இந்த வலையில் தேடவும்

Thursday, October 7, 2010

மஹிதர் நீ மறைந்து விடு! -2 (திகில் தொடர்)

கோவணத்தாண்டி சொல்வது:

காயப் பதிதனிலே கந்தமூலம் வாங்கி
மாயப் பணிபூண்டு வாழுஞ் சரக்கெடுத்தே
ஆயத் துறைதனிலே ஆராய்ந்து பார்க்குமுன்னே
மாயச் சுருளோலை என் கண்ணம்மா
மடிமேல் விழுந்ததென்ன ?
மஹிதர் என்ன சொல்லப் போகிறான் என்று கேட்கத் தயாரானேன்....

"சார் கனவு ஒரு தரம் வந்திருந்தால் எல்லாரையும் போல நான் விட்டிருப்பேன் ...ரெண்டு தரம் கூட ஓகே...ஆனால்
எனக்கு அது இந்த மூன்று மாதத்தில் ஏழெட்டு தடவை வந்து விட்டது" என்றான்....

ஒரே கனவா???
அமாம்

சரி கனவை சொல்லுங்கள்....

கனவில் ஒரு வினோத உருவம் வருகிறது சார்.... கழுகுத் தலையும் புலி உடம்பும் என்று நினைக்கிறேன்...அந்த உருவம் வந்து "மஹிதர், சீக்கிரம் வா , சீக்கிரம் வா" என்கிறது...கனவில்," நான் எங்கே வர வேண்டும்?" என்று கேட்கிறேன் ..அதற்கு அந்த உருவம் சிரித்து விட்டு (?) தலை வேறு உடல் வேறாகப் பிரிந்து விடுகிறது இத்துடன் கனவு முடிந்து விடுகிறது" என்றான்....

"மிஸ்டர். மஹிதர்....தூங்கும் போது காமிக்ஸ் கதைகளைப் படிப்பீர்களா?" என்றேன்

"இன்னும் நீங்கள் என்னை நம்பவில்லையா" என்றான்...

"இல்லை மஹிதர் , நாங்கள் படித்த சைக்காலஜி படி ஒரே கனவு ஒரு தடவைக்கு மேல் திரும்ப வர வாய்ப்பு இல்லை..மிஞ்சிப் போனால் ரெண்டு தடவை வரலாம்....ஆனால் ஒருவருக்கு ஏதோ ஒரு விஷயத்தின் மீது 'obsession ' என்பார்களே? தீவிரமான வெறி...அது ஆசையாகவும் இருக்கலாம் அல்லது வெறுப்பாகவும் இருக்கலாம்...அப்படி ஏதாவது இருந்தால் அந்த விஷயங்கள் திரும்பத் திரும்ப கனவில் வரும்....உதாரணமாக உங்களுக்கு நீச்சல் அடிப்பது ரொம்ப பிடித்தமான ஒன்றாக இருந்தால் உங்கள் கனவுகளில் பெரும்பாலானவை நீர்நிலைகள் சம்பந்தப் பட்ட கனவுகளாக வரலாம்....இல்லை நீங்கள் சின்ன வயதில் தண்ணீரில் விழுந்து, சாவின் விளிம்புக்குப் போய் கடைசி நொடிகளில் காப்பற்றப் பட்டிருந்தால் அந்த அனுபவமே மீண்டும் மீண்டும் கனவாக வரலாம்.....இதை விட்டுப் பார்த்தால் நீங்கள் என்னவோ புலி, கழுகு என்றெல்லாம் கொஞ்சம் ஓவராக சொல்வதால் உங்களுக்கு காமிக்ஸ் Obsession இருக்கிறதா என்று கேட்டேன்,,,," என்று விளக்கினேன்...

"இல்லை சார்....எனக்கு புத்தகம் என்றாலே அலர்ஜி...இதற்கும் நான் சென்னையின் பிரபலமான மால் ஒன்றில் பெரிய புக் ஷாப் ஒன்றை வைத்திருக்கிறேன்....எம்.பீ.எ எல்லாம் படித்தேன்....ஆனால் ஒருத்தர் கீழ் வேலை செய்யறது எல்லாம் பேஜார் சார்...என் மாமா கொஞ்சம் பெரிய ஆள் ...அவரிடம் யோசனை கேட்டதில் influence யூஸ் பாணி இந்த ஷாப்பை ஏற்பாடு செய்து கொடுத்தார் "உங்கள் ஷாப்பின் பெயர்?
"மஹி
தர் புக் பாரடைஸ்"

உங்கள் ஷாப்பில் குழந்தைகளுக்கான காமிக்ஸ் புத்தகங்கள் இருக்கிறதா? என்றேன்

இல்லாமலா? குழந்தைகளுக்காகவே செபரேடாக ஒரு புளோரே இருக்கிறது....

அங்கே அடிக்கடி போவீர்களா?

எப்பவாவது தான் ...ஸ்டாக் கவுன்ட் செய்ய...மற்றபடி section staff -கள் இருக்கிறார்கள்....

சரி கனவு முதன் முதலில் எப்போது வந்தது? அன்று ஏதாவது காமிக்ஸ்சை தற்செயலாகப் படித்தீர்களா? என்று கேட்டேன்....

மூன்று மாதத்திற்கு முன்பு....அன்று எதுவும் பெருசாக நடக்கவில்லை....எட்டு மணிக்கு கடையைப் பூட்டியதும் நிமிஷாவுடன் டின்னெர் சாப்பிட்டேன் ...அப்பறம் வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் டி.வி பார்த்து விட்டு தூங்கிட்டேன்....சத்தியமா சுட்டி டி.வி. இல்லை " என்றான்

"அது யார் நிமிஷா? "
அவன் லேசாக வெட்கப்பட்டு "உட் பி சார் " என்றான்...

"அது என்ன பேர் நிமிஷா, வினாடின்னுட்டு?" என்று இடைமறித்தாள் தரங்கிணி....
நிமிஷான்னா கண் சிமிட்டறதாம்..இதுக்கு மேலே கேட்காதீங்க என்று சிரித்தான்....

"சரி உங்க பேருக்கு என்ன அர்த்தம்"? என்று கேட்டேன்...
"சார் ஆளை விடுங்க" என்றான்....

தெருஞ்சுக்கணும் மஹிதர்....அப்படின்னா "பூமியைத் தரித்தவன்...அதாவது வராஹப் பெருமாள்...."

ஓ! சரி சார்...இப்ப என் பிரச்சனைக்கு என்ன solution ? மூணு மாசமா சரியா தூக்கம் இல்லை..கண் மூடுனா எப்ப அந்தக் கழுகு வருமோன்னு பயமா இருக்கு" என்றான்....

இதப் பாருங்க மஹிதர், உங்க பிரச்சனை கொஞ்சம் சிக்கலானது....கனவுகளை அறிவியல் பூர்வமாக வகைப் படுத்தினால் முதலில் Ordinary dream ...ஒன்றுக்கும் உதவாத பகல் கனவுகள்....உதாரணமாக உங்கள் வீட்டைச் சுற்றிலும் வெள்ளம் வந்து உள்ளே சமையலறையில் நேற்று நீங்கள் பஸ்ஸில் பார்த்த பெண் காபி போட்டுக் கொண்டிருக்கும் போது நீங்கள் சைக்கிளில் இருந்து விழுந்து விடுவதாக சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் வருவது

இரண்டாவது Lucid dream ....தெளிவானது...அதாவது பட்டினியில் தூங்கினால் கனவில் வெண் பொங்கல், வடை, பீசா எல்லாம் வருவது...

அடுத்து Telepathic ...உதாரணமாக உங்களுக்கு நெருக்கமான ஒருவர் மிகுந்த வேதனையில் இருக்கிறார் என்றால் அது உங்களுக்கு கனவுகள் மூலம் தெரிவிக்கப் படலாம்

அடுத்து Premonitory .....வருவதை சொல்வது....சில பேருக்கு அடுத்த நாள் விமானம் ஏற வேண்டும் என்றால் முதல் நாள் தூக்கத்தில் கனவு வந்து போகாதே என்று சொல்லும்...சில சமயம் அந்த விமானம் விபத்துக்கு உள்ளாகவும் செய்யும்...

அடுத்து nightmare எனப்படும் திகில் கனவுகள்....


இதில் உங்களுக்கு வந்தது கண்டிப்பாக நாலாவது அல்லது ஐந்தாவது வகை....நாலாவது வகை என்றால் interesting !உங்கள் கேசை நான் என் வேலையை விட்டாலும் பரவாயில்லை என்று எடுத்துக் கொள்கிறேன்....ஐந்தாவது வகையா என்று தெரிந்து கொள்ள உங்களை கொஞ்சம் 'ஹிப்னாடைஸ்' செய்ய வேண்டும்."..என்றேன்

"சரி சார்" என்ன என்னவோ சொல்கிறீர்கள்.... "நரிக்கு பயந்து சிங்கத்திடம் மாட்டிக் கொண்ட கதை ஆகாமல் இருந்தால் சரி...என்றான்"....

சரி Don 't worry ! இப்ப டைம் அச்சு...நாளைக்கு காலைல ஹிப்னா வுக்கு வந்துருங்க....மனசை ரிலாக்ஸா வெச்சுக்கிட்டு மியூசிக் பிடிச்சா கேளுங்க....இன்னிக்கு கனவு வந்தால் சொல்லுங்க...என்றேன்

சரி சார்,,,thank you! என்று கூறி அவன் விடை பெற்றான்..

அவன் போனதும் தரங்கிணி,,,"சார் இது ஏதோ மரை கழண்ட கேஸ் போல் இருக்கிறது.....எதாவது சாக்கு சொல்லி
எஸ்கேப் ஆகிறலாம்" என்றாள்..

ஆனால் எனக்கு என்னவோ மஹிதர் சொல்வது உண்மை என்று தான் தோன்றியது....M .B .A படித்த ஒரு இளைஞன் ..நல்ல பிசினஸ்...கேர்ள் பிரண்ட் வேறு .....இவன் எதற்காக ஒரு மனவியல் டாக்டரிடம் வந்து ஒரு மணி நேரம் பேச வேண்டும்?நிச்சயம் ஏதோ பிரச்சனை இருக்கிறது...ஒரு கை பார்த்து விடலாம் என்று முடிவெடுத்தேன்....ஆனால் விஷயம் கொஞ்சம் சவாலாக இருந்தது ...எதற்கும் ராத்திரி 'analysis of dreams ' என்ற என் பாடப்புத்தகத்தை ஒரு முறை புரட்டிப் பார்க்கலாம் என்று தீர்மானித்தேன்....

அன்று இரவு படித்து விட்டு அப்படியே தூங்கிப் போய் விட்டேன்...மறுநாள் மஹிதர் வருவதாகவும் அவன் அப்படியே திடீரென்று கழுகாக மாறி ஜன்னல் வழியே பறந்து விடுவதாகவும் ஒரு கனவு வந்தது...

தொடரும்......


முந்தைய அத்தியாயம் படிக்க இங்கே கிளிக் செய்க

No comments: