இந்த வலையில் தேடவும்

Wednesday, October 6, 2010

நான் ரசித்த ஓஷோ ஜோக்-1 !

ஒரு நாள் ஒரு ஆசாமி ஹோட்டலில் தங்கியிருந்தான்....ஹோட்டலை காலி செய்து விட்டு கொஞ்ச தூரம் சென்றதும் தான் நினைவு வந்தது அவன் தன் குடையை அறையிலேயே மறந்து விட்டு வந்து விட்டான் என்பது....திரும்பி வந்து பார்க்கும் போது அந்த அறை ஒரு புது மணத் தம்பதிகளால் வாடகைக்கு எடுக்கப் பட்டிருந்தது....கதவும் சாத்தியிருந்தது....சாவித் துவாரம் வழியாக உள்ளே என்ன பேசுகிறார்கள் என்று கேட்டான்...கணவன்: அன்பே, இந்த கண்கள் யாருடையவை?

மனைவி: உன்னுடையது தான் அன்பே

: இந்த உதடுகள் யாருடையவை?

: உன்னுடையது தான் அன்பே

: இந்த கன்னம் யாருடையது?

: உன்னுடையது தான் அன்பே

இந்த ஆசாமி பொறுக்க முடியாமல் வெளியிலிருந்து கத்தினான்...."அந்த மஞ்சள் கலர் கைப்பிடி போட்ட குடை மட்டும் என்னுடையது....."


வியாபாரி: ஏன் எல்லாரும் பரபரப்பாக ஓடி வருகிறீர்கள்?

மக்களில் ஒருவன்: தலை நகரில் தலைகள் வெட்டப் படுகின்றன......

வியாபாரி: ஐயோ, அப்படியானால் என் தொப்பி வியாபாரம் என்ன ஆகும்?

ஓஷோ: மனிதன் மிக மிக சுயநலமானவன்....

(எனவே மக்களே சுயநலம் பார்க்காமல் எல்லோருடைய பதிவுகளுக்கும் கமெண்டுகளை அள்ளி விடுங்கள் இனி மேல்....)

~சமுத்ரா

6 comments:

ப.கந்தசாமி said...

//எனவே மக்களே சுயநலம் பார்க்காமல் எல்லோருடைய பதிவுகளுக்கும் கமெண்டுகளை அள்ளி விடுங்கள் இனி மேல்....//

இனிமேல் சுயநலம் பார்க்க மாட்டோம்,மாட்டோம்,மாட்டோம்,மாட்டோம்,மாட்டோம்,மாட்டோம்,மாட்டோம்.

இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?

சுதர்ஷன் said...

அள்ளி விட்டாச்சு .. ஓஷோ கதைகள் மிகவும் பிடிக்கும் .. சுவாரசியம், நகைச்சுவை கலந்தவை ..ஆனால் சிந்திக்க கூடியவை :)

http://rkguru.blogspot.com/ said...

சுவாரசியம், நகைச்சுவை

cheena (சீனா) said...

அன்பின் சமுத்ர சுகி

சுய நலம் மிக்கவர்கள் நாம் - உங்கள் இடுகைகளில் மறுமொழிகள் இல்லவே இல்லை. ஏன் - சிந்தித்தீர்களா ? 68 இடுகைகள் - எத்தனை மறுமொழிகள் ? மற்றவர் பதிவுகளூக்கும் சென்று படியுங்கள் - மறு மொழி இடுங்கள் - இங்கு தன்னாலே கொட்டும்.

நல்வாழ்த்துகள் சமுத்ர கனி
நட்புடன் சீனா

A G Taamil said...

very nice

Scott said...

சுவாரசியம், நகைச்சுவை