இந்த வலையில் தேடவும்

Wednesday, June 29, 2011

கலைடாஸ்கோப்-26 a

இந்த ப்ளாக்கின் முதல் பிறந்த நாளின் போது 200 பதிவுகளை எழுதி முடித்திருக்க வேண்டும்
என்று ஆசைப்படுவதால் மூன்று மினி கலைடாஸ்கோப்-கள் வெளியாகும்

மினி லைடாஸ்கோப்-26a உங்களை வரவேற்கிறது.

1
==
நறுமுகையே நறுமுகையே என்ற பாடலை சமீபத்தில் கேட்க நேர்ந்தது.ரஹ்மான் மற்றும் வைரமுத்து இருவரும் இந்த விஷயத்தில் நன்றாக திருடியிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறேன்..வெயிட்..அடிக்க வந்து விடாதீர்கள். ரஹ்மான் நளினகாந்தியையும் வைரமுத்து புறநானூறையும் திருடி நம் காதுகளுக்கு விருந்து அளித்திருக்கிறார்கள்.சினிமா பாடல்களை இந்த விஷயத்தில் மிகவும் பாராட்ட வேண்டும். குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும், மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால், அற்றைத் திங்கள் அந்நிலவில், போன்ற இலக்கிய வரிகள் சினிமா இல்லையென்றால் நம் நாக்கில் நுழைந்திருக்குமா தெரியாது.

நாக்க முக்க போன்ற இக்கால இலக்கியங்களை ரசிப்பவர்கள் இப்போதெல்லாம் 'நாராய் நாராய் ,பவளக்கூர்வாய் செங்கால் நாராய்' என்றோ சேயிழை பெறுகுவை, வாள் நுதல் விறலி!என்றோ பாட்டு வந்தால் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.


அற்றைத்திங்கள் அந்நிலவில் என்றவுடன் நான் எப்பவோ எழுதிய இது நினைவில் வருகிறது.

2
==
சமீபத்தில் ஒரு இன்டர்வியூ விற்காக பெங்களூருவின் SAINT JOHNS பாய்ஸ் ஹைஸ்கூல் சென்றிருந்தேன். என்ன அழகான ஸ்கூல்? பழமையான கட்டிடங்கள், பெரிய விளையாட்டு மைதானம், லேபுகள், பையன்கள் பெஞ்சுக்கு அடியில் ஒளித்து வைத்திருக்கும் பொக்கிஷங்கள் (?) என்று இவையெல்லாம் என் பள்ளி வாழ்க்கையை பற்றிய நினைவுகளை மீண்டும் கிளறி விட்டுவிட்டன. கழுதை வயசு ஆன பின்பும் (ஆமாம் கழுதை வயசு என்றால் எவ்வளவு? முப்பதா?) இன்னும் ஸ்கூல் பெஞ்சில் உட்காரவும் வாத்தியார்களைக் கிண்டல் செய்யவும், நேர் நேர் நேர்
கோமாங்காய் சாரி தேமாங்காய் நிரை நேர் நேர் புளிமாங்காய் என்று படிக்கும் தமிழ் வகுப்புக்கும்,மனசு ஏங்குகிறது. I don't mind aging but I will miss schooling என்று உலக அறிர் ஒருவர் சொன்னது நினைவில் வருகிறது.யார் அந்த உலக அறிர் என்று அதிகப்பிரசங்கித் தனமாகக் கேட்கக்கூடாது ஆமாம்.

ஒரு ஓஷோ ஜோக்
==================

பாதிரியார் ஒருவர் ஒரு ஆளைப் பார்த்து 'உங்க அப்பா எப்படி இருக்கார்' என்று கேட்டார்.

"அதை ஏன் கேட்கறீங்க ரொம்பவே மோசமாத்தான் இருக்கார்" ...'கஷ்டமா இருக்கு' என்றான்

பாதிரியார் "நோய் என்பது மனத்தில் தான் ,,,நான் உனக்கு கிறித்துவ அறிவியலின் படி ஒரு யோசனை சொல்கிறேன்..தனக்கு நோய் இருப்பதாக அவர் நம்புகிறார் அவ்வளவு தான்..அவரிடம் போய் 'எனக்கு எதுவும் இல்லை..நான் நன்றாக ,ஆரோக்யமாக இருக்கிறேன்" என்று திடமாக நம்பும் படி சொல். நம்புதல் தான் இங்கே முக்கியம் என்று சொன்னார்..

ஒரு வாரம் கழித்து பாதிரியார் அந்த ஆளை மீண்டும் சந்தித்தார்..என்னப்பா என் யோசனை வேலை செய்கிறதா? என்றார்

அதற்கு அவன் "நன்றாகவே செய்கிறது..இப்போது அவர் தான் இறந்துவிட்டதாக நம்புகிறார்" என்றான்

முத்ரா

6 comments:

பத்மநாபன் said...

ஒரு இருநூறை சாதிச்சுட்டிங்க ( ஃபாலோயர்ஸ்) அடுத்த இருநூறுக்கும் வாழ்த்துகள்(பதிவுகள்)...
நிச்சயம் இது பெரியவேலைதாங்க...

அற்றைத்திங்களை அங்கு போய் படித்தேன் அருமை..

HVL said...

அப்ப தைரியமா சங்கப்பாடல்களை திருடலாம்ன்னு சொல்றீங்க!

HVL said...

நானும் இப்போதெல்லாம் பள்ளிக்காலங்களை நினைத்து ஏங்குகிறேன்.
வயது அதிகமாகி வருகிறதோ!

Uma said...

உங்க ப்ளாக் பத்தி போன வாரம் தான் கேள்வி பட்டேன்... உங்க மொத்த பதிவுகள்ள அல்மோஸ்ட் பாதிக்கு மேல படிச்சிட்டேன்.. ரொம்ப நல்ல சிந்தனை... எளிய நடை... அணு அண்டம் அறிவியல் வெகு அருமை...
இப்படிக்கு உங்க ரசிகை

கணேஷ் said...

அருமையான விசயம் 200 பதிவுகள் என்பது. அதுவும் அறிவியல் சம்பந்தபட்ட்டவை அதிகம். சந்தோசம்.

((தொடக்கத்தில் நாம வலைப்பூ சம்பந்தமாக பேசியது நினைவு வருது )

எப்போதும் சொல்வதுதான் தொடர்ந்து இன்னும் அதிகமாக எழுதுங்கள்.இன்னும் வித்தியாசமாக..

உங்களின் எழுத்தை விரும்பும் ஒரு ரசிகனாக கணேஷ்.))

hareaswar said...

arumai.. otrai varthayil taan naan comment poduven.. :) :)