இந்த வலையில் தேடவும்

Thursday, April 26, 2012

லிட்டில் ஜானி ஜோக்ஸ்

ஸ்கூல் டீச்சர் தன் மாணவர்களைப் பார்த்து
'குழந்தைகளே' கடவுள் எங்கே வசிக்கிறார் என்று கேட்டாள்.
ரோஸ் எழுந்து 'கடவுள் சொர்க்கத்தில் வசிக்கிறார் டீச்சர்' என்றாள்.
'வெரி குட் ரோஸ்' நீ உட்கார் என்றாள் டீச்சர்.
இப்போது ஸ்டெல்லா எழுந்து 'என் இதயத்தில் வசிக்கிறார் டீச்சர்' என்றாள்.
'வெரி குட்  நீ உட்கார் 'என்றாள் டீச்சர்.
வேறு யாராவது சொல்கிறீர்களா என்று டீச்சர் கேட்க, லிட்டில் ஜானி அவசரமாக கை உயர்த்தினான்.
'டீச்சர், கடவுள் எங்கள் வீட்டு பாத்ரூமில் வசிக்கிறார்' என்றான்.
இதைக் கேட்டு திடுக்கிட்ட டீச்சர் ' ஜானி, அது எப்படி என்று சொல்கிறாயா' ? என்றாள்.
லிட்டில் ஜானி ' தினமும் காலையில் எழுந்து அப்பா பாத் ரூமுக்கு செல்லும்போது வெளியில் இருந்து 'அடக் கடவுளே, நீ இன்னும் வெளியே வரலையா'? என்று கேட்பார் என்றான்.
********************

லிட்டில் ஜானி ஸ்கூலில் இருந்து வந்து தன் அம்மாவிடம் 'மம்மி, இன்று என்னை நான் செய்யாத ஒரு விஷயத்துக்காக பெஞ்சில் ஏறி நிற்க வெச்சுட்டாங்க ' என்றான்.

அம்மா, 'அடப்பாவமே, வருத்தமா இருக்கு, என்ன அது?" என்றாள்

'அதுதான் மம்மி, ஹோம் வொர்க்..'

***************


லிட்டில் ஜானி ஒரு வீட்டின் வெளியே நின்று கொண்டு காலிங் பெல்லை அழுத்த முயற்சி செய்வதை பாதிரியார் ஒருவர் பார்த்தார்.

ஜானி மிகவும் சின்னப்பையன் என்பதால் அவனுக்கு பெல் எட்டவில்லை.

'நான் உனக்கு உதவுகிறேன் மை சன்' என்று சொன்ன பாதிரியார் அவனுக்கு பெல்லை அடிக்க உதவி செய்தார்.

'மை சைல்ட் , வேறு ஏதாவது உதவி வேண்டுமா ' என்று கேட்டார் பாதிரியார்.

ஜானி  ' ஃபாதர், இப்போது ஓடுவதற்கு ரெடி ஆகுங்கள் ' என்றான்.

************************

லிட்டில் ஜானியின் ஸ்கூலில் பிள்ளைகளை ஒரு போலீஸ் ஸ்டேஷன் கூட்டிப் போனார்கள்.
அங்கே MOST WANTED கிரிமினல்களின் படங்கள் வரிசையாக மாட்டப்பட்டிருந்தன.
இன்ஸ்பெக்டரைப் பார்த்து ஜானி  'அங்கிள் , இவங்க போட்டோவை இங்கே ஏன் மாட்டி இருக்கீங்க' என்றான்.
'இவங்க எல்லாம் கிரிமினல்ஸ்..இவங்களை தீவிரமா தேடிட்டு இருக்கோம்' என்றார் இன்ஸ்பெக்டர்

'அப்படீன்னா இவங்களை நிக்க வைச்சு போட்டோ எடுக்கறப்பவே பிடிச்சிருக்கலாமே' என்றான் ஜானி.

***********************

ஸ்கூலில் டீச்சர் பிள்ளைகளைப் பார்த்து 'உங்க வீட்டில் போன வாரம் நடந்த குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி ' என்று ஒன்றை சொல்லுங்கள் என்றாள்.

லிட்டில் ஜானி எழுந்து 'எங்க பாட்டி கிணத்துல விழுந்துட்டாங்க' என்றான்.

'அடப்பாவமே, இப்ப உங்க பாட்டி எப்படி இருக்காங்க' என்றான்.

'தெரியலை மிஸ், ஏன்னா நேத்து அவங்க உதவி கேட்டு சத்தம் போடறதை நிறுத்திட்டாங்க' என்றான் ஜானி.

*************************

ஸ்கூலில் டீச்சர் பிள்ளைகளைப் பார்த்து 'இங்கே யார் யார் எல்லாம் உங்களை முட்டாள் னு நினைக்கிறீங்களோ அவங்க எல்லாம் எழுந்து நில்லுங்க' என்றாள்.

யாருமே எழுந்து நிற்கவில்லை.

மிகுந்த தயக்கத்துக்குப் பின் லிட்டில் ஜானி எழுந்து நின்றான்.

டீச்சர் ' சரி, அப்படீன்னா நீ ஒரு முட்டாள்?' என்று கேட்டாள்.

'இல்லை மிஸ், நீங்க தனியா நிற்கறதைப் பார்க்க ஒரு மாதிரியா இருந்துச்சு, அதான் எழுந்தேன்' என்றான் ஜானி.

******************************

லிட்டில் ஜானி ஒரு பொம்மைக் கடையில் நுழைந்து ஒரு பொம்மை விமானம் வாங்கினான்.
கவுன்டரில், பிள்ளைகள் வைத்து விளையாடும் விளையாட்டு பணத்தை கொடுத்து விட்டு நகர்ந்தான்.

' இதப் பாரு கண்ணா , என்ன இது?' என்றான் கடைக்காரன்.

'பணம்' என்றான் ஜானி.

'ஆனால் இது உண்மையான பணம் இல்லை'

'அஸ்கு புஸ்கு இந்த ப்ளேன் மட்டும் என்ன உண்மையான ப்ளேனா?' என்றான் ஜானி.
 
*********************


ஸ்கூலில் டீச்சர் பிள்ளைகளைப் பார்த்து குழந்தைகளா கோழி என்ன கொடுக்கும் என்று கேட்டாள்.
லிட்டில் ரோஸ் எழுந்து 'முட்டை' என்றாள் .
வெரி குட் என்ற டீச்சர் செம்மறி ஆடு என்ன கொடுக்கும்' என்றாள்.
லிட்டில் ஜார்ஜ் எழுந்து 'கம்பளி' என்றான்.
வெரி குட் என்ற டீச்சர் 'எருமை என்ன கொடுக்கும்' என்றாள்.
லிட்டில் ஜானி பின்னால் இருந்து குரல் கொடுத்தான் 'ஹோம் வொர்க்!
**************************

லிட்டில் ஜானி ஒரு நாள் மாலை ஸ்கூலில் இருந்து வந்தவுடன் அம்மாவைப் பார்த்து  மம்மி சின்னப் பொண்ணுங்களுக்கு குழந்தை பிறக்குமா?' என்று கேட்டான்.
'கண்டிப்பாக இல்லை ஜானி ' என் கேட்கிறாய்? என்றாள் அம்மா.
ஜானி வாசலை நோக்கி குரல் கொடுத்தான் 'பாரு மேரி, நான் சொல்லலை
நாம அப்படி பண்ணா ஒண்ணுமே நடக்காது' என்றான்.

****************************
மூன்று பையன்கள் தன் அப்பாக்களைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள்.

'எங்க அப்பா பேப்பர்ல ஏதோ கிறுக்கறார். அதை கவிதைன்னு சொல்றார்.
அதுக்கு ஐநூறு ரூபாய் கொடுக்காறாங்க' என்றான் முதல் பையன்.

இரண்டாம் பையன் ' எங்க அப்பா பேப்பர்ல ஏதோ கிறுக்கறார். அதை
பாட்டுன்னு சொல்றார்.
அதுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்காறாங்க' என்றான்

லிட்டில் ஜானி 'இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. எங்க எப்பா ஏதோ பேப்பர்ல உளறி வச்சுருக்கறதை சர்ச்ல வாசிக்கிறார். அதை பிரசங்கம் ன்னு சொல்றார்.அதுக்கு அப்புறம் எல்லார் கிட்டயும் காசை வசூல் பண்ண எட்டு பேர் வேண்டியிருக்குன்னா பாத்துக்கோயேன்' என்றான்.

**************************
லிட்டில் ஜானி மம்மியிடம் கிறிஸ்மஸ் -ஸிற்கு ஒரு சைக்கிள் கேட்டான், மம்மி 'நீ இன்னும் வளர வேண்டும்' என்று சொல்லி விட்டாள் .

எனவே ஜானி ஜீசஸ்-ஸிற்கு ஒரு கடிதம் எழுதினான்.

'அன்புள்ள ஜீசஸ் , நான் மிகவும் நல்ல ரொம்ப நல்ல பையன்' எனவே எனக்கு ஒரு சைக்கிள் கொடுக்கவும் ...'

இதில் திருப்தி ஏற்படாமல் ஜானி அதைக் கிழித்துப் போட்டு விட்டு மீண்டும் எழுதினான்.

'அன்புள்ள ஜீசஸ், நான் அவ்வப்போது கொஞ்சம் தப்பு பண்ணி இருக்கிறேன்.ஆனால் நான் நல்ல பையன் தான் ;எனவே எனக்கு ஒரு சைக்கிள் அனுப்பி வைக்கவும்.'

இதிலும் திருப்தி ஏற்படாமல் ஜானி அதைக் கிழித்துப் போட்டு விட்டான்.
அப்போது வீட்டில் மதர் மேரியின் பொம்மை ஒன்று இருந்தது. அதை எடுத்துப் போய் துணியில் சுற்றி ஒரு பெட்டியில் வைத்து பரண் மீது வைத்து விட்டு வந்து எழுதினான்:

'ஜீசஸ், நீ உன் அம்மாவை மறுபடியும் பார்க்க வேண்டும் என்றால் உடனே
எனக்கு ஒரு சைக்கிள் அனுப்பி வைக்கவும்'
*****************************


சமுத்ரா

Monday, April 23, 2012

கலைடாஸ்கோப்-62

லைடாஸ்கோப்-62 உங்களை வரவேற்கிறது.

=

பத்து நாட்களுக்கு முன்பு ஒருநாள் மிக மிக சலிப்பான ,சாதாரணமான மத்தியான வேளை. ஹெவி லஞ்ச் மற்றும் அலுப்பு மிக்க ஆபீஸ் வேலை. தூக்கம் கண்களை மெல்ல வருடிக் கொண்டிருந்தது.(இந்த, மத்தியானம் இரண்டு மணியில் இருந்து மூன்று மணிவரை உள்ள நேரத்தை எனக்கு பிடிக்கவே பிடிக்காது).அப்படிப்பட்ட ஒரு நேரத்தை திடீரென்று சுவாரஸ்யமாக மாற்றும் படி ஒரு நிகழ்ச்சி நடந்தது.ஒரு ஐந்து வினாடிகளுக்கு ஆபீசில் மேஜை, நாற்காலி எல்லாம் மெலிதாக அதிர்ந்தன. (காபி கப்கள் எல்லாம் கீழே விழுந்து உடைந்தன என்று மிகையாக சொல்ல விருப்பம் இல்லை)DUE TO AN EMERGENCY, IT'S NECESSARY TO EVACUATE THE BUILDING ,எல்லாரும் SAFE ASSEMBLY POINT இற்கு செல்லவும் என்று அலாரம் அடித்தது.எந்த சூழ் நிலையிலும் கம்ப்யூட்டரே  கதி என்று கடமை உணர்ச்சியுடன் உட்கார்ந்து வேலை செய்யும் (அல்லது வேலை செய்வது போல பாசாங்கு செய்யும்) சில சிகாமணிகள் எல்லா ஆபீசிலும் இருப்பார்கள். அவர்கள் கூட எதற்கு வம்பு வெளியே போய் விடலாம் என்று அலுங்காமல் வெளியே வந்து விட்டார்கள்.SAFE ASSEMBLY பாயிண்ட் இல் நின்றிருந்த பல முகங்களைப் பார்க்கும் போது இவர்கள் எல்லாம் நம் ஆபீசில் தான் வேலை செய்கிறார்களா என்று தோன்றியது ..2012 படம் போல எல்லாரும் வெளியேறியதும் கட்டிடம் இடிந்து அப்படியே நமது கம்ப்யூட்டர் சகிதம் பூமிக்குள் மறைந்து விடக் கூடாதா  என்று தோன்றியது (ஜாலி ஒரு வாரம் ஆபீஸ் லீவு) ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அரைமணிநேரம் கழித்து அனைவரும் அவரவர் இடத்திற்கு திரும்பி அவரவர் ஆணிகளைப் பிடுங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஆபீசிலும் அபார்ட்மென்ட்களிலும்  நாம், அரட்டை அடிக்கும் போதும், ஆப்பிள் ஜூஸ் குடிக்கும் போதும். சாப்பிடும் போதும் ,
தூங்கும் போதும் ,மிக்சர் கொறித்துக் கொண்டே டி.வி. பார்க்கும் போதும் நம் கீழே உள்ள பூமி ஸ்திரமாகத்தான் இருக்கும் என்று எவ்வளவு உறுதியாக நம்புகிறோம்? நிலமெனும் நல்லாள் அவ்வப்போது இப்படி விரல்களை சொடுக்கி சோம்பல் முறிக்கிறாள்; பூமி கொஞ்சம் அதிர்ந்தாலும் இருந்த இடம் தெரியாமல் போய் விடுவான் மனிதன். அனாலும் 'பார், இந்த நாளை டைரியில் குறிச்சு வச்சுக்க. எண்ணி ஒரே வருஷத்துல உன்னை...' என்றெல்லாம் அபத்தமாக வசனம் பேசுகிறான்..

==

நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த ஒரு புதிர். விடையை அடுத்த லைடாஸ்கோப்பில் சொல்கிறேன்.


இரண்டு கதவுகள். ஒரு கதவின் பின்னே ஒரு முரட்டு சிங்கம் இருக்கிறது. இன்னொன்றின் பின்னே தங்கப் புதையல். இரண்டு கதவுகளும் இரண்டு
வீரர்களால் காவல் காக்கப்படுகின்றன. இரண்டு வீரர்களில் ஒருவன் எப்போதும் உண்மையே பேசுவான். இன்னொருவன் எப்போதும் பொய்தான் பேசுவான். யார் உண்மை பேசுபவன் யார் பொய் பேசுபவன் என்று தெரியாது. நீங்கள் ஏதோ ஒரு வீரனிடம் ஒரே ஒரு கேள்வி மட்டுமே கேட்க வேண்டும். அதன் மூலம் எந்தக் கதவில் தங்கம் இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். ஒரே ஒரு கேள்வி.அதுவும் ஒரு வீரனிடத்தில் மட்டுமே (அதே கேள்வியை இன்னொருவனிடம் கேட்க முடியாது).அந்தக் கேள்வி என்ன?


===

நாம் ஒரு செயலை செய்கிறோம். ஆனால் கவனம் முழுக்க அதில்தான் இருக்கிறதா என்பது டவுட்டு தான். ஆயிரத்தெட்டு விஷயங்களைப் பற்றி
இடையிடையே நினைக்கிறோம். உதாரணம் நான். ஆபீசில் வேலை செய்து கொண்டு இன்னும் எல்.ஐ.சி பாலிசி கட்டவில்லையே இன்று xxx  மெஸ்சேஜ் செய்யவில்லையே ஊருக்குப் போக டிக்கெட் புக் செய்ய வேண்டுமே என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.MULTI TASKING என்பது நல்லது தான். (ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வது) ஆனால் ஒரே நேரத்தில் பல விஷயங்களை நினைப்பதால் பயன் ஒன்றும் இல்லை என்று தோன்றுகிறது. இந்தக் கதையைப் படியுங்கள்:


பத்மபாதர் நரசிம்மரை நினைத்து நெடுங்காலம் காட்டில் தவமிருக்கிறார். வேடன் ஒருவன் அவரை தினமும் கவனிக்கிறான். ஒருநாள் அவரைப் பார்த்து "சாமி, யாரை நெனச்சு நீங்க இப்படி தியானம் பண்ணறீங்க" என்று கேட்கிறான். பத்மபாதர் "அதெல்லாம் பெரிய விஷயம், உனக்குப் புரியாதுப்பா " என்கிறார்.வேடன் "யாருன்னு சொல்லு சாமி, ஆள் எங்க இருந்தாலும் புடிச்சு கொண்டாறேன்" என்கிறான். ப.பா சிரித்து விட்டு 'சிங்கத் தலையும் மனித உடலும் கொண்ட ஒரு தெய்வம்" என்கிறார். வேடன் அந்த ஆளை நாளை மாலைக்குள் பிடித்துக் கொண்டு வருவேன்; இல்லையேல் தீக்குளிப்பேன் என்று சபதம் இட்டு தன் தேடுதல் வேட்டையைத் தொடங்குகிறான்.ஒரு நாள் முழுவதும் ஊன் உறக்கம் இன்றி தேடிக் களைக்கிறான். இறுதியில் நரசிம்மம் கிடைக்காமல் போகவே தீ மூட்டி அதை வலம் வந்து உள்ளே இறங்க எத்தனிக்கிறான். அப்போது பின்னாலிருந்து சிம்மத்தின் கர்ஜனை கேட்கிறது. மனித உடலும் சிங்க முகமும் கொண்ட உருவம் நிற்கிறது. அதை அப்படியே கயிற்றில் கட்டி பத்மபாதரிடம் அழைத்து வருகிறான் வேடன். 'சாமி , பாரு நீ கேட்ட அந்த ஆளை கட்டிக் கூட்டியாந்திருக்கேன்' என்கிறான்.ஆனால் வேடனுக்குத் தெரியும் நரசிம்மம் பத்மபாதருக்குத் தெரிவதில்லை. 'எங்கப்பா , எனக்கு ஒண்ணுமே தெரியலையே' என்கிறார் அப்பாவியாக. நரசிம்மர் வேடனுக்கு மட்டும் காட்சி அளிக்கிறார் என்பதை அறிந்து கொண்டு அவர் அழுகிறார். 'நரசிம்மா, நான் எத்தனை காலம் உன்னை உபாசனை செய்கிறேன் ' எனக்கு நீ தரிசனம் தரவில்லையே என்று வருந்துகிறார். சிம்ம கர்ஜனை செய்து நரசிம்மர் குரல் கொடுக்கிறார்: "பத்மபாதா, வேடன் ஒருநாள் முழுவதும் என்னையே நினைத்துக் கொண்டிருந்தான், அன்னம், தண்ணீர், வேட்டை எல்லாவற்றையும் மறந்து விட்டு ஒருநொடி கூட வேறு நினைப்பேதும் இன்றி என்னையே மனதில் வரித்துக் கொண்டிருந்தான், எனவே அவனுக்குக் காட்சி தந்தேன், நீயோ நெடுங்காலம் என்னை நோக்கித் தவம் இருந்தாலும் கூட உன் மனதில் மற்ற விஷயங்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. எனவே உனக்கு என் குரலை மட்டும் கேட்கும் வாய்ப்பு கிட்டியது' என்கிறார்.

ஓகே.என்னதான் நிஷ்காம்ய பக்தி இருந்தாலும் விடாமல் இறைவனை நான்-ஸ்டாப்பாக நினைத்துக் கொண்டிருப்பது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை.But, Concentration has some value.இதையே ஓஷோ போன்ற விவகாரமான ஆசாமிகளிடம் சொன்னால், கடவுளாவது கரப்பான் பூச்சியாவது ஒரே விஷயத்தை தொடர்ந்து மனம் நினைத்துக் கொண்டிருந்தால் மனமே அதை வெளியில் PROJECT செய்து ஒரு hallucination (மாய வஸ்து) ஐ உருவாக்கி விடும் என்று சொல்வார்கள். எனவே நரசிம்மர் அந்த வேடனின் மனதின் Hallucination ஆகக் கூட இருக்கலாம். யார் கண்டது?

====


இன்று உலக புத்தக தினம். புத்தகங்களைப் பற்றி சில Quotes :

என் சிறந்த நண்பன் என்பவன் இதுவரை நான் படிக்காத புத்தகத்தை எனக்குப் பரிசளிப்பவன் -ஆப்ரகாம் லிங்கன்

உலகம் ஒரு புத்தகம். பயணம் செய்யாதவர்கள் அதன் ஒரு பக்கத்தை மட்டுமே படிக்கிறார்கள் -செயின்ட் அகஸ்டின்

மதிய உணவை வேண்டுமானாலும் நீங்கள் தவிர்க்கலாம் ; ஆனால் ஒரு நல்ல புத்தகத்தை தவற விட்டு விடாதீர்கள் - ஜிம் ரோகன்

உங்கள் வாழ்க்கை வரலாறு ஒரு நல்ல புத்தகமாக இருக்காது; எனவே அதை எழுத முயற்சி செய்யாதீர்கள் - ஃபிரான் லெபோவிட்

நீங்கள் ஒரு புத்தகத்தைப் படிக்க விரும்பினால், அது இன்னும் எழுதப்படவில்லை என்றால் அதை நீங்கள்தான் எழுத வேண்டும் - டோனி மோரிசன்

இந்தப் புத்தகத்தில் நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன்.நான் செய்த முதல் தவறைப் பற்றி 850 -ஆவது பக்கத்தில் சொல்லியுள்ளேன் - ஹென்றி  கிஸ்சிங்கர்

ஒரு புத்தகம் என்பது நீங்கள் மீண்டும் மீண்டும் திறக்க முடிகிற ஒரு பரிசாகும் - கேரிசன் கெய்லர்

ஒரு நல்ல புத்தகம் என்பது எதிர்பார்ப்புகளுடன் திறக்கப்படுகிறது; மனமகிழ்வோடு முடிக்கப்படுகிறது -அமாஸ் ப்ரோன்சன்

ஒரு நல்ல புத்தகம் என்பது நம்மால் படிக்கப்படுவதல்ல. நம்மைப் படிப்பது -W .H .ஆடன்

ஒரு புத்தகத்தை முடிப்பது என்பது ஒரு நல்ல நண்பனைப் பிரிவது போலாகும் - வில்லியம் ஃபெதர்

மதிப்புரைகளைப் பார்த்து விட்டு நான் புத்தகம் வாங்குவதில்லை - ஜிம் ஹேரிச
ன்

ஒரு மோசமான புத்தகம் கூட நமக்கு ஏதோ ஒன்றை விட்டுச் செல்கிறது -விஸ்லாவா ஸ்கைம்போர்ஸ்கா

புத்தக விரும்பிகள் தனியாக படுக்கைக்கு செல்வதில்லை - யாரோ

ஒரு நல்ல புத்தகத்தை எடுத்து செல்வது என்பது ஒரு தோட்டத்தை நம் பாக்கெட்டில் எடுத்து செல்வது போல - சீனப் பழமொழி

ஒரு புத்தகத்தை எழுத நீங்கள் பாதி நூலகத்தைப் படிக்க வேண்டும் - சாமுவேல் ஜான்சன்

=====

சில விசித்திரமான Quotes :

நான் இந்த உலகத்தை மாற்ற விரும்புகிறேன்.. ஆனால் அதன் Source code தான் கிடைக்கவில்லை -யாரோ

காலம் என்பது ஒரு நல்ல ஆசான். ஆனால் அது தன் எல்லா மாணவர்களையும் கொன்று விடுகிறது - ஹெக்டர் பெர்லியாட்ஸ்

இன்று தான் கடைசி என்பது போல ஒவ்வொரு நாளும் வாழுங்கள். ஒருநாள் உங்கள் அனுமானம் உண்மையாக இருக்கும் -யாரோ

இளமையாக இருப்பதற்கு மூன்று வழிகள். ஒன்று சந்தோஷமாக இருப்பது இரண்டு ஆரோக்யமான உணவுகள் சாப்பிடுவது மூன்று உங்கள் வயதைப் பற்றி பொய் சொல்வது -லூசில் பால்

உங்களுக்கு வயதாகும் போது மூன்று விஷயங்கள் நடக்கின்றன. ஒன்று உங்கள் ஞாபக சக்தி பழுதடைகிறது. மற்ற இரண்டும் என்ன என்று ஞாபகம் இல்லை -சர் நார்மன் விஸ்டம்

என் கிரடிட் கார்ட் தொலைந்து விட்டது என்று நான் போலீசிடம் புகார் கொடுக்கவில்லை. அதைத் திருடியவன் என் மனைவியை விட குறைவாகவே செலவு செய்து வருகிறான் -இலி நாச்ட்ஸ்

ஒரு நல்ல வக்கீல் சட்டத்தை அறிந்து வைத்திருக்கிறார். புத்திசாலி வக்கீல் நீதிபதியை விருந்துக்கு அழைத்துச் செல்கிறார் -யாரோ

ஆதாம் தான் உலகிலேயே அதிர்ஷ்டம் செய்த ஆண்மகன்; அவனுக்கு மாமியார் இல்லை -ஷோலம் அலைச்சம்

உலகிலேயே புரிந்து கொள்ளக் கடினமான விஷயம் இந்த இன்கம்டாக்ஸ் -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

சிகரெட்டை விடுவது சுலபமான செயல் தான். நானே அதை பல முறை செய்திருக்கிறேன் -மார்க் ட்வைன்

கொள்ளைக்காரர்கள் உன் பணத்தை எடு இல்லை உன் உயிரைக் கொடு என்கிறார்கள். மனைவிகள் இந்த இரண்டையும்  கேட்கிறார்கள் -சாமுவேல் பட்லர்

கணிதத்தின் மிகப்பெரிய புதிர்: ஆயிரம் வருடங்கள் கடந்து விட்டன , நூற்றுக்கணக்கான தேற்றங்கள் நிரூபிக்கப்பட்டு விட்டன, பல சூத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன.இன்னும் 'X ' இன் மதிப்பு என்ன என்று தெரியவில்லை -X

அறைக்குள் நுழைந்து விட்டு பிறகு எதற்காக வந்தோம் என்று யோசித்திருக்கிறீர்களா? நாய்கள் அப்படித்தான் தம் வாழ்வைக் கழிக்கின்றன என்று நினைக்கிறேன் -ஸூ மெர்பி

ஒரு மருத்துவமனையின் படுக்கை என்பது வெயிட்டிங் இல் இருக்கும் டாக்சியின் மீட்டர்  போன்றது -க்ருசோ மார்க்ஸ்

நான் பிரார்த்தனை செய்வதில்லை. நான் கடவுளை சலிப்பூட்ட விரும்பவில்லை -ஆர்சன் வேல்ஸ்

ஒரு மனிதன் தான் பிரபலம் ஆகி எல்லாரும் தன்னை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்று விரும்புகிறான். பிரபலம் ஆனதும் பொது இடங்களில் முகத்தை மறைத்துக் கொண்டு செல்கிறான் -ஃபிரெட் அலன் 


======

ஓஷோ ஜோக்
டாக்டர் ஒருவர் வீட்டுக்கு போன் வந்தது.

'ஹலோ மிஸ்டர். மார்க்ஸ் இன் வீட்டில் இருந்து பேசுகிறோம்"

டாக்டர்: சொல்லுங்கள்

போன்: வீட்டுக்குள் ஒரு பூனை புகுந்து விட்டது. உடனே வரவும்.

டாக்டர்: என்ன? பூனையா? பூனை வந்ததற்கா என்னை அழைக்கிறீர்கள்?

போன்: நான் தான் மிஸ்டர். மார்க்ஸின் கிளி பேசுகிறேன்.


டாமி ஒரு சுங்க கேட்டைக் கடக்க வேண்டி வந்து. கையில் தன் கிளியை வைத்திருந்தான்.
சுங்க அதிகாரி, "சார், நீங்கள் உங்கள் கிளிக்கு சுங்கம் செலுத்த வேண்டும் என்றார் "
எவ்வளவு?
"கிளி உயிரோடு இருந்தால் ஐந்து டாலர், பொறித்த கிளி என்றால் இரண்டு டாலர்"
டாமியைப் பார்த்து அவன் கிளி அவசரமாக 'டாமி , ஏதாவது ஏடாகூடமாக சிந்தித்துத் தொலையாதே ' என்றது.
 
Osho : Parrots are wiser than men

இப்போது ஓர் அடல்ட் ஜோக்.

ஒரு நியூடிஸ்ட் காலனியில் ஒரு குட்டிப் பையன்  தன் அப்பாவைப் பார்த்து 'அப்பா , பணக்காரன் என்றால் யார், ஏழை என்றால் யார்?" என்றான்.நிர்வாண மனிதர்களுக்கிடையில் இதை எப்படி சொல்வது? உடையே இல்லாத போது?

எனவே தற்காலிகமான பதிலாக அவன் அப்பா 'யாருக்கு 'அது' பெரியதாக இருக்கிறதோ அவன் பணக்காரன்' 'யாருக்கு அது சிறியதாக இருக்கிறதோ
அவன் ஏழை 'என்று சொல்லி வைத்தார்.

இரண்டு நாள் கழித்து பையன் அப்பாவிடம் ஓடி வந்தான்.

என்னடா விஷயம் என்றார் அப்பா.

"அப்பா, ஒரு ஏழை அக்காவைத் துரத்திக் கொண்டு ஓடி வந்தான். அப்படி வரும் போது திடீரென்று அவன் பணக்காரனாக மாறி விட்டான்.என்ன அதிசயம்?"என்றான் குட்டிப் பையன்

சமுத்ரா


Wednesday, April 18, 2012

அணு அண்டம் அறிவியல் -65

அணு அண்டம் அறிவியல் -65  உங்களை வரவேற்கிறது.

நட்சத்திரங்களின் வாழ்க்கை சுழற்சி....

மொட்டைமாடியில் படுத்துக் கொண்டு நட்சத்திரங்களைப் பார்க்கும் வாய்ப்பு இந்தக் கோடைக் காலத்தில் நம் எல்லாருக்கும் ஒருமுறையேனும் கிடைத்திருக்கும்.
ESPECIALLY, இப்போது பவர் கட் அதிகம் என்பதால் ..அப்படி வானமே கூரையாகப் படுத்திருக்கும் போது மேலே பார்த்து ஒரு முறையேனும் 'TwinkleTwinkle little Star, how I wonder what you are' என்று பாடாவிட்டாலும் மனதிலாவது நினைத்திருக்கிறீர்களா? 

மின்னும் சின்ன விண்மீனே-நீ
என்ன எனவே வியந்தேனே!


பிரபஞ்ச மாளிகையை இயற்கை இருட்டாக வைக்கவில்லை. கோடிக் கணக்கில் பில்லியன் கணக்கில்  விண்மீன்கள் நெபுலாக்கள் காலக்சிகள் சூப்பர் நோவாக்கள் என்று விதம் விதமான விளக்குகள் அதை ஒளியூட்டி அழகு செய்கின்றன.இயற்கை என்றுமே கஞ்சத்தனமாக இருந்ததில்லை. வீணாக எரிகிறதே விளக்கை அணைத்து விடலாம் பில் அதிகம் வரும் என்ற கவலைகள் மனிதனுக்கு மட்டுமே.இயற்கைக்கு என்றுமே நித்தியம் ஒளி உற்சவம் தான்.ஆமாம் ,சரி,பிரபஞ்சத்தில் இத்தனை விண்மீன்கள் எதற்கு? தேவையே இல்லாமல்.To maintain Mass density என்று டெக்னிகலாகப் பேசாமல் கொஞ்சம் தத்துவம் பேசுவோம்.

எர்னெஸ்ட் மாச் என்ற ஒரு வி
ஞ்ஞானி ,மனிதனுக்கும் பிரபஞ்சத்தின் தூரத்தில் உள்ள ஏதோ ஒரு விண்மீனுக்கும் மெல்லிய கட்புலனாகாத தொடர்பு இருக்கிறது என்கிறார். இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாமோ ஜோதிடம் இந்த நட்சத்திரம்
உன் வாழ்வில் இந்த விளைவை ஏற்படுத்தும் என்று சொன்னால் 'WHAT BULL SHIT ? ' நட்சத்திரத்துக்கும் என் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு? என்கிறோம்.OF COURSE , நம் வாழ்க்கைத் துணை எப்படி இருக்கும், எவ்வளவு குழந்தைகள் ,என்ன வியாதி வரும் என்பதையெல்லாம் நட்சத்திரத்தைப் பார்த்து விட்டு கணிப்பது கொஞ்சம் ஓவர்.
BUT IT DOES HAVE AN INFLUENCE .

நட்சத்திரம் ஒன்று நிலையாக இருக்கிறது. அதைப் பார்த்துக் கொண்டே நீங்கள் சுழல ஆரம்பித்தால் அதுவும் உங்களைப் பொறுத்து சுழல்கிறது. உங்கள் கைகள் உடம்பை விட்டு விலகி ஒரு மையவிலக்கு விசையை (CENTRIFUGAL FORCE ) உணர ஆரம்பிக்கின்றன. நட்சத்திரம் சுழலும் போது (சார்பியல் படி நீங்கள் நிலையாக இருந்து நட்சத்திரம் சுழல்கிறது என்று சொல்லலாம்) உங்கள் கைகள் ஏன் விசையை உணர வேண்டும்? மாச் தத்துவம் (MACH 'S PRINCIPLE )  "Local physical laws are determined by the large-scale structure of the universe "என்கிறது.இங்கே ஒரு குறிப்பிட்ட விதிகள் வேலை செய்வதற்கு பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த அமைப்பும் ஒருவிதத்தில் உதவி செய்கிறது என்று சொல்லலாம். எனவே நாம் உயிர் வாழ்வதற்கு பிரபஞ்சத்தின் மூலையில் உள்ள ஒரு விண்மீன் கூட தன் மிகச்சிறிய பங்கை ஆற்றுகிறது என்பது உண்மை.

INERTIA என்று அழைக்கப்படும் ஒரு பொருளின் 'நிலைமம்' (தான் இருக்கும் நிலையில் இருந்து மாறுவதற்கு ஒரு பொருள் அளிக்கும் எதிர்ப்பு)அதற்கு பிரபஞ்சத்தில் மற்ற பொருள்களும் இருப்பதாலேயே ஏற்படுகிறது என்று மாச் வாதிடுகிறார். தோராயமான உதாரணமாக ட்ராபிக்கில் நிற்கும் உங்கள் காரைக் கருதலாம். காருக்கு ட்ராபிக் எல்லாம் தெரியாது. ஆக்சிலரேட்டரை மிதித்தால் முன்னால் நிற்கும் வண்டி மீதி போய் மோதி விடும்.ஆனால் காருக்கு இயல்பாகவே நிலைமம் இருக்கிறது.நின்று கொண்டிருந்து விட்டு திடீரென்று போ என்றால் கொஞ்சம் முரண்டு பிடிக்கும். ஏன் இவ்வாறு முரண்டு பிடிக்க வேண்டும்? முன்னால் ட்ராபிக்கில் வண்டிகள் நிற்கின்றனவே என்பதால் இருக்கலாம். அதே போல உங்கள் கார் வேகமாகப் போய்க் கொண்டிருக்கிற போது அது அதே சீரான வேகத்தை MAINTAIN செய்ய  வேண்டும். இல்லையென்றால் பின்னால் வந்து கொண்டிருக்கும் வாகனம் அதன்மீது மோதி விடும். எனவே தன் சீரான வேகத்திலிருந்து மாறும் நிலைக்கு ஒரு பொருள் இயல்பாகவே எதிர்ப்பு தெரிவிக்கிறது என்கிறார் மாச்.(இதற்கு எதிரான) நியூட்டனின் bucket  Argument , ஆர்வம் இருந்தால் விக்கிபீடியாவில் படித்துக் கொள்ளவும்.  

மாச்சின் தத்துவம் நம்மை HOLISM என்ற முழுமைத் தத்துவத்துக்கு அழைத்துச் செல்கிறது.எந்த ஒரு விஷயத்தையும் பகுதிகளாக பார்க்காமல் முழுமையாகப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறது ஹோலிசம். பகுதிகளைப் பற்றி தெரிந்து கொண்டு பின்னர் அவற்றை இணைத்தால் முழுமையைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம் என்ற கருத்து மிகவும் தவறு என்கிறது இந்தக் கொள்கை. அதாவது அரிஸ்டாடிலின் Whole is Greater than its parts together! உதாரணமாக கார் என்பது என்ன?சீட், எஞ்சின், ப்ரேக், ஸ்டியரிங், க்ளட்ச் ,ஆக்சிலரேட்டர் சக்கரங்கள், கதவு, இவையெல்லாம் சேர்ந்தது தானா? இல்லை இவையெல்லாம் சேரும் போது
'கார்' என்ற முழுமைக்கு வேறு ஏதேனும் ஒன்று சேர்க்கப்படுகிறதா? ரசம் என்பது தண்ணீர், ரசப்பொடி, சீரகம், மிளகு, கருவேப்பிலை, கொஞ்சம் வெப்பம் இவைசேர்ந்ததா ? அதே போல மனிதன் என்பவன் கை, கால், மூளை +மனம் தானா? 


இயற்பியல் WHOLE IS NOT EVEN EQUAL TO ITS PARTS TOGETHER ; WHOLE IS LESS THAN ITS PARTS TOGETHER என்கிறது.உதாரணமாக இரண்டுக்கும் மேற்பட்ட அணுத்துகள்கள் சேர்ந்து உருவாகும் அணுக்கருவின் நிறை அந்த தனித்தனி துகள்களின் நிறைகளின் கூடுதலை விடக் குறைவாகவே உள்ளது.துகள்களை ஒன்றுடன் ஒன்று பிணைத்து வைப்பதற்கான பிணைப்பு ஆற்றல் (BINDING ENERGY ) அந்த நிறையில் இருந்தே எடுத்துக் கொள்ளப்படுகிறது. வாழை இலைகளை கட்டும் போது அந்த இலைகளில் ஒன்றில் இருந்தே நாரை உருவி அவைகளைப் பிணைத்து வைப்பது போல!

வாழ்வில் நாம் பிரச்சனைகளை சமாளிக்கும் போது இரண்டு விதமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டி உள்ளது.

* ஒன்று பிரச்சனையைப் பகுதிகளாகப் பிரித்து , அலசி ,ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே தீர்வு காண்பது.
* இன்னொன்று பிரச்சனையை அப்படியே அதன் முழுமையுடன் அலசுவது

ஒரு ஜோக்  நினைவுக்கு வருகிறது.

ஒரு ராணுவ வீரன் கடுமையான காயங்களுடன் எதிரி தேசத்தால் பிடிக்கப்படுகிறான்.அங்கே ஒரு மருத்துவமனையில் இருக்கிறான்.
கடுமையான காயங்கள் காரணமாக அவனுடைய வலது கால் எடுக்கப்படுகிறது.

"எனக்கு ஒரு உதவி செய்யுங்கள்,, இதை என்னுடைய சொந்த மண்ணில் புதைத்து விடுங்கள்" என்று எதிரிகளிடம் வேண்டுகிறான்.

அப்படியே செய்யப்படுகிறது.

அவனது இடது காலும் நோய் வந்து வெட்டப்படுகிறது.

"எனக்கு ஒரு உதவி செய்யுங்கள்,, இதை என்னுடைய சொந்த மண்ணில் புதைத்து விடுங்கள்" என்று எதிரிகளிடம் வேண்டுகிறான்.

அப்படியே செய்யப்படுகிறது.
 
சில காரணங்களுக்காக அவன் வலது கையை இப்போது எடுக்க வேண்டி வருகிறது.

"எனக்கு ஒரு உதவி செய்யுங்கள்,, இதை என்னுடைய சொந்த மண்ணில் புதைத்து விடுங்கள்" என்று எதிரிகளிடம் வேண்டுகிறான்.

இப்போது எதிரி ராணுவ ஜெனரல் " ஏய், நீ என்ன பகுதி பகுதியா தப்பித்துப் போகலாம்னு நினைக்கறியா"? என்றான் கோபமாக.

பிரச்சனையை முழுமையாக அணுகவில்லை என்றால் சில சமயங்களில் இப்படி நடப்பதுண்டு. 


இங்கே மூன்று விதமான வாதங்கள் இருக்கின்றன.

கணிதம் : முழுமையும் அதன் பகுதிகளின் கூடுதலும் சமம் . ex :          200 =100 +100 

இயற்பியல் : முழுமை அதன் பகுதிகளின் கூடுதலை விட குறைவு  எக்ஸ்: BINDING ENERGY , ENTROPY 

தத்துவம் , ஆன்மிகம் : முழுமை அதன் பகுதிகளின் கூடுதலை விட அதிகம். உதாரணம் : உயிர் [இதனால் தான் லேபில் கார்பன், அமினோ அமிலங்கள் , புரதங்கள் இவற்றைக் கலந்து மின்சாரத்தை அளித்தால் அதற்கு உயிர் வருவதில்லை!]

சமஸ்கிருதத்தின் 'அத்வைதம்' என்ற வார்த்தை அழகானது. 'ஏகத்வா' என்று சொல்லாமல் 'ஒருமை' என்று சொல்லாமல் இரண்டு இல்லை என்கிறது அது. ஒருமை என்று சொன்னால் அங்கே தவிர்க்கமுடியாமல் இரண்டு , பல என்பதெல்லாம் வந்து விடுகிறது. இரண்டு இல்லாத போது ஒன்று என்பதும் அர்த்தத்தை இழந்து விடுகிறது.எனவே சாமார்த்தியமாக இரண்டு இல்லை , பன்மை இல்லை என்கிறது அது. 

 

பிரபஞ்சமே முழுமை தான். அதைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்கிறது ஹோலிசம். அப்படித் தனித்துப் பார்க்க நாம்
நிர்பந்திக்கப்பட்டால் கூட ஒவ்வொன்றும் இன்னொன்றுடன் தொடர்பு உடையது, (Interconnectivity )ஒன்று இன்னொன்றை பாதிக்கும் பூமியில் அசையும் பட்டாம்பூச்சியின் சிறகு செவ்வாயில் புயலைத் தோற்றுவிக்கும் என்ற கேயாஸ் தத்துவத்தை மறக்கக் கூடாது என்கிறது. கேயாஸ் தியரியை இன்னும் வி
ஞ்ஞானிகள் பலர் ஏற்க மறுக்கிறார்கள்.இது மிகவும் தலைவலி பிடித்த வேலை என்பதால். உதாரணம் நாளை புயல் வருமா என்று தெரிந்து கொள்ள இன்றைய காற்று அழுத்தம், காற்றின் வேகம், வெப்பநிலை, கடலின் நீரோட்டம் இவைகளை வைத்து கணக்கிட்டால் போதும். அமேசான் காட்டில் உட்கார்ந்து கொன்று சிறகை அசைத்துக் கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.அப்படியே எடுத்துக் கொண்டாலும் எத்தனை ப.பூச்சிகளை எடுத்துக் கொள்வது?? கார் எடுத்துக் கொண்டு கிளம்பும் போது , ரோட்டில் எவனாவது குறுக்கே வந்து விடுவானோ, எதிர்பாராத சந்தில் இருந்து ஆட்டோ எதிர்ப்பட்டு விடுமோ, வழியில் மரம் முறிந்து
கீழே விழுந்து விடுமோ, என்றெல்லாம் பயந்து கொண்டிருந்தால் காரே ஓட்ட முடியாது அல்லவா?இப்போது-

TAO OF PHYSICS இல் இருந்து:-

பொருட்கள் தமது இருப்பையும் இயல்பையும் பரஸ்பர சார்புத் தன்மையினால் பெறுகின்றனவேயன்றி அவைகளாகவே தமக்குள்ள அதனையும் வைத்துக்
கொண்டு இருப்பன அல்ல -The central philosophy of Budhism -Nagarjuna

"ஓர் அடிப்படைத் துகள் (Elementary Particle )என்பது தனித்துவமாக நிலவக்கூடியதும் பகுப்பாய்வுக்கு உட்படுத்த ஒண்ணாததுமானதொரு தனி அமைப்பு அல்ல; சாராம்சத்தில் பிற பொருள்களோடு உறவுக்கரங்களை நீட்டுகின்றதோர் அமைப்பு" -எஸ்.பி.ஸ்டேப்

கோபன்-ஹேகன் தத்துவம் ஒரு பொருளை கவனிக்கும் போது அதன் உண்மையான நிலையை கவனிக்கிறோமா இல்லை அது கவனிப்பவருடன் நிகழ்த்தும் interaction -ஐ  கவனிக்கிறோமா என்று அறிவது கடினம் என்கிறது.அதாவது பிரபஞ்சத்தில் 'பார்ப்பவன் ' என்ற ஒன்று இல்லை
'பங்கு கொள்பவன்' என்பது தான் இருக்கிறது. பிரபஞ்சத் திருநடனத்தில் NO ONE IS AN AUDIENCE,,EVERY ONE IS A PARTICIPANT..

"வானம் பூமி வளிமண்டலம் அனைத்து உயிர்களின் மூச்சுக் காற்றோடு சேர்ந்து காற்று இவை அனைத்தும் எவனொருவனோடு சுற்றிப் பின்னப்பட்டு உள்ளனவோ அவனே பரமாத்மா" -முண்டக உபநிஷதம்SPIDER WEB தத்துவம் என்று ஒன்று உள்ளது. பிரபஞ்சமே ஒரு பெரிய சிலந்தி வலை என்கிறது இது. எனவே ஒரு இடத்தில் தோன்றும் மாற்றம் வலை வழியே பரவி இன்னொரு பொருளை பாதிக்கலாம் என்கிறது.

The world is like an enormous spider web and if you touch it, however lightly, at any point, the vibration ripples to the remotest perimeter and the drowsy spider feels the tingle... (260)

எனவே இயற்பியலிலும் , ரங்கராஜன் நம்பியை கடலில் வீசினால் எட்டு நூற்றாண்டு கழித்து கடலில் சுனாமி வருவதற்கு சாத்தியம் இருக்கிறது.
மேலும் பிரபஞ்சத்தில் எந்த ஒரு பொருளையும் பார்த்து நாம் 'நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே' என்று பாடலாம். அல்லது 'தத்வமசி' நீ தான் நான் என்று சொல்லி புளகாங்கிதம் அடையலாம்.

எனவே தூரத்து விண்மீனைப் பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்காதீர்கள். IT 'S REQUIRED ..முதலில் ஒரு விண்மீன் எப்படிப் பிறக்கிறது என்று பார்ப்போம்.[விண்மீனும் பிறக்கிறது; சாப்பிடுகிறது, வாழ்கிறது, ஓய்வெடுக்கிறது;நோயில் விழுகிறது ;வாழ்ந்து மடிகிறது. ]
ஒரு திருக்குறள்:

பீலிசெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்

௮-௮-௮ வில் திருக்குறள் எதற்கு என்கிறீர்களா? சோழியன் குடுமி சும்மா ஆடாது.


சமுத்ரா
Tuesday, April 10, 2012

அணு அண்டம் அறிவியல் -64

அணு அண்டம் அறிவியல் -64 உங்களை வரவேற்கிறது.

பொருட்கள் நகர்கின்றன. எனவே முதலில் நகர்த்தியவர் இருக்க வேண்டும்
நிகழ்வுகள் நடக்கின்றன. எனவே எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு மூல காரணம் இருக்க வேண்டும்.
பொருட்கள் இருக்கின்றன. எனவே அவற்றைப் படைத்தவர் இருக்க வேண்டும்.
பொருட்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. எனவே அவைகளுக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும்.

-Auinas 's Cosmological Proof

 

SOURCE CODE என்ற திரைப்படத்தின் சுருக்கமான கதையைப் பார்க்கலாம்:

ஸ்டீவன்ஸ் ஒரு ராணுவ அதிகாரி.ஆப்கானிஸ்தானில் நடக்கும் ஒரு விமான விபத்தில் காயமடைகிறார். நினைவிழக்கிறார்.விழிப்பு வரும் போது அவர் ஒரு ரயிலின் உள்ளே இருக்கிறார்.அவருடைய முகம் கண்ணாடியில் வேறு யாரோ ஒருவருடைய முகமாகத் தெரிகிறது.
(ஃ பெண்ட்ராஸ்). ரயிலில் அவர் தன்னுடன் பயணிக்கும் சக பயணி கிறிஸ்டினா என்ற பெண்ணுடன் பேசுகிறார். இருவரும் நெருக்கமாகிறார்கள்.அப்போது ட்ரெய்னில் ஒரு குண்டு வெடிக்கிறது. எல்லாரும் வெடித்துச் சிதறுகிறார்கள்.

ஸ்டீவன்ஸ் ஒரு முற்றிலும் புதிதான இடத்தில் கண் விழிக்கிறார். அங்கே டி.வி. போன்றதொரு திரையில் கேப்டன் கோல்ட்வின் என்ற பெண் தோன்றி இவருடன் பேசுகிறார்.ஸ்டீவன்ஸ் SOURCE code என்ற ஒரு சோதனை ப்ராஜெக்ட்-இல் இருப்பதாக தெரிவிக்கிறார். Source code என்பது ஒருவரை இன்னொருவருடைய (வாழ்க்கையின்) கடைசி எட்டு நிமிடங்களை வாழ்வதற்கு அனுமதிக்கும் ஒரு புதுமையான ப்ராஜெக்ட்.
ட்ரெயினில் பயணம் செய்த
ஃ பெண்ட்ராஸ் என்ற ஆசிரியரின் (இறந்த பின்னும் மூளை எட்டு நிமிடங்கள் உயிர்ப்போடு இருக்கிறது) கடைசி
எட்டு நிமிடங்களுக்குள் சென்று ட்ரெயினில் பாம் வைத்தவன் யார் என்று கண்டுபிடிப்பது தான் ப்ராஜெக்டின் நோக்கம்.பாம் வைத்தவனைக்
கண்டுபிடிப்பதன் மூலம் அவன் மூலம் மேலும் நடக்கவிருக்கும் தீவிரவாத செயல்களைத் தடுத்து விடலாம் என்பது அவர்கள் நோக்கம்.

சரி. இந்தப் படத்தின் திரைக் கதை கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. இது Time travel அல்ல என்று source code ஐ வடிவமைத்தவர் படத்தில் சொல்கிறார்.ஒவ்வொரு செயலுக்கும் ALTERNATE TIME LINE  ஒன்று இருக்கிறது என்ற குவாண்டம் தத்துவத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் இது. படத்தில் நிறைய இணை சாத்தியங்களைக் காட்டுகிறார்கள். ஒன்றில் ஸ்டீவன்ஸ் ரயிலில் பயணிக்கும் குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார். அவனுடன் கீழே இறங்கி அவனது மாஸ்டர் ப்ளானுக்காக வைத்திருக்கும் வேனைக் கண்டுபிடித்து அதன் நம்பரை போலீசுக்கு தகவல் சொல்கிறார். இதன் மூலம் அந்த ட்ரெயின் விபத்துக்கு உள்ளானாலும் பின்னால் வரும் விபத்துகள் தவிர்
க்கப்படுகின்றன. இன்னொரு சாத்தியத்தில் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் ஸ்டீவன்ஸ் அவனை ரயிலிலேயே கட்டிப் போட்டு விட்டு பாமை செயலிழக்கச் செய்கிறார். பாம் வெடிப்பதே இல்லை. ரயில் பாதுகாப்பாக சிகாகோ வருகிறது. அவரும் அவர் காதலி கிறிஸ்டினாவும் ஸ்டேஷனில் இறங்கி சிரித்துக் கொண்டே நடந்து செல்கிறார்கள்.

கொஞ்சம் நம் 12B திரைப்படம் போல இருக்கிறது அல்லவா? வாழ்க்கையில் நாம் பல சமயங்களில் பஸ்ஸை மிஸ் செய்து விடுகிறோம். அப்படி பஸ்ஸை மிஸ் செய்வது நம் வாழ்வில் ஒரு (Quantum ) BRANCHING -ஐ ஏற்படுத்துகிறது. பஸ்ஸை மிஸ் செய்யாமல் அதில் ஏறி இருந்திருந்தால் நம் வாழ்க்கை எவ்வாறு இருந்திருக்கும்? ஒரு வேலை வேறுவிதமாக இருந்திருக்கலாம்.அந்த வாழ்க்கையும் இப்போது ஏதோ ஒரு சூக்சும பரிமாணத்தில் நடந்து கொண்டிருக்கலாம் என்பது குவாண்டம் விதிகளின் படி சாத்தியம்.ஆனால் நாம் நம்மை ஒரு இடத்தில் மட்டும் தானே உணர்கிறோம்?I can't see myself Split- Bryce DeWitt


source code திரைப்படத்தில் இரண்டு சயின்ஸ் பிக்ஷன் கான்செப்டுகள் வருவதை நீங்கள் கவனித்திருக்கக்கூடும். ஒன்று இந்த குவாண்டம் Branching .நம் ஒவ்வொருவருக்கும் ஒரே ஒரே LINEAR LIFE HISTORY இல்லை. எண்ணிலடங்காத LIFE HISTORIES இருக்கின்றன என்பது. இன்னொன்று ஒரு ஆளை அவன் இறந்த பின் அவன் மூளையை மட்டும் வைத்துக் கொண்டு அவனுக்கு புலன்களின் அனுபவத்தை வெளியில் இருந்து simulate செய்து நான் உயிரோடு இருக்கிறேன் என்று நம்ப வைக்க முடியுமா? என்பது.இது ஒரு தத்துவார்த்த விசாரமும் கூட.BRAIN IN A VAT என்று அழைக்கப்படும் இந்த கருத்து நிறைய Science Fiction கதைகளில் வந்திருக்கிறது. மனித மூளையைத் தனியாக எடுத்து அதை திரவத்தில் முங்க வைத்து,அதில் கலர்கலர் ஒயர்களை இணைத்து ஒரு விதமான VIRTUAL REALITY ..அப்போது அந்த மூளை தன்னை ஒரு மனிதன் என்று உணருமா? தான் ஒரு உடம்பில் இல்லை ஒரு விதமான மாயைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறோம் என்பது அதற்குத் தெரியுமா? தான் நடப்பது போல, படிப்பது போல, பேசுவது போல கனவு காணுமா? இந்த சாத்தியக்கூறு 'நான்' என்றால் என்ன என்ற அடிப்படையையை ஆட்டம் காண வைக்கிறது.நான் என்பது புலன்களின் பிம்பம் தானா? சு வாங் சி என்ற ஜென் ஞானியின் பட்டாம்பூச்சி கனவு மிகவும் பிரபலமானது.

ஒரு நாள் காலையில் தன் சீடர்களை அழைத்து 'நான் ஒரு பெரிய மனக்குழப்பத்தில்' மாட்டிக் கொண்டிருக்கிறேன் என்றாராம்.சீடர்கள் என்ன என்று கேட்டதற்கு நேற்று இரவு ஒரு கனவு கண்டேன் என்றாராம். 'கனவு தானே' 'அதில் என்ன பிரச்சினை இருக்க முடியும்' என்று கேட்டதற்கு
'நேற்று நான் என் கனவில் நான் ஒரு பட்டாம்பூச்சியாக இருந்தேன். சுதந்திரமாக சுற்றித் திரிந்து மலருக்கு மலர் தாவினேன்.காலையில் அந்தக் கனவு
கலைந்து விட்டது. என்னுடைய கேள்வி என்ன என்றால் சுவாங்சி பட்டாம்பூச்சியாக இருப்பது போல கனவு கண்டாரா? இல்லை பட்டாம்பூச்சி சுவாங்சி யாக இருப்பது போல (இப்போது)கனவு காண்கிறதா? என்பது தான்' என்றாராம்.
ஒருவேளை நாம் நிஜமா? இல்லை நாமெல்லாம் BRAIN IN A VAT ஆ?
திரவத்தில் இருந்து கொண்டு கனவு காணும் மூளைகளா?

நான் என்பது யார்? பிரபஞ்சமே கடவுளின் கனவு தானா?

ஹலோ, இது இயற்பியல் வகுப்பு என்று பின்னாலிருந்து யாரோ சொல்வது கேட்கிறது. OK BACK TO THE TOPIC ..

QUANTUM MANY WORLDS approach என்பது காலப் பயணத்தை (TIME TRAVEL ) ஓரளவு சாத்தியம் ஆக்குகிறது.கடந்த காலத்தில் பயணித்து உங்கள் தாத்தாவைக் கொன்று விட்டால் என்ன ஆகும்? என்ற கேள்விக்கு பதிலாக இது அங்கே இரண்டு இணை பிரபஞ்சங்கள் உருவாகலாம் என்கிறது. ஒன்றில் தாத்தா இறந்து அவருக்கு கல்யாணம் ஆகாமல் நீங்களும் பிறக்காமல். இன்னொன்றில் தாத்தா உயிருடன் இருந்து கல்யாணம் ஆகி , நீங்கள் பிறந்து , கடந்த காலத்தில் பயணிப்பது. சரி. எனவே இது எண்ணிலடங்காத இணை பிரபஞ்ச சாத்தியக்கூறுகளைத் தருகிறது.அதாவது WHENEVER A CHOICE IS MADE , A PARALLEL UNIVERSE SPLITS IN ..உலகப் போரே நடக்காத ஒரு உலகம் இருக்கலாம்.டைட்டானிக் மூழ்காத ஒரு உலகம் இருக்கலாம். இயேசு சிலுவையில் அறையப்படாத ஓர் உலகம் இருக்கலாம்.டைனோசர்கள் அழிந்து போகாத ஓர் உலகம் கூப்பிடு தூரத்தில் இருக்கலாம்.விஷப்பெட்டி ஒன்றில் அடைக்கப்பட்ட பூனையைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். பூனை, சிதையும் யுரேனியம் கொண்ட ஒரு பெட்டியில் வைக்கப்படுகிறது.யுரேனியம் சிதைவது ஒரு QUANTUM PROBABILITY ..ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அது சிதையலாம் சிதையாமலும் இருக்கலாம்.சிதைந்தால் அது ஒரு சுத்தியலை நகர்த்தி விஷக்குப்பியை உடைத்து பூனை இறந்து விடும். யுரேனியம் சிதையவில்லை என்றால் பூனை உயிரோடு இருக்கும். சரி. பெட்டியானது வெளி உலகத்தில் இருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் யுரேனியம் அணு குவாண்டம் விதிகளுக்கு உட்பட வேண்டும். அணு சிதைந்த மற்றும் சிதையாத நிலைகளின் SUPERPOSITION (மேற்பொருந்துதல்) ஆக இருக்கிறது.எனவே பூனை இறந்து விட்ட மற்றும் உயிரோடு இருக்கிற இருநிலைகளிலும் ஒரே சமயத்தில் இருக்கிறது.அது எப்படி ஒன்று உயிருடன் இருக்க வேண்டும் இல்லை இறந்து போய் இருக்க வேண்டும். எப்படி ஒரே சமயத்தில் இரண்டு நிலைகளிலும் இருக்க முடியும்?இதற்கு விடையாக இரண்டு வாதங்கள் வருகின்றன. ஒன்று : பெட்டியைத் திறப்பதற்கு முன் பூனை உயிருடனும் உயிர் இல்லாமலும் ஒருங்கே (?) இருக்கிறது. பெட்டியைத் திறக்கும் போது கவனிப்பவர் குறுக்கிடுவதால் குவாண்டம் DECOHERENCE நடைபெற்று பூனையின் WAVE FUNCTION COLLAPSE ஆகி விடுகிறது,. எனவே பூனை ஒன்று இறந்தோ இல்லை உயிருடனோ இருக்கிறது. அதாவது கவனிக்கப்படாதவரை அலை(WAVE ). கவனிக்கப்படும் போது துகள்.(PARTICLE )

1963 ஆம் ஆண்டின் நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் Eugene Wigner என்பவர் தன்னுடைய இறுதிக் காலத்தில் ஹிந்து மதத்தில் உள்ள வேந்தாந்த தத்துவத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். பிரபஞ்சமெல்லாம் வியாபித்திருக்கும் விழிப்புணர்வுத் தன்மை , பிர
க்ஞைத் தன்மை பற்றிப் பேசுகிறது வேதாந்தம்(universal consciousness ) ஒரு பொருளின் STATE அதாவது குறிப்பிட்ட நிலையை விளக்குவதற்கு அது  ஒரு விழிப்புணர்வால் கவனிக்கப்பட வேண்டி உள்ளது.அப்படி கவனிக்கப்படவில்லை என்றால் அதன் ஸ்டேட் அர்த்தம் அற்றது. உதாரணம் அணுவை எலக்ட்ரான் சுற்றுகிறது என்பதை ஒரு பிரக்ஞைத் தன்மை கொண்டுள்ள மனிதன் கவனிக்க வேண்டி உள்ளது. எனவே நம் பிரபஞ்சம் ஒரு DEFINITE state , குறிப்பட்ட நிலையைக் கொண்டு இருப்பதால் அதை கவனிக்கும் ஒரு உயரிய பிரபஞ்ச விழிப்புணர்வு இருக்கவேண்டும் என்பது அவரின் வாதம்.(Using science to prove god ??)

ப்ருகதாரண்யக உபநிஷத் இவ்வாறு சொல்கிறது:

"அதி உன்னதமான சாரம் எதுவோ அதை இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் தன்னுடைய ஆன்மாவாகக் கொண்டுள்ளது.அதுவே மெய்ப்பொருள்;
அது ஜீவாத்மா; நீயும் அதுவே"

சரி. சில பேர் (Hugh Everett ) விழிப்புணர்வாவது மண்ணாவது , கவனிக்கப்படும் போது, பிரபஞ்சம் இரண்டாகப் பிரிந்து ஒரு பாதியில் உயிருள்ள பூனையும் இன்னொரு பாதியில் உயிரற்ற பூனையும் வைத்துக் கொண்டு அது பாட்டுக்கு நகர்கிறது என்கின்றனர்.

குவாண்டம் பிரபஞ்சங்கள்
=================

 
ஒரு குவாண்டம் துகள் பல நிலைகளில் இருக்க முடியும் என்று குவாண்டம் இயற்பியல் சொல்கிறது.நாம் BIG BANG தியரியை நம்பினால் நம் பிரபஞ்சம் ஒரு காலத்தில் பிளான்க் நீளத்துக்கு சுருங்கி மிக மிக சிறியதாக இருந்தது என்றும் நம்ப வேண்டும். பிரபஞ்சத்தில் விதிகள் காலத்துக்கேற்ப மாறாது ;இடத்துக்கேற்ப மாறாது என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதாவது கார்பனுக்கு பூமியிலும் ஆறு எலக்ட்ரான் தான். பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் உள்ள இன்னொரு கிரகத்திலும் ஆறு எலக்ட்ரான் தான்.தண்ணீர் ஆறாம் நூற்றாண்டிலும் நூறு டிகிரியில் தான் கொதித்தது. இப்போது
ம் அதே வெப்பநிலையிலேயே கொதிக்கிறது.
எனவே குவாண்டம் இயற்பியல் விதிகள் நம் குழந்தை பிரபஞ்சத்துக்கும் கண்டிப்பாகப் பொருந்த வேண்டும். எனவே பிரபஞ்சமும் அப்போது ஹைசென்பெர்க் நிச்சயமின்மை விதிகளுக்கு உட்பட்டு (ஒரே சமயத்தில்) பல நிலைகளில் இருந்திருக்கும்.DECOHERENCE WAVE FUNCTION COLLAPSE என்பதெல்லாம் வெளியில் இருந்து ஒரு கவனிப்பவர் துகளை உற்று நோக்கும் போது (ஃபோடான்) நடக்கும் விஷயங்கள். பிரபஞ்சம் உருவான போது அதற்கு வெளியே ஒரு CONSCIOUS OBSERVATION நடந்திருக்க
வாய்ப்பு இல்லை.(கடவுள் இருந்தால் ஒழிய)எனவே பிரபஞ்சத் துகளின் அலைசார்பு (WAVE FUNCTION )ஒரே சமயத்தில் பல்வேறு மதிப்புகளை கொண்டிருந்திருக்கும். எனவே ஒவ்வொரு மதிப்புக்கும் ஒவ்வொரு பிரபஞ்சம் இருக்க வேண்டும். ஆனால் இப்படி தோன்றிய இணை பிரபஞ்சங்களில் பெரும்பாலானவை தோன்றிய மறுகணமே ஏனோ
சுருங்கி (BIG CRUNCH IMMEDIATELY AFTER BIG BANG ) மடிந்து விட்டன என்கிறார்கள்.இன்றுமற்ற வெறுமையில் இப்படி முளைத்த குமிழிகளில் ஒன்று மட்டும் ஏனோ சுருங்காமல் தொடர்ந்து மெல்ல மெல்ல விரிவடைய ஆரம்பித்தது. அது தான் நாம் இன்று காணும் பிரபஞ்சம். OUR UNIVERSE IS A FREE LUNCH என்கிறார் Alan Guth என்பவர்.
ஸ்டீபன் ஹாகிங் ஒன்றும் இல்லாத வெறுமையில் இருந்து பிரபஞ்சம் வந்தது என்ற கருத்தை ஆமோதிக்கிறார்.பிரபஞ்சத்திற்கு தாமரை இலைமேல் அமர்ந்து ஓலைச்சுவடி ஏந்திய  பிரம்மா எல்லாம் வேண்டியதில்லை.பிரபஞ்சத்தில் உள்ள நேர் மற்றும் எதிர் சுமைகளைக் கணக்கிடும் போது (+ve and -ve charges )இரண்டும் சரிசமமாகவே
உள்ளன. மேலும் இரண்டு பொருட்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு மிக மிகக் குறைவு.எனவே நாம் ரோட்டில் போகும் போது கிட்ட நடந்து வருபவர் மீது மோதிக் கொள்வதில்லை.பச்சக் என்று ஒட்டிக் கொள்வதில்லை. (புதிதாக கல்யாணம் ஆனவர்களைத் தவிர்த்து) இருவர் உடம்பிலும் உள்ள நேர் மற்றும் எதிர் மின் சுமைகள் கச்சிதமாக BALANCE ஆகி விடுவதால் அப்படி நடப்பதில்லை.அப்படி மட்டும் balance ஆக வில்லை என்றால் மின்காந்த விசை (ஈர்ப்பை விட பல மடங்கு சக்தி வாய்ந்தது) ஒரு நொடியில் மில்லியனில் ஒரு பங்கு நேரத்தில் உங்கள் இருவரையும் இழுத்து ஒட்ட வைத்து விடும். உங்கள் மனதுக்குப் பிடித்த பெண்/ஆண் வரும்போது CHARGE IMBALANCE ஆகி விட வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்ளலாம்.

அதே போல MATTER x  ANTI MATTER ENERGY x NEGATIVE ENERGY விஷயங்கள் பிரபஞ்சம் ஒன்றுமில்லா வெறுமையில் இருந்து தோன்றி இருக்கலாம் என்ற கருத்தை வலுவாக்குகின்றன.பூஜ்ஜியத்தில் இருந்து ஒன்றும் மைனஸ் ஒன்றும் வருவது போல இது.


அடுத்த அத்தியாயத்தில் நட்சத்திரங்களின் வாழ்க்கை சுழற்சி பற்றி பார்க்கலாம்.


சமுத்ரா

Wednesday, April 4, 2012

கலைடாஸ்கோப்-61

லைடாஸ்கோப்-61 உங்களை வரவேற்கிறது.

+

சார் லோன் வேணுமா? சார் கிரெடிட் கார்ட் வேணுமா? இது போன்ற அழைப்புகளால் எரிச்சல் அடையாதவர்கள் யாரேனும் இருந்தால் அது அதிசயம். அதுவும் ஏதாவது முக்கியமான காலை எதிர்பார்த்து செல் மேல் செவி வைத்துக் காத்திருக்கும் போது அடுத்த முனையில் 'We are calling from HDFC bank ' என்றால் எப்படி கடுப்பாக இருக்கும்? நம்மில் பெரும்பாலானோர் NOT INTERESTED என்று கடுப்புடன் சொல்லி போனை வைத்து விடுவோம்.அடுத்தமுறை அப்படி வைக்காமல் இப்படி ஏதாவது CREATIVE பதில்களை சொல்லலாம்.

போன்: சார், எல்,ஐ.சி பாலிசி வேணுமா?
பதில்: ஹலோ, நானே ஒரு எல்,ஐ.சி ஏஜென்ட் தாங்க.. உங்களுக்கு ஒரு பாலிசி வேணுமா? உங்க details சொல்லுங்க

போன்: சார், பெர்சனல் லோன் வேணுமா?
பதில்: நான் RBI ல மேனேஜரா வேலை பண்றேன். கொஞ்ச நாள்ல
RBI கவர்னர் ஆயிருவேன். ரூபாய் நோட்டுல நான் தான் கையெழுத்து போடுவேன்,

போன்: சார், HOME LOAN வேணுமா?
பதில்: சுர மந்திர தரு மூல நிவாசக , பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் மூட மதே!
(அந்த ஆள் சத்தியமாக இன்னொரு முறை கால் பண்ண மாட்டார்)

போன்: சார், நாங்க ....இன்வெஸ்ட்மென்ட் கம்பெனில இருந்து கால் பண்றோம். எங்க பிளான்...
பதில்: ஹலோ, எனக்கு சுவிஸ் பேங்க்ல நூறு கோடி அக்கவுன்ட் ஆல்ரெடி இருக்கு.

போன்; சார், நாங்க ....Orphanage ல இருந்து கால் பண்றோம். உங்க டொனேஷன்..
பதில்: மேடம், நான் இன்னும் வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கேன். பிச்சை எடுத்து தான் செல்போன் வாங்கியிருக்கேன்.

போன்: சார், EXCELLENT ஹனிமூன் பேக்கேஜ்
பதில்: சாரி , நேத்து தான் மனைவியை டைவர்ஸ் பண்ணேன்.

போன்: சார், உங்க போன்ல எக்ஸ்ட்ரா ஃபெனிபிட்ஸ் பிளான் வேணுமா?
பதில்: ஹலோ. நான் அம்பானியோட ஒண்ணுவிட்ட சித்தப்பாவோட மருமகனோட சகலை.

போன்: சார், ...கம்பெனில உங்களுக்கு  matching job இருக்கு.
பதில்: சாரி, எனக்கு நேத்து தான் IBM ல vice president job கெடச்சிருக்கு,.

போன்: சார், எங்க MENTAL ASYLUM   டொனேஷன் விஷயமா நேத்து கால் பண்ணி இருந்தனே?
பதில்: ஹி ஹி ஹி, காசு, காசு, டொக் டொக் பிச்சா பிச்சா நான் ஏரோப்ளேன்ல போறனே , டுர்ர்   டுர்ர் ஹே பாப்பா எனக்கு பொம்மை வேணும்.


++

பெங்களூருவின் ஒரு பிஸியான சாலை ஒன்றில் கீழ்க்கண்ட நிகழ்ச்சிகளைப் பார்க்க நேர்ந்தது.

*ஒருநாள் காலை வேளை பஸ்ஸில் அமர்ந்து இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டு இருந்த போது (IN OTHER WORDS  ஃ பிகர் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்த போது) திடீரென 'டொம்' என்று பெருத்த சத்தம் கேட்டது.ஏதோ தவறாக நடந்து விட்டது என்று மனம் உணர்ந்த போது இஷ்ட தெய்வத்தின் பெயர் கூட மறந்து விட்டது.என்ன நடந்தது என்று புலன்களுக்கு எட்டி பின்னர் புத்திக்கு எட்ட சில வினாடிகள் ஆயின.சர்வீஸ் ரோடில் சென்று கொண்டிருந்த பஸ் சாலையின் நடுவில்
இருந்த 'டிவைடர்' இல் முட்டி கண்ணாடி உடைந்து டயர் பஞ்சர் ஆகி நின்று விட்டிருந்தது.'ஸ்டியரிங்' லாக் ஆகி விட்டது என்று டிரைவர் சொன்னார்.நல்ல வேளை சர்வீஸ் ரோடில் சென்று கொண்டிருந்ததால் பரவாயில்லை. பெரிதாக எதுவும் சேதம் இல்லை. என் கண்ணாடி மட்டும் ஒரு சில அடிகள் சென்று முன்னால் விழுந்து விட்டது.இதே மெயின் ரோடில் இப்படி ஏதாவது நடந்து தொலைத்திருந்தால் samudrasukhi .com இல் லைடாஸ்கோப்-60 கடைசிப் பதிவாக இருந்திருக்கும்.அது சரி, இந்த ஸ்டியரிங் நடுரோட்டில் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் லாக் ஆகுமா? எனக்கு வாகனங்களைப் பற்றிய அறிவு கிட்டத்தட்ட ஜீரோ. ஸ்டியரிங்  லாக் என்றால் என்ன?

** வேன் ஆட்டோ ஒன்றும் ஏதோ ஒரு கருமமும் கொஞ்சம் இடித்துக் கொண்டு ஆட்டோவின் கண்ணாடி கொஞ்சம் விரிசல் அடைந்து விட்டது.ஆட்டோ டிரைவர் அன்று பக்திப் பரவச நிலையில் இருந்திருப்பார் போலும். இடித்தவனைப் பிடித்துக் கொண்டு கன்னட கஸ்தூரியின் மணம் கமழக் கமழ அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்.தன் தற்காலிக எதிரியை கைநீட்ட முயன்று கொண்டிருந்தார் (ன்)  நம் மக்களுக்குத் தான் வேடிக்கை பார்ப்பது என்றால் ரொம்பப் பிடிக்குமே? டூ-வீலரில் செல்பவர்கள், லாரி ஓட்டுபவர்கள் பாதசாரிகள் எல்லாம் தத்தம் வாகனங்களை சிறிது நேரம் மறந்து விட்டு சண்டையை கண்கொட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தனர். இந்த ஜுஜுபி சமாச்சாரத்துக்கு ஒரு கிலோமீட்டர் வரை ரோட் ப்ளாக் ஆகி ட்ராபிக் ஜாம் வேறு ஆகி விட்டது.அய்யா வேடிக்கை பார்ப்பவர்களே? உங்களுக்கு அவசியம் என்றால் வாகனத்தை ஒதுக்குப்புறமாக நிறுத்தி விட்டு யாருடைய வழியையும் அடைக்காமல் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் கண்குளிர வேடிக்கை பாருங்கள்.இன்ஜினை ஆஃப் செய்யாமலேயே வேடிக்கை பார்த்தல் தேவையா?

*** சிவப்பு சிக்னல் இருக்கிறதே என்ற தைரியத்தில் ஒருவர் ரோடை கடந்தார். ஆனால் சிவப்பில் ஐந்து இருக்கும் போதே வாகனங்களை உர் உர் என்று உறுமி கிளப்பி விடவேண்டும் என்ற எழுதப்படாத விதியை நம் வாகன ஓட்டிகள் கடைபிடிப்பது அவருக்குப் பாவம் தெரியவில்லை போலும்.அவர் பாதி சாலையைக் கடக்கும் போதே டூ வீலர்கள் சீறிப்பாயும் சிறுத்தை போல சிவப்பில் அடைபட்டிருந்த கடுப்பில் கிளம்பிப் பாய்ந்தன. அவருக்கு எந்தப்பக்கம் போவது என்று தெரியவில்லை.இந்தத் தடையை எதிர்பாராத வாகன ஓட்டிகளுக்கும் எப்படி அதை எதிர்கொள்வது என்றும் தெரியவில்லை. இந்த மாதிரி சமயங்களில் கல்லூளிமங்கன் போல ஒரே இடத்தில் நின்று விடுவது நல்லது.டூ வீலர்கள் சூரியனின் ஈர்ப்பினால் வளையும் ஒளி போல அவரை சுற்றி வளைந்து கொண்டு சென்றார்கள். சில பேர் சாவு கிராக்கி என்று அர்ச்சனை செய்தார்கள். கடைசியாக அவர் எப்படியோ ரோட்டை கடந்து போனார். பாத சாரிகளுக்கு ஒரு விண்ணப்பம். சிவப்பு கவுன்ட் டவுன் பத்து அல்லது பத்துக்குக் குறைவாக இருந்தால் தயவு செய்து சாலையை கடக்க எத்தனிக்காதீர்கள். நம் கணக்கு வேறு. வாகனங்களின் கணக்கு வேறு.மேலும் நாம் எதற்கு நம் வீட்டு சாப்பாட்டை நம் உழைப்பில் சாப்பிட்டு விட்டு கண்டவன் வாயில் எல்லாம் விழ வேண்டும்?
Objects in the mirror are closer than they appear என்பது மட்டும் அல்ல.the seconds are shorter than they are என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.


+++கடவுள்களில் யாருக்கும் இல்லாத பெருமை நம் பிள்ளையாருக்கு இருக்கிறது என்று தோன்றுகிறது.அது என்ன என்றால் Being in many forms!ஒரு சரஸ்வதியையோ முருகனையோ ராமரையோ ஒரு நாலைந்து வெவ்வேறு டிசைன்களில் வரையலாம் அவ்வளவு தான்.பிள்ளையாருக்கு மட்டும் எத்தனை விதா விசித்திர வடிவங்கள்?

குழல் ஊதும் விநாயகர், வீணை வாசிக்கும் விநாயகர், துப்பாக்கி ஏந்தி போருக்குப் போகும் விநாயகர், ஸ்கூலுக்குப் போகும் விநாயகர், கம்ப்யூட்டர் விநாயகர்,டெண்டுல்கர் விநாயகர், அன்னா ஹசாரே விநாயகர் ,நர்தன விநாயகர், தூங்கும் விநாயகர், குழந்தை விநாயகர், ரொமாண்டிக் விநாயகர் (?),எழுதும் விநாயகர், இப்படி எவ்வளவோ. ஆனால் பிள்ளையாரை எப்படி வடிவமைத்தாலும் அவர் தொந்தி மட்டும் எல்லா உருவங்களிலும் பொதுவாக இருக்கிறது. தொந்தி இல்லாத சிக்ஸ்-பேக் விநாயகரை இதுவரை நான் பார்த்ததே இல்லை.சிவன் மட்டும் நன்றாக அந்தப் பனியிலும் சோம்பல் பாராமல் காலையில் சீக்கிரம் எழுந்து கொண்டு 'கைலாசா மாடர்ன் ஜிம்' முக்குப் போய் உடம்பை 'கின்' என்று வைத்திருக்கிறார். ஒரு நாளாவது இந்த பிள்ளையாரை அழைத்துப் போகக் கூடாதோ?இத்தனை பெரிய தொந்தி இருப்பதால் தான் இன்னும் கல்யாணமே ஆகவில்லையோ என்னவோ?

கீழ்க்கண்ட பிள்ளையார் வடிவங்கள் வந்தால் ஆச்சரியம் இல்லை.

* பல் விளக்கும் பிள்ளையார்
* மொபைல் போனில் பேசும் பிள்ளையார்
* காதில் இயர் போன் கையில் ஐ-பாட் பிள்ளையார்
* டூ வீலர் பிள்ளையார்
* கோக-கோலா பிள்ளையார்
* ஜீன்ஸ் பிள்ளையார்பிள்ளையாரின் சில அபூர்வமான படங்களை இங்கே பார்க்கலாம்.

++++

ஆங்கிலத்தில்
Euphemism பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு பச்சையான வார்த்தையை கொஞ்சம் டீசன்டாக சொல்வது. முன்னர் எல்லாம் கக்கூசுக்குப்  போகிறேன் என்று கவுண்டமணி மாதிரி பச்சையாக சொல்லாமல் கால்கழுவப் போகிறேன் பொடக்காலிக்குப் போகிறேன் என்றெல்லாம் சொல்வார்களே அது மாதிரி.இப்போது இன்னும்
டீஜன்டாக  REST ROOM ...அந்த ஒரு ரூமில் தான் மனிதன் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறான் என்று சிம்பாலிக்காக சொல்கிறார்கள்.IM GOING TO URINATE என்று சொல்லாமல் I 'M GOING TO PISS என்று சொல்லலாம். I 'M GOING TO PEE என்று கூட சொல்லலாம்.. அனால் தமிழில் கேட்கும் போது ஒரு மாதிரி இருக்கிறது.இப்போது ஒருவரைப் பார்த்து HANDICAP என்றால் அது கிட்டத்தட்ட குற்றம். DISABLED ,PHYSICALLY CHALLENGED (உடல்ரீதியாக சவால் விடப்பட்டவர்??!)  அல்லது DIFFERENTLY ABLED  மாற்றுத் திறனாளிகள் என்று அழைக்க வேண்டும். ஒரு ஜோக் ஞாபகம் வருகிறது.

லிட்டில் ஜானி யின் வீட்டில் அவனை ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.அதற்கு முன் , "இதப் பார் ஜானி , அந்த வீட்ல ஒரு புதுப் பாப்பா பொறந்துருக்கு, ஆனா அதுக்கு ரெண்டு காதும் இல்ல. நீ அதைப்பத்தி அங்கே எதுவும் பேசக்கூடாது"என்று சொல்லி அழைத்துச் சென்றனர்.

அங்கே அந்த குழந்தையைப் பார்த்து விட்டு எல்லாரும் அவன் மூக்கு அழகா இருக்கு, முடி அழகா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.
லிட்டில் ஜானி திடீரென்று 'இந்தப் பாப்பாவின் கண்ணு எவ்ளோ அழகா இருக்கு, இவனுக்கு ஆயுசு முழுதும் நல்ல கண் பார்வை இருக்கும்' என்றான்.

இதைக் கேட்டு மகிழ்ந்த அதன் அம்மா 'ஜானி, ரொம்ப நன்றி, குழந்தையைப் பற்றிய உன் பாராட்டுக்கு' என்றாள்
அப்போது லிட்டில் ஜானி ' கண் பார்வை நல்லா இருந்தாதான் நல்லது. இல்லைன்னா மூக்குக் கண்ணாடியை இவன் எதுல மாட்டிப்பான்? என்றான்.


'Differently abled ' பற்றி இன்னொரு ஜோக். இது A ஜோக். புத்தர்கள் காந்திகள் அடுத்த பாராவுக்கு போய் விடவும்.

இளம் விதவை ஒருத்தி மறுமணத்துக்காக விளம்பரம் செய்திருந்தாள்.

மறுநாள் கதவு தட்டப்பட்டது. இரண்டு கைகளும் கால்களும் இல்லாத ஒரு ஆள் நின்றிருந்தான். தான் அவளுக்குக் கணவனாக வரலாமா என்று கேட்டான்.

அவள்,விளம்பரத்தில் நான் 'என் கணவர் என்னை அன்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று சொல்லியிருந்தேனே என்றாள்

'OF COURSE , DEAR நான் உன்னை அன்பாகப் பார்த்துக் கொள்வேன்" என்றான் அவன்

விளம்பரத்தில் நான் 'என் கணவர் எனக்கு நான் என்ன கேட்கிறேனோ அதை வாங்கித் தரவேண்டும் என்று சொல்லியிருந்தேனே' என்றாள்

'
'OF COURSE , DEAR , I WILL . என்னிடம் நிறைய பணம் இருக்கிறது' என்றான் அவன்

கடைசியாக அவள்  '
விளம்பரத்தில் நான் என் கணவர் என்னை 'அந்த' விஷயத்தில் திருப்தி செய்ய வேண்டும் என்று போட்டிருந்தேனே. உனக்கு தான் ரெண்டு கையும் காலும் இல்லையே , எப்படி சாத்தியம் ?' என்றாள்.

''OF COURSE , DEAR , I WILL , நான் கதவை எப்படித் தட்டினேன் என்று நினைக்கிறாய்?' என்றான்.

சரி.

தினத்தந்தி பேப்பரைப் பார்த்தால் அதில் 'கார் மோதி வாலிபர் சாவு' ' முதியவர் மரணம்' என்று பச்சையாக இருக்கும். மரணம் என்பது
Euphemism -தில் மிக அழகாக சொல்லப்படுகிறது. இறைவனடி சேர்ந்தார், இயற்கை எய்தினார், டிக்கெட் வாங்கினார், வைகுந்தம் புக்கார்,மீளாத் துயரில் ஆழ்ந்தார்  என்று சொல்வது கூட Euphemism தான். அதே போல ஒருவரை ஹோமோ என்று அழைக்காமல் Confirmed Bachelor என்று அழைக்க வேண்டும். பிட்டுப்படம்  , போர்ன்,செக்சு வீடியோ ப்ளூ பிலிம் என்றெல்லாம் கிராமத்தான் (?) மாதிரி சொல்லாமல் ADULT MATERIAL என்று சொன்னால் போதும். அவன் ஒரு DRUG ADDICT என்று சொல்லாமல் HE IS CHEMICALLY DEPENDENT என்று சொல்ல வேண்டும். வெளிநாடுகளில் CALL GIRL என்ற பதத்தை உபயோகிக்காமல் ESCORT என்று சொல்வது நல்லது. உதாரணம் (ஹஸ்கி வாய்சில்) (ஹோட்டல் அட்டெண்டரிடம்) WHERE CAN I GET AN ESCORT ?

அந்த ஆள் சொட்டை என்று சொல்லாமல் HE IS A LITTLE THIN ON TOP .. என்று சொன்னால் மதி.

Dysphemism என்பது இதற்கு அப்படியே OPPOSITE ..பச்சை பச்சையாக அப்படியே சொல்வது. மலத்தை ஏன் GIFT WRAPPER இல் சுற்றி வைக்க வேண்டும் என்பது இவர்கள் பாலிசி.

உதாரணம் TERRORIST (
Dysphemism ) Striker (Euphemism )
Queer
(Dysphemism ) Gay (Euphemism )

+++++
ஒரு கவிதை

குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி ஒன்று
நடந்தது.
பாரதி வேடம் போட்ட குழந்தை
'நீ யார்' என்றதற்கு 'பாரதி' என்றது.
காந்தி வேடம் போட்ட குழந்தை
'நீ யார்' என்றதற்கு 'நான் தான் காந்தி' என்றது.
ஆண்டாள் வேஷத்தில் வந்த குழந்தை
'நீ யார்' என்றதும் 'ஆண்டாள்' என்றது.
'அவ்வை' வேஷக் குழந்தை நான் அவ்வை என்றது.
புத்தர் வேடத்தில் வந்த குழந்தையை
'நீ யார்' என்றதும் அது திரு திருவென
முழித்து எச்சில் முழுங்கி
 'தெரியலை' என்றது.

பார்ப்பதற்கு அன்று
புத்தர் அந்தக் குழந்தை வேஷத்தில் வந்தது போல இருந்தது.


++++++

ஜோக்.
சிரியுங்கள். கொண்டாடுங்கள். வாழ்க்கை சில காலம் தான். ஏன் இறுகிய முகத்துடன் இருக்கிறீர்கள்? -ஓஷோ.

டாக்டர்: என்ன ப்ராப்ளம் சொல்லுங்க?

ஆள்: டாக்டர், காலைல என் பக்கெட் உடைந்து விட்டது..

டாக்டர்: என்ன லூசு மாதிரி உளர்றீங்க? பக்கெட் உடைந்தால் இங்கே ஏன் வந்தீங்க?

ஆள்: நீங்க ஒரு பெரிய 'பிளாஸ்டிக் சர்ஜன்' ன்னு கேள்விப்பட்டேன்.

உங்களுக்காக இன்னொன்று இங்கிலிபீஸில்:

Once Banta Singh attended an Interview.
Interviewer : Give me the opposite words.
Banta Singh : Ok
Interviewer : Made in India
Banta Singh : Destroyed in Pakistan
Interviewer : Good... Keep it Up
Banta Singh : Bad.... Put it Down
Interviewer : Maxi Mum
Banta Singh : Mini Dad
Interviewer : Enough! Take your Seat
Banta Singh : Insufficient! Don’t take my seat
Interviewer : Idiot! Take your seat
Banta Singh : Clever! Don’t take my seat
Interviewer : I say you get out!
Banta Singh : You didn’t say I come in
Interviewer : I reject you!
Banta Singh : You appoint me
Interviewer : ....!!!!!!!


சமுத்ரா