இந்த வலையில் தேடவும்

Sunday, October 10, 2010

நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-4


முல்லா நசுருதீன் ஒரு வேளையில் சேர்ந்தார்....
சில நாட்கள் கழித்து அவர் முதலாளி அவரை கூப்பிட்டார்....
" முல்லா.. நீங்கள் இந்தத் துறையில் ஐந்து வருடம் அனுபவம் இருப்பதாகச் சொல்லி வேலையில் சேர்ந்தீர்கள்...ஆனால் நீங்கள் இதற்கு முன் எந்த வேலையும் செய்யவில்லை என்று நாங்கள் கண்டுபிடித்து விட்டோம்....ஏன் எங்களிடம் பொய் சொன்னீர்கள் ?"

முல்லா: சார், நீங்க தானே பேப்பர்ல "கற்பனைத் திறம்" மிக்க ஆட்கள் தேவைன்னு விளம்பரம் கொடுத்தீங்க?"முல்லா நசுருதீன் ஒரு பல் டாக்டரிடம் சென்றார்....
"ஒரு பல் புடுங்க எவ்வளவுங்க?" என்றார்
"நானூறு ரூபாய்" ...."ஆனால் வலிக்காமல் இருக்க ஒரு ஊசி போடுவோம்...அதுக்கு முன்னூறு ரூபா எக்ஸ்ட்ரா"என்றார் டாக்டர்...
ஊசியெல்லாம் வேண்டாம்...அப்படியே எடுத்துருங்க....முன்னூறு ருபாய் மிச்சம்"
"கிராமத்து மக்கள் வலிமையானவர்கள் என்று கேட்டிருக்கிறேன்...நீங்க ரொம்ப தைரியமானவர்...உங்கள் வலிமையை பாராட்டுகிறேன்" என்றார் டாக்டர்...
"ரொம்ப புகழ்றீங்க டாக்டர்....அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்....பல் புடுங்க வேண்டியது என் மனைவிக்கு"என்றார் முல்லா....

ஓஷோ: மனிதன் மிக மிக சீரியஸ் ஆகி விட்டான்....எப்படி சிரிப்பது என்பதையே மறந்து விட்டான்....ஒரு மணி நேரம் தியானம் செய்யும் பலனை ஒரு வினாடியில் உங்கள் உள்ளிருந்து கிளம்பும் வெடிச் சிரிப்பு கொடுத்து விடுகிறது...... ஞானிகளுக்கு உள்ள முக்கியமான ஒரு தன்மையை முல்லா நசுருதீன் வெளிப்படுத்துகிறார்....ஞானம் என்பது ஒரு பிரபஞ்ச சிரிப்பு....

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் சமுத்ர சுகி

நல்லாவே இருக்கு - பல் டாக்டர் சிரிப்பு

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா