இந்த வலையில் தேடவும்

Tuesday, October 12, 2010

நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்- 7


ஒரு அரசியல்வாதி தன் நாயை மிகவும் விரும்பினார்....
ஒரு நாள் தானே அதற்கு பிஸ்கட் வாங்க கடைக்குச் சென்றார்... கடைக்காரனைப் பார்த்து "ஏம்பா, இங்கே நாய் பிஸ்கட் கிடைக்குமா?" என்றார்....
"இருக்குங்க , இங்கயே சாப்பிடறீங்களா இல்ல பார்சல் பண்ணவா? "


No explanation : )



"அன்பே, இந்த ஒரு தரம்"
"ரொம்ப களைப்பாக இருக்கிறது"
"ப்ளீஸ், எனக்காக"
"என்னை விட்டு விடுங்கள்,,,தூங்கணும்"
"எனக்கு தூக்கம் வரவில்லையே"
"ப்ளீஸ்"
"பாதி ராத்திரியிலா?"
"தாங்க முடியவில்லை...எரிகிறது "
"என்னால் முடியாது"
"நீ என்னை விரும்பவில்லையா"
"நான் விரும்புகிறேன்"
"அப்படியானால் ஏன் மறுக்கிறாய்?"
"சரி ஓகே...."
"கைக்கு எட்டவே இல்லை....விளக்கு போடுகிறேன்"
"வேண்டாம்.... அப்படி தான்... இன்னும் கொஞ்சம் மேலே"
"ஓ நன்றி..."
"இன்று ஒரு நாள் தான் ...அடுத்த முறை அந்த பாழாப்போன ஜன்னலை நீங்களே எந்திருச்சுப் போய் திறந்துக்கங்க"

ஓஷோ: மனிதன் எதைப் பார்க்க விரும்புகிறானோ அதை மட்டும் தான் பார்ப்பான் ...மனிதன் எதை கேட்க விரும்புகிறானோ அதை மட்டும் தான் கேட்பான்....

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் சமுத்ர சுகி

ஓஷோவின் ஜோக்ஸ் எல்லாமே சூப்பர் ஜோக் தான்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா