இந்த வலையில் தேடவும்

Thursday, June 16, 2011

கலைடாஸ்கோப் -22

லைடாஸ்கோப் -22 உங்களை வரவேற்கிறது

என் படம்
==========

சமீபத்தில் ஒருவர் இந்த ப்ளாக் -இல் நான் பயன்படுத்தியிருந்த ஒரு குழந்தையின் படத்தைப் பார்த்து விட்டு 'இது என் படம்..தயவு செய்து இல்லீகலாக பயன்படுத்த வேண்டாம்' என்று கமெண்ட் போட்டிருந்தார். I agree ...காப்பி ரைட் படங்களை எப்படி பயன்படுத்துவது என்று சத்தியமாக எனக்குத் தெரியாது. ஆனால் 'என் படம்' என்று சிலர் சொல்வது
வேடிக்கையாக இருக்கிறது. ஒரு காட்சியை சும்மா நாம் நம் காமிராவில் 'கிளிக்' செய்து விட்டால் மட்டும் அது நம்முடையதாகி விடாது. காமிராவை நாம் கண்டுபிடிக்கவில்லை..குழந்தை நமக்கு சொந்தம் இல்லை ( அது நம் குழந்தையாகவே இருந்தாலும்) ..கம்ப்யூட்டரில் ஃபோட்டோ சாப்ட்வேர்களை நாம் உருவாக்கவில்லை.யு.எஸ்.பி கேபிளைக் கூட நாம் தயாரிக்கவில்லை. இப்படியிருக்கும் போது ஒரு ஃபோட்டோவை நாம் எப்படி உரிமை கொண்டாட முடியும் என்று தெரியவில்லை..

கேமிரா பைத்தியம் பிடித்த சில மனிதர்களை வாழ்வில் சந்தித்திருக்கிறேன்..அதைப்பற்றிய என் அறிவு கிட்டத்தட்ட பூஜ்ஜியம். யாராவது டூரில் காமிராவை கொடுத்து போட்டோ எடுக்கச் சொன்னால் தர்ம சங்கடம் தான் ..எந்த பட்டனை அழுத்த வேண்டும் என்று கூடத் தெரியாது. துப்பாக்கி போல் நீண்ட குழல்(அதன் பேர் என்ன?) கொண்ட சில கேமிராக்களை (கூடவே ஒரு பெரிய முக்காலி) நண்பர்கள் தூக்கி வருவதைப் பார்த்திருக்கிறேன்..உறவினர்கள் யாராவது வீட்டுக்கு சென்றால் நாங்கள் கேரளா டூர் போயிருந்தோம்..கம்ப்யூட்டரில் போட்டோ பார்க்கிறீர்களா என்று கேட்டால் ஏதேதோ காரணம் கூறி

அதைத் தள்ளிப் போட முயற்சிக்கிறேன்..ஒரே முகங்கள், வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு பின்புலங்களில் , வெவ்வேறு சேஷ்டைகள் செய்து கொண்டு ...It 's boring ! Technology has given us Cameras..but has taken away our eyes of Wonder...

Re -opening
===========

பல்வேறு குழப்பங்களுக்கு நடுவே இப்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. எனக்கு அலர்ஜி அளிக்கும் சொற்களின் லிஸ்டில் 'சமச்சீர் கல்வி' என்ற வார்த்தையும் இருப்பதால் அதைப்பற்றி சொல்லப்போவது இல்லை.

இந்த நேரத்தில் மீண்டும் பள்ளி வாழ்க்கையைப் பற்றி அசை போடத் தோன்றுகிறது. ஏப்ரல் தேர்வுகள் என்றாலே ஒரே திருவிழாதான் ...கஷ்டப்பட்டு படித்ததாக நினைவே இல்லை..எனக்குத் தெரிந்த வரை முதல் ரேங்கை விட்டு வேறு ரேங்க் வாங்கியதாக ஞாபகம் இல்லை..(இதை யார் கேட்டா இப்போ??? ஓகே ஓகே கூல் டவுன்! ஒரு flow-ல வந்திருச்சு ! ) கடைசி தேர்வு 'உடற்கல்வி' யாக பெரும்பாலும் இருக்கும். அதற்கு நிறைய பேர் வரவே மாட்டார்கள்..வந்தாலும் ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்து விட்டு ஏதோ ஒப்புக்கு ரெண்டு கேள்வி (கவனிக்கவும், பதில் அல்ல, கேள்வி!) எழுதி விட்டு ஓடி விடுவார்கள். (ஒன்பதாம் வகுப்பு வரை இருக்கும் இந்த உடற்கல்வி என்ற பேப்பர் ஒரு டம்மி பீஸ்..நம் மார்க்கில் சேராது..அதில் யோகாசனங்கள், வாலி பால் ஆடுகளத்தின் படம் வரைந்து பாகங்களைக் குறி , கபடி விளையாட்டில் எத்தனை பேர் போன்ற கேள்விகள் வரும்.தேர்வு நேரம் ஒரு மணி..அந்த பேப்பருக்கும் உட்கார்ந்து ஸ்கேல் எல்லாம் வைத்து சின்சியராக படம் வரைந்து எழுதிக் கொண்டிருந்தால் 'உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?' என்று கிண்டல் செய்வார்கள் நண்பர்கள்.

கடைசிப் பரிட்சையின் போது கிலியான ஒரு விஷயம் வெளியே மற்றவர்கள் இன்க் பேனாவை ரெடியாக வைத்துக் கொண்டு காத்திருப்பார்கள். அப்போதெல்லாம் நமக்கு ரெண்டு யூனிபார்ம் சட்டை இருந்தால் பெரிய விஷயம்..எங்கே சட்டை இன்க் ஆகி விடுமோ என்று பயந்து பயந்து அன்றைக்கு மட்டும் கொலம்பஸ் மாதிரி வீடு வந்து சேர புதிய புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்.. அன்று எப்படியோ தப்பித்து விட்டால் அப்புறம் ஒன்றரை மாதம் ஜாலி தான்..

புதிய புத்தகங்கள் வாங்கியதாக சரித்திரமே இல்லை...சீனியர்களிடம் இருந்து பாதி விலைக்கு தான் பாடபுத்தகங்கள் வாங்குவோம்.. ஸ்கூல் திறக்கும் போது இந்த தடவையும் அந்த சிடு மூஞ்சி காஞ்சனா டீச்சர் வந்து விடுவாரோ என்ற பயம், புதிய வகுப்பறை, கிளாஸ் டீச்சர் எழுதிப்போடும் புதிய டைம் டேபிளை சின்சியராக நோட்டில் எழுதிக் கொள்வது, புதிய நோட்டுகளின் நடுப்பக்கத்தில் வரும் ஒரு வாசம், அன்று சாயங்கலாம் அப்பாவுடன் கடைக்கு சென்று நோட்டுகள், இன்க் பாட்டில், பிரவுன் சீட், லேபிள்கள் வாங்கும் சந்தோஷம்..அது ஒரு கனாக்காலம்..!

இப்போதெல்லாம் உடற்கல்வி பரீட்சை, இன்க் பேனா , எந்த கவலையும் இல்லாத , ஸ்பெஷல் கிளாசுகள் இல்லாத கோடை விடுமுறைகள் இவையெல்லாம் இருக்கின்றனவா என்று தெரியவில்லை.

தீட்சிதர்
========

கலிப்ஸோ (ஜெயாநகர்) சென்றிருந்த போது வயதான பெண்மணி ஒருவர் தீட்சிதரின் கமலாம்பா நவாவர்ண கிருதிகள் CD பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். 'போன வாரமே சொன்னனே' இன்னும் வரலியா? எனக்கு ஒரு காப்பி எடுத்து வைக்கச் சொன்னேனே? ஏன் வைக்கவில்லை என்றெல்லாம் கடையில் இருப்பவர்களை திட்டிக் கொண்டிருந்தார். நான் ஓ.எஸ். தியாகராஜன் பாடிய 'த்யாகராஜ வைபவம்' என்ற DVD யை எடுத்துக் கொண்டு பில் போடும் போது அதைப் பார்த்து விட்டார். 'த்யாகராஜர் பாட்டெல்லாம் கேப்பீங்களா?' என்று ஒரு கேள்வி கேட்டார்.. 'ஆமாம்' என்று ஒரே வார்த்தை தான் நான் சொன்னேன்..பிறகு எல்லாவற்றையும் அவரே பேசி தீர்த்து விட்டார்.."த்யாகராஜர் சரி தான்..ஆனால் நம்ம முத்துஸ்வாமி தீட்சிதர் போல வருமா? என்ன ஒரு ஜீனியஸ் அவர்! நவாவர்ண க்ருதிகளைக் கேட்கணுமே? அப்பா! என்ன ஒரு மொழி ஞானம்,என்ன ஒரு இசை ஞானம்..ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே ஒண்ணு போதுமே? காஞ்சிப் பெரியவா எழுதிய 'தெய்வத்தின் குரல்ல' அதைப் பத்தி எழுதி இருக்காரே, அரியக்குடியைப் பாடச் சொல்லி ஒவ்வொரு வரியா அபாரமா அர்த்தம் சொல்லியிருக்கார் .. என்றெல்லாம் பேசிக் கொண்டே போனார்..


தீட்சிதரின் கிருதிகள் மீது அந்த பெண்மணிக்கு இருந்த பற்று என்னை வியக்க வைத்தது..தீட்சிதரின் கிருதிகளுக்கு உயிரையே கொடுக்கும் கூட்டம் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறது.இப்போது விஷயம் அதைப்பற்றி இல்லை..பெங்களூரு ஜெயநகர் சதா விழாக்கோலம் பூண்டிருக்கிறது..கலிப்சொவுக்கு மிக அருகில் ஒரு மசாலா தோசை கடை இருக்கிறது. பாதி ரோட்டை அடைத்துக் கொண்டு ஜனங்கள் மசாலா தோசையை ருசித்துக் கொண்டிருப்பார்கள்..அங்கே உட்கார்ந்து, கைக்குழந்தையை வைத்துக் கொண்டு ஊசி பாசி விற்றுக் கொண்டிருக்கும் ஒரு ஒல்லிப் பெண்ணிடம் போய் 'ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே கிருதில' என்று ஆரம்பித்தால் எப்படியிருக்கும்? 'என்ன சொல்றீங்கன்னு புரியலையே சாமி! பாசி வேணுமா? பத்து ரூபா தான் வாங்கிக்கோங்க' என்று தான் சொல்வாள்..

மாஸ்லோவின் தேவைகளின் படிநிலையில் (Maslow's hierarchy of needs ) இசை என்பது உடல் மற்றும் மனத்தைத் தாண்டி மூன்றாவதாக இதயத்தின் தேவையாக வருகிறது . உடலில் வலியோ பசியோ இருக்கும் போதோ மனதில் குழப்பங்கள் இருக்கும் போதோ எத்தனை உயர்ந்த இசை கூட நமக்கு தொந்தரவாக தான் இருக்கும்..உடலும் மனமும் பூரண ஓய்வில் இருந்தால் தான் இசை இனிக்கும்..கர்நாடக இசை மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே இதுவரைக்கும் சொந்தமாக இருப்பதற்கு சைக்காலஜியும் ஒரு காரணம்..


HBD
======
என்ன தான் இருந்தாலும் ஒரு குழந்தைக்கு அதன் முதல் பிறந்த நாள் விசேஷம் தானே? இப்போதெல்லாம் தினமும் எப்பாடு பட்டாவது ஒரு போஸ்ட் எழுதிவிடுவதற்கு காரணம் இந்த ப்ளாக்கின் முதல்
பிறந்த நாளான ஜூன் 30 , 2011 அன்று 200 பதிவுகள் எழுதி முடித்து விட வேண்டும் என்ற கொள்கை தான் ..(200 Followers கிடைப்பார்களா தெரியவில்லை) சும்மா ஒரு நோட்டில் கவிதைகளைக் கிறுக்கிக் கொண்டிருந்த என்னை ஆபீஸ் நண்பர் ஒருவர் இந்த ப்ளாக் எல்லாம் ஃப்ரீ தானே? ஒண்ணு ஆரம்பிச்சு அதில் எழுதினால் நாலு பேர் (?) படிப்பார்களே என்று என்னை உள்ளே இழுத்து விட்டார்..அப்படி எழுதத் தொடங்கி இது வரை வந்தாகி விட்டது..எப்படிப் போகுமோ பார்க்கலாம்..என் கவிதைகளால் உங்களைக் 'கடித்திருந்தால்' மன்னிக்கவும்..!

வருணனின் ஒரு கவிதை
========================

குழந்தைகள் பற்றிய
எந்த கவிதையையும்
நினைக்கையிலும் வாசிக்கையிலும்
வரிகளினூடே திரிகின்றனர்
எண்ணற்ற குழந்தைகள்.
நமது குழந்தையோ
நண்பரின் குழந்தையோ
எதிர் வீட்டுச் சிறுமியோ
பயணத்தில் அருகமர்ந்த சிறுவனோ…
நினைவுகளில் புதையுண்டு
கனவுகளில் பிறப்பெடுக்கும்
தொலைந்த நம் பால்யமோ…
அலங்காரங்கள் அவசியப்படாத
எந்த குழந்தையைப் பற்றிய
கவிதையையும் சுகிக்கையிலும்
எழுதுகிற நானும்
வாசிக்கிற நாமும்
மீண்டும் மழலைகளாகிறோம்
கணமேனும்.

ஓஷோ ஜோக்
==============

முல்லா ஒரு நாள் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது வழியில் எதோ ஒன்று கிடப்பதைக் காண்கிறார், அவர் அதனருகில் குனிந்து பார்த்தார். அவருக்கு அது என்ன வென்று தெரியவில்லை , பிறகு அதை கையில் எடுத்து வைத்து கொண்டு ஆராய்ந்தார். அப்போதும் அவருக்கு விளங்கவில்லை, அதை தனது மூக்கின் அருகில் எடுத்துச் செனறு முகர்ந்து பார்த்தார் , அவருடைய சந்தேகம் சிறிது தெளிவுபெற்றது. அனாலும் அவரால் அதை உறுதியாக்கிக் கொள்ள முடியவில்லை , பிறகு அதிலிருந்து சிறிது பகுதியை எடுத்து தனது வாயில் போட்டு கொண்டார். அவருடைய முகம் ஒரு தெளிவு பெற்றதைப் போல் பிரகாசித்தது. பிறகு சொன்னார் " ஆஹா , நான் சந்தேகப்பட்டது சரிதான், இது சந்தேகமே இல்லாமல் மாட்டுச்சாணம் தான் , நல்லவேளை இது தெரியாமலிருந்தால் இதை காலில் மிதித்திருப்பேன் " என்று தன்னைத்தானே பாராட்டிக் கொண்டார்.

உங்களுக்காக இன்னொரு ஜோக்..சிரியுங்கள்..நடனமாடுங்கள்..வாழ்க்கையை கொண்டாடுங்கள்!

பேடி நன்றாக குடித்து விட்டு ஒரு ரயில்வே ட்ராக் வழியே வீடு திரும்பிக் கொண்டிருந்தான். ட்ராக்கில் ஏதோ இடறியது ..குனிந்து பார்த்தால் ஒரு துண்டிக்கப்பட்ட மனிதக் கால் அது. பேடி கண்ணைக் கசக்கிக் கொண்டு முன்னே நடந்தான்..கொஞ்ச தூரத்தில் இன்னொரு கால் இடறியது. இன்னும் கொஞ்ச தூரத்தில் ஒரு மனிதக் கை..இப்போது அவனுக்கு நிஜமாகவே ஆர்வம் வந்து கொஞ்சம் முன்னே நடந்து பார்த்தான் ..கொஞ்ச தூரத்தில் ஒரு தலையில்லாத முண்டம் கிடந்தது.அது அணிந்திருந்த கோட்டை பார்த்து விட்டு பேடிக்கு அதிர்ச்சி..அது அவன் நண்பன் ஜோ அணிந்திருந்த கோட்..கொஞ்சம் தூரம் முன்னே சென்றதும் அவன் தலை தனியாகக் கிடந்தது..அதன் அருகே அவன் காது துண்டிக்கப்பட்டு தனியாகக் கிடந்தது. பேடி அதனிடம் அவசரமாகக் குனிந்து "ஜோ, ஜோ, உனக்கு ஒண்ணும் ஆகலையே , ஆர் யு ஆல்ரைட் ? " என்றான்..

முத்ரா

15 comments:

Katz said...

எங்கே இந்த வார கலைடாஸ்கோப் என்று கமெண்ட்டலாம் என்றிருந்தேன். நீங்களாகவே போட்டு விட்டீர்கள். கலைடாஸ்கோப் அருமை.

Mohamed Faaique said...

எல்லாமே சூப்பர் நன்பா... கடைசி இரண்டும் கலக்கலோ கலக்கல்

G.M Balasubramaniam said...

காமெண்ட் எழுதுவதில் ஒரு தெளிவு வேண்டி பின்னூட்டமிடுவதை சற்று தள்ளிப் போடுகிறேன். ஆனால் காலிடாஸ்கொப் படிக்க சுவை என்று கூறாமல் இருக்க முடிய வில்லை. வாழ்த்துக்கள்.

Abarajithan said...

//It 's boring ! Technology has given us Cameras..but has taken away our eyes of Wonder...//

//உடலும் மனமும் பூரண ஓய்வில் இருந்தால் தான் இசை இனிக்கும்..//

100% True

//முதல் ரேங்கை விட்டு வேறு ரேங்க் வாங்கியதாக ஞாபகம் இல்லை..//


Congrats..

//200 Followers கிடைப்பார்களா தெரியவில்லை//

Wishes..

ஷர்புதீன் said...

:-)

WISHES FOR 200 FOLLOWERS!!

ரிஷபன் said...

எல்லாமே சுவாரசியம்

bandhu said...

//குழந்தை நமக்கு சொந்தம் இல்லை ( அது நம் குழந்தையாகவே இருந்தாலும்)//
சொந்தம்.. உரிமை.. என்று குழம்புவதை விட்டு, அந்த புகைப்படம் வெளியானால் யாருக்கு பெரிய பாதிப்பு வரும் (எந்த விதத்திலாவது) என்று பார்த்தல் அதில் முகம் காட்டுபவருக்கு தான். அதனால், நீங்கள் அவர் புகைப்படத்தை உபயோகித்ததை எதிர்த்தது சரியே!

குமரன் (Kumaran) said...

Advance Congrats for 200th posting within a year. Have been reading your posts for past few months. Posts are impressive, engaging, versatile and clear. Congrats again.

பத்மநாபன் said...

கேமிரா அறிவிலும் முதல் மதிப்பெண்னிலும் சேம் ப்ளட்..

விரைவில் 200 பதிவும் தொடர்வோரும் அமைய வாழ்த்துகள்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

முல்லா கதை அருமை

"என் ராஜபாட்டை"- ராஜா said...

///
குழந்தைகள் பற்றிய
எந்த கவிதையையும்
நினைக்கையிலும் வாசிக்கையிலும்
வரிகளினூடே திரிகின்றனர்
எண்ணற்ற குழந்தைகள்.
//
அர்மையான வரிகள்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

இந்தியர்களை மீட்க, பாகிஸ்தானில் இருந்து ஆள் வரணுமா?என்ன கொடும இது ?

hareaswar said...

த்யாகராஜர் சரி தான்..ஆனால் நம்ம முத்துஸ்வாமி தீட்சிதர் போல வருமா? என்ன ஒரு ஜீனியஸ் அவர்! நவாவர்ண க்ருதிகளைக் கேட்கணுமே? அப்பா! என்ன ஒரு மொழி ஞானம்,என்ன ஒரு இசை ஞானம்..ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே ஒண்ணு போதுமே? காஞ்சிப் பெரியவா எழுதிய 'தெய்வத்தின் குரல்ல' அதைப் பத்தி எழுதி இருக்காரே, அரியக்குடியைப் பாடச் சொல்லி ஒவ்வொரு வரியா அபாரமா அர்த்தம் சொல்லியிருக்கார் ..
===================
completely agreeing with her.. deekshidhar aparam.. navavarnathula gaantha, aahiri, bhairavi,sahana krithis gem of deekshidhar...

aprom copyright pathi oru vishayam.. ivlo pesina yarum copyright vaanga mudiyathu madhu.. pesama buththar matri ellam maayai nu sollungo.. ethu nammalodathu.. hmm..

//////////////It 's boring ! Technology has given us Cameras..but has taken away our eyes of Wonder...///////////
perfectly valid point..

hareaswar said...

Aprom thiruvalluvar solrar.. sevikku unavillatha pozhutu sirithu vayitrukkum eeyappadum... neenga ultava solreengalae..

pasi, patini, thunbam, thukkam, kavalai elatayum kadantha oru paramanantha nilai isaiyala koduka mudiyum.. mudinja madhurambikayam, mamava meenakshi pondra deekshidhar krithikal kettu paarungo.. but one thing is isai pasiya marakkadikarthuku, neenga isaiyai kaathu kodutu kekanum.. thadhaa riii endra vudan "evanda avan nu kathai moodikita yaru porupaava???"

MUTHARASU said...

ஜோக் அருமை....

அணு அண்டம் அறிவியல்... தொடரட்டும் உங்கள் சேவை.