இந்த வலையில் தேடவும்

Wednesday, October 13, 2010

நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-8

ஒரு நாள் விரக்தியடைந்த மனிதன் ஒருவன் ஒரு மன நல டாக்டரிடம் வந்து "டாக்டர்,,,யாருமே என்னைக் கண்டு கொள்வதில்லை...நான் என்னவோ அங்கே இல்லாதது போல் நடத்துகிறார்கள்....ஒரு காற்றைப் போல,,,என் இருப்பையே யாரும் பொருட்படுத்துவதில்லை....நான் மிகவும் புறக்கணிக்கப் பட்டது போல் உணர்கிறேன்...தயவு செய்து உதவுங்க" என்றான்...


டாக்டர் தன் உதவியாளரை அழைக்கும் மணியை அழுத்தி "அடுத்த பேஷண்ட் ப்ளீஸ்" என்றார்...


***

ஒரு நாள் ஒரு இளைஞன் ஒரு மனநல மருத்துவரிடம் வந்தான்...

"டாக்டர் நான் என் குதிரையை காதலிக்கிறேன்"

டாக்டர் "ஓ அப்படியா? இது சாதாரணம் தான்....எல்லோரும் தான் அவர்கள் செல்ல மிருகங்களை காதலிப்பார்கள்...நீங்கள் நார்மல் தான்"

"அது வந்து டாக்டர் ,நான் என் குதிரையால் உடலளவில் கூட கவரப்படுகிறேன்"

என்றான்

"சரி ,,அது ஆண் குதிரையா, பெண் குதிரையா?"

"டாக்டர்....கொஞ்சம் வார்த்தைகளை கவனிச்சுப் பேசுங்க...என்னை என்ன அந்த மாதிரி ஹோமோ கேசுன்னு நெனைச்சீங்களா?" என்றான்


சமுத்ரா

No comments: