அணு அண்டம் அறிவியல்- 35 உங்களை வரவேற்கிறது.
இந்தத் தொடரில் நிறைய பேர் நிறைய கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள். Please give me some time..எல்லாவற்றிற்கும் மறுமொழி மூலமாகவோ இல்லை தொடரின் மூலமாகவோ பதில் சொல்ல முயற்சிக்கிறேன்..எனக்கு எல்லாம் விரல் நுனியில் இருப்பதாக தயவு செய்து நினைத்து விடாதீர்கள். ஒரு அத்தியாயம் எழுதுவதற்கு சுமார் பத்து மூலங்களை REFER செய்து அவை சொல்வது சரிதானா என்று சரிபார்க்கவும் வேண்டியிருக்கிறது.இயக்கத்தில் உள்ள பொருளுக்கு எவ்வாறு காலம் மெதுவாகச் செல்லும் என்று ஒரு உதாரணம் மூலம் பார்த்தோம். இப்போது வெளி எவ்வாறு சுருங்கும் என்று ஒரு உதாரணம் பார்க்கலாம். மறுபடியும் ஒரு ரயில்!
ஒரு பாலத்தின் இரு முனைகளில் A மற்றும் B என்று இரண்டு விளக்குகள் உள்ளன. இந்த பாலத்தின் வழியே ஒரு ரயில் செல்வதாக வைத்துக் கொள்வோம். ரயிலின் முன்பக்க முனை கம்பம் B யை அடைந்தவுடன் மின்சார சுற்று பூர்த்தியாகி B விளக்கு ஒளிரும். அதே மாதிரி ரயிலின் பின்பக்க முனை கம்பம் A யை அடைந்த உடனே மின்சுற்று பூர்த்தியாகி A விளக்கு ஒளிரும். இந்த நிகழ்வை பிளாட்பாரத்தில் பாலத்தின் மையத்தில் நின்று கொண்டு இருக்கும் ஒருவர் கவனிப்பதாகக் கொள்வோம்.
(1 ) ரயிலின் நீளமும் பாலத்தின் நீளமும் சமமாக இருந்தால் கவனிப்பவருக்கு இரண்டு விளக்குகளும் ஒரே நேரத்தில் ஒளிரும்.
(2 ) ரயிலின் நீளம் பாலத்தின் நீளத்தை விட குறைவாக இருந்தால் ரயிலின் பின்பக்க முனை பட்டு விளக்கு A முதலில் எரிந்து விடும்.
(3 ) ரயிலின் நீளம் பாலத்தின் நீளத்தை விட அதிகமாக இருந்தால் ரயிலின் முன்பக்க முனை பட்டு விளக்கு B முதலில் எரியும்.
புரிந்ததா? NO DOUBT ? ஓகே.....
இப்போது ரயிலின் நீளமும் பாலத்தின் நீளமும் சமமாக இருப்பதாகவும் விளக்குகள் எரிவதை ரயிலின் உள்ளே உள்ள ஒரு ஆள் கவனிப்பதாகவும் கருதுவோம். ரயிலின் முன்பக்க முனை கம்பத்தில் பட்டு B விளக்கு எரிந்து அந்த ஒளி அவரை நோக்கி வருகிறது.ஆனால் ரயில் அந்த ஒளிக்கு எதிர்திசையில் நகர்ந்து கொண்டிருப்பதால் அந்த ஆள் கொஞ்சம் நகர்ந்து சீக்கிரமாகவே அந்த ஒளியைப் பார்த்து விடுவார்.ரயிலின் பின் பக்க முனை பட்டு எரிந்த விளக்கு A யின் ஒளியானது கவனிப்பவரை அடைவதற்குள் அவர் ரயிலின் வேகத்தால் அவர் முன்னே நகர்ந்து விடுகிறார். எனவே ரயிலின் உள்ளே இருப்பவருக்கு விளக்கு B யின் ஒளி முதலிலும் விளக்கு A வின் ஒளி சற்றே தாமதமாகவும் வந்து சேரும். சரி இப்போது ரயிலின் உள்ளே இருப்பவருக்கு இயற்பியல் விதிகள் அவர் நகர்ந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்வதற்கு அனுமதிக்காது. வெளியே உள்ள எந்த ஒரு பொருளின் துணையும் இல்லாவிட்டால் அவர் தான் நிலையாக இருப்பதாகவே எண்ணுவார். இப்போது அவருக்கு விளக்கு B யின் ஒளி முதலில் வந்து விடுவதால் கேஸ் (2 ) இன் படி அவர் ரயிலின் நீளம் பாலத்தின் நீளத்தை விட அதிகம் என்று எண்ணுவார்!!அதாவது இயக்கத்தில் இருப்பவர் ரயிலின் நீளத்தை அதிகமாக அளவிடுவார். ஆனால் வெளியே இருப்பவர் அதே ரயிலின் நீளத்தை குறைத்து அளவிடுவார்.
அதாவது நிலையாக இருக்கும் ஒருவருக்கு அவரைப் பொறுத்து இயக்கத்தில் உள்ள ஒரு பொருளின் நீளம் குறைந்திருப்பதாகத் தோன்றும்.
வெளியே இருக்கும் ஒருவரும் (சீரான வேகத்தில்) பயணித்துக் கொண்டிருக்கும் ஒருவரும் தங்கள் கடிகார நேரங்களுடனும் தங்கள் வெளி அளவீடுகளுடனும் ஒருபோதும் ஒத்துப் போகமாட்டார்கள். ஆனால் இருவரும் ஒளியின் வேகத்தோடு மட்டும் ஒத்துப் போவார்கள்.
திடீரென்று நம்மை சுற்றி உள்ள எல்லாம் (நாம் உட்பட) இரண்டு மடங்கு பெரிதாகி விட்டால் அது நமக்குத் தெரிய வருமா? அதை நம்மால் உணர முடியாது. இரண்டு மடங்கு சூரியன், இரண்டு மடங்கு பெரிய பூமி, நாற்காலி, மரம், நாய், பூனை எல்லாமே இரண்டு மடங்கு!நம்மால் அறிய முடியாது. யாராவது ஒரு ஆள் மட்டும் விதிவிலக்காக அப்படியே நின்று விட்டால் அப்போது தான் அவருக்கு ஏதோ நடந்திருக்கிறது என்று தெரிய வரும். அதே மாதிரி காலமும் வெளியும் ஏதோ தில்லுமுல்லு செய்திருக்கின்றன என்பது நாம் நம்மை வேறு ஒரு F.O.R இல் உள்ள இன்னொரு ஆளுடன் ஒப்பிடும் போது தான் தெரிய வரும்.
சரி ரிலேடிவிடிக்கும் த்வைத சித்தாந்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்று சொல்வதாக சொல்லியிருந்தேன்..அதை பார்த்து விட்டு
மேலே போகலாம்.
திடீரென்று நம்மை சுற்றி உள்ள எல்லாம் (நாம் உட்பட) இரண்டு மடங்கு பெரிதாகி விட்டால் அது நமக்குத் தெரிய வருமா? அதை நம்மால் உணர முடியாது. இரண்டு மடங்கு சூரியன், இரண்டு மடங்கு பெரிய பூமி, நாற்காலி, மரம், நாய், பூனை எல்லாமே இரண்டு மடங்கு!நம்மால் அறிய முடியாது. யாராவது ஒரு ஆள் மட்டும் விதிவிலக்காக அப்படியே நின்று விட்டால் அப்போது தான் அவருக்கு ஏதோ நடந்திருக்கிறது என்று தெரிய வரும். அதே மாதிரி காலமும் வெளியும் ஏதோ தில்லுமுல்லு செய்திருக்கின்றன என்பது நாம் நம்மை வேறு ஒரு F.O.R இல் உள்ள இன்னொரு ஆளுடன் ஒப்பிடும் போது தான் தெரிய வரும்.
சரி ரிலேடிவிடிக்கும் த்வைத சித்தாந்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்று சொல்வதாக சொல்லியிருந்தேன்..அதை பார்த்து விட்டு
மேலே போகலாம்.
த்வைதம் ஹரி, அதாவது நாராயணனை ULTIMATE பரமாத்மா ,சர்வோத்தமன் என்கிறது. HIERARCHY எனப்படும் படிநிலைகள் அதில் உள்ளன. இந்த படிநிலைகளில் மனிதர்கள், தேவர்கள், பிரம்மா, லக்ஷ்மி என்று எல்லாரும் அடக்கம். இந்த படிநிலையில் கடைசியாக இறைவன் நாராயணன் வருகிறார். என்ன தான் படாத பாடு பட்டாலும் ஹரியின் இடத்தை யாராலும் அடைய முடியாது என்கிறது த்வைதம்.அதாவது ஜீவாத்மா ஒன்று பக்தியால் தன்னை உயர்த்திக் கொண்டு மேம்பட்ட படிநிலைகளை அடையலாமே தவிர ஒருபோதும் ஜீவன் பரமாத்மாவாக ஆக முடியாது. ரிலேடிவிட்டி ஒளிவேகத்தை ULTIMATE ஆக நிர்ணயிக்கிறது. என்னதான் கிட்டக் கிட்ட வரலாமே தவிர ஒளியின் வேகத்தை ஒரு பொருள் எட்டவே முடியாது என்கிறது. நாராயணன் மட்டுமே பரமாத்மா ஸ்தானத்தை வகிக்க முடியும். அதே மாதிரி ஒளி மட்டுமே ஒளிவேகத்தில் செல்ல முடியும்!
ஹரியைத் தவிர எல்லாரும் (லக்ஷ்மி உட்பட) காலத்தால் கட்டுப்பட்டிருக்கிறார்கள். ஹரி ஒருவன் மட்டுமே காலாதீதன்,காலத்தின் பிடியில் சிக்காதவன். சரி,நிலையாக இருந்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் பிடித்து முன்னேறும் ஒரு பொருளை பக்தியில் முன்னேறும் ஒரு சாதகனுக்கு உவமையாகக் கருதலாம். பக்தியில் நெகிழ்ந்து ஹரி அவனுக்கு குபேர பதவியைத் தரலாம்.குபேரனுக்கு அடுத்தபடியாக கணபதியின் இடம் வருகிறது. அடுத்த படிநிலையை பஞ்சபூதங்கள் எடுத்துக் கொள்கின்றன. அடுத்த படிநிலை சூரிய சந்திரர்களுக்கு.அதற்கு அடுத்த இடம் இந்திரனுக்கானது.அடுத்து கருடன்,ஆதிசேஷன், சிவன் ஆகியோர் வருகிறார்கள்.அடுத்த நிலையில் சரஸ்வதி தேவி. அவளுக்கு அடுத்து பிரம்மா. பின்னர் பிரம்மாவை விட உயர்ந்த இடத்தில் வாயுதேவர் எனப்படும் ஹனுமார். கடைசியில் சர்வோத்துமன் ஹரி. பொருள் வேகத்தை எட்ட எட்ட அதன் கால அளவு நிலையாக இருக்கும் ஒருவருடன் ஒப்பிடுகையில் மட்டுப்பட ஆரம்பிக்கிறது. அதே மாதிரி குபேரனின் உலகில் நம் பூமியை விட காலம் கொஞ்சம் மெதுவாக நகரலாம். எனவே அவன் ஆயிரம் வருடங்கள் உயிர் வாழலாம்.அடுத்து தேவர்களுக்கு காலம் இன்னும் மெதுவாக நகரலாம். மனிதனின் ஒரு வருடம் அவர்களுக்கு ஒரு நாளாக இருக்கலாம். அடுத்து சூரிய சந்திரர்களுக்கு இன்னும் காலம் மெதுவாக நகரலாம். பிரம்மாவுக்கு நாம் முன்பே சொன்னபடி காலம் ஆமை வேகத்தில் படு மெதுவாக நகருகிறது. நமக்கு ஒரு யுகம் கழியும் போது பிரம்ம லோகத்தில் ஒரு நிமிடம் கழிந்திருக்கும். என்னதான் காலம் மெதுவாக சென்றாலும் பிரம்மா கூட இறந்தே ஆக வேண்டும் என்கிறது த்வைதம். கடைசியில் ஒளிவேகத்தை எட்டுவது போன்றது ஹரியை அடைவது. அது அசாத்தியம். யாராலும் தொட முடியாத இலக்கு அது.பொருளுக்கு காலம் வேகத்துக்கு ஏற்ப மட்டுப்பட்டு ஒளிவேகத்தில் பொருளுக்கு காலம் தன் நகர்வை நிறுத்துகிறது.ஹரியும் காலம் இல்லாததால் அழிவேதும் இல்லாத பரம்பொருளாக திகழ்கிறான்.
சரி...ஒளியின் வேகத்தில் புறப்படும் ஒருவர் தனக்குப் பின்னே உள்ள ஒரு மணிக்கூண்டு கடிகாரத்தை திரும்பிப் பார்க்கிறார்.
அவருக்கு என்ன தெரியும்? இதற்கு பதிலாக வரும் TWIN PARADOX எனப்படும் இரட்டையர்கள் புதிரை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
சமுத்ரா
12 comments:
அசத்தல் பதிவு பாஸ்
தொடர்கிறேள்
முதலில் பல மூலங்களை பார்வைப்படுத்தி வழங்கும் உங்கள் உழைப்புக்கு வந்தனம் ..
FOR க்கு அப்புறம் வெளி சுருங்கி விரிதல் கொஞ்சம் புரியற மாதிரி இருக்கிறது ...
துவைத விளக்கம் புல்லரிக்க வைக்கிறது ... இப்படி அறிவியலோடு ஆன்மிகம் கலக்கினால் உண்மையிலேயே பக்தியிலும் சரி அறிவியலிலும் சரி ஈடுபாடு கூடும் .
போக போக அரியும் சிவனும் ஒன்னு என்பதற்க்கான அத்வைத விளக்கமும் கிடைத்துவிடும் என நம்புகிறேன் ...
இங்கே த்வைதம் அத்வைதம் என கட்சி கட்டுவதைவிட ..ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலை என்ற வகையில் எடுத்துக் கொண்டால் இரண்டிலும் முன்னேற முடியும்...
இரட்டையர்கள் புதிரை ஆவலோடு எதிர் நோக்கி .........
மீண்டும் பள்ளிப்பருவத்தை ஞாபகப்படுத்துகிறது தங்களின் பதிவு . இத்தனை தெளிவாக தகுந்த விளக்கங்களுடன் அறிவியல் பாடத்தில் அணு பற்றிய அண்டம் பற்றியும் அறிந்ததில்லை . உங்களின் உழைப்பிற்கு வாழ்த்துக்கள் . தொடருங்கள் மீண்டும் வருகிறேன்
எங்க இயற்பியல் மிஸ் கூட இவ்வளவு இலக்கமா எடுத்தது இல்லை
present my physics class
இப்போது அவருக்கு விளக்கு B யின் ஒளி முதலில் வந்து விடுவதால் கேஸ் (2 ) இன் படி அவர் ரயிலின் நீளம் பாலத்தின் நீளத்தை விட அதிகம் என்று எண்ணுவார்!!அதாவது இயக்கத்தில் இருப்பவர் ரயிலின் நீளத்தை அதிகமாக அளவிடுவார்.
இதில் கேஸ்(3) இன் படி என வரவேண்டும் என நினைக்கிறேன், சரி பார்க்கவும்.
carbon,yes case(3)..sorry..Thanks for indicating
என்ன சொல்லர்துனே தெரியலை மதுஜி! த்வைத/அத்வைத சித்தாந்தம் தெரிந்த ஒரு பக்குவப்பட்ட ஒரு இயற்பியல் வல்லுனர் எழுத்து இப்படி தான் இருக்குமோ!னு வேணும்னா சொல்லலாமா??
தாங்கள் விளக்க விழைவது அறிவியலா? ஆன்மீகமா? என்ற புதிரோடு பதிவு இருந்தாலும் படிக்கும் போது ஒரு புத்துணர்வு வருகின்றது. சென்ற பதிவினில் (அ.அ.அ. 34b) வரைபடத்தில் தெரிந்த ஃபார்முலாவின் கடைசி இரு வரிகள் எனக்கு இன்னமும் புலப்படவில்லை. நேரம் கிடைக்கும் போது மண்டையைக் கீறி அதன்பிறகும் புரியவில்லை என்றால் உங்களை அணுகலாம் என இருக்கின்றேன்.
நல்லாயிருக்கு.. சூப்பர்.. அற்புதம்.. அப்பிடின்னெல்லாம் சொல்லி அலுத்துப் போச்சு... simply amazing style..
//சரி...ஒளியின் வேகத்தில் புறப்படும் ஒருவர் தனக்குப் பின்னே உள்ள ஒரு மணிக்கூண்டு கடிகாரத்தை திரும்பிப் பார்க்கிறார்.
அவருக்கு என்ன தெரியும்?//
அவர் ஒளியின் வேகத்தில் செல்வதால் அவர் புறப்படும் நேரத்தில் கடிகாரம் காட்டிய நேரம் அவர் பயணிக்கும்போதும் அப்படியே தெரிந்துகொண்டிருக்கும் (ஒளியும் அவருடனேயே நகர்வதால்) எனவே அவருக்கு கடிகாரத்துடன் ஒப்பிடுகையில் காலம் நின்றுவிடும். சரியா?
Post a Comment