
ஒரு நாள் முல்லா நசுருதீன் தன் கார் டிரைவரை அவசரமாக அழைத்தார்....
"இத பாருப்பா அந்த மலைப்பாதைல ஏறி ஃபுல் ஸ்பீடுல வண்டியைக் கீழே விடு....ச்சே வாழ்கையே வெறுத்துருச்சு...நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்...."
ஓஷோ: மனிதன் சுயநலம் பிடித்தவன்...பிறர் இருப்பதையே கவனிப்பதில்லை.....
ப்ரொபசர் பான்டா ஒரு நாள் சலூனுக்கு சென்றார்.....அங்கே ஏற்கனவே ஒரு நாயும் ஒரு பெரிய பூனையும் கட்டிங்குக்காக வெயிட் செய்து கொண்டிருந்தன.....
அந்த நாய் திடீரென்று "என்னப்பா இவ்வளவு நேரம்" என்றது...
பான்டா சலூன்காரனைப் பார்த்து "பாருப்பா உலக அதிசயம் நாய் பேசுது, நாய் பேசுது" என்றார்..
"உளறாதீங்க ப்ரொபசர்....நீங்க ஸ்டடியா தான் இருக்கீங்களா? நாய் எங்காவுது பேசுமா" என்றான்
"இல்லப்பா நான் கேட்டேனே" ....
"அப்ப அங்க உட்காந்திருக்கே அந்த குண்டுப் பூனை, கழுத அது தான் மிமிக்ரி பண்ணித் தொலச்சிருக்கும் "
ஓஷோ: மனிதன் பிரபஞ்சத்தைப் பார்த்து அதிசயிக்கும் விழிகளை இழந்து விட்டான்....Man has lost the capacity to wonder ...
சமுத்ரா
No comments:
Post a Comment