பத்ராசல ராமதாசர் சிறையில் வருந்தி வாடும் போது தன் இஷ்ட தெய்வமான ராமனைப் பார்த்துக் கேட்கிறார்: "ராமா! உன் பேச்சு தங்கமா என்ன? என்னிடம் ரெண்டு வார்த்தை பேசுவதற்கு இவ்வளவு தாமதிக்கிறாயே? " என்று ஆனந்த பைரவியில்....
பலுகே பங்காரமாய பிலிசின பலுகவேமி
கலலோநீ நாமஸ்ஸ்மரண மருவ சக்கனி தண்டரி
பலுகே பங்காரமாயன?
(ராமா, கூப்பிட்டால் திரும்பி குரல் கொடுக்காததேன்? கனவிலும் உன் நாமத்தை மறக்கவில்லையே நான், உன் சொற்களெல்லாம் தங்கமா என்ன?)
பாட்டைக் கீழே கேளுங்கள்....இதை பாலமுரளியை விட வேறு யார் அனுபவித்துப் பாட முடியும்? :) Get this widget | Track details | eSnips Social DNA
ஒரு விஷயம் என்ன என்றால் ஆனந்த பைரவி ஒரு சுகமான ராகம்...அதை அவர் தன் சோகத்தை வெளிப்படுத்த கையாண்டிருப்பது அற்புதம்....
[உண்மையிலேயே ராமர் பேச்சு தங்கம் தான் போலிருக்கிறது .. இரண்டு உதாரணங்கள்.....
தசரதர் : ராமா நீ காட்டுக்கு பதினாலு வருஷம் போக வேண்டும்
இந்தக் கால பையன்களாக இருந்திருந்தால்: இன்னா நைனா, கலாய்க்கிரையா? ஓரத்துல சும்மா குந்திகுனு கட...பெருசு அது காட்டுக்குப் போகாமே யூத்து நம்ம போணுமாம்,இன்னாப்பா பேஜாராகீது ....
ராமர்: தங்கள் சித்தம் தந்தையே!
ராவணன் ஆயுதம் இன்றி நிற்கையில்
இந்தக் கால பையன்களாக இருந்திருந்தால்:இந்தா கஸ்மாலம், என் பொன்ஜாதிய இஸ்துகினு போய் வச்சுகினு இன்னா சவுண்டு உட்ட? இன்னிக்கு சங்கு தான் மச்சி....
ராமர்: இன்று போய் நாளை வா...
ஆனந்த பைரவி 'நட பைரவியின்' குழந்தை....சில சமயம் தாயிடம் இல்லாத ஸ்வரங்களையும் வாங்கிக் கொண்டு கொஞ்சம் அடாவடித் தனம் செய்யும்.... (இதை டெக்னிகலாக
'பாஷாங்க ராகம்' என்பர்)...இதன் ஏறு,இறங்கு வரிசைகள் கீழே....
ஆரோகணம்: | ஸ க2 ரி2 க2 ம1 ப த1 ப நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த1 ப ம1 க2 ரி2 ஸ |
ஆ.பை. ஒரு அமைதியான ராகம்....மங்களகரமான ராகம்...கருணை ரசம் ததும்பும் ஒரு ராகம்...
த்யாகராஜர் ஆனந்த பைரவியில் நிறைய கீர்த்தனங்கள் இயற்றவில்லை....இதற்கு ஒரு கதை சொல்கிறார்கள்.... ஒரு நாள் நாட்டியத்திற்கு நட்டுவாங்கம் செய்யும் பெண்மணி ஒருவர் ஆனந்த பைரவியை அவ்வளவு அழகாகப் பாடினாராம்...அந்த ஆனந்த பைரவியைக் கேட்ட த்யாகராஜர் 'அம்மா இனி இந்த ஆ.பை உனக்கே சொந்தம்...நான் கூட இதில் கிருதிகள் எழுதுவதை நிறுத்தி விடுகிறேன் என்றாராம்....இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை....
ஆனால் மும்மூர்த்திகளில் இன்னொருவரான 'சியாமா சாஸ்திரி'கள் இதில் நிறைய கிருதிகள் அம்பாள் மீது இயற்றியுள்ளார்....
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் உருக்கமான கடைசிப் பாடல் 'இந்து எனகே கோவிந்தா...' இப்போது பைரவியில் பாடப்படுகிறது....அதை அவர் பாடியது அனந்த பைரவியில் தான் என்று கர்நாடகா பக்கம் சொல்கிறார்கள்...
இந்த ராகத்தில் உள்ள சிலர் கர்நாடக இசைப் பாடல்கள்
* கற்பகவல்லி நின் பொற்பதங்கள்
* ஸ்ரீனிவாச நீனே பாலிசோ -புரந்தர தாசர்
* க்ஷீர சாகர விஹாரா -த்யாகராஜர்
* ஓ ஜகதம்பா -சியாமா சாஸ்திரிகள்
சினிமா சொல்லவில்லை என்றால் சிலருக்குத் தூக்கம் வராதே?OK here you go ...
அந்தக் காலப் பாட்டு என்றால் "நானாட்சி செய்து வரும் நான் மாடக் கூடலிலே மீனாட்சி என்ற பெயர் எனக்கு'......
இந்தக் காலம்
* கொஞ்ச நாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக் கொடி இங்க வருவா ..
* மெட்டுப் போடு என் தாய் கொடுத்த ..
* தேவதை வம்சம் நீயோ
* தீண்டாய் மெய் தீண்டாய்
ஓகே ஒரு சின்ன quiz...ஆனந்த பைரவிக்கு அருகில் வரும் ராகம் எது? comment - இல் சொல்லுங்கள்
மீண்டும் இன்னொரு ராகத்துடன் சந்திக்கலாம்....
~சமுத்ரா
2 comments:
ஓகே ஒரு சின்ன quiz...ஆனந்த பைரவிக்கு அருகில் வரும் ராகம் எது?
===========================
ipdi laam carnatic music pathi kelvi keta yaaru pathil solva... :(:( music na athu namma carnatic matum taan.. michatellam not at all music.. yarukum athoda arumai terila..
ok.. answer solren corecta solunga... anandha bairavi matriyae irukara ragam rithi gowlai and karaharapriya.. Nishada swaram adhigama padina athu reeti gowlai matri aidum.. so in anandha bairavi ni konjam kammiya taan irukum...
while rendering sa ga ri ga ma ga ri sa ga ri ga ma pa dha2* (anya swaram) pa ma ga ri ga ma ithu karahara priya matri irukum
"ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா நீயும் ஆனந்த பைரவி ராகமா"
edhu oru cinema padal vari idhil ஆண் ஆனந்த பைரவி ragaththukku oppiduranga adhukku reason sollamudiyuma any one
Post a Comment