இந்த வலையில் தேடவும்

Thursday, October 28, 2010

நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-13

பாதிரியார் ஹோலி-கோகனட் ஒரு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்....

நடு வழியில் துணை பைலட் வந்து " இந்த விமானத்தின் நான்கு இஞ்சின்களில் ஒன்று பழுதாகி விட்டது....ஆனால் கவலைப்பட ஒன்றும் இல்லை....அதிக பட்சமாக நாம் மூன்று மணி நேரம் தாமதமாகச் செல்வோம் அவ்வளவுதான்" என்றார்

சிறிது நேரம் சென்றதும் அவர் மறுபடியும் வந்து "மன்னிக்கவும்...இரண்டாவது இன்ஜினும் செயலிழந்து விட்டது...ஆனால் கவலைப்பட வேண்டாம்...அதிக பட்சம் ஆறு மணி நேரம் தாமதமாகும்" என்றார்...

கொஞ்ச நேரம் கழித்து வந்து "மூன்றாவது இன்ஜினும் போய் விட்டது....ஆனாலும் பயப்பட ஒன்றும் இல்லை...என்ன அதிக பட்சம் ஒன்பது மணி நேரம் லேட் ஆகும்" என்றார்...

சிறிது நேரம் கழித்து அவர் மறுபடியும் வந்து "சாரி...நான்காவது இன்ஜினும் நின்று விட்டது...இனி எல்லாரும் அவரவர் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொள்ள வேண்டியதுதான் " என்றார்....

ஹோலி-கோகநட்டின் அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி இதைக் கேட்டு "ஐயோ, கடவுளே, இப்படி ஆயிருச்சே,,எல்லாம் போச்சே" என்று கதறி அழுது அலப்பறை செய்தாள்....

பாதிரியார் அவளிடம் திரும்பி "ஏன் இப்படி அழுகிறாய்....மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு பன்னிரண்டு மணி நேரம் லேட்டாகப் போவோம், அவ்வளவு தானே" என்றார்......

%%%%%%%


ப்ரொபசர் பான்டா ஒரு நாள் பயணம் செய்து கொண்டிருந்தார்....

ஒரு கிராமத்தின் வழியாகப் போய்க்கொண்டிருந்த போது அந்தி சாய்ந்து விட்டிருந்தது...

அப்போது தான் அவருக்கு அந்த கிராமத்தில் தங்கள் தூரத்து சொந்தமான ஒரு குடும்பம் இருப்பது நினைவில் வந்தது... அங்கே சென்று இரவைக் கழிக்கலாம் என்று எண்ணி எப்படியோ வீட்டைக் கண்டுபிடித்து கதவைத் தட்டினார்..

.டீன் ஏஜ் பையன் ஒருவன் வந்து கதவைத் திறந்தான்....

"ஹே, உன் பெயர் டாமி தானே, சரி உங்க அப்பா எங்கே"

அவன் "அப்பா ட்ராக்டர்ல அடிபட்டு செத்துட்டாருங்க" என்றான்"

ஐயோ, பாவமே....அனுதாபங்கள்....சரி உங்க அம்மாவைக் கூப்பிடு" என்றார்"

அம்மா இல்லை...அவங்க ட்ராக்டர்ல அடிபட்டு செத்துட்டாங்க" என்றான்

"ஐயோ, அப்படியா....சரி உங்க மாமா ஒருத்தர் இருந்தாரே..."

அதற்கு அவன் "அவரும் ட்ராக்டர்ல அடிபட்டு செத்துட்டாரு "

அவர் அதற்கு "இது மிகப் பெரிய இழப்பு தாம்ப்பா உனக்கு...சரி நீ இந்த கிராமத்துல தனியா இருந்துட்டு என்னப்பா செய்யற" என்று கேட்டார்....

"அதுங்களா.... ட்ராக்டர் ஓட்டிட்டு இருக்கேன்" என்றான் ...

~சமுத்ரா

No comments: