இந்த வலையில் தேடவும்

Monday, October 4, 2010

நினைத்ததும் நடந்ததும்....

இளைஞனே !

நீ விஞ்ஞானி ஆகி
எந்திரம் செய்வாய்
என்றிருந்தேன்
நீயோ
எந்திரன் போஸ்டருக்கு
அபிஷேகம் செய்கிறாய்...


நீ
ராமன் போல் நடந்து
நாடாள்வாய் என்றிருந்தேன்
நீயோ ராம ஜன்ம பூமிக்காய்
கொடி தூக்குகிறாய்...


நீ
காந்தி போல் இருப்பாய் என்று
கனவொன்று கண்டேன்
நீயோ காந்தி ஜெயந்திக்கு
குத்தாட்டம் பார்க்கிறாய்..

வரலாற்றில் உன்
face -ஐ book - செய்வாய் என்றிருந்தேன்
நீயோ
facebook -இல் முழுகி விட்டாய்....

பேச்சில்
ஆபிரகாம் லிங்கன் போல்
ஆர்பரிப்பாய் என்று
ஆனந்தித்தேன்
நீயோ
ஆர்க்குட்டில் அமர்ந்து
அரட்டை அடிக்கிறாய்..

உன்
நாக்கில்
கலைமகள் நடனம் என்றெல்லாம்
கனவினில் கண்டேன்
நீயோ
'நாக்க முக்கவில்' நிறைவடைந்து விட்டாய்....

நீ
அலையில் இறங்கி ஆராய்வாய்
என்றிருந்தேன்....
ஆனால்
வலையில் இறங்கி வனப்பிழந்து விட்டாய்....

நீ
மலைகளில் உலவி மகிழ்வாய் என்றிருந்தேன்
ஆனால்
வலைகளில் உலவுதலே வாழ்வாக்கி விட்டாய்!~சமுத்ரா

No comments: