இந்த வலையில் தேடவும்

Tuesday, June 28, 2011

கலைடாஸ்கோப்-25

லைடாஸ்கோப்-25 உங்களை வரவேற்கிறது

பெங்களூரு -1
===============

பெங்களூர் என்பதை ஆங்கிலம் என்றும் பெங்களூரு என்பதை கன்னடம் என்றும் மிக அருமையாக (!) கண்டுபிடித்து இங்கே சமீபத்தில் பெங்களூரு என்று பெயர் மாற்றம் செய்திருப்பதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். கன்னடம் பெங்களூருவில் புறக்கணிக்கப் படுவதாக கன்னடர்கள் நினைப்பதால் இப்படி ஏதாவது புரட்சிகரமாகச்(?) செய்து கன்னடத்தை வாழ்விக்க நினைக்கிறார்கள் . இங்கே ஆட்டோ காரர்கள் கன்னடத்தை கடைசி OPTION ஆகத்தான் வைத்திருக்கிறார்கள். ஆட்டோவை நெருங்கி வருபவர் கொஞ்சம் கலராக இருந்தால் ஹிந்தியிலும் கலர் இல்லை என்றால் தெலுங்கிலோ தமிழிலோ பேச எத்தனிக்கிறார்கள். சிவப்பாக இருப்பதில் உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால் எல்லாரும் இவனுக்கு ஹிந்தி தெரியும் என்று நினைத்து விடுகிறார்கள். ஆனால் நமக்கெல்லாம் ஹிந்தியில் என்றால் என்று சொல்ல வராது. எப்படியோ கன்னடம் கற்றுக் கொண்டு விட்டதால் அவ்வளவாகப் பிரச்சினை இல்லை.இங்கே யாராவது தமிழில் கேள்வி கேட்டால் கூட கன்னடத்தில் தான் பதில் சொல்கிறேன். அந்தந்த மாநில பாஷையை மதிக்க வேண்டும் என்பது என் கொள்கை. ஆனால் பிரதேஷ பாஷை தெரியாமலேயே எந்த சிரமமும் இல்லாமல் காலம் தள்ளிவிட முடிகிற ஒரே நகரமாக இந்த பெங்களூர் சாரி பெங்களூரு இருக்கிறது.


சைடு பிட்: அழகான தமிழ் வார்த்தைகள் பல இன்று தமிழில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் அவையே வேறு மொழிகளில் சரளமாகப் புழங்குகின்றன. மூன்று உதாரணங்கள்:

சோருதல் என்றால் தமிழில் ஒழுகுதல் என்று பொருள். இதை நாம் பயன்படுத்துகிறோமா தெரியவில்லை. கன்னடத்தில் இதே பொருளில் பயன்படுத்துகிறார்கள்.(பிந்திகே சோருத்தா இதே நோடு- குடம் ஒழுகுகிறது பார்)

நச்சுதல் என்றால் தமிழில் 'விரும்புதல்' என்று அர்த்தம்.நாம் இதை ஏனோ விரும்பாமல் விட்டு விட்டோம். ஆனால் தெலுங்கில்இதே பொருளில் பயன்படுத்துகிறார்கள்.
(நாக்கு நச்ச லேது - எனக்குப் பிடிக்கவில்லை). செப்புதல் என்பதும் இன்று தெலுங்கில் இருக்கிறது.

விளித்தல் என்றால் தமிழில் அழைத்தல் என்று பொருள். நாம் ஒருவரை கூப்பிடுகிறோமே தவிர விளிப்பதில்லை. ஆனால் மலையாளிகள் விளிக்கிறார்கள். (அம்மே விளிச்சு - அம்மா கூப்பிட்டாள்)

தண்ணீரை மட்டும் அல்ல. சொற்களையும் தமிழன் விட்டுக் கொடுத்து விடுகிறான்.

பெங்களூரு -2
==============

பெங்களூருவில் வசிப்பவர்கள் (தமிழர்களாக இருந்தாலும் ) இதை விட்டு வெளியே போக விரும்பாதது உண்மை தான். இதற்கு தட்பவெட்ப நிலை தான் காரணமே தவிர அவர்கள் தமிழ்நாட்டை வெறுக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. சொல்லப்போனால் தமிழ்நாட்டை விட்டு வெளியே வசிப்பவர்களுக்கு தான் தமிழ்ப்பற்று அதிகம் இருக்கும். இப்போதே மிதமான குளிர் இங்கே தோலை ஊடுருவ ஆரம்பித்து விட்டது. NICE!

தமிழ்நாட்டை நான் மிஸ் செய்வது புத்தகங்களின் விஷயத்தில் தான்.இங்கே ஒரு விகடன் வாங்க வேண்டும் என்றால் கூட
லொங்கு லொங்கு என்று ஜெயாநகர் வரை போக வேண்டியிருக்கிறது. தமிழ் நாட்டில் ஒவ்வொரு பஸ் ஸ்டாண்டிலும் ஒரு புக் ஸ்டால் கண்டிப்பாக இருந்தே தீரும். இங்கே பஸ் ஸ்டாண்டுகள் தோறும் நந்தினி ஸ்வீட் ஸ்டால் தான் மலிந்திருக்கிறது .கன்னடத்தில் நியூஸ் பேப்பர்கள் இருக்கின்றனவா என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது.நம்மூரில் இருக்கும் அளவு இங்கே
லைப்ரரிகளும் இல்லை. முன்பு BTM லே.அவுட்டில் ஒன்று இருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் சென்று எழுத்துக் கூட்டி கன்னட புத்தகங்கள் படித்துக் கொண்டிருந்தேன். அதையும் இப்போது இழுத்து மூடி விட்டார்கள் (இழுக்காமல் எப்படி மூட முடியும்???!!) கேட்டால் யாருமே வருவதில்லை என்றும் லைப்ரரியைக் கூட்டி சுத்தம் செய்யும் பாட்டி தான் நேரம்
தவறாமல் வருகிறது என்றும் சொன்னார்கள். தமிழர்களுக்கு மட்டுமே எழுத்தின் மீதும் புத்தகங்களின் மீதும் காதல் அதிகம் என்று தோன்றுகிறது. அங்கே தான் எத்தனை புத்தகங்கள்? எத்தனை பத்திரிக்கைகள்? இன்டர்நெட்டில் ராக்கெட் விடுவது எப்படி என்பதில் இருந்து ராகி சேவை செய்வது எப்படி என்பது வரை தமிழில் கிடைக்கிறது.

சைடு பிட்: சமீபத்தில் படித்த ஒரு தகவல் : தெலுங்கு மொழி பாட்டுக்கும் கன்னடம் நாடகத்திற்கும் தமிழ் உரைநடைக்கும் ஏற்ற மொழியாம்.இதனால் தானோ என்னவோ தமிழ் எழுத்தின் மீது நமக்கு ஒரு இனம் புரியாத ஈர்ப்பு போலிருக்கிறது. கன்னடம் நாடகத்திற்கு உரியது என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். ராஜ்குமார் ஹிரண்யகசிபு வேடத்தில் பேசும் வீர வசனங்கள் எவரையும் கன்னடத்தின்பால் ஈர்த்து விடும்.தெலுங்கு இசைக்கு உரியது என்று சொல்லவும் வேண்டுமா? தியாகராஜர்,சியாமா சாஸ்திரிகள் போன்றோர் தமிழ்நாட்டில் வசித்தாலும் தம் படைப்புகளை தெலுங்கில் தான் எழுதினார்கள்.(இது கொஞ்சம் ஓவர் தான்..) எனக்கு இன்றும் தமிழில் கர்நாடக இசைப் பாடல்களைக் கேட்டால் ஏதோ MISSING என்று தான் தோன்றுகிறது!

மறுபடியும் Google Translator
===========================

GoogleTranslator ஐ குறை சொல்லாதீர்கள், கிண்டல் செய்யாதீர்கள் என்று நிறைய பேர் மறுமொழி பேசியிருந்தார்கள். நான் அப்படி தான் கிண்டல் செய்வேன். ஏனென்றால் மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை.அது டெக்னாலஜி அல்ல. கவிதை எழுதுவதற்கும், ஓவியம் வரைவதற்கும், காதல் செய்வதற்கும் டெக்னாலஜி வந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? ஒவ்வொரு மொழிக்கும் அதற்கே உரித்தான ஒரு அழகு, ஒரு நளினம் இருக்கிறது. அதை நம்மால் பெயர்க்க முடியாது.அம்மா பேசுவதை டெக்னாலஜி நமக்கு கேட்கும் படி வசதி செய்து தரலாம்.ஆனால் அம்மாவின் வாசம் வேண்டும் என்றால் அவள் பக்கத்தில் நாம் போகத்தான் வேண்டும். வாசமும், உயிர்ப்பும் இல்லாத ஒரு அம்மா பொம்மையை செய்து நம் பக்கத்தில் வைத்துக் கொள்வது போல தான் இந்த டெக்னாலஜி செய்யும் மொழிபெயர்ப்புகள். ஒரு உதாரணம் பாருங்கள்:

இது பட்டினத்தாரின் ஒரு பாடல்

காலன் வருமுன்னே கண்பஞ்சு அடையுமுன்னே
பால் உன் கடைவாய்ப் படுமுன்னே -மேல்விழுந்து
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத்தானையே கூறு

இதை Google translation இல் போட்ட போது இப்படி வந்தது.

Kanpancu gallon reached varumunne
Paul your kataivay patumunne - melviluntu
Cutumunne best alumunne urar
Tell
kurralattanaiye

சரி சிரித்தது போதும்.Artificial Intelligence என்ற துறை வளராத வரை மொழிபெயர்ப்புகள் இப்படி தான் இருக்கும். குற்றாலத்தான் என்றால் கடவுள் என்று அறிந்து கொள்ளும் அளவு நம் டெக்னாலஜிக்கு செயற்கை அறிவு (இன்னும்) இல்லை. சரி இதை GT இப்படி மொழிபெயர்த்திருந்தால் அதை ப்ரோக்ராம் செய்தவன் கைகளுக்கு நான் தங்கக்காப்பே செய்து போட்டிருப்பேன். !!

Before Death knocks at your door
Before your eyes can see no more
Before your mouth is milked with its last ever drop
Before your kins cry on you non-stop
Before your city men offer you to flame
Oh! fool! utter God's holy name!!!


ஒரு கடுப்பு
===========

க்ளோஸ்-அப் பின் சமீபத்திய விளம்பரம் ஒன்று 'நீங்கள் திடீரென்று நடிகர் சூர்யாவைப் பார்த்தால் எப்படி ரியாக்ட் செய்வீர்கள்? வாயடைத்துப் போவீர்களா? சந்தோஷத்தில் குதிப்பீர்களா? ஆட்டோக்ராப் கேட்பீர்களா? போட்டோ எடுத்துக் கொள்வீர்களா?' என்றெல்லாம் கேட்டிருந்தது. என் கேள்வி என்ன என்றால் நான் சூர்யாவைப் பார்த்தால் ஏன் இதையெல்லாம் செய்யவேண்டும்?
(நிஜமாகவே விளங்கவில்லை) பொது இடத்தில் நீங்கள் ஒரு டிரைவரையோ, எலக்ட்ரீஷியனையோ, ப்ளம்பரையோ பார்த்தால் இப்படியெல்லாம் செய்வீர்களா? செய்தால் உங்களை பைத்தியம் என்று சொல்ல மாட்டார்களா? சூர்யா என்பவர் அவர்களைப் போலவே தன் வயிற்றுப் பிழைப்புக்காக நடிப்பு என்ற ஒரு தொழில் செய்பவர்.அவரைப் பார்த்து நாம் ஏன் வாயடைத்துப் போக வேண்டும்? சூர்யாவை விடுங்கள். இங்கே குமரிமுத்து வந்தாலும் அவரை சுற்றி ஒரு கூட்டம் கூடிவிடுகிறது. நடிகர் அல்லது நடிகை என்பவர்தான் ஒரு திரைப்படத்தில் மிகக் குறைவாக வேலைபார்ப்பவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதே போல ரஜினியை எல்லாரும் இன்னும் நடியுங்கள் என்று கெஞ்சுவது எரிச்சலாக இருக்கிறது. ராணா ஓகே தான்..அதன் பிறகாவது அந்த தாத்தாவை ஃபுல் ரெஸ்ட் எடுக்க விடுங்கள் பாவம்.


இப்போது சில ட்விட்டுகள் உங்களுக்காக
=============================

NVaanathi: மூலை மடிக்கப்பட்ட பேப்பர்களும், ஓரங்களில் கிறுக்கப்படும் பெயர்களும் இல்லாத ebook readers இருந்தென்ன பயன்?

கனியன்: செல்போன், டூவீலர், டிவி, மனைவி ஆகியவற்றில் ஒருவன் திருப்தி அடையமாட்டான், பக்கத்து வீட்டுக்காரரிடம் இதைவிட நல்ல மாடல் இருக்குமென்பதால்!


கனியன்:
புயல் மழையில் ஒருத்தன் புரோட்டா வாங்க கடைக்கு போகிறானென்றால் நிச்சயம் அவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று அர்த்தம்!


arasu1691:
எதையோ தேடிக்கொண்டிருந்தேன், பள்ளி காலத்து அழி ரப்பர் ஒன்று சிக்கியது, யாராலும் முடியும் வரை அழி ரப்பர்கள் பயன்படுத்தப்படுவதே இல்லை

kolaaru:

”இறையருள் பெற்ற கடை, ராசியான கடை “ அப்புறம் எதுக்குப்பா விளம்பரம் போடுறீங்க..? !!!

shaaakthi:
குடிபோதயில் வாகனம் ஓட்டக் கூடாது எனக் கூறும் அரசாங்கம் ஒயின்ஷாப் பாரில் பார்க்கிங் வைத்தது ஏன்?

samudra123:
நிரம்பிய ஒரு லிஃப்டின் உள்ளே எப்போதும் ஒரு இறுக்கம் நிலவுகிறது

ஓஷோ ஜோக்
==========

நிறைய ஓஷோ ஜோக் கைவசம் இருக்கிறதா என்று ஒருவர் பின்னூட்டம் சொல்லியிருந்தார். ஆகா! ஓஷோ ஜோக்குக்கா
பஞ்சம். அள்ள அள்ளக் குறையாத நதி அது ! நிறைய இருக்கிறது! வாசகர்கள் விரும்பினால் 'A' ஜோக் கூட சொல்கிறேன்.


ஒரு ஆள் ஹோட்டலில் போய் உட்கார்ந்து கொண்டு சர்வரை அழைத்து 'ஏம்பா, செட் தோசை மேல வேகாம கீழ
தீஞ்சு போய், அப்புறம் நாலுநாள் ஆன மாவுல பண்ண இட்லி, எண்ணையே போடாம வறண்ட ஒரு வடை , சக்கரை ரொம்ப
ஜாஸ்தியா தண்ணியா ஈ மிதக்கும் காபி ஒண்ணு இதெல்லாம் கொண்டு வா" என்றான்

சர்வர் "சார், என்ன மாதிரியான ஆர்டர் இது? இதையெல்லாம் பண்றது ரொம்ப கஷ்டம்" என்றான்

அந்த ஆள் "என்னப்பா
இப்படி சொல்ற, நேத்து இதையெல்லாம் தானே எனக்கு சீக்கிரமா கொண்டு வந்து கொடுத்தாய் ?"
என்றான்

உங்களுக்காக இன்னொன்று.

ஒரு ஆள் போலீஸுக்கு போன் செய்தான். வார்த்தை குழறியது. "சார் ,யாரோ என்னோட காரில் புகுந்து பயங்கரமாத்
திருடிட்டாங்க, என் DASH BOARD இல் இருந்த விலைமதிப்பற்ற பொம்மையைக் காணவில்லை.ஸ்டியரிங் கூட காணலை..
பாவிப்பசங்க பிரேக்கைக் கூட கழட்டிட்டு போயிட்டாங்க" என்றான்.கார் நம்பர் சொன்னான்.

இந்த கம்ப்ளயண்டை எப்படி டீல் செய்வது என்று போலீஸ்காரர்கள் குழம்பினார்கள்

சிறிது நேரம் கழித்து மறுபடியும் அதே ஆளிடம் இருந்து போன் வந்தது "சார், அந்த
கம்ப்ளயண்டை மறந்திருங்க..நான் தான்
தெரியாம பின்னாடி சீட்டில் ஏறிவிட்டேன்"


முத்ரா


17 comments:

RVS said...

அற்புதம்... சொற்களையும் தமிழன் விட்டுக்கொடுத்துவிடுகிறான்..
. தல.. அம்சம்... மௌனமா இருந்தா நல்லா எழுதலாமோ? முயற்சி செய்கிறேன்.. ;-)))

ஷர்புதீன் said...

AI -
இது குறித்து ஒரு ஆங்கில படம் வந்ததாக ஞாபகம்... பார்த்திருக்கிறீர்களா?

Anonymous said...

hiyooo....hiyoooo

nice post

தமிழ் உதயம் said...

விதவிதமான பகிர்வு. சிறப்பாக இருந்தது.

சமுத்ரா said...

'எந்திரன்' கூட AI படம் தானே?

நெல்லி. மூர்த்தி said...

"சொல்லப்போனால் தமிழ்நாட்டை விட்டு வெளியே வசிப்பவர்களுக்கு தான் தமிழ்ப்பற்று அதிகம் இருக்கும்."
-- இதென்னவோ நிதர்சன உண்மை!


"குற்றாலத்தான் என்றால் கடவுள் என்று அறிந்து கொள்ளும் அளவு நம் டெக்னாலஜிக்கு செயற்கை அறிவு (இன்னும்) இல்லை."
-- செயற்கையை பிறகு பார்க்கலாம்; இயற்கையால் படைக்கப் பட்ட மனித இனங்களே அவர்களின் தாய் மொழியில் புலமையுடன் அனைவரும் இருப்பதாய் தகவல் எங்குமில்லை! ”குற்றாலத்தான்” என்றால் என்ன என்று என்னிடம் வினவியர்கள் பலர். அதற்காக அவர்களை நக்கலடிக்கக் கூடாது! அவர்கள் அறிவதற்கான களத்தினையோ அல்லது தளத்தினையோ உருவாக்கி அவர்களை செம்மைப் படுத்த முயல்வது தான் தமிழனுக்கு பெருமை! குறை கூறுவது எளிது. அதைக் களைந்திட முயல்வோர் எண்ணிக்கை மிகவும் குறைவு! தாங்கள் கணிணித் துறையில் இருப்பதால் தன்னார்வம் கொண்டு கூகுள் மொழியாக்கத்திற்கோ அல்லது அதற்கு இணையான ஒன்றிற்கோ ஏன் உதவ முயற்சிக்கக் கூடாது?!

சமுத்ரா said...

நன்றி நெல்லிமூர்த்தி..முயற்சிக்கலாம்...

சேலம் தேவா said...

GT இப்படி மொழிபெயர்த்திருந்தால் அதை ப்ரோக்ராம் செய்தவன் கைகளுக்கு நான் தங்கக்காப்பே செய்து போட்டிருப்பேன்.

நடக்காதுன்னு தெரிஞ்சே இப்டியா..?!

bandhu said...

அனைத்தும் அருமை.. கலைடாஸ்கோப் வண்ணமயம்..

கூகிள் Translator தமிழ் கற்றுக்கொள்ள முயற்சிப்பவர்களுக்கு உதவும் என்றே நம்புகிறேன்..

Aba said...

//Translate//

கூகிள் வழங்கும் சேவை திருக்குறளுக்கும் சிலப்பதிகாரத்தும் பொழிப்பு எழுத அல்ல.. மாறாக சாதாரண தமிழில் நீங்கள் எதையாவது விசேடமாக எழுதினால் அதை வெள்ளைக்காரன் படித்து விளங்குவதற்கு.... வெள்ளைக்காரன் எழுதுவதை ஆங்கிலம் படிக்கத்தேரியாத தமிழன் படித்து விளங்க மட்டும்தான்... மற்றும்படி மொழிபெயர்ப்பு ஒரு உன்னதமான கலை என்பது நிதர்சனம்.

//Before Death knocks at your door
Before your eyes can see no more
Before your mouth is milked with its last ever drop
Before your kins cry on you non-stop
Before your city men offer you to flame
Oh! fool! utter God's holy name!!!//

Hats off... WOW... நல்லாயிருக்கு...

//அதை ப்ரோக்ராம் செய்தவன் கைகளுக்கு நான் தங்கக்காப்பே செய்து போட்டிருப்பேன்.//

(கவலைப்படாதீங்க கூகிள் என்னிக்கும் உங்களுக்கு செலவு வைக்காது...)

Aba said...

ஜோக்ஸ் சூப்பர்...

Aba said...

ஜோக்ஸ் சூப்பர்...

நெல்லி. மூர்த்தி said...

அறிவியலாகட்டும், அனுபவங்களாகட்டும் தங்களின் எழுத்துக்கள் பிரமிக்கத் தக்க வகையினில் அபாரமாக இருக்கின்றது. ’வலைப்பூ’விற்க்குள்ளே என இருந்து விடாது பொது ஊடகங்களினுள்ளும் (உதாரணம்: கல்கி, குமுதம், விகடன், செய்தித் தாள்களின் வாரமலர்கள்..) வலம் வர வேண்டும் என்பதே எங்கள் ஆவல். இதனால் தங்களுக்கு ஒரு அங்கீகாரம் மட்டுமல்ல தமிழர்கள் பலரும் பலனடைவர் என்பது உறுதி!

adhvaithan said...

இங்கே யாராவது தமிழில் கேள்வி கேட்டால் கூட கன்னடத்தில் தான் பதில் சொல்கிறேன். அந்தந்த மாநில பாஷையை மதிக்க வேண்டும் என்பது என் கொள்கை///

Arumayana kolgai. i am following the same with autowalas. kannadam kathukonda piraguthan suthamana tamizh sorkal, tamizhar marantha tamizh sorkal ingu pesapaduvathai unarnthen. arumayana pathivu.

பத்மநாபன் said...

பெங்களூரில் நம்மாளுங்க சொல்ற ’’ஆமாவா’’அழகா இருக்கும்...அங்கே பெரும்பாலானவர்களுக்கு தமிழ் தெரியும்.. ஆட்டோக்காரங்க கிட்ட கஷ்டபட்டு கன்னடத்தில் பேசினால் தமிழ்யே சொல்லுப்பான்னு பதில் வரும்..

பட்டினத்தார் பாட்டின் சமுத்திரா ட்ரான்ஸிலேஷன் அருமையா இருக்கு..நல்ல மென்பொருள்... இன்னோரு பாட்டைக்கூட மெஷினுக்குள் அனுப்ப ஆசை ..

ஊர் கூடி ஒலிக்க அழுதிட்டு.. எனதொடங்கும் பாடல் ..முகவரியில் இருந்தால் அவுட்புட் வருமா....

Krishna said...

சார்! இது ஒரு ஆரம்பம் தான்........

கூகுள் டிரான்ஸ்லேட்டர் ஒரு குழந்தை மாதிரி..........

இன்னும் பல அப்டேட்ஸ் வரட்டும் பிறகு சொல்லுங்க...........

அதோட மொழிபெயர்க்க இயலாத regional language கூட மாத்தின கூகுள் The great.......

Kumaran said...

Translation of pattinathaar is too good. Share more of these...