இந்த வலையில் தேடவும்

Sunday, October 10, 2010

நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-3


ப்ரொபசர் பான்டா தியேட்டரில் மீண்டும் மீண்டும் டிக்கட் வாங்கிக் கொண்டிருந்தார்.... டிக்கட் கவுண்டரில் இருந்தவர் கேட்டார்....:ஏன் ஒரே படத்திற்கு மீண்டும் மீண்டும் டிக்கட் வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்"?

"கதவருகில் ஒரு பைத்தியம் நின்று கொண்டு என் டிக்கட்டை ஒவ்வொரு முறையும் கிழித்து விடுகிறது...."

ஓஷோ: மனிதன் பிறரைத்தான் பைத்தியம் என்று நினைப்பான்...

ஒரு மன நல மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் மூன்று பைத்தியங்களுக்கு அவர்கள் குணமடைந்து விட்டனரா என்று அறிய ஒரு டெஸ்ட் வைத்தார்....மூன்று பேரையும் தண்ணீர் இல்லாத ஒரு நீச்சல் குளத்தின் டைவிங் பலகைக்கு அழைத்துச் சென்று குதிக்கச் சொன்னார்...

முதல் பைத்தியம் குதித்து விட்டு காலை உடைத்துக் கொண்டது...

இரண்டாம் பைத்தியம் குதித்து விட்டு கையை உடைத்துக் கொண்டது..

மூன்றாவது "இல்லை டாக்டர் நான் குதிக்க மாட்டேன் " என்றது.. மகிழ்ச்சியடைந்த டாக்டர் "வாழ்த்துக்கள் நீங்கள் குணமாகி விட்டீர்கள் போல தோன்றுகிறது....சரி ஏன் குதிக்க மாட்டேன் என்றீர்கள்?" என்று கேட்டார்...

"அது வந்து டாக்டர் எனக்கு நீச்சல் தெரியாது"

ஓஷோ: மனிதன் எப்போதும் திருந்துவதே இல்லை.....

5 comments:

பனித்துளி சங்கர் said...

அருமை . சிரிக்கவும் , சிந்திக்கவும் வைத்தது உங்களின் பதிவு . பகிர்வுக்கு நன்றி

சுதர்ஷன் said...

நன்றாக இருந்தது .. முதலாவது அருமையிலும் அருமை ...

Anonymous said...

Dei Kaidha.... Naariduva

வித்யாஷ‌ங்கர் said...

give lot its all fun and thoughtfull,thanku-vjdyashankar

cheena (சீனா) said...

ஆகா ஆகா பைத்தியம் கிழிக்கிறது - நல்லாவே இருக்கு

நல்வாழ்த்துகள் சமுத்ர சுகி
நட்புடன் சீனா