இந்த வலையில் தேடவும்

Monday, December 31, 2012

கலைடாஸ்கோப்- 81

லைடாஸ்கோப்- 81 உங்களை வரவேற்கிறது ..


“Everybody wants to save the Earth; nobody wants to help Mom do the dishes.”― P.J. O'Rourke


21-12-12 அன்று ஒன்றுமே நடக்கவில்லை (not even a jerk!) என்று கொஞ்சம் ஏமாற்றமடைந்த ஜீவன்களில் என்னையும் சேர்த்துக் கொள்ளவும்.... பூமி தனக்கு காலண்டர்களைப் பற்றிக் கவலை இல்லை, நான் என் பாட்டுக்கு இருப்பேன் என்று ( ஜோசியர்கள் கணிப்பை பொய்யாக்கி நூறு வயது வரை வாழும் பாட்டியம்மா போல) மறுபடியும் நிரூபித்து விட்டது...வானத்தில் திடீரென்று சிவப்பாக ஒரு புள்ளி தோன்றி படிப்படியாக வளரும்; '2 hours left for us' என்று செய்திச் சானல்கள் அலறும் ...அல்லது  வானத்தில் இருந்து வட்ட வடிவ வெளிச்ச வாகனங்களில் பச்சை மனிதர்கள் பலர் தோன்றி நம்மை எல்லாம் லேசர் முனையில் அவர்கள் கிரகங்களுக்குக் கடத்தி செல்வார்கள் என்றெல்லாம் மனதின் ஓரத்தில் ஒரு (அல்ப )எதிர்பார்ப்பு இருந்தது... கடைசியில் 21-12-2012 சுஜாதா சொல்வது போல 'நாளை மற்றொரு நாளே'..பால்கார ஆயா வருவதில் இருந்து பத்து மணி சீரியல் வரை எதிலும் மாற்றம் இல்லை... 22 ஆம் தேதி மறுபடியும் ஆபீஸ் செல்ல படு பேஜாராக இருந்தது...அதே ஆபீஸ்... அதே ஜாவா ஸ்கிரிப்ட்,[Assertion failed at line 727; OSPF neighborship not established...!] அதே மனிதர்கள், அதே முகம், (என்னை சொன்னேன்!) அதே அபத்தங்கள்..உண்டதே உண்டு நித்தம் உடுத்ததே உடுத்து....So boring ....

மாயன் காலண்டருக்கு எதிர்பார்த்ததை விட்டு இனிமேல் 2013 முருகன் படம் போட்ட ராணிமுத்து காலண்டரை எதிர்பார்ப்போம் என்கிறார்
ஆர்.ஜே.பாலாஜியின் BIG FM  பேச்சை கேட்டிருக்கிறீர்களா ? Express டிரெயினை முழுங்கியவர் போல பேசுகிறார். சாம்பிளுக்கு ஒன்று:

 Fundamentally sorry!  :):)


.. 92.7 BIG FM's BEST OF TAKE IT EASY WITH BALAJI - HEMALATHA PREMALATHA VA VA VA !!! by RJ BALAJI 92.7 BIG FM 


பாலாஜியின் Cross talk 100% உண்மையா இல்லை சில ஜோடிக்கப்பட்டவையா என்று தெரியவில்லை...ஏனென்றால் நமக்கு வேலை மெனக்கெட்டு கால் செய்து மூன்று நிமிடங்களுக்கும் மேல் கலாய்க்க இன்று ஆர்.ஜே க்களை விட்டு வேறு யாருக்கும் நேரம் இல்லை... எனவே ஒரு நிமிடம் ஆனாலே நம்முடன் பேசுவது ஒரு ஆர்.ஜே தான் என்று கணித்து விடலாம். ... எனக்கு பாலாஜியின் இரண்டு மூன்று cross-டாக் கேட்டவுடனேயே போர் அடித்துவிட்டது.(இது எனக்கு மட்டுமே உள்ள வியாதியோ?!)

நமக்கு வரும் ஒவ்வொரு அழைப்பையும் நாம் ஏதோ ஒருவித பயத்துடனேயே attend செய்கிறோம் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? அது மிக நெருக்கமான நண்பரின் அழைப்பாகட்டும் காதலியின் அழைப்பாகட்டும் ஒவ்வொரு அழைப்பும் ஒரு இனம் புரியாத பயத்தையே தாங்கி வருகிறது.


பிடித்த எஸ்.எம்.எஸ்:

Words of wisdom:

Seeing a cockroach on your bed is nothing..! ......The real problem starts when it disappears...
ன்றைய சினிமா , சண்டைக் காட்சிகளில் எவ்வளவு முன்னேறி இருக்கிறது என்று நினைக்கும் போது  பிரமிப்பாக இருக்கிறது. பழைய எம்.ஜி.ஆர். படம் ஒன்றை வாங்கி அதில் வரும் சண்டைக் காட்சியை பாருங்கள்....நல்ல நகைச்சுவையாக இருக்கும்...ஈஸ்ட்மென் கலர்....அதில் பெரும்பாலும் சிவப்புக்கலர் தான் பிரதானமாக இருக்கும்...தொட்டாலே அறுந்துவிடும் கயிறு ஒன்றில் ஈரோயின் பிணைக்கப்பட்டிருப்பார் ..ஹீரோ மஞ்சள் சட்டை சிவப்பு பேன்ட் + பெல்ட் சகிதம் எங்கிருந்தோ வந்து தடாலடி என்ட்ரி கொடுப்பார்..தேவையே இல்லாமல் தகர டிரம்கள் உருளும்... (அது என்ன மண்ணெண்ணெய் ட்ரம்மா ?!) ஈரோயின் வாயில் துணியுடன் பயந்தபடியே போஸ் கொடுப்பார்...இரண்டு பேர் இரண்டு பக்கங்களில் இருந்து ஹீரோவைத் தாக்க வர , அவர் குனிந்து கொள்ள இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மயங்கி (?) விடுவார்கள்..மாடியில் இருந்து ஹீரோ ராட்சச விளக்கின் உதவியுடன் கீழே குதிப்பார்..அல்லது தயாராக ஆலம்  விழுது போல ஒரு கயிறு அவருக்காய் காத்திருக்கும். 

இதையெல்லாம் விட சகிக்கவே முடியாத காமெடி என்ன என்றால் காமெடியன்கள் , பெண்கள் முட்டாள் வில்லன்களுடன் சண்டை போடுவது, கிச்சு கிச்சு மூட்டுவது.. கடைசியில் டிராயர் அணிந்த போலீஸ் காரர்கள் கடமை தவறாமல் ஸ்பாட்டுக்கு வந்து சேருவார்கள்... சரி இன்றைய சினிமா சண்டைக் காட்சிகள் தொழில்நுட்பத்தில் ஓரளவு improve ஆகி இருக்கிறதே தவிர இந்த அபத்தங்கள் தொடர்கின்றன...எந்திரன் , துப்பாக்கி எதுவுமே இதற்கு விதிவிலக்கு அல்ல...நேற்று சன் .டி .வி யில் ஒரு திரைப்படம்...ஹீரோ வில்லனைப் பார்த்து சீரியசான முகத்துடன் 'நீ அடிச்சாதான் ரத்தம் வருமா? நான் அடிச்சா வராதா? , வரும்...நீ உடைச்சா தான் கை உடையுமா என்று டையலாக் பேசுகிறார்....Childish !! சரி என்னதான் ஆம்னி வேனை பெட்ரோல் டேங்கில் சுட்டாலும் அது வானம் வரை பறந்து வந்தா கீழே விழும்?? திருந்துக்கப்பா...இயல்பான சண்டைக் காட்சிகளை தமிழ் சினிமா எடுக்கவே எடுக்காதா , இல்லை இயல்பான சண்டைக் காட்சி என்பதே ஒரு oxymoron ஆ?

Why does a woman work ten years to change a man, then complain he's not the man she married?”

― Barbra Streisand 

எல்லா ஆண்களும் இப்படித் தானோ?!


 
No need to fear a growling bear
Or a dark foreboding stranger.
But all you women on this earth
Beware of one grave danger!

பெண்களே பெண்களே 

பயமோ கரடியின் பெருங்குரல் கேட்டு?
அரையிருட்டில் வரும் அன்னியர் கண்டு?
இல்லை இல்லை இவ்வுலகின் பெண்களே-நீர் 
அனைவரும் அஞ்ச ஓர் அபாயம் உண்டு 

There are many of them in the world,
Different, yet they're all the same.
How often has one said "I love you",
Then next week forgets your name?!

ஆண்கள் உலகில் ஆயிரம் உண்டு 
அனால் அவர்கள் அனைவரும் ஒன்று 
ஒருநாள்  நீதான் என் உயிரெலாம் என்பார் 
பிறிதொருநாள் உம்  பெயரையே மறப்பார் 
Where do they get the lines they use?
"Do you come here often?" "Beautiful eyes!"
It may sound good to hear them talk
But we know they're full of lies.

எங்கே பிடிப்பார் அவர் எழில்மிகு சொற்களை 
என்னவொரு கண்கள் ஆகா இளந்தளிர் கைகள் 
கேட்க என்னவோ காதுக்கு இன்பம் 
ஆனால் பெண்களே அத்தனையும் பொய்கள் !

 Make sure to watch for subtle tricks
Like "Loosen up, have a drink."
You'll know what his true motives are,
If you have the time to think.

தந்திர நரிகள்! தேன்போலும் சொற்கள்!
தளர்த்துவீர் உடையை , அருந்துவீர் பானம்!
அவனது நோக்கம்நீர் அறிந்து கொள்வீரே 
கொஞ்சம்  சிந்தித்தால் கிடைத்திடும் ஞானம்! 

You'd think they'd change as they mature,
Since wisdom comes with age.
But truthfully they never do
Outgrow that youthful stage.

காலம் அவர்களை மாற்றுவதில்லை 
வயதும் ஞானம் வழங்குவதில்லை 
வாலிபன் என்ன வயோதிகன் என்ன ?
ஆண்கள் என்றும் மாறுவதில்லை

 The world would be a better place.
Without men. But still I doubt
That I would be much happier because
"Can't live with them....or without.

ஆண்கள் என்பதே இல்லா உலகம் 
அருமையாய்த் தான் அழகாய்  இருக்கும் 
என்ன செய்வது ஆனால் ஆண்கள் 
இருந்தாலும் கஷ்டம் இல்லையென்றாலும் !

ன்று மார்கழி-16ஆம் நாள்...மார்கழியில் திருப்பாவை இல்லாமல் எப்படி?
எம்.எல்.வி.பாடுவதைக் கேட்கவும்...ராகம் மோகனம் .


Day 16: Nayaganai Ninra by R Kashyapmahesh 


நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய் 

-சாமியிடம் வரம் வாங்குவதற்கு முன் பூசாரியிடம் வாங்குகிறாள் ஆண்டாள். பையன்கள் லேடீஸ் காலேஜ் ஹாஸ்டல் வாட்ச்மேனை முதலில் 'கரெட்' செய்யும் அதே ட்ரிக் !!!இவள் வைகுண்டத்தின் வாட்ச் மேனையே  தாஜா செய்கிறாள்... பெருமாள் கோயில்களில் நீங்கள் இந்த இரண்டு பேரை பார்த்திருக்கக் கூடும்...Gateway போல, firewall போல இவர்களைக் கடந்து தான் நாம் அனுப்பும் IP (Intimate prayer )பாக்கெட்டுகள் இறைவனை reach செய்யும்..எனவே எதற்கு வம்பு என்று இவர்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டு தான் பெருமாளை தரிசிக்க வேண்டும்.[நம்மில் பெரும்பாலானோர் இந்த இரண்டு பேரையும் கவனிப்பதே இல்லை என்பது வேறு விஷயம்] திருப்பதியிலும் இந்த இரண்டு பேர் இருக்கிறார்கள்... பாலாஜியை பார்க்கவே பதற்றம்  என்னும்  போது பாவம் இந்த பாடி கார்டை யார் பார்ப்பார்கள்?  

இந்த இரண்டு பேர்களையும் கவனித்தால் ஒரு Object overloading நடந்திருப்பது தெரியும்.. அச்சு அசல் விஷ்ணு போலவே இருப்பார்கள்.. 4 கை..சங்கு, சக்கரம் கதை, தாமரை அப்படியே டிட்டோ...ஏனிந்த தத்-ரூபம்?? பெருமாள் சிலருக்கு தன் ரூபத்தை கொடுத்திருக்கிறான்...சிலருக்கு தன் குணத்தை , சிலருக்கு தன் பராக்ரமத்தை..ஆனால் இவையெல்லாம் சேர்ந்து 100% அவனிடம் தான் இருக்குமாம்...அவன் தான் main class...சில derived class கள் அவனது சில property களை  inherit செய்யலாம் அவ்வளவே...  இந்த பாடி கார்ட்ஸ் -இற்கு ரூபம் லட்சணமாக இருந்தாலும் குணம் இன்னும் தமோ குணம் தான்....மூக்கின் மேல் கோபம்...எனவே, இவர்கள் உருவத்தைப் பார்த்து ஏமாறாதீர்கள்,,,,உள்ளே இருப்பவனும் இதே உருவம் தான்...அனால் அவன் எங்களை விட எல்லாவற்றிலும் பரி பூரணன் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் போலும்! சரி....ஒரு டவுட்...அரசியல் வாதி ஒருவர் செக்யூரிட்டி வைத்துக் கொள்வது சரி...அவருக்கு தான் தெனாலி கமல் போல நடந்தாலும் பெயம் , நின்றாலும் பெயம், நடந்து வந்து அமர்ந்தாலும் பெயம் ...பகவானுக்கு எதற்கு பாடி கார்ட்ஸ்? பக்தர்களை filter செய்வதற்கா? இல்லையே,,,பாகவதர்களை விட பாவிகளுக்கு தானே பகவானின் தரிசனம் முக்கியம்...! Any comments ????New year என்றாலே அலர்ஜியாய் இருக்கிறது....மாயன் காலெண்டர் சும்மா டுகாக்கூர் , பூமி காலண்டர் எல்லாம் பார்க்காது என்று கூவியவர்கள் பத்து நாள் கழித்து நியூ இயர் கொண்டாடுவது வேடிக்கையாய் இருக்கிறது... எனிவே , சலிப்பூட்டும் வாழ்க்கையில் சுவாரஸ்யம் தேடிக் கொள்ள அல்ப முயற்சிகள் இவை  ..இன்று apartment -இல் விடிய விடிய drinks பார்ட்டி , music , ஆண் பெண் பேதம் மறக்க வைக்கும் அத்வைத நடனம் எல்லாம் இருக்கிறது... மண்டைக்கு 400 ரூபாயாம் ...காதுக்கு பஞ்சு  வைத்துக் கொண்டு போர்த்திக் கொண்டு , மொபைலை ஆப் செய்து விட்டு தூங்கி விடலாம் என்று இருக்கிறேன்..யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு நாளும் நியூ இயர் தான்...டிசம்பர் 31 கூட NY தான். இன்று இருக்கும் இந்த நிலைக்கு வர பூமி இன்னும் ஒரு வருடம் சுற்ற வேண்டி இருக்கும்...Why ஜனவரி 1st ??? நீள்வட்டத்துக்கு (சுற்றுப்பாதை) தொடக்கமும் முடிவும் ஏது ?? anyway ,Don't want to sound too pessimistic....ஆப்பி நியூ இயர் 2012 சாரி 2013....ஷோ ஜோக்..

* கோர்ட்டில் ஒரு பெண் "நீதிபதி அவர்களே, எனக்கு டைவர்ஸ் வேண்டும்" என்றாள் அழுதுகொண்டே.

நீதிபதி: " ஏனம்மா?"

பெண்: "எனக்கு என் கணவர் துரோகம் செய்து விட்டார் அய்யா"

நீதிபதி: "அப்படி என்ன துரோகம் செய்தார் என்று சொல்ல முடியுமா?"

பெண்: "எங்களுக்குப் பிறந்த குழந்தைகளில் ஒன்று கூட அவர் மாதிரி இல்லை..."


இன்னொன்று....பல்வேறு புரளிகளை தனக்குள் வைத்துக் கொண்டு பயம் காட்டிய 2012 க்கு இனிதே விடை கொடுப்போம்!

ஒருநாள் பீட்டர் தூங்கி எழுந்த போது பக்கத்தில் படுத்திருந்த தன் மனைவி இறந்து போய் இருப்பதை பார்த்தான்..

பீட்டர் அரக்கப் பறக்க எழுந்து தலைகால் புரியாமல் நாலுகால் பாய்ச்சலில் மாடியில் இருந்து கீழே ஓடி வந்து வேர்க்க விறுவிறுக்க  மூச்சு வாங்கியபடி வேலைக்காரியை அழைத்தான்..

"மேரி, இங்க ஒடனே ஓடிவா,,,சீக்கிரம்..அவசரம்...ஓடி வா" என்றான்.

ஓடிவந்த வேலைக்காரி "என்னய்யா, இப்ப தான் உள்ள நுழைஞ்சேன் " என்றாள் ...

"அப்பாடா ... இன்னும் பிரேக்பாஸ்ட் பண்ணலையே,   இன்னியில் இருந்து டிபனுக்கு இரண்டுக்கு பதில் ஒரு முட்டை அவித்தால் போதும் " என்றான்...

சமுத்ரா...Friday, December 28, 2012

திக்குத் தெரியாத காட்டில்- Translation


திக்குத் தெரியாத காட்டில் - உன்னைத்
தேடித் தேடி இளைத்தேனே. 

Deep in the forest directionless- I
Sought you Krishna,  restless

மிக்க நலமுடைய மரங்கள் - பல
விந்தைச் சுவையுடைய கனிகள் - எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள் - அங்கு
பாடி நகர்ந்து வரும் நதிகள்

Trees that bear the sign of health
and the fruits of all peculiar taste
Hills that hide any side from the sight
where rivers  flow with a song and haste

ஆசை பெறவிழிக்கும் மான்கள், உள்ளம்
அஞ்சக் குரல்பழகும் புலிகள், - நல்ல
நேசக் கவிதைசொல்லும் பறவை, - அங்கு
நீண்டே படுத்திருக்கும் பாம்பு

Deers that stare with their lovely eyes
and tigers that growl on terrifying voice
A serpent resting lazily on the way
And birds that pleasingly make a poetic noise!

தன்னிச்சை கொண்டலையும் சிங்கம் - அதன்
சத்தத் தினிற்கலங்கு யானை அதன்
முன்னின் றோடுமிள மான்கள் - இவை
முட்டா தயல்பதுங்குந் தவளை -
 
A lion that roam on his own will - and
an elephant that fear on the lion's roar
Deers run by fearless -Behold there
a frog hides herself in a pore

கால்கை சோர்ந்துவிழ லானேன் - இரு
கண்ணும் துயில்படர லானேன் - ஒரு
வேல்கைக் கொண்டுகொலைவேடன் - உள்ளம்
வெட்கம் கொண்டொழிய விழித்தான்

Falling on the ground with my sick limbs
Sleep was at my eyes so near
Stood there a deadly hunter shameless
Holding in his hands a cruel spear

பெண்ணே உனதழகைக் கண்டு - மனம்
பித்தங்கொள்ளு தென்று நகைத்தான் - அடி
கண்ணே, எனதிருகண் மணியே - உனைக்
கட்டித் தழுவமனம் கொண்டேன். 

Said the hunter smiling, O Sweet lady
I go lunatic at your heavenly beauty
You are like my eyes to me, O Gorgeous
To embrace you is all now my duty!

சோர்ந்தே படுத்திருக்க லாமோ? - நல்ல
துண்டக் கறிசமைத்துத் தின்போம் - சுவை
தேர்ந்தே கனிகள் கொண்டு வருவேன் - நல்ல
தேங்கள் ளுண்டினிது களிப்போம்.

Come we shall eat and be merry
Would you lie enervated o my lady
I shall pick up the best fruit for you
Lets gulp the honey-like toddy


என்றே கொடியவிழி வேடன் - உயிர்
இற்றுப் போகவிழித் துரைத்தான் - தனி
நின்றே இருகரமுங் குவித்து - அந்த
நீசன் முன்னர் இவை சொல்வேன்: 

Said thus the evil eyed hunter
His words would eat away my soul
I prayed him;uttered these words
Feeling as a lonely standing pole

அண்ணா உனதடியில் வீழ்வேன் - மனம்
அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா - பிறன்
கண்ணலஞ் செய்துவிட்ட பெண்ணை  - உன்றன்
கண்ணற் பார்த்திடவுந் தகுமோ?

Would you utter mind fearing words!
I fall on your feet, O my brother
Could you ever even look at a lady
that is married to other?

ஏடி, சாத்திரங்கள் வேண்டேன்: - நின
தின்பம் வேண்டுமடி, கனியே,
மோடி கிறுக்குதடி தலையை, - நல்ல
மொந்தைப் பழையகள்ளைப் போலே' 
 
Speak not ethics to me O girl
All I need now is your pleasure
Alike a bottle-full of an old liquor
You smash my head with a great pressure

காதா லிந்தஉரை  கேட்டேன் - 'அட
கண்ணா!' வென்றலறி வீழ்ந்தேன் - மிகப்
போதாக வில்லையிதற் குள்ளே - என்றன்
போதந் தெளியநினைக் கண்டேன். 

Hearing these unbearable words 
I yelled your name and fell
Not many moments passed by
I beheld you and was out of hell

கண்ணா! வேடனெங்கு போனான்? - உனைக்
கண்டே யலறிவிழுந் தானோ? - மணி
வண்ணா! என தபயக் குரலில் -எனை
வாழ்விக்க வந்தஅருள் வாழி!

Where has the hunter gone, O krishna
Did he fall in fear seeing thy face?
Had you come upon hearing my feeble voice?
Victory!Victory! to thy grace!


சமுத்ரா 

 

 

 
 

Wednesday, December 12, 2012

கலைடாஸ்கோப்-80

லைடாஸ்கோப்-80 உங்களை வரவேற்கிறது.

“A bachelor's life is a fine breakfast, a flat lunch, and a miserable dinner.” Francis Bacon


ங்கிலேயர்களில்(British) சுமார் 50% மக்கள் மட்டுமே காலை உணவு சாப்பிடுகிறார்களாம். அதிலும் பெரும்பாலானோர் நின்று கொண்டே சாப்பிடுகிறார்கள் மற்றும் காலை உணவை மூன்று நிமிடங்களுக்கு முன்பே முடித்துக் கொள்கிறார்களாம்.இங்கே மட்டும் என்ன வாழ்கிறது என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான். நம்மில் இன்று யாரேனும் ஆற அமர குடும்பத்துடன் உட்கார்ந்து காலையில் இட்லி தோசை  சாப்பிடுகிறோமா? மேகி, கார்ன் பிளேக்ஸ் சாண்ட்விட்ச், பிரட் டோஸ்ட்  எல்லாம் வந்த பிறகு இட்லியாவது தோசையாவது ?!அந்தக் காலத்தில் எண்ணெய் வழிய அரிசி தோசை உளுந்து தோசை என்று மிளகாய் பொடியில் நெய் விட்டு  அடுக்கிச் சாப்பிட்ட மாமிகள் இன்று 90+ ஆகி செஞ்சுரிக்கு காத்திருக்க, ஹெல்தி ஹெல்தி ஓட்ஸ் கஞ்சி  குடிப்பவர்கள் 50+ இலேயே ஹார்ட் அட்டாக் வந்து செத்துப் போய் விடுகிறார்கள்.நீண்ட ஆயுளுக்கு உணவு மட்டும் அல்ல உணர்வுகளும் காரணம் என்பதை நாம் ஏனோ மறந்து போய் விடுகிறோம். எனவே எதை சாப்பிட்டாலும் , வாரத்துக்கு இரண்டு முறையாவது குடும்பத்துடன் உட்கார்ந்து ஆராமாக BF சாப்பிடுவதை (நல்ல வேளை பார்ப்பதை என்று எழுதிவிட வில்லை;))வழக்கப் படுத்திக் கொள்ளுங்கள். ஆமாம்,Break fast டைமின் போது தான் நிறைய உண்மைகள் வெளியே வரும் என்கிறார்களே, அது உண்மையா?

தலை போகிற அவசரமாக இருந்தாலும் BF ஐ கட் செய்யாதீர்கள் என்கிறார்கள். அப்படி செய்தால் டின்னருக்கும் லஞ்சுக்கும் இடையே கிட்டத் தட்ட பதினைந்து மணிநேர இடைவெளி வந்து விடுகிறது. பின்னால்(ள்) அல்சர் கில்சர் எல்லாம் வந்து விடுமாம்! பாவம் வயிறுக்கு ஏன் துரோகம் செய்ய வேண்டும்?காலையில் ஏதேனும் உள்ளே போட்டு விடுங்கள்..அது பாட்டுக்கு சிவனே அல்லது விஷ்ணுவே என்று கிடக்கட்டும்.
விஷ்ணு என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது. நம் விஷி-க்கு பத்து அல்ல 24 அவதாரங்கள் என்கிறது பாகவத புராணம்.தத்தாத்ரேயர் (சுற்றிலும் நாய்கள் மற்றும் பசுக்களுடன் இருப்பவர்) , பத்ரிகாசிரமத்தில் தவம் செய்யும் ட்வின்ஸ் நர நாராயணர்கள், பாற்கடல் கடைந்த போது தோன்றிய டாக்டர். தன்வந்திரி  , வியாசர், குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவர் ,மோகினி போன்றவை அவரது unofficial அவதாரங்கள்.சைக்கிள் கேப்பில் இவ்வளவு அவதாரங்களை எடுத்துள்ளார் பாருங்கள். சரி நமக்கெல்லாம் பொதுவாகத்  தெரிந்த தசாவதாரத்திலேயே ஒரு குழப்பம். பலராமரை அதில் சேர்ப்பதா வேண்டாமா என்று. 

பலராமரும் கிருஷ்ணரும் ஒரே காலத்தவர்கள் என்பதால் எதற்கு தேவையில்லாமல் ஒரே காலத்தில் இரண்டு அவதாரங்கள்? energy waste, time waste! மேலும் கிருஷ்ணரின் லீலைகள் & பராக்கிரமங்களுடன் ஒப்பிடும் போது பலராமர் கிட்டத்தட்ட ஜீரோ. ஏதோ கிருஷ்ணர் நாரை வாய் பிளக்கும் போதும்  காளையை சுழற்றி எறியும் போதும் மலையை தூக்கும் போதும் கூடமாட ஒரு கை கொடுத்து ஒத்தாசை செய்ததோடு சரி. பலராமரை கணக்கில் சேர்ப்பவர்கள் புத்தரை சேர்ப்பதில்லை. மேலும், விஷ்ணுவின் அவதாரமான புத்தரும் கௌதம புத்தரும் ஒன்றுதானா என்றும் தெரியவில்லை. 


புத்தர் கூட மஹாவிஷ்ணுதான். அதைப் பற்றி கதை ஒன்று சொல்கிறார்கள்.
விஷ்ணுவின் அவதாரங்களின் மகிமையால் மக்கள் மிக நல்லவர்களாக மாறிவிட நரகம் வெறிச்சோடியதாம். யமன் திருமாலிடம் சென்று, யமலோகம் டல் அடிக்கிறது. எண்ணெய்  சட்டியில் போட்டு வறுக்க யாருமே இல்லை.ஆயுதங்கள் துருப்பிடித்து பேரிச்சம் பழத்துக்கு கூட லாயக்கி இன்றி ஆகி விட்டன. யம கிங்கரர்கள் ஈ ஓட்டுகிறார்கள்.(மேனேஜர்களிடம் இருக்கும் கெட்ட பழக்கம் இதுதான். தனக்கு கீழே இருப்பவர்கள் சும்மா இருந்தால் ,என்ஜாய் செய்தால் பிடிக்காது!) எனவே ஏதாவது செய்யுங்கள் என்று வேண்டுகிறார். விஷ்ணு ரஜினி ஸ்டைலில் புன்னகை ஒன்றை asymmetric ஆக உதட்டில் உதிர்த்து 'யமா, கவலை வேண்டாம்..இனி யமலோகம் இந்திய பார்லிமென்ட்  போல பிஸி ஆகப் போகிறது. நான் புத்தர் அவதாரம் எடுத்து மக்களுக்கு தவறான , சாஸ்திரங் களுக்கு எதிரான தர்மங்களைப் போதிப்பேன். எனவே அதைப் பின்பற்றும் மக்களுக்கு நேரடியாக point-to-point நரகம் தான்...இப்போது ஈ ஓட்டும் யம தூதர்கள் ஈ காதில் நுழைந்தால் கூட தெரியாத அளவு பிஸி ஆகி விடுவார்கள் என்கிறார்...
சிவனுக்கு பல்வேறு வடிவங்கள் உண்டே தவிர அவதாரங்கள் இல்லை. வைஷ்ணவர்கள் பௌத்தர்களை கிண்டல் செய்தால் சைவர்கள் வைஷ்ணவர்களை கிண்டல் செய்கிறார்கள். அதாவது சிவன் அழிவற்றவன்.. ஆதி அந்தம் அற்றவன்..தனக்கு பிறப்பும் இறப்பும் உண்டு என்பதை எடுத்துக் காட்டவே  திருமால் உலகில் அவதாரங்களை எடுத்தான் என்கிறார்கள்.இது ஒரு உலா பாட்டில் வருகிறது. ஊலலல்லா பாட்டு தெரியும் அது என்ன உலா பாட்டு ?உலா என்பது ஒரு சிற்றிலக்கியம்.

நாமெல்லாம் வீதியில் உலா (ஊர்வலம்)வரும் சாமியை நள்ளிரவில்  வேடிக்கை பார்த்திருப்போம். போய் தேங்காய் பழம் உடைத்து எட்டணா போட்டுவிட்டு விபூதி பூசிக் கொண்டு வந்து விடுவோம்..ஆனால் அப்படி சமர்த்தாக திரும்பவந்து  போர்த்திக் கொண்டு படுத்துக் கொள்ளாமல் விபரீதமாக உலா வருபவர் மீது பெண்கள் காதல் கொண்டு பாடுவது தான் இந்த உலா. பேதை முதல் பேரிளம்பெண் வரை தலைவனை காதலிப்பது. அம்மாவின் சேலைத்தலைப்பில் தன்னை மறைத்துக் கொண்டு அம்மா இவர் யார் மகனம்மா (இத்தேரமர்பவன் யார் மைந்தன் இது பன்னுக வென்றாடை முதல் பற்றுதலும் மின்னனையார் ....) (இவர் யார் என்று direct -ஆகக்  கேட்கமாட்டாளாம் !..வெட்கமாம்) என்று கேட்பது முதல் காதல் வயப்பட்டு எப்ப வருவாரோ என்று ஏங்கும் வரை.பலபட்டடை சொக்கநாதக்கவிராயர் ராமேஸ்வரர் மீது இயற்றிய உலாவில்(தேவையுலா) இருந்து சில சுவாரசியங்கள்(சிலேடைகள்):-

கண்ணிடந் தப்புமெனக் காலா லுதைத்தொருவன்
கண்ணிடந் தப்புவதுங்  காதேலா -பெண்ணமுதம் 

கண் இடம் தப்பும் - கண் இடம் மாறி விடும் என 
கண் இடந்து அப்பும் -கண்ணை பிய்த்து அப்புதல் 

அங்கிதஞ் செய்தது போலங்கை வளையால் முலையால்
லங்கிதஞ் செய்த தடுக்குமோ - இங்கிதந்தான்

அங்கிதம் செய்தல் -கையெழுத்து இடல் 
அங்கு இதம் செய்தல் -அந்த இடத்தில் இதம் செய்தல் 

மாறனடித்த மதுரை யிலே  யஞ்சாமல்
மாறனடித்த   மதம்பாரீர் -நீறணியும் 

மாற நடித்த மதுரையில் - மண் சுமப்பவனாக மாற நடித்தல்
மாறன் அடித்த  -மாறன் பிரம்பால் அடித்தல் 

மதனை யெரித்தீரே மாதிடஞ்சேர் காம 
மதனை யெரித்திட வொண்ணாதோ -விதனஞ்சேர் 

காமமதனை -காமம் அதனை 

மாமிக்காய் மாமன்போய்  மாமனைக் கொன்றபழி
சேமித்  திடாக்கோடி  தீர்த்தமும்-காமத்தால் 

[ஏதோ கள்ளக்காதல் சமாசாரம் என்று நினைக்க  வேண்டாம்...மாமிக்காய் -மா மிக்காய் -பெருமை மிகுந்து ;மாமன் போய்  -மா மன் போய்  -திருமகள் அரசன் (கண்ணன்) போய்;  மாமனைக் கொன்ற பழி  -கம்சனைக் கொன்ற பாவம் தீர 


ஒன்று இரண்டு மூன்று என்று இறைவனை வரிசைப்படுத்திப் பாடு என்றதும் ஒன்றானவன் உருவில் இரண்டானவன் என்று பாடுவார்  ஔவையார் . இவரும்  ஒன்று இரண்டு மூன்று என்று பாடுகிறார். கொஞ்சம் out-of-box திங்கிங்!


இரு மழுவன் முக்காலன் நாற் கண்ணன் 
வேதம் ஐந்தன் ஆறுதலை மேவினோன் -காதல் 
எழு சமயம் எட்டுலகும் ஒன்பது திக்கும் 
பழுதகலின் பத்து  நிதியும் -தொழவருள்வோன் 


என்னடா இது? ஒரு மழு ,இரண்டு கால், மூன்று கண், நான்கு வேதம், ஐந்து தலை, ஆறு சமயம் , ஏழு உலகு , எட்டு திக்கு ஒன்பது நிதி என்று தானே சிவனைப் பற்றிப்  பாட வேண்டும். இவர் என்ன N +1 என்று ஒன்று சேர்த்து இரண்டு மழு , மூன்று கால், நாலு கண், ஐந்து வேதம், ஆறு தலை, ஏழு சமயம் , எட்டு உலகம் , ஒன்பது திக்கு, பத்து நிதி என்று பாடுகிறாரே , இவருக்கு கணக்குசொல்லித்தந்த  டீச்சர் சரி இல்லையா என்று நினைக்கத் தோன்றும். ஆனால் நாம்தான் சரியில்லை. நாம் ஒரே dimension -இல் யோசிக்கிறோம். கொஞ்சம் கற்பனை குதிரையை கொள் கொடுத்து தட்டி விட்டால் அவரது புலமை புரியும்.இரு மழுவன் - பெரிய மழுவை ஏந்தியவன் 
முக்காலன் - இறந்த நிகழ் எதிர் என்னும் மூன்று காலமும் ஆனவன் 
ஆற்க்கண்ணன் - ஆலமரத்தின் கண் (ஆலமரத்தினடியில்) இருப்பவன் 
வேதமைந்தன் -வேதத்தின் பொருளை உரைத்தவனை (முருகனை) மைந்தனாகக் கொண்டவன் 
ஆறுதலை மேவினோன் -கங்கை என்னும் ஆறை (நதியை) தலையில் கொண்டவன் 
காதல் எழு சமையன் -அன்பு உதிக்கும் மதத்தவன் 
நெட்டுலகும்  -நெடிய உலகங்களும் 
ஒன்பதுதிக்கும் -ஒன்பதாக உதிக்கும் 
பழுதகல் இன்பத்து நிதியும் - குற்றமில்லாத இன்பம் தரும் நிதியும் 

புண்டரீகக்
கண்ணினான் கண்களுக்குக் காட்டாத பொற்பாதங்
கண்ணிலா வந்தகற்குங்காட்டினோன்  - கண்ணின்

-தாமரை போன்ற கண்களை உடைய திருமால் கீழே சென்று காண முடியாத பாதத்தை (அடிமுடி) கண்ணோட்டம் இல்லாத(பின்னே என்ன நடக்கும் என்ற vision இல்லாத) அந்தகனுக்கு (யமனுக்கு) காட்டினோன்  -உதைத்தவன் 

தாமரைக் கண்ணால்(பெரிய கண்களால்) கூட காண முடியாத பாதத்தை  கண் இல்லாத அந்தகனுக்கு (குருடனுக்கு) காட்டினனான் என்று இன்னொரு பொருள் வருவது சிறப்பு. 

என்பணி கொள்ளும் இராமேசன்  -என் பணிவிடையை ஏற்று அருளும் ஈசன் 
என்பு அணி கொள்ளும் இராமேசன் - எலும்பை மாலையாக அணியும் ஈசன் 

பண்டு பிரிந்த  பவளமும் முத்து மெதிர்
கண்டு  கலந்தன்ன கனிவாயாள் - பண்டைமக 

கடலில் பிறந்த பவளமும் முத்தும் இப்போது மீண்டும் இணைந்தன. எப்படி? simple ...பவளம் போன்ற வாயில் முத்துப் போன்ற பற்கள்..:) 

இப்படி ஒரு வார்த்தை விளையாட்டு வேறெந்த மொழியிலும்  விளையாட முடியுமா என்பது சந்தேகம் தான்.இங்கே, உவமை செய்யும் சில வழிகள்:-

முத்து போன்ற பல் - உவமை 
முத்துப்பல் -உவமைத்தொகை 
பல்முத்து -உருவகம் 
முத்து -முத்தே பல்லுக்கு பதில் ஆகி வருவது.

குபெயர் என்ற இந்த விஷயம் தமிழ் இலக்கணத்தில் முக்கியமானது. ஒரு சொல், நேரடியாக ஒரு பொருளைக் குறிக்காமல் அதற்கு தொடர்புடைய இன்னொரு பொருளை குறிப்பது...தலையை சுற்றி மூக்கை தொடுதல்... இங்லீஷில் metonymy என்பார்கள்.
'ஹாலிவுட்' என்றால் பொதுவாக  அமெரிக்காவில் உள்ள ஒரு நகரம். ஆனால் அது அதனைக் குறிக்க பயன்படாமல் அமெரிக்க சினிமாவுக்கு பொதுவாக  உபயோகப் படுகிறது.DISH என்பது பாத்திரம்...(dish -wash !)..ஆனால் அது சிலசமயம் (dish -இல் போடப்படும்) உணவையும்  குறிக்கலாம்.(side -dish !) மீடியாவை உள்ளே விடாதே என்பதில் மீடியாவில் இருந்து வந்த நிருபர்களை விடாதே என்கிறோம்! உனக்கு போன் வந்துச்சு! என்பதில் போன் என்பது போனில் வரும் call -லை மறைமுகமாகக் குறிக்கிறது!தக்காளிக்கு தண்ணி ஊற்று  (தக்காளிச் செடியின் வேருக்கு தண்ணி ஊற்று (சினையாகு பெயர்).இந்தியா இலங்கையை நேற்றைய ஆட்டத்தில் வீழ்த்தியது...இந்தியா எப்படி வீழ்த்தும்?இந்தியாவை சேர்ந்த கிரிக்கெட் அணி வீரர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்..(இடவாகு பெயர்) 

எல்லாருக்கும் தெரிந்த  ஒரு உதாரணம் 

அங்கே பாரு பிகர் வருது....( நல்ல பிகரை உடைய பெண் வருகிறாள்.... பண்பாகு பெயர்...யாரங்கே அடிக்க வருவது???)

சரி....ஒரு பொருளின் பெயரே அதைத் தான் உண்மையில் குறிக்கிறதா என்பது தத்துவ விசாரம். குழந்தைக்கு டி .வி யைப் பார்த்து 'அங்கே பாரு சிங்கம்' என்று சுட்டிக் காட்டும் போது உண்மையில் எதைக் காட்டுகிறோம்? உண்மையான சிங்கத்தையா டி .வி யையா?அதன் எலக்ட்ரானிக் பிம்பத்தையா? சிங்கம் என்று குழந்தை மனிதில் ஏற்கனவே பதிவான ஒரு உருவத்தையா ??ரேனே மார்க்ரிட் என்பவர் வரைந்த 'The Treachery of Images' என்னும் ஓவியம் புகழ்பெற்றது.


இந்தப் படத்தில் ஒரு புகைபிடிக்கும் பைப்பை வரைந்து அதன் கீழே 'இது ஒரு பைப் அல்ல' என்று முரண்பாடாக எழுதப்பட்டுள்ளது. ஒரு பொருளின் பெயரோ , உருவமோ எதுவும் அதை குறிக்க(வே) முடியாது என்பது மார்க்ரிட் -இன் வாதம். ஒருவேளை நாம் உபயோகப்படுத்தும் எல்லாப் பெயர்களும் ஆகு பெயர்கள் தானோ?

 
Soundcloud -இல் ரஞ்சனி காயத்ரியை கேட்டுக் கொண்டிருந்தேன்...(இதுவும் ஆகுபெயர் தான்.:-))) கீழ்க்கண்ட தேவாரப் பாடலில் ஒரு வரி அப்படியே மனதுக்குள் stuck ஆனது)3:44 இல் வரும் அமிர்த வர்ஷினி..அல்லது 6:30 இல் வரும் சிந்து பைரவி!  பாடலை IE அல்லது GC  இல் கேட்கவும்..மொசில்லா நரி சில சமயம் கிறுக்கு செய்யலாம்.மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்
கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்
பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி
எண்ணாகி யெண்ணுக்கோ ரெழுத்து மாகி
யெழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே.பிரளயத்துக் கப்பாலோரண்டமாகி - what ???? wait ...இது big -bang ???? பிரளயத்துக்கப்பால் அண்டம்????

 இன்னொரு வரியை பார்த்து விட்டு இதற்கு வருவோம்.பெண்ணாகி பெண்ணுக்கோர் ஆணுமமாகி..சும்மா எதுகைக்காக எழுதப்பட்டது என்று நினைக்கத் தோன்றினாலும் இது ஓர் உயிரியல் உண்மை...'பெண்' தான் உயிரின் PROTOTYPE ...ஆண் சும்மா அவளின் extension தான்.பெண்ணுக்காக தான் ஆண்..ஆணுக்காக பெண் அல்ல... மதங்கள் சொல்வது போல கடவுள் ஆணைப் படைத்து விட்டு அதற்குப் பின் பாரப்பா உன் மகிழ்ச்சிக்கு பெண்ணை உன் தாசியை உன் உடம்பில் இருந்து படைக்கிறேன்,எஞ்சாய்  என்பது அண்டப் புளுகு...பெண் உடம்பு தான் reference.இதனால் தான் ஓர் உயிர் உருவாகும் போது அதை prototype ஆன பெண் என்றே treat செய்து சில நாட்களுக்கு இயற்கை வளர்க்கிறது.மார்புக் காம்புகளை முன்னமே  உருவாக்குகிறது. பின் ஆண் என்று முடிவெடுத்து அவனுக்கு ஆணின் பிரத்யேக உறுப்புகள் வளரத் தொடங்கினாலும் நிப்பிள் அப்படியே மார்பில் நின்று விடுகிறது.ஆண் தான் prototype என்று இருந்தால் எதற்கும் பயனற்ற நிப்பிளை ஆணுக்கு இயற்கை உருவாக்கி இருக்காது...

back to  பிரளயத்துக்கப்பால் அண்டம்


 இது ஒரு sheer co -incidence என்றாலும் ஒன்றுமே இல்லாத சூனியத்தில் ஒரு பிரளயம் தோன்றி பிரபஞ்சம் வெடித்தது என்ற இயற்பியல் தத்துவத்திற்கு எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது? சரி...பிரபஞ்சம் தோன்றியதை விட்டு விடுவோம்... எப்படியோ கழுதை தோன்றி விட்டது...நாமெல்லாம் சுப யோக சுப  தினமான 21-12-2012 வெள்ளிக்கிழமை அன்று சாகிறோமோ இல்லையோ ஒருநாள் பிரபஞ்சம் வெப்பச்சாவு (heat death ) வந்து அனாதையாக  செத்துப்போகுமாம்.
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
 
நலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை
வலஞ்சுழித் தெழுந்து வளர்ந்தமெய்க் கனலே
 
வேதமும் ஆகம  விரிவும் பரம்பர
நாதமுங் கடந்த ஞானமெய்க் கனலே  -என்று இறைவனையே  வெப்பம் என்கிறார் 
வள்ளலார் ச்சா போவதில் இருந்து உலகத் திரைப்படம் எடுப்பது வரை நாம் செய்யும் செயல்கள் எல்லாம் , பிரபஞ்சத்தின் இயக்கங்கள் அனைத்தும் Heat transfer தான். சூரியன் தன்னை விட குளிர்ந்த கிரகங்களுக்கு கிரணங்களை, வெப்பத்தை வெளியிடுகிறது. ஒரு பேச்சுக்கு சூரியனும் பூமியும் ஒரே வெப்ப நிலையில் இருந்தால் அங்கே heat  transfer நடக்காது. ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் போன்ற கவிதைகள் பொருள் இழந்து விடும்.பிரபஞ்சம் மெல்ல மெல்ல தன இயக்கங்களை நிறுத்திக் கொண்டு போதும்டா சாமி என்று ஒரு thermodynamic equilibrium நிலையை அடைந்து விடுமாம்.வெப்ப ஆற்றலை எடுத்தும் கொடுத்தும் டெபாசிட் செய்தும் savings -இல் போட்டும்  கடன் வாங்கியும் திருடியும் அடகு வைத்தும்  ஓகோவென்று நடக்கும் ஆற்றல் வங்கி  பிஸினஸ் ஒருநாள் திவாலாகி entropy கண்டபடி எகிறி இனிமேல் வேலை செய்ய முடியாது என்று அணுக்கள் ஒட்டுமொத்தமாய்  ராஜினாமா செய்துவிட, கம்பெனியை மூடிவிடும் நிலைமை என்று வைத்துக் கொள்ளுங்களேன். என்ன பிரபஞ்சக் கம்பெனி எந்தக் கொம்பனுக்கும் கஸ்டமருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை! இப்போது நாம் இருப்பது ஒருவிதமான சம நிலை அற்ற imbalanced ஸ்டேட்..எனவே நட்சத்திரங்கள் பிறந்து கிரகங்கள் தோன்றி நாமெல்லாம் வந்து டீ குடித்துக் கொண்டே (ஆபீசில்)ப்ளாக் எல்லாம் எழுதுகிறோம். எல்லாமே சமம்...completely balanced என்றால் அங்கே சூனியம் தான்...FLOW ,ஓட்டம் அதுதான் உயிரின் மூலம்..


ழக்கம் போல் ஓஷோ ஜோக்குடன் என் அறிவுப் பொக்கிஷங்களை அறுவையை முடித்துக் கொள்கிறேன்..

" முல்லா , உங்களை நாங்கள்  ஏன் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ள முடியாது என்கிறீர்கள் ;அதற்கு தகுந்த காரணம் காட்டி நிரூபிக்க முடியுமா?" என்றனர் அதிகாரிகள்...போர் நேரம் அது.

முன்னால் அமர்ந்திருந்த முல்லா, "எனக்கு பிறந்ததில் இருந்தே கண்ணில் குறைபாடு சார், பார்வை மந்தம்" என்றார்.

"சரி, அதற்கு எதாவது நிரூபணம் இருக்கிறதா?" 

"கொண்டு வந்திருக்கிறேன் அய்யா, இதோ இது என் மனைவியின் புகைப்படம்" ....

முத்ரா 
 

Thursday, December 6, 2012

கலைடாஸ்கோப்-79

லைடாஸ்கோப்-79 உங்களை வரவேற்கிறது.

 
 மீபத்தில் தீவிரவாதி ஒருவனுக்கு இந்தியா தூக்கு தண்டனை அளித்தது. (அருமையான தீர்ப்பு! நியாயம் நீதி வென்றது! சத்தியத்தின் (?) வெற்றி, பாவத்தின் சம்பளம் என்றெல்லாம் உணர்ச்சி பொங்க நம் மக்கள் வழக்கம் போல ஆன்லைனில் கருத்து சொல்லிவிட்டு சூப்பர் சிங்கர் பார்க்கப்போய்  விட்டார்கள்.) சமீபத்திய திரைப்படம் ஒன்றில் ஹீரோ தீவிரவாதியின் கப்பலுக்கு கிளைமாக்ஸில் குண்டு வைக்கிறார். அதாவது தீவிரவாதி கொலை செய்தால் நாமும் அவனை கொலை செய்கிறோம்.தீவிரவாதி குண்டு வைத்தால் நாமும் அவனுக்கு குண்டு வைக்கிறோம் என்றாகிறது . 

திரைப்படங்கள் , தீவிரவாதியை அல்லது ஸ்லீப்பர்-செல்களை நடுரோட்டில் நாய் மாதிரி சுட்டு வீழ்த்தினாலும் தவறு இல்லை என்று சொல்லாமல் சொல்கின்றன.ஏனென்றால் சுடுபவன் நல்லவன்.. சுடப்படுபவன் BAD-BOY !சரி..அப்படியே  Hard feelings உடன் அவர்களை சுட்டு வீழ்த்தினால் தீவிரவாதம் ஒழிந்து விடுமா என்று தெரியவில்லை. திரைப்படங்கள் Commercial நோக்கத்துடன் எடுக்கப்படுபவை. அவை அப்படி தான் இருக்கும். so called நல்லவன்-கெட்டவன் விளையாட்டு. ஹீரோ மெயின் (?!) தீவிரவாதியை சுட்டு விட்டார். எல்லாம் சுபம்..இனிமேல் இந்தியா வல்லரசு ஆகி விடும் என்று சினிமா முடிந்து விடுகிறது... தீவிரவாதி அல்லது தீவிரவாதம் என்பது ஓர் இலை தான் ;அதன் வேர் வேறு எங்கோ இருக்கிறது என்பதை நாம் மறந்து விடுகிறோம் .இலையை பிடுங்கி விட்டால் மரமும் சாய்ந்து விடும் என்று தப்புக் கணக்கு போடுகிறோம்.இது எப்படி இருக்கிறது என்றால் நகச்சுத்து  வந்தால் விரலை வெட்டிவிடு என்பது போல! அறிகுறிகளை (symptom )கவனிக்கும் நாம் அதன் மூல காரணத்தை (Cause )தேட மறந்து விடுகிறோம்...தீவிரவாதத்தின் வேர் எங்கே?(பாகிஸ்தான் என்று சொல்லக் கூடாது ஆமாம்!) அதற்கு எங்கே தண்ணீர் ஊற்றப்படுகிறது என்று ஆராய மறந்து விடுகிறோம்.தீவிரவாதியா அடி அவனை ,கொல்லு அந்த தேசத் துரோகியை என்று கை தட்டி விசில் அடித்து நம் போலியான தேசபக்தியை வெளிப்படுத்திகிறோம்.நம்முடைய இந்த weakness ஐ நன்றாக பயன்படுத்திக் கொண்டு கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன சினிமாக்கள். 

'தீமை விரும்பிகளை அல்லாஹ் விரும்புவதில்லை ; ஒரு சிறந்த முஸ்லிம் என்பவன் முதலில் ஒரு நல்ல மனிதன்' என்றெல்லாம் மனித நேயத்தை வலியுறுத்தும் மதத்தை ஏனோ தீவிரவாதிகளின் மதமாக சித்தரிக்கிறோம்! தீவிரவாதத்தின் விதை மிக மிகச் சிறியது தான் ; அது எங்கு வேண்டுமானாலும் விதைக்கப்படலாம் ..பசி, வேலையின்மை, தீண்டாமை, Rejection என்று எது வேண்டுமானாலும் அதன் விதையாக இருக்கலாம்... சும்மா விளையாட்டுக்கும் ஹாபியாகவும் தீவிரவாதம் யாரும் செய்வதில்லை..எனவே 200 ரூபாய் கொடுத்து தியேட்டருக்கு சென்று ஹீரோ தீவிரவாதியை அடிப்பதைப் பார்த்து கைதட்டுவதை விட பசியால் வாடும் ஒருத்தருக்கு சாப்பாடு வாங்கித் தந்தால் அல்லது அவருக்கு சாப்பாடு நிரந்தரமாகக் கிடைக்க நம்மால் ஆன ஏற்பாடு செய்தால் தீவிரவாதத்தின் விதை ஒன்றை முளைவிடாமல் நசுக்கிய புண்ணியம் நமக்குக் கிடைக்கும்...


'அனஸ்தீசியா' தெரியும்..சினஸ்தீஸியா (Synesthesia) தெரியுமா?   Do You see what I hear, மஞ்சள் சப்தம், இவை எல்லாம் அதனுடன் தொடர்புடையவை. புலன்களுக்கு இடையே ஏற்படும் ஒரு Cross -connection ! ...காது என்றால் கேட்க வேண்டும்...நாக்கு என்றால் ருசிக்க வேண்டும் கண் என்றால் சைட் அடிக்க வேண்டும்.சாரி பார்க்க வேண்டும் என்ற Default வரையறையை மீறி ஒரு புலன் செயல்படும் போது மற்றொரு புலனின் அனுபவத்தையும் (தேவையில்லாமல்) தூண்டுவது தான் சினஸ்தீசியா  என்று சொல்லப்படுகிறது.

'அவளை ஐந்து புலன்களாலும் பார்த்தேன்' என்னும் அபத்தக் கவிதை சினஸ்தீசியா விஷயத்தில் ஓரளவு உண்மை.சுஜாதா, ஒரு கதையில் கண் தெரியாத ஒருவனுக்கு நிறங்களை காதுகளின் அனுபவமாக அதாவது ஸ்வரங்களாக விளக்க முயற்சி செய்திருப்பார்...அங்கே பசுமையான வயல்கள்...பஞ்சமம்...மேலே பரவிக் கிடக்கும் நீலம் ...அது இனிமையான காகலி நிஷாதம்...அடிவானில் சிவப்பு...அது ஆதார சட்ஜம்...என்று..அந்த ஆளுக்கு பார்வை வந்தால் அவனுக்கு நீலக் கலரைப் பார்க்கும் போதெல்லாம் காதில் நிஷாதம் ஒலிக்கும் படி ஒரு cross -connection ஏற்படலாம்.

இந்த விஷயத்தை சயின்ஸ் பிக்ஷன் எழுத்தாளர்கள் ஏகத்துக்கும் கையாண்டிருக்கிறார்கள். இன்னொரு சம்பவம் :ஒரு ஆள் கணக்கே தெரியாமல் கணக்கு போடுகிறான்.எப்படி என்று கேட்டதற்கு எனக்கு ஒவ்வொரு நம்பரும் ஒவ்வொரு வடிவமாகத் (Shape )தெரிகின்றன;அதை வைத்து நான் கணக்கு போடுகிறேன் என்கிறான் . மேலும்,போதை மருந்து  எடுத்துக் கொண்டவர்களுக்கும் வலிப்பு நோய் வருவதற்கு அறிகுறியாகவும் இந்த சினஸ்தீசியா நிகழலாம் என்கிறார்கள்.யாராவது 'எனக்கு கேட்கும் இந்த சத்தம் ரொம்பவே மஞ்சளாக இருக்கிறது' என்றால் உஷார்...ஏதோ டேஞ்சர்!! 

நம் எல்லாருக்கும் மிகச் சிறிய அளவில் இந்த cross connection இயல்பாகவே இருக்கிறது என்று நிரூபித்திருக்கிறார்கள்.

கீழ்க்கண்ட டேபிளில் நாக்கையும் கண்ணையும் பொருத்துங்கள் பார்ப்போம்.

காரம்                - மஞ்சள்
இனிப்பு             - சிவப்பு 
புளிப்பு             -  பச்சை 
கசப்பு              -  பிரௌன் 
உவர்ப்பு           -  நீலம் 


என்னுடைய அனுபவப்படி இப்படி பொருந்துகிறது. அதாவது கண்ணை மூடிக் கொண்டு நாக்கில் அந்த சுவையை நினைத்துக் கொண்டால் தெரியும் கலர்.


காரம்   -  சிவப்பு 
இனிப்பு - நீலம் 
புளிப்பு  -பிரௌன் 
கசப்பு - பச்சை 
உவர்ப்பு -மஞ்சள் 

உருவத்துக்கும் ஒலிக்கும் சம்பந்தம் உண்டு என்பதை இந்த ஆய்வு நிரூபிக்கிறது.


மேலே உள்ள இரண்டு வடிவங்களில் எது  பூபா? (Bouba ) எது கிக்கி  (kiki ) என்றால் 99% பேர் முதலில் இருப்பது கிக்கி என்றும் இரண்டாவது இருப்பது பூபா என்றும் சொல்வார்களாம். கிக்கி என்று உச்சரிக்கும் போது ஏற்படும் ஒலி அந்த வடிவத்தைப் போல கூர்மையான விளிம்புகளுடன் இருப்பதால்! பூபா என்று சொல்லும்போது வரும் ஒலி மொண்ணையாக ஒலிக்கிறது!


 சில பேர்வழிகள் தொடுதல் உணர்வுக்கும் கலருக்கும் முடிச்சு போடுகிறார்கள்.ஒவ்வொரு விதமான தொடுதலின் போதும் ஒவ்வொரு கலர் கண்ணில் தோன்றுகிறதாம். வெற்றுக் கிரக வாசிகளுக்கு நிறங்களை 'நுகரும்' திறன் இருக்கலாம் என்று சிலர் சொல்கின்றனர்.


இதை வைத்து யாராவது தமிழில் ஒரு பிக்சன் நாவல் எழுதலாமே!!!! :)
 ஹீரோ ஒரு synesthesiac  என்று!

I must follow the people. Am I not their leader?
Benjamin Disraeli

தனித்தனியாக மிக சிறப்பாக Perform செய்யும் சிலர் leader அல்லது manager என்று வரும்போது சொதப்பி விடுவது ஏன் என்று யோசிக்கலாம்.

* A Leader should be a leader to oneself first: நமக்கு நாமே தலைமை வகிப்பது எப்படி என்று தெரிந்திருக்க வேண்டும். நம்மிடம் நமக்கே control இல்லை என்றால் வேலைக்கு ஆகாது. கேண்டீனில் சூடாக வடை போட்டிருப்பார்கள். அதை சாப்பிட்டு வந்து இதை update செய்தால் ஒன்றும் குடிமுழுகிப் போய் விடாது என்று நினைக்கையில் நம்மிடமே நமக்கு Determination இல்லை.அதை நாம் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது அபத்தம்.

* We are not leading Sheep: நாம் தலைமை வகிப்பது ஆட்டு மந்தைக்கு அல்ல..மனிதர்களுக்கு..எல்லாரும் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று நினைப்பது முட்டாள்தனம். சில பேர் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு இதை இன்றைக்குள் செய்து முடி என்று ஒருவித commanding வாய்சில் சொன்னால்தான் செய்வார்கள். சில பேர் 'என்னப்பா ,வீட்டில் அப்பாவுக்கு உடம்பு முடியலை என்றாயே, இப்ப பரவா இல்லையா , வாட்ச் புதுசா?உன் ப்ளாகிற்கு இப்ப எத்தனை followers? ..அப்புறம் அந்த weekly report ...என்று மாமன் மச்சான் லெவலுக்கு உறவாடினால்தான் காரியத்தை முடிப்பார்கள்.எனவே ஒரு தலைமையாளனுக்கு யார் யார் எப்படி ?யார் யாரிடம் எப்படி வேலை வாங்குவது என்று தெரிந்திருக்க வேண்டும்...ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்கணும்!

* Give them directions...Not Goals: sofware tester ஒருவர் வேலைக்கு புதிதாக சேருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் டீம் லீடர் ஒருவர் "பாருப்பா , இந்த ரிலீசுக்குள்ள நீ 100 bugs file பண்ணனும் " என்று சொன்னால் அது வெறுமனே குறிக்கோளை தருவது.....இந்த மாட்யூலை முதலில் எடுத்துக்க...அதில் நிறைய defects கிடைக்கும். ஏற்கனவே இருக்கும் defects ஐ refer பண்ணு.. interface களை தனித்தனியா டெஸ்ட் பண்ணு...backup restore வேலை செய்யுதா பாரு...கொஞ்சம் Regression டெஸ்டிங் பண்ணு என்று இப்படியாக directions கொடுத்தால் அவர்தான் சிறந்த லீடர்.

*Do not change the coins unless absolutely necessary: யார் யாருக்கு என்ன வேலை தர வேண்டும்...இவர் இதனை செய்ய வேண்டும் என்று முன் கூட்டியே ஒரு visualization தேவை...சும்மா சும்மா மாற்றினால் என்னடா இவன் சரியான planning -கே இல்லை என்று நினைத்துக்  கொள்வார்கள்.... அதே சமயம் தேவைப்படும் பட்சத்தில் assignments ஐ மாற்ற வேண்டும்.. ஒரே வேலை செய்து கொண்டிருந்தால் அவர்களுக்கும் போர் அடித்து விடும்... மேலும் ஒரே வேலையை இரண்டு பேர் செய்தால் இருவரின் திறமையும் அதற்கு மெருகூட்டும்!ஆனால் ஜெயலலிதா மாதிரி வாரம் ஒரு டிபார்ட்மெண்டில் வேலை செய் என்று மாற்றுவது bad leadership !

* Have Plan -B :  ஒரே ஒரு process ஐயோ நபரையோ நம்பி இருக்கக் கூடாது. டீமில் ஒருத்தர் வந்து தாத்தா இறந்து விட்டார் ஒரு நாலு நாள் லீவ் வேண்டும் என்றால் அதற்கு ஒரு alternate plan இருக்க வேண்டும்...time management என்பதும் முக்கியம்.

*Do not micro manage:  ஒருவருக்கு ஒரு task assign செய்து விட்டால் அதை அவர் முடிக்கும் வரை அவர் பொறுப்பில் விட்டுவிடுவது நல்லது. பக்கத்திலேயே போய் உட்கார்ந்து கொள்வதும் ஒரு மணிநேரத்துக்கு ஒருதரம் போய் update கேட்பதும் கேபினில் இருந்து silly -யாக என்ன செய்கிறான் என்று எட்டிப் பார்ப்பதும் bad leadership !!!நமக்கு கீழ் பணி செய்பவர்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும்..அதே சமயம் ஒரு மாயக் கயிற்றினால் அவர்களைப் பிணைத்திருக்கவும் வேண்டும்.

*Involve : நான் ஒரு லீடர்...அல்லது மேனேஜர்...என் பணி உன்னை மேலாண்மை செய்வது மட்டுமே என்று விறைப்பாக இருக்காமல் வேலையில் தானும் பங்கு கொள்ள வேண்டும்....ஒவ்வொரு technical details உம் நுணுக்கமாக தெரியவில்லை என்றாலும் மேலோட்டமாக என்ன நடக்கிறது எந்தெந்த module கள் என்னென்ன செய்கின்றன என்ற broad knowledge முக்கியம். இப்படி நாமே பிரச்சினைகளில் involve ஆகும் போது டீமில் இருப்பவர்களுக்கு நம் மேல் நம்பிக்கை பிறக்கிறது.

*Take responsibility : சில பேர் இருக்கிறார்கள்.. டீமுக்கு ஏதேனும் அவார்டு கிவார்டு வந்தால் நாந்தான் இதற்கு லீடர் என்று முன் வரிசையில் பல்லிளித்துக் கொண்டு போஸ் தருவார்கள். அதே, ஏதேனும் தப்பு நிகழ்ந்து விட்டால் அதை அதோ அவன்  தான் செய்தது என்று சுட்டிக் காட்டி விட்டு ஒதுங்கி விடுவார்கள். லீடர் ஒருவருக்கு இருக்கக்கூடாத அல்லது இருக்கவே கூடாத பண்பு இது.தப்பு நிகழ்ந்து விட்டால் அதற்குப் பொறுப்பு ஏற்றுக் கொண்டு இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு என்கிற பெருந்தன்மை வேண்டும்...உண்மையில் தப்பு செய்தவன் நான் செய்த தப்புக்கு இன்னொருவர் பொறுப்பு ஏற்கிறாரே என்ற குற்ற உணர்ச்சியில் அந்த தவறை மீண்டும் செய்யவே மாட்டான்...ரலாற்றை மாற்றக் கூடிய கண்டுபிடுப்புகள் அபூர்வமாகவே நிகழும். மற்றவை எல்லாம் வெறும் நீட்சிகளாகவே (extension )இருக்கும் என்கிறார் ஓர் அறிர். உதாரணமாக டெலிபோன்! அதன் முக்கிய நோக்கம் பேசுவது நெடிய தூரம் தாண்டியும் கேட்க வேண்டும் என்பது. அது முதன்முதலில் கிரகாம் பெல் மூலம் சாத்தியம் ஆன போது உண்மையில் அது மிகப் பெரிய மைல்கல்..அதற்குப் பின் வந்த எஸ்.எம்.எஸ்.  எம்.எம்.எஸ், வாய்ஸ் மெயில் , கால் பார்வேர்ட் , காலர் ஐ.டி. ப்ளா ப்ளா இப்படி எல்லாம் வெறுமனே enhancement features !!!! இப்போது மார்க்கெட்டில் வரும் பெரும்பாலான விஷயங்கள் இப்படி enhancement ஆகத் தான் வருகின்றன. ப்ளூ டூத், வை-பை இப்படி ஆயிரத்தெட்டு நீட்சிகள்...காலேஜில் ப்ராஜெக்ட் செய்யும் மாணவர்களும் இப்படிப்பட்ட enhancement -களிலேயே கவனம் செலுத்துகிறார்கள்....மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கேள்வியை தங்களுக்குத் தாமே கேட்டுக் கொள்ள வேண்டும்: நான் வெறும் நீட்சிகளில் கவனம் செலுத்தப் போகிறேனா இல்லை வரலாற்றை திருப்பிப் போடும் கண்டுபிடிப்பை நிகழ்த்தப் போகிறேனா என்று....பாபர் மசூதி இடிப்பு நாளில் (டிசம்பர் -6) ஒரு கவிதை - வைரமுத்து 


கட்டிடத்தின் மீது எப்போது
கடப்பாரை விழுந்ததோ
அப்போதிருந்தே
சரயு நதி
உப்புக் கரித்துக் கொண்டு
ஓடுகிறது..
சீதை சிறைப்பட்ட பின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்

மாண்பு மிகு மத வாதிகளே
சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா

அயோத்தி ராமன்
அவதாரமா மனிதனா
அயோத்தி ராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்

போதும்
இந்தியாவில்
யுகம் யுகமாய்
ரத்தம் சிந்தியாயிற்று
இனிமேல்
சிந்தவேண்டியது
வியர்வைதான்
நம் வானத்தை
காலம் காலமாய்
கழுகுகள் மறைத்தன

போகட்டும்
இனிமேலேனும்
புறாக்கள் பறக்கட்டும்


ஷோ ஜோக்.


ஒரு புவியியல் ஆசிரியை ஒருநாள் மேப்-ரீடிங் வகுப்பிற்குப் பிறகு  மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டாள்...


மாணவர்களே, நான் உங்களிடம் லஞ்ச் -இற்கு இன்று நீங்கள் என்னை இங்கிருந்து  23 டிகிரி 45 நிமிடம் வடக்கு அட்ச ரேகையில் மற்றும் 35 டிகிரி 15 நிமிடம் கிழக்கு தீர்க்க ரேகையிலும் சந்தியுங்கள் என்றால் என்னை எங்கே சந்திப்பீர்கள் "? என்று கேட்டாள் .


நீண்ட மௌனத்திற்குப் பிறகு வகுப்பின் பின்னால் இருந்து ஒரு குரல் வந்தது.

"டீச்சர்,, அப்படியானா நீங்க இன்னிக்கு லஞ்ச்சை தனியாதான் சாப்பிடனும்"


சமுத்ரா 

Tuesday, December 4, 2012

கலைடாஸ்கோப்-78

லைடாஸ்கோப்-78 உங்களை வரவேற்கிறது .
-சென்ற கலைடாஸ்கோப் -உடன் இந்த ப்ளாக்கில் 300 பதிவுகள் நிறைவடைகின்றன.இது 301-ஆவது! :) வாசகர்களுக்கு நன்றிகள்.


=

FACEBOOK இல் படித்தது:

வெற்றி அடைவதற்கு இரண்டு ரகசியங்கள் :-

ஒன்று:உங்களுக்குத் தெரிந்தது எல்லாவற்றையும் மற்றவர்களிடம் சொல்லி விடாதீர்கள்.


==

  தமிழில் குறும்படம் ஒன்று பார்த்தேன். அது இப்படி செல்கிறது:  மிகவும் அன்னியோன்னியமான  தம்பதி... கணவனுக்கு ஒரு நண்பன். கணவன் ஒருநாள் மனைவியிடம் உனக்கு என்ன கலர் பிடிக்கும்? என்று கேட்கிறான். அவள் " மஞ்சள்" என்கிறாள். சிறிது நேரம் கழித்து நண்பன் மஞ்சள் கலர் சட்டை மஞ்சள் கலர் பேண்டுடன் வந்து நிற்கிறான்.தன் மனைவிக்கு பிடித்த கலர் அவனுக்கு எப்படித் தெரிந்தது என்று குழம்புகிறான் கணவன்.மனைவி இப்போது "எனக்கு மஞ்சள் பிடிக்காது, நீலம் தான் பிடிக்கும் " என்கிறாள்.

மறுநாள் நண்பன் நீல கலர் சட்டை அணிந்து வந்து பீதி கிளப்புகிறான். மனைவி தனக்கு இதை
ப்பற்றி தெரியாது என்கிறாள். கணவன் கடுப்பாகவும், "எனக்கு எந்த கலருமே பிடிக்காது..அதாவது வெள்ளை தான் இனிமேல் என் கலர்" என்கிறாள். மறுநாள் நண்பன் வெள்ளை சர்ட் வெள்ளை பேன்ட் அணிந்து ஸ்டைலாக வீட்டுக்கு வருகிறான். இருவரும் குழப்பமடைகிறார்கள் . நாம் பேசுவதை யாரோ கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கிறார்கள். கணவன் ஒரு ஐடியா சொல்கிறான். "உனக்கு  பிடித்த கலரை இன்று ரகசியமாக என் காதில் சொல்லு" என்று மனைவியிடம் சொல்கிறான். மனைவியும் ரகசியமாக காதில் சொல்கிறாள். அடுத்த நாள் நண்பன் சிவப்பு நிற சட்டை,பேண்ட்  அணிந்து வந்து நிற்கிறான். மனைவி இப்போது அழுவது போல பாவனை செய்து பின் சிரிக்கிறாள். (அதாவது நண்பன் அணிந்து வந்த கலர் அவள் காதில் சொன்ன கலர் அல்ல ). அப்படியானால் நாம் பேசுவதை யாரோ கண்டிப்பாக கேட்டிருக்க வேண்டும் என்று மனைவி மீண்டும் சந்தேகிக்கிறாள்.பிறகு, கணவன் அது யார் என்று காட்டுகிறேன்;வா என்று மனைவியை கூட்டிச் செல்கிறான்.கணவனின் ஆட்காட்டி விரல் கேமராவை (நம்மை) நோக்கி நீள்கிறது. "வேற யாரு இவங்க தான் அது" என்று கணவன் (நம்மை)சுட்டிக் காட்ட குறும்படம் முடிகிறது.

 முடிவு மொக்கையாக தோன்றினாலும் இதில் Philosophical ஆக நிறைய சமாசாரங்கள் அடங்கியிருக்கின்றன. பார்ப்பவர் அல்லது ஆடியன்ஸ் தன்னுடைய பங்கை மறைமுகமாக Performance -க்கு அளிக்கிறாரா என்று ஆராயும் விஷயம்.மனைவி சொல்லும் கலரை தான் நண்பன் அணிந்து வருவான் என்று நம் மனமே எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறது அல்லவா. மனைவி காதில் சொன்ன கலர் நமக்கு தெரியவில்லை என்றவுடன் இந்த audience involvement  மறைந்து போய்  நண்பன் ஏதோ ஒரு டிரஸ்  அணிந்து வருகிறான் (புரிகிறதா?) மார்ஸல் டுசாம்ப் என்பவர் "கலை என்பது performer -இன் பங்களிப்பு மட்டும் அல்ல...அது audience அல்லது கலையை அனுபவிப்பவரின் மனநிலை, புரிதல், உள்  அனுபவம் இவற்றை சார்ந்தது என்கிறார். "The creative act is not performed by the artist alone; the spectator brings the work in contact with the external world by deciphering and interpreting its inner qualifications and thus adds his contribution to the creative act. - Marcel Duchamp" .

பெரும்பாலான திரைப்படங்கள் , கதைகள் ஒரு விஷயத்தை கதா பாத்திரங்களுக்கு தெரிவிப்பதற்கு முன்னரே அதன் பார்வையாளர் /வாசகர்களுக்கு தெரிவித்து விடும். பேய் , திகில் படங்களில் இதை பெரும்பாலும் காணலாம். அந்த ஹோட்டலில் பேயோ அல்லது கொலைகார சைக்கோவோ இருக்கிறான் என்பது முதலில் நமக்கு தெரிந்து விடும். ஆனால் அப்பாவி ஹீரோயினுக்கு தெரியாது. அப்போது ஆடியன்ஸ்
கதையுடன் ஒன்ற முடியும்... இதற்கு நேர் மாறான விஷயம் துப்பறியும் கதை/படங்களில் நிகழ்கிறது. கதையில் யாரோ ஒருவருக்கு விஷயம் தெரிந்திருக்க வாசகருக்கு அது இன்னும் தெரிவதில்லை...இப்படிப்பட்ட கதைகளில் படிப்பவர் அதனுடன் உணர்ச்சிப்பூர்வமாக ஒன்ற முடிவதில்லை என்பதை கவனியுங்கள்...

எனவே , ஒரு இசையை கேட்கும் போதோ இல்லை ஒரு ஓவியம் , கவிதை இதை கண்ணுறும் போதோ அதில் உங்கள் பங்களிப்பும் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்....அதாவது வாசகன் இன்றி கதை முழுமை அடைவதில்லை...ரசிகன் இன்றி இசை முழுமை அடைவதில்லை...in fact ரசிகன் இன்றி இசையே இல்லை!


===

(தொடர்ச்சி)

ஜான் கேஜ் (John Cage ) என்ற இசைக் கலை
ர் , 4.33 என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார் ..இது வரை உலகில் வெளிவந்த இசை ஆல்பங்களிலேயே மிக வித்தியாசமானது ;சர்சைக்குரியது இது. அப்படி என்ன தான் இதில் இருக்கிறது என்று நீங்களே கீழே கேட்டுப் பாருங்கள்:
(play பட்டன் சில browser -களில் work ஆகாது)
என்ன? குழம்பி விட்டீர்களா? ஆமாம். இந்த ஆல்பம் முழுவதும் மௌனம் தான்...ஆனால் இதை ஒரு இசை ஆல்பமாக கேஜ் வெளியிட்டார்.  இடம் மற்றும் காலம் கடந்த ஒரு சங்கீதம் இது என்கிறார்...நான்கு முப்பத்து மூன்று என்னும் இந்த ஆல்பம் என்றுமே மாறாத (never changing )அதே சமயம் ஒவ்வொரு முறையும் மாறுகிற (ever changing )ஆல்பம் என்று சொல்லலாம்..ஆம் ...ஆல்பத்தை மீண்டும் ஒருமுறை கேட்டுப் பார்க்கவும்..பின் புலத்தில் தோன்றும் சத்தங்களை (உங்கள் ஆபீசிலோ வீட்டிலோ உங்களுக்கு பின்புலத்தில் கேட்கும் சத்தங்கள் ) உங்களால் கேட்க முடிகிறது அல்லவா...அது தான் இந்த ஆல்பம்....இந்த ஆல்பத்தில் யாராவது பாடி இருந்தாலோ அல்லது இசைக் கருவிகள் இசைக்கப் பட்டிருந்தாலோ உங்களுக்கு இந்த பின்புல சத்தங்கள் இயர் போனில் கேட்கவே கேட்டிருக்காது. நம்மை சுற்றிக் கேட்கும் ஒலியெல்லாம் சங்கீதம் என்கிறாரா கேஜ்?அல்லது மௌனம் தான் பிரபஞ்சத்தின் உயரிய சங்கீதம் என்கிறாரா? அல்லது சங்கீதம் என்பதை நாம் தான் உருவாக்குகிறோம் என்கிறாரா? தலை சுற்றுகிறது!


கலைஞனையும் ரசிகனையும் கடந்த ஒரு இசை!  what an idea ! மிகச் சிறந்த வில்லாளி ஒருவன் தன் வில்லை விட்டு விடுகிறான் என்பது ஜென் சொல் வழக்கு.உயரிய இசை ஒன்றில் இசைக்கலைஞன்  மறைந்து விடுகிறான் என்று கேட்டிருப்பீர்கள்.ஆனால்  மகோன்னதமான சங்கீதம் ஒன்றில் இசை, அதை இசைப்பவன் அதைக் கேட்பவன் மூன்று பேரும் ஒருங்கே  மறைந்து விடுகிறார்கள். படைப்பவன், பார்ப்பவன் மறைந்து கடைசியில் படைப்பும் மறைவதே உண்மையான கலை...நாம் என்னடா என்றால் சும்மா ஏதோ ஒரு மொக்கை கவிதை எழுதி விட்டு கீழே சமுத்ரா என்று கையெழுத்து எல்லாம் போடுகிறோம்...படம் ஒன்று வரைந்து விட்டு கீழே நம் பெயரை (எல்லாரும் படிக்க முடியும்படி) கிறுக்குகிறோம் !

ஓஷோவின் இந்த ஜென் கதையைப் படித்து விட்டு மீண்டும் ஒரு முறை 4.33 ஆல்பத்தை கேட்டுப் பாருங்கள்...இது தான் நீங்கள் இதுவரை கேட்ட இசையிலேயே சிறந்தது என்று சொல்வீர்கள்.

வில்வித்தையில் மிகத் தேர்ச்சி பெற்ற வல்லுனன் ஒருவன், வில்லில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்று சவால் விடுகிறான். யாரோ அவனிடம் மலைமேல் வசிக்கும் ஜென் குரு  ஒருவரை சென்று பார்க்கும்படி அறிவுறுத்துகிறார்கள்.அவனும் அவரை சென்று பார்க்கிறான். குரு வில்,அம்பு இவை எதுவுமே இல்லாமல் இருப்பதைப் பார்க்கிறான். குரு அவனை தூரத்தில் உள்ள இலக்கு ஒன்றை குறிவைத்து அம்பெய்யும் படி சொல்கிறார். அவனும் அம்பு எய்கிறான் .அம்பு சற்றுகூட பிசகாமல் குறியை கச்சிதமாக எட்டுகிறது.குரு 'எனக்கு திருப்தி ஏற்படவில்லை' என்கிறார். ஒவ்வொரு முறையும் வல்லுனன் மிகச் சரியாக அம்பை எய்கிறான். ஆனாலும் அவர் திருப்தி அடைவதில்லை."இலக்கு முக்கியம் அல்ல ...எய்பவன் தான் முக்கியம்" நீ அம்பை செலுத்தும் போது  ஒரு வித பதட்டம் தெரிகிறது...அங்கே "நீ" இருக்கிறாய்..இலக்கை சரியாக துளைக்கிறாயா என்பது முக்கியம் அல்ல..வில்லை விட்டு அம்பு புறப்படும் அந்த மனமற்ற கணம் தான் முக்கியம்" என்கிறார். அவனுக்கு அந்த கலை கடைசி வரை வரவே இல்லை... ஒருநாள் தான் ஊருக்கு செல்வதாக சொல்லி விட்டு வல்லுனன் விடை பெறுகிறான் .அப்போது குரு கடைசியாக ஒரு முறை முயன்று பார்க்கும்படி சொல்கிறார்.அவன் நாணில் அம்பைப் பூட்டி அதை விடுகிறான். முதல்முறையாக ஒரு புதிய அனுபவத்தை உணர்கிறான். அன்று அவன் மனம் இறக்கிறது. குரு  ஓடிவந்து அவனை கட்டிக் கொள்கிறார்.."முதல்முறை நீ இலக்கின் கவலை இன்றி முழு ஓய்வில் அம்பு எய்ததைப் பார்த்தேன்..அங்கே நீ இருக்கவில்லை.அம்பு தானாக வில்லில் இருந்து நழுவிக் கொண்டு சென்றது...உன் கண்களில் அந்த பதட்டம் இல்லை..முழு ஓய்வு இருந்தது" என்கிறார். அவன் இனிமேல் தனக்கு வில்லும் அம்பும் தேவையில்லை என்று அவற்றை தூர எறிந்து  விடுகிறான்.

====
ரெஸ்டாரன்ட் ஒன்றின் ரெஸ்ட்-ரூமில் படித்தது:-

Let go..There are better things to hold on to..

=====

ஆபீஸில் முப்பது நாளுக்கு ஒருமுறை இந்த 'password ' மாற்ற வேண்டி இருக்கும்.முதலில் உபயோகித்த ஐந்து password மறுபடியும் உபயோகிக்கக் கூடாது என்பதால் இது ஒரு பெரிய தலைவலி.password  set செய்வது ஒரு 
பெரிய கலை தான்...இப்போதெல்லாம் password set செய்ய ஒரு technique பயன்படுத்துகிறேன். பாட்டி சொல்லிக் கொடுத்த நூற்றுக்கணக்கான பாடல்கள் கை(தலை)வசம் உள்ளன. அதை வைத்து பாஸ்வேர்ட் அமைத்து விடுகிறேன்.உதாரணமாக நகுமோமு கனலேனி என்றால் என் பாஸ் வேர்ட் பெரும்பாலும் NAG$123kan என்று இருக்கும். (ஐயோ..ரகசியத்தை சொல்லி விட்டேனா ! யாராவது ஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் -ஐ ஹேக் செய்து விடாதீர்கள் அமாம்)நீங்களும் சினிமா பாட்டு ஏதாவது வைத்து உங்கள் பாஸ்வேர்ட் -ஐ உருவாக்கலாம்.வொய் திஸ் கொலைவெறி பாட்டு உங்களுக்கு அந்த சமயத்தில்  நினைவில் வந்தால் WHY$%123this என்று அமைக்கலாம்.ஒருவரின் password ஐ வைத்து அவர் எப்படிப்பட்டவர் என்று தோராயமாக சொல்லி விடலாம். ஒருவர் தன் password -ஐ யாருக்கும் சொல்லமாட்டார் என்பதால் இந்த password psychology நடைமுறைக்கு வரவே வராது என்று தோன்றுகிறது.

* ஒழுங்கே இல்லாமல் கண்டபடி p .w .set செய்பவர்கள்: (ADJakaA4@uty)
 -இவர்கள் கலையார்வம் அற்றவர்கள். வாழ்க்கையில் எதையும்  அதிகமாக பிளான் செய்ய மாட்டார்கள். TAKE IT  EASY type !

* எல்லாராலும் எளிதில் கண்டுபிடிக்க முடியும்படி  p .w .set செய்பவர்கள்-பெயர் குமார் என்றால் kumar@123
-இவர்கள் எளிதில் ஏமாறக்கூடிய அப்பாவிகள்.

*உலகின் தலைசிறந்த super computer கூட மண்டை உடைத்துக் கொண்டாலும் ஹேக் செய்ய முடியாதபடி p .w அமைப்பவர்கள் 
(Q!ux##l-B@rnj&&!ix)
-இவர்கள் மிகவும் கறார் பேர்வழி. மிகவும் ஜாக்கிரதை ஆனவர்கள்.

* symmetric ஆக password அமைப்பவர்கள். (qwe12321ewq
-கலைநயம் மிக்கவர்கள் இவர்கள்..எதையும் அழகுணர்ச்சியோடு பார்ப்பவர்கள்.

* முதலில் இருந்த girl  friend பெயரில் எல்லாம் pw அமைப்பவர்கள்.
(DivyaI143U)

-மிகவும் emotional பேர்வழிகள்.

======

 தலைபோகிற ஒரு விஷயத்தைப் பற்றி இப்போது பேசலாம். பழைய roommate ஒருத்தனுக்கு முடி உதிரும் பிரச்சனை இருந்தது.almost எல்லாம் உதிர்ந்து கிட்டத்தட்ட சொட்டை ஆகும் நிலை! அப்போது டி .வியில் 'அமேசான்' காடுகளில் கிடைக்கும் மூலிகையில் தயாரிக்கப்பட்ட ஹேர் லோஷன் ஒரே மாதத்தில் ரிசல்ட்(?) கியாரண்டி என்றெல்லாம்  ஒரு விளம்பரம் வந்தது. நண்பன் உடனே missed கால் கொடுத்து ஆர்டரும் செய்து விட்டான்.(I mean missed call கொடுத்தால் அவர்கள் திரும்பக் கூப்பிடுவார்கள்) பிறகு அதை உபயோகித்து வந்தான் போலிருக்கிறது. வேலை விஷயமாக பிரிந்து விட்டோம். பிறகு இரண்டு வருடங்கள் கழித்து சந்தித்த போது எல்லா முடியும் complete -ஆக உதிர்ந்து ஏதோ பெயருக்கு ஒன்றிரண்டு சோட்டா பீம் ராஜு போல ஒட்டிக் கொண்டிருந்தது.'அமேசான்' லோஷன் வேலை செய்யவில்லையா என்று கேட்டதற்கு அது போட்டு இருந்த முடியும் உதிர்ந்தது தான் மிச்சம் என்று வேதனையுடன் சொன்னான். முடி உதிர்வதை தீர்மானிக்கும் ஜீன்களை அறிவியல்  கண்டுபிடிக்கும் வரை ,அல்லது hair  transplantation செய்து கொள்ளும் வரை இழந்த முடியை யாராலும் திரும்பக் கொண்டு வர முடியாது என்றே தோன்றுகிறது.இருக்கிற முடியை காப்பாற்றிக் கொள்ள மட்டும் சில டிப்ஸ்:

* தினமும் தலைக்கு தண்ணீர் ஊற்றுவது தேவையில்லை. வாரம் இரண்டு முறை தலைக்கு குளியல் போதும்.கூடுமானவரை உப்புத் தண்ணீர் தவிர்க்கவும்.

* ஹெர்பல் ஷாம்பூக்கள் நல்லதுதான். ஆனால் அவை பொடுகை நீக்க ஏற்றவை அல்ல.உங்களுக்கு பொடுகுப் பிரச்சினை இருந்தால் ஏதாவது anti dandruff ஷாம்பூவையும் (அளவாக)உபயோகிக்கவும்.  brand ஐ அடிக்கடி மாற்ற வேண்டாம்.

*உங்கள் தலையணை உறையை  அடிக்கடி துவைத்து வெயிலில் காய வைக்கவும். ஆறு மாதம் ஆகியும் துவைக்கவில்லை என்றால் உங்கள் தலை அழுக்கு பொடுகு மீண்டும் உங்களுக்கே வந்து விடும்.

*பிளாட்பாரத்தில் விற்கும் இரண்டு ரூபாய் ஐந்து ரூபாய் சீப்புகள் உங்களிடம் இருந்தால் அவற்றை தூக்கி வீசி விடவும். சூப்பர் மார்கெட்டுகளில் கிடைக்கும் Root என்ற rounded edge சீப்புகள் உபயோகிக்கவும்.

*  பழைய தமிழ்ப்பட ஹீரோ போல தினமும் எண்ணெய் தேய்த்து படிய வாருவது தேவை அற்றது. இப்போது இருக்கும் pollution இல் தலையில் உடனே அழுக்கு  சேர்ந்து விடும்.தலைக்கு குளிக்கும் முதல் நாள் இரவு எண்ணெய் தேய்த்துக் கொண்டால் போதும் . முடிந்தால் ஆலிவ் ஆயில் உபயோகிக்கவும்.
*எண்ணெய் தேய்க்கும் போது முடியை லேசாக 15 நிமிடம் மசாஜ் செய்யவும். இது ரத்த ஓட்டத்தை தூண்டி முடி வளர வைக்கும் என்கிறார்கள்.

*தலைக்கு குளித்து விட்டு உடனே முடியை டவலால் வரக் வரக் என்று துடைக்காதீர்கள் . fan காற்றில்  இயல்பாக காய விடுங்கள்.

*வெய்யிலில் அதிகம் அலைவதை,கலரிங் செய்து கொள்வதைத்  தவிர்க்கவும்.

*ஒன்றரை மாதம் ஒருமுறை கட்டிங் செய்து கொள்ளவும்.நீண்ட முடிக்கு பராமரிப்பு அதிகம் ஆகிறது.

* முடி  உதிர டென்ஷனும் ஒரு காரணம். நீங்கள் டென்ஷன் ஆகா விட்டாலும் பிரபஞ்சம் அப்படியேதான் இருக்கும். எனவே டென்ஷனைக் குறைத்துக் கொள்ளவும்.

*தினமும் ஏழு மணிநேரத் தூக்கம், நிறைய தண்ணீர் குடித்தல் ஆகியன முக்கியம்.

*இது எல்லாம் செய்த பின்பும் முடி கொட்டினால் 'விக்' என்ன விலை என்று விசாரிக்கவும்.அல்லது ஆண்களுக்கு சொட்டை தான் அழகு என்று மனதைத் தேற்றிக் கொள்ளவும்.=======

ஓஷோ ஜோக் 

சிறுவன் எர்னி ஒரு ஆமை வளர்த்து வந்தான்.ஒருநாள் ஆமை நீச்சல் குளத்தின் அருகே இறந்து கிடந்தது .எர்னி சத்தம் போட்டு அழத் தொடங்கி விட்டான்.

அவன் அப்பா ஓடி வந்து என்ன என்று பார்த்தார்.."ஆமை செத்துருச்சு" என்றான் எர்னி.

"அழாதே எர்னி..சமத்து இல்ல...நான் உன்னை இன்னிக்கி எக்ஸ்சிபிஷன் 
கூட்டிப் போறேன்..நிறைய ஐஸ் கிரீம் வாங்கித் தரேன்..."

எர்னி அழுகையை நிறுத்த வில்லை..

"அப்படியே ஷாப்பிங்  போய் உனக்கு புது டிரஸ் வாங்கலாம். பிறகு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு உனக்குப் பிடித்த பொம்மை வாங்கித் தாரேன் ..இப்ப சமத்தா இரு..ஆமையை புதைக்கலாம்."

எர்னி அழுவதை நிறுத்தி விட்டு ஆமையை புதைக்க ஒப்புக் கொண்டான்.

கையால் தொட்டதும் ஆமை சரேல் என்று நகர்ந்து குளத்துக்குள் ஓடியது 

"எர்னி..பாரு உன் ஆமை சாகலை" என்றார் அப்பா..

"அப்பா! அப்பா! ஆமையை  கொன்னுரலாம்ப்பா " என்றான் எர்னி.

~சமுத்ரா