இந்த வலையில் தேடவும்

Tuesday, October 19, 2010

நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-10டாம் தன் மானேஜரிடம் சென்று "சார் நாளைக்கு மத்தியானம் லீவு வேணும் ...பாட்டி இறந்துட்டாங்க..." என்றான்

"டாம் இதையே தான் மூணு மாசத்துக்கு முன்னாடியும் சொன்னாய்! லீவெல்லாம் கொடுக்க முடியாது" என்றார் மானேஜர்..."ஆனால் சார் எங்க தாத்தா அதுக்கப்பறம் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டார்"

%%%%

சின்னப் பெண் ஒருத்தி ஒரு நாள் ஒரு பசுவை இழுத்துக் கொண்டு சென்றுகொண்டு இருந்தாள்...

அதைப் பார்த்த ஒரு பெண்மணி "என்னம்மா இவ்ளோ கஷ்டப்பட்டு இந்தப்பசுவை இழுத்துக்கிட்டு போறியே, என்ன சமாசாரம்?" என்றாள்..

"இது எங்க அப்பாவோட பசுங்க ...இதை அடுத்த தெருவில் உள்ள காளை மாட்டுக்கிட்ட கூட்டிப் போகிறேன்.... "

"என்னம்மா அநியாயம் இதை உங்க அப்பாவே செய்யக்கூடாதா? " என்றாள் அந்தப் பெண்மணி..

"இல்லைங்க ....காள மாடு தான் செய்யணும்"

~சமுத்ரா