இந்த வலையில் தேடவும்

Monday, October 11, 2010

நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-6


எழுபது வயதான முல்லா நசுருதீன் தன் தொண்ணூறு வயதான தந்தையை அழைத்துக் கொண்டு ஒரு மனநல டாக்டரிடம் வந்தார்....

"டாக்டர்....எங்க அப்பா தினமும் நிறைய நேரம் பாத் ரூமில் ஒரு வாத்து பொம்மையை வைத்துக் கொண்டு தண்ணீரில் விளையாடுகிறார்" என்றார்....

டாக்டர் " முல்லா..பாருங்கள் இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை....வயதானவர்கள் குழந்தை போல ஆகி விடுகிறார்கள்....அவர் பிறரை தொந்தரவு செய்யாத வரை இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை" என்றார்...

முல்லா "ஆனால் டாக்டர், அது என்னுடைய வாத்து பொம்மை" என்றார்....


ஓஷோ: மனிதன் எவ்வளவு வளர்ந்தாலும் மனதளவில் குழந்தையாகவே இருக்கிறான்....



ஒரு நாள் ஒரு இந்தியன், ஒரு ஆப்பிரிக்கன், ஒரு அமெரிக்கன் மூன்று பேரும் ஒரு பேருந்தில் ஏறினார்கள்....
பேருந்து புறப்பட்டதும் ஒரு ஈ வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது..அவன் அதைத் தட்டி விட அது இந்தியன் மேல் போய் அமர்ந்தது....அவனும் அதைத் தட்டி விட அது ஆப்பிரிக்கன் மேல் போய் அமர்ந்தது...அதை அவன் அப்படியே பிடித்து சாப்பிட்டு விட்டான்....சிறிது நேரம் கழித்து இன்னொரு ஈ உள்ளே வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது..அவன் அதைத் தட்டி விட அது இந்தியன் மேல் போய் அமர்ந்தது....அவனும் தட்டி விட அது ஆப்பிரிக்கன் மேல் போய் அமர்ந்தது...இந்த முறையும் அவன் அதை பிடித்து அப்படியே சாப்பிட்டு விட்டான்...சிறிது நேரம் கழித்து இன்னொரு ஈ வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது...அதை அவன் தட்டி விட ,அது இந்தியன் மேல் வந்து அமர்ந்தது...

இந்த முறை அந்த ஈயை அவன் கையில் பிடித்து வைத்துக் கொண்டு ஆப்பிரிக்கனிடம் சென்று

"சார், சுவையான ஈ இருக்கு,,,வாங்கறீங்களா? பத்து ரூபாய் தான்" என்றான்..

ஓஷோ: இந்தியா எப்போதோ தன் ஆன்மீக வாழ்கையை இழந்து பணத்தின் மேல் குறியாகி விட்டது....

3 comments:

Anonymous said...

true

cheena (சீனா) said...

அன்பின் சமுத்ர சுகி

அருமை அருமை -- அததனையும் அருமை - ஒர் ஈ 10 ரூபா - ஹா ஹா ஹா

நல்வாழ்த்துகள் சமுத்ர சுகி
நட்புடன் சீனா

adhvaithan said...

there is no point in we being matured if we are not behaving childish @timess