இந்த வலையில் தேடவும்

Tuesday, June 7, 2011

ஊழல் ஜுஜுபி(கவிதைகள்)

மழை மோசம்
=============

இந்த மழை ரொம்ப மோசம்
இறங்கி நடக்கும் போது பலமாகவும்
ஒதுங்கி நிற்கும் போது
சன்னமாகவும் பெய்கிறது!

அவர்கள் போகட்டும்
=====================

அவர்கள் நிற்கமாட்டார்கள்
தங்கள் வாகனங்களை வேகம் குறைக்கவும் மாட்டார்கள்
சிவப்பு வண்ணக் காரைத் தொடர்ந்து
சாம்பல் வண்ணக் கார்
பின் வெள்ளை
வெளிர் நீலம் பின்
வெள்ளை ஜீப்புகள்
பேருந்துகள் பைக்குகள் என்று வந்து கொண்டே இருக்கும்!
அவர்கள் நிற்கமாட்டார்கள்
தங்கள் வாகனங்களை வேகம் குறைக்க
வும் மாட்டார்கள்
வெட்டிப்பயல்களான
நாம்
சாலை கொஞ்சம் காலியாகக் காத்திருப்போம்!
அவர்களுக்கு
அழியும் உலகத்தைக் காப்பது
இறந்து கொண்டிருக்கும் உயிர் ஒன்றை காப்பாற்றுவது
ஐன்ஸ்டீன் தியரியை பொய் என்று நிரூபிப்பது
போன்ற அதி முக்கிய அலுவல்கள் இருக்கலாம்
வெட்டிப்பயல்களான
நாம்
சாலை கொஞ்சம் காலியாகக் காத்திருப்போம்!

Little girls are wiser than men
=========================

இது என்ன என்று
என் மகள் கேட்டாள்
"லி
ப்ட்' என்றேன் பெரிமிதமாக
கீழே இறங்கும் போதும்
"லிப்ட்' தானா என்றாள்
என்னிடம் பதில் ஏதும் இருக்கவில்லை..

'கொள்' எனக் கொடுத்தல்
========================

பெறுவதற்கு மட்டும் அல்ல
கொடுப்பதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் போலும்
சில்லறைகளை துழாவி எடுப்பதற்குள்
சாலையைக் கடக்கக் தொடங்கி விடுகிறாள்
குழந்தையுடன் கையேந்திக் கொண்டிருந்த பெண்

தேவை
=======

தாத்தாவுக்கு பெரிதாகத் தேவை எதுவும்
இருக்கவில்லை
காலையில் சுக்கு காபி, கோயில் பூஜை முடிந்து வந்ததும் மிளகு ரசம்
இரவில் பால்
வருடம் ஒருமுறை திருப்பதி!
அப்பாவுக்கும் தான்
காலையில் செய்தித்தாள்
மதியம் பள்ளிக்கு உணவு கொண்டு போக வேண்டும்
மாலையில் வீடு திரும்பும் போது சூடாக பில்டர் காபி
சுஜாதா நாவல்கள்
குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு சில சமயம் டூர்
போஸ்ட் ஆபீசில் எங்கள் பெயரில் கணக்குகள்
அவ்வளவு தான்
நான் தான்
ஏனென்றே தெரியாமல் கார் ஒன்றையும்
முப்பது லட்சம் கொடுத்து வீடு ஒன்றையும்
வாங்கி விட்டு
முழு மாத சம்பளத்தையும் அவைகளுக்காய் அழுகிறேன்!

ஊழல் ஜுஜுபி
==============

ஊழல் ஊழல் என்று வேதனைப்பட்டு
தனிப்படை,வாரியம் எல்லாம் அமைத்து
கஷ்டப்படாதீர்கள்
ஒரு மேடை
கூட உட்கார்வதற்கு பத்து பேர்
நிறைய மீடியா
அப்புறம் கொஞ்சம் உண்ணாவிரதம்
இவையெல்லாம் இருந்தால்
ஊழல்
இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடப் போகிறது!

சுப்ரபாதம்
===========

ஞாயிற்றுக் கிழமைகளில்
சுப்ரபாதங்களைத் தடை செய்யுங்கள்
அதிகாலையில் எழுவது நல்லது தான்..ஆனால்
வாரம் முழுவதும்
உங்கள் வாடிய முகங்களைப் பார்த்து சலித்த கடவுள்
அந்த ஒரு நாளாவது
காலை பத்து மணிவரை
இழுத்துப் போர்த்தியவாறு படுக்கையில்
படுத்திருக்கும்
சுகத்தை அனுபவிக்கட்டும்!

முத்ரா


15 comments:

ஷர்புதீன் said...

//இந்த மழை ரொம்ப மோசம்
இறங்கி நடக்கும் போது பலமாகவும்
ஒதுங்கி நிற்கும் போது
சன்னமாகவும் பெய்கிறது//


this is wonderful TWEET

"உழவன்" "Uzhavan" said...

ellame super..

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

எதைச் சொல்வது எதை விடுவது என்று தெரியாத குழப்பம் இப்போது.

இருந்தாலும் லிஃப்ட்ம், துளாவி எடுப்பதற்குள் கடக்கும் பெண்ணும் க்ளாஸ்.

ட்ராஃபிக் இன்னொரு முறை ரீரைட் பண்ணினால் ப்ரமாதமாக இருக்கும்.

இதே கோபத்தை ஒரு தடவை கவிதையாக முயற்சித்து சரியாய் வராமல் விட்டுவிட்டேன்.

சபாஷ் சமுத்ரா.

மாலதி said...

//ஊழல் ஊழல் என்று வேதனைப்பட்டு
தனிப்படை,வாரியம் எல்லாம் அமைத்து
கஷ்டப்படாதீர்கள்
ஒரு மேடை
கூட உட்கார்வதற்கு பத்து பேர்
நிறைய மீடியா
அப்புறம் கொஞ்சம் உண்ணாவிரதம்
இவையெல்லாம் இருந்தால்
ஊழல்
இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடப் போகிறது!//சபாஷ் சமுத்ரா.

சி.பி.செந்தில்குமார் said...

>>இது என்ன என்று
என் மகள் கேட்டாள்
"லிஃப்ட்' என்றேன் பெரிமிதமாக
கீழே இறங்கும் போதும்
"லிஃப்ட்' தானா என்றாள்
என்னிடம் பதில் ஏதும் இருக்கவில்லை..

டாப் கவிதை

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எந்த கவிதையும் தனித்துக்காட்ட விரும்ப வில்லை....

அத்தனையும் அருமையாகவும்..
கவிதை படித்துமுடிக்கும் போது சிறு புன்னகையையும் வரவைக்கிறது...

Ram said...

சிறப்பாக இருக்கிறது..

Sugumarje said...

பகிர்வுக்கு வாழ்த்துகள் :)

Mohamed Faaique said...

எதவது ஒன்றை சூப்பர்’னு போடுவோம்’னு யோசிச்சேன்.. முடியல... எல்லாமெ ஒன்ர்றை விட ஒன்று நல்லா இருக்கு....

G.M Balasubramaniam said...

ஊழல்” “கொள்” “லிஃப்ட்” மூன்றும் மிகவும் ரசித்தேன். உங்கள் Lateral thiking---I appreciate.

Anonymous said...

லிஃப்ட், தேவை, சில்லறை தேடும் கவிதை மூன்றும் ரொம்பவே பிடித்திருக்கிறது. பொதுவாகவே கவிதைன்னா கிலோ என்ன விலை என்று கேட்பேன். இந்த முறை ரசிக்கத் தோன்றுகிறது. நன்றி.

நெல்லி. மூர்த்தி said...

"தேவை" இன்றையக் காலக்கட்டத்திற்கு மிகவும் தேவையானக் கவிதை! ஒவ்வொருக் கவிதையும் தனித்துவத்துடன் மனதை அள்ளுகின்றது! - நெல்லி. மூர்த்தி

shunmuga said...

எல்லாக் கவிதைகளும் நன்றாக உள்ளன

அம்பாளடியாள் said...

அடடா அட்டகாசமான கவிதை வரிகள் .அது எப்படி ஞாயிற்றுக் கிழமைகளில் கடவுளே தூங்கச் சொன்னாரா?...
இத என்னோட பசங்க பாத்தாங்க துலைஞ்சுது என் கதை .இந்த ஆதாரம் ஒன்று போதாதா?....நான் உங்களுடன் ஒரு அம்மாவா டூ.............நன்றி சகோ அழகிய கவிதைப் பகிர்வுக்கு..
வாழ்த்துக்கள் மென்மேலும் வளம்பெற..............

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் அருமை.