக்கும் என்ன வித்தியாசம்?'

'தெரியலையே ஆகாஷ்...'

'சாமின்னா ஜம்முன்னு இருக்கும்; மாமின்னா கும்முன்னு இருக்கும்'

Oh God !

ரு விளம்பரம்:

இரண்டு தாத்தாக்கள் தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். மேஜை மேல் நிறைய குட்டி குட்டி பொம்மைகள் உள்ளன...தம்மிடம் உள்ள பொம்மைகளை exchange செய்து கொள்கிறார்கள். 'ஒரு டாக்டர் பாண்டாவுக்கு அஞ்சு பாண்டாவா' என்று கேட்கிறார் ஒரு தாத்தா.

முதலில் இது ஏதோ இன்வெஸ்ட்மென்ட் ப்ளான் அல்லது ஏதோ ஒரு  ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் விளம்பரம் என்று நினைத்தேன். அது உண்மையில் ஒரு மிட்டாய் விளம்பரம்..மிட்டாயுடன் குட்டி பொம்மைகள் இலவசமாம்... பொம்மைகளை வைத்து விளையாட வயது இல்லை என்று முடிகிறது எந்த விளம்பரம்.

நாம் ஏன் ஒரு விஷயத்தை நேரடியாகப் பார்க்க முடிவதில்லை? ஏன் அது வேறு ஏதோ ஒன்றை சுட்டிக் காட்டுவதாகவே எண்ணிக் கொள்கிறோம்? காதலி, போனில் நான் பிஸியாய் இருக்கிறேன் என்றால் அவள் உண்மையிலேயே பிஸியாய் இருக்கலாம். நாம் ஏன் நம்மை அவாய்ட் செய்வதாக எண்ணிக் கொள்கிறோம்?

ஒரு ஜென் கதை.இதன் மேல் தியானம் செய்யுங்கள்.

ஒரு நாள் ஒரு ஜென் குரு ஒரு கோழி முட்டையை கையில் பிடித்துக் கொண்டு 'இதைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது' என்று கேட்டார்.

ஒரு சீடன் . " நாளையில் இருந்து மதிய உணவில் முட்டை போடப் போகிறீர்களா குருவே' என்றான்.

இன்னொரு சீடன் " முட்டையின் ஓடு போல் நம் மனம் வெண்மையாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும்' என்று சொன்னான்.

மூன்றாமவன் " குருவே, இது ஜீவன் முக்தியைக் குறிக்கிறது..நம்மை சுற்றி உள்ள அறியாமை என்ற ஓடு உடைந்தால் உள்ளே இருக்கும் ஆத்மா கோழிக்குஞ்சு போல புதிதாய்ப் பிறக்கும்' என்றான்.

குரு 'இது ஒரு கோழி முட்டை' என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்..


ஷோ ஜோக்:

முல்லாவிடம் ஒரு நாள் அவர் நண்பர் 'ஒரு பெண்ணுக்கு எப்படி நீச்சல் கற்றுத் தருவது?' என்றார்.

'நான் சொல்றேன் கேளு ; முதல்ல அவளுக்கு நீச்சல் உடை அணிவி. மெல்ல அவளை பாதி அணைத்துக் கொண்டு வலது கையை அவள் இடுப்பை சுற்றிப் போடு! அப்புறம் இடது கையை மெல்ல , நிதானமாய் அவள்...'

'அந்தப் பெண் என் தங்கை'

'அப்படியா?, அப்படீன்னா , அப்படியே பின்னால் இருந்து தண்ணியில் தள்ளி விட்டுடு போதும்'

சமுத்ரா
 

Thursday, March 21, 2013

Recursion - சிறுகதை

வணக்கம்..
[ஒரு புதிர்:

ஒரு நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒருவர் அந்த நிறுவனத்தின் வரவேற்பறையில் அதன் மினியேச்சர் மாடல் ஒன்றை வைக்க விரும்பினார். இஞ்சினியரை அழைத்து ' மாடல் அச்சு அசல் அப்படியே நிஜ கம்பெனி எப்படி இருக்கிறதோ அப்படி இருக்க வேண்டும். மீட்டிங் அறைகள், பேன்ட்ரிகள் , ரெஸ்ட் ரூம்கள் , மாடிப்படிகள், கேண்டீன் ,பர்னிச்சர் , ஏன் ஒரு சின்ன  தீயணைப்பு கருவி கூட மினியேச்சரில் அப்படியே இருக்க வேண்டும்.' என்றார் .இஞ்சினியர் சிறிது நேரம் யோசித்து விட்டு 'அப்படியானா அது சாத்தியம் இல்லை சார்' என்று சொல்லி விட்டு சென்று விட்டார்....ஏன்?
note: it's not an Engineering limitation ]


ஒரு விதத்தில் பார்த்தால் இது ஒரு கதை அல்ல. ஆனாலும் இதை கதை என்றே அழைப்போம். (?!) ஒரு கதை தன்னைத் தானே எழுதிக் கொள்ளுமா என்று எனக்குத் தெரிய வேண்டும்.  ஒரு, நல்ல கதை என்பது தன்னைத் தானே எழுதிக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள்..எனவே அதை சோதித்துப் பார்த்து விடுவது என்று முடிவு செய்து  விட்டேன். கதை எழுதுவதில் இரண்டு அணுகுமுறைகள் உள்ளன என்று நினைக்கிறேன். ஒன்று  fixed memory allocation ..கதை என்ன, பாத்திரங்கள் யார் யார், சுமதி எத்தனையாவது அத்தியாயத்தில் செத்துப் போக வேண்டும் , ஜெயந்தி எப்போது யாருடன் ஓடிப் போக  வேண்டும், என்று தொடக்கத்தில் இருந்து முடிவு வரை எல்லாம் தீர்மானித்து பின்னர் பிள்ளையார் சுழி போடுவது.. இன்னொன்று dynamic memory allocation ..எந்த ஐடியாவும் இல்லாமல் கதையை தொடங்கி மனம் போன போக்கில் எப்படி எப்படியோ கதையை நகர்த்திக் கொண்டு செல்வது! நான், இது இரண்டும் இல்லாமல் ஒரு கதை தன்னைத் தானே நகர்த்திச் செல்லுமா என்று அறிந்து கொள்ளவே இந்தக் கதையை எழுதுகிறேன்..அல்லது இந்தக் கதை என் மூலமாக தன்னை எழுதிக் கொள்கிறது.

நான் ஒரு ஸோ கால்ட் எழுத்தாளன்.  எனக்கு இந்த தமிழ் கூறும் நல்லுலகில் அங்கீகாரம் , விருது ப்ளா ப்ளா இவை எல்லாம் ஒரு இழவும்   வேண்டாம் ..உண்மையில், பணம் கிடைத்தால் போதும். ஏதோ எழுத்தை விற்று ஓரளவு வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. சாராசரியான வாராந்திரப் பத்திரிகை ஒன்றில் 'வாரம் ஒரு சிறுகதை' என்ற தலைப்பில் வாராவாரம் ஏதோ ஒரு சுமாரான சிறுகதையை எழுதி ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறேன். எல்லாமே எனக்கு சராசரியாக அமைந்து விட்டது. மனைவி உட்பட! உலகில் தொண்ணூறு சதவிதிகம் பேர் இப்படித் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். சராசரி பத்திரிகையில் சராசரி சிறுகதை, சராசரி வருமானம், சராசரி வீடு எக்ஸ்செட்ரா . அவ்வப்போது அரிதாக வாசகர் கடிதங்கள் ஒன்றிரண்டு வரும், பாராட்டி! Sir, you are awesome...I read your story last week...!அது எல்லாம் எனக்கு வேண்டும் என்பதும் இல்லை. முன்னே சொன்னபடி சரியாக பணம் வந்தால் போதும்..வாரம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள் ..போதுமே! மகளின் எல்.கே.ஜி...பீஸுக்கு  வெந்நீரில் தண்ணீர் என்று உபயோகமாய் இருக்குமே!

இந்த வார கோட்டாவிற்கு என்ன கதை எழுதி அனுப்புவது என்று தெரியவில்லை. குடும்பக் கதை, பேய்க் கதை, அறிவியல் புனைவுக் கதை , பாப்பா கதை என்று எல்லாம் எழுதியாகி விட்டது. இது சலிப்பான வேலை..ஓரளவு சுவாரஸ்யமாக கதை எழுத வேண்டும் என்பதால் யோசித்துக் கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. நிறைய படிக்க வேண்டி இருக்கிறது.(சில சமயம் ந்யூஸ் பேப்பரில், போண்டா சுற்றிய எண்ணெய் காகிதத்தில்  கூட கதைக்கான கரு கிடைக்கலாம்). நிறைய மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. ஏன் , டி .வி. சீரியலைக் கூட ஒன்று விடாமல் பார்க்கிறேன்.நாதஸ்வரத்தில் ராகினி தன் புருஷனை அடித்து விட்டு அம்மா வீட்டுக்கு வந்து விட்டாள் என்பது வரை அப்டேட்டட் -ஆக இருக்கிறேன். குடும்பத் தலைவிகளுக்கான பத்திரிகை ஒன்று என்னிடம் ஒரு குடும்ப அழுகாச்சி  தொடர்கதை ஒன்றை எழுதித் தருமாறு கேட்டுள்ளது. ஆகா, சரி என்று சொல்லி விட்டேன். அதை எழுத மூளை தேவையே இல்லை..ஒரு அப்பாவி மருமகள், அரக்கி மாமியார், இரண்டு பேரிடம் சிக்கித் தவிக்கும் கணவன் + ஒரு சொட்டைத்தலை மாமனார் என்று நான்கு பேர் இருந்தாலே நான்கு மாதம் கதையை நகர்த்தி விடலாம் பாருங்கள்.

எனவே யோசித்து யோசித்து சலித்து விட்டது. கதையே , இந்த முறை நீ உன்னை நீயே எழுதிக் கொள் என்று சொல்லி விட்டேன்...கீ போர்டில் விரல்களை ரெடியாக வைத்துக் கொள்வது மட்டுமே என் வேலை; மற்றபடி உன்னை நீயே உருவாக்கிக் கொள் என்று சொல்லி விட்டேன்.இந்த நிமிடம் வரை கதை யாரைப் பற்றியது, எதைப் பற்றியது, கதா நாயகன் யார்?.. கார்த்தியா கந்த சாமியா அல்லது நானேவா? கதா நாயகி யார் ? மாலதியா மகேஸ்வரியா , கள்ளக் காதல் வருமா , பெண்களின் அங்கங்களை வர்ணிக்கும் சொற்றொடர்கள் வருமா, கெட்ட வார்த்தைகள் வருமா, பிராமண  பாஷை வருமா , கதையில் கடவுள் வருவாரா , ராஜா யாராவது வருவாரா? கொலை விழுமா , டீன் ஏஜ் காதல் இருக்குமா , பிக்சன் இருக்குமா,துப்பறிதல் இருக்குமா, ஒன்றும் தெரியாது. ஆமாம், எனக்கு எப்படித் தெரியும், கதைக்குத் தான் தெரியும்!

கதை ஒன்று மனிதனின் கற்பனைக்கு எப்படி எல்லாம் தீனி போடுகிறது! ஒரு கட்டுரை எழுதுவதை விட கதை எழுதுவது சுலபம்..தான் சொல்ல வருவதை கதாபாத்திரம் மூலம் சொல்லி விடலாம். நம் மனதுக்குள் ஒளிந்திருக்கும் வினோத பெர்வர்ஷன்களை கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தலாம். பிறகு பழியை அந்தக் கதாபாத்திரத்தின் மேல் போட்டு விடலாம்.ஆம்..கதை ஒரு வடிகால்..

சரி. பேசியது போதும்...என் கதையின் வசம் என்னை நான் ஒப்படைக்கப் போகிறேன். ஏனென்றால் வெற்று மூங்கில் வழியே தான் சங்கீதம் பிறக்கும்.. கதை தன்னை எழுதும் போது நான் இருக்கக் கூடாது..கதை என்னை பயன்படுத்தும் போது நான் முற்றிலும் மறைந்து விட வேண்டும்.இது தான் உயரிய இசைக் கலைஞர்கள் சிலரின் அனுபவமாம்.
இசையை மெய் மறந்து பாடும் போது ஒரு கட்டத்தில் இசை மட்டுமே இருந்து தாங்கள் மறைந்து விட்டதை உணர்வார்களாம் .வாலி ஸ்டைலில் சொல்வதானால்

இசைக்கு -
பிறப்பிடம் அல்ல என் தொண்டை 
மூளை அன்று ..அது வெறும் மண்டை
இசையை
இயற்றவில்லை என் நாக்கு
என் மூலம் இசை வர
அது வெறும் சாக்கு!

சரி,சரி  நான் இருக்கக் கூடாது..கதை தன்னை எழுத ஆரம்பித்து விட்டது.
உஷ், உஷ், அப்புறம் பேசலாம்...BFN ..

அட, என்ன ஆச்சிரியம் கதை தன்னை எழுதி முடித்து விட்டதே... ஆகா.. மனிதன் ஓர் ஊடகம் என்பது எத்தனை உண்மை! இதே போல ஒவ்வொரு வாரமும் கதை தன்னையே எழுதிக் கொண்டால் பரவாயில்லை. ஆனால் இது போன்ற அதியச அனுபவங்கள் அபூர்வமாகவே நிகழும் என்று நினைக்கிறேன். அடுத்தவாரம் பெரும்பாலும் நானே கதையை எழுத வேண்டி இருக்கும் :-( கதையை பத்திரிகை ஆபீசுக்கு இ -மெயிலில் அனுப்பியும் விட்டேன்..சரி.. போய் வருகிறேன்..

என்ன?? கதையை உங்களுக்குக் காட்ட வேண்டுமா? முடியாதே பாஸ்.. சிறுகதை , பத்திரிகையில் வரும்வரை அதை லீக் செய்யக் கூடாது என்று எனக்கு அவர்கள் கண்டிஷன் போட்டிருக்கிறார்கள்.. கதைக்கு ஆயிரம் ரூபாய் தருபவர்களை நான் எப்படி மீற முடியும் சொல்லுங்கள்...

என்ன அடம் பிடிக்கிறீர்கள்.. கதையை சொல்லத்தான் வேண்டுமா? முடியாது முடியாது..

வாட்????

சரி.. இவ்வளவு கேட்கிறீர்கள்...ஆனால் முழுக் கதையை சொல்ல முடியாது..என் அவுட் பாக்ஸை திறந்து கதையின் முதல் பத்தியை மட்டும் கொஞ்சம் காட்டுகிறேன்..இதுவரை என்னுடன் வந்த உங்களுக்கு அந்த அளவிலேனும் உபகாரம் செய்யாவிட்டால் எப்படி?இதோ ஹியர் யு கோ..


"வணக்கம்..

ஒரு விதத்தில் பார்த்தால் இது ஒரு கதை அல்ல. ஆனாலும் இதை கதை என்றே அழைப்போம். (?!) ஒரு கதை தன்னைத் தானே எழுதிக் கொள்ளுமா என்று எனக்குத் தெரிய வேண்டும்.  நல்ல கதை என்பது தன்னைத் தானே எழுதிக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள்..எனவே அதை சோதித்துப் பார்த்து விடுவது என்று முடிவு செய்து  விட்டேன். கதை எழுதுவதில் இரண்டு அணுகுமுறைகள் உள்ளன என்று நினைக்கிறேன்.
ஒன்று  fixed memory allocation ..கதை என்ன, பாத்திரங்கள் யார் யார், சுமதி எத்தனையாவது அத்தியாயத்தில் செத்துப் போக வேண்டும் , ஜெயந்தி எப்போது ஓடிப் போக  வேண்டும், என்று தொடக்கத்தில் இருந்து முடிவு வரை எல்லாம் தீர்மானித்து பின்னர் பிள்ளையார் சுழி போடுவது.. இன்னொன்று dynamic memory allocation ..எந்த ஐடியாவும் இல்லாமல் கதையை தொடங்கி மனம் போன போக்கில் எப்படி எப்படியோ கதையை நகர்த்திக் கொண்டு செல்வது! நான், இது இரண்டும் இல்லாமல் ஒரு கதை தன்னைத் தானே நகர்த்திச் செல்லுமா என்று அறிந்து கொள்ளவே இந்தக் கதையை எழுதுகிறேன்..அல்லது இந்தக் கதை என் மூலமாக தன்னை எழுதிக் கொள்கிறது...."

~ சமுத்ரா 

Tuesday, March 5, 2013

கலைடாஸ்கோப்-86

லைடாஸ்கோப்-86 உங்களை வரவேற்கிறது.

“Times are bad. Children no longer obey their parents, and everyone is writing a book.” 


― Marcus Tullius Cicero

* பெரும்பாலும் எல்லா மதங்களும் கடவுளை குழந்தையாக வழிபடுகின்றன. குழந்தைகளின் மீது நமக்கு இருக்கும் unconscious ஈர்ப்புக்கு காரணம் என்ன? கல்யாணம் ஆன ஒரு தம்பதி, குழந்தைகளை விரும்புவதற்கு என்ன காரணம்? பல்வேறு காரணங்கள் சொல்கிறார்கள்..


“There are two kinds of travel: first class and with children.” 


― Robert Benchley


 * குழந்தைகளின் மூலம் மணவாழ்க்கை நிறைவு பெறுகிறது என்று பொதுவான (தவறான) ஒரு கருத்து நிலவுகிறது.குழந்தை இல்லை என்றால் தம்பதிகள் அன்னியோன்னியமாக இல்லையோ என்று ஒரு சந்தேகம் வருகிறது. எனவே குழந்தை என்பது தம்பதிகளின் அன்னியோன்னியத்தை வெளியே காட்டும் மறைமுக வழி .


* ஆண் குழந்தை ஒன்றை மனைவி கணவனின் extension ஆகவும், பெண் குழந்தையை கணவன் மனைவியின் extension ஆகவும் கருதுகிறார்கள்... தன் கணவன் அல்லது மனைவி குழந்தையில் எப்படி இருந்திருப்பார்கள், எப்படி நடந்து கொண்டிருப்பார்கள் என்று miss செய்த வருடங்களை பார்க்கும் ஒரு வாய்ப்பு.


* மனிதன் தான் இறந்த பின்னும், தன் குழந்தைகள் மூலம் வாழ விரும்புகிறான்.


 * ஆண், தன் குழந்தையின் மூலம் தன் ஆண்மையை, பெண், தன் பெண்மையை நிரூபிக்க விரும்புகிறார்கள்.


* சில செக்ஸ்ஸாலஜிஸ்ட்  -கள் மனிதன் குழந்தையை ஒரு sexual object ஆக , உணர்வற்ற நிலையில் உணர்வதாக சொல்கிறார்கள். நம்புவதற்கு கடினம் என்றாலும் இதில் ஓரளவு உண்மை உள்ளது. பொது இடத்தில் தம் குழந்தையை ஒரு ஆணோ பெண்ணோ தயக்கமின்றி கொஞ்சலாம்; முத்தமிடலாம்..தன் இணையிடம் அவ்வாறு செய்ய முடியாது. குழந்தை ஒன்று மறைமுகமாக உங்கள் sexual urge ஐ நிறைவு செய்கிறது; அல்லது அதற்கு  மாற்று அளிக்கிறது.


*A child relieves  a woman of her bedroom duties owed to her husband. 'இதப் பாருங்க, குழந்தை வந்தாச்சு, இனிமேல் அடிக்கடி டார்ச்சர் பண்ணாதீங்க' என்று சொல்லி தப்பி விடலாம்.இதனாலேயே அப்பாக்களுக்கு குழந்தை மேல் ஒரு ஆழ்மன பகைமை கூட இருக்கிறதாம்.


  * வம்சம் வளரணு ம், தாத்தா குழந்தையாகப் பிறக்கணும், பாட்டி பேர் வைக்கணும் போன்ற emotional விஷயங்கள்..குழந்தை கடவுளின் அனுக்கிரகம் என்று நம்புதல்.


* பிற்காலத்தில் வேர்கள் விழுந்து விட்டால் விழுதுகள் வேண்டுமே என்ற ஒரு முன்னெச்சரிக்கை. தாம் சாதிக்காததை தம் குழந்தைகள் சாதிக்க மாட்டார்களா என்று நப்பாசை.


* தானும் மறுபடி குழந்தை ஆகும் ஆசை...குழந்தையுடன் விளையாடும் சாக்கில் தானும் பீப்பி பொம்மையை அமுக்கிப் பார்க்கலாம்..சாக்கோ பார் சுவைக்கலாம்..ஜூவுக்குப் போகலாம்..போகோ டி.வி பார்க்கலாம்.ரைம்ஸ் படிக்கலாம்.புஸ்ஸி கேட் ரைம்ஸ்-ஐ தர்ம சங்கடமாக உணராமல் சத்தமாக சொல்லலாம்;பேபி ஹார்லிக்ஸ் ஒரு மிடறு குடிக்கலாம்; பாத் ரூமில் ஜான்சன் பேபி சோப் போட்டுக் கொள்ளலாம்.சாட் பூட் த்ரீ விளையாடலாம்; அண்டர் ஆர்ம் பவுலிங் செய்து கிரிக்கெட் விளையாடலாம்.. குழந்தை ஒன்று நம்மையும் மறுபடி குழந்தையாக மாற்றி விடுகிறது.

* குழந்தையைக் காட்டி சமுதாயத்தில் ஒரு advantage எடுத்துக் கொள்ளலாம். அதற்கு.குட்டிக் குழந்தையுடன் பஸ்ஸில் ஏறினால் யாராவது இடம் தருவார்கள்...லேடீஸ் வந்து  எழுப்பி விட மாட்டார்கள்...க்யூவை ப்ரேக் செய்து முன்னேறலாம். குழந்தை இருக்கிறது என்று ஆபீசில் சாக்கு சொல்லி ஷாப்பிங் போகலாம். குழந்தைக்கு பசிக்கும் என்று வீட்டில் 12 மணிக்கே சமைத்து விடுவார்கள். தமிழ் சினிமா மாதிரி குழந்தையை முன்னிறுத்தி பிரிந்த குடும்பங்கள் இணையலாம்.மேலும் குழந்தை வருவதால் கணவன் அல்லது மனைவி ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போகும் வாய்ப்பு வெகுவாகக் குறைகிறது.
 

* யாரையாவது எப்போதும் dominate செய்யும் ஆசை...அதைத் தொடாதே, இதை எடுக்காதே என்று ஆரம்பிக்கும் இந்த domination  , அதைப் படிக்காதே ,அவளை கல்யாணம் செய்யாதே, ரிட்டயர்மெண்ட் வாங்கிக் கொள் என்று காலம் பூராம் தொடர்கிறது.

* சில பேர் குழந்தை பெற்றுக் கொள்வதன் மூலம் தமது பெற்றோர்களை மறைமுகமாக பழிவாங்கும் (revenge at wrong place  ) சமாச்சாரமும் இருக்கிறது என்கிறார்கள். மேலும் ஒரு மனிதன் தாத்தா ஆக விரும்புகிறான் என்று சொல்லும் crazy தியரிகளும் உள்ளன...தாத்தா ஆவதென்றால் முதலில் அப்பா ஆக வேண்டுமே, எனவே குழந்தை பெற்றுக் கொள்கிறான்..


சரி.[மேலே சொன்ன motivation எதுவும் இன்றி வெறுமனே குழந்தைக்காக மட்டுமே நீங்கள் குழந்தை பெற்றுக் கொண்டால் நீங்கள் தான் உண்மையான பெற்றோர்!]


 voluntary childlessness என்று ஒன்று இருக்கிறது.. குழந்தை என்பதே தொல்லை என்று வேண்டுமென்ற குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருப்பது. குழந்தை தங்கள் செக்ஸ் வாழ்க்கையை பாதித்து விடுமோ என்றோ அல்லது குழந்தைகளுக்குப் பயப்படும் pediaphobia என்று கூட வைத்துக் கொள்ளலாம்... .மேலும்,குழந்தைகளுக்கு மலம் அள்ளி, யூனிபார்ம் மாட்டி விட்டு, லஞ்ச் பாக்ஸ் நிரப்பி, ஸ்கூலுக்கு கொண்டு போய் விட்டு, PT மீட்டிங் attend செய்து, வளர்த்து ஆளாக்கி, கடைசியில் 'அப்பா, நீங்க ரெண்டு பேரும்  தனியா போயிருங்க' என்ற வார்த்தைகளை ஏன்  கேட்க வேண்டும்? ! ஆளை விடுங்கடா சாமி என்கிறார்கள்.. 


இதன் உச்சகட்டமாக, VHEM (Voluntary Human Extinction Movement) என்ற அமைப்பு, உலகத்தில் இருக்கும் அத்தனை பேரையும் தயவு செய்து குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறது. பூமி மனிதனுக்குப் படைக்கப்பட்டது அல்ல; அது மரங்களுக்கும் விலங்குகளுக்கும் பூச்சிகளுக்குமானது. எனவே மனிதன் மெல்ல மெல்ல பூமியை விட்டு அகல வேண்டும்..இனப்பெருக்கத்தை நிறுத்திவிட்டு மெல்ல மெல்ல நாம் பூமியிடம் இருந்து விடைபெற வேண்டும் என்கிறது.
 மேலும், எதற்கு இந்த மனித வாழ்க்கை? அதன் வலிகள் , கஷ்டங்கள், வேதனைகள், கவலைகள்?
 இ .எம்.ஐ கவலைகள், இன்கம் டாக்ஸ் பயங்கள் !அரக்கப் பறக்க கனவு கலையாமல் எழுந்து, தீர்ந்து போன டூத் பேஸ்டை இம்சை செய்து பிதுக்கி பல் துலக்கி , பக்கெட் தண்ணீரில் எந்திரம் போல குளித்து விட்டு, அண்டர்வேர் தேடி, எதையோ உடுத்திக் கொண்டு, பஸ் பிடித்து கூட்டத்தில் நசுங்கி, ஆபீஸுக்கு  சென்று, இன்று மேனேஜர் என்ன மெயில் அனுப்பி இருக்கிறானோ என்று பயத்துடன் mail பாக்ஸ் ஓபன் செய்யும் அவலங்கள்? எதற்கு அர்த்தமற்ற இந்த வாழ்க்கை ..உண்டதே உண்டு நித்தம் உடுத்ததே உடுத்து! சும்மா வழக்கொழிந்து போய் விடலாம்! ஜிம் ஜோன்ஸ் செய்தது போல mass suicide செய்து கொள்ளாமல் ஒரு புது வித ஐடியா...நம்முடைய சந்ததிகளை வாழ்வின் அத்தனை கஷ்டங்க -ளிலிருந்தும் நாமே விடுவித்து விடுவது தான் இந்த VHEM . sounds different ???


*மூன்று விதமான மனிதர்கள் இருக்கிறார்கள்...


கழுதை: கழுதையை தட்டினால் அது தானும் திரும்பி உதைக்கும் ...சில மனிதர்கள் தங்களை யாராவது அவமதித்தால் உடனே அதைத் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்.


எருமை: எருமையை முதுகில் தட்டினால் அது எந்த மறுவினையையும் காட்டாமல் அப்படியே இருக்கும். சில பேர் தம் மீது வரும் அவமதிப்பு களையும் அவதூறுகளையும் அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவர்.


குதிரை: முதுகில் தட்டினால் இன்னும் வேகமாக முன்னால் ஓடும். சிலர் தாங்கள் சந்திக்கும் அவமானங்களையும் , அடிகளையும் மூலதனமாக வைத்து வாழ்வில் முன்னேறி விடுவார்கள்.


-பூஜ்யஸ்ரீ  பரமஹம்ச நித்தியானந்த ஸ்வாமிகள் *ச.பா.ப 

(சமீபத்தில் பார்த்த படம்)- Orphan 
கேதே மற்றும் ஜான் தம்பதிக்கு  மூன்றாவது பெண் குழந்தை இறந்தே பிறக்கிறது. இதனால் கேதே மனமுடைகிறாள். அவர்களது மற்றொரு (இரண்டாவது) பெண் குழந்தையும் (மேக்ஸ்)பேச முடியாமலும்  சரியாக காது கேட்காமலும் இருக்கிறது. இன்னொரு பையன் பெயர் டேனியல்.

தம்பதி, தங்களுக்கு நேர்ந்த துயரத்தை மறக்க வேண்டி, அகதிகள் முகாமில் இருக்கும்  எஸ்தர் என்ற ஒரு ஒன்பது வயது பெண் குழந்தையை தத்து எடுக்கிறார்கள். ஜானுக்கு அந்த சிறுமியை மிகவும் பிடித்து விடுகிறது.. .எஸ்தர் வீட்டுக்கு வந்ததும் அவளை மேக்ஸ்ஸும்  ஆர்வமுடன் வரவேற்று அக்காவாக ஏற்றுக் கொள்கிறாள்.ஆனால் டேனியலுக்கு எஸ்தரை ஏனோ பிடிக்கவில்லை. 

எஸ்தர்,  வீட்டிலும் பள்ளியிலும் ஒரு புதிரைப் போல இருக்கிறாள்; யாருடனும் அதிகம் பேசாமல் தனித்தே இருக்கிறாள்; விநோதமாக சாப்பிடுகிறாள்; பெற்றோர்கள் அன்னியோன்னியமாக இருக்கும் போது எட்டிப் பார்க்கிறாள். குழந்தைகள் சேர்ந்து விளையாடும் போது , எஸ்தர் ஒரு குழந்தையை மேலிருந்து தள்ளி விட்டு விடுகிறாள்; தான் அப்படி செய்யவே இல்லை என்று வாதிடவும் செய்கிறாள்.தன் காப்பகத்திலிருந்து வந்த சிஸ்டர் ஒருவரை காரில் கொடூரமாக கொலை செய்கிறாள். ஸ்கூலில் காரின் பிரேக்கை ரிலீஸ் செய்து உள்ளே உட்கார்ந்திருக்கும்   மேக்ஸ்-ஐ கொலை செய்ய முனைகிறாள். மேக்ஸ், பேச வராததால் எஸ்தரின் சத்தமில்லாத வன்முறைகளுக்கு மௌன சாட்சியாக  இருக்கிறாள்


கேதே, தன் இறந்து போன குழந்தையின் நினைவாக வளர்த்து வந்த பூச்செடியை ஒரு சாடிஸ்ட் போல எஸ்தர் பிடுங்கி விடுகிறாள். இதிலிருந்து, அவளுக்கு எஸ்தர் மீது சந்தேகம் வருகிறது. எஸ்தரின் பின்புலத்தை ஆராய வேண்டும் என்றும் , அவளை மீண்டும் காப்பகத்தில் விட்டு விடுவது நல்லது    என்றும் தன் கணவனிடம் சொல்கிறாள். அவனோ இதற்கு ஒத்துக் கொள்வதில்லை. கேதே, அளவுக்கு அதிகமாகக் குடித்து விட்டு தேவை இல்லாமல் விஷயங்களை கற்பனை செய்வதாக திட்டுகிறான். கணவனுக்குத் தெரியாமல் எஸ்தரின் பின்புல விவரங்களை அறிய கேதே முற்படுகிறாள்.

 ஒருநாள் , மரவீட்டில் வைத்து, எஸ்தர், சிறுவன் டேனியலை கொலை செய்ய முயற்சிக்கிறாள். டேனியல் கீழே விழுந்து மூர்ச்சை ஆகிறான். அவனை கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்ய முயற்சிக்க சின்னப்பெண் மேக்ஸ் அதைத் தடுத்து விடுகிறாள். டேனியல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறான். அங்கும் , எஸ்தர், ஆக்சிஜன் டியூபைப் பிடுங்கி சிறுவனை கொலை செய்ய முயற்சிக்கிறாள். ஆனால் டேனியல் காப்பாற்றப்பட்டு விடுகிறான். கேதேவின் சந்தேகம் வலுத்து விடவே, ஆஸ்பத்திரியில் அவள் எஸ்தரை கோபமாகத் தாக்குகிறாள். டாக்டர்கள் அவளுக்கு ஊசி போட்டு மயக்கமடைய செய்கிறார்கள்.

 வீட்டில், எஸ்தர் செக்ஸியாக உடையணிந்து , குடிபோதையில் இருக்கும் ஜானை மயக்க முற்படுகிறாள்.அவளது மூவை உணர்ந்து கொண்ட ஜான், அவளை கடுமையாக கண்டிக்கிறான்.இதற்கிடையில், ஆஸ்பிடலில் இருக்கும் கேதேவுக்கு ஒரு அழைப்பு வருகிறது. எஸ்தர் , ஒரு மனநல ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்தவள் என்றும், அவள் உண்மையில் குழந்தை அல்ல..அவளுக்கு 33 வயது என்றும், குழந்தை உருவில் வேடமிட்டு, கொடூரமான முறையில்  நிறைய பேரை கொலை செய்வது அவள் வழக்கம் என்றும் அதிர்ச்சிகரமான தகவல்கள் அவளுக்குக் கிடைக்கின்றன.


கேதே காரில் வீட்டுக்கு விரைகிறாள்.ஜானை போனில் கூப்பிட்டுப் பார்த்தால் லைன் கிடைப்பதில்லை. இதற்குள் சாடிஸ்ட் எஸ்தர் ஜானை வெறியோடு கொலை செய்து விட்டு சின்னப்பெண் மேக்ஸ் -சை கொலை செய்ய துரத்துகிறாள்.இதற்குள் கேதே வீட்டுக்கு வந்து விட , கடுமையான சண்டைக்குப் பிறகு அவள், எஸ்தரை நீரில் அமுக்கிக் கொலை செய்கிறாள்...வழக்கம் போல கடைசியில் போலீஸ் வருகிறது.

[ எஸ்தராக வரும் பெண்ணின் நடிப்பு அருமை. பல கொலைகள் செய்து விட்டு ஒன்றும் தெரியாத பாப்பா போல் நடிப்பது வியக்க வைக்கிறது. ஊமைப் பெண்ணாக வரும் மேக்ஸ் -சின் expression -கள்  அருமை. க்ளைமாக்ஸில் , ஒரு 33 வயது ஸாடிஸ்ட் ஆண்டி, மேக்கப்பின் உதவியுடன் 9 வயது குட்டிப்பெண் போல நடித்து எல்லாரையும் ஏமாற்றி இருக்கிறாள் என்று அறியும் போது சிலிர்ப்பாக  இருக்கிறது]சில லிமெரிக்குகள் :- 


[சுஜாதா தமிழுக்கு அறிமுகப்படுத்திய இந்த லிமெரிக்குகள்/ஐந்துவரிக் கவிதைகள்   பொருள் ஏதும் பெரிதாய் இல்லாவிட்டாலும் சும்மா   நகைச்சுவைக்கு எழுதப்படுகின்றன..ஆனால் ஒரு விதியை இதில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்...A-A-B-B-A..முதல் வரி, இரண்டாம் வரி, ஐந்தாம் வரி மற்றும் மூன்றாம் நான்காம் வரிகளில்  கடை எதுகை ஒன்றி வர வேண்டும்...

சில உதாரணங்கள்:]


முனுசாமி என்றொரு மனிதன் இருப்பான் 
காட்டில் தினமும் மரங்களை அறுப்பான் 
ஒருநாள் மரம்அவன் உடல்மேல் விழுந்திடும் 
மண்ணில்  புழுதியும் மிகவாய் எழுந்திடும் 
அதுவரை எமனும் அவனுக்காய் பொறுப்பான்..

அவன் ஒரு ரவுடி ; பெயரோ காளி 

அடித்துப் போட்டால் ஆள் அப்பவே காலி 
யாரேனும்  உங்களை டார்ச்சர் பண்ணினால் 
அவனை நீங்கள்  அமுக்கிட எண்ணினால் 
காளியைப் பார்க்கவும்...ஒரு லட்சம் கூலி!

காபி குடிக்கப் போனான் முத்து 

அவனிடம் இருந்ததோ ரூபாய் பத்து 
ஹோட்டலில் வந்த பில்லோ பன்னண்டு 
சர்வர் அவனது சங்கடம் கண்டு 
பரவாயில்லை என்றான் சிரித்து 

சங்கீதம் கற்கச் சென்றாள் கீர்த்தி

பாட்டு வரலை வந்தது ப்ரீதி
வர்ணம் வரலை வந்தது விருப்பம்
தாளம் வரலை வந்தது திருப்பம்
கீர்த்தி இப்போது மிஸ்ஸஸ் .மூர்த்தி

வானத்துக்கு ஏறுது விலைவாசி 

கடப்பாரை விலைக்கு விற்குது ஊசி 
ஆள்பவனும் ஒண்ணு எதிர்ப்பவனும் ஒண்ணு 
அத்தனை பேருக்கும் பணத்திலே கண்ணு 
பலனொன்றும் இல்லை அவர் பேரவையில் பேசி!*கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு 'திருமதி செல்வம்' சீரியல்  பார்க்க நேர்ந்தது.உடல் இல்லாத ஆத்மாக்களுக்கு ஒரு நாள்ஒரு வாரம்ஒரு மாதம், ஒரு வருடம் எல்லாமே ஒன்று தான் என்பார்கள்இந்த விதி  சீரியல்களுக்கும் பொருந்தும் என்றுதோன்றுகிறது. கதை  இன்னும்  அப்படியே  இருக்கிறது..இன்னும் பழையபடி,பாக்கியம் நந்தினிக்கு  ரோட்டோர டெலிபோன் பூத்தில் இருந்து போன் செய்து 'நந்தினி, திரும்பவும் செல்வம் அர்ச்சனா கிட்ட போயிடுவான்  போல  இருக்குகவனமா இரு.. நேத்து சூப்பர் மார்கெட்ல வாசுவும் ரேவதியும்..."  என்கிறாள். Oh  god !  ஒரே ஒரு மாற்றம் என்ன என்றால் அர்ச்சனா  கால்டாக்சி  டிரைவர் கி  இருக்கிறாள்.அவ்வளவு தான். சரி.. நம்முடைய சீரியல்கள்  ரொம்பவே  பின் தங்கி இருக்கின்றன.சிநேகிதி   புருஷனை  காதலிப்பது, அக்கா  புருஷனுக்கு ரூட் போடுவதுதம்பி மனைவிக்கு  நூல் விடுவது என்று ...இந்த முறை தவறிய காதலில் இன்னும் இன்னும் நிறைய வெரைட்டி  இருக்கிறதுஇதையெல்லாம் வைத்து  சீரியல் எடுத்தால் ரொம்பவே சுவாரஸ்வயமாக இருக்கும்! :P , 

உதாரணமாக 

மாற்றுத் திறனாளிகள் மீது மட்டுமே ஏற்படும் ஈர்ப்பு 

சிலைகள் மேல் காதல் கொள்ளுதல் (இவர்களுக்கு கமல் சொல்வது போல 'ஜவுளிக் கடை பொம்மையை பார்த்தால்  மனதுக்குள் கவுளி கத்தும்)

எந்திரங்கள் மீது காதல் கொள்ளுதல்..(ஒரு ஆசாமி தன் காருடன் உறவு கூட வைத்துக் கொள்கிறானாம்) (ரோபோ படத்துக்கு அப்படியே ஆப்போசிட்)

தன்னை குழந்தையாக உருவகித்துக் கொண்டு மற்றவர்கள் குழந்தை போல் தன்னை கொஞ்ச வேண்டும் என்று ஏங்குதல் 

பயங்கர குண்டாக இருப்பவர்கள் மேல் காதல் கொள்ளுதல். 

உடலின் ஒரு குறிப்பிட்ட பாகத்தை மட்டும் காதலித்துக் கொண்டாடுதல்.. உதாரணம் foot fetish செல்லமாக இதை 79 என்று அழைப்பார்கள் :P 

 சேப்பியோ செக்ஸுவல் : அறிவினால் ஈர்க்கப்படுதல்...இவர்களுக்கு  ஆள்  எத்தனை அசிங்கமாக இருந்தாலும் பரவாயில்லை. . சேக்ஸ்பியர் சானெட் ஒன்று சொன்னால் அப்படியே விழுந்து விடுவார்கள்.

விலங்குகள் , இறந்த உடல்கள் மேல் ஈர்ப்பு கொள்ளுதல் 

தாவரங்களை பாலியல் ரீதியாக காதலித்தல் (?) - காதலியை தான்  பூவே , மலரே , கொடியே என்று வர்ணிப்பார்கள்.. இவர்களுக்கு பூ  தான்  காதலி.

உயிரற்ற பொருள்களை (நாற்காலி, கட்டில், மெத்தை, கதவு ...) மனதாரக்  காதலித்தல் ..!

well , கடவுள் மீது காதல் கொள்வது, மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றக் கனாக்காண்பது போன்றவை இந்த முறைதவறிய காதலில் வருமா என்று தெரியவில்லை..சிலர் வரும் என்கிறார்கள்..
வீர வைஷ்ணவர்கள் என்னை அடிக்க வராதிரும்...
இந்த மாதிரி இருப்பவர்களுக்கு வழக்கமான, traditional  ஆன  'நலம்  நலமறிய ஆவல்' என்று காதலனும் காதலியும் கர்நாடகத் தனமாக  லெட்டெர் போட்டுக் கொண்டு காதலிப்பதைப்பார்த்தால் வாந்தி வந்துவிடும்.


 * தற்போது ஆங்கிலத்தை எழுதும் முறையில் நிறைய பேர் அதிருப்தி தெரிவிக்கிறார்கள்...சீக்கிரமே சில மாற்றங்கள் வரலாம். உதாரணமாக cell phone என்பதை சுருக்கி selfon என்று எழுதப் போகிறார்கள். clear , clean , cricket என்பவைகளை klear , klean ,kriket என்று எழுதுவார்கள். ph என்பதை முழுக்க f என்று மாற்றலாம்.. உதாரணம் physics = fysics ,
சொற்களில் சத்தம் இல்லாத எழுத்துகளையும் , repeat  ஆகும்  எழுத்துகளையும் எடுத்து விடுவார்கள். 'gave you a grave ' என்பதை 'gav you a grav' என்று எழுதினால் போதும். island என்பதை iland !   'th' என்பது 'z ' ஆல் மாற்றப்படும்...இந்த மாற்றங்கள் யூரோப்பில் இருந்து                  தொடங்கலாமாம்...  பத்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு ஆங்கிலம் இப்படி எழுதப்படலாம்.


 Zer vil be no mor trubl or difikultis and evrivun vil find it ezi TU understand ech oza. Ze drem of a united urop vil finali kum tru.
விஜய் டி .வி பக்தித் திருவிழாவில் இளம்பிறை மணிமாறன் கம்ப ராமாயணம் பேசுகிறார். அலட்டிக் கொள்ளாமல் உணர்ச்சி வசப்படாமல் தெளிந்த நீரோட்டம் போன்ற பேச்சு... சில பேர் மேடையில் கம்ப  ராமாயணம் பேசினால் ஏதோ தான் சொல்லிதான்  கம்பரே   ராமாயணம் எழுதியது  போல் ஆவேசமாகப் பேசுவார்கள்!


அனுமானுக்கும் சீதைக்கும் நடக்கும் உரையாடல்கள் சுவாரஸ்யம்..

பார்த்தால் ஏதோ பழம் பறித்துத் தின்னும் குரங்கு போல் இருக்கிறதே ; இது எப்படி கடலைத் தாண்டியது என்று சீதைக்கு சந்தேகம்...என்னடா ராவணன் கீவணன் மாயவேலை செய்கிறானா என்று "ஐய! நீ அளப்ப அரும் அளக்கர் நீந்திலை எய்தியது எப் பரிசு?" என்று கேட்கிறாள்..

நாமாக இருந்தால் பரக்காவெட்டி போல , 'நான் தான் கடந்தேன்,உனக்கு ஏன் நிரூபிக்க வேண்டும் ? நம்புவதென்றால் நம்பு' என்று சொல்லி இருப்போம்... அவன் அனுமான், அல்லவா? "உன் ஒரு துணைவன் தூய தாள் ஒருங்குடை உணர்வினோர், ஓய்வு இல் மாயையின் பெருங் கடல் கடந்தனர் பெயரும் பெற்றிபோல், கருங் கடல் கடந்தனென், காலினால்' "---உன் கணவன் பாதம் பற்றுபவர்கள் பிறவிப் பெருங்கடலையே கடக்கிறார்கள்; இந்த கடல் என்ன பெரிய? ஜுஜுபி என்று அழகாக பதில் சொல்கிறான்.ஓய்வு இல் மாயை! கடவுள் அலகிலா விளையாட்டுடையவன் என்றால் மாயையும் அவனுக்கு சற்றும் சளைக்காமல் ஓய்வில்லாமல் தன் வேலையை செய்கிறது போலும்!

அதெல்லாம் சரி தானப்பா , [இவன் யாரு என் ராமனை புகழ்ந்து பேச என்று ஒரு சின்ன possessiveness!] பிசிக்ஸ் சரியாக வரலையே, பார்த்தால் குட்டியூண்டு இருக்கிறாயே  "இத் துணைச் சிறியது ஓர் ஏண் இல் யாக்கையை; தத்தினை கடல்; அது, தவத்தின் ஆயதோ? சித்தியின் இயன்றதோ? செப்புவாய்என்று மேலும் கேட்கிறாள்...பெண்களுக்கு எப்போதுமே சந்தேகம் தான்...[கொரியர் கொடுக்க ஆள் வந்தால் பாட்டி அவனைப் பார்த்து 'ஏம்பா, யூனிபார்ம் இல்லையே! என்பாள்!] .சரி பேசி இனி வேலைக்கு ஆகாது என்று அனுமன் பிறகு தன்  விஸ்வரூபம் காட்டுகிறான். சொல்லால் நிரூபிக்க முடியாமல் போனால் செயலால் நிரூபிக்க வேண்டும்! ஓஷோ ஜோக்:


டாம் தினமும் ஆபீசுக்கு லேட்டாக வந்தான். காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது தான் அவனுக்கு பிரச்சினை...ஒரு நாள் டாக்டர் ஒருவரிடம் சென்று சீக்கிரம் எழுந்திருப்பதற்கு மாத்திரை வாங்கி வந்தான். 

பிறகு, அடுத்த நாள் சீக்கிரம் ஆறு மணிக்கே எழுந்து கொண்டான்... உற்சாகமாக குளித்து முடித்து டிபன் சாப்பிட்டு எட்டு மணிக்கெல்லாம் ஆபீசுக்கு சென்று மேனேஜர் முன் பெருமையாக நின்றான்.."பாருங்கள், நான் சீக்கிரமாக வந்து விட்டேன்" என்றான்.

"அது சரிப்பா, ஆனா நேத்து பூராம் எங்கே போயிருந்தே"? என்றார் மேனேஜர்...

சமுத்ரா