இந்த வலையில் தேடவும்

Saturday, November 29, 2014

நாவல் அறிவிப்பு :)

Write the  book that you want to read என்பார்கள். நல்ல புத்தகம் ஒன்றை நாம் படிக்க விரும்பினால் அது இன்னும் எழுதப்படவில்லை என்றால் அதை நாம் தான் எழுத வேண்டும்.:)

FB , ட்விட்டர் மற்றும் ப்ளாக் நண்பர்கள் சில பேர் சாட்டில் வந்து சமுத்ரா நீங்கள் கண்டிப்பாக ஒரு fiction நாவல் அட்டெம்ப்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். சரி, எழுதலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். இப்போதைக்கு ப்ளாக்கில் எழுதலாம் என்று; அப்புறம் response ஐப் பொறுத்து புத்தகமாகப் போடுவதை யோசித்துக் கொள்ளலாம்.
சில நண்பர்கள் கலைடாஸ்கோப் ஐ முதலில் புத்தகமாகப் போடுங்கள்; நாங்கள் உதவி செய்கிறோம் என்கிறார்கள். பார்க்கலாம்.

சில விஷயங்களை கட்டுரையாக எழுதுவதை விட fiction நாவலில் சொல்வது சுலபம். கேரக்டர்களை வைத்து ஒரு கருத்தையும் அதன் மாற்றுக் கருத்தையும் சுலபமாக சொல்லி விடலாம். அந்த கேரக்டர் அப்படித்தான் என்று அந்த கற்பனைக் கதாபாத்திரத்தின் மேல் பழியைப் போட்டு விடலாம்.:) கட்டுரை ஒன்றில் ஒரு சினிமா நடிகரைத் திட்டியோ , ஒரு பெண்ணையோ காதலியையோ அழகுணர்ச்சியுடன் வர்ணித்தோ எழுதுவது நெருடலாய் இருக்கும். நாவலில் அவற்றை சுலபமாக கேரக்டர்கள் மூலம் செய்து விடலாம். Indirect Fulfillment!

ஆனால், கட்டுரையுடன் ஒப்பிடும் போது நாவலுக்கு அதற்கே உரித்தான சிக்கல்கள் இருக்கின்றன. கட்டுரை போல லீனியர்-ஆக எழுத முடியாது.
திருப்பங்கள் இருக்க வேண்டும். suspense முக்கியம்.க்ளைமாக்ஸ் சரியாகப் பொருந்தி வர வேண்டும். ஆரம்பத்தில் போட்ட முடிச்சுகளை அழகாக அவசரப்படாமல் ஒவ்வொன்றாய் அவிழ்த்து கிளைமாக்ஸில் எல்லாம் தெளிவாக வேண்டும். கிளைமாக்ஸ் 100% புரிந்து விடும்படி இருந்தால் இப்போது அது out of fashion ! வாசகர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு குழம்ப வேண்டும். There should be some room for reader's imagination! :P

so , ஒரு சைக்காலஜிகல் திரில்லர் எழுதலாம் என்று எண்ணம். கொஞ்சம்

சைக்காலஜி, கொஞ்சம் ஹிஸ்டரி, கொஞ்சம் திரில்லர், கொஞ்சம் சஸ்பென்ஸ் என்று ஒரு கமெர்சியல்  சினிமா போல. முழுக்க முழுக்க 
வாசகர்களின் மகிழ்ச்சிக்காக மட்டும். No String Attached

நாவலின் தலைப்பு : 
"நியூரான் நதி"

:)

சமுத்ரா

Monday, November 24, 2014

லைட் ரீடிங் கேள்வி

லைட் ரீடிங் -கேள்வி“Most of the successful people I’ve known are the ones who do more listening than talking.” 
― Bernard M. Baruch

இறைவனை எப்படி அடையலாம் என்ற கேள்விக்கு ஏகப்பட்ட பதில்கள் கிடைக்கும்.இப்போது நிறைய ஆன்மீக க்ரூப்புகள் மலிந்து விட்டன. உங்களைப் பிடித்து அப்படியே அமுக்கி உள்ளே போட ரெடியாக இருக்கிறார்கள்.இறைவனை அடைய ஒரு எஸ்.எம்.எஸ். ஐ பத்து பேருக்கு forward செய்தால் போதும் என்ற நிலைக்கு கீழிறங்கி வந்து விட்டார்கள்! அமிர்தமே என்றாலும் வலுக் கட்டாயமாக ஊட்டினால் இனிக்குமா?

நீ 
இலவசமாகத் தரும் 
சொர்க்கம் 
எனக்கு வேண்டாம் என்கிறான் ஒரு கவிஞன் .

BTW ,இந்த 'ஒன்பது வித பக்தி' என்ற கான்செப்ட் என்னைக் கவர்ந்தது.
எல்லாவற்றையும் சொன்னால் ஹரிகதை ஆகி விடும்.( நான் ஓர் 
agnostic என்பதால் இந்த கடவுள், பக்தி, மோட்சம், இத்யாதிகளை ஒரு நெருடலுடனேயே எழுதுகிறேன்.)
 
ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
 
இறைவனைப் பற்றிக் கேட்பது கூட ஒருவகை பக்தி என்கிறார்கள்.
in fact அதுதான் முதலில் வருகிறது. இப்போது நாம் கேட்கும் (listen ) கலையை மறந்து விட்டோம். வள வளா என்று தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறோம்.அடுத்தவரை listen செய்வது போல் நடிக்கிறோம். அவர் பேசும்போது அடுத்து நாம் என்ன பேசலாம் என்று திட்டம்தான்  போட்டுக் கொண்டு இருக்கிறோம். நன்றாகக் கேட்பவரே நன்றாகப் பேச முடியும்; நன்றாகப் படிப்பவரே நன்றாக எழுத முடியும் என்று சொல்வார்கள்.மிகத் தேர்ந்த சங்கீத வித்வான்கள் சொல்லும் சூத்திரம் 'ஒரு பாட்டு பாடனும்னா ஆயிரம் பாட்டு கேட்கணும்'...!

நீ ஒண்ணுமே செய்ய வேண்டாம். முதலில் கேளு என்கிறார்கள். முத்துக் கடலு மூடியா கெடக்கு என்பது போல காது சதா திறந்தே இருக்கிறது. hear ! காதைத் திறந்து வை.. அட, இது என்னமோ நல்லாருக்கே என்று நீ listen செய்தாலும் செய்யலாம் ;நம்மை சுற்றி சதா கேட்டுக் கொண்டிருக்கும் ஒலிகள் unconscious ஆக நம்முள் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதனால் தான் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது அந்தக் காலத்தில்  அவளை நல்ல சத்விஷயங்கள், சங்கீதங்கள் கேட்க வைத்தார்கள்.  இந்தக் காலத்தில் எந்த சேனலைத் திருப்பினாலும் சீரியல்கள் என்ற பெயரில் கீழ்க்கண்ட சுமங்கல ஒலிகள் கேட்கக் கிடைக்கின்றன 


அவ குடும்பத்த அடியோட நாசமாக்கிருவேன் 

அவனை நடுத்தெருவுல பிச்சை எடுக்க வைக்கலன்னா நான் பிரபா கிடையாது.

கோபி ஒண்ணுமில்லாம மண்ணோடு மண்ணா போயிரனும் 

அவ இதை நெனச்சு உருகி உருகி அணு அணுவா சாகணும் 

இப்படிப் பட்ட ஒலிகளை கர்பிணிகள் கேட்டால் பிரகலாதனா பிறப்பான்? 

பிரகலாதன் கர்ப்பத்தில் இருந்த போது  நல்ல விஷயங்களை நாரதர் தினமும் சொல்கிறார்

சர்ப்பத்தில் படுத்தவன் சீர்த்தியை 
லீலாவதி 
கர்ப்பத்தில் படுத்தவன் காதுகளில் 
ஓதியவன் என்று நாரதரை வர்ணிக்கிறார் வாலி.கற்றிலன் ஆயினும் கேட்க என்கிறார் வள்ளுவர்.  புத்தகம் படிக்க வேண்டும் என்றால் உனக்கு படிப்பறிவு வேண்டும். அனால் கேட்பதற்கு நீ educated ஆக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.மேலும் படிப்பது நேரம் பிடிக்கும். கேட்பது quick . பரீட்சித்து ஏழு நாளில் இறந்து விடுவான் என்று தெரிந்ததும் அவன் சாமார்த்தியமாக ஸ்ரவண பக்தியைத்  தேர்ந்தெடுக்கிறான். கொண்டு வா கீதையை நான் படிக்கிறேன் என்று சொல்லவில்லை. கொண்டு வா தம்பூரா நான் இறைவனைப் பாடுகிறேன் என்று குதிக்கவில்லை . தியானம் செய்கிறேன் என்று பிலிம் காட்டவில்லை . போடு பாயை நான் உட்கார்ந்து கேட்கிறேன் என்கிறான். கேட்பது தான் எளிது. குறைந்த நேரத்தில் நிறையக் கேட்கலாம். எல்லாம் சரி..நாம் கேட்பதற்கு யாராவது ஒருவர் சொல்ல வேண்டுமே என்கிறீர்களா? அதுவும் சரி.
 
நீங்கள் கேட்கத் தயார் என்றால் சொல்பவர் கிடைத்து விடுவார். ஏனெனில் இப்போது கேட்பவர்கள்தான் குறைவு:) நீங்கள் கேட்கத் தயார் என்றால் ஒட்டு மொத்த பிரபஞ்சமே உங்களுக்கு பாடம் நடத்தும்.
 
ஜென் குரு ஒருவரை உங்கள் குருமார்கள் யார் யார் என்று கேட்டதற்கு அவர் 
நாய் ,காகம்,மாடு இவர்கள் என்கிறார்.
 
நாய் தான் படுத்திருந்த இடத்தை திரும்பிப் பார்க்காமல்  எழுந்து போகிறது. பற்றற்ற தன்மையை அதனிடம் கற்றேன் 
 
காகம் பகிர்ந்து கொள்ளாமல் தனக்கென சேர்த்து வைப்பதில்லை. பகிர்தலை அதனிடம் கற்றேன் 
 
மாடு தான் தின்றதை மீண்டும் அசை போடுகிறது. என்னை நானே மீண்டும் திரும்பிப் பார்த்து மேம்படுத்துவதை அதனிடம் கற்றேன்.
 
என்கிறார்.
 
நல்ல சீடனுக்கு சிலை கூட ஆசானாகிறது.

 
 
கண்களை நேர்க்கோட்டில் வைத்த இயற்கை காதுகளை பக்கவாட்டில் வைத்துள்ளது. 360 டிகிரியில் எல்லாப் பக்கங்களில் இருந்தும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

~சமுத்ரா


Sunday, November 23, 2014

லைட் ரீடிங் திருவாசகம்

லைட் ரீடிங் 
திருவாசகம் 

The lesser the baggage, the merrier the journey என்பதில் நம்பிக்கை உள்ளவரா நீங்கள்? நீங்கள் என் கட்சி :) இரண்டு பைகளுக்கு மேல் கொண்டு போனால் கண்டிப்பாக நான் ஒன்றை மறந்து வைத்து விடுவேன். மேலும், லக்கேஜ் ஜாஸ்தி என்றால் எனக்கு இறங்கும் ஸ்டாப்/ ஸ்டேஷனுக்கு அரை மணிக்கு முன்பே தேவையில்லாத டென்ஷன் வந்து விடும். இப்போதெல்லாம் யாரும் நம் பையை லபக்கிக் கொண்டு போவதில்லை தான். ஏனென்றால் அவர்களுக்கே 27 பைகள் இருக்கும் போது நம் பையை வேறு யார் விரும்புவார்?:) மேலும் வெடிகுண்டு, போதைப் பொருள் இத்யாதிகள் மலிந்து விட்டதால் நாம் மறந்து விட்டாலும் நம் பேக்கேஜ் பொட்டாட்டம் அங்கேயே அமர்ந்திருக்கும்.

மேலும் லக்கேஜ் களை எங்கே வைப்பது என்பது எனக்கு ஒரு நைட் மேர் .
flight ஆக  இருந்தால் முட்டாய் கொடுக்கும் அம்மணிகளிடம் ஹெல்ப் கேட்கலாம். பஸ்ஸில், 2S ட்ரெயினில் மேலே வைத்துவிட்டு எடுப்பது கூட எனக்கு சிரமம் தான்.ஒருமுறை பஸ்ஸில் மேலே வைத்த பையை எடுக்க முடியவில்லை. ஸ்டாப் வேறு வந்துவிட்டது. யுவதியாக இருந்தால் எல்லாரும் முன்வந்து எடுத்துத் தந்திருப்பார்கள். பசங்களை யார் கண்டுகொள்கிறார்கள். என்னடா இது நம் ஆண்மைக்கு வந்த சோதனை என்று எப்படியோ திக்கித் திணறி எடுத்துக் கொண்டு அடுத்த ஸ்டாப்பில் இறங்கி வீடுபேறு அடைந்தேன்.

பஸ்ஸில் நடைபாதையில் பையை வைக்க முடியாது. கண்டக்டர் மிரட்டுவார்.காலடியில் வைத்தால் உட்காரவே முடியாது. கைக்குழந்தை போல கையில் வைத்துக் கொண்டு வரவேண்டும். மேலும், உட்கார்ந்திருப்பவர்களை மீறி இந்த லக்கேஜை எடுப்பது. அதற்கு ஒரு உத்தித்த பர்ஸ்வ கோனாசனம் செய்ய வேண்டும். நமது பஸ், ட்ரெயினில் இருக்கும் த்ரீ சீட்டர்கள் உண்மையில் இரண்டு பேர்களுக்கானவை . இந்தியாவில் ஒல்லியாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அந்த த்ரீ சீட்டரில் மூன்று பேரை உட்கார வைப்பது டார்ச்சர்.

சரி, என்னதான் இருந்தாலும் நம்மால் ஒரு சின்ன தோள்ப்பை கூட இல்லாமல் பயணிக்க முடிவதில்லை.ஏதோ ஒன்றை நாம் எப்போதும் சுமந்து கொண்டே இருக்கிறோம். காயமென்னும் சுமையிறக்கக் கண்டிலனே என்று உடலைக் கூட சுமை என்று எண்ணிய சித்தர்கள் கூட ஏதோ ஒன்றை சுமந்து கொண்டே திரிந்தார்கள். பட்டினத்தார் கையில் கரும்பை சுமந்து கொண்டே திரிந்தாராம். ஏதோ ஒன்றை சிம்பாலிக்காக சொல்ல வருகிறார் போலும் . அவ்வை கையில் ஒரு மூட்டையை எப்போதும் சுமந்தாள் .ஒருநாள் அவளை வழியில் சந்தித்த பாரி, அரண்மனைக்கு வருமாறு அழைக்கிறான். இல்லையைப்பா நான் போக வேண்டும் என்று அவ்வை மறுத்து விட்டு நடக்கிறாள்.சற்று  நேரத்தில் கள்வன் ஒருவன் வந்து அவளது கைப்பையை வழிப்பறி செய்து விட்டு ஓடி விடுகிறான்.'பாரியின் நாட்டில் வழிப்பறியா ' என்று புலம்பி, முறையிட அரண்மனை வருகிறாள் அவ்வை. அப்போது பாரி 'மன்னித்து விடுங்கள்; உங்களை அரண்மனைக்கு வரவழைக்க வேறு வழி தெரியவில்லை. கள்வன் உருவில் வந்தவன் நான்தான் 'என்கிறான்.


சில சமயம் தெய்வங்கள் சுமந்து கொண்டிருக்கும் ஆயுதங்களைப் பார்க்க பகீர் என்றிருக்கும். அன்பே சிவம் என்று சொல்லும் நாம்தான் தெய்வங்கள் கையில் இப்படிப் பட்ட கொலை ஆயுதங்களைக் கொடுத்து வைத்திருக்கிறோம்.கத்தி, வாள் , கோடாலி, கேடயம், பாசம், அங்குசம், ஈட்டி, திரிசூலம், கதை, வில், அம்பு, சாட்டை, சக்கரம்....இன்னொரு funny யான விஷயம் சுதர்சனர்.அவரே ஒரு சக்கரம். அவர் கையில் எதற்கு இன்னொரு சக்கராயுதம்? இப்படி recursion இல் போய்க் கொண்டே இருக்குமா?சரி..தெய்வங்கள் சாதாரணமாக casual ஆக , home dress இல் இருக்கலாகாதா ? எப்போது பார்த்தாலும் equipped ஆக இந்த காயலான் கடை அயிட்டங்களை சுமந்து கொண்டேதான் வேண்டுமா?போர், அசுரன், கிசுரன் ஏதேனும் வந்தால் அந்த சமயத்தில் இதையெல்லாம் சுருட்டிக் கொண்டு புறப்பட்டால் போதுமே! முதன்முதலில் நாம் குழந்தைகளுக்கு இப்படி வன்முறையான தெய்வங்களை அறிமுகம் செய்ய வேண்டுமா? 'உம்மாச்சி' ஏம்மா கத்தி வச்சிருக்கு  என்றால் கெட்டவங்களை சதக் -குன்னு குத்திரும் என்று அமெச்சூர் தனமாக சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோமா? who is கெட்டவன் ??

நாம் ஏதோ ஒன்றை சுமந்து கொண்டே இருக்கிறோம். உடலளவில் இல்லை என்றாலும் மனதளவில். extra unwanted luggage . தேவையில்லாத எண்ணங்கள், பொறாமை, கவலை, பயம், சந்தேகம், குற்ற உணர்ச்சி, பழி எண்ணம்,அவன் அன்னிக்கு அப்படி சொல்லிட்டானே, ஆம்பிளையா ன்னு கேட்டானே என்றெல்லாம். இவற்றை விட சுமைகள் வேறில்லை.

மனசு உடுத்தின கவலைத் துணி 
எடுத்து அவிழ்த்தெறி எதற்கு இனி!
இருக்கும் கண்ணீரையும் ஏத்தம் நீ போட்டெடு 
அழவா இங்கே வந்தோம் 
ஆடு பாடு ஆனந்தமா ஓய்  என்று நம் 'தல' பாடுகிறார்.

சரி. இப்போது பக்தி மோடுக்கு மாறுவோம். திருவாசகம். பக்தி, அர்ப்பணிப்பு ,lyrical beauty எல்லாம் இங்கே காணக்கிடைக்கிறது.. தமிழில் இத்தனை அழகுகள்  இருக்க நாம் சினிமாக்களில் "lets do doggy style கண்ணே" என்று பாடிக் கொண்டு மெய் மறந்திருக்கிறோம். cant help 


பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண்ட லத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய். 182 


எத்தனை சுமக்கிறார் பாருங்கள் அந்த மனுஷன் .

காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே என்று ஒரு கீர்த்தனை.

செங்கையில் மான் தூக்கி சிவந்த மழுவும் தூக்கி 
அங்கத்தில் ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கி 
கங்கையைத் திங்களை கருத்த சடையில் தூக்கி 
இங்கும் அங்குமாய்த் தேடி இருவர் கண்டறியாத 

காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே!


எத்தனை தான் தூக்குவார் ஈசன்.

சின்னவயதில் பாட்டி பாட்டு சொல்லித் தருவாள்.
எழுதிக்கோ யதுகுல காம்போதி ஆரோகணம்:ச ரி ம ப த ஸா 

பாட்டி இந்த பாட்ல ஒரு சந்தேகம். 

என்னது? 

இங்கும் அங்குமாய்த் தேடி இருவர் கண்டறியாத காலை 

ஒருவர் கண்டறியாத ன்னு தான் வரணும்.

ஏன்னா விஷ்ணு தான் காலைத் தேடித் போறார். பிரம்மா தலையைத் தேடித் போறார்.

பாடலின் பொருளைப் பார்ப்போம்.


பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் 
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் 


சிம்பிள் தமிழ் தான். பாடல் பண்ணை சுமக்க வேண்டும். பண் என்றால் ராகம். ராகத்தோடு பாடினால் நலம். அப்படிப் பாடினால் பரிசு தருவான்.

பெண் சுமந்த பாகத்தான்.
பார்வதியை இடது பக்கத்தில் சுமப்பவன்.

ஒரு குட்டிக் கதை. ராவணன் பெண்ணால் அழிந்தான். அதற்குக் காரணம் பார்வதி சாபம். ஒருநாள் ராவணன் சிவனை வணங்க வருகிறான். பத்து தலைகளுடன்! கீழே விழுந்து வணங்குகிறான். அப்போது தன் வலது பக்கத்து ஐந்து தலைகளை தரையில் படாமல் மேலே தூக்கிக் கொள்கிறான். இடது பக்கத் தலைகள் மட்டும் தரையில் படிகின்றன. ஈசனுக்கு இடது பக்கம் உமை இருப்பதால் ஒரு பெண்ணை நான் போய் வணங்குவதா என்று.
பார்வதி 'கர்வம் பிடித்தவனே, ஒரு ஒரு பெண்ணாலேயே நீ அழிவாய் ' என்று சபிக்கிறாள்.

விண்சுமந்த கீர்த்தி வியன்மண்ட லத்தீசன் 
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை 


கண்ணை சுமக்கும் நெற்றியை உடையவன். சிவன் நெற்றிக்கு இது extra சுமை போலும். நெற்றியில் ஒரு கண். நெற்றிக் கண்ணை மூடினால் vertical view ..திறந்தால் horizontal view போலும்! பொதுவாக நெற்றிக் கண் கடவுள் என்று தான் சொல்வார்கள். இங்கே கவிதை அழகுக்காக கண் நெற்றிக் கடவுள் என்று சொல்கிறார் ஆசிரியர்.

மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு 
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்


சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட கதை தெரிந்திருக்கும். பிட்டை தின்னாலும் பிரியாணி தின்னாலும் உழைத்து சாப்பிடு என்று வலியுறுத்துகிறார். மொத்துண்டு -மொத்து என்பது தூய தமிழ்ச்சொல் என்று இப்போதுதான் எனக்கும் தெரிந்தது:)

சிவனுக்கு எத்தனை கஷ்டம் பாருங்கள்? ஒரு அப்பா அம்மா இருந்தால் இத்தனை கஷ்டம் வருமா என்று கேட்கிறார் இன்னொருவர்.

கல்லால் ஒருவன் அடிக்க -உடல் சிலிர்க்க 
காலின் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க 
வில்லால் ஒருவன் அடிக்க- காண்டீபம் எனும் 
வில்லால் ஒருவன் அடிக்க 
கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட 
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட 
வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க 


தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த 
தாழ்வெல்லாம் வருமோ அய்யா!

தமிழில் இதை வஞ்சப்புகழ்ச்சி என்பார்கள். சிவனை ஓர் அனாதை என்று இகழ்வது போல சொல்லி அவன் ஆதி அந்தம் அற்ற பரம்பொருள் என்று புகழ்வது.


சமுத்ரா ..

Wednesday, November 19, 2014

நான் கவிஞன்...

மலைச்சாரலில் சிலிர்த்துக் கொண்டு 
கீழிறங்கும் அனுபவம் வேண்டுமா உங்களுக்கு?
நிலவொளியின் கீழ் 
ஆரவாரமின்றி வந்துபோகும் 
கடலலைகளின் தரிசனம் வேண்டுமா உங்களுக்கு?
மாலைவானில் 
வெண்ணிறப் பறவைகளுடன் 
வீடுதிரும்பும் ஆனந்தம் வேண்டுமா உங்களுக்கு?
பின்னிரவின் நிசப்தத்தில் 
தலை நனைக்கும் பனியில் 
விண்மீன்களுடன் பேசும் வித்தை வேண்டுமா உங்களுக்கு?
அதிகாலைப் பொழுதொன்றில் 
கம்பளி உடையணிந்து 
சாலையோரக் கடையொன்றில் 
தேநீர் ருசிக்கும் அனுபவம் வேண்டுமா உங்களுக்கு?
யாருமற்ற அடர்ந்த 
கானகத்தில் 
கொஞ்சம் பயத்துடன் காலில் இலை சரசரக்க 
நடக்கும் தைரியம் வேண்டுமா உங்களுக்கு?
மனம் வாடிப் படுத்திருக்கையில் 
காதலி அருகில் வந்து 
தலைகோதும் இதம் வேண்டுமா உங்களுக்கு?
பாலைவனத்தில் பகலெல்லாம் நடந்து 
பின் 
நிழலில் இளைப்பாறி 
நீர் அருந்தும் ஆசுவாசம் வேண்டுமா உங்களுக்கு?
மழைச் சாரலில் குடையை உதறிவிட்டு 
மனதுக்குப் பிடித்தவருடன் 
நடந்து போகும் அதிர்ஷ்டம் வேண்டுமா உங்களுக்கு?


நான் கவிஞன் ...
என் கவிதை மூலம் 
இவை அத்தனையும் தருவேன்..

நான் கவிஞன் ...
என் எழுத்து மூலம் 
இவை யாவையும் தருவேன்.

நான் கவிஞன் ...
.

..

...

....


நீங்கள் கீழ்க்கண்ட என் 
வங்கிக் கணக்கு எண்ணுக்கு பணம் டெபாசிட் செய்தால் போதும் 

IFSC Code :HDFC0001866

Account no: 500000072890

சமுத்ரா 

Monday, November 17, 2014

Interstellar -II

திரும்பிப் பார்க்கையில் காலம் ஒரு இடமாக காட்சியளிக்கிறது -நகுலன்Interstellar இல் சில காட்சிகள் புரியவில்லை என்று சில பேர் சொல்கிறார்கள்.
புரியாது. புரிந்தால் நீங்கள் மனிதப்பிறவி அல்ல என்று அர்த்தம் :) ஏனென்றால் மனித மூளை மூன்று பரிமாணங்களை (3D) மட்டும் உணர்ந்து கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது அல்லது evolve ஆகியுள்ளது. நீளம், அகலம், உயரம் இவை தாண்டிய ஒரு ஐந்தாவது பரிமாணத்தை (காலம் நான்காவது)  கற்பனை செய்வது மனித மூளைக்கு இயலாத காரியம். மிகப்பெரிய விஞ்ஞானிகளே higher dimensional space ஐ எப்படி கற்பனை செய்வது என்று முடியாமல் திணறுகிறார்கள். குருடன் ஒருவனுக்கு நிறம் என்பதை எவ்வாறு விளக்க முடியும்? அப்படி!

Higher dimension இல் உலகம் எப்படி இருக்கும் என்று அறிய ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது, 2 D உலகம் ஒன்றை கற்பனை செய்து கொண்டு நம் 3D உலகம் அதைக் காட்டிலும் எப்படி இருக்கிறது என்று ஒப்பீடு செய்வது. நம்மை விடப் பணக்காரன் எப்படி உணர்வான் என்று நம்மை விட ஏழையுடன் நம்மை ஒப்பிட்டுத் தெரிந்து கொள்வது! உதாரணமாக நம் பிரபஞ்சம் 2 D யாக இருந்தால் எப்படி இருக்கும்? முடிவே இல்லாத ஒரு டிராயிங் பேப்பர் போல இருக்கும். வெறும் நீளம் அகலம் மட்டுமே இருக்கும். மனிதர்கள், மரங்கள், விலங்குகள், கோள்கள் இவை எல்லாம் வெறும் கோடுகள், வட்டங்கள், சதுரங்கள், செவ்வகங்களாக இருக்கும். முடிவில்லாத ட்ராயிங் ஷீட் ஒன்றில் வட்டங்கள், கோடுகள் சதுரங்கள் நகர்ந்து கொண்டிருப்பதை கற்பனை செய்து கொள்க. அதுதான் இரண்டு பரிமாண பிரபஞ்சம்.நம் பிரபஞ்சம் இப்படி இருந்திருக்கலாம். உயரம், ஆழம் இவை இல்லாமல்,,,!  ஆனால் எப்படியோ 3டி யாக உள்ளது. இருபரிமாண உயிரிகள் மற்ற பொருட்களை முழுவதுமாகப் பார்க்க இயலாது. அவை தாம் பார்க்கும் எல்லாவற்றையும் கோடுகளாகவும், புள்ளிகளாகவும் மட்டுமே பார்க்கும். ஒரு பொருளை முழுவதுமாக சுற்றி வந்தால் மட்டுமே அது வட்டமா, சதுரமா, கோடா என்று தெரியும். நமக்கு முப்பரிமாணத்தில் ஒரு கோளத்தை  ( கோளம் என்பது 3D வட்டம்) முழுவதுமாகப் பார்க்க முடிவதில்லை என்பதை நினைவுகூர்க.3D உலகில் இருந்து கொண்டு டிராயிங் ஷீட்டைப் பார்த்தால் வட்டமோ சதுரமோ எல்லாம் முழுமையாகத் தெரியும். அதே போல ஐந்து பரிமாண உயிரி ஒன்று மேலிருந்து (?) நம் 3D உலகத்தைப் பார்த்தால் அது ஒரு கோளத்தை முழுமையாகப் பார்க்க முடியும். முன்பக்கம், பின்பக்கம், மேலே கீழே வலது இடது எல்லாம் ஒரே சமயத்தில் தெரியும். அதுமட்டும் அல்ல, உள்ளே இருப்பதும் தெரியும். கீழே உள்ள 2 டி உலகத்தைப் பார்க்கவும்.
இங்கே மனிதர்கள் ஒருவரை ஒருவர் கடந்து செல்ல ஒருவர் மீது ஒருவர் ஜம்ப் செய்து செல்ல வேண்டும். மேலும் 2 d உலகத்தில் ஒருவரது வடிவத்தை வைத்து அவரை மதிப்பிடுதல் அதிகமாக இருக்கும். கோடு ,முக்கோணம் இவை தீண்டத் தகாததாக அடிமட்டத்தில் இருக்கும். ஏனென்றால் அவற்றின் பக்கங்களின் கூர்மை. பக்கத்தில் வந்தால் அடுத்தவர் உடலைக் குத்தி விடும்.

கூர்மை இல்லாத வட்டங்களே அந்த உலகின் ராஜாக்களாக இருக்கும்.
நாம் இந்த படத்தை முழுமையாகப் பார்க்கிறோம். ஆனால் படத்தில் இருக்கும் உயிரிகளால் அப்படிப் பார்க்க இயலாது. படத்தில் வலது கீழ்மூலையில் இருக்கும் வட்டத்தை நாம் முழுமையாகப் பார்க்கிறோம். அது மட்டும் அல்ல அதன் உள்ளே உள்ள உறுப்புகளையும் பார்க்கிறோம். அதே போல ஒரு உயர் பரிமாண உயிரி நம்மைப் பார்க்கும்போது முழுமையாகப் பார்க்கும். நம் தலை, கால், கீழ்ப்பாதம், முதுகு, இவை அனைத்தையும் கூடவே நம் உள் உறுப்புகளையும் ஒருசேரப் பார்க்கும். நம் உடையெல்லாம் அதற்கு அர்த்தமற்றது:))

இன்டெர்ஸ்டெல்லார் படத்தில் ஐந்தாம் பரிமாணத்தில் இருந்து மூன்று பரிமாண உலகைப் பார்க்க எப்படித் தெரியும் என்று காட்ட நோலன் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்.உண்மையில் அதை நாம் காட்டவே முடியாது. கூப்பரின் மகள் , அவள் அறை இவையெல்லாம் பல்வேறு இடங்களில் ஒரே சமயத்தில் தெரிகின்றன. தலைகீழாகத் தெரிகின்றன. அப்படி இல்லை; ஒரு காட்சி பல இடங்களில் தெரியாது. ஒரே காட்சி முழுமையாகத் தெரியும்.In its wholeness! ஒரு மனிதரை அப்படிப் பார்க்க முடிந்தால்??? மயக்கம் வந்து விடும்!இப்போது நாம் ஒருவரைப் பார்க்கும் போது அவரில் 10% மட்டுமே பார்க்கிறோம்.

படத்தில் சதுரம் ஒன்றில் ஒரு வட்டம் சிறைப்பட்டிருப்பதைக் கவனிக்கவும். (ராஜாவை யாரோ சிறை வைத்து விட்டார்கள்) வட்டம் வெளியேவர ஒரேவழி சிறைக் கதவை உடைப்பது தான்.ஆனால் நம்மால் , மூன்றாம் பரிமாணத்தில் இருந்து அப்படியே அந்த வட்டத்த்தை அலேக்காகத் தூக்கி வேறிடத்தில் வைக்க இயலும்.2டி உலகில் அந்த வட்டம் ஏதோ மாய மந்திரம் செய்து வெளியேறி விட்டது போல் தோன்றும். தம் உலகில் இருந்து திடீரென்று மறைந்து விட்டது போல! மேலும், வட்டத்தின் உள் உறுப்புகளை நாம் அதன் உடலில் துளை போடாமலேயே சரி பார்க்க முடியும்.அதே போல ஒரு 5D உயிரி நம் உடலில் துளை போடாமலேயே ஐந்தாம் பரிமாணத்தில் இருந்து நமக்கு ஆபரேஷன் செய்ய இயலும். (வாய், மூக்கு போன்ற இயற்கைத் துளைகளையும் உபயோகிக்காமல்.) எனவே நமக்கு அதிசயமாக, அமானுஷ்யமாக தோன்றுவது எல்லாம் ஐந்தாம் பரிமாணத்தில் மிகச் சாதாரணமான விஷயங்களாக இருக்கும். உதாரணம் பாட்டிலுள் போடப்பட்ட நாணயத்தை பாட்டிலை உடைக்காமல் எடுப்பது, வலம்புரிச் சங்கை இடம்புரிச் சங்காக மாற்றுவது இப்படி,  கடவுள், பேய், இறந்த உடலில் இருந்து வெளியும் ஆத்மா இவை ஐந்தாம் பரிமாணத்தில் இருந்தாலும் இருக்கலாம்.அதனால்தான் கூப்பரை அவர் மகள் பேய் என்று நினைக்கிறாள். நாம் 2டி உலகில் நுழைந்தால் நம்மை முழுவதுமாக அதில் வெளிக்காட்ட முடியாது. நம் அசைவுகள் நிழல் சுவர்கள் போல அந்த 2டி உயிர்களுக்குத் தெரியும். உயிருள்ள நிழல்கள்... அந்த நிழலைத் தாண்டி நாம் செல்ல இயலாது. அதே போல 5D உயிரினம் நம் உலகுக்கு வந்தால் அதன் அசைவுகளை நம்மால்  சொற்பமாக உணர முடியும். அதைக் கண்டிப்பாக பேய் என்றே நினைப்போம்.


இன்னொரு முக்கியமான விஷயம். நாம்,  5D வெளிக்கு செல்ல நேர்ந்தால் collapse ஆகி செத்துப் போவோம். இதை நோலன் வேண்டுமென்றே மறைத்து விட்டார். நம் உடல்கள்  5D பிரபஞ்சத்துக்கு ஏற்ப தகவமைப்பு பெறவில்லை. உதாரணமாக, படத்தில் உள்ள வட்டம்  3D உலகுக்கு வந்து விடுவதாகக் கொள்வோம். அதன் உள்  உறுப்புகள் அப்படியே பொலபொலவென உதிர்ந்து விடும். குறைந்தபட்சம் அவை பிடிப்பு இல்லாமல் தொங்கிக் கொண்டிருக்கும்.

கூப்பர், முதன் முதலில் விண்வெளிக்கு செல்கிறேன் ; போய் வருகிறேன் என்று மகளிடம் சொல்கிறான்; அப்போது அவள் இல்லை; போகாதே ; என் பேய் உன்னை  STAY என்று மோர்ஸ் கோடில் செய்தி அனுப்பி உள்ளது என்கிறான். பேய் என்பது சுத்தப் பேத்தல் எதையும் அறிவியல்பூர்வமாக அணுக வேண்டும் என்று கூறும் கூப்பர் அதை அலட்சியம் செய்து விட்டு வெளியேறுகிறான். ஆனால் மகளுக்கு STAY என்று செய்தி அனுப்புவது அவனே தான்.  A message from the future! விண்வெளிப் பயணம் மேற்கொண்டு மகளைப் பிரிந்து ரொம்பவே வருத்தப்படும் கூப்பர், பின்னால் நான் அங்கே போகாமலேயே இருந்திருக்கலாம் என்று வருந்தி மகளுக்கு செய்தி அனுப்புகிறான். மகள் தன் பயணத்தை நிறுத்தக் கூடும் என்ற நம்பிக்கையில். கூப்பர் ஐந்து பரிமாண உலகில் நின்று கொண்டிருக்கிறான் என்பதை அறிக. எனவே அவர்களுக்கு காலம் ஒரு பரிமாணம். மலையில் ஏறுவது போல, பள்ளத்தில் இறங்குவது போல, அவர்களால் கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் எதிர் காலத்துக்கும் அனாயாசமாக சென்று வர இயலும். கூப்பருக்கு கடந்த காலம், எதிர் காலம் இவைகள் ஒரு வெளி (space ) போலத் தெரியும். எனவே அவனால் தனது கடந்த காலத்துக்கு சுலபமாக செய்தி அனுப்ப முடியும். ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். கூப்பர் stay என்று செய்தி வந்ததை அறிந்து பயணம் போகாமலேயே இருந்திருந்தால் அவன் stay என்ற செய்தியையே after all அனுப்பி இருக்க முடியாது. இந்த இடத்தில் ஒரு loop வருகிறது.  இதை causality violation என்கிறார்கள். நான் இப்போது கடந்த காலப் பயணம் மேற்கொண்டு ஐன்ஸ்டீனுக்கு அவர் ரிலேடிவிட்டி  கண்டுபிடிக்கும் முன்னரே அதைப் பற்றி சொல்லித்தருவது. என்னதான் ஐந்தாம் பரிமாணத்தில் இருந்தாலும் கடந்த காலத்தைப் பார்க்க முடியுமே தவிர மாற்ற முடியாது. மேலும் அந்த நிகழ்வுக்கு வலு சேர்க்க வேண்டுமானால் முடியும். உதாரணாமாக நாம் கடந்த காலத்து சென்று இரண்டாம் உலகப் போரை நிறுத்த முடியாது. போரில் பங்கு கொள்ள வேண்டுமானால் முடியும்.


டேனியல் 2 :22

அவன் (நமக்கு) இருட்டான மறைக்கப்பட்ட இடங்களை அறிவான்.
அவனுக்குள் ஒளி உண்டு. அவன் பார்வையில் இருந்து மறைந்தது எதுவும்
கிடையாது.


Hebrews 4:13 Nothing in all creation is hidden from God's sight. Everything is uncovered and laid bare before the eyes of him to whom we must give account.


கடவுள் ஐந்தாம் பரிமாணத்தை சேர்ந்தவரோ??அர்ஜுனா, உனக்கு உன் கடந்த காலத்தைப் பற்றி ஏதும் தெரியாது, அனால் எனக்கு உன்னுடையது , என்னுடையது, கடந்த காலம் எதிர்காலம் எல்லாம் கண்முன் தெரிகின்றன என்கிறான் கிருஷ்ணன் கீதையில்! perfect 5D view!

வேதாஹம் சமத்திதானி வர்த்தமாநானி ச அர்ஜுன
பவிஸ்யானி ச பூதானி மாம் து வேதா ந கஸ் ச ன   (7-26)

இதற்கு மத்வரின் உரையைப் பார்ப்போம்.
(non duality )

இறைவனுக்கு மாயை என்பதே கிடையாது; ஜீவன் கடந்த காலம் , எதிர் காலம் என்ற மாயையில் சிக்கிக் கொண்டுள்ளது.  அவன் கண் முன்னே எல்லாம் காலம் உட்பட எல்லாம் சத்தியமாக விரிகின்றன.

கிருஷ்ணன் தற்காலிகமாக அர்ஜுனனை 5D ஸ்பேஸ்-இற்கு teleport செய்கிறான் போலிருக்கிறது. என் விஸ்வரூபத்தைப் பார் என்கிறான். அர்ஜுனன் தன் கண்களுக்கு எல்லாம் அப்பட்டமாகத் தெரிகிறது என்கிறான். undivided view ! நடந்தது, நடப்பது, நடக்கப் போவது எல்லாம் தெரிகிறது என்கிறான்;மலைகள், சமுத்திரங்கள், விண்மீன்கள், எல்லாம் அவனுக்குள் அடங்கி இருப்பதை அர்ஜுனன் பார்க்கிறான். எப்படி கிருஷ்ணனுக்குள் சூரியன் இருக்கும் என்று நாம் கேலி செய்கிறோம், அது நமது limited vision !  சரி..

பிரபஞ்சத்தில் நான்கு ஆதாரமான விசைகள் இருப்பது தெரியும். ஒன்று ஈர்ப்பு , இன்னொன்று மின்காந்த விசை, இன்னும் இரண்டு அணுக்கருவினுள் செயல்படும் விசைகள். பொதுவாக நாம் gravity யை பெரிய ஆளு என்கிறோம். இல்லை, மற்ற  விசைகளுடன் ஒப்பிடும் போது gravity சின்னப் பையன். static charge மூலம் சீப்பில் பேப்பர் துண்டு ஒட்டிக் கொள்ளும் போது சீப்பின் மின்காந்த விசை ஒட்டு மொத்த பூமியின் ஈர்ப்பை எதிர்த்து நிற்கப் போதுமானதாக உள்ளது. மேலும், அணுக்கரு விசைகளுடன் ஒப்பிடும் போது ஈர்ப்பு மிக மிக மிக வலிமை குறைந்தது. சுமோ வீரரின் முன் எலிக்குட்டி போல! இது ஏன் என்று யோசித்த சில விஞ்ஞானிகள் , ஈர்ப்பு விசை மட்டும் எல்லா பரிமாணங்களிலும் புகுந்து பயணிக்கிறது என்று அனுமானித்தனர் . பெரிய தண்ணீர்க் குழாய் ஒன்றை கருதவும். அதில் அதிக அழுத்தத்துடன் வேகமாகத் தண்ணீர் வருகிறது. வெளிவரும் தண்ணீர் வலிமை மிக்கதாக இருக்கும் அல்லவா? அனால் அந்தக் குழாயில் வழிநெடுக சிறிதும் பெரிதுமாக ஓட்டை போட்டு விடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தண்ணீர் பல துளைகளின் வழியே லீக் ஆவதால் மறுமுனையில் வெளிவரும் தண்ணீருக்கு அத்தனை force இருக்காது . இப்படித் தான் gravity எல்லாப் பரிமாணங்களிலும் புகுந்து leak ஆகிறது; எனவே வலிமை குறைவாக உள்ளது. லீக் ஆகி வந்தே நம்மை என்ன பாடுபடுத்துகிறது பாருங்கள். கீழே தள்ளி முட்டியைப் பேர்த்து விடுகிறது!

கூப்பர் சாமார்த்தியமாக தன் மகளுடன் communicate செய்ய gravity யைப் பயன்படுத்துகிறான். சாதாரணமான ரேடியோ அலைகளை உபயோகிக்க முடியாது. அவை மின்காந்த அலைகள் என்பதால் அவை 5ஆம் பரிமாணத்தில் கசிவதில்லை. சாதாரணமாக மின்காந்த அலைகள் அல்லது ஒளி மூலம் communicate செய்தால் சனியில் இருந்து பூமிக்கு தகவல் வர மாதக் கணக்கில் ஆகும். இது shortcut ! ஐந்தாம் பரிமாணத்தில் gravity ஒளியை விட வேகமாகப் பயணிக்கக் கூடியது. almost instantaneous!!! நாம் எப்படி மின்காந்த அலைகளை 1, 0 என்று gate களை வைத்து control செய்கிறோமோ அதே போல ஈர்ப்பை கண்ட்ரோல் செய்து மோர்ஸ் கோட் முறையில் செய்தி அனுப்புகிறான். Other than Gravity only LOVE can transcend all dimensions என்கிறான் . உண்மையான அன்பு பரிமாணங்கள் கடந்து உரியவரை அணுகும். வெளிநாட்டில் உள்ள மகனுக்கு ஏதோ ஆபத்து என்றால் இங்கே அம்மாவின் வயிற்றில் என்னவோ செய்வது இப்படித்தான்!

சரி. perfect 2டி பொருட்கள் இந்த பிரபஞ்சத்தில் கிடையாது. பேப்பருக்கும் மிகச் சிறிய அளவு 'உயரம்' இருக்கிறது.நம்  நிழலை வேண்டுமானால் 2டி என்று சொல்லலாம். நமது நிழல் 2 D என்றால் உயர் பரிமாண உயிர்களின் நிழல் முப்பரிமாணத்தில் இருக்கும்.  முப்பரிமாணத்தில் கறுப்பாக நகர்வது போலிருக்கும். கண்டிப்பாக பேய் என்றே நினைத்துக் கொள்வோம்.

யாருடைய
நடமாடும் நிழல்கள் நாம்

என்ற ஆத்மாநாமின் கவிதை நினைவுக்கு வருகிறது.


சரி, இந்த ஐந்து பரிமாண கான்செப்ட் எப்படி வந்தது? ஐன்ஸ்டீனுக்குப் பிறகு இயற்பியல் கொஞ்சம் மந்தமாகவே நகர்ந்து கொண்டிருக்கிறது . பிரபஞ்சத்தின் நான்கு விசைகளையும் ஒன்றிணைக்கும் ஒரு ஒருங்கிணைந்த கொள்கை அவரது கனவாக இருந்தது. அவரால் அதை நிறைவேற்ற முடியவில்லை. மிகப் பெரிய தொலைவுகளில் செயல்படும் gravity யையும் மிகச் சிறிய தூரங்களில் நிலவும் குவாண்டம் விசைகளையும் எப்படி ஒருங்கிணைப்பது என்று போராடுகிறார்கள். சமீபத்திய ஸ்ட்ரிங் தியரி எல்லாமே ஒரு பரிமாண வயிலின் கம்பி போலத் தான் என்று சொல்கிறது. ஆனால் இது வேலை செய்ய நமக்கு 11 பரிமாணங்கள் (காலம் உட்பட)தேவைப்படுகின்றன. மூன்று தான் தெரிகிறது...இன்னும் 7 எங்கே ஒளிந்து கொண்டுள்ளதோ என்று தெரியவில்லை. சின்னச் சின்ன முடிச்சுகளாக சுருட்டி வைக்கப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள். உதாரணம் ஸ்ட்ரா! தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஸ்ட்ரா  ஒரு இருபரிமாண செவ்வகம் போல் தோன்றுகிறது. ஆனால் அதனுள் ஒரு மிகச் சிறிய மூன்றாம் பரிமாணம் சுருட்டி வைக்கப் பட்டுள்ளது.நம் பிரபஞ்சம் ஒரு நான்கு பரிமாண ஸ்ட்ரா! பெருவெடிப்பின் (big bang ) இன் போது மூன்று பரிமாணங்கள் மட்டும் விரிந்து பெருக, மற்ற ஏழும் அப்படியே முடிச்சுகளாக நின்று விட்டன. சுருட்டி வைக்கப் பட்டிருக்கும் drawing sheet ஐ unfold செய்வது போல...


சரி, நீங்கள் விஞ்ஞானியாக இருந்தால் எந்தப் plan ஐ தேர்ந்தெடுப்பீர்கள்?

Plan A : ஒட்டுமொத்த மனித இனத்தையும் வேறொரு கிரகத்துக்கு மாற்றுவது

Plan B : எல்லாரும் இங்கே செத்துப் போங்கடா என்று விட்டு விட்டு சில சாம்பிள்களை மட்டும் எடுத்துச் சென்று புது கிரகத்தில் புதிதாக மனித இனத்தை ஆரம்பிப்பது!
சமுத்ரா


Sunday, November 16, 2014

Interstellar -IAs an அறிவியல் ஆர்வலர், இன்னும் I S விமர்சனம் எழுதவில்லையே என்று நண்பர் ஒருவர் கேட்டார். எழுதிடுவோம், அதற்கென்ன? :) ஆனால் இது விமர்சனம் அல்ல; விளக்கம் :))(1)விண்வெளிப் பயணம், மற்றும் (2)extra dimensions என்று இரண்டு விஷயங்கள் இதில் இருப்பதால் இரண்டு பதிவுகளாகப் பார்க்கலாம்.

முதலில், Interstellar என்பது ஒரு misnomer :) Intergalactic என்பதே சரி. படத்தில் கூப்பர் என்ற கதாநாயகன் வேறு ஒரு காலக்ஸிக்கு செல்வதால் அது inter-galactic travel ஆகும்! சரி, பெயரில் என்ன இருக்கிறது, அதை விடுவோம்.

இன்னொரு விஷயம் இந்த black-hole, wormhole, 5th dimension இந்த concept எல்லாம் இயற்பியலில் கிட்டத்தட்ட  நூறு ஆண்டுகள் பழமையானவை. 12 ஆம் வகுப்பு இயற்பியலில் கூட blackhole எல்லாம் வருகிறது என்று நினைக்கிறேன். Interstellar பார்த்து விட்டு , நிறைய பேர் இந்த விஷயங்களை  முதன்முதலில் கேட்பது போல் பரவசமடைகிறார்கள். ஏதோ அந்த concept களை நோலனே கண்டுபிடித்தது போல! NO ! physics ஐ சுவாரஸ்யமாக மாற்றக் கூட ஒரு திரைப்படம் வரவேண்டி இருக்கிறது.

விண்கலத்தின் மெயின் Operating system , மனிதனைப் போல பேசுவது, ஜோக் அடிப்பது, humor setting , trust setting இவற்றைக்  கூட சுஜாதா தன் விஞ்ஞானச் சிறுகதை ஒன்றில் ஏற்கனவே எழுதி இருக்கிறார். பூமியில் இருந்து வரும் தகவல்களை வேண்டுமென்றே அது fake செய்வதாக ஹீரோ நம்புகிறான். அவனுடன் பயணிக்கும் பெண், 'அது வெறும் ரோபோட் அதற்கு ஏமாற்றத் தெரியாது' என்கிறாள். நாம் இருவரும் சேர்ந்து பாஸ்வேர்ட் கொடுத்து இயந்திரத்தை முடக்கி விட்டு manual pilot மோடுக்குப் போய் விடலாம் என்கிறான் ஹீரோ. கடைசியில் என்ன ஆகிறது என்பது கதை.

இப்படித்  தெரிந்த விஷயங்களைக் கூட இங்க்லீஷ்காரன் படம் எடுத்துக் காட்டும் போது தான் நாம் வியக்கிறோம். :( பிற்காலத்தில் அறிவியலை திரைப்படங்கள் வாயிலாக கற்பிக்கும் நிலை கூட வரலாம் போலிருக்கிறது .

Well , பூமிக்கு ஆபத்து என்று வேறொரு புதிய பூமியை நாடுவது பழமையான ஒரு science fiction concept ..அதை நேர்த்தியாக, creative ஆக கற்பனை வளத்துடன் திரைப்படம் ஆக்கியிருப்பது பாராட்டுக்குரியது. Quickr இல் விளம்பரம் பார்த்து  packers and movers ஐக் கூப்பிட்டு வீடு மாற்றி விடுவது போல் அல்ல வேறொரு கிரகத்தில் குடியேறுவது.கொஞ்சம் சிக்கலான விஷயம்.முதலில் கிட்டத்தட்ட பூமியைப் போல் உள்ள கிரகம் ஒன்றைக் கண்டறிய வேண்டும். கடல்மணலில் கடுகைத் தேடுவது போல இது. தொலைநோக்கியில் விண்மீன்களை ஆராய்ந்து அதன் பிரகாசத்தில் periodic மங்கல் ஏற்படுவதை வைத்து கோள்களைக் கண்டறிகிறார்கள். கோள் கிரகத்தை சுற்றி வருகிறது என்று அர்த்தம். விண்மீனின் ஒளியை spectrometer இல் வைத்து அதில் என்னென்ன தனிமங்களுக்கு உரிய அலைநீளங்கள் இல்லாமல் இருக்கின்றன என்று கண்டறிந்து விண்மீனில் என்னென்ன தனிமங்கள் உள்ளன என்று கண்டறிகிறார்கள். கோள் என்பது ஒருவிதத்தில் அதன் தாய் விண்மீனின் சாம்பல் என்பதால் கோளிலும் எந்த மூலங்கள் (ஆக்ஸிஜன் ,கார்பன் etc ) இருக்கலாம் என்று தோராயமாகத் தீர்மானிக்கிறார்கள்.

இன்னொரு சிக்கல் மனித இனம் பூமியின் சூழ்நிலைக்கு ஏற்ப evolve ஆகியுள்ளது. பூமியைப் பிரிந்தால் தலைவனைப் பிரிந்த அகநானூற்று தலைவி போல் பசலை வந்து விடும்!மனித இனம் ரொம்பவே sensitive , நம்மால் அம்மோனியாவை சுவாசிக்க இயலாது. ஓசோன் படலம் இல்லாமல் தோல் வெந்து போகும். அதிக பிரகாசத்தை கண்கள் தாங்காது;  கோளின் மிகக் குறைந்த ஈர்ப்பு அதன் வளிமண்டலத்தை நழுவ விட்டுவிடும்.ஆக்சிஜன் கொஞ்சம் குறைந்தால் மூச்சு வாங்கி வியர்த்து விடுவோம்.  வளிமண்டல அழுத்தம் குறைந்தால் கஷ்டப்படுவோம்; temperature மாறினால் நம் மெட்டபாலிசம் பாதிக்கப்படும்...இன்னொரு கிரகத்துக்கு சென்று ஹெல்மெட் போட்டுக் கொண்டு தான் முத்தம் கொடுக்க வேண்டும் என்றால் அதற்குப் போகாமலே இருக்கலாம். சரி, அப்படியே போகிறோம் என்று வைத்துக் கொள்வோம்...


பிரபஞ்சத்தில் random ஆக ஓர் இடத்தைத் தேர்ந்தெடுக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அது வெற்றிடமாக இருக்க 99.999 % வாய்ப்புகள் உள்ளன என்கிறார் கார்ல் சாகன் ..பிரபஞ்சம் 99.999% வெற்றிடம் தான். குளிர்ந்த, இருண்ட , எந்த விதமான சுவாரஸ்யமும் அற்ற அநாதி வெற்றிடம். ஒரு விண்மீனுக்கும் இன்னொன்றுக்கும் அபார தூரம். ஒரு காலக்ஸிக்கும் இன்னொன்றுக்கும் எண்ணிப் பார்க்க இயலாத தூரம்.(காலக்ஸி என்பது விண்மீன்களின் குழுமம்) பிரபஞ்சத்தின் density ரொம்பவே குறைவு. ஒரு கால்பந்து மைதானத்தில் கடுகை வைத்தது போல! இத்தனை தூரத்தைக் கடக்க நமக்கு மில்லியன் கணக்கில் வருடங்கள் பிடிக்கும். அனால் நம் ஆட்களுக்கு எல்லாவற்றிலும் shortcut தேடும் கெட்ட பழக்கம் உள்ளது. எனவே இந்த wormhole என்ற concept கொஞ்சம் நம்பிக்கை தருகிறது. ரொம்பவே மெனக்கெட்டு நேர்வழியில் போக வேண்டாம். சந்தில் புகுந்து போய் விடலாம் என்று ஒரு  நம்பிக்கை.இதைப் பற்றி பகுதி இரண்டில் பார்க்கலாம்.

விண்கலம் பற்றி... விண்வெளியில் மனிதன் பயணம் செய்ய சாதா தீபாவளி ராக்கெட்டுகள் ஆகாது.தீபாவளி ராக்கெட் என்று சொல்வது நாம் இப்போது செவ்வாய்க்கு அனுப்பினோமே அது. ஸ்பெஷல் எரிபொருள் ஒன்று தேவை. விண்வெளிப் பயணத்தில் ஒரு நிம்மதி என்ன என்றால் நியூட்டனின் முதல் விதி. ஒரு குறிப்பிட்ட வேகத்தை விண்கலத்துக்கு கொடுத்து விட்டால் அது பாட்டுக்கு அதே வேகத்தில்  வெளியில் சிவனே என்று போய்க் கொண்டிருக்கும் constant எரிபொருள் தேவையில்லை.எரிபொருள் விண்கலத்தின் திசையை மாற்றவும் , accelerate செய்யவும் (வேகத்தை கூட்ட, குறைக்க ) மட்டுமே தேவைப்படும். எரிபொருள் தீர்ந்து போய் விட்டால் விண்கலத்தின் பாகங்களை  கழற்றி விட்டு அதற்கு எதிர்த் திசையில் உந்தி முன்னேற முடியும். இது நியூட்டனின் மூன்றாம் விதி. இதைப் பயன்படுத்தி திரைப்படத்தில் விண்கலத்துக்கு push கொடுப்பதை கவனித்திருக்கலாம். இன்னொரு டெக்னிக் கூட இருக்கிறது. gravity push ....sling shot என்பார்கள்.கோள் ஒன்றை நோக்கித் தாழ்வாகப் பறந்து அதை ஏமாற்றி விட்டு அதன் ஈர்ப்பை (வேகத்தை) திருடிக் கொண்டு மீண்டும் பறப்பது! இவையெல்லாம் எரிபொருளை மிச்சம் செய்யும் டெக்னிக்குகள்.


சிலர் ஹைட்ரஜனை எரிபொருளாக முன்வைக்கிறார்கள். பிரபஞ்சம் எங்கும் நீக்கமற வியாபித்து இருக்கிறது அது. வாழைப்பழம் போல எங்கேயும் எந்த சீசனினும் கிடைக்கும். அதைப் பயன்படுத்தி எரித்தால் விண்கலத்தில் ஒரு குட்டி சூரியன் உருவாகி, வெப்பத்தால் ஹைட்ரஜன் இணைந்து fusion முறையில் ஏராளமான ஆற்றலை வெளியிடும். சிலர் anti matter என்ஜின் களை suggest செய்கிறார்கள். ஹைட்ரஜனை எரித்தால் அதன் நிறையில் ஒரு சிறிய பங்கு மட்டுமே ஆற்றலாக மாறுகிறது; ஆனால் பொருளும் அதன் எதிர்ப்பொருளும் சந்தித்தால் 100% நிறையும் ஆற்றலாக மாறி விடும். இவையெல்லாம் நம் விண்கலத்தை கிட்டத்தட்ட ஒளியின் வேகத்துக்கு முடுக்கத்(accelerate ) தேவைப்படும் எரிபொருட்கள். ஆனால் இந்த anti மேட்டர் என்னும் எதிர்ப்பொருளை பிரபஞ்சத்தில் தேடுவது குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஒன்னு இங்க இருக்கு, இன்னொன்னு எங்கே என்பது போல. பொருளும் அதன் எதிர்ப்பொருளும் சேர்ந்தே தோன்றின என்று நம்பப்படுகிறது. ஆனால் எதிர்ப் பொருள் எங்கே ஒளிந்துள்ளது என்று தெரியவில்லை. ஐந்தாம் பரிமாணத்தில் ஒளிந்திருக்கலாம் என்கிறார்கள்.

Interstellar படத்தில் சில நேரங்களில் அவர்கள் எடையில்லாமல் மிதந்து கொண்டும் சில நேரங்களில் எடையுடனும் இருப்பதை கவனித்து இருப்பீர்கள். ஏன்? ஈர்ப்பு இல்லை என்றால் எடை இருக்காது என்று தெரியும் ; அல்லது விண்கலம் கிரகத்தை freefall என்ற முறையில் சுற்றிக் கொண்டிருந்தாலும் உள்ளே எடை இருக்காது. ஒரு கிரகத்துக்கு சென்று land ஆகும் போது சும்மா சக்திமான் போல ஜிங் என்று குதித்து விட முடியாது.safe landing வேண்டுமென்றால் கிரகத்தை முதலில் சுற்றி வரவேண்டும். அப்போது நமக்கு எடை இருக்காது. இது ஏன் என்றால் விழும்போது நமக்கு எடை இருப்பதில்லை. விழுந்து கிடப்பதால் நமக்கு எடை இருக்கிறது. மலை மலை உச்சியில் இருந்து குதித்துப் பாருங்கள்; எடை அற்ற தன்மையை உணர்வீர்கள் .கிரகத்தை சுற்றுவது என்பது அதை நோக்கித் தொடர்ச்சியாக விழுவதே அன்றி வேறில்லை. எனவே நோ எடை.படிப்படியாக ஆர்பிட்டைக் குறைத்துக் கொண்டு May I come in Sir என்று கேட்டுக் கொண்டு டைரக்டர் வீட்டில் முதல் சான்ஸ் கேட்டு உள்ளே நுழையும் இசையமைப்பாளர் போல உள்ளே நுழைய வேண்டும். முதன்முதலில் கால் வைக்கும் போது எங்கே வினோதமான வேற்றுக் கிரக உயிரிகள் வந்து தாக்கி விடுமோ என்ற பயத்துடன் இறங்கவும்!

சரி...I S படத்தில் மனிதர்களுக்கு விண்கலத்தின் உள்ளே எப்படி எடை வந்தது? Thanks to Einstein! ஐன்ஸ்டீன் ஈர்ப்பும், முடுக்கமும் ஒன்றே(equivalence principle) என்கிறார். படத்தில் set 1G level  என்று பைலட் சொல்வதை நீங்கள் கவனித்து இருக்கலாம். விண்கலத்தின் உள்ளே எடை இல்லாமல் இருக்க முடியாது. ரொம்ப பேஜார். சாப்பிட முடியாது; உச்சா போக முடியாது. செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாது. எனவே பூமியின் தரையில் இருப்பது போன்ற உணர்வை பயணிகளுக்குத் தர வேண்டும். பூமியின் ஈர்ப்பினால் ஏற்படும் முடக்கம் 1G என்று நமக்குத் தெரியும். Acceleration due to Gravity 9.8 m/S2. இது எதைக் குறிக்கிறது என்றால் நாமெல்லாம் பூமியை நோக்கி 1 G முடுக்கத்துடன் விழுந்து கொண்டிருக்கிறோம் என்று பொருள். அல்லது பூமியின் தரை நம்மை அந்த acceleration இல் மேல்நோக்கி சதா  தள்ளுகிறது என்றும் கொள்ளலாம்.எனவே விண்கலத்தை தொடர்ச்சியாக 9.8 m /s2 என்ற நிலையான முடுக்கத்தில் நகர்த்திக் கொண்டிருந்தால் உள்ளே இருப்பவர்கள் பூமியில் இருப்பது போலவே உணர்வார்கள். உள்ளே எதிர்த் திசையில் ஒரு செயற்கை ஈர்ப்பு உருவாக்கப் படுகிறது. ஆனால் இப்படிச் செய்வதற்கு கணிசமான எரிபொருள் செலவாகும். சும்மா ஒரே வேகத்தில் போய்க்கொண்டிருந்தால் எரிபொருள் தேவையில்லை.வேகத்தை மாற்ற எரிபொருள் தேவை. ஆனால் ஒரே வேகத்தில் போய்க் கொண்டிருந்தால் உள்ளே வெட்டவெளியில் ஈர்ப்பு இருக்காது. எடையும் இருக்காது. வேடிக்கைக்காக சில நேரம் எடையற்ற நிலை வேண்டும் என்றால் எரிபொருள் சப்ளையை நிறுத்தினால் போதும்! ஜாலி!

இத்தனை மெனக்கெட்டு மனிதர்களை அனுப்ப வேண்டுமா? probe களை இயந்திரங்களை முதலில் அனுப்பக் கூடாதா எரிபொருளை மிச்சம் செய்யலாமே (எடையற்ற நிலையில் மனித உடல் ஆற்றலை வெகுவேகமாக இழக்கிறது; எலும்புகள் மிக வேகமாகத் தேய்கின்றன என்கிறார்கள்)என்றால் இதற்கான விடை I S படத்திலேயே உள்ளது. Survival instinct ..இது ரோபோட்டுகளுக்குக் கிடையாது. ஒரு ஆபத்து வந்தால் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது. என்ன தான் ப்ரோக்ராம் செய்தாலும் அதற்கு வராது. Artificial Intelligence இல் இது பெரிய சவால். நம்மை நோக்கி வேகமாக கல் ஒன்று வந்தால் உடனே நகர்ந்து கொள்வது. இதை ரோபோட்டுகள் செய்யாது. உன்னை நீயே dismantle செய்து கொள் என்றால் சிரித்துக் கொண்டே செய்து கொள்ளும். ஏன்? No நான் வாழ விரும்புகிறேன் என்று எதிர்க்கேள்வி கேட்காது. மனிதன் இனப்பெருக்கம் செய்வது கூட இந்த survival instinct தான். என் மகன் மூலம் பேரன் மூலம் ஏதேனும் ஒரு வடிவில் நான் வாழ மாட்டேனா என்ற சுயநலம். காதல் என்பது தெய்வீகம் மண்ணாங்கட்டி எல்லாம் கிடையாது; utter சுயநலம்! காதலின் மூலம் சாசுவதம் காண முயல்கிறான் மனிதன்!இந்த survival instinct இல்லாததால்தான் ரோபோட்டுகள் காதலில் விழுவதில்லை. இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ என்று பாடுவதும் இல்லை!

 next , கூப்பர், அப்படியே ரஜினி மாதிரி இளமையாய் இருக்க, அவர் மகள் Murphy , அனுஷ்கா மாதிரி அரைக்கிழவி ஆகி விடும் time dilation . காலம் இரண்டு விதத்தில் மெதுவாக நகரலாம். ஒன்று விண்கலத்தில் செல்பவர் அதிவேகத்தில் செல்கையில்; காலம் மெதுவாக செல்கிறது (special relativity)
இன்னொன்று கிரகத்தின் அதீத ஈர்ப்பினால் காலம் மெதுவாக நகர்கிறது. (General relativity )பூமியை விட அதிக கனமான கிரகம் ஒன்றில் காலம் மந்தமாக நகர்கிறது.(பூமியின் காலத்துடன் ஒப்பிடுகையில்)இதனால் தான் time is a resource என்கிறாள் அந்தப் பெண். பூமிக்குத் திரும்பிப் போகவேண்டாம் என்றால் காலத்தைப் பற்றிக் கவனம் வேண்டாம். திரும்பிப் போகவேண்டும் என்றால் கவனமாக இருக்க வேண்டும். இங்கே நாம் செலவழிக்கும் ஒவ்வொரு மணியும் பூமியில் ஏழு ஆண்டுகளை விழுங்கி விட்டிருக்கும் என்று அவர்கள் சொல்வதை கவனிக்கவும். blackhole  ஒன்றின் event horizon அருகில் நாம் சில வினாடிகள் நிற்க முடிந்தால் பூமியில் மில்லியன் கணக்கில் காலம் உருண்டோடி விட்டிருக்கும்.

இந்தக் கால நிகழ்வுகளை ஏற்கனவே அணு அண்டம் அறிவியலில் விளக்கி இருக்கிறோம். interest இருந்தால் படித்துக் கொள்க.

http://samudrasukhi.blogspot.in/2011/06/34-b.html

http://samudrasukhi.blogspot.in/2011/09/48.html

http://samudrasukhi.blogspot.in/2011/10/50.html


படத்தில் வரும் இன்னொரு விஷயம் இந்த suspended அனிமேஷன். ஜிப் மாட்டிய பைக்குள் போய் நீண்ட காலம் hibernate செய்வது. Planet of the Apes படத்தில் கூட இது வருகிறது. மனித   உடலின் வெப்பநிலையை கிட்டத்தட்ட ஜீரோ டிகிரிக்கு இறக்கி இதயத்துடிப்பு, முச்சு இவைகளை மிக மிக மிக மெதுவாக்குவது இது இன்னும் ஆராய்ச்சி  நிலையில்தான் உள்ளது..கோமா நிலை.இதன் மூலம் பயணிகளை இளமையாக வைத்திருக்க முடியும். இன்னும்கூட உடலின் இறப்பு என்பது தற்காலிக முடக்கம் தான் என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள். மம்மியாய் மாற்றி ஐஸ் பெட்டியில் வைத்திருந்தால் என்றோ ஒருநாள் எழுந்து வருவார் என்று நம்புகிறார்கள்.

உறங்கு வதுபோலும் சாக்கா டுறங்கி

விழிப்பது போலும் பிறப்பு. (339)

தொடரும்.

Saturday, November 15, 2014

கலைடாஸ்கோப்-111

கலைடாஸ்கோப்-111 உங்களை வரவேற்கிறது

Without mathematics, there's nothing you can do. Everything around you is mathematics. Everything around you is numbers.
Shakuntala Devi


111 -என்ற நம்பர் ஸ்பெஷலா என்று தெரியாது. ஒரு படத்தில், வடிவேலு நான் பத்து போட்டதுக்கே இப்படி பீல் பண்றேளே , அங்க ஒருத்தர் --- போட்டுட்டு எப்படி நடந்து வரார் பாருங்கோ! என்பார். அந்த விதத்தில் வேண்டுமானால் இது ஸ்பெஷல் என்று சொல்லலாம்.

ஒரு முறை ராமானுஜன், கணித அறிஞர் ஹார்டியுடன் ஒரு  டாக்ஸியில் போய்க் கொண்டிருந்தாராம்.அந்த டாக்ஸியின் நம்பர் 1729. ஹார்டி, அதைப் பார்த்து விட்டு 'என்ன ஒரு சலிப்பான நம்பர்' என்றாராம். அதற்கு ராமானுஜன், 'இல்லை, இது மிகவும் சுவாரஸ்யமான எண் ,1729 என்பது இரண்டு நேர்க் கனங்களின் கூட்டுத்தொகையாக இரண்டு வழிகளில் எழுதக்கூடிய மிகவும் சிறிய எண் என்றாராம்.


1729 = 1^3 + 12^3 = 9^3 + 10^3


எந்த ஒரு எண்ணுமே சலிப்பான எண் இல்லை என்கிறது 'interesting number paradox '. எப்படி என்றால், சலிப்பான எண்களின் குழு(set ) ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்'...உங்களுக்கு சலிப்பான எண்கள் என்று தோன்றுவதை ஒரு செட்டில் எழுதுங்கள்...e .g { 19, 37, 43, 93, 113....} இதில் முதலில் வரும் எண் , (19) சலிப்பான எண்களில் சிறியது என்றாகிறது. ஆனால் 'சலிப்பான எண்களில்  சிறியது' என்ற பண்பே அந்த எண்ணை ஒரு விதத்தில் ஸ்பெஷல் ஆக்கி விடுகிறது. எனவே அந்த எண் சலிப்பான எண் அல்ல . அதை செட்டில் இருந்து நீக்கி விடுவோம். இப்போது அடுத்த எண் (37) இதே லாஜிக்கின் படி அடிபட்டுப் போகிறது. எனவே uninteresting எண்களின் set காலி என்று நிரூபிக்கப்படுகிறது. வேறு விதத்தில் சொன்னால் எல்லா எண்களுமே interesting தான்....

Happy number என்று இன்னொன்று உள்ளது. 13 என்பது happy நம்பர். எப்படி என்றால் அதன் இலக்கங்களின் வர்க்கங்களின் கூட்டுத் தொகை கடைசியில் 1 என்று வர வேண்டும்.

13

1 ^ 2 + 3 ^ 2 = 10
1 ^ 2 + 0 ^ 2 = 1

இப்படி எண்களை வைத்து சும்மா விளையாடுவதை recreational mathematics என்கிறார்கள். சரி, சும்மா விளையாட்டுக்கு என்றால் பரவாயில்லை. எண்களுக்கும் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று சொல்லும் நியூமராலஜி-யை சுத்த பேத்தல் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். exam ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர், மொபைல் நம்பர், கார் நம்பர், employee நம்பர் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்து 7 வருதா, அப்பாடா என்று பெருமூச்சு விடுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அதாவது ஒரு க்ரூப் 'எண்கள் நமது கண்கள்' என்கிறது. இன்னொரு க்ரூப் 'எண்கள் வெறும் எண்கள் 'என்கிறது. பண்டிட் ----என்று ஒரு ந்யூமராலாஜி நிபுணர். நிறைய clients போலிருக்கிறது அவருக்கு. ஒரு போர்டு, marker இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு நன்றாக சம்பாதிக்கிறார். பேர் சொல்லுங்க,  பிறந்த தேதி சொல்லுங்க, நேரம் சொல்லுங்க, கல்யாண நாள் சொல்லுங்க என்கிறார், சீரியசாக அதை போர்டில் எழுதுகிறார்.

பேர் என்ன சார்?
 TS ராதாக்ருஷ்ணன்
சரி
டேட் ஆப் பர்த் ?
20-8-1953

(போர்டில் ஏதோ கணக்கு போடுகிறார்)

20 இல் பிறந்திருக்கீங்க...சந்திரன் ஆதிக்கம் அதிகம் இருக்கும்....2, 11, 20 தேதிகளில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நல்ல பலன்களையே கொடுப்பார். ஆனா பாருங்க, உங்க பேருக்கு 44 நம்பர் வருது . 44 நம்பர் வந்தால் (8)வாழ்க்கையில் போராட்டங்களும், கடும் சோதனைகளும் வரும்... ரைட்டா என்கிறார். அவரும் ரொம்ப சரி என்கிறார்.கைதட்டல்....

நிற்க. நம்மிடம் பொதுவாக, யாராச்சும் 'உங்க வாழ்க்கையில் எப்போதும் போராட்டம் தானே, சோதனை தானே?' என்றால் நாம் பெரும்பாலும் ஆமாம் என்று தான் தலையாட்டி வைப்போம். Nobody's life is a bed of roses! அவர்களின் போராட்டம் என்ன என்று பார்த்தால் அதிகபட்சம் காலை ஏழரை மணிக்கு எழுந்து , எட்டேகால் பஸ்ஸை பிடிக்க ஓடுவதாக இருக்கும்! சில பேருக்கு காலையில் பெட்டை விட்டு எழுந்திரிப்பதே பெரும் போராட்டம் தான்.

உங்க நம்பர் 8 வருகிறது. எனவே வாழ்க்கையில் எப்போதும் சிக்கல் தான். எனவே இதை மாற்றி விடுங்கள். உங்கள் பேர் இன்றிலிருந்து  T.S.R ராதாக்ருஷ்ணன். 46 வருகிறது. கூட்டுத்தொகை 1. ஓஹோன்னு இருப்பீங்க என்கிறார். 46 நாட்களில் நீங்க எங்கேயோ போகப் போறீங்க(?) என்கிறார்.

well , வாழ்க்கையை மாற்றுவது இவ்வளவு சுலபமா என்று தெரியவில்லை. சும்மா பெயரில் ஒரு R சேருங்க எல்லாமே நலம்; இனிமேல் போராட்டம் இல்லை; சோதனை இல்லை;  என்று சொல்வது அபத்தமாகத் தோன்றலாம்.  நம் வாழ்க்கையின் சூட்சுமம் வேறு எங்கோ இருக்கிறது.எனக்கும் அபத்தமாகவே தோன்றுகிறது. பண்டிட்ஜி நடுநடுவே குட்டிக் குட்டி ஆன்மீகக் கதைகளை சொல்கிறார். அவை வேண்டுமானால் சுவாரஸ்யமாக இருக்கின்றன.


எந்தப் பேச்சாளராக இருந்தாலும் அவ்வப்போது குட்டிக் குட்டி கதைகள் சொல்லி ஆடியன்ஸ்சை மகிழ்விப்பது முக்கியம். ஹரிகதையில்  இது மிகவும் முக்கியமான அம்சம். உதாரணத்துக்கு ஒன்று  பார்க்கலாம் . நாரத கர்வ பங்கம்.


நாரதர் எல்லாருக்கும் பஞ்சாயத்து பண்ணி வைப்பவர். எல்லாருடைய கர்வத்தையும் பங்கம் செய்பவர். டான்ஸ் ப்ரோக்ராம் களில் சில நேரம் சத்யபாமா கர்வ பங்கம் என்று பார்த்திருப்பீர்கள் . சத்யபாமாவுக்கு நான் தான் கண்ணனின் பேவெரெட் என்ற கர்வம் வந்து விடுகிறது.  இரண்டாம் தாரத்துக்கு இது இயல்பு தான். மூத்தவள்  ஏதோ ஒருவிதத்தில் சலித்துப் போய் விட்டதால்தான் நம்மிடம் வந்தார் என்ற ஒரு நினைப்பு!இதை நாரதர் அறிந்து கொண்டு அவளுக்குப் பாடம் புகட்ட வருகிறார்.

நாரதர்: நாராயண, நாராயண!

பாமா: வாரும் நாரதரே, என்ன இந்தப் பக்கம்?

நாரதர்: நாராயண, கழுதை கெட்டால் குட்டிச் சுவரம்மா, எனக்கு கண்ணனை தரிசிப்பதை விட வேறென்ன வேலை?

பா: இங்கே யார் கழுதை, யார் குட்டிச்சுவர்???சரி ..விடுங்க. கிருஷ்ணர் இங்கே இல்லையே? ருக்மிணி வீட்டில் அல்லவா இருக்கிறார்?

நா: ஓ , அப்படியா? தப்பான இடத்துக்கு வந்து விட்டேன், ஒரு புருஷனை அவன் முதல் தாரத்தின் வீட்டில் தான் முதலில் சென்று பார்க்க வேண்டும் என்ற அறிவு கூட எனக்கு இல்லை, வயதாகி விட்டது இல்லையா? மூளை மழுங்கி விட்டது...கிருஷ்ணனுக்கு ,புறப்படுவதற்கு முன் ஒரு missed call ஆவது விட்டிருக்க வேண்டும்!

பா: ஹலோ, நாரதரே,  ராத்திரி இங்கே தான் தங்குவார். அங்கே சும்மா ஒண்ணு ரெண்டு மணிநேரம் தான்...வம்சம் சீரியல் முடிஞ்சதும் வந்திருவார்.

நா:  என்னம்மா இப்படி வெள்ளந்தியா இருக்கியேம்மா?  வம்சம் சீரியல் பார்க்கிறார்னு நெனைக்கிறே..... அங்கே வம்சத்தை வளர்க்கிற காரியம் பார்த்துண்டிருக்கார். கொஞ்சல் என்ன, குலாவல் என்ன? முதல் மனைவி மேல அவ்ளோ பாசம்னா ரெண்டாவதை ஏன் கட்டிக்கணும்?

பா: (குழப்பம்) அப்படியா சொல்றேள்? அங்கே போய் சும்மா அட்டெண்ட்டன்ஸ் போட்டுட்டு வர்றார் னல்ல நினைச்சேன்.

நா:  அய்யோ மண்டு, கொஞ்சம் சுதாரிச்சுக்கோ...இப்ப கூட பாரு, ஏதோ பாரிஜாத மலராம், ரொம்ப ஒசத்தியாம்,,,எங்கோ கண்காணாத தேசத்தில் கிடைக்கிறதாம். அதை கொண்டுவந்து அவள் தலையில் சூட்டி அழகு பார்க்கிறார். உன்னிடம் அதைப் பற்றி மூச்சு விட்டிருப்பாரா? ஒருநாள் கனகாம்பரம் வாங்கித் தந்திருப்பரா?

(நாரதர் இப்போது ருக்மிணி வீட்டுக்கு வருகிறார்)

 நாராயண , நாராயண

ருக்மிணி: வாருங்கள், தேவரிஷி,,,,ஆசனத்தில் அமருங்கள்...

நா: என் ஆசனம் இருக்கட்டும் அம்மா, கிருஷ்ணனின் ஆசனம் காலியாய் உள்ளதே, எங்கே அவர்?

ரு :  இப்போதான் பாமா வீட்டுக்குப் போனார்.

நா: நீ சந்தோஷமாய் வழியனுப்பி வைத்தாயாக்கும், காலம் தெரியாதவளாய் இருக்கிறாயே, கையில் தான் சக்கரம் வைத்திருக்கார், காலிலுமா சக்கரம் கட்டியிருக்கார்? அங்க தான் 24x 7 இருக்காரே? அப்படி என்ன அவசரம்?
காலில் வெந்நீர் ஊற்றியது போல?

ரு : காலில் வெந்நீர் அல்ல. கங்கை என்னும் தண்ணீர்! இல்லை முனிவரே, என் மேல் தான் அபிமானம், இப்போகூட காஸ்ட்லியான ஒரு பூ வாங்கிக் கொடுத்திருக்கார்.

நா: அய்யோ அசடே, உனக்கு பூ கொடுக்கலேம்மா,அல்வா கொடுத்திருக்கார்

ரு : புரியலையே...

நா:  என்னமோ சொல்லிட்டேன், நான் ஏன் குட்டையை குழப்பணும்...உனக்கு பூ வாங்கிக் கொடுத்துட்டு அங்கே வாரா வாராம் ஷாப்பிங் கூட்டிட்டுப் போய் பர்கர் சாப்பிடறார், போன வாரம் கூட ரெண்டு பெரும் ஐ மாக்ஸ்ல Interstellar பார்த்துருக்கா...

இப்படி குட்டையைக் கிளப்பிய நாரதர் கலகம் கடைசியில் நன்மையிலேயே முடிந்தது. கிருஷ்ண துலாபாரக் கதையை நாமெல்லாம் கேட்டிருப்போம்.

எல்லாருடைய கர்வத்தையும் தீர்க்கிறேன் என்று அவருக்கே ஒருநாள் கர்வம் வந்து விட்டது..பூனைக்கு யார் மணி கட்டுவது? பூனைக்கு மணிகட்ட குரங்கை தேர்ந்தெடுத்தார் பகவான்.

ஒருநாள் ஹனுமாரை சந்திக்கிறார் நாரதர்

ஆஞ்சநேயா , உன் இசையைக் கேட்டு ரொம்ப நாளாச்சு, கொஞ்சம் பாடிக் காட்டேன்.

கையில் வீணை இல்லையே...

இந்தா, என் மகதி வீணை, இதில் பாடு,,,, ஹமீர் கல்யாணி பாடு, கேட்கணும் போலிருக்கு.

அனுமார் பாடுகிறார். அவர் இன்னிசையில் எதிரே இருந்த மலை ஒன்று குழம்பாக உருகி ஓடுகிறது. அப்படியே இவர்கள் உட்கார்ந்திருந்த இடம் வரை வருகிறது. வீணை அதில் மாட்டிக் கொள்கிறது. அனுமார் பாட்டை நிறுத்துகிறார். ஓடிய குழம்பு அப்படியே மீண்டும் உறைந்து பாறையாய் நின்று விடுகிறது.

அந்தோ என் வீணை ஆப்பட்டுடுத்தே? என்று கலங்குகிறார் நாரதர்,

அனுமார், நாரதர், 'நீர் பாடுமே, உங்கள் பாட்டில் நதி மீண்டும் உருகி வீணை வந்து விடும்' என்கிறார்.

நாரதர் பாடுகிறார். பாடினார், பாடினார், பாடிக் கொண்டே இருந்தார், நாட்கள் நகர்ந்தனவே தவிர நதி அசைந்து கொண்டுக்கவில்லை.

கடைசியில் தோல்வியை ஒப்புக் கொண்ட நாரதர், 'அப்பா, அனுமா, சங்கீதத்தில் என்னை மிஞ்சியவன் யாருமில்லை என்ற இறுமாப்பில் இருந்தேன், என் கண்களைத் திறந்தாய்!, தயவு செய்து மீண்டும் பாடி என் வீணையை மீட்டுக் கொடு' என்கிறார்.


இப்படி, கதைகள் மூலமே, ஹரிகதைகள் மூலமே இசை இந்தியாவில் பரவியது. கச்சேரிகள் மூலம் அல்ல. இன்றைய இந்த 'கச்சேரி format' , மிகவும் பிற்காலத்தில் வந்தது. 100, 120 வருடங்களுக்கு முன்! அதற்கு முன் கச்சேரி என்று கிடையாது. மும்மூர்த்திகள் காலத்திலும் கிடையாது. வயலின் கூட இந்திய இசையில் கிடையாது. வயலின் வெளி நாட்டில் இருந்து work permit வாங்கிக் கொண்டு வந்தது. பின்னர் மெட்ராஸ் பிடித்துப் போய் க்ரீன்கார்ட் வாங்கிக் கொண்டு விட்டது!

இப்போது இசைக்கு எப்படியோ ஒரு format வந்து விட்டது. முதலில் வர்ணம்...இப்போது சில ஆர்டிஸ்டுகள் கச்சேரிக்கு முன் உரையே நிகழ்த்துகிறார்கள். காதில் ஜிமிக்கி ஆடுகிறது. பட்டுச் சேலை பரபரக்கிறது. நன்றாகப் பாடுகிறார்களோ இல்லையோ,  ஒரு frequent interval இல் பக்க வாத்தியத்தைப் பார்த்து சில மைக்ரோ மீட்டர் மந்தகாசப் புன்னகை சிந்துகிறார்கள்.  தீம் எல்லாம் கூட வைத்துப் பாடுகிறார்கள்.

[ஒரு கவிதை:

நின்னே பஜன

இந்த வருடம் கலைமாமணி கிடைக்குமா?
சபாவில் கூட்டமே இல்லையே?
ஏனோ இந்த வருடமும்
மத்தியான ஸ்லாட் தான் கிடைக்கிறது
மைக் சரியாக வேலை செய்யுமா?
புடவைக்கு மேட்சாக எடுத்து வைத்த
நெக்லஸ் மறந்து விட்டதே!
'ராமா, உன்னை அல்லால் ஒரு நினைவே இல்லை'
என்ற பொருள் கொண்ட கீர்த்தனையை
பாடகி ஆரம்பித்தார்...]

மிகப்பொதுவாக வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு தியாகராஜ ஸ்வாமிகள், தன் ஓட்டு வீட்டில் பசி பட்டினி கிடந்து உஞ்ச விருத்தி எடுத்து பக்தி ஒன்றே பிரதானமாகப் பாடிய பாடல்களை இங்கே பணத்துக்காய், புகழுக்காய் ஏசி ஹாலில் அமர்ந்து கொண்டு பகட்டுக்கும் டம்பத்துக்கும் மத்தியில் பாடுகிறார்களே என்பது.

உதாரணமாக, த்யாகராஜர் கிட்டத்தட்ட ஒரு கையறு கிளையில் இதைப் பாடுகிறார்.

ராமா , உனக்கு உபசாரம் செய்ய, பணிவிடை செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த சந்தடியில் என்னை மறந்து விடாதே,சீதை இருக்கிறாள், அந்தரங்கமாக சேவை செய்ய லக்ஷ்மணன் இருக்கிறான், நீ கட்டளை இடாமலே உன் தேவைகளைப் புரிந்து கொண்டு நிறைவேற்ற எல்லாவற்றுக்கும் மேலாக அனுமன், உன் கண் அசைவைப் புரிந்து கொண்டு சேவையாற்ற!

இத்தனை பேர் இருக்கிறார்கள் ; இந்த ஏழையால் நமக்கு ஆவதென்ன என்று நினைத்து விடாதே, உன் அருளை வேண்டி நான் ஒருத்தன் இங்கு கதறிக் கொண்டிருக்கிறேன் என்பதை மறந்து விடாதே

க்ருப காவெலன நின்னேனி
கீர்தினி பல்குசுனுன்டக

உபசாரமு ஜெசேவாரு உன்னாரனி மரவகுரா

ఉపచారము జేసేవారున్నారని మరవకురా

అ. కృప కావలెనని నే నీ
కీర్తిని పల్కుచునుండగ


ஜேசுதாஸ் பாடுவதைக் கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.இதைப் பாடும்போது த்யாகராஜர் he meant it !!பாடகர் பாடும் போது அதை mean செய்கிறாரா என்று அவரைத்தான் கேட்க வேண்டும்.


உனக்கு எல்லா ராகமும் தெரிந்திருந்து என்ன பயன்? சுஸ்வரமாகப் பாடி என்ன பயன்? தாள சுத்தம், சாகித்ய சுத்தம்,ராக சுத்தம் இருந்தென்ன?  உலகில் உள்ள வாத்தியங்கள் எல்லாம் சேர்த்து வைத்துக் கொண்டு திருவிளையாடல் பாலையா மாதிரி  பாடினாலும் என்ன பிரயோஜனம்? main ingredient பக்தி இல்லையே என்று கேட்கிறார் புரந்தர தாசர்.

'தாள மேளகளு இத்து பிரேம இல்லத கான

ஹரி கேளனு ; ஹரி தாளனு '


உங்களுக்கு ஒரு விருந்து வைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் ...கார்ன் சூப், டொமேடோ சூப்,சப்பாத்தி,ரொட்டி ,பட்டர் நான்,குல்ச்சா, மசாலா பாப்பட் , நவரத்ன குருமா ,நீல்கிரி குர்மா, ஆலு கோபி, பிந்தி பிரை , கேப்பெஜ் பொரியல் ,பாலக் பன்னீர்,குஜராத்தி கடி,கீமா மட்டர் ,தால் ,ராஜ்மா, ஜீரா ரைஸ், கீ ரைஸ், சின்சுவான் பிரைட் ரைஸ், மலாய் கோப்தா , கேப்சிகம் கறி ,வெஜ் பிரியாணி,ஒயிட் ரைஸ், கேரளா ரைஸ்,மஸ்ரூம் நூடுல்ஸ், ராய்தா,சௌத் சாம்பார், பெப்பர் அண்ட் ஜீரா ரசம்,டொமேடோ ரசம்,  ரசம், கர்ட் ரைஸ்,ஜாமூன், ப்ரூட் சாலட்,கட் ப்ரூட்ஸ்,ஐஸ் க்ரீம், டிஸ்யூ, டூத் பிக், பிங்கர் போல், etc etc இத்தனையும் இருக்கிறது.

ஆனால் உங்களுக்கு சரியான வரவேற்பில்லை. முகம் கொடுத்துப் பேசுவதில்லை, மரியாதை இல்லை, சலித்துக் கொண்டே பரிமாறுகிறார்கள், வெறும் தங்கள் பகட்டைப் காட்ட, பார் நான் எத்தனை பணக்காரன் என்று காட்ட, show off ! ;  இத்தனை அயிட்டத்தை நீ பார்த்தும் இருக்க மாட்டாய் என்ற தோரணையுடன்..அப்படிப்பட்ட விருந்தை என்ன தான் சுவையாக இருந்தாலும் நாம் ரசிப்போமா?? மோப்பக் குழையும் அனிச்சம் என்று வள்ளுவர் சொல்வது மாதிரி.

பக்தி இல்லாமல் பேகடா என்ன? பகுதாரி என்னடா என்கிறார் தாசர்.


இதை எதற்கு சொல்கிறேன் என்றால் இந்த கச்சேரி format இப்போது வந்தது, வர்ணம், அப்புறம் விநாயகர் பாட்டு, சின்ன கிருதிகள் இரண்டு, ராக மாலிகை , மெயின் அயிட்டம் , தனி ஆவர்த்தனம், ராகம் தானம் பல்லவி, தில்லானா, போனால் போகிறது என்று கடைசியில் தமிழில் திருப்புகழ் , மங்களம் இப்படி!


முதலில் இசை ஹரிகதை வடிவத்திலேயே இருந்தது, ஹரிகதை, பஜனை, இப்படித் தான் அது வளர்ந்தது. சங்கீதமும், கோயிலும் , பக்தியும் பிரிக்க முடியாத அம்சங்களாய்  இருந்தன. போன நூற்றாண்டில் தான் சங்கீதம் கோயில்களையும், ஏழை பக்தர்களின் ஓட்டு வீடுகளையும் தெருக் கோடிகளையும் விவாகரத்து செய்து விட்டு மெஜெஸ்டிக் சபாக்களை மேரேஜ் செய்து கொண்டு விட்டது .

நாடகம், தெருக்கூத்து இவைதான் சினிமாவுக்கு முன்னோடி; ஆனால் சினிமா வந்ததும் அவை வழக்கொழிந்து ஒபோய் விட்டன; அதே போல் தான் ஹரிகதை கச்சேரிக்கு முன்னோடி; இப்போது அது அருகி விட்டது; ஏதோ சில பேர் செய்கிறார்கள்...uniqueness , originality இல்லை,, யாரோ ஒரு ஹரிகதை பிரபலத்தைப்  பின்பற்றி அவர் voice , mannerism , பாணி எல்லாவற்றியும் காபி அடித்து..


சரி....back to the topic !


நம்பர், alphabet எல்லாம் மனிதன் கண்டுபிடித்தது; அது எப்படி வாழ்க்கையை பாதிக்கும்? இயற்கைக்கு எண்களைப் பற்றித் தெரியுமா? Does Nature know how to count? கொஞ்சம் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால்,,,, சரி நமக்கு இஷ்டமான physics ஐ எடுத்துக் கொள்வோம் :) physics என்ன சொல்கிறது?

Martin Rees என்ற விஞ்ஞானி   JUST SIX NUMBERS என்ற புத்தகம் எழுதி இருக்கிறார். இயற்கை ஒரு கை தேர்ந்த mathematician என்கிறார்.

முக்கியமான ஆறு எண்கள் பிரபஞ்சத்தை உருவாக்கியுள்ளன என்கிறார். அந்த எண்களில் ஒரு மிகச் சிறிய மைக்ரோ மாறுபாடுகள் இருந்திருந்தாலும் பிரபஞ்சம் உருவாகி இருக்காது. இந்த 6 மாறிலிகள் (constants) நம் பிரபஞ்சத்தின் இருப்புக்குக் காரணமாகின்றன. உதாரணமாக N என்பது அணுவில் உள்ள கூலூம் விசைகளுக்கும் ஈர்ப்பு விசைக்கும் உள்ள விகிதம். இது மிகப் பெரிய எண் . இதில் ஒரு ஜீரோ குறைந்தாலும் நாமெல்லாம் வந்திருக்க மாட்டோம்.

பிரபஞ்சம் ஏன் இவ்வளவு கச்சிதமாக இருக்கிறது என்ற கேள்விக்கு anthropic principle என்ற ஒன்றை காரணம் சொல்கிறார்கள். நாம் பூமியில் இருப்பது மிக மிக மிக அதிர்ஷ்ட வசத்தால். கொஞ்சம் சூரியனுக்குப் பக்கத்தில் இருந்தால் வெந்து போவோம். கொஞ்சம் தூரத்தில் இருந்தால் உறைந்து போவோம். பக்கத்தில் வியாழன் இல்லை என்றால் விண்கற்கள் தாக்கியே செத்துப் போவோம். நிலா இல்லை என்றால் நம் ஆர்பிட்  நிலையாய் இராது;ஏன் எப்படி கச்சிதமாக இருக்கிறது ; யாராச்சும் இதன் blueprint ஐ டிசைன் செய்தார்களா என்று கேட்டால் 'அது அப்படி இருப்பதால் தான் நீ தோன்றி இந்தக் கேள்வியைக் கேட்க முடிகிறது' என்கிறார்கள். எப்படி சரியாக வட்டத்துக்குள் அம்பை எய்தீர்கள் என்று கேட்டால் 'ரொம்ப சிம்பிள், முதலில் எய்து விட்டு பிறகு வட்டத்தை வரைந்து கொள்வது' ...ரொம்பவே careful ஆக tune செய்யப்பட்டு பிரபஞ்சம் உருவானதா இல்லை குருட்டாம்போக்கில் உருவாகி மனித மூளைக்கு tune செய்யப்பட்டது போன்ற பிரமையை உருவாக்குகிறதா?

answer :  தெரியாது !

இன்னொரு முக்கியாமன எண் இந்த மூன்று. ஆன்மீகத்தில் மும்மூர்த்தி, மூன்று கண் மூன்று உலகம்  என்று என்னென்னவோ சொல்கிறோம். இயற்பியலில் இது எப்படி முக்கியம் என்றால் நம் பிரபஞ்சத்தில் மூன்று பரிமாணங்கள் (spatial dimensions ) உள்ளன. குறைந்தோ அதிகமாகவோ இருந்தால் நம்மால் இருக்க முடியாது. உதாரணம் 5th dimension ...இதைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். Interstellar விமர்சனத்துடன் :)))))))))


ஓஷோ ஜோக்:


லிட்டில் எர்னி பள்ளியில் இருந்து சீக்கிரமே வந்து விட்டான் .
" ஏன் சீக்கிரமே  வந்துட்டே' எர்னி என்றாள் அவன் அம்மா.
ஒண்ணுமில்ல...டீச்சர் மேஜைக்கு கீழ டைனமைட் குச்சி வெச்சுட்டேன்...
'எர்னி,, இது தப்பு, உடனே ஸ்கூலுக்கு திரும்பிப் போய் மன்னிப்பு கேளு'

எர்னி :  எந்த ஸ்கூல்?சமுத்ரா..