


உலகின் முதல் மின் மோட்டாரை உருவாக்கி இவை இரண்டும் ஒரே ஆற்றலின் இருமுகங்கள் என்று கண்டுபிடித்தார்.
மின் காந்த அலைகள் எப்படிப் பரவுகின்றன என்ற விளக்கத்தை ஜேம்ஸ் க்ளெர்க் மாக்ஸ்வெல் அளித்தார். மின் காந்த அலைகள் வெற்றிடத்தில் பரவ முடியும் என்றும் அவை பரவ எந்த ஊடகமும் தேவையில்லை என்றும் அவர் விளக்கினார். மின் காந்த அலைகள் எப்படி செல்கின்றன என்று படத்தில் பாருங்கள். மின் புலமும் காந்தப் புலமும் ஒன்றை ஒன்று அணைத்துக் கொண்டு மின் காந்த அலைகள் ஒளிவேகத்தில் பயணிக்கின்றன.மின் புலம் உச்சம் பெறும் போது காந்தப்புலம் பூச்சியமாகவும் காந்தப்புலம் உச்சம் பெறும் போது மின்புலம் பூச்சியமாகவும் இருக்கிறது. மாக்ஸ்வெல் இந்த மின் காந்த அலைகளின் வேகத்தைக் கணக்கிட்ட போது அவை ஒளிவேகத்தில் பயணிப்பது தெரிந்தது. இதில் இருந்து ஒளியும் ஒரு வித மின் காந்த அலை தான் என்று மாக்ஸ்வெல் கண்டுபிடித்துச் சொன்னார்.
ரேடியோ அலைகள் போல, மைக்ரோவேவ் அலைகள் போல, ஒளியும் ஒருவித மின்காந்த அலை!
3 comments:
ஃபார்முலாஸ் போட்டு அழகாக பாடம் எடுக்கிறீர்கள்..இப்படி ஒரு வாத்தியார் நான் படிக்கும் காலத்தில் கிடைத்திருந்தால் ஃபீல்ட் தியரியை திணறாமல் பாஸ் செய்திருப்பேன்..
ஒளியும் மின் காந்த அலையே நல்ல விளக்கம்...
present sir
அருமை,
பருங்கள் தோழர்,தமிழ் வழிக் கல்வி என்றால் முடியாது என்ற கருத்து இனி மாறிவிடும்.,இப்போது தமிழ் பதிவுலகில் எளிதாக எதை பற்றியும் புரிய வைக்க முடியும் என்ற நிலை வந்திருப்பது பாராட்டத்தக்கது.அதில் உங்கள் பங்கும் உண்டு.
விரைவில் அனைத்தி சக்தி பற்றிய அறிவியல் அனைத்து கருத்துகளும் [ஈர்ப்பு,மின்,மின்காந்த,.....] இணைந்து ஒரே கருத்தாக மாறும். இன்னும் கொஞ்சூண்டு மிச்சம் அவ்வளவுதான்.
வாழ்த்துக்கள்.
Post a Comment