இந்த வலையில் தேடவும்

Thursday, October 28, 2010

சில சமயங்களில்.......

சில சமயங்களில்
விமானப் பயணங்களை விட
சைக்கிளின் பின் சீட்டுப் பயணங்கள்
அழகாக உள்ளன....

சில சமயங்களில்
படுக்கைகளின் மென்மையை விட
தரையின்
ஸ்பரிசங்கள் சுகமாக
உள்ளன.....

சில சமயங்களில்
நட்சத்திர உணவகங்களின் கை படாத
உணவுகளை விட
கோவில்களின்
புளியோதரைகள்
சுவையாக உள்ளன...

சில சமயங்களில்
ஆயிரம் மனிதர்களின்
கை குலுக்கல்களை விட
குழந்தையின் ஒற்றை முத்தங்கள்
சுகமாக உள்ளன...

சில சமயங்களில்
ஐ- போனை விட
ஆகாயப் பறவைகளின்
குக்கூக்கள்
இனிமையாக இருக்கின்றன....

சில சமயங்களில்
'டியூ' க்களின் நெடிகளை விட
மனைவியின்
ஒற்றை மல்லிகைகள்
மணமாக இருக்கின்றன...

சில சமயங்களில்
கலவிகளை விட
களிம்பு தடவல்கள்
இதமாக
இருக்கின்றன....

சில சமயங்களில்
ஈ மெயில்களை விட
இன்லான்ட் கடிதங்கள்
அர்த்தமுள்ளவையாக
இருக்கின்றன...

சில சமயங்களில்
ஆயிரம் ரூபாய்
நோட்டுக்களை விட
ஒரு ரூபாய் நாணயங்கள்
பயனுள்ளவையாக
இருக்கின்றன....

சில சமயங்களில்
புனிதத் தலங்களை விட
பாதையில் குறுக்கிடும்
பிள்ளையார் கோயில்கள்
தெய்வீகமாக இருக்கின்றன....

சில சமயங்களில்
ஓவியக் கண்காட்சிகளை விட
நடை பாதை ஓவியங்கள்
உயிர்மையாய் இருக்கின்றன....

சில சமயங்களில்
ரேமன்ட் சூட்டிங்குகளை விட
பிளாட்பார சட்டைகள்
பாந்தமாய் இருக்கின்றன...

சில சமயங்களில்
நிரந்தர சொந்தங்களை விட
ரயில் சிநேகிதங்கள்
ஆழமாய் இருக்கின்றன

சில சமயங்களில்
மருத்துவரின்
மாத்திரைகளை விட
பாட்டியின்
கஷாயங்கள்
வலிமையாய் இருக்கின்றன....

சில சமயங்களில்
வங்கிகளின் சேமிப்புகளை விட
மனைவியின் உண்டியல்கள்
பயனுள்ளவையாக இருக்கின்றன

சில சமயங்களில்
வாழ்த்து மடல்களை விட
நண்பனின்
குறும்செய்திகள்
குதூகலமாய் இருக்கின்றன....

சில சமயங்களில்
பீசாக்களை விட
அம்மா செய்த
தோசாக்கள்
அமிர்தமாக இருக்கின்றன.....



~சமுத்ரா



3 comments:

அன்புடன் அருணா said...

அட!நல்லாருக்கே!

க.மு.சுரேஷ் said...

//சில சமயங்களில்
பீசாக்களை விட
அம்மா செய்த
தோசாக்கள்
அமிர்தமாக இருக்கின்றன.....//


i agree....
அழகான ரசனை
வாழ்த்துக்கள்...

adhvaithan said...

WHOA.. but ithula 2nd ah solratu taan always good...