இந்த வலையில் தேடவும்

Thursday, July 28, 2011

கலைடாஸ்கோப் -31

லைடாஸ்கோப் -31 உங்களை வரவேற்கிறது.

1
==

திருப்பதிக்கு மலை மீது நடந்து ஏறிச் சென்ற அனுபவம் உங்களுக்கு உண்டா? அந்த அனுபவம் சமீபத்தில் கிடைத்தது. அது என்னவோ தெரியவில்லை ஆபீஸில் ஒரு நாலு ஃப்ளோர் ஏறினாலே மூச்சு வாங்கி கால்வலித்து நாலாவது ஃப்ளோரில் லிப்ட் -டிடம் சென்று சரணாகதி அடையும் நிலைமை ஏற்படும். ஆனால் அங்கே நாலாயிரம் படிகள் ஏறினாலும் ஒரு துளி கூட கால் வலிக்கவில்லை.பாலாஜியின் கருணையா இல்லை நம்முடன் கூட நிறைய பேர் ஏறுவதால் நமக்கு அசதி தெரியவில்லையா Don 't know !நிறைய வெள்ளந்தியான மனிதர்கள் 'கோவிந்த' கோசத்துடன் அனாயாசமாக மலை ஏறுகிறார்கள். சில பேர் ஏறும் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள் குங்குமம் வைத்த வண்ணம் ஏறுகிறார்கள் ! ஏழு மலைகளை ஏறி முடிக்க கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் ஆகிறது.(முதல் படி ஆரம்பிக்கும் இடத்தில் கற்பூரங்கள் கொளுத்தி எல்லாரும் சுற்றி நின்று பின்னால் வருபவர்களுக்கு வழியையே அடைத்து விடுகிறார்கள்.)

முதல் மூன்று மலைகள் கொஞ்சம் செங்குத்தாக இருக்கின்றன. கடைசி நாலை ஒரு விளையாட்டு மாதிரி ஏறி விடலாம் போங்கள் . As usual , ஏறும் பாதை முழுக்க வியாபாரம் ஜோராக நடக்கிறது. இதை தவறு என்று சொல்லவில்லை. It 's needed ! உப்பு தடவிய மாங்காய், எலுமிச்சை சோடா, வெள்ளரிக்காய், சித்தூர் பால்கோவா , நிலக்கடலை, காபி, டீ,
இட்லி வடை இத்யாதிகள், ஜூஸ், கடலைப் பொரி, பலாப்பழம், முறுக்கு வகைகள், மிக்சர், லேஸ், குர்குரே என்று அந்த வெங்கடாசலபதியே இதையெல்லாம் சாப்பிட்டுப் பார்க்க ஒரு தடவை மலை ஏறி மேலே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மலைக்கு பஸ்சிலோ காரிலோ ஏறி (?) வருபவர்கள் எத்தனை ஓர் அழகான அனுபவத்தை 'மிஸ்' செய்கிறார்கள் என்று தோன்றியது. பகவானைக்காட்டிலும் பக்தர்களின் தரிசனம் பெரியது என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட பக்த தரிசனம் கிடைக்க வேண்டும் என்றால் அடுத்த முறை மலை ஏறிச் செல்லுங்கள். ராமானுஜர் திருமலை முழுவதையும் முழங்காலால் ஏறிச் சென்றாராம். ஹ்ம்ம்..இதை இப்போது கற்பனை கூட செய்ய முடியவில்லை! ஆனால் முழங்கால் முறி மண்டபம் வரும்போது மட்டும் சில பேர் ஒரு பத்து படியை சின்சியராக முழங்காலால் ஏறுகிறார்கள் ! அந்த மண்டபம் வந்த போது தான் ராமானுஜர் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டாராம். நாமெல்லாம் ஒரு பத்து படி ஏறி விட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறோம்.அவர் ஏறும்போது வழியில் ஒரு சோடா கடை கூட இருந்திருக்காது என்பது இன்னொரு ஆச்சரியம்.சரி..ஆன்மீகத்தை விடுங்கள்.. மலை ஏறுவது ஒரு நல்ல உடற்பயிற்சி.மலை ஏறும்போது தேவையில்லாத கொழுப்பு வியர்வையாக வெளியேறுகிறது. ஆம்..நம் மனதில் இருக்கும் கொழுப்பு கூட..

இறைவனை தரிசிக்கச் செல்லும் போது நம் அடையாளத்தை இழக்க வேண்டும் என்பார்கள். ஆனால் திருப்பதியில் அடையாளத்தை நிரூபிக்க வேண்டும்! இரண்டாவது மலையில் நம்மை போட்டோ எடுத்து மேலே அதை சரிபார்க்கிறார்கள். மலை ஏறி வருபவர்களுக்கு மேலும் சிரமம் கொடுக்க வேண்டாம் என்று அவர்களுக்கான தரிசன வரிசை தனியாக (Short ஆக) இருக்கிறது. இரண்டே இரண்டு இடங்களில் தான் (நாங்கள் போன போது) வரிசை மெகா சீரியல் கதை மாதிரி நகராமல் ஒரு மணிநேரம் நின்று விட்டது.

நாலாயிரம் படிகள் வியர்வை வழிய ஏறுதல், வரிசையில் தவம் கிடத்தல்,இடிபாடுகளில் சிக்குதல்,பக்கத்தில் இருப்பவரின் காலை மிதித்து விட்டு சாரி சொல்லுதல், கேட்டை திறந்து விட்டதும் மராத்தான் ஓட்டம் ஓடுதல், இவை அத்தனையும் பின்னர் கிடைக்கப்போகும் ஒரு சில நொடிகள் தரிசனத்திற்கு என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருந்தாலும் அந்த சில நொடிகள் தரிசனத்தில் நாம் அதுவரை பட்ட கஷ்டங்கள் எல்லாம் எங்கோ ஓடி மறைந்து போகின்றன. க்யூ மெல்ல மெல்ல நகர்ந்து பாலாஜியை நெருங்கும் போது எல்லாருக்கும் ஒரு விவரிக்க ஒண்ணா பரவசம் உடலிலும் மனதிலும் தொற்றிக் கொள்கிறது. தலை தூக்கி சர்வ அலங்காரங்களுடன் காட்சி தரும் பாலாஜியைப் பார்க்கும் போது ஏதோ வைகுண்டத்திற்கே வந்து விட்டது போன்ற உணர்வு எழுகிறது. அந்த சில நொடிகளில் கடவுள் இல்லை என்று யாராலும் சத்தியமாக சொல்லவே முடியாது! மீண்டும் சொல்கிறேன்..நீங்கள் பஸ்ஸில் மலை ஏறினால் இந்த தரிசனம் இத்தனை பரவசமாக இருக்காது. ஏதோ வந்தோம் பார்த்தோம் போனோம் என்று ஒப்புக்கு சப்பாகவே இருக்கும்.

2
==

'உருவத்தால் ஓங்கி உயர்ந்த மரங்களும் பருவத்தால் அன்றிப் பழா' ....எல்லாவற்றுக்கும் ஒரு காலம் வர வேண்டும் என்று சிலர் சொல்வதில் உண்மை இருக்கவே செய்கிறது. லட்சக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் உலகில் வாழ்ந்து வந்திருக்கிறான். ஆனால் ரேடியோ என்ற ஒன்றை கண்டுபிடிக்க நாம் பதினெட்டாம் நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
காலம் மட்டும் அல்ல ..மனிதர்களுக்காகவும் வரலாறு காத்திருக்க வேண்டும். ரைட் சகோதரர்களுக்கு தோன்றிய அந்த விமான மாடல் ஏன் அதற்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களில் ஒருவருக்கு கூட தோன்றவில்லை? ஆர்க்கிமிடிஸ் -சிற்கு தோன்றிய அந்த 'யுரேகா ' ஏன் அதற்கு முன் வாழ்ந்த தத்துவ ஞானிகளில் ஒருவருக்கு கூட உதிக்கவில்லை? 'லாஸ்ட் மூவ்மென்ட்' என்ற
சிம்பொனியைத் தர ஒரு பீத்தோவான் வர வேண்டி இருந்தது. மோனலிசாவை நம் முன்னே புன்னகைக்க வைக்க ஒரு டாவின்சி வர வேண்டியிருந்தது. எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்று இன்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னும் என்னவெல்லாம் வரவிருக்கிறதோ?

'' 'ரி' '' '' 'நி' என்ற ஐந்து ஸ்வரங்கள் த்யாகராஜருக்கு முன்பும் இருந்தன. ஆனால் அவற்றை வைத்துக் கொண்டு 'பண்டு ரீதி கொலு' பாடலைத் தர அவரால் தான் முடிந்தது. இதே ஐந்து ஸ்வரங்களை வைத்துக் கொண்டு ஒரு 'சுவர்க்கமே என்றாலும்' பாடலைத் தர இளையராஜா வரவேண்டி இருந்தது.இயற்கை தன் அற்புதங்களை ஒரு குறிப்பிட்ட நபரின் மூலமாக மட்டுமே வெளிக்கொணரும் போலிருக்கிறது.

அழகான பாடல்கள் சிலவற்றைக் கேட்கும் போது இந்த டியூன் நமக்கு ஏன் முன்பே தோன்றவில்லை என்று தோன்றும். அதே போல அழகான பாடல் வரிகளும். '50 கே.ஜி தாஜ்மஹால்' என்ற கற்பனை வைரமுத்துவுக்கு தான் தோன்றுகிறது!'

ஒரு கஞ்சப்பிசினாரி ராஜாவிடம் ஒரு கவி
ர் ஓர் அழகான கவிதையை பாடிக்காட்டினாராம். அவன் அதற்கு எந்த எக்ஸ்ப்ரஷனும் காட்டாமல் 'இந்த வார்த்தைகளை எல்லாம் நான் அகராதியில் முன்பே பார்த்திருக்கிறேன்' என்றானாம். நம் முன் வார்த்தைகள் ஏராளமாகக் குவிந்து கிடக்கின்றன. ஸ்வரங்கள் இலவசமாக கிடைக்கின்றன. புத்தகங்கள் மலிந்து கிடக்கின்றன.கேட்டதெல்லாம் தருவதற்கு இன்டர்நெட் இருக்கிறது! ஆனால் எல்லாராலும் ஒரு ரோசினி, ஒரு காளிதாஸ், ஒரு தாகூர் தான் ஆக முடிவதில்லை!

3
==


சமீபத்தில் ஒரு Forwarded இ-மெயில் வந்திருந்தது. (தலைப்பு :All about a boy !) பொதுவாக நாம் பெண்களை தான் 'தியாக தீபம் 'தியாக பூமி' என்று போற்றுகிறோம். ஆண் ஒருவன் தியாகம் செய்வதே இல்லையா என்று கேட்கிறது அந்த
இ-மெயில். தங்கச்சிப் பாப்பாவுக்காய் சாக்லேட்டை தியாகம் செய்யும் குட்டிப்பையனிடம் இருந்து ஆரம்பிக்கிறது அந்த தியாகம். தன் காதலை பெற்றோர்களுக்காக தியாகம் செய்யும் இளைர்கள்,சாகோதரிக்காக லோன் வாங்கும் இளைர்கள் என்று இன்றும் இருக்கவே செய்கிறார்கள். தியாக தீபங்கள் என்று இலக்கியங்களால் வர்ணிக்கப்படும் பெண்கள் மெகா சீரியல் பார்த்துக் கொண்டிருக்க வெளிநாடுகளில் சுகங்களைத் துறந்து ஊன் உறக்கம் மறந்து வேலை செய்யும் ஆண்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். பெண் ஒருத்தி பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீடு வருகிறாள் என்ற ஒரே காரணத்துக்காக நாம் அதையே பெரிய தியாகமாகப் பார்க்கிறோம். ஆனால் நம் சமுதாயம் 'உத்தியோகம் புருஷ லட்சணம் ' என்று அறுபது வயது வரை அவனை குடும்பத்துக்காய் மாடாக உழைக்க வைத்த போதும் அவன் தியாகங்களுக்கு அங்கீகாரம் தருவதில்லை . அல்லது ஆண் செய்யும் தியாகங்கள் 'taken for granted '

கன்னடத்தில் சக்கை போடு போட்ட ஒரு திரைப்
டம் 'முங்காரு மழை ' ..ப்ரீதி மதுர தியாக அமர(காதல் இனியது.தியாகம் அழிவில்லாதது) என்ற Caption உடன்..இது தமிழில் வருகிறது என்கிறார்கள். எப்போது என்று தெரியவில்லை. தன் காதலை (காதலியின் அப்பாமேல் இருக்கும்) விசுவாசத்திற்காக தியாகம் செய்யும் ஒரு இளைஞனின் கதை அது. படத்தின் க்ளைமாக்சில் எல்லாரையும் ஐம்பது மில்லி கண்ணீர் விட்டு அழ வைத்த சாதனைக்காகவே அந்த திரைப்படம் அபார வெற்றி பெற்றது ! படம் மட்டும் அல்ல...பாடல்களும் இதில் ராக் ஹிட்!

[யாரது, தியாகத்திற்கும் ஆண்கள் தலையில் விழும் சொட்டைக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று கேட்பது? ]

4
==
சில விஷயங்கள் இன்று அடியோடு நம்மிடம் இருந்து மறைந்து விட்டன இல்லையா? நிர்மா வாசிங் பௌடர் (இன்னும் இருக்கிறதா நிர்மா?) டி.வி. சானலை மாற்ற 'டொக் டொக்' என்று திருகும் குமிழ், கிட்டத்தட்ட நம் உயரத்தில் முக்கால் வாசி இருக்கும் நீண்ட முனை கொண்ட பெரிய குடை, மடிப்பு மடிப்பாக இருக்கும் பஸ் ஜன்னல் திரை, இரண்டு சக்கர ஆட்டோ
மாதிரி இருக்கும் பஜாஜ் ஸ்கூட்டர், விரல் வைத்து சுற்றும் டெலிபோன், தலையில் அணியும் ரிப்பன், இன்க் பேனா, (பிரில்
இன்க் ??) , சைக்கிள் ரிகஷா என்று லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.(உங்களுக்கு ஏதாவது தோன்றினால் ADD செய்யுங்கள்) இந்த லிஸ்டில் சைக்கிளும் ,டைப் ரைட்டிங் இயந்திரமும் வெகுவிரைவில் சேர்ந்து கொள்ளும் என்று தோன்றுகிறது.

[யாரது, தாத்தா பாட்டி என்று சொல்வது? ஹ்ம்ம் நீங்கள் சொல்வதும் ஒரு விதத்தில் உண்மை தான்]

5
==
ஆங்கிலம் ஒரே மொழி தான் என்றாலும் அதில் தான் எத்தனை எத்தனை உச்சரிப்பு பேதங்கள்? இந்தியாவிலேயே ஒவ்வொரு மாநிலத்தவர்களும் ஒவ்வொரு மாதிரி பேசுவார்கள்.ஹ்ம்ம் முதலில் மிகவும் பிரபலமான கேரளா ஆங்கிலம் "Ungle கோல்ட் மீ பார் கோபி ' 'பேப்பர்' என்பதை சொல்லும் அழகை வைத்தே இவர் தமிழ்நாடு தான் என்று முடிவு கட்டி விடுகிறார்கள் . 'pay ' 'per ' என்று சொல்ல வேண்டுமாம். 'பே' என்பதை ஏதோ பேயைப்பார்த்த மாதிரி வாயைப் பிளந்து கொண்டு சொல்லக் கூடாதாம். SIMBLE தான் முயற்சி பண்ணுங்கள்! ஆங்கிலத்தில் R என்ற எழுத்து ஒரு உயிரெழுத்துக்கு முன்னால் வந்தால் ஒழிய அது 'சைலன்ட்' என்று கன்னடத்துக் காரர்களுக்கு தெரிவதில்லை.துணியை 'அய்ரன்' செய் என்று தான் சொல்ல வேண்டும். நம் மாதிரி 'அயன்' என்று பிரம்மாவை எல்லாம் இழுக்கக் கூடாது. இது ஓகே..ஆனால் உலகத்தை 'வர்ல்ட்' என்று சொல்வது
இங்கே (கன்னடத்தில்) பிரசித்தம். தயிராய் 'கர்ட்' சொல்லை 'வர்ட்' என்று 'ர்' நாக்கு கிழிந்து விடும் படி அழுத்தி ! சரி..ஹிந்தி காரர்கள் ஏன் மசாலா டோசா என்கிறார்கள்..?

இப்போது இது என்ன என்று கண்டுபிடிக்க முடிகிறதா? "Nine Pipe Pour Pour Pipe Pour Pipe Pour Pour Pipe"

.
..
...
....
.....
......
.......
........
.........
..........
...........
............
.............
ஓகே


"9544545445" லல்லு பிரசாத் அவர் போன் நம்பர் சொல்கிறாராம்! :-)
6
===

ஓஷோ ஜோக்.. வாய் விட்டு சிரியுங்கள்..வாழ்க்கை என்பது ஒரு பிரபஞ்ச நகைச்சுவை (cosmic joke)

மூன்று பைத்தியங்கள் ஒரு நாள் காலையில் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பித்து விட்டன. ஒரு பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் நடக்கும் இடத்துக்கு சென்றன. அங்கே இருந்த ஒரு மேஸ்திரி 'ஏன் மூணு பேரும் மச மசன்னு நிக்கறீங்க, போய் வேலையைப் பாருங்க' என்று மிரட்டினார்

அரை மணி நேரம் கழித்து மேஸ்திரி வந்து பார்க்கும் போது இரண்டு பைத்தியங்கள் ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருக்க இன்னொன்று சின்சியராக குழி தோண்டிக் கொண்டிருந்தது.

'ஏன் இப்படி அசையாமல் நிற்கிறீர்கள் ?'

'நாங்கள் ரெண்டு பேரும் ஸ்ட்ரீட் லைட்ஸ்'

இதைக் கேட்டு அவர் கோபப்பட்டு அந்த ரெண்டு பேரையும் துரத்தி விடுகிறார். குழி தோண்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்து 'நீ வேலை செய்யிப்பா , ஏன் நிறுத்திட்ட ?" என்கிறார்

'நான் எப்படி இருட்டில் வேலை செய்வது எசமான்?"ஜார்ஜைப் பார்த்து அந்த மனநல மருத்துவர் சொன்னார்: "ஜார்ஜ், நீ இனிமேல் எலி இல்லை.. நீ மனிதன்..என்னைப் போல ஒரு மனிதன்..நீ இனிமேல் பூனையைப் பார்த்து பயப்பட எந்த அவசியமும் இல்லை..நீ மனிதன்..ஞாபகம் இருக்கட்டும்" என்றார்

ஜார்ஜ் ஆஸ்பிடலை விட்டு வெளியே வந்ததும் ஒரு பூனை குறுக்கே போனது.. அவன் அலறி அடித்துக் கொண்டு உள்ளே ஓடி வந்தான்.

டாக்டர் 'ஜார்ஜ், நீ தான் எலி இல்லை என்று படித்துப் படித்து சொன்னேனே, அப்புறம் ஏன் பூனையைப் பார்த்து பயந்து உள்ளே ஓடி வருகிறாய்"

அதற்கு அவன் 'டாக்டர் , நான் எலி இல்லன்னு எனக்குத் தெரியும்.. ஆனா அந்த பூனைக்குத் தெரியுமா?"முத்ரா
Monday, July 25, 2011

அணு அண்டம் அறிவியல் -41

அணு அண்டம் அறிவியல் -41 உங்களை வரவேற்கிறது.

கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கிக் கிடக்கும்.சின்ன உளி தட்டித் தட்டி எழுப்பும்! -ஒரு திரைப்படப்பாடல்

[ஹலோ, ஸ்டூடண்ட்ஸ்,எப்படி இருக்கீங்க? ஏதோ ஃபிசிக்ஸ் க்ளாஸை தவறாமல் Attend செய்கிறீர்கள் சந்தோஷம் . இயற்பியல் உங்களுக்கு புரிகிறது என்று நம்புகிறேன்..இப்போ புரியற மாதிரி நடித்து விட்டு கடைசியில் ஃபெயில் ஆனால் அப்புறம் நடப்பதே வேறு ஆமாம்]


இடம் : டி லா வார் ஆய்வகம், ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிடி

வி
ஞ்ஞானிகள் ஒரு மிகத் துல்லியமான உயர் தொழில் நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு கேமிராவை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது அதில் தற்செயலாக ஒரு பூவின் மொட்டு பதிவானது. அந்த ஃபிலிமை டெவலப் செய்து பார்த்த போது அவர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அதில் ஓர் அழகிய மலர்ந்த பூவின் படம் பதிவாகி இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட பூ எதுவும் லாபில் இல்லை.கேமிராவில் ஏதோ கோளாறு இருக்கலாம் என்று அவர்கள் அதை மீண்டும் மீண்டும் சோதித்துப் பார்த்தனர்.ஆனால் கேமிராவில் எந்த குறைபாடும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அந்த
கேமிரா மொட்டின் எதிர்கால இமேஜைக் காட்டியிருப்பது தெரிந்தது. அந்த மொட்டு மலரும் வரை காத்திருந்து பார்த்த விஞ்ஞானிகளுக்கு இன்னொரு ஆச்சரியம். அது போட்டோவில் இருந்தது போலவே அச்சு அசலாக இருந்தது.எவ்வளவுதான் துல்லியமான கேமிராவாக இருந்தாலும் அது ஒரு பொருளின் எதிர்கால உருவத்தை எப்படி காட்டும்? இதிலிருந்து பார்க்கும் போது நமக்கு எதிர்காலமாக தோன்றும் சில விஷயங்கள் எங்கோ ஒரு சூட்சுமமான தளத்தில் இப்போதே நடந்து கொண்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. சிற்பம் ஒன்று கல்லில் மறைந்திருக்கவே செய்கிறது. எதிர்காலம் நமக்குள் எங்கோ சூட்சுமமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது! மேலோட்டமாகப் பார்க்கும் ஒருவருக்கு காலம் நகர்வது போலத் தோன்றுகிறது. நதி ஒன்றின் மேல்தளத்தில் அதன் ஓட்டம் அதிகமாக இருப்பது போல. ஆனால் உள்ளே மூழ்க மூழ்க ஓட்டம் குறைந்து நதி அமைதியாகிறது. ஞானத்தில் மூழ்கிய ஒருவருக்கு காலம் நகர்வதில்லை. ஆம்..காதலில் மட்டும் அல்ல...தியானத்திலும் காலம் நின்று போகிறது.

Extra Sensory Perception (ESP ) எனப்படும் அதீத புலன் ஆற்றல் உள்ளவர்களைப் பற்றி நீங்கள் கேட்டிருக்கலாம். அவர்களால் வருங்காலத்தை சுலபமாகப் பார்க்க முடியும். விமான விபத்துகளையும், கப்பல் விபத்துகளையும் அவை நடப்பதற்கு முன்னரே கணித்து சொன்னவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.தென் ஆப்பிரிக்காவில் இ.எஸ்.பி பவர் இருந்த ஒரு சிறுமியிடம் எப்படி உன்னால் எதிர்காலத்தை கணிக்க முடிகிறது என்று கேட்டபோது அவள் 'எனக்கு அது கண் முன்னே நேரடியாக நடப்பது போல தோன்றுகிறது ' என்றாளாம். சரி எதிர்காலத்தை மட்டும் அல்ல இறந்த காலத்தையும் நம்மால் பார்க்க முடியும். இதற்கு ரொம்ப கஷ்டப்பட வேண்டாம்.மேலே அண்ணாந்து வானத்தைப் பார்த்தாலே போதும். சூரியனின் எட்டு நிமிடங்கள் பழமையான பிம்பம், சந்திரனின் ஒரு நிமிடம் பழமையான பிம்பம், நட்சத்திரங்களின் வருடக்கணக்கில் பழமையான பிம்பம் என்று ஒரு கடந்த கால இமேஜ்களை நாம் பார்க்க முடியும். நாம் ஒருவரைப் பார்க்கும் போது கூட அவற்றின் கடந்த கால இமேஜைத் தான் பார்க்கிறோம். 'இப்போது' 'Present ' என்பது ஒரு மாயை போல மிக மிக மெல்லியதாக இருக்கிறது.மனிதன்
என்ற பிராணிக்கு சாதாரணமாக ஐந்து புலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நம்மால் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு சைட் அடிக்க முடியும். பீட்சாவை ருசிக்க முடியும். சாக்கடை நாற்றம் வீசினால் கர்சீப் எடுத்து மூக்கை மூடிக் கொள்ள முடியும். எப்.எம்.இல் வரும் ஒரு குத்துப் பாடலை கேட்க முடியும். காதலி/காதலனின் முத்தத்தை உணர முடியும். சரி இந்த ஐந்து தான் இறுதியான புலன் எல்லையா என்றால் இல்லை. எட்டு புலன்கள், பத்து புலன்கள் இருக்கும் சில உயிரினங்கள் கூட பிரபஞ்சத்தில் இருக்கலாம். பூமியில் இருக்கும் மனுஷப் பயலுக்கு ஐந்தே அதிகம் என்று இயற்கை நினைத்திருக்கலாம். (ஐந்தை வைத்தே இந்த ஆட்டம் போடுகிறானே? !)

எனவே ஐந்து புலன்களுக்கு எதுவும் எட்டவில்லை என்றால் அது இல்லை என்று அர்த்தம் இல்லை. ஏன் இந்த ஐந்து புலன்களுக்கு
ம் கூட சில வரம்புகள் இருக்கின்றன. நம் ரெட்டினாவில் BLIND SPOT எனப்படும் காண இயலாத ஒரு பகுதி இருப்பதாக சொல்கிறார்கள்.மேலே உள்ள படத்தைப் பார்க்கவும். இடது கண்ணை இறுக்க கையால் மூடிக் கொண்டு வலது கண் வழியாக கூட்டல் குறியைப் பார்க்கவும். உங்கள் தலையை ஸ்க்ரீனில் இருந்து சுமாராக ஒரு அடி தொலைவில் வைக்கவும். இப்போது அந்த சிறிய புள்ளி உங்கள் பார்வையில் இருந்து மறைந்து போவதை பார்க்க முடியும். அது ரொம்ப சின்னது என்று நினைத்தால் இதே மாதிரி இடது கண்ணை மூடிக் கொண்டு கீழே உள்ள கூட்டல் குறியைப் பார்க்கவும். ஒரு குறிப்பிட்ட தொலைவில் (தலையை முன்னும் பின்னும் நகர்த்தி FOCUS செய்க) அந்த சிவப்பு பெருக்கல் குறி மறைந்து விடுவதை உணரலாம். இப்படி ஒரு குருட்டுக் கண்ணை வைத்துக் கொண்டே நாம் 'இந்த வயசிலும் நான் ஊசிக்கு நூல் கோர்ப்பேன்' என்றெல்லாம் வசனம் பேசுகிறோம்!

வினாடிக்கு இருபதாயிரம் தடவைக்கு மேல் அதிரும் அதிர்வுகளை நம் காது வடிகட்டி விடுகிறது. அதே போல வினாடிக்கு இருபது முறைக்கும் கீழ் அதிரும் அதிர்வுகளையும்! வௌவால்கள் ஏதோ மெளனமாக பறப்பது போல நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அவை ஒவ்வொரு நொடியும் அதீத மீயொலிகளை எழுப்பியவண்ணம் உள்ளன. அவற்றை நாம் கடந்து சென்றால் 'சரியான செவிடன் போறான் பாரு, ரெண்டு ஸ்பீக்கரும் டோட்டலா அவுட்டு போல இருக்கு ' என்று நினைத்தாலும் நினைக்கும். வாசனைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். மிருகங்களுடன் ஒப்பிடும் போது நாம் வாசனையில் ஜீரோ. கதவின் கைப்பிடியில் உள்ள வாசத்தை வைத்துக் கொண்டு மைல் கணக்கில்ஓடும் துப்பறியும் நாய்களைப் பார்த்து என்றாவது நாம்
வியந்திருக்கிறோமா? ? இல்லை நாமெல்லாம் ஹீரோயின்களைப்பார்த்து மட்டுமே வியந்து கொண்டிருக்கிறோம்.

சரி மனிதனை ரொம்ப கேவலப்படுத்த வேண்டாம். தொடு உணர்வைப் பொறுத்த வரை நமக்கு தோல் கொஞ்சம் sensitive . மற்ற விலங்குகளுக்கு HARD ! ஒட்டகம் முட்களை முறுக்கு சாப்பிடுவது போல மென்று நிதானமாக அனுபவித்து (?) சாப்பிடுகிறது. அதன் நாக்கு மிகவும் தடிப்பானது,insensitive ! . எருமையை எத்தனை அடித்தாலும் அது அசைந்து கொடுப்பதில்லை. ஆனால் நமக்கோ ரேசர் சற்றே கன்னத்தில் கீறினாலும் கம்பத்தின் பின்னே காத்துக் கொண்டிருந்த நரசிம்ம சுவாமி போல 'டான்' என்று ரத்தம் எட்டிப் பார்த்து விடுகிறது. பகுத்தறிவு அற்ற மிருகங்களுக்கு தொடு உணர்வு அதிகம் தேவையில்லை என்று இயற்கை நினைத்திருக்கலாம்.மனிதனுக்கு தான் 'தீண்டாய் மெய் தீண்டாய் , தீண்டித் தீண்டித் தீயை
மூட்டுகிறாய் ! 'பேரின்பம் மெய்யிலா , நீ தீண்டும் கையிலா' என்று ரொமான்ஸ் செய்வதற்கு தொடு உணர்வு அதிகம் தேவைப்படுகிறது. வாசனையை வைத்துக் கொண்டு விலங்குகள் ஆளை அடையாளம் காண்பது போல தொடு உணர்வை வைத்துக் கொண்டே நம்மால் மனிதர்களை அடையாளம் காண முடியும். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக நாம் நம் கண்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்!


இந்த LIMITATION களின் காரணமாக தான் சில அரைவேக்காடுகள் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வருகின்றன. [என்ன தான் அறிவியல் தொடர் எழுதினாலும் என்னால் கடவுள் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை] கடவுளை அறிவதற்கு நம் புலன்கள் போதுமானதாக இல்லை என்று வேண்டுமானாலும் சொல்லலாம். உதாரணமாக நம்மை சுற்றியும் கணக்கில்லாத அலைகள் திரிந்து கொண்டுள்ளன. ஆனால் நம் கண்கள் ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தை (VISIBLE SPECTRUM ) மட்டுமே கிரகித்து உள்ளே அனுப்பும் படி வடிவமைக்கப்பட்டுள்ளன. எல்லா அலைநீளத்தையும் கிரகிக்கும் படி இயற்கை வைத்திருந்தால் உங்களால் உங்கள் காதலி முகத்தைக் கூட பார்க்க முடியாமல் ரெயின்போ FM , சூரியன் FM , சன் டி.வி , ராஜ்
டி.வி, ஜெயா டி.வி ஒளிபரப்பும் அலைகள் தொந்தரவு செய்யும். THANK GOD ! ஒரு ரேடியோ ரிசீவர் இருந்தால் மட்டுமே அதை கிரகிக்க முடியும். அதே போல கடவுளை கிரகிக்கவும் வேறு ஒரு புலன் நமக்குத் தேவைப்படுகிறது. சமஸ்கிருதத்தில் 'கோசர' (Gocara) என்றால் புலன்களால் கிரகிக்கக் கூடியது என்று பொருள் . சமஸ்கிருதம் கடவுளை அகோசர என்கிறது. அதாவது புலன்களுக்கு அப்பாற்பட்டவன்! Beyond Senses ! (God is beyond sense..not non -sense !!!) இது வரை அறிவியல் கண்டுபிடித்த எந்த கருவியிலும் கடவுள் இருப்பதற்கான சான்று பதிவாகவில்லை என்கிறார் ஒருவர். சரிதான்..எப்படி பதிவாகும்? அல்வாவை காதுக்குள் வைத்தால் அதன் சுவை நமக்குத் தெரியுமா? மிக்சியை ஆன் செய்து விட்டு பாட்டு கேட்கவில்லை என்றால் கேட்குமா ?

ஏழு என்ற எண் ஹிந்து மதத்தில் முக்கியமான ஒரு எண். இது ஓர் எண் என்பதை விட ஒரு குறியீடு. ஏழு உலகங்கள் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. ஏழு ஜன்மங்கள் என்கிறார்கள். ஏழு ஸ்வரங்கள், ஏழு நாட்கள் !பாலாஜி ஏழு மலைகள் மீது வீற்றிருக்கிறார். இது எதைக் குறிக்கிறது என்றால் மனிதனின் ஆறு புலன்களை கடந்து ஏழாவதாக ஒரு புலனின் மூலமாகத் தான் கடவுளை உணர முடியும் என்பதை. ஏழாவது நாளான சனிக்கிழமை தான் பாலாஜிக்கும் உகந்த நாளாக இருப்பதை கவனியுங்கள்.
சப்த ரிஷி, சப்த கன்யா என்று ஏழு ஒரு ஸ்பெஷல் நம்பர் தான் போங்கள்..(சரி அந்த ஏழாவது புலன் என்ன ?? ஹ்ம்ம்...மிகப் பெரிய விஷயங்களைக் கேட்கிறீர்கள் பாஸ்! )

இயற்பியல் வகுப்பில் எப்படியோ 'பயாலஜி' 'ஆன்மிகம்' எல்லாம் வந்து விட்டது. சாரி...

நாம் நம் உலகத்தை அல்லது பிரபஞ்சத்தை மூன்று பரிமாணமாகப் பார்க்கிறோம். சரியாக சொல்வதென்றால் வெளியின் மூன்று பரிமாணங்கள் மற்றும் காலத்தின் ஒரு பரிமாணம். நாம் இயற்பியலின் கணக்குகளை எல்லாம் இந்த நான்கு பரிமாணங்களை வைத்து தான் போடுகிறோம். E =MC2 என்பதும் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்த மூன்று பரிமாணங்கள் தேவையான பரிமாணங்கள்..ஆனால் போதுமானவை அல்ல. (Necessary but not sufficient) காலத்தையும் சேர்த்து நம் பிரபஞ்சம் பதினொரு பரிமாணங்கள் கொண்டதாக இருக்கலாம் என்கிறார்கள். நம் மூளை மூன்று பரிமாணங்களை மட்டுமே கிரகிக்கக் கூடியது. (நீளம், அகலம், உயரம்) வெளியின் நான்காவது பரிமாணம் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது. நான்காவது பரிமாணத்தை ஓரளவு உணர்ந்து கொள்ள விக்கிபீடியா ஒரு படம் போட்டுள்ளது . அதைக் கீழே பாருங்கள். இது ஒரு நான்கு பரிமாண CUBE !நாம் ஏன் இந்த பிரபஞ்சத்தை மூன்று பரிமாணம் உள்ளதாகப் பார்க்கிறோம் என்றால் இதற்கு மீண்டும் 'ஆன்த்ரோபிக்' தத்துவத்திடம் சரணடைய வேண்டும். குறைந்த பட்சம் (அல்லது அதிக பட்சம்!) மூன்று பரிமாணங்கள் உள்ள ஒரு உலகில் தான் நம்மைப் போன்ற அறிவு ஜீவிகள் தோன்றி
நாம் ஏன் இந்த பிரபஞ்சத்தை மூன்று பரிமாணம் உள்ளதாகப் பார்க்கிறோம்?? என்று (அதிகப்ரசங்கித்தனமாக) கேள்வி எழுப்ப முடியும். சரி இந்த பிரபஞ்சம் ஒரு பரிமாணம் உள்ளதாக இருந்தால் எப்படி இருக்கும்? இரண்டு பரிமாணம் உள்ளதாக இருந்தால் எப்படி இருக்கும்? கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம்.ஒரு பரிமாண உலகில் நமக்கு நீளம் மட்டுமே இருக்கும். அகலம் உயரம் எதுவும் இல்லை. படத்தில் A என்பவர் B யை கடந்து அப்பால் செல்லவே முடியாது. A எப்போதும் B இக்கு இடது பக்கத்திலேயே இருக்க வேண்டி வரும். எனவே A யும் C யும் ஒருபோதும் கைகுலுக்கி ஹலோ சொல்லவே முடியாது. (பார்க்கவே முடியாது !) ஒவ்வொருவரும் தமக்கு பக்கத்தில் இருப்பவரை (மட்டுமே) கல்யாணம் செய்து கொள்ளவேண்டும். என்ன ஒருவர் அதிக பட்சமாக இரண்டு பொண்டாட்டி வைத்துக் கொள்ளலாம் . ஆனால் ஒரு ஆணுக்கு இடம் வலம் இரண்டும் ஆணாக இருந்து தொலைத்து விட்டால் பிரச்சனை (ஹி ஹி குழந்தை பெற்றுக் கொள்வது மட்டும் !) மொத்தத்தில் ஒரு பரிமாண உலகில் வாழ்க்கை மிகவும் பரிதாபகரமாக இருக்கும்.

இரண்டு பரிமாண உலகில்(நீளம்,உயரம்) கொஞ்சம் மேம்பட்ட வாழ்க்கை இருக்கும். படத்தில் இருக்கும் A என்பவர் தம் வீட்டு கொல்லைப்புரத்தை அடைய வீட்டின் கூரை மீது ஏறி இறங்க வேண்டி இருக்கும். இருபரிமாண உலகில் செய்தித்தாள் ஒரு பரிமாணமாக இருக்கும் (புள்ளிகள் கோடுகள்) மேலும் இருபரிமாண வெளியில் வழியில் வரும் தடைகளைக் கடந்து செல்ல நாம் அதன் மீது ஏறி மேலே பறந்து செல்ல வேண்டியிருக்கும். (அகலம் இல்லை என்பதால் ) இன்னொரு முக்கியமான விஷயம். இருபரிமாண உயிரினங்களுக்கு உணவு செல்லும் வழி , கழிவு வெளியேறும் வழி என்று தனித்தனியாக இருக்காது. அப்படி இருந்தால் அந்த உணவுக்குழல் பிராணியை இரண்டாக வெட்டி விடும். எனவே நமக்கு இரண்டும் ஒரே வாயிலின் மூலம் நடக்கும். உணவு உண்டு முடித்ததும் நாம் கழிவை வாந்தியாக வெளித்தள்ள வேண்டியிருக்கும். அதே வாய் வழியாக. நல்ல வேளை கடவுள் இந்த மாதிரி
அருவருக்கத்தக்க சங்கடங்களை நமக்கு கொடுக்கவில்லை. Fortunately we live in a Three-dimensional Universe!!!!


சரி... ஏன் நான்கு (3 +)பரிமாணங்கள் இருக்கக் கூடாது? என்று கேட்கிறீர்களா...I like your approach ! நல்ல கேள்வி..நான்கு பரிமாண உலகில் we will have an enriched life!!! ஆனால் நான்கு பரிமாண வெளியில் கோள்களை அவற்றின் ஓடுபாதையில் நிறுத்துவது கடினம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இது எப்படி என்றால் உங்களால் ஒரு கோட்டை (1D ) சுலபமாக காகிதத்தில் வரைய முடியும். (கை நடுங்காமல்) அதே ஒரு செவ்வகம் வரையச் சொன்னால் (2D ) கொஞ்சம் கஷ்டம். கை கொஞ்சம் அங்கே இங்கே போய் வரும். PERFECT RECTANGLE வரைவது கொஞ்சம் கஷ்டம். இதே செவ்வகத்தை காகிதத்திற்கு பதில் வெளியில் (SPACE ,3D ) வரைய சொன்னால் உங்கள் கை இன்னும் குழம்பும். தொடங்கின இடத்தில் தான் முடிக்கிறோமா என்று தெரியாது. அதாவது பரிமாணங்கள் அதிகமாக அதிகமாக சுதந்திரம் அதிகரிக்கும்.ஆனால் பொருட்களை கச்சிதமாக வடிவமைக்கும் வாய்ப்பு குறைகிறது. கடவுள் அல்லது இயற்கை அல்லது ஏதோ நமக்கு மேம்பட்ட ஒன்று Nameless ! அது (அவன் , அவள், அவர்) எத்தனை கைதேர்ந்த ஒரு ஆர்க்கிடெக்ட் என்று இப்போது புரிகிறதா ?

யார் அங்கே? டவுட் கேட்பது? ஹ்ம்ம் கேளுங்கள் சந்தோஷம்...என்னது மொத்தம் பதினொரு பரிமாணங்கள் இருந்தால் மற்ற ஏழும் எங்கே போச்சா? ஐயோ ஆளை விடுங்கள் என்னை STRING THEORY வரை இழுத்து விட்டு விடுவீர்கள் போலிருக்கிறதே?


சமுத்ரா ...


Thursday, July 21, 2011

கலைடாஸ்கோப்-30

இந்த வார கலைடாஸ்கோப் monochromatic ! :D (வெயிட், வெயிட், கூகிளை அப்புறம் பார்த்துக்கலாம் :-) )

நேற்று விஜய் டி.வி. 'நடந்தது என்ன' நிகழ்ச்சியில் ஒருவரைக் காட்டினார்கள். ஏதோ ஒரு விசித்திரமான வியாதி வந்து அவருக்கு முகம், கண்கள் வாய் எல்லாம் பெருத்து விகாரமான முகம் வந்து விட்டிருந்தது. அவர் இதனால் எங்கேயும் வெளியே நடமாடுவது இல்லையாம். மேலும் தான் எங்கே மீண்டும் குரங்காக (Reverse evolution ) மாறி விடுவோமோ என்றும் பயப்படுகிறாராம். தன் முகத்தை தானே பார்க்க சகிக்காமல் ஓ என்று அழுகிறார். (உண்மையில் ஓ என்று எல்லாம் அழவில்லை.சும்மா உயர்வு நவிற்சி அணிக்காக சொன்னேன்!)

தான் அழகாக இல்லையே என்ற எண்ணம் காலம் காலமாக மனிதர்களைப் படுத்தி வந்திருக்கிறது என்று தோன்றுகிறது.அதே போல கொஞ்சம் அழகாக இருப்பவர்களுக்கு இயல்பாகவே உள்ளூர ஒரு கர்வம் இருப்பதையும் மறுக்க முடியாது. 'என்னை ஏம்மா கருப்பா பெத்த ? என்று ஒரு மகனோ மகளோ கேட்கும் போது குங்குமப்பூ சாப்பிட மறந்து விட்டேன் என்று அம்மா ஒவ்வொரு முறையும் ஜோக் அடிக்க முடியாது.

Beauty is in the eyes of the Beholder என்பார்கள். மஜ்னுவைப் பார்த்து அந்த நாட்டு மன்னன் "அந்த லைலா என்ன அவ்வளவு அழகா?சாதாரணமாகத் தானே இருக்கிறாள்? நீ சரி என்று சொன்னால் உனக்கு அரண்மனை அந்தப்புர பேரழகி ஒருத்தியை
கல்யாணம் செய்து கொள்ள அனுமதி தருகிறேன் "என்கிறான். அதற்கு மஜ்னு 'அரசே , லைலாவின் அழகைக் காண
உங்களுக்கு மஜ்னுவின் கண்கள் வேண்டும் ' என்கிறான்.

அழகு என்றால் என்ன??அழகு என்பது ஒரு Subjective term .அதை சரியாக வரையறுக்கத் தெரியாமலேயே நாம் அதை இலக்கியங்களில் இருந்து ஹைக்கூக்கள் வரை சகட்டு மேனிக்கு உபயோகித்துக் கொண்டு வருகிறோம். ஏய் நீ ரொம்ப அழகா இருக்க , அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்று சினிமாவெல்லாம் வேறு எடுக்கிறோம்.'அழகான' ராட்சசியே அழகிய அசுரா என்று ஆக்சிமோரானில் பாடுகிறோம். சரியான வரையறை தெரியாமலேயே சில சொற்களை நாம் வாழ்க்கையில் பயன்படுத்துகிறோம் என்று தோன்றுகிறது.உ.தா: கடவுள், காதல், மகிழ்ச்சி..இதில் அழகும் ஒன்று.

மனித வரலாற்றிலேயே அவன் எதற்காக அதிக பணம் செலவழித்தான் என்று கணக்கு பார்த்தால் அழகு சாதனங்களுக்காக என்று தைரியமாக சொல்லலாம். 'சிவப்பழகு' என்ற புதிய வார்த்தையை நம் விளம்பரங்கள் இப்போது அறிமுகப்படுத்தி இருக்கின்றன.(ஆமாம்,
சிவப்பாக இருப்பவர்கள் உண்மையிலேயே பொய் சொல்ல மாட்டார்களா? வறுமையின் நிறம் போல உண்மையின் நிறமும் சிவப்பா? )ஆண்களுக்கு என்று தனியாக FAIRNESS CREAM கள் வந்து விட்டன.ஒரு விளம்பரத்தில் பெண்களுக்கான க்ரீமை அப்பிக்கொள்ளும் இளைரைப் பார்த்து சூர்யா டென்ஷன் ஆகி கத்துவது எரிச்சலாக இருக்கிறது. எதை அப்பிக் கொண்டால் என்ன? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான். நிஜ வாழ்க்கையில் அந்த க்ரீமை அப்பிக் கொண்டதால் மட்டும் மறுநாள் வேலை கிடைத்து விடப் போவதில்லை. ஒவ்வொரு க்ரீம்களிலும் ஒவ்வொரு 'FORMULA ' இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் எல்லா கிரீம்களிலும் ஒரு ஃபார்முலா பொதுவாக இருக்கிறது. நம்மிடம் பணத்தைக் கறக்கும் ஃபார்முலா.


பெங்களூருவில் Health and Glow என்று அழகு சாதனங்களுக்காகவே ஷாப்கள் இருக்கின்றன.(சென்னையிலும் இருக்கிறதா?) உள்ளே போய் பார்த்தால் மயங்கி விழுந்து விடும் அளவு கலர் கலராக கிரீம்கள், BODY லோஷன்கள், ஷாம்புகள், சோப்புகள் கிடைக்கின்றன. தலை சீவிக் கொள்வதற்கு Rounded tip சீப்புகள் அதிகம் இல்லை ஒரு இருநூறு ரூபாய் விலையில் 'சீப்பாக' கிடைக்கின்றன.பொடுகு என்னும் டான்ட்ரஃப்-பைப் போக்க மட்டும் இப்போது ஒரு பத்து ஷாம்பூக்கள் கிடைக்கின்றன.எதை வாங்குவது எதை விடுவது? Head n shoulders விளம்பரம் பார்த்து ஓரளவு convince ஆகி இருக்கும் போது All clear விளம்பரத்தில் இரண்டு பேர் வந்து இனிமேல் பொடுகு வாழ்க்கையில் வரவே வராது என்று தலைமேல் கைவைத்து சத்தியம் செய்து குழப்புகிறார்கள்! பேசாமல் தலைக்கு சீயக்காய்த் தூள் பூசிக் கொண்டு விடலாம் என்று தோன்றுகிறது.

சிலரை ஏனோ நமக்குப் பார்த்தவுடன் பிடித்துப் போகிறது. அப்படி என்றால் அவர் அழகாக இருக்கிறார் என்று அர்த்தமா? தெரியவில்லை.ஏதோ Something attracts ! அதே போல சிலரை நாம் பார்த்தவுடனே (ஏனோ காரணமின்றி )அவரை நாம் வெறுக்கிறோம். தனுஷ் சொல்வது போல சிலரை பார்த்தவுடன் பிடிக்காது ;பார்க்க பார்க்க தான் பிடிக்கும்! 'கண்டதும் காதல்' என்ற கான்செப்ட் வாழ்க்கையில் எத்தனை தூரம் வெற்றிகரமாக அமைந்திருக்கிறது தெரியவில்லை.'யாரோ இவர் யாரோ ' என்று ராமாயணத்தில் சீதையைப் பாட வைத்ததும் கண்டதும் காதல் தான் . அவளுக்கு அது வெற்றிகரமாக அமைந்தது. எல்லாருக்கும் அமையும் என்று சொல்ல முடியாது. எனவே முதல் பார்வையிலேயே எல்லாவற்றையும் முடிவு செய்து விடாதீர்கள். 'துள்ளாத மனமும் துள்ளும்' விஜய் மாதிரி முதல் பார்வையில் உங்களுக்கு பரம எதிரியாகத் தெரிபவர் கூட பின்னாளில் உங்கள் வாழ்க்கைத் துணையாக வரலாம்!


நாம் நம் இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் நாடகங்களிலும் அழகானவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறோம். அப்படியென்றால் சுமாரனவர்கள் , கறுப்பானவர்கள் பின்னால் நின்று கொண்டு டான்ஸ் ஆட வேண்டியது தானா? ஒரு பாடலில் ஹீரோவும் ஹீரோயினும் மட்டுமே சேர்ந்து டான்ஸ் ஆட வேண்டுமா? பின்னே நிற்கும் ஆண்களும் பெண்களும் ஏன் தங்கள் ஜோடியுடன் ஆடக் கூடாது? நம் இலக்கியங்கள் , புராணங்கள் தலைவியை (கொஞ்சம்)ஓவராக வர்ணிக்கின்றன. சூர்பணகை ராவணனிடம் "உனக்கு இருக்கும் இருபது கண்கள் சீதையைப் பார்க்க போதாது;லட்சம் கண்கள் வேண்டும்" என்கிறாள். லட்சம் கண்கள் இருந்தாலும் பார்வை ஒன்று தானே? சீதா தேவி என்றால் அவளுக்கு முகப்பரு வராதா? வெய்யிலில் நடந்து
சென்றால் முகம் கருத்துப் போகாதா? நரைமுடி எட்டிப்பார்க்காதா? என்ன அபத்தம்! அதே மாதிரி ராமனை கோடி மன்மத ஸ்வரூபன் என்கிறார்கள். கோடி மன்மதன்களின் ஸ்வரூபத்தையும் தானே எடுத்துக் கொள்ளும் ராமன் பேராசைக்காரன் இல்லையா? 'நளவெண்பாவில்' வரும் அன்னம் தான் எப்படி நடக்க வேண்டும் என்று தமயந்தியைப் பார்த்து கற்றுக்கொண்டேன் என்கிறது. (அன்னமதை முன்னே நடைவென்றாள் -38) இன்றைக்கு கூட ஒருவரை ஒருவர் பார்க்காமலே காதல் செய்யும் கதைகளில் கூட அஜீத்தும் தேவயானியும் நடிக்க வேண்டி இருக்கிறது. லிவிங்க்ஸ்டனும் ஆனந்தியும் நடித்திருந்தால் படம் அவ்வளவு நாள் ஓடி இருக்குமா தெரியாது

ஐ.டி கம்பெனிகளில் இருப்பவர்கள் இப்படி சொல்வதை நீங்கள் கேட்டிருக்கக்கூடும் : ஆள் கொஞ்சம் பார்க்க லட்சணமாக இருந்தா விடமாட்டாங்களே? அள்ளிட்டு போயிடுவாங்களே? என்று. yes. அவர்கள் சொல்வது Boy Friends பற்றி தான்.அழகான பெண்களுக்கு பா.பிரண்ட்ஸ் சுலபமாகக் கிடைத்து விடுகிறார்கள்.அழகான பெண்கள் ஒரு நகரத்தில் தனியாக அலைவதை நீங்கள் பார்க்கும் காட்சி அரிதாகத் தான் இருக்கும்.

மேலும் இன்னொன்று சொல்கிறார்கள் :அழகும் அறிவும் ஒரே இடத்தில் சுமுகமாக இருக்காது என்று. இது ஓரளவு உண்மை என்றே தோன்றுகிறது. அழகுப் பதுமையான சில நடிகைகளுக்கு இப்போதெல்லாம் பேசவே வருவதில்லை. ஆங்கிலம் பேசினால் போதுமா ? பேசுவதை அர்த்தத்துடன் பேச வேண்டும். இந்த ஜோக்கை நீங்கள் ஏற்கனவே கேட்டிருக்கக் கூடும்:
அழகான பெண் ஒருத்தி ஓர் அறிரிடம் வந்து 'நாம் கல்யாணம் செய்து கொள்ளலாமா? என் அழகுடனும் உங்கள் அறிவுடனும் ஒரு குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும் ?" என்று கேட்டாளாம். அதற்கு அவர் 'நல்ல ஐடியா தான்..ஆனால் ஒரு வேளை என் அழகுடனும் உன் அறிவுடனும் குழந்தை பிறந்து தொலைத்து விட்டால் என்ன செய்வது ? என்றாராம். அழகானவர்கள் முட்டாள்கள் என்று சொல்வதை விட அவர்கள் தங்கள் அறிவுக்கு வேளை கொடுக்காமல் இருந்து விடுகிறார்கள் என்றே
சொல்ல வேண்டும்.அதாவது தங்கள் அழகையே எங்கு போனாலும் மூலதனமாகப் பயன்படுத்தி விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டு விடுகிறார்கள்.ஒருவரை அழகால் வசப்படுத்துவது என்பது அறிவால் வசப்படுத்துவதை விட சுலபமானது. ஹீரோயின்கள் INTELLECTUAL -களாக வரும் தமிழ் சினிமா ஒன்றை சொல்லுங்கள் பார்க்கலாம்.ஹீரோயின்கள் எதுவுமே செய்ய வேண்டாம்.ஹீரோவைக் கவர சும்மா மொட்டை மாடியில் நின்று இரண்டு நிமிடம் 'எக்சர்சைஸ்' செய்தாலே மதி! சூப்பர் ஃ பிகரு என்று சொல்கிறார்களே தவிர 'என்ன ஒரு அறிவுடா அவளுக்கு' என்று யாராவது சொல்கிறார்களா? தத்துவ ஞானி சாக்ரடிஸ் ரொம்ப அசிங்கமாக இருந்தாராம். அறிவியல் மேதை நியூட்டனுக்கு ரொம்ப பெரிய நீண்ட மூக்கு இருந்ததாம். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது அழகும் அறிவும் பனிப்போர் விரோதிகள் என்றே சொல்லத் தோன்றுகிறது.


இறைவனை அடையும் வழிமுறைகளை சத்தியம் சிவம் சுந்தரம் என்று சொல்வார்கள். இதில் மூன்றாவதாக வருவது சுந்தரம் என்ற அழகு. அதாவது அழகை ஆராதிப்பது. Never lose an opportunity of seeing anything beautiful, for beauty is God's handwriting - Ralph Waldo Emerson :) அப்படியானால் ரோட்டில் சைட் அடித்துக் கொண்டிருந்தால் இறைவனை சுலபமாக அடைந்து விடலாமா என்று கேட்கக்கூடாது. இது வேறுவிதமான Beauty ! இந்த inner beauty inner beauty என்கிறார்களே? அப்படி என்றால் என்ன ? அழகான காஸ்ட்லியான ஜாக்கி அண்டர்வேர் ஒன்றை வாங்கி அணிந்து கொள்வதா? இல்லை. சில பேர் பார்பதற்கு சுமாராகத் தான் இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் பழகினால் அவர்கள் இதயம் எத்தனை அழகானது என்று தெரிய வரும். அந்த inner beauty!

மிகவும் அசிங்கமாகத் தோற்றமளித்த ஒருவனிடம் 'இதைப்பற்றி உனக்கு கவலை இல்லையா"? என்று யாரோ கேட்டார்களாம். அதற்கு அவன் 'நான் ஏன் கவலைப்பட வேண்டும் , இது என்னைப் பார்ப்பவர்களின் பிரச்சனை' என்றானாம். இது மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு ஜோக் மாதிரி தெரிந்தாலும் இதனுள் தான் எத்தனை உண்மை பொதிந்துள்ளது? ஆம்.. நமக்கு முகம் இல்லை. இந்த உலகத்தில் நம்மைத்தவிர எல்லாரும் மறைந்து போய் விட்டால் நமக்கு முகம் இருக்குமா? இருக்காது.
அப்போது நாம் FAIR -N-HANDSOME அப்பிக் கொள்வோமா? நம்மிடம் உள்ள எல்லா அழகு சாதனங்களையும் தூக்கி எறிந்து விடுவோம்.(உடைகளையும் தான்) நாம் பிறப்பதற்கு முன்னர் நமக்கு என்ன முகம் இருந்தது என்று சிந்திப்பது ஒரு அருமையான தியான முறை என்று ஜென் சொல்கிறது! இந்த கவிதையைப் பாருங்கள்.

நான் முகமற்றவன்
தனிமையில் ஒரு பாடலை முணுமுணுக்கும் போதும்
தூங்கச் செல்லும் போதும்
தூங்கும் போதும்
காலையில் விழித்தெழும் போதும்
பல் துலக்கும் போதும்
வீட்டை சுத்தம் செய்யும் போதும்
ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டு புன்னகை செய்யும் போதும்
நான் முகமற்றவன்
செருப்பு மாட்டிக் கொண்டு
வெளியே கிளம்பும் போதுதான்
ஏதோ ஒரு முகத்தை
எங்கிருந்தோ எடுத்து
அவசரமாக மாட்டிக் கொள்கிறேன்!


உங்களுக்கு யாரையாவது பிடிக்கவில்லையா? அவர் அழகாக இல்லை என்பதற்காக மட்டுமே அவரை நிராகரித்திருக்கிறீர்களா? அப்படியானால் இன்று அவரை சந்தித்து அவருடன் ஒரு காபி சாப்பிடுங்கள்.ஒவ்வொருவருக்கும் அவருக்கே உரித்தான ஒரு தனித்துவமான அழகு இருக்கவே செய்கிறது .அதை உற்றுநோக்கும் கண்கள் நமக்கு வேண்டும் அவ்வளவு தான். நம் கண்கள் மிக அவசரமாக முடிவெடுத்து விடுவது தான் இங்கே பிரச்சினை. ஐஸ்வர்யா ராய் தான் அழகு என்று இறைவன் தீர்மானித்திருந்தால் எல்லாரையும் ஐஸ் போலவே அவன் படைத்திருக்கலாமே? ஒவ்வொருவருக்கும் ஒரு பிரத்யேக அழகு உள்ளே ஒளிந்திருக்கும். சிலருக்கு முடி அழகாக இருக்கும். சிலருக்கு கண்கள் சிலருக்கு பல், சிலருக்கு உதட்டருகில் இருந்து எட்டிப் பார்க்கும் ஒரு மச்சம்.,சிலருக்கு முகப்பரு!சிலர் பேசுவது அவ்வளவு அழகாக இருக்கும். சிலர் நடப்பது அழகாக இருக்கலாம்.எல்லாவற்றுக்கும் மேலாக சிலரின் இதயம், சிலரின் அன்பு , ஏன் சிலரின் இருப்பே கூட அழகாக இருக்கலாம். ஓகே. என்ன காபி சாப்பிட கிளம்பி விட்டீர்களா? ஆல் தி பெஸ்ட்!


சைடு பிட்: "முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மூன்றையும் கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால், முகச் சுருக்கம் மறைந்து,முகம் பொலிவுடன் இருக்கும்" இதற்கெல்லாம் நம் மாடர்ன் பெண்களுக்கு இன்றைக்கு நேரம் இருக்கிறதா தெரியவில்லை!

ஒரு ஓஷோ ஜோக்
====================

ஒரு டாக்டருக்கு ஒரு போன் வந்தது.

"டாக்டர் , ரோஸிக்கு பிரசவ வலி வந்து மிகவும் துடிக்கிறாள்.. நீங்கள் உடனே வர முடியுமா?"

"சரி...இது அவர்களின் முதல் குழந்தையா?"

"லூசுத்தனமாக பேசாதீங்க டாக்டர்.. இது அவங்க ஹஸ்பன்
ட்"


சமுத்ரா

Tuesday, July 19, 2011

அணு அண்டம் அறிவியல் -40

அணு அண்டம் அறிவியல் -40 உங்களை வரவேற்கிறது.


வெளியில் முன்னும் பின்னும் நம்மால் நகர முடிவது போல காலத்தில் நகர முடியாததற்கு அதன் திசை (DIRECTION ) ஒரு காரணம் என்கிறார்கள்.அதன் திசை எப்போதும் எதிர்காலத்தை நோக்கியே இருக்கிறது. நம்மால் ஏன் கடந்த காலத்தை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடிகிறது? ஏன் எதிர்காலம் நமக்குத் தெரியவில்லை என்ற கேள்விகளுக்கு இது விடையளிக்கிறது.
ஆனால் விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற பாகுபாடு கிடையாது. காலம் என்பது வெளியின் ஒரு பண்பு (property of space ) அவ்வளவு தான். மனிதன் என்ற தர்க்கரீதியான ஒரு உயிரினம் பிரபஞ்சத்தில் வந்ததால் தான் காலத்தை கடந்த காலம் எதிர்காலம் என்று இரண்டாகப் பிரிக்க வேண்டி வந்தது. Eternalism (சாசுவதம்)

என்பது காலத்துக்கான ஒரு தத்துவம். அது என்ன சொல்கிறது என்றால் கடந்த காலம் , நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் இவையெல்லாம் கால வரைபடத்தில் வெவ்வேறு புள்ளிகள்.காலம் என்று ஒன்று (பின்னணியில்) நகர்வதே இல்லை. அது முன்னமே நிர்ணயிக்கப்பட்ட ஒரு GRAPH என்கிறது .ஒரு வரைபடத்தில் எப்படி எல்லாப் புள்ளிகளும் முதலிலேயே குறிக்கப்பட்டு விடுகின்றனவோ அதே போல காலமும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு (நான்காவது) பரிமாணம். மனித மூளையின் சில வரம்புகள் (limitations ) காரணமாக நமக்கு காலம் வெளியில்(SPACE ) இருந்து வேறுபட்ட ஒன்றாகத் தெரிகிறது. ஆம் நம் மூளை காலவெளியை கற்பனை செய்யும் படி வடிவமைக்கப்படவில்லை.


இந்திய வரைபடத்தில் எப்படி சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை எல்லாம் ஒரே சமயத்தில் சேர்ந்து குறிக்கப்பட்டிருக்கின்றனவோ அது போல உங்கள் வாழ்க்கை வரைபடத்தில் இறந்த காலம் , நிகழ் காலம் , எதிர்காலம் எல்லாம் சேர்ந்தே இருக்கின்றன. காலம் சாசுவதமான ஒரு நான்காவது பரிமாணம் என்ற கருத்தை ஐன்ஸ்டீன் கண்டுபிடிக்கும்
முன்னரே நம் ஜோதிடர்கள் அறிந்து கொண்டு விட்டார்கள் போலும். இதனால் தான் ஜோதிடம் 'பாதி அறிவியல்' என்று அழைக்கப்படுகிறது. உங்கள் ஜாதகத்தை வைத்துக் கொண்டு நாளை என்ன நடக்கும் என்று சொல்வதை முட்டாள்தனமாக கருதுபவர்களா நீங்கள்? உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். காலத்துக்கான வரைபடத்தில் எதிர்காலத்தை

படிப்பது என்பது ஒரு இந்திய வரைபடத்தில் டெல்லியைத் தேடுவது போல ரொம்ப சுலபம் தான். இதற்கு ஓஷோவின் இரண்டு உதாரணங்கள் பார்க்கலாம்: (பகவத்கீதை ஒரு தரிசனம்)

ஒரு மரத்தின் கீழே ஒருவன் நிற்கிறான். மரத்தின் மேலே உச்சாணிக் கொம்பில் இன்னொருவன் உட்கார்ந்திருக்கிறான். மரத்தின் மேலே இருப்பவன் தெருக்கோடியில் வந்து கொண்டிருக்கும் ஒரு மாட்டு வண்டியைப் பார்கிறான். அது அவனுக்கு நிகழ் காலம். ஆனால் மரத்தின் கீழே இருப்பவனுக்கு அந்த வண்டி தெரிவதில்லை. அவனுக்கு வண்டி என்பது இன்னும் நிகழாத எதிர்காலம். அதே போல வண்டி இருவரையும் கடந்து தெருக்கோடியில் மறைந்ததும் அது கீழே இருப்பவனுக்கு இறந்த காலம் ஆகிவிடுகிறது. ஆனால் மேலே உட்கார்ந்திருப்பவன் அந்த வண்டியை இன்னும் பார்க்க முடிவதால் அவனுக்கு அது இன்னும் நிகழ்காலம் தான்.அதே போல அர்ஜுனன் கீழ்நிலையில் இருப்பதால் அவனுக்கு நிகழ்காலம் மட்டும் தெரிகிறது. கிருஷ்ணன் ஞானத்தின் உயரிய நிலையில் இருப்பதால் அவனுக்கு இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் எல்லாம் ஒரே பார்வையில் தெரிகிறது.அர்ஜுனா, உன் கடந்த பிறவிகள் அனைத்தையும் இனிமேல் நீ எடுக்கப்போகும் பிறவிகள் அனைத்தையும் நான் அறிவேன்

என்று கிருஷ்ணன் சொல்வதை கவனிக்கவும்.

ஸ்ரீ பகவானுவாச

பஹூனி மே வ்யதீதானி ஜன்மானி தவசார்ஜுன
தான்யஹம் வேத சர்வாணி ந த்வம் வேத்த பரந்தப 4 -5


ஒரு அறையில் ஒருவன் அடைக்கப்பட்டிருக்கிறான். அதன் சாவித்துவாரத்தின் வழியே வெளியே நடப்பதை அவன் பார்க்கிறான். வெளியே ஒருவர் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கிறார்.அவரை(நடப்பவரை) அறையின் வெளியே இருக்கும் இன்னொருவனும் பார்க்கிறான்.வெளியே இருக்கும் ஒருவன் நடப்பவரை நிகழ் காலத்தில் பார்க்கிறான். ஆனால் உள்ளே இருப்பவனுக்கு அவர் சாவித்துவாரத்தின் வழியே கண்ணுக்குத் தெரியும் வரை அது எதிர்காலம் தான். அதே போல அவர் சாவித்துவாரத்தில் தோன்றி மறைந்து விட்டதும் அது அவனுக்கு இறந்த காலம் ஆகி விடுகிறது. வெளியே இருப்பவனுக்கு அது இன்னும் நிகழ் காலம் தான். மனித அறிவு என்பது ஒரு சாவித்துவாரம் போன்றது. மிகவும் குறுகியது.அதன் வழியே நாம் குறுகிய பார்வை பார்த்தால் நிகழ்காலம் தான் தெரியும். சாவித்துவாரத்தின் வழியே பார்ப்பவன் வெளியே இருப்பவனை பார்த்து உனக்கு எதிர்காலம் எப்படித் தெரியும் என்று கேட்டால் எப்படி இருக்கும்? நாம் குறுகிய துவாரத்தின் வழியே பார்த்துக் கொண்டு ஜோதிட சாஸ்திரம் தெரிந்தவர்களை போலி என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.கவனிக்கவும் உண்மையான ASTROLOGY தெரிந்தவர்கள். அரைகுறையாகத்தெரிந்து கொண்டு காசுபார்க்க ஆசைப்படும் 'டுபாக்கூர்கள்' அல்ல.

படத்தைப் பாருங்கள். ஒரு வரைபடம் என்பது பொதுவாக வெளியின் ஒரு பரிமாணத்தை X அச்சிலும் இன்னொரு பரிமாணத்தை Y அச்சிலும் வைத்து வரையப்படும். காலமும் வெளியின் நான்காவது பரிமாணம் என்பதால் அதற்கும் இப்படி வரைபடம் வரையலாம். அப்போது எதிர்காலம் இறந்தகாலம் என்ற வேறுபாடுகள் மறைந்து எல்லாம் ஒரே வரைபடத்தில் சமகாலப் புள்ளிகளாக (simultaneous points ) மாறி விடும். இப்போது எதிர்காலத்தை அறிய இறந்த காலத்தின் புள்ளியில் இருந்து ஒரு கோடை இழுத்து விட்டால் போதும்.


ஒருவருக்கு நிகழ்காலமாக இருக்கும் ஒன்று இன்னொருவருக்கு எதிர்காலமாக இருக்கலாம். ஐன்ஸ்டீனின் இந்த கொள்கை ஆய்வை (Thought Experiment) நாம் முன்பே பார்த்திருக்கிறோம். ஓடும் ரயில் ஒன்றின் சரியான மையத்தில் இருந்து கொண்டு ஒருவர் ஒரு ஒளிக்கற்றையை இருபுறமும் அனுப்புகிறார்.அவரைப் பொறுத்தவரை ரயில் நிலையாக இருப்பதால் இரண்டு கற்றைகளும் ஒரே சமயத்தில் அதாவது நிகழ்காலத்தில் ரயிலின் இருமுனைகளை அடைகின்றன. ஆனால் ரயிலுக்கு வெளியே இருப்பவருக்கு கற்றை R1 புறப்பட்டதும் ரயிலின் முன்பக்க முனை அதை விட்டு முன்னே நகர்வதாகவும் கற்றை R2 புறப்பட்டதும் பின்பக்க முனை அதை நோக்கி வருவதாகவும் தெரியும்.எனவே R2 முதலிலும் R1 சிறிது நேரம் கழித்தும் முனைகளை சென்று முட்டும். அதாவது ஒன்று நிகழ்காலத்திலும் இன்னொன்று எதிர்காலத்திலும் நடக்கும்.

J. M. E. McTaggart என்ற தத்துவ அறிஞர் (சாசுவதக் கொள்கையின் தந்தை) காலம் என்பதை ஒரு மாயை (unreality ) என்கிறார். நம்முடைய மொழிகள் Tense less ஆக இருக்க வேண்டும் என்கிறார். அதாவது 'நேற்று மழை பெய்தது' என்று சொல்லாமல் '2011 ஜூலை 18 அன்று மழை பெய்கிறது' என்று சொல்ல வேண்டுமாம்.காலம் என்ற ஒன்று உண்மையிலேயே நம் பின்புலத்தில் நகர்ந்து கொண்டிருந்தால் அதன் வேகம் என்ன?என்று அவர் கேட்கிறார். வேகம் = வெளி/காலம் என்று நாம் வரையறை செய்கிறோம். ஆனால் காலத்திற்கும் வேகம் இருக்குமா? It seems circular ! காலத்தின் வேகம் என்பது என்ன ? ஒரு நொடிக்கு ஒரு நொடியா? இது அபத்தமாகத் தெரிகிறது.

சரி நிகழ்காலம் என்பதை உங்களால் வரையறுக்க முடியுமா? நிகழ்காலத்தை உணரத் தொடங்கும் முன்னரே அது இறந்த காலமாகி விடுகிறது. Eternalism எனப்படும் கொள்கைக்கு எதிரான ஒரு தத்துவம் Presentism எனப்படும் இன்னொரு இஸம். நிகழ்காலம் மட்டுமே உண்மை என்று அது சொல்கிறது. பரந்து விரிந்த கடந்த காலமும் புதிரான எதிர்காலமும் இந்த நிகழ்காலம் என்ற தக்குனூன்டு புள்ளியில் சந்தித்து பிரிகின்றன. காலத்தை அளக்க உதவும் மணல் கடிகாரத்தைப் பார்த்திருக்கிறீர்களா? மேலே இருக்கும் மணல் கண்ணுக்குத் தெரிகிறது (எதிர்காலம்) கீழே விழுந்த மணல் தெரிகிறது (இறந்த காலம்) ஆனால் இரண்டுக்கும் இடையே மணல் பயணிக்கும் அந்த குறுகிய நிகழ் காலத்தை நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம்.

ஜென் ஞானி ஒருவரை எதற்கோ ஒரு அரசன் கைது செய்து மரண தண்டனை விதிக்கிறான். அவரைப் பார்த்து 'உனக்கு இன்னும் இருபத்து நான்கு மணிநேரத்தில் மரண தண்டனை' என்கிறான். அதற்கு அவர் பலமாகக் சிரிக்கிறார் "நான் இந்த நொடியில் வாழ்கிறேன்..இந்த நொடி தான் எனக்கு உலகம்.நொடிக்கு நொடி வாழும் ஒருவனுக்கு இருபத்து நான்கு மணிநேரம் கழித்து மரணம் வந்தால் என்ன? இருபத்து நான்கு ஆண்டுகள் கழித்து வந்தாலென்ன? எனக்குத் தெரிந்ததெல்லாம் இந்த ஒரு
நொடி தான்..அதுவே எனக்கு அதிகம். இதைக் கொடுத்ததற்காக நான் இறைவனுக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன்" என்றாராம்.

Slaughterhouse-Five என்ற நாவலைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு உயரமான கட்டிடத்தின் மேலே நின்று பார்க்கும் போது உங்களுக்கு வெளியில் எல்லா இடங்களும் தெரியும்.இன்னும் உயரமாகப் போனால் ஒரு நகரமே தெரியும். இன்னும் உயரமாகப் போனால் நம் பூமி முழுவதையும் பார்க்க முடியும். இதே போல நாம் காலத்தின் பரிமாணத்திலும் ஒரு WATCH TOWER ஐ கண்டுபிடிக்க வேண்டும், அங்கிருந்து கீழே (?) பார்த்தால் நம் முன்னோர்கள் வாழ்ந்ததைப் பார்க்க முடியும். நம் சந்ததிகள் பூமியில் வாழ்வதைப் பார்க்க முடியும். ஆனால் என்ன, அவர்கள் வாழ்க்கையுடன் நாம் குறுக்கிட முடியாது. அவர்களை சந்திக்க கீழே இறங்கி வந்தால் அவர்கள் நம் பார்வையில் இருந்து மறைந்து விடுவார்கள். ஒரு விதத்தில் பார்த்தால் யாருமே இறக்கவில்லை. நம் பரிமாணத்தின் பார்வையில் இருந்து அவர் மறைந்து விட்டார் என்று மட்டுமே நாம் சொல்ல முடியும். இங்கிருந்து நம்மால் டெல்லியைப் பார்க்க முடியவில்லை என்றால் அது இல்லை என்று முடிவெடுப்பது எப்படி முட்டாள் தனமோ அப்படி தான் ஒருவர் இறந்து விட்டார் என்று முடிவெடுப்பதும். டெல்லியும் சென்னையும் ஒன்றாகத் தெரியும் படி ஒரு உயரிய பார்வை கோபுரத்தை கண்டுபிடிக்க வேண்டும் அவ்வளவு தான்.ஸ்லாட்டர் ஹவுஸ் ஃபைவ் இந்த தத்துவத்தை வைத்து எழுதப்பட்டது. அதன் ஹீரோ பில் வேற்றுக்கிரக வாசிகளால் கடத்தப்படுகிறான். அந்த வேற்றுக்கிரக வாசிகளின் மூளை நான்காவது பரிமாணத்தைப் பார்க்கும் விதத்தில் இருக்கிறது. அவர்களால் காலத்தின் எல்லா இடங்களுக்கும் சாதாரணமாகப் போய் வர முடிகிறது. அவர்கள் ஹீரோவை கடத்திக் கொண்டு போய் 'மூன்று பரிமாண பிராணி' என்று கேலி செய்து ஒரு ஜூ-வில் அடைத்து விடுகிறார்கள். அங்கே வருடக்கணக்கில் அவனை சிறைவைக்கும் அவர்கள் பிறகு ஹீரோவை கடத்திக் கொண்டுவந்த நாளுக்கு மீண்டும் பயணித்து (?) வந்து அவனை பூமிக்கு அனுப்பி விடுகிறார்கள். இங்கே பூமியில் அவன் காணாமல் போய் ஒரு சில வினாடிகளே ஆகியிருக்கின்றன.திரும்பி வரும் ஹீரோ தன் வாழ்வில் தொடர்பில்லாத சம்பவங்களை சந்திக்கிறான். அதாவது அவன் இறந்த பின்னும் வாழ முடிகிறது.சில சமயம் நாளை நடக்க இருப்பது தெரிகிறது . நேற்று நடந்தது மறந்து விடுகிறது! இந்த கான்சப்டை வைத்துக் கொண்டு நான்கூட ஒரு பிக்ஷன் நாவல் எழுதலாம் போலிருக்கிறது. (என்ன எழுதட்டுமா? :-))

நம்மை இந்த பிரபஞ்சத்தில் எத்தனை பேர் 'மூன்று பரிமாண பிராணி' என்று கேலி செய்து கொண்டிருக்கிறார்களோ?


சமுத்ரா

Friday, July 15, 2011

கலைடாஸ்கோப் -29

லைடாஸ்கோப் -29 உங்களை வரவேற்கிறது

1
==

'பூ வாசம் புறப்படும் பெண்ணே, பூ நான் வரைந்தால்' ...இந்த பாட்டை சமீபத்தில் கேட்டதும் வாசனைகளைப் பற்றி பேச வேண்டும் போலத் தோன்றியது.

மற்ற எல்லா புலன்களுக்கும் இல்லாத ஒரு தனித்தன்மை நம் மூக்குக்கு இருக்கிறது என்று தோன்றுகிறது. ஒளியையும் ஒலியையும் மின்சார துடிப்புகளாக மாற்றத் தெரிந்த மனிதனுக்கு இன்னும் வாசனையின் மர்மம் பிடிபடவில்லை. நீங்கள் ஒன்றை கவனித்திருக்கிறீர்களா? பழையதை நினைவுபடுத்துவதில் காட்சிகளைக் காட்டிலும் , சப்தங்களைக் காட்டிலும் வாசனையே முதலிடம் வகிக்கிறது. இதனால் தான் நாம் இது பூர்வ ஜன்ம வாசனை என்று சொல்கிறோம்.
வாசனை ஜென்மங்களைக் கடந்தும் நம்மிடம் ஒட்டிக் கொண்டு வரும் என்று தெரிகிறது. நீங்கள் சின்ன வயதில் ஏதோ ஒரு வாசனையை முகர்ந்திருப்பீர்கள். ஒரு சோப்பின் வாசனையோ வீட்டில் செய்த ஒரு இனிப்பின் வாசனையோ, அம்மாவின் உடலில் வந்த வாசனையோ,நோட்டுப் புத்தகத்தின் நடுப்பக்க வாசனையோ,விடுமுறைக்கு வந்த அண்ணன் போட்டுக் கொண்டு வந்த செண்டின் வாசனையோ.. ஏதோ ஒன்று...அதே வாசனையை நீங்கள் ஐம்பது ஆண்டுகள் கழித்து நுகர்ந்தாலும் அந்த ஞாபகங்கள் உடனே நினைவில் தூண்டப்படும். ஆனால் ஐம்பது வருடம் முன்பு பார்த்த ஒரு இடத்தையோ கேட்ட ஒரு இசையையோ மீண்டும் அனுபவித்தால் அந்த ஞாபகங்கள் வர நாம் கொஞ்சம் போராட வேண்டி இருக்கும். ஞாபக சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு வாசனையுடன் சம்பந்தப்படுத்தி பாடங்களைக் கற்பிக்க இயலுமா என்றெல்லாம் ஆராய்ச்சி நடந்து வருகிறதாம்.

மிருகங்கள் தாம் உண்ணும் உணவு நல்லது தானா இல்லையா என்பதை முகர்ந்து பார்த்தே அறிந்து கொள்கின்றன. நாமோ உணவு பார்க்க மட்டுமே நன்றாக இருந்தால் உடனே உள்ளே அமுக்கி விடுகிறோம். மனிதனின் வாசனை உணர்வுகள் மழுங்கி வருகின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள். புதிய சோப்பு ஒன்று வாங்கினால் அதன் வாசம் ஒரு இரண்டு நாளுக்கு நமக்கு உரைக்கிறது. அதற்குப் பிறகு ஏதோ கல்லைத் தேய்த்துக் கொள்வது போலவே தான் இருக்கிறது.வெளிச்சத்தில் தூங்கப் பழகிக் கொள்வது போலவும், ரயில் சத்தத்தில் வசிக்கப் பழகிக் கொள்வது போலவும் நாம் வாசனைகளுக்கு இடைய வாழவும்
பழகிக்கொள்கிறோம். ஆம்..சாக்கடையில் இறங்கி வேலை பார்பவர்களுக்கு அதன் வாசம் தெரிவதில்லை.

ஓஷோ வாசனையைப் பற்றி ஒரு அருமையான தகவல் சொல்கிறார் கேளுங்கள். அதாவது: இந்து மதம் காதுக்கு முக்கியத்துவம் தந்து ஒலியினால் இறைவனை ஆராதிக்கிறது. 'நாதோபாசனம்'! நாதத்தால் கடவுளை உபாசிப்பது. கிறித்துவம் தொடுபுலனுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இயேசு கைகளால் தொட்டே நோயாளிகளை குணப்படுத்தினார் என்று சொல்வார்கள்.வாசனையின் மர்மத்தைத் தெரிந்து கொண்ட இஸ்லாம் ஒன்று மட்டுமே வாசனையால் இறைவனை ஆராதிக்கிறது. அவர்கள் ரம்ஜான் அன்று ஊர்வலம் சென்றால் வீசும் வாசனையை வைத்தே இதை சொல்லி விடலாம். குளிக்காமல் தொழுகை செய்தாலும் செய்வார்களே தவிர சென்ட் இல்லாமல் தொழ மாட்டார்கள். அதாவது இசையின் வெவ்வேறு ராகங்களால் இறைவனை ஆராதிப்பது போல வெவ்வேறு வாசனைகளால் இறைவனை வழிபடலாம். இந்து மதம் வாசனையை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை..ஊதுபத்தி எல்லாம் பின்னால் வந்த சமாச்சாரங்கள்.
பிரம்மச்சாரி ஒருவன் எந்த விதமான வாசனை திரவியங்களையும் உடலில் போட்டுக் கொள்ளக்கூடாது என்கிறது மனுசாஸ்திரம்.வாசனைக்கு முக்கியத்துவம் அளிக்கும் இஸ்லாம் இசைக்கு பெரிதாக இடம் அளிப்பதில்லை. எனக்குத் தெரிந்து அவர்கள் நமாஸ் செய்யும் போது ஒரே ராகம் மட்டுமே கேட்கிறது. (சக்ரவாகம்) ஒரே ராகத்தால் இறைவனுக்கு சலிப்பு வந்தால் அவன் ஹிந்துக்களிடம் வரலாம். ஒரே வாசனையால் அவனுக்கு சலிப்பு தட்டினால் இஸ்லாம் பக்கம் போகலாம். தொட்டு உணர்தலின் த்ரில் வேண்டும் என்றால் கிறித்துவர்களிடம் போகலாம். அவனுக்கு தான் எத்தனை
OPTIONs ?

'மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே' என்று ஆண்டாள் பாடியது நினைவில் வருகிறது.

2
==

விஷ்ணுவை அலங்காரப் பிரியன் என்றும் சிவனை அபிஷேகப் பிரியன் என்றும் வர்ணிப்பார்கள். சிவனுக்கு (சிவ லிங்கத்திற்கு) எப்போதும் 'தைல தாரை' என்று தலையில் நீர் விழுந்து கொண்டே இருக்க வேண்டும். சிவன் பெரிய அலங்காரங்களை எல்லாம் கேட்பதில்லை. ஆனால் திருமால் சரியாக குளிக்கிறாரோ இல்லையோ நன்றாக டிரஸ் செய்து கொள்ள வேண்டும் அவருக்கு. திருப்பதி கோவிலைப் பார்த்தாலே தெரியவில்லையா உங்களுக்கு? சமீபத்தில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி ஆலயத்தில் கிடைத்த பொக்கிஷங்கள் இதை உறுதி செய்கின்றன.ஸ்ரீ ரங்கத்திலும் இது போல இருக்கும் என்று சொல்கிறார்கள். கண்டிப்பாக இருக்கும்.உங்கள் ஊரில் ஏதாவது பெருமாள் கோயில் இருந்தால் அங்கே ரகசிய அறை பாதாள அறை ஏதாவது இருக்கிறதா என்று ரகசியமாக விசாரித்து வைக்கவும்.

சைடு பிட்: அம்மா டிரெஸ்ஸிங் ரூமில் டிரஸ் செய்து கொண்டு இருக்கிறாள். குழந்தை எதற்கோ வீறிட்டு அழுகிறது.அப்போது அவள் FAIR -N -LOVELY யை முழுவதுமாக பூசிக் கொண்டு அப்புறம் போய் குழந்தையைத் தூக்கலாம் என்று நினைப்பாளா? அதே மாதிரி கஜேந்திரன் திருமாலை 'ஆதிமூலா' என்று அழைத்த போது திருமால் அப்போது தான் தூங்கி எழுந்திருந்தாராம்.
எப்போதும் சர்வ அலங்காரங்களுடன் இருக்கும் அவர், சங்கு சக்கரம் அங்கவஸ்திரம் இது எல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலையில் சிதறிக் கிடக்க 'கருடா
புறப்படு ' என்று வண்டி ஏறி விட்டாராம். எனவே கஜேந்திர மோட்சம் போட்டோவில் விஷ்ணுவை சர்வ அலங்காரங்களுடன் சங்கு சக்கரம் கதை பத்மம் பீதாம்பரம் சகிதமாக 'பளிச்' என்று வரைந்திருந்தால்
அது தவறு. பாதி தூக்கத்தில் எழுந்து வந்தவர் போல சித்தரித்திருந்தால் அது தான் சரியான க.மோ. போட்டோ..இதை நான் சொல்லவில்லை..புரந்தரதாசர் ஒரு கிருதியில் சொல்கிறார்:

ஸிரிகெ ஹேளத முன்னே செரகனு தரிஸதெ
கருடன மேலெறதே கமனவாதே

மனைவியிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் கிளம்பி விட்டாராம். கூப்பிட்டால் அப்படி கூப்பிட வேண்டும் பகவானை...வாயில் பஜ்ஜியை திணித்துக் கொண்டே 'கிருஷ்ணா ராமா' என்றால் அவனும் பஜ்ஜி போண்டா எல்லாம் சாப்பிட்டு விட்டு நிதானமாகத் தான் வருவான்..

3
==

சன் டி.வியில் ஒரு பெண்மணி(விஷால்??) பத்து வருடங்களுக்கும் மேலாக ராசிபலன் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரை நியூஸ் வாசிக்க ப்ரோமோஷன் கொடுத்து விட்டு சன் டி.வி அந்த நிகழ்ச்சியை நிறுத்தி விடுவது நல்லது என்று தோன்றுகிறது. ஞாயிற்றுக் கிழமைகளிலும் சலிக்காமல் அந்த அம்மணி வருகிறார். கிழவி ஆகும் வரை அவரை விடமாட்டார்கள் போலிருக்கிறது. ஒரு பத்து பதினைந்து STANDARD பலன்களை வைத்திருக்கிறார். இருபத்து நான்கின் கீழ் ஐம்பத்து இரண்டு என்ற முகவரியில் வசிக்கும் ஜோசியர் இதைக் கணிக்கவில்லை என்று தோன்றுகிறது. அவரே மனப்பாடம் செய்து வைத்துள்ள பலன்களை மாற்றி மாற்றி சொல்லிவிடுவார் போலத் தெரிகிறது.உதாரணமாக மேஷ ராசி நேயர்களே 'இன்று பொன் பொருள் சேரும், புதிய நட்புக்கள் நம்பிக்கையைத் தருவர், பெண்களிடையே இருந்து வந்த மன சஞ்சலங்கள் தீரும் ரிஷப ராசி நேயர்களே 'வாகன யோகம் மனை யோகம் கைகூடும், வெளிநாட்டுத் தொடர்புகளால் ஆதாயம் ஏற்படும்' மீன ராசி நேயர்களே 'இன்று வீண் சந்தேக உணர்வுகள் ஏற்பட்டு மறையும்' இன்று உங்கள் அதிர்ஷ்டமான ராசிகள் மேஷம், கும்பம் அனுகூலமான திசை வடக்கு ராசியான நிறம் மஞ்சள்.. பத்து வருடங்களுக்கும் மேலாக இதைத் தவிர வேறு சொன்னதாகத் தெரியவில்லை..சன் டி.வி நேயர்களும் இதை ஒரு சுகமான சுமையாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். இன்று எனக்கு பொன் பொருள்
சேரவில்லையே என்று சன் டி.வி நிலையத்தை யாரும் முற்றுகை இட்டதாகத் தெரியவில்லை..டைலி காலண்டருக்கு கீழே எறும்பு எழுத்தில் மகரம்-மகிழ்ச்சி கும்பம்-அலைச்சல்
என்று பொதுவாக சொல்லிவிடும் படி அவ்வளவு எளிமை இல்லை வாழ்க்கை! Life is more than Astrology!


4
==

பெங்களூருவில் பஸ்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். வார இறுதியில் சும்மா இருக்கும் ஐ.டி கம்பெனிகளின் பஸ்களை அப்போது PUBLIC TRANSPORT க்காக பயன்படுத்துவார்கள்.முன் பக்கம் ஒரே ஒரு கதவு இருக்கும். டிரைவரே (பொறுமையாக) டிக்கெட் கொடுப்பார். நீங்கள் பெங்களூர் வந்தால் அப்படிப்பட்ட பஸ்களில் தெரியாமல் கூட எறிவிடாதீர்கள்..கண்டக்டர் இருக்கின்ற இரண்டு பக்கமும் திறந்த பஸ்ஸில் ஏறுங்கள்..இங்கே பெண் கண்டக்டர்கள் நிறைய இருக்கிறார்கள். ஆண்கள் அடைத்துக் கொண்டு நிற்கும் பகுதிகளிலும் கடமை உணர்ச்சியோடு நுழைந்து டிக்கெட் டிக்கெட் என்று கூவுகிறார்கள். பெரும்பாலான பஸ்சுகளில் பெண்கள் சீட் ஆண்கள் சீட் என்ற பேதம் மறைந்து வருகிறது. காலேஜ் பெண்கள் கடைசி சீட்
ஆண்களுக்கு மட்டுமே உரியதா ? நாங்களும் உட்காருவோம் என்று சில சமயம் கடைசி சீட்டில் பயணிக்கிறார்கள். அப்போது ஒரு ஆண் வந்து 'இது எங்க சீட்' என்று சொல்ல முடியாது.
ஆனால் ஒரு ஆண் முன் சீட்டில் உட்கார்ந்திருந்தால் ஒரு பெண் தன் ஹான்ட் - பேக்கை தூக்க முடியாத லக்கேஜாக கற்பித்துக் கொண்டு 'இது எங்க சீட்' என்று தைரியமாக சொல்லலாம்.ஆண்களுக்கு உரிய பல உரிமைகளையும் எடுத்துக் கொண்ட பெண்கள் 'தான் பெண்' என்ற சலுகையையும் எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.ஆண்கள் மட்டுமே செய்யக் கூடிய
வேலை உலகத்தில் எது என்றால் முகச்சவரம் செய்து கொள்வது என்று சொல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று தோன்றுகிறது.


5
==
இப்போது ஒரு வாழ்க்கை வரைபடத்தைப் பார்க்கலாம் :)


6
==
ஓர் ஓஷோ ஜோக்.


ஒரு ஆள் எதையோ கொறித்துக் கொண்டு டி.வி பார்த்துக் கொண்டிருக்கும் போது அவன் மனைவி திடீரென்று அவன் மண்டையில் கரண்டியால் அடித்தாள்..

"ஏன் என்னை அடித்தாய்?"

"உங்க பாக்கெட் டைரில ஜெஸ்ஸிகா ன்னு பேர் எழுதியிருந்தது"

"ஓ அதுவா, அது நான் ரேஸில் பணம் கட்டிய குதிரையின் பெயர்"

"ஓகே சாரி"

இன்னொரு நாள் அந்த ஆள் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது அவன் மனைவி இப்போது பூரிக்கட்டையால் அவன் மண்டையில் ஓங்கி அடித்தாள்

"ஹே, இப்போ எதுக்கு அடித்தாய்?"

"உங்க குதிரை இப்போ டெலிஃபோன் செய்தது"


முத்ரா


Thursday, July 14, 2011

அணு அண்டம் அறிவியல் -39

அணு அண்டம் அறிவியல் -39 உங்களை வரவேற்கிறது

காலப்பயணம் பற்றிய தரமான சயின்ஸ் Fiction கதைகள் தமிழில் இல்லையே என்ற வருத்தத்தை சமீபத்தில் தீர்த்து வைத்தது உமா அவர்கள் அறிமுகப்படுத்திய ஒரு நாவல் 'கேணிவனம்'.திரு.ஹரிஷ் நாராயணன் அவர்களால் எழுதப்பட்ட இந்த நாவலின் கதையை இப்போது பார்க்கலாம். ஹரிஷ் சினிமாவில் இருக்கிறவர் போலத் தெரிகிறது. இந்த நாவலை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.தாஸ் (ஹீரோ) மற்றும் குணா இருவரும் ஒரு ரயில் பயணத்தின் போது நண்பர்கள் ஆகிறார்கள். ரயில் ஏதோ கோளாறு காரணமாக ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியின் நடுவே நின்று விடுகிறது. வண்டி கிளம்ப இன்னும் நான்கு மணிநேரம் ஆகும் என்று யாரோ (தவறாக) தகவல் சொல்வதால் இருவரும் காட்டுக்குள் கொஞ்சம் போய் வரலாம் என்று உள்ளே நடக்கிறார்கள்.
ஆனால் சிறிது நேரத்திலேயே ரயில் கிளம்பி விட இருவரும் நடுக்காட்டில் அனாதரவாக நிற்கிறார்கள். வானம் இருட்டி கடும் மழை பிடிக்கிறது. இருவரும் இரவைக் கழிக்க ஒரு பாழடைந்த காட்டுக் கோயிலுக்குள் ஒதுங்குகிறார்கள்.

தாஸ் வரலாற்றில் மிகுந்த ஆர்வம் உள்ளவன் என்பதால் அந்தக் கோயிலை ஆராய முற்படுகிறான். குணா ரயிலை தவற விட்டதால் தன்னைக் காட்டுக்குள் அழைத்த தாஸை திட்டுகிறான். கோயிலில் எழுதியிருக்கும் ஒரு செய்யுளை வைத்து அதன் பெயர் 'கேணிவன நாதர்' கோயில் என்று தாஸ் தெரிந்து கொள்கிறான். கருவறையில் ஒரு பாழடைந்த சிற்பம் இருக்கிறது. கூரையில் ஏதோ ஒரு ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. அதை தாஸ் தன் மொபைலில் படம் பிடித்துக் கொள்கிறான். கருவறைப் பீடம் ஒரு வட்ட வடிவக் கல்லாக இருக்கிறது. அதன் மீது குணா எதேச்சையாக உட்கார அது நகர்ந்து வழிவிடுகிறது. உள்ளே ஒரு குழி இருப்பது தெரிகிறது. இருவரும் முயன்று கல்லை நகர்த்த உள்ளே ஒரு பெரிய கிணறு இருப்பது தெரிகிறது. ஆர்வத்தில் தாஸ் உள்ளே இறங்குகிறான் . குணா தனித்து விடப்படுகிறான். இரவில் ஒரு புலி மனித வாசனையை மோப்பம் பிடித்து கோயிலுக்குள் வருகிறது. அதனிடம் இருந்து தப்பிக்க குணாவும் கிணற்றில் குதிக்கிறான்.

கிணற்றுக்குள் விழும் தாஸ் விழித்துப் பார்க்கும் போது தான் ரயிலில் பயணிப்பதை உணர்கிறான். தேதியை கவனிக்கும் போது தான் ஒரு நாள் முன்னே வந்து சேர்ந்திருப்பதை உணர்கிறான்,அந்த கிணறு தன்னை கடந்த காலத்துக்கு அனுப்பி இருப்பதாக தெரிந்து கொள்கிறான். கிணற்றுக்குள் விழும் குணா அதன் மூடியை வேறு திசையில் திருப்புவதால் அவன் எதிர்காலத்தில்
பயணித்து தான் சேர வேண்டிய இடத்தை அடைந்து விடுகிறான். கடந்த காலத்தில் வந்து சேரும் தாஸ் குணாவை சந்திப்பதைத் தவிர்த்து விட்டு அடுத்த நிறுத்தத்திலேயே ரயிலில் இருந்து இறங்கி விடுகிறான்.

தாஸின் அச்சிஸ்டன்டுகள் லிஷா மற்றும் சந்தோஷ் இருவரும் காதலர்கள். தான் ஒரு கிணற்றில் விழுந்து டைம் ட்ராவல் செய்ததாக அவர்களிடம் தாஸ் சொல்கிறான். லிஷா அதைப்பற்றிய தகவல்களைத் திரட்டி அது கிணறு அல்ல ஒரு WORM HOLE என்று சொல்கிறாள். அந்த கிணறின் மூடியை சரியான பாகைகளுக்கு மாற்றி அமைப்பதன் மூலம் நாம் நினைக்கும் காலத்துக்கு சென்று விட முடியும் என்று தாஸ் அறிந்து கொள்கிறான். வரலாற்று ப்ரொபசர் ஒருவரிடம் தான்
படம் எடுத்த அந்த ஓவியத்தைக் கொடுத்து அதை ஆராயும் படி சொல்கிறான். அதை ஆராய்ந்து அவர் அந்த ஓவியத்தின் மையத்தில் பிரம்மாவும், பக்கத்தில் ஒரு அரசனும், சித்தர் ஒருவரும் அதில் இருப்பதாக சொல்கிறார். தாஸ் மேலும் தகவல்களை அறிந்து கொள்ள கிராமத்தில் வாழும் தன் தாத்தா வீட்டுக்கு செல்கிறான். அவர் பெயரும் தாஸ் தான். கோயிலில் கிடைத்த செய்யுளையும் ஓவியத்தையும் வைத்துக் கொண்டு அந்த சித்தர் பெயர் பிரம்ம சித்தர் என்றும் அவர் சென்னையில் உள்ள பரசுராம லிங்கேஸ்வரர் கோயிலில் சமாதி அடைந்திருக்கலாம் என்றும் இருவரும் கணிக்கின்றனர். அந்த கோயிலை தேடிச் சென்று ஒரு தகவலை தாஸ் தெரிந்து கொள்கிறான்: அந்தக் கோயிலின் கோபுரத்தில் திருடன் ஒருவன் ஒளிந்து கொள்ளும் போது அங்கே யோகா நிலையில் இருக்கும் சித்தர் ஒருவரின் உடலைப் பார்க்கிறான். அந்த பிரதேசத்தின் அரசனாக இருக்கும் ஒருவனது கனவில் வந்த அந்த சித்தர் தன் உடலை வேறு ஒரு இடத்தில் வைத்து விடும் படி ஆணையிடுகிறார். ஆனால் அந்த இடம் எது என்று தாஸுக்கு தகவல் கிடைக்கவில்லை.

குணா அந்த கிணற்றின் மர்மத்தைப் பற்றி தாஸிடம் இருந்து தெரிந்து கொள்கிறான். தான் புகழ் அடைய வேண்டும் என்ற ஆசையில் ஒரு டி.வி. சானலுக்கு தகவல் சொல்லி அவர்களுடன் கேணிவனம் செல்ல திட்டமிடுகிறான்.

தாஸின் ப்ரொபசர் அந்த சித்தரின் உடல் ஏன் கேணிவனக் கோவிலிலேயே இருக்கக்கூடாது என்று சந்தேகிக்கிறார். எனவே தாஸ் , லிஷா, சந்தோஷ், ப்ரொபசர், மேலும் அவர்கள் நண்பரான இன்ஸ்பெக்டர் ஒருவர், இன்னொரு புதிய ஆள் சக்ரவர்த்தியும் அவர்களுடன் சேர்ந்து கொள்கிறார். இவர்கள் எல்லாரும் அதே ரயிலில் அதே காட்டுக்கு பயணிக்கிறார்கள். அன்று இரவு வரை கோயிலை கண்டுபிடிக்க முடியாததால் காட்டிலேயே டென்ட் அமைத்துத் தூங்குகிறார்கள். காலையில் எழுந்து பார்த்ததும் தாஸுக்கு ஒருவித விஷக்காய்ச்சல் தொற்றியிருப்பது தெரியவருகிறது. அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் கோவிலைத் தேடுவது சரியல்ல என்று எல்லாரும் ஒருமனதாக முடிவெடுத்து திரும்பி வருகின்றனர். திரும்பி வந்ததும் சிகிச்சை எடுத்துக் கொண்டு குணமாகும் தாஸ், சந்தோஷிடம் தான் காட்டில் எடுத்த வீடியோவைக் காட்டுகிறார். அங்கே அசாதாரணமாக சந்தன மரங்கள் இருக்கின்றன. நாம் அங்கு போனபோது சந்தன மரங்கள் இருக்கவில்லையே என்று அவன் கேட்க, தாஸ் அந்த வீடியோவை தான் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் எடுத்ததாக சொல்கிறான்.அவர்கள் குழம்பவே தாஸ் விளக்குகிறான்.

அன்று காலையில் எல்லாரும் எழுந்து கொண்டு கோயிலைத் தேடிச் செல்கிறார்கள். கோயிலை ஒருவழியாக அடைகிறார்கள் .இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியைத் திருடிக் கொள்ளும் சக்ரவர்த்தி, தாஸிடம் அந்தக் கோயிலின் ரகசியங்களை தன்னிடம் கூறுமாறு மிரட்டுகிறான்.
தாஸ் தயங்கவே, அவன் சந்தோஷையும் இன்ஸ்பெக்டரையும் சுட்டு விடுகிறான். லிஷா மூர்சையாகிறாள். ப்ரொபசர் கிணற்றில் தவறி விழுந்து விடுகிறார்.ஓவியத்தில் இருக்கும் ஒருவிதமான அமைப்பின் படி கிணற்றின் மூடியை வைக்கும் படி அவன் தாஸுக்கு சொல்கிறான். தாஸ் அப்படியே செய்து அதில் குதித்து விடுகிறான். தாஸ் பிரம்ம சித்தர் வாழ்ந்த பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு சென்று அவரை சந்திக்கிறார். அவர் அவனிடம் தான் வேண்டுமென்றே தான் அவனை தன் காலத்துக்கு வரவழைத்ததாக சொல்கிறார். ஒரு ராஜா ஒரு பெரிய போர் புரிந்து முடித்ததும் அதில் இறந்தவர்களை எண்ணி வருந்தியதாகவும் அந்த போர் நடைபெறாமல் தடுக்க அவர் காலத்தில் முந்திப் பயணிக்க வைக்கும் காலக் குழியை உருவாக்கியதாகவும் சொல்கிறார். அந்த ராஜாவின் மறுபிறவி தான் தாஸ் என்றும் அவன் தனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகிறார். அதற்கு பதிலாக தான் இழந்தவர்களைக் காப்பாற்றும் படி தாஸ் வேண்டுகிறான். சித்தர் இருபத்தி-ஒன்றாம் நூற்றாண்டில் இருக்கும் தன் உடலை காலக்குழியில் வீசி அதைத் தன்னிடம் கொண்டுவந்து சேர்க்குமாறு சொல்கிறார். காலக் குழியில் அமைக்க வேண்டிய பாகைகளை அவன் உள்ளங்கால்களில் பச்சை குத்துகிறார். தாஸ் எதிர்காலத்துக்கு திரும்பி வந்து சித்தர் உடலை கோயில் கூரையில் இருந்து பெயர்த்து எடுத்து குழியில் வீசுகிறான். (சித்தரை சந்தித்தபோது தாஸ் அவரை தன் வீடியோ கேமிராவில் படம் பிடித்துக் கொள்கிறான்.) பிறகு சில மணி நேரங்கள் முன்பாக கடந்த காலத்தில் பயணித்து எதுவுமே நடக்காதது போல டெண்டுக்கு சென்று படுத்துக் கொள்கிறான். இந்த காலப்பயணத்திற்கு அவன் உடல் ஒத்துக் கொள்ளாமல் ஜுரம் வருகிறது. இதை கவனிக்கும் மற்றவர்கள் முன்பே பார்த்தபடி கோயிலை அடையும் எண்ணத்தைக் கைவிட்டு தாஸை சுமந்து கொண்டு காட்டை விட்டு நீங்குகிறார்கள்.இப்படியாக தாஸ் இறந்தவர்களைக் காப்பாற்றுகிறான்.

சித்தரைப் படம் எடுத்த போது அவர் உடம்பில் இருந்த ஒரு செய்யுளில் இருந்து அதே போல இன்னும்
ஏழு காலக் குழிகள் இருப்பதை அறிந்து கொள்கிறான். கேணிவனம் பற்றிய ரகசியத்தை யாரிடமும் பகிரங்கமாக சொல்லப்போவதில்லை என்றும் அதை ஒரு புத்தகமாக எழுதுவது என்றும் முடிவெடுக்கிறான். இதற்கிடையில் அவன் தாத்தாவுக்கு மிகவும் உடம்பு முடியவில்லை என்று தகவல் வருகிறது. தாஸ் விரைந்து சென்று அவன் தாத்தாவைப் பார்க்கிறான். அவர் சாகும் தருவாயில் ஒரு உண்மையை அவனிடம் சொல்கிறார். தன் மகனையும் மருமகளையும் விபத்தில் இழந்து விடும் அவர் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க விரும்புகிறார். யாரோ ஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கு பதில் ஏன் தன்னையே (?) தத்து எடுக்கக் கூடாது என்று எண்ணி இன்னொரு காலக் கிணற்றின் உதவியுடன் அறுபது வருடம் முந்திப் பயணித்து தன்னை குழந்தையாக எடுத்து தானே வளர்க்கிறார். அந்தக் குழந்தை தான் தாஸ். அதாவது தாஸும் தாத்தாவும் ஒன்று தான்.தாத்தாவின் காலிலும் சித்தர் குத்திய பச்சை இருக்கிறது. தாத்தா தாஸிடம் இருந்து கண்ணீருடன் விடைபெறுகிறார். (இறந்து போகிறார்) தாஸ் அவரது பீரோவை திறந்து பார்க்கும் போது அதில் 'கேணிவனம்' என்ற புத்தகம் முழுவதும் முடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.


WELL ...இந்தக் கதை முழுவதும் Worm hole (புழுத்துளை) எனப்படும் ஒருவித சுரங்கத்தை வைத்து எழுதப்பட்டுள்ளது. இது எப்படி என்றால் உங்கள் வீதிக்கு அடுத்த வீதியில் உங்கள் பள்ளி இருப்பதாக வைத்துக் கொள்ளலாம். பள்ளிக்கு செல்ல நீங்கள் உங்கள் வீட்டில் இருந்து புறப்பட்டு உங்கள் வீதியின் முனை வரை சென்று திரும்பி பின்னர் அடுத்த வீதியில் நுழைந்து மீண்டும் நடந்து உங்கள் பள்ளிக்கு செல்லலாம், இல்லை உங்கள் எதிர்வீட்டுக்குள் நுழைந்து அதன் பின் பக்க கதவு வழியே வெளி வந்து மிகக் குறைந்த நேரத்தில் உங்கள் பள்ளியை அடைந்து விடலாம். அதாவது அந்த எதிர்வீடு வெளியில் ஒரு சுரங்கம் அமைக்கிறது . அதே போல இந்த வார்ம் ஹோல்ஸ் என்பவை காலம் மற்றும் வெளி இரண்டுக்கும் சுரங்கம் அமைக்கின்றன. இவை ஒருவிதமான short cuts ! அதாவது நமக்கு நான்கு ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் ஆல்பா செஞ்சுரி என்ற விண்மீன் உண்மையில் நமக்கு மிக மிக அருகில் கூப்பிடு தூரத்தில் இருக்கலாம் என்கிறார்கள். என்ன நாம் இரண்டுக்கும் இடையே ஒரு சுரங்கத்தை கண்டுபிடிக்க வேண்டும்.அவ்வளவு தான். இதில் ஒரு விசித்திரம் என்ன என்றால் இந்த சுரங்கத்தின் ஒரு முனை ஒரு காலத்திலும் அதன் இன்னொரு முனை இன்னொரு காலத்திலும் (சில சமயம் கடந்த காலத்தில்) இருக்கிறது. (புழு ஒன்று ஆப்பிளைத் துளைத்துக் கொண்டு போவதைப் பார்த்த போது ஒரு வி
ஞ்ஞானிக்கு இந்த ஐடியா தோன்றியதாம். அதனால் புழுத்துளை என்று பெயர் வைத்தாராம்)


நீங்களும் ஒரு ஒளிக்கற்றையும் பூமியில் இருந்து புறப்படுவதாகக் கொள்வோம். யார் முதலில் ஆல்பாவை அடைவது என்ற போட்டி. இது ஒருவிதத்தில் பார்த்தால் விநாயகருக்கும் முருகனுக்கும் இடையே நடந்த போட்டி போன்றது. முருகன் சின்சியராக மயில் ஏறி மிக நீண்ட ரூட்டில் உலகை சுற்றி வர கிளம்பினார். ஆனால் விநாயகர் ஷார்ட் கட்டை தேர்ந்தெடுத்தார். அதே போல நீங்கள் ஒளி தன் அபார வேகத்தில் பூமியில் இருந்து கிளம்பிச் சென்றதும் ஆற அமர ஒரு காபி குடித்து விட்டு ஆமை வேகத்தில் நடந்து சென்று புழுத்துளைக்குள் விழுந்து விடவும். ஒளி விண்மீனை சென்று அடைய நான்கு வருடங்கள் ஆகும். ஆனால் துளைக்குள் விழும் நீங்கள் ஒரு சில நிமிடங்களில் அங்கே இருப்பீர்கள். சார்பியலின் படி ஒளியை ரன்னிங் ரேஸில் ஜெயிக்கும் எந்த ஒரு பொருளும் கடந்த காலத்தில் நுழையும் என்று பார்த்தோம். எனவே நீங்கள் கடந்த காலத்தில் நுழைவீர்கள்.

இந்த கான்செப்டை வைத்து எடுக்கப்பட்ட படம் ஒன்று உண்டு. அதன் பெயர் CONTACT ..அந்தப் படத்தின் ஹீரோயின் யெல்லி ஒரு SETI scientist .. அதாவது பிரபஞ்சத்தில் வேறு எங்காவது மனிதனைப் போன்ற உயிர்கள் வாழ்கிறார்களா என்று தேடுவது. ஒரு நாள் அவள் தன் இயந்திரத்தில் எங்கிருந்தோ ரேடியோ சிக்னல்கள் வந்து பதிவாவதைப் பார்க்கிறாள். அது 26 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள வெகா என்ற நட்சத்திர மண்டலத்தில் இருந்து வருவதாக அறியப்படுகிறது. அதை Decode செய்து பார்க்கும் போது அதில் ஹிட்லர் நாஜிக்கள் கூட்டத்தில் பேசும் வீடியோ ஒன்று தெரிகிறது.என்னடா அங்கேயும் ஒரு ஹிட்லரா? என்று எல்லாரும் ஆச்சரியப்படும் போது
யெல்லி, அவர்கள் நம் பூமியில் இருந்து எடுத்த வீடியோவை நமக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார்கள் என்கிறாள்.மேலும் அவர்களிடம் இருந்து சிக்னல்கள் வருகின்றன. அவை என்ன என்றால் ஒரு விண்வெளி ஓடத்தை எப்படி செய்து அவர்களை அடைவது என்ற வழிமுறைகள். அந்த வழிமுறைகள் பக்கம் பக்கமாக வருகின்றன. அதை வைத்து இவர்கள் ஒரு விண்வெளி ஓடத்தை செய்யலாம் என்று முடிவெடுக்கிறார்கள். சில பேர் அதை செய்யக்கூடாது; செய்தால் அது அணுகுண்டாக மாறி உலகத்தையே அழித்து விடும் என்கிறார்கள்.ஆனாலும் அந்த இயந்திரம் செய்யப்படுகிறது. இயந்திரத்தில் யெல்லி அமர்கிறாள். இயந்திரம் ஒரு வார்ம் ஹோலை உருவாக்கி அவளை வெகா மக்களிடம்
அழைத்துச் செல்கிறது. அவர்களை சந்திக்கும்
யெல்லி, அவர்களிடம் இருந்து சில தகவல்களை சேகரித்துக் கொண்டு மீண்டும் பூமிக்கு அதே துளையில் பயணித்து திரும்புகிறாள். ஆனால் அவள் எந்த நேரத்தில் புறப்பட்டாளோ அதே நேரத்தில் திரும்புகிறாள். இதனால் மற்றவர்கள் அந்த இயந்திரம் வேலை செய்யவில்லை என்றும் யெல்லி எங்கேயும் போகவில்லை என்றும் கூறி அவளை நம்ப மறுக்கிறார்கள்.யெல்லி எவ்வளவோ சொல்லியும் அவர்கள் நம்புவதில்லை.கடைசியில் அவள் எடுத்துச் சென்ற ஒரு கேமரா 18 மணி நேரத்தை தன் திரையில் ரெகார்ட் செய்திருந்தது.இதை வைத்துக் கொண்டு அவளை எல்லாரும் நம்புகிறார்கள்; பாராட்டுகிறார்கள்.

வார்ம் ஹோல் என்பது ஒரு கற்பனை தான். அது இருக்கிறதா என்று யாருக்கும் தெரியாது. அதை ஒரு சித்தர் உருவாக்க முடியுமா என்று தெரியவில்லை. சித்தரை சந்தித்து திரும்பி வருவதுடன் ஆசிரியர் அந்த நாவலை முடித்திருக்கலாம். தாத்தா தன்னையே தத்தெடுத்து வளர்த்தார் என்ற அதீத பிக்சனை உள்ளே நுழைத்திருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.(
இருந்தாலும் நாவல் அபாரமாக இருக்கிறது. கண்டிப்பாக எல்லாரும் படித்துப் பார்க்கவும்.)நாம் கடந்த காலத்துக்கு செல்லும் போது நம்மை நாமே பார்க்க முடியுமா? நம்முடம் நாமே கைகுலுக்கி ஹலோ சொல்ல முடியுமா?நம்மை நாமே தாலாட்டி சீராட்டி வளர்க்க முடியுமா?கடந்த காலத்துக்கு திரும்பி சென்று இறந்தவர்களைக் காப்பாற்ற முடியுமா? இப்படிப் பட்ட அபத்தங்கள் நடக்காமல் இயற்பியலின் மூன்று அம்புகள் தடுக்கின்றன. இந்த அம்புகளைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில்..

சமுத்ரா