இந்த வலையில் தேடவும்

Wednesday, February 27, 2013

கலைடாஸ்கோப்-85

லைடாஸ்கோப்-85 உங்களை வரவேற்கிறது.


இந்த வயலினை எத்தனை ரூபாய்க்கு விற்பீர்கள் ?


இதைப் பற்றி கடைசியில் பேசலாம்...

ஒருநாள் ஜன்னல் பக்கம் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும்போது 'johari window ' என்பதை யோசித்துப் பாருங்கள்.இந்த ஜன்னல் படத்தில் காட்டப்பட்டுள்ளது.இது நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது .



ஜன்னலின் முதல் பாகம் -(உள்ளங்கை நெல்லிக்காய்..)

தனக்கும் மற்றவர்களுக்கும் தெளிவாகத் தெரிவது...'அரங்கம்' என்று அழைக்கலாம். உதாரணமாக உங்களுக்கு திக்குவாய் இருந்தால் அது இருப்பது உங்களுக்கும் தெரியும் அடுத்தவருக்கும் தெரியும். உங்கள் உடலில் உள்ள ஒரு குறைபாடு, சில விநோதப் பழக்கங்கள் , போன்றவை இதில் வரும்  ..

இரண்டாம் பாகம்: (தலை முடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு குப்பை)

உங்களுக்குத் தெரியாமல் மற்றவருக்குத் தெரிவது.. இது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம்...அனுமாருக்கு தன் உடலின் பலம் தனக்கே தெரியாதது மாதிரி..அதே போல சில பேருக்கு நாம் எவ்வளவு பெருந்தன்மையாக அல்லது கீழ்த்தரமாக நடந்து கொள்கிறோம் என்பதே தெரியாது...ஆனால் மற்றவர்கள் அதை எளிதில்  உணர்வார்கள்..உடலின் குறைபாடுகளில் சில , நம் பேச்சு போன்றவை கூட இதில் வரும்..சிறுவன் ஒருவனுக்கு தான் நார்மலாக பேசுவதாக , நடப்பதாக தோன்றுவது மற்றவர்களுக்கு என்ன அவன் பொம்பளைப் பிள்ளை மாதிரி நடக்கறான், பேசறான் என்று நினைக்க வைக்கும்..தான் சரியான உச்சரிப்புடன்தான் பேசுகிறேனா என்பது சிலருக்குத் தெரியாது..மலையாளிகளுக்கு தாங்கள் 'கோலேஜ் ' என்று சொல்வது தெரியுமா? ஒரிசாக் காரர்கள் ஒருமாதிரி பேசுவார்கள்...உதாரணமாக, 'I met her , she told me to test' என்பதை 'I mate her. she told me to taste' என்று ஏடாகூடமாக சொல்வார்கள்.. 'உங்களுக்கு அடிக்கடி கோபம் வருகிறதே' ' ஏன்  உன் கன்னத்தில் இருக்கும் மருவை தடவிக் கொண்டே இருக்கிறாய்' 'ஏன் காலை ஆட்டிக் கொண்டே இருக்கிறாய்'என்று கேட்டால் நாம் ஆச்சரியமாக 'அப்படியா?' என்போம்..

மூன்றாம் பாகம்: (நாம் போட்டிருக்கும் பனியன் பயங்கர ஓட்டை !)


நமக்குத் தெரிந்தது ;மற்றவர்களுக்குத் தெரியாதது...நிலாவைப் போல நம் எல்லாருக்கும் ஒரு இருண்ட பாகம் இருக்கிறது . அதை நாம் மட்டுமே பார்க்க முடியும்; உணர முடியும்..ஏதோ ஒன்றை நாம் யாரிடமும் சொல்லாமல் கடைசி வரை மறைத்தே வைக்கிறோம்.நமக்கு மிக நெருக்கமானவர்களிடம் கூட பகிர்ந்து கொள்வதில்லை..'நான் ரொம்பவே ஓப்பன் டைப்' 'என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்' என்று சொல்பவர்களிடம் கூட ஏதோ ஒரு ரகசியம் ஒளிந்திருக்கும்..'நம் எல்லோருக்குள்ளும் ஒரு சைக்கோ ஒளிந்து கொண்டிருக்கிறான் (ள் ) என்று ஒரு தியரி சொல்கிறது...சுஜாதாவின் 'முரண்' கதை படித்திருக்கிறீர்களா?


 நான்காவது பாகம்: (விதி!)

நமக்கும் தெரியாதது, மற்றவர்களுக்கும் தெரியாதது..சில சமயம் நாம் ஏன் இப்படி நடந்து கொண்டோம், ஏன் இப்படி நடந்து கொள்கிறோம், எதனால் நாம் உந்தப்படுகிறோம் எது நம்மை இழுக்கிறது , என்ன செய்கிறோம் என்று நமக்குத் தெரியாது (மற்றவர்களுக்கும்) இந்த நான்காவது quadrant -இல் தான் விதி, கர்மா, ஜன்ம பந்தம், ஆத்மா போன்றவை வருகின்றன  போலிருக்கிறது. 


சரி...இன்னொருவர் நம்மை எப்படிப் பார்க்கிறாரோ அப்படி நம்மை நாமே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை நமக்குள் இருக்கிறதாம்.. போட்டோவிலோ வீடியோவிலோ இல்லாமல் நேரிலேயே!

ஒரு ஹைக்கூ :-

கூட்டமான 
வியர்வை கசியும் பேருந்து ஒன்றில் 
ஸ்பீக்கர் பாடலை 
திரும்ப பாடும் 
ஒரு ஆள்..

 When it's early , it's never too early ; When it's late, it's always too late - Murphy

 பெங்களூருவில் bus day என்று ஒருநாளை கொண்டாடுகிறார்கள்..ஒரு நாள் மட்டும் எல்லாரும் தங்கள் கார்களையும் ஸ்கூட்டர்களையும்,பின்னால் அமர்ந்து வரும் கேர்ள் பிரண்டையும்  மறந்து விட்டு bmtc பஸ்களில்  வாருங்கள்,,ட்ராபிக் -கை குறையுங்கள் என்று கேட்டுக் கொள்கிறார்கள்.. சில பேர்களுக்கு பஸ்ஸில் பயணித்தே பலநாட்கள் ஆகிவிட்டதால் பஸ் பயணம் அவர்களின் அலர்ஜி லிஸ்டில் சேர்ந்து விட்டது. அய்யே பஸ்ஸா ? (கோவை சரளா வாய்சில் படிக்கவும்)..எனவே, பஸ் டேயாவது, கிஸ் டேயாவது , நாங்கள் வழக்கம் போல் ஏ .சி. போட்டுக் கொண்டு, தேவை இல்லாமல் ஹாரன் செய்து கொண்டு, சிக்னலில் கை ஏந்துபவர்களை குப்பை போல் பார்த்துக் கொண்டு காரில் தான் வருவோம் என்று சிலர் வருகிறார்கள்...சரி..


பஸ்களில் தான் எத்தனை சுவாரஸ்யங்கள்!

 * எந்த ஸ்டாப்பில் இறங்க வேண்டும் என்று தெரியாமல் போனால் ஒரு தலைவலி..'இங்கிருந்து மூணாவது ஸ்டாப் சார்' என்று சொன்னால் , பஸ் நடுவில் எங்காவது ஜாம் ஆகி நின்று விட்டால் குழப்பம் தான்.. மேலும் ,  'ஸ்டாப் இது தான்னு நினைக்கிறன் , எதுக்கும் கண்டக்டரை ஒரு வாட்டி கேட்டுக்கங்க' என்று சிலபேர் சொல்வார்கள்.

* நகர்ந்து கொண்டிருக்கும் பஸ்ஸில் சாகசம் செய்து ,அரக்கப் பறக்க ஏறி உட்கார்ந்து கொண்டால் , ஒரு பத்தடி நகர்ந்து போய் பஸ் அரைமணி நேரம் நிற்கும்..

* கூட்டம் வழியும் எந்த ஒரு பஸ்சிலும் பயமுறுத்தும் ஆயுதங்களுடன் யாரோ ஒரு தொழிலாளி ஏறி, அவருடைய கடப்பாரை போன்ற ஆயுதங்களை நம் காலடியிலேயே வைத்து கதிகலங்க வைப்பார்..

* டிக்கெட்டின் பின்பக்கம் ஒருரூபாய் இரண்டு ரூபாய் என்று எழுதி இருந்தால் அதை மறந்து விட வேண்டியது தான்...நான் ஐந்து ரூபாய்க்கு கம்மியாக எழுதி இருந்தால் திரும்பிக் கேட்கவே மாட்டேன்...பணம் நிறைய இருக்கிறதா என்று கேட்க வேண்டாம்...ஒருவித கூச்சம் தான்.

* சிக்னல் ரொம்ப நீளமாக இருக்கிறது என்று இறங்கித் தொலைத்தால் அடுத்த நிமிடம் சிக்னல் கிளியர் ஆகி பேருந்து நகர ஆரம்பிக்கும்.

* இடம் இருந்தாலும் முன் சீட்டில் மட்டும் உட்கார்ந்து விடாதீர்கள்.. கண்டிப்பாக ஒரு பெண் வந்து 'இது லேடீஸ் சீட்' என்று சைகை செய்வார்.. அது எத்தனை பெரிய முன்னேறிய நகரமாக இருந்தாலும்! 

* தலைகால் புரியாமல் முதன்முதலில் ஒரு புதிய ரூட் பஸ்ஸில் ஏறிக் கொண்டு எங்கே இறங்க வேண்டுமோ என்று தவித்துக் கொண்டிருந்தால் மிகச் சரியாக உங்களிடம் ஒருவர் வந்து 'சார், இந்த இண்டெல் ஆபீஸ்  ஸ்டாப் எங்கே' என்று கேட்டு வைப்பார்..

*பஸ்ஸில் உங்களுக்குப் பிடித்த பாட்டு வந்து பாலைவனச் சோலை போல உணர்ந்தால் அடுத்த நிமிடம் டிரைவர் ஸ்டேஷனை மாற்றி விடுவார் 

* சிலருக்கு பஸ்ஸில் ஏறியதும் தான் செல்போன் என்ற வஸ்து இருப்பதே ஞாபகம் வரும் போல..அரிசி விலையில் இருந்து அமெரிக்க அதிபர் தேர்தல் வரை பேசுவார்கள்..  
 * பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து விட்டோம்..டிக்கெட் வாங்கவில்லை...பஸ் எடுக்க கொஞ்ச நேரம் ஆகும்போல் தெரிகிறது.இப்போது இன்னொரு பஸ் புறப்படத் தயாராக அருகில் வந்து நிற்கிறது... இப்போது இதிலேயே இருக்கலாமா இல்லை கொஞ்சம் சர்க்கஸ் வேலை செய்து அதில் போகலாமா என்பது ஒரு பெரிய போராட்டம்...இதிலேயே இருக்கலாம் எதற்கு ரிஸ்க் எடுக்கணும்,ஆபீசில் நமக்காக ஒபாமாவா வெயிட் பண்றார்? என்று நினைத்தால் நமக்கு வயசாகி விட்டது என்று அர்த்தம்...



If it looks like a duck, swims like a duck, and quacks like a duck, then it probably is a duck.


  Inductive reasoning என்று ஒரு சமாசாரம் இருக்கிறது.கீழிருந்து மேலே (bottom up )வாலைப் பிடித்துக் கொண்டு தலையை அனுமானம் செய்யும் ஒரு முயற்சி...கண்ணை மூடிக் கொண்டு ஒரு மாட்டு வாலை பிடித்துப் பார்க்கிறீர்கள்.. பிறகு அது ஒரு மாடு என்று அதன் முகத்தைக் காட்டுகிறார்கள்... பிறகு, இன்னொரு சமயத்தில் கண்ணை மூடிக் கொண்டு மாட்டு வாலைத் தொட்டுப் பார்த்து 'இது மாடு தான் ' என்று சத்தியம் செய்கிறது இந்த அணுகுமுறை.. ஒரு குழந்தை தனக்கு சுற்றிலும் நடக்கும் விஷயங்களைக் கற்றுக் கொள்வது இந்த முறையில் தான் என்கிறார்கள்...

சில தத்துவ அறிஞர்கள் , as usual , இதை எதிர்க்கிறார்கள்...அது எப்படி? ஏற்கனவே நமக்கு உள்ள , கொள்கை ரீதியான, அறிவை வைத்துக் கொண்டு ஒரு விஷயத்தை முடிவெடுக்க முடியும் என்று கேள்வி கேட்கிறார்கள்? ஒரு பறவை வாத்து போல நடக்கிறது, வாத்து போல கத்துகிறது, வாத்து போல நீந்துகிறது என்றால் அது 100% வாத்து தான் என்று எப்படிச் சொல்ல முடியும்...அது பேட்டரியில் இயங்கும் வாத்து பொம்மையாகக் கூட இருக்கலாம்!



 
 தொடர்ச்சியாக, காக்கை புதிர் (Raven  paradox )ஒன்றை சொல்கிறார்கள். அது இப்படிப் போகிறது..

1. எல்லாக் காக்கைகளும் கறுப்பு 

2. கறுப்பாக இல்லாமல் இருக்கும் பொருட்கள் காக்கை அல்ல.

3. இந்த ஆப்பிள் சிவப்பாக இருக்கிறது. எனவே இது காக்கை அல்ல..

இங்கே, வாக்கியம்  (3)  வாக்கியம் (1) ஐ மறைமுகமாக நிரூபிக்கிறது... அதாவது இந்த ஆப்பிள் சிவப்பாக இருப்பதே எல்லாக் காக்கையும் கறுப்பு தான் என்ற கூற்றுக்கு வலு சேர்த்து  அபத்தமாக நிரூபித்து விடுகிறது.( ஆப்பிளுக்கும் காக்கைக்கும் சம்பந்தம் இல்லை என்ற போதிலும்) 

A = B , B =C என்றால் A =C யா? தர்க்கம்(லாஜிக்) அப்படித் தான் சொல்கிறது...அது எப்போதும் சரியல்ல...
ஒரு உதாரணம் 2=√ 4 மேலும் √ 4= -2 எனவே 2= -2 அதாவது 4=0 என்று நிரூபிப்பது...


சரி, காக்கையைப் பார்த்து 

   

இப்படியெல்லாம் கணக்கு போடுவது சிறந்ததா? அல்லது 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா ' என்று அத்வைதத்தில் உருகும் பக்தி நிலை சிறந்ததா?




 தர்க்கம் என்பது ஒரு விபச்சாரியைப் போன்றது என்கிறார் ஓஷோ. இரண்டு பக்கமும் சாயும்..உதாரணமாக, ஒருத்தர் சின்ன வயதிலேயே செத்துப் போவது நல்லதா இல்லையா என்பதை இரண்டு பக்கமும் பேசலாம்...

1. நல்லது.. ஏனென்றால் அவருடன் நாம் கொஞ்ச காலமே இருக்கிறோம்..அவர் நிறைய காலம் இருந்தால் அவருடன் நாம் இனிமையான கணங்கள் நிறைய களித்திருப்போம்.எனவே வயதாக ஆக ஒருவரை பிரிவது மிகுந்த கஷ்டம்..மேலும் ஒருவர் வயதாக ஆக அவரது matured face ஐப் பார்க்கிறோம்..அவரது வழிநடத்துதல்கள் நமக்கு மிக உதவியாக இருக்கின்றன..அவர் வெறுமனே படுக்கையில் படுத்திருந்தாலும் வீட்டில் பெரிய தலை ஒன்று இருப்பது  நமக்கு பெரிய பாதுகாப்பாக இருக்கிறது. அவரது இறப்புக்குப் பின் அவைகளை நாம் இழக்கிறோம்.


2. நல்லதல்ல...ஒருவர் வயதாகி சாகும் போது ஏதோ ஒன்று பூர்த்தியாகி விடுகிறது. சின்ன வயதில் ஒருவர் சாகும்போது அவரை மட்டும் நாம் இழப்பதில்லை...அவர் என்ன என்னவாக ஆகி இருக்க முடியுமோ அந்த சாத்தியத்தையும் இழக்கிறோம் ..எனவே சின்ன வயதில் ஒருவர் சாவது மிகக் கொடுமையானது ...

Question :How many mathematicians does it take to change a light bulb?
Answer :  0.99999999999999999999999999...........


Inductive reasoning கணிதத்தில் proof by induction என்று அழைக்கப் படுகிறது...பழமொழியில் சொல்வதானால் ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...+1 அல்லது +2 வில் இதைப் படித்திருப்போம்...அதாவது ஒரு சார்பு p (k ) , k =0 மற்றும் k =1ஆகிய மதிப்புகளுக்கு உண்மை என்று முதலில் நிரூபிக்க வேண்டும்...எனவே k என்ற மதிப்புக்கு p (k ) உண்மை என்றால் (k =1), p (k +1)  உம் உண்மை என்று நிரூபித்தால் போதும்... பின்னர் k யின் அத்தனை மதிப்புகளுக்கும் p (k ) உண்மை என்று ஆகி விடும்.[ஏனென்றால் k+2 = (k+1) +1 , k+3 = (k+2) +1 etc.,] உதாரணமாக, எல்லாருக்கும் தெரிந்த p (a )=(a+1)2 = a2+2a+1 என்பதை எடுத்துக் கொள்வோம்...இதை உண்மை என்று நிரூபிக்க (0+1)2 = 0^2+2.0+1 1=1 எனவே p (0) உண்மை ...
p(1)=(1+1)2= 1^2+2.1+1^2  2^2=1+2+1 4=4 p(1)உம் உண்மை... மேலும் இது p(k+1)க்கு உண்மை என்று நிரூபித்தால் போதும் ...
பார்க்க படம் 




இதற்கு எதிர்மாறாக இன்னொன்று proof by contradiction என்று அழைக்கப்படுகிறது...reductio ad absurdum...
அதாவது ஒரு கூற்று தவறு என்று  அதை ஏற்றுக் கொள்வதால் கிடைக்கும் பொருளற்ற நம்ப இயலாத  விளைவை  (result ) வைத்து நிரூபிப்பது.. அல்லது ஒரு கூற்று சரி என்று அதை மறுப்பதால் வரும்  பொருளற்ற நம்ப இயலாத  விளைவை  (result ) வைத்து நிரூபிப்பது.உதாரணமாக , 'அங்கே இருக்கும் அந்த மனிதன் நார்மல் தான்' என்று நிரூபி என்று சொன்னால், 'அவன் நார்மல் தான் என்னைப் பார்த்து புன்னகைத்து ஹலோ சொன்னான்' என்று சொல்வது proof by induction...'அவன் நார்மல் தான்.. இல்லை  என்றால் அவன் தனக்குத் தானே மேலே பார்த்து சிரித்துக் கொண்டிருப்பான்' என்று சொல்வது proof  by contradiction ..கணிதத்தில் இதற்கு மிக அழகான ஒரு உபயோகம் இருக்கிறது.....
 
√ 2 என்பது ஒரு irrational number என்பது நமக்குத் தெரியும்..அதாவது அதன் மதிப்பு முடிவின்றி, மீண்டு வராமல்  தொடர்ந்து கொண்டே இருக்கும்...(1.4142135623746....)அதாவது அதை இரண்டு முழு எண்களின் பின்னமாக (a /b )நம்மால் எழுத முடியாது...இதை நிரூபிப்பதற்கு முதலில் நாம்
√ 2 என்பது ஒரு rational number என்று கருதுவோம்...(தவறாக) எனவே      √ 2= a/b ...இங்கே a மற்றும் b என்பவை முழு எண்கள் மேலும் a/b என்பதை மேலும் சுருக்க முடியாது...எனவே இங்கே a அல்லது b இரண்டில் ஒன்று கண்டிப்பாக ஒற்றை எண்ணாக இருக்க வேண்டும்..(0)அதாவது, 8/6 என்பதை மேலும் சுருக்க முடியும்...8/3 என்பதை சுருக்க முடியாது...


√ 2= p / q (1)

இரண்டு புறமும் வர்க்கப்படுத்தினால்,

2 = p2/q2 or  p 2 = 2. q  2   (2)

p2 = 2  q^2 என்று வருகிறது...p2 என்பது q2 இன் இரண்டு மடங்காக இருப்பதால் p2 ஒரு இரட்டை எண்ணாக இருக்க வேண்டும்...p2 இரட்டை என்பதால் p யும் கண்டிப்பாக இரட்டை எண்ணாக இருக்க வேண்டும்.. எனவே நாம் p என்பதை p =2s என்று எழுத முடியும்...(இங்கே s என்பது இன்னொரு இரட்டை முழு எண் )

(2) =

 p 2 = 2. q 2 


(2s )2 = 2(q2)

q2 = 2s2  எனவே , இங்கே, 2 வருவதால் q2 ஒரு இரட்டை எண் ..எனவே q ஒரு இரட்டை எண் ...ஆனால் இது நம்முடைய கூற்று (0) உடன் முற்றிலும் முரண்படுகிறது...p மற்றும் q இரண்டில் ஒன்று கண்டிப்பாக ஒற்றை எண் என்று (0) சொல்கிறது...ஆனால் (2) இரண்டுமே இரட்டை எண் என்று சொல்கிறது...இந்த முரண்பாடான விளைவு வருவதால் நம்முடைய ஊகம் √ 2=a/b என்பது அதாவது √ 2 ஒரு rational நம்பர் என்பது தவறு என்று ஆகிறது...எனவே √ 2 must be irrational ...







உங்கள் தாத்தா வாசித்த இந்த வயலினை எத்தனை ரூபாய்க்கு விற்பீர்கள் ?


இப்போது உடனே உங்கள் பழைய பதிலை மாற்றிக் கொண்டிருப்பீர்கள் தானே? மனிதர்கள் தாங்கள் உபயோகிக்கும் பொருள்களுக்கு ஏன் இப்படி தங்கள் emotion , உணர்வுகளை attach செய்ய வேண்டும்?என்று ஒரு கேள்வி உலவுகிறது . ஒரு பொருளின் விலை என்பது பொதுவாக அதன் மூலப் பொருட்களின் விலை + செய்கூலி அல்லவா? ஆனால் அதில் தேவை இல்லாமல் உணர்சிகளை இணைப்பதால் அதன் விலை கண்டபடி உயர்கிறது...ஏன், அது விலை மதிப்பற்றதாகக் கூட ஆகிறது...காந்தியின் கண்ணாடி, ஹிட்லரின் கடிகாரம், அக்பரின் செருப்பு  என்று சில பொருட்கள் கொள்ளை விலைக்கு ஏலம் விடப்படுவதைப் பார்த்திருப்போம்...ஏன் இந்த emotional attachment ? செருப்பு வெறும் செருப்பு தான்! ஒரு சட்டைக்கு, ஒரு வாட்சுக்கு , ஒரு செருப்புக்கு, நாம் யாரிடம் இருக்கிறோம் என்பது தெரியுமா? ஒரு வீட்டுக்கு அதன் ஓனரைப் பற்றி ஏதாவது தகவல் தெரியுமா? நீங்கள் அதை விற்று விட்டு வெளியூருக்கு குடி பெயர்ந்தால் அது கண்ணீர் விடுமா?பொருட்களை விடுங்கள்...உங்கள் உடலுக்கே உங்களைப் பற்றி ஏதாவது idea இருக்குமா? உங்கள் உடலில் உள்ள செல்களுக்கு எஜமானன் இவன்தான் என்று என்றைக்காவது செய்தி சொல்லப் பட்டிருக்கிறதா? இல்லையே! ஒரு பேனாவை எப்படி நாம் உரிமை கொண்டாட முடியாதோ அதே போலதான் உடலையும்..

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி இங்கே 
ஒருத்தரையும் பொல்லாங்கு சொல்லாதே - பருத்த தொந்தி 
நம்மதென்று நாமிருக்க நாய் நரி பேய் கழுகு 
தம்மதென்று தாமிருக்கும் தான்

என்று சித்தர் பாடல் பாடினால் என்னை அடிக்க வருவீர்கள்...

.it 's always one-way !!! ரம்பா தன் தொடையழகை எண்ணி பெருமைப் பட்டுக் கொள்ளலாம்...ஆனால் அந்தத் தொடைக்கு, தொடை எலும்புக்கு  ரம்பா என்று ஒரு ஜந்து இருப்பதே தெரியாது...உங்களுக்கு வேண்டுமானால் உங்கள் ஸ்கூல் , உங்கள் காலேஜ் , உங்கள் 18b பஸ் , உங்கள் டியூசன் சென்டர் , உங்கள் மயிலிறகு, போன்றவை emotionally முக்கியமாக இருக்கலாம்...ஆனால் அவைகளுக்கு நீங்கள் இருந்தது, இருப்பது ஒன்றும் தெரியாது...பூமிக்கு , சூரியனுக்கு நாம் இருப்பதே தெரியுமா?  'பொருட்களை உபயோகியுங்கள் , மனிதர்களை உரிமை கொண்டாடுங்கள்'...நாமோ பொருட்களை உரிமை கொண்டாடுகிறோம்; மனிதர்களை உபயோகிக்கிறோம்..


ஓஷோ ஜோக்...

   
இரண்டு ஆண்கள் தங்கள் மனைவிகளை ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தொலைத்து விட்டனர்...

ஒருவன், இன்னொருவனைப் பார்த்து , "சார், என் மனைவியைப் பார்த்தீர்களா? காணாமல் போய் விட்டாள் , அவளைத் தேடுகிறேன்" என்றான்....

இன்னொருவன் "அப்படியா, என்ன ஆச்சரியம்,,, என் மனைவியும் இங்கே காணாமல் போய் விட்டாள், நானும் தேடிக் கொண்டிருக்கிறேன்.. " என்றான்...

முதலாமவன் " உங்கள் மனைவி எப்படி இருப்பார்கள்?" என்றான்...

இவன் " அவள் உயரமாக செக்ஸ்சியாக இருப்பாள்...நல்ல நிறம், ஜூசி லிப்ஸ், நீண்ட முடி, பெரிய மார்பு, டைட்டான பின்புறம்; சரி உங்கள் மனைவி எப்படி இருப்பார்கள்? "என்றான்..

முதல் ஆள், 'அதை ஏன் சார் இப்ப கேட்டுக்கிட்டு , முதலில் டைம் வேஸ்ட் பண்ணாமல் உங்கள் மனைவியைத் தேடலாம்" என்றான்...

சமுத்ரா ...

Wednesday, February 20, 2013

கலைடாஸ்கோப்-84

லைடாஸ்கோப்-84 உங்களை வரவேற்கிறது.. 


“Quality means doing it right when no one is looking.” - Henry Ford


ஒரு பொருளின் Quality அல்லது தரம் என்றால் என்ன என்பதற்கு இதுவரை எந்த வரையறையும் கிடையாது என்கிறார்கள்..ஆனாலும் இந்த 'தரம்' என்பது இன்றைய எல்லா தொழிற்சாலைகளிலும் , கம்பெனிகளிலும் ஒரு வேத வார்த்தை..We never compromise on quality என்று சொல்லி Total Quality Management (TQM) CMMI என்று என்னவோ செய்கிறார்கள்..சரி..

ஒரு பொருள் தரமானதா இல்லையா என்று எப்படி சொல்வீர்கள்? ஒரு induction அடுப்பு வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்....அது தரமானது தான் என்று எப்படி சொல்வீர்கள்?

* FAF , முதலில் அது  தன்னுடைய வேலையை செய்ய வேண்டும்....[ அடுப்பில் தண்ணீர் வைத்தால் சூடே ஆகவில்லை என்றால் Gone case ...]

Q -  Quotable என்று சொல்லலாம்...மற்றவர்களுக்கு நீங்கள் quote செய்யும்படி அந்த ப்ராடக்ட் இருக்க வேண்டும்...."போன வாரம் ப்ரீத்தி கரண்ட் அடுப்பு வாங்கினேன்...பாலெல்லாம் என்ன சீக்கிரமா காயுது, நீயும் வாங்கு"

U - Usable  -உபயோகிக்க எளிதாக இருக்க வேண்டும்...induction அடுப்பில் 72 கண்ட்ரோல் இருந்தால் எப்படி இருக்கும்? 

A- Adaptable  - வோல்டேஜ்  கொஞ்சம்  நடுங்கினாலே அடுப்பு off ஆகி விடக் கூடாது.. சூழ்நிலைக்கு ஓரளவேனும் தன்னை adjust செய்து கொள்ள வேண்டும்...

L -Lasting 

நீண்ட காலத்துக்கு உழைக்கவும் வேண்டும்...சும்மா ஒரு வாரம் வேலை செய்து விட்டு  விட்டு பின்னர் பியூஸ் ஆகக் கூடாது...

I - Immune 

கீழே தவறி விழுந்து விட்டால், தண்ணீர் பட்டு விட்டால், பெரிதாக ஒரு பாதிப்பும் இருக்கக் கூடாது...ஓரளவு எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும்..

T - Timely

  வேலையை செய்தால் மட்டும் போதுமா? பல்பு ஒன்று ஸ்விட்ச்சைப் போட்டு பத்து நிமிடம் கழித்து எரிந்தால் ஒத்துக் கொள்வீர்களா? அது வேலையை தக்க நேரத்துக்குள் செய்ய வேண்டும்..

 
Y -Yielding 

தனக்குரிய உற்பத்தியை அல்லது வேலையை பெரிதாகக் தேய்மானம் , குறைவு இல்லாமல் குறிப்பிட்ட காலத்துக்கு தர வேண்டும்...

ஒரு விஷயம்...இது எல்லாம் இருந்தால் கூட ஒரு தயாரிப்பு தரமானது என்று சொல்லி விட முடியாது...மேலும் ஒரு தயாரிப்பு 100% தரமானதாக தயாரிக்கப்படவும் முடியாது ...Quality is more  than  Q-U-A-L-I-T-Y


 “The quality of food is in inverse proportion to a dining room's altitude, especially atop bank and hotel buildings (airplanes are an extreme example).”-Bryan Miller



 ஆபீசில் ' appraisal இன் போது பொதுவாக இந்தக் கேள்வியைக் கேட்பார்கள்...உங்களுடைய short term goal என்ன? long term goal என்ன? என்று? short term goal கேட்-13 க்கு சென்று சமோசா சாப்பிடுவது, long term goal பக்கத்து க்யூபிகலில் இருக்கும் பிகரை கரெட் செய்வது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் 'to enhance my technical abilities and to..'என்று ஏதோ  வாய்க்கு வந்ததை உளறி வைப்போம்..நமக்குள் இரண்டு மனங்கள் இருக்கின்றன என்று தெரிகிறது...ஒன்று நம்முடைய long term goal -களை சதா நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது...நீ பணக்காரன் ஆக வேண்டுமே? வீடு கட்ட வேண்டுமே? பகவானை அடைய வேண்டுமே(?) என்றெல்லாம்....இன்னொரு மனம் நம்முடைய STG களை நினைவு படுத்துகிறது....அட முட்டாளே! இன்னும் கரண்ட் பில் கட்டவில்லையே , பச்சை மிளகாய் தீர்ந்து போச்சே, பெட்ரோல் போடணுமே என்றெல்லாம்...long term என்பதை விட short term கோல்களில் அதிக கவனம் செலுத்துங்கள் என்கிறார்கள்... short term  சரியாக இருந்தால் தான் long term சரியாக இருக்கும்...'இன்று இந்த பாலன்ஸ் சீட்டை சரியாக செய்து முடிப்பேன்' ' இந்த ப்ரோக்ராம்மை சிறப்பாக பிழை இன்றி எழுதி முடிப்பேன்' என்று உங்கள் குறிக்கோள்களை குறுக்கிக் கொள்ளுங்கள்.. பிறகு long term இல் தானாக things will fall in place..


 மேலும் உங்கள் குறிக்கோள்கள் measurable ஆக இருக்க வேண்டுமாம்...உதாரணமாக 'உப்புமா செய்து முடிக்க வேண்டும்' என்று நினைப்பது ரொம்பவே மேலோட்டமான குறிக்கோள்...இன்று காலை ஒன்பது மணிக்குள் அரைக் கிலோ ரவையில் நான்கு பேருக்கு ஆகும்படி சம்பா ரவை உப்புமா (வாயில் வைக்கும்படிக்கு) செய்து முடிப்பேன் என்பது தான் measurable குறிக்கோள்..சும்மா 'பணக்காரன் ஆவேன்' என்று மட்டும் குறிக்கோள் வைத்துக் கொள்ளாமல் ''இன்னும் ஐந்து வருடத்துக்குள் பத்து லட்சம் ரூபாய் சம்பாதிப்பேன்' என்று அளவிடக் கூடிய குறிக்கோள் வைத்துக் கொள்வது practical அல்லவா? இந்த practice ஐ உங்கள் குழந்தைகளிடமும் செயல்படுத்தலாம்...நன்றாகப் படித்து முதல் மார்க் வாங்கு என்று குருட்டாம் போக்கில் சொல்லி நச்சரிப்பதை  விட்டு , ஒவ்வொரு பாடத்திலும் அவனது திறமையை கணக்கில் கொண்டு ஆங்கிலத்தில் இவ்வளவு மார்க் வாங்கு , கணக்கில் இவ்வளவு குறிக்கோள் செட் பண்ணு , இந்த தேதிக்குள் இந்த அரியர் கிளியர் பண்ணு என்று சொல்லிப் பார்க்கவும்...


மேலும்,  ஒரு விஷயத்தை சிறப்பாக செய்து முடிக்க , mind map  என்ற விஷயம் இருக்கிறதாம்...mind map என்பது மனதுக்குள் (அல்லது ஒரு சாணிக்காகிதத்தில்) நாமே வரைந்து கொள்ளும் ஒரு தோராய வரைபடம்..5 மனைவி ஒரு கணவன் (5 W 's 1H  ) என்பதன் படி ஒரு விஷயத்தை எங்கே, எப்படி, யார் மூலம் எப்போது செய்து முடிப்பது என்று மனதுக்குள் ஒரு மேப் வரைந்து கொள்வது...உதாரணமாக ஒரு ஆளை கொலை செய்வதற்கான mind map ஐப் பார்க்கலாம்...[disclaimer :இதை வைத்து நீங்கள் யாரையாவது கொலை செய்தால் இந்த ப்ளாக் பொறுப்பல்ல...]







ரு டாபிக்கைப் பற்றிப் பேசலாம்....Anthropomorphism...பெயரைக் கேட்டு பயந்து விடாதீர்கள்...மேட்டர் சிம்பிள் தான்...





சிம்பிளாக சொல்வதென்றால் , குரங்குக்கு சட்டை போட்டு விடுவது...குரங்கு கூட விடுங்கள்...யானைக்கு சட்டை போட்டு விடுவது..அதாவது மனிதனின் பண்புகளை, பழக்கங்களை, குணாதிசயங்களை, மன நிலையை விலங்குகள் மீதும் உயிரற்ற பொருட்கள் மீதும் project செய்வது...புராணம், இதிகாசங்களில் இதற்குப் பஞ்சமே இல்லை எனலாம்..பாம்பு பேசியது மலை பட்டிமன்ற நடுவராக இருந்தது, குரங்கு பாடியது,நதி நடந்து வந்தது,கடல் அழுதது என்றெல்லாம்... விலங்குகளை விடுங்கள்...கடவுளுக்கே  மனித உருவம் கொடுத்து விட்டனர்...கடவுளுக்கு கல்யாணம் செய்து வைத்து, குடும்பம் குட்டி எல்லாம் உருவாக்கி ...இதனை சில தத்துவ வாதிகள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள்...ஒரு யானை யானை தான்..அதற்கு ஏன் மனிதனின் பண்புகளைத் திணிக்க வேண்டும்? யானை ஒன்று, மனிதனைப் பார்த்து அவன் மேல் யானையின் பண்புகளை திணிக்கிறதா ? ராமன் மனைவியைப் பிரிந்து வாடும் போது குரங்குகள் எல்லாம் ஏன் உதவி செய்ய வேண்டும்? ஒரு குரங்கு தன் மனைவியைக் காணோம் என்று வருந்தினால் ராமன் தன் ஆட்களை அனுப்புவானா? ....




 மனிதன் தன்னுடைய மனிதத் தன்மை என்ற கண்ணாடியை மாட்டிக் கொண்டு பிரபஞ்சத்தைப் பார்க்கிறான்.ஒரு ஒட்டகச் சிவிங்கி எப்படிப் பிரபஞ்சத்தைப் பார்க்கும்? திமிங்கலம் எப்படி பார்க்கும்? ஒரு மரம் எப்படி பிரபஞ்சத்தை உணரும்? ஒரு பாக்டீரியா எப்படி உணரும்? என்று நினைத்துப் பார்ப்பதில்லை....எல்லாவற்றுக்கும் 'மனித சாயம்' பூசி விடுகிறான்.

கடவுளுக்கும்.... சிலர், கடவுள் மனிதனின் புலன்களுக்குள், அறிவுக்குள், எல்லைக்குள் வராத ஒரு பொருள் என்று சொல்கிறார்கள்..அதற்கு மனித சாயம் பூசுவது ஆகாயத்தை அஞ்சறைப் பெட்டியில் அடைக்கும் முட்டாள்தனம்..'என்னுடன் பேசமாட்டாயா' 'கண் திறக்க மாட்டாயா' 'இதயம் உருகாதா' 'காதால் என் முறை கேளாயோ' 'திருவாய் மலர்வாய்''என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்(?), உன் அருட் கரத்தில் என்னை அரவணைக்க மாட்டாயா? காலடியில் சேர்த்துக் கொள்ள மாட்டாயா? என்றெல்லாம்...ஆனால் என்ன செய்வது? மனிதன் helpless ...புலன்களைக் கடந்த ஒரு super human நிலையில் அவனால் சிந்திக்கவும் முடிவதில்லை..bottom line என்ன என்றால் Nature must not be humanized!!! 




ஆனாலும் இதுபோன்ற பாடல்கள் அழகாகவே இருக்கின்றன:



  
தாள்களை யெனக்கே தலைத்தலை சிறப்பத்
தந்த பேருதவிக் கைம்மாறா,
தோள்களை யாரத் தழுவி தென்னுயிரை
அறவிலை செய்தனன் சோதீ,
தோள்களா யிரத்தாய் முடிகளா யிரத்தாய்.
துணைமலர்க் கண்களா யிரத்தாய்,
தாள்களா யிரத்தாய். பேர்களா யிரத்தாய்.
தமியனேன் பெரிய அப்பனே. 


  

When they discover the center of the universe, a lot of people will be disappointed to discover they are not it -   Bernard Bailey

நேற்று விஞ்ஞானி கோபர்நிகஸ் -ஸின் பிறந்த நாள்...இவர் கொஞ்சம் ஸ்பெஷல்...'பூமி தான், அதாவது நாம் தான் பிரபஞ்சத்தின் மையம், எல்லாம் நம்மையே சுற்றுகின்றன என்ற பழைய மதவாத நம்பிக்கையை நடு வீதியில் போட்டு உடைத்தவர்..பூமி தான் மையம் என்று நம்புவது சுலபம்..பூமி நகர்வதை நாம் உணர்வதில்லை....சூரியன் நகர்கிறது... விண்மீன்கள் நகர்கின்றன எனவே அவை நம்மை தான் சுற்ற வேண்டும் என்பது obvious ...ஆனால் mistrust the obvious !-தெளிவாக இருப்பதை நம்பாதே!  

முதலில் , சில திரிகோணமிதி விகிதங்களின் படி நட்சத்திரங்களின் தூரம் கணக்கிடப்பட்டது... அவை பூமியில் இருந்து அபார தூரத்தில் இருப்பதாகத் தெரிந்தது...அப்படியென்றால் அவை (பூமியை விட)மிக மிக பெரியவையாக இருக்க வேண்டும்..அத்தனை தூரத்தில் இருக்கும் மிகப் பெரிய வான் பொருட்கள் எதற்கு இத்தனை சிறிய பூமியை மெனக்கெட்டு சுற்ற வேண்டும்?' என்று மைல்டாக ஒரு டவுட் வந்தது...அங்கே தான் என் ஒரே மைந்தன் பிறக்கிறான்; எனவே பூமியை சுற்றுங்கள்' என்று கடவுள் ஆணையிட்டாரா?

சரி....லாஜிக் ஒரு பக்கம் இருக்கட்டும்...பொறுமையாக வானத்தை ஆராய்ந்ததில் கிடைத்த சில தகவல்கள் கிரகங்கள் பூமியை சுற்றவில்லை என்ற கொள்கையை மேலும் வலுவாக்கின..


 வழக்கமாக கிழக்கில் இருந்து மேற்கில் நகரும் சில கிரகங்கள் சில சமயங்களில் ஏனோ தங்கள் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி மீண்டும் ரிவர்சில் நகர்ந்து பின்னர் மீண்டும் தங்கள் சுழற்சியைத் தொடங்கின...கிரகங்களுக்கு இரண்டு சுற்றுப் பாதைகள் உள்ளனவா, ஒன்று பெரிய வட்டம் , இன்னொன்று அதற்குள் ஒரு குட்டி வட்டம் என்று கூட சிலரை யோசிக்க வைத்தன..


படத்தில் சூரியன், பூமி,மற்றும் செவ்வாய் காட்டப்பட்டுள்ளன..பூமி செவ்வாயை விட வேகமாக சூரியனை சுற்றி வந்து விடுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்..தூரத்தில் உள்ள (கிட்டத்தட்ட நிலையாக தோன்றும்) விண்மீன் ஒன்றை Reference -ஆக வைத்து செவ்வாயின் நிலை கணக்கிடப்படுகிறது.நிலை 1 மற்றும் 2 இல் செவ்வாயின் நிலை கவனிக்கப் படுகிறது...அது ஒரே திசையில் நகருகிறது...நிலை மூன்றில் பூமி செவ்வாயை முந்தி விடுகிறது..வட்ட வடிவ மைதானம் ஒன்றின் உள் பாதையில் (inner orbit )கார் ஒன்றில் நீங்கள் பயணிப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்..அதன் வெளிப் பாதை ஒன்றில் உங்களை விட மெதுவாக இன்னொரு கார் நகர்ந்து கொண்டிருக்கிறது என்றும் கொள்ளுங்கள்..நீங்கள் அந்த மெதுவான காரை நெருங்க நெருங்க , முன்னோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் அது, நீங்கள் ஓவர் டேக் செய்யும் போது நிலையாகத் தோன்றி பின் உங்களுக்குப் பின்னோக்கி நகருவதாகத் தெரியும்...மீண்டும் நீங்கள் வேகமாக சுற்றி வந்ததும் உங்களுக்கு முன்னே நகரத் தொடங்கும்... அது போல நிலை 3 இல் செவ்வாய் கொஞ்சம் ஊஞ்சல் போல முன்னும் பின்னும் swing ஆகி பின்னர் நிலைபெறுகிறது...


கோபர்நிகஸ் -ற்குப் பிறகு இப்போது helio-centrism கூட பொய் என்று ஆகி விட்டது. சூரியன் பிரபஞ்சத்தின் மையம் அல்ல...ஏன்? எதுவுமே பிரபஞ்சத்தின் மையம் அல்ல...

மையம் இல்லாமல் 
வரையப்பட்ட வட்டம் 
பிரபஞ்சம் 

என்று ஹைக்கூ வேண்டுமானால் எழுதலாம்...


 ஓஷோ ஜோக்...

முல்லா மிகவும் சோம்பேறி...சாக்ஸை துவைக்கவே மாட்டார்....ஒருநாள் அவர் நண்பர் ஒருவர் , "இதப் பாரு முல்லா, நாளைக்கு ஒரு பார்ட்டி இருக்கு...பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வருவாங்க..அதுக்கு நாமளும் போகணும்....கண்டிப்பா சாக்ஸை மாத்தாம வந்துராதே...வேற சாக்ஸ் மாத்திக்கிட்டு வா" என்று பல முறை எடுத்து சொன்னார்...

மறுநாள் பார்ட்டி...முல்லா வந்து அமர்ந்தார்...சிறிது நேரத்திலேயே எல்லாரும் மூக்கை பிடித்துக் கொள்ள ஆரம்பித்தனர்....எரிச்சல் அடைந்த நண்பர், முல்லாவிடம் திரும்பி "முல்லா, நான் சாக்ஸை மாத்து மாத்துன்னு  எத்தனை முறை சொன்னேன்?" என்றார்...

முல்லா "மாத்துனேன் பா....இதை சொன்னா நம்ப மாட்டேன்னு தான் பாரு  அந்த பழைய சாக்ஸை கோட்டு பாக்கெட்டில் போட்டு கொண்டு 
வந்திருக்கேன் பாரு" என்றார்...

சமுத்ரா 




Tuesday, February 12, 2013

கலைடாஸ்கோப் -83

லைடாஸ்கோப் -83 உங்களை வரவேற்கிறது.
'ரேசர்' தெரியுமா? ஜில்லட் அல்ல...ஓக்கம் 'ஸ்  ரேசர் .....(Occum's Razor) ..

சுஜாதாவின் துப்பறியும் கதை ஒன்று... hit and run கேஸ் ஒன்றில் கணேஷ் வசந்த் துப்பறிகிறார்கள்... நடு இரவில் டூ வீலர் ஆசாமியையும் அவனது மனைவியையும் அடித்துவிட்டு சென்று விடுகிறான்...கார் நம்பர் இல்லை..ஓட்டியது ஆணா பெண்ணா ஆவியா தெரியாது..விபத்து நடந்த இடத்தின் மேப்பை வைத்துக் கொண்டு துப்பறிகிறார்கள்..விபத்து நடந்த இடத்துக்கு சற்றே தொலைவில் மூன்று பாதைகள் பிரிகின்றன...கார் வந்த அபார வேகத்துக்கு அது நடுவில் உள்ள நேரான பாதையில் இருந்தே வந்திருக்கவேண்டும் என்று ஊகிக்கிறார்கள்...அந்தப் பாதையில் குறிப்பிடப்படும் இடங்களாக ஒரு சினிமா தியேட்டர், ஒரு ரெசிடென்ஷியல் காலனி, மற்றும் ஒரு இன்ஸ்டிட்யூட் ஆகியவை இருக்கின்றன..வசந்த், 'ஆள் சினிமா தியேட்டர் சென்று வந்திருக்கலாம்... என்கிறான்... தியேட்டருக்கு போன் செய்து இரவுக் காட்சி எத்தனை மணிக்கு முடிகிறது என்று கேட்கிறார்கள்...12:30க்கு என்று பதில் வருகிறது..விபத்து நடந்தது ஒண்ணேகால் மணிக்கு..எனவே தியேட்டர் சாத்தியத்தை ஒதுக்கி விடுகிறான் கணேஷ்...'ஆள்தியேட்டருக்கு போய் விட்டு வேறு எங்காவது, நண்பன் வீட்டுக்கோ , சின்னவீடுக்கோ போய் விட்டு விபத்து நடந்த இடத்துக்கு வந்திருக்கலாமே?" என்று வசந்த் கேட்க ,கணேஷ்.. "இல்லை.. ஒரு விஷயத்தை ஊகிக்கும் போது எந்த ஊகம் எளிமையாக இருக்கிறதோ அதை தான் முதலில்  எடுத்துக் கொள்ள வேண்டும்... அதுவே பெரும்பாலும் உண்மையாகவும் இருக்கும்" என்கிறான்...


இதுதான் Occum's Razor...இது அறிவியல்,தத்துவம், கணிதம் என்று நிறைய இடங்களில் பயன்படுகிறது..இயற்கை நிறைய விஷயங்களில் எளிமையை விரும்புகிறதாம்..பாப்பா டிரஸ் எதுவும் போடாமல் பப்பி ஷேமாக பிறக்கிறது...ஒளி எப்போதும் short ரூட்டில் பயணிக்கிறது..(ஆட்டோக் காரர்களுக்கு அப்படியே opposite !) மனித உடம்பு மிகவும் சிக்கலானது என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்....  ஆனால் இன்னொரு கண்ணோட்டத்தில் அது மிகவும் எளிமையானது.. தேவையில்லாத சமாசாரம் ஒன்றும் மனிதஉடம்பில் இல்லை..'உனக்கு தூங்கும் போது  குதிரையின் காலடி சத்தம் கேட்டால் சாதா குதிரையை உருவகம் செய்..வரிக் குதிரையை அல்ல' என்கிறது ஒரு தத்துவம்..."when you hear hoof-beats behind you, think horses, not zebras"

ஒரு கட்டிடத்தை சின்னச் சின்ன செங்கற்களால் கட்டுகிறோம்...அந்த செங்கலுக்கு பெயிண்ட் அடித்து சிங்காரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? [இதனால்தான்  இயற்கை,பிரபஞ்சத்தின் அடிப்படைத் துகள்களை மிக எளிமையாகவே அமைத்திருக்கும் என்று சில விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்  ...Strings ! நவராத்திரி கொலுவுக்கு பொம்மைக்குடிரஸ் போடுகிறோம். அந்த பொம்மைக்கு பின் பக்கத்தில் ஒன்றும் போடாமல் விட்டு விடுகிறோம். ( அது பார்ப்பவருக்கு தெரியாது என்பதால்) ..எனவே பொருட்கள் அல்லது விஷயங்கள் எவ்வளவு எளிமையாக இருக்கிறதோ அவ்வளவு பயனுள்ளதாக Practical ஆக இருக்கும்  என்கிறது இந்த விதி..

இதன் தொடர்ச்சியாக KISS என்பதை சொல்கிறார்கள்....Keep It Simple, Stupid (கமாவை கவனியுங்கள்) நாம் நிறைய சந்தர்ப்பங்களில் இந்த kiss தத்துவத்தை மறந்துவிடுகிறோம்..வழ வழா  கொள கொளா என்று சொல்ல வந்த விஷயத்தை விட்டு வேறு எல்லாம் சொல்வோம்.."எஜமானரே, இலங்கைக்கு போனேனா, என்ன ஆயிற்று என்றால்,,,ஆஹா தேவலோகம்... அங்கே மாளிகைகள், அரண்மனைகள், நந்தவனங்கள்  எத்தனை அருமை தெரியுமா?அந்த மாதிரி வனம் ஒன்றில் தான் இந்திர ஜித்தை பந்தாடினேன் கேட்டீரோ?! ராவணனை வென்று நீங்கள் அங்கேயே குடியிருக்கலாம் போங்கள் ...மயன் கைவண்ணம்...அங்கே, அந்த அழகிய நகரத்தில், தங்கள் அருமைஜானகி மாதா " ....இந்த வேலையெல்லாம் அனுமானிடம் நடக்காது... 'கண்டேன் சீதையை' அவ்வளவு தான்...மேட்டர் ஓவர்... அப்புறம் துருவித் துருவிக் கேட்டால்தான் இந்த்ரஜித் மேட்டர் எல்லாம் சொல்லுவார்...'அண்டரும் காணாத லங்காபுரியில்' என்று அனுபல்லவி போட்டு பாகேஸ்வரியில் தேவை இருந்தால் அப்புறம்  பாடுவார்....


'வேலையுள் இலங்கை என்னும் விரி நகர் ஒருசார், விண் தோய்,காலையும் மாலைதானும் இல்லது ஓர் கனகக் கற்பச்
சோலை அங்கு அதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய
சாலையில் இருந்தாள் - ஐய! - தவம் செய்த தவம் ஆம் தையல்'  -என்பதெல்லாம் கம்பனின் கற்பனை...

இந்தக் கதையை நீங்கள் கேட்டிருக்கலாம்...

தத்துவ வகுப்பு ஒன்றில், பேராசிரியர் மாணவர்களைப் பார்த்து, 'உங்கள் முன்னே இருக்கும் இந்த நாற்காலி இல்லவே இல்லை' என்று நிரூபியுங்கள் பார்க்கலாம்'என்றார்...மாணவர்கள் அவசரமாக ஆளுக்கு ஒரு குயர் நோட்டு எடுத்துக் கொண்டு தங்களுக்குத் தெரிந்த தத்துவக் கொள்கைகளையெல்லாம் பயன்படுத்தி என்ன என்னவோ எழுதிக் கொண்டிருந்தார்கள்...ஒரு மாணவன் கூலாக ஒரு துண்டுக் காகிதத்தில் 'எந்த நாற்காலி???' என்று எழுதிக் கொடுத்தான்..

Keep it simple!!

ஒரு கவிதை...

நகரத்தில் எங்கோ...


*நகரத்தில் எங்கோ இப்போது 
ஒரு ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது..
யாரோ இரண்டு பேர் 
சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்...
யாரோ இரண்டு பேர் 
பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்..
யாரோ ஒருவர் சாலையோரத்தில் 
கூவி எதையோ விற்றுக் கொண்டிருக்கிறார்.
யாரோ இரண்டு பேர் 
கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்..
எங்கோ ஒரு சவ ஊர்வலம் 
நிகழ்ந்து கொண்டிருக்கிறது..
யாரோ ஒரு பெண் அழுது 
கொண்டிருக்கிறாள்..
ஏதோ ஒரு சாமிக்கு 
அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது..
ஏதோ ஒரு பேருந்து 
பிதுங்கி வழியும் கூட்டத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது..
யாரோ ஒருவருக்கு அறுவை சிகிச்சை 
நடந்து கொண்டிருக்கிறது...
யாரோ ஒருவர் குடிபோதையில் 
தள்ளாடியபடி இருக்கிறார்..
யாரோ ஒருவர் 
தியானமும் செய்து கொண்டிருக்கிறார்...

 -ஆபீஸ் கேபில் போய்க் கொண்டிருந்த போது  ரேடியோவில் 'முந்தே பன்னி எல்லா முந்தே பன்னி ' என்ற கன்னடப்  பாட்டு வந்தது... படம் 'பெங்கியல்லி அரளித ஹூவு ' (நெருப்பில் மலர்ந்த மலர்) ..தமிழில் வந்த 'அவள் ஒரு தொடர்கதை' யின் ரீமேக்...சுஹாசினி நடித்தது..படத்தில் கண்டக்டராக வரும் கமல்ஹாசன் இந்தப் பாட்டைபாடுகிறார்...ஒருத்தரைப் பார்த்து 'முன்னாடி வாங்க , முன்னாடி  வாங்க' என்று முழு மனதுடன் சொல்வது பஸ் கண்டக்டர் மட்டும்தானாம்..மற்றவனெல்லாம் நம்மை எப்படிடா'பின்னுக்குத் தள்ளுவது' என்று பார்த்துக் கொண்டிருப்பானாம்...







btw , இப்போது அவன் ஒரு தொடர்கதை என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்...ஏன் என்று யோசியுங்கள்...

* பேஸ் புக்கில் உங்கள் நண்பர்கள் எவ்வளவு பேர்? என்னது ரெண்டாயிரமா? no comments ...சரி...800 ஆ? பெரிய ஆள்தான் நீங்கள்...ஆனால் வெயிட்...டன்பர் நம்பர் (Dunbar's number)என்று ஒன்று இருக்கிறது..அதன் படி ஒரு மனிதனால் அதிகபட்சம் 150 பேருடன் தான் சிறந்த படி social relationship சமூக உறவை மேற்கொள்ள முடியுமாம்...என்னது 150 ரொம்ப அதிகம் என்கிறீர்களா? அது என்னவோ உண்மை தான்..நம்முடன் ப்ரி கேஜியில் இருந்து படித்தவர்களை எல்லாம் சேர்த்தால் 150க்கு அதிகமாகவே வந்துவிடும்...அனால் அதில் எத்தனை பேருடன் contact இல் இருக்கிறோம்? மூன்று,  நான்கு? அதிகபட்சம் 15??? அவ்வளவு தான்... நிறைய பேரின் பெயர் கூட மறந்து போய்விட்டது..எட்டாம் வகுப்பு annual பரிட்சையின் போது இங்க் தீர்ந்து முழித்துக் கொண்டிருக்கையில் நமக்கு பேனா கொடுத்து உதவிய ஆபத்பாந்தவன் பெயர் என்ன?...மறந்துவிட்டதே...

உலகத்தையே தனதாக்கிக் கொண்டு தொடங்குகிறது மனிதனின் வட்டம்...கடைசியில் அது குறுகிக் குறுகி  , நண்பர்கள் குறைந்து , உறவுகள் குறைந்து, கடைசியில் மகன்கள் கைவிட்டு மனைவியுடன் ஏதோ ஒரு நகரத்தின் 2bhk யில் ஒதுங்கி,, தான் தன்  மனைவி என்று குறுகி, பிறகு படுக்கையில் 'நான் மட்டும் தான் உலகம்' என்ற அளவுக்குசிறுத்து,பின்  புள்ளியாய் மறைந்து போய் விடுகிறது மனிதனின் வட்டம்...

* சில சமயம் கணவன் மனைவி இரண்டு பேரும் ஒரே முக அமைப்புடன் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? சமீபத்திய ஆய்வு ஒன்று, ஒருவர் கிட்டத்தட்ட தன்னுடன் உருவ ஒற்றுமை உள்ளவரையே வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தேடுப்பார் என்று சொல்கிறது..அப்புறம் இதையும் யோசித்துப் பாருங்கள்...குழந்தைகள் எப்போதும் அவர்களது பெற்றோரை விட ஒரு படி அழகாக இருக்கிறார்கள்...இப்படியே பார்த்தால் எதிர்காலத்தில் ஒருநாள் எல்லாரும் அழகாகி விடுவார்களோ?...:) கூகிள் இமேஜ் செர்ச்சில்'ஐஸ்வர்யா ராய்' என்று தேட அவசியமே இருக்காது...

Love is an overused word and an under-lived experience - Nandita Das






காதலர் தினம் வருகிறது..காதல் முக்கோணம் என்ற ஒன்றை சொல்கிறார் மனவியல் நிபுணர் ராபர்ட் ஸ்டென்பெர்க் ...(Robert Sternberg) வெற்றி கரமான காதல் என்பது கீழ்க்கண்ட முக்கோணத்தை பூர்த்தி செய்ய வேண்டுமாம்..[சினிமாவில் காட்டும் முக்கோணக் காதல் என்பது வேறு!]

Intimacy  - நெருக்கம் , அன்னியோன்னியம்

Passion  - பற்று, இச்சை ,ஆசை  whatever

commitment  - ஈடுபாடு

முதலில் நெருக்கமாக தொடங்கும் எந்த ஒரு காதலும் பின் இச்சை, ஈடுபாடு என்று வளர்ந்து advance ஆகிறது...தொடர்கிறது... இது மூன்றும் ஒரே சமயத்தில் நீண்டகாலத்துக்கு இருக்கும் காதல் அரிது..இதை  தான் கமல் தெய்வீகக் காதல் என்கிறாரோ  தெரியவில்லை..அபிராமிக்கே வெளிச்சம்...அடிக்கடி 'நாங்க சும்மா friends தான்..நெருக்கமா தான் இருக்கோம், ஆனா just  friends தான் ' என்று 'தோழா தோழா தோள்கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்' என்று பாடுவதும் காதலின் ஒரு வகை தான் ...வெறும் இச்சை மட்டுமே இருந்தால் அதற்கு பெயர் என்ன என்று உங்களுக்குத் தெரியும்..இன்று இருக்கிற காதல்களில் 75% இப்படித் தான் இருக்கின்றன... 'நீ தான் என் மூச்சு' 'நான் என்று சொன்னாலே நான் அல்ல நீ தான்' 'நீ இல்லாமல் நான் இல்லை' 'வெய்யில்ல ரொம்ப அலையாதடா செல்லம்' 'What my angel is doing?' என்று தினம் நூறு எஸ்.எம்.எஸ். ...நாற்பது கால் செய்து கொண்டு பின்னர் இச்சை தீர்ந்ததும் 'I'm too busy  now a days dear' என்று ஒரே எஸ்.எம்.எஸ். உடன் முடித்துக் கொள்வது.(அப்புறம் நம்பர் மாற்றி விடுவது!)இதில் சேரும்..வெறும் commitment மட்டுமே இருப்பதற்கு 'empty love 'என்று சொல்கிறார்கள்..கல்யாணத்துக்கு அப்புறம் நிறைய காதல்கள் இப்படித் தான் இருக்கின்றன..கீழே உள்ள வென் வரைபடத்தில் இதைப் பார்க்கலாம்..




மேலும், காதல் பித்துக்களை பல வகைகளில் பிரித்திருக்கிறார்கள்...

EROS : அழகுப் பைத்தியம்: 'முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்தது' என்ற டைப் இவர்கள்...'அவ கிட்ட ஏதோ இருக்கு மச்சான்' என்பார்கள்... கெமிஸ்ட்ரி யில் நம்பிக்கை உள்ளவர்கள்...அழகை ஆராதிப்பவர்கள்... முதன்முறை பார்த்ததும் madras  eye போல தொற்றிக் கொள்ளாவிட்டால் அது லவ்வே இல்லை என்பார்கள்..

LUDUS : ஆட்டக்காரன்: காதலே இவர்களுக்கு ஒரு விளையாட்டு தான்...டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்சு பொண்ண காதலி...தாவணி போனா சல்வார் உள்ளதடா என்றடைப்...ஆம்...காதல் ஒரு கடலு மாரி ...வாழ்க்கையோ குறுகியது..பின்னர் ஏன் 'சர்க்கரை நிலவே ' என்று தாடி வளர்த்துக் கொண்டு பேண்ட் ஜோபில் கை வைத்துக்கொண்டு பாடிக் கொண்டு டம்பளருக்குள் நீச்சல் அடிக்க வேண்டும்?

STORGIC : நண்பன்: பெண்களை பொதுவாக இந்த ஜாதியில் சேர்க்கலாம்.. 'இல்லை இன்னும் உன் மேல எனக்கு லவ் வரலை..டைம் வேணும்.. இது இன்னும் friendship தான் என்பார்கள்..காதல் வந்தாலும், நட்புக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாது....break ஆன பின்பு கூட ஒருநாள் எதிர்பாராமல் 'hi how are you? remember me?'என்று மெசேஜ்வரும்.. மீண்டும் காதல் விதை துளிர்த்து விட்டது என்று நம்  பையன் உணர்ச்சிவசப்பட, அவர்கள் ,சும்மா 'as a friend, I asked' என்று நட்புப் புராணம் பாடுவார்கள்...

PRAGMA : வியாபாரி: காதலில் கூட கணக்கு பார்ப்பவர்கள்...மாலாவை கல்யாணம் பண்ணிட்டா லைப் நல்லா இருக்குமா? ஷீலாவை பண்ணிக்கிட்டா நல்லா இருக்குமா? என்று தூங்கும் போது கூட கணக்கு போடுபவர்கள்...மறுபடியும் இதில் பெரும்பாலும் பெண்களே வருகிறார்கள்...




MANIC : மிகை: காதலை ரொம்பவே சீரியஸாக பார்ப்பவர்கள்..possessive ...சந்தேகம் ..போனில் யாருடனாவது கொஞ்ச நேரம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தால் அடித்து துன்புறுத்தவெல்லாம்  மாட்டார்கள்..பதிலுக்கு கண்ணீருடன் , 'நான் உனக்கு கசந்து போயிட்டன்ல ,,யாரு அது புது ஆளு? ' என்று சீன் காட்டுவார்கள்...


AGAPE : பக்தன்: காதலுக்கு இருவரும் சம தளத்தில் இருக்க வேண்டும் என்பதில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை...காதலியை ஒருபடி உயர்த்தி சாட்சாத் 'பராசக்தி' ரேஞ்சில் பாவித்து தினமும் பூஜை செய்பவர்கள்.. 'நான் உன் பக்தன்' 'நான் உன் அடிமை' 'நான் உன் தாசி' என்றெல்லாம் ஓவராக உருகுபவர்கள்...




இதில் நீங்கள் எந்தத் டைப்? அல்லது ரஜினி போல உங்கள் வழி தனி வழியா?

ஷோ ஜோக்...

 இதை இங்லீஷில் சொன்னால் தான் நன்றாக இருக்கும்...

An old man phoned his son-in-law – he had just got married to his daughter – and asked him, ”How are things going?”
The son-in-law said, ”I am sorry to say, sir, but it seems I am married to a nun.”
The old man said, ”What do you mean – ’married to a nun?
The young man said, ”None in the night, none in the morning.”
The old man laughed and he said, ”Now I understand. Then tonight you come for dinner to my home and see the Mother Superior.”

சமுத்ரா