இந்த வலையில் தேடவும்

Wednesday, October 6, 2010

ராக ரஞ்சனி-நாட்டை

திருப்புகழ் தெரியுமா? (என்னது அப்படின்னா என்னவா?) அருணகிரிநாதர் முருகன் மீது பாடியது.....அதன் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் விநாயகர் மீதான துதியுடன் தொடங்கும்...(கைத்தல நிறை கனி...)அதன் ஒரு பாடல் நாட்டை ராகத்தில் பாடப்படுகிறது....உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி (கற்பகமரம், காமதேனு, சிந்தாமணி, இவைகள் போன்று கசியும் உன் அருளினால் பாற்கடலில் தோன்றிய அமுதத்தின் உணர்வில் ஊறி)

இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே (இன்ப ரசத்தைப் பருகி எப்போதும் நான் இருக்க எனக்கு ஆதரவாய் இருப்பாய்)

தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே (தம்பி முருகனுக்காய் ஆனையாகி வனம் சென்றவனே, தந்தையை வலம் செய்து ஞானக் கனி பெற்றவனே)

அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே. (அன்பருக்கு அருள்பவனே! ஐங்கரனே)
'நாட்டை' பெரும்பாலும் கச்சேரிகளின் ஆரம்பத்தில் பாடப்படும் ஒரு மங்கள ராகம்...விநாயகரோ ஆரம்பத்தில் வணங்கப்படும் கடவுள்..எனவே விநாயகர் மீதான பெரும்பாலான பாடல்கள் நாட்டையில் தான் இருக்கும் (அல்லது ஹம்சத்வனியிலும்)

நாட்டை சம்பூர்ண ராகமான சல-நாட்டை என்ற தாய் ராகத்தின் குழந்தை ...இதன் ஆரோ மற்றும் அவரோஹணங்கள்

ச நி3 ப ம1 ரி3 ச
ச ரி3 க3 ம1 ப த3 நி3 ச

நாட்டையில் 'மஹா கணபதிம்' என்ற முத்துசுவாமி தீக்சிதர் பாடலை கீழே கேட்கலாமா?

Get this widget | Track details | eSnips Social DNA


நாட்டையின் மற்றொரு சிறப்பு அது கன பஞ்சக ராகங்களில் முதலாவதாக வருவது....கர்நாடக இசையில் கொஞ்சம் 'கனமான' பார்டிகளாக ஐந்து ராகங்களை வைத்துள்ளார்கள்...
நாட்டை, கௌளை,ஆரபி, வராளி,ஸ்ரீ என்பவை தான் அவை... (வராளி இதில் வராது என்று சிலர் கூறுவதுண்டு)எனவே தான் இந்த ஐந்து ராகங்களை எடுத்துக் கொண்டு த்யாகராஜர் 5 கம்பீரமான கிருதிகளை கொடுத்துள்ளார்...அதில் முதலாவதாக வருவது 'ஜகதானந்த காரகா' (அந்நியன் படத்தில் கூட வருமே? த்யாகராஜர் பாடலைக் கூடசினிமா மூலமாகத் தான் எடுத்துக் காட்ட வேண்டியுள்ளது...:( ) இந்தப் பாடலை முழுவதுமாகப் படிக்க நேரம் இருந்தால் இங்கே கிளிக் செய்யவும்....

இந்தப் பாடலில் த்யாகராஜரின் இசை வன்மை மட்டுமின்றி சமஸ்க்ருதத்தில் அவரின் சொல் வன்மையும் விளையாடுகிறது....சில உதாரணங்கள்....

க3க3(னா)தி4ப - விண்ணுக்கு அதிபதியான சூரியன்
நிமிஷ வைரி வாரித3 ஸமீரண - கண் இமைக்காத தேவர்களின் பகையாகிய மேகத்திற்குப் புயல் போன்றவன்
அமர தாரக நிசய குமுத3 ஹித - அழிவில்லாத வின்மீன்களிடைத் தோன்றும் தாமரை நண்பனே (நிலவே)
வா(கீ3)ந்த்3ர ஜனக - வாக்குக்கு அதிபதியான கலைமகளின் மணாளன் தந்தையே
ஓங்கார பஞ்ஜர கீர -ஓங்காரமெனும் கூண்டின் கிளியே!

கலஸ1 நீர நிதி4ஜா ரமண- பாற்கடலில் உதித்தவள் மணாளனே!
பாப க3ஜ ந்ரு2-ஸிம்ஹ - பாவம் என்ற யானைக்கு நர சிங்கம் போன்றவனே

வாஸவ ரிபு ஜன(கா)ந்தக களா-த4ர - இந்திரன் எதிரிக்கு (இந்த்ரஜித்) தந்தைக்கு (ராவணன்) யமனுக்கு சிவன் போன்றவனே! (ராவணனின் எமனே!)

இந்த ராகத்தில் வரும் வேறு சில கர்நாடக இசைப் பாடல்கள்

ஞான விநாயகனே (கம்பீர நாட்டை)
ஜய ஜய ஜய ஜானகி காந்த - புரந்தர தாசர்
ஸ்ரீ மஹா கணபதே சுரபதே
ஷக்தி கணபதிம்

சினிமாவுக்கு வருவோம்....நாட்டையில் நான் நினைவு கூர்ந்த வகையில்

பனி விழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்..
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்.... (எந்தப் படம்?)

அய்யங்காரு வீட்டு அழகே....(அந்நியன்)

ஹரிஷ் ராகவேந்திரா பாடிய 'சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே'..

இந்தப் பாட்டையெல்லாம் இப்போது கேட்காமல் இந்த தொடரைப் பற்றி ஆராய்வோம்...(பாட்டை கூகுளில் தேடிக் கொள்ளவும்)...இது ஒரு
self -contradicting -sentence (SCS ) ..அதாவது தனக்குத் தானே மாறுபடுகின்ற ஒன்று....சென்னை செந்தமிழ் உண்மையிலேயே மறந்திருந்தால் இப்படி எப்படி அழகாக செந்தமிழில் பாட முடியும்?எஸ். சி. எஸ். ஸுக்கு மேலும் சில உதாரணங்கள் கீழே:

*உங்களைப் பார்த்ததுல பேச்சே வரமாட்டேங்குது...
*நான் சொல்றது எல்லாம் பொய்...
*உலகில் எதுவுமே நிச்சயமில்லை என்பது மிக மிக நிச்சயமானது
*முதல் விதி என்ன என்றால் எந்த விதிகளும் இல்லை என்பதாகும்
*இது ஒரு தவறான வாக்கியம்
*நீ ஒரு வேலை பண்ணு...அங்க போய் சும்மா உட்கார்....
*இந்த ஆசை நிறைவேறக் கூடாதென்று ஆசைப் படுகிறேன்...
* நோ கமெண்ட்ஸ்....(இதுவே ஒரு கமெண்ட் தானே?)
*நான் உன்னை அலட்சியம் செய்கிறேன்
* உனக்கு என்ன விருப்பமோ கேள், கண்டிப்பாக நிறைவேற்றுகிறேன்.... என் விருப்பத்தை நீங்கள் நிறைவேற்றாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்...
*இனி மேல் எந்த முடிவும் எடுப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன்


~சமுத்ரா

1 comment:

adhvaithan said...

naatai is excellent raaga..

arohanam: sa ri3 ga3 ma1 pa ni3 sa
avarohanam: sa ni3 pa ma1 (ga3 ma1) ri3 sa

i am not aware whether naatai was used with dha also.. if in any song dha is used please help me to find that rare song.

to add to song list

swaminatha paripalayasumam - deekshidar
sarasiruha sanapriyae - pallavi duraisami iyer
vinayaka charanam - arunachala kavirayar ramanadaga mudhal krithi

pani vizhum malarvanam is chala natai.. not naatai.. its from movie ninaivellam nithya