இந்த வலையில் தேடவும்

Thursday, October 14, 2010

நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-9

இரண்டு மனவியல் டாக்டர்கள் தங்கள் தொழில் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்...

ஒருவர் "உங்கள் வேலை எப்படி போகிறது?" என்றார்...

இன்னொருவர் "நன்றாகத் தான் போய்க் கொண்டு இருந்தது....ஒரு மனிதன் கவுன்சிலிங்கிற்காக வந்திருந்தான்....அவன் தான் எல்லோரையும் விட உருவத்தில் கொஞ்சம் சிறியதாக இருப்பதாக தாழ்வு மனப்பான்மையில் இருந்தான்,,,,,நான் அவனுக்கு "இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை...உலகத்தில் சாதனையாளர்கள் எல்லாம் பெரும்பாலும் உருவத்தில் சற்று சிறியவர்களே" என்றெல்லாம் கூறி கவுன்சிலிங் கொடுத்துக் கொண்டிருந்தேன்...பணமும் நிறைய கொடுத்தான்....என்னுடைய துரதிர்ஷ்டம் அவனை இழந்து விட்டேன்" என்றார்...


"ஓ அப்படியா...என்ன ஆயிற்று அவனுக்கு" என்று கேட்டார் இன்னொருவர்...

"ஒருநாள் என் வீட்டுப் பூனை அவனை தின்று விட்டது...."


@@@@

முல்லா நசுருதீன் ஒரு நாள் ஒரு வீட்டின் கதவை தட்டினார்...

"என்னங்க நேத்து இங்க நடந்த பார்ட்டிக்கு என் சிநேகிதன் வந்திருந்தானா?" என்றார்...

"ஆமாம்"

"குடித்து விட்டு எல்லாரையும் ரகளை செய்தானா?"

"ஆமாம்"

"பெண்கள் மீது இடித்தானா?"

"ஆமாம்"

"சத்தம் போட்டு சாமானெல்லாம் உடைத்தானா?"

"ஆமாம்"

"அப்புறம் கடைசி கேள்வி...அவன் கூட நானும் இருந்தேனா ?"

~சமுத்ரா

7 comments:

VELU.G said...

நல்லாயிருக்குங்க

செல்வா said...

//"ஓ அப்படியா...என்ன ஆயிற்று அவனுக்கு" என்று கேட்டார் இன்னொருவர்...
"ஒருநாள் என் வீட்டுப் பூனை அவனை தின்று விட்டது...."

//

செம காமெடிங்க..!! சிரிப்பு அடக்கவே முடியல .

செல்வா said...

இரண்டாவது ஜோக் அத விட ..!!
கலக்கல் ..

Anonymous said...

what happend, you didn't post anything for last few days?????????

சமுத்ரா said...

fed up with blogging Gokul :(

சி.பி.செந்தில்குமார் said...

both 2 joks r excellent,keep it up

சி.பி.செந்தில்குமார் said...

1st jok 1st paragh threattening the reader,so pls divide or separate in to 2 parts