இந்த வலையில் தேடவும்

Monday, September 20, 2010

ஒன்பது மணி அழைப்புகள் .....


**
காலையில் ஏற்றி வைக்கும்
சாம்பிராணியும்
ஊதுபத்தியும்
போதுமானதாக இல்லை
இரவில் செய்ததை மறக்க.....


**
மாதம் தவறாமல்
சம்பளத்தை அம்மாவிடம் கொடுக்கிறேன்-ஆனால்
இன்னும் கொடுக்கவில்லை
அவள் வளையலை வைத்து
என் தேர்வுக்குக் கட்டிய
ஐந்தாயிரம் ரூபாயை....


** ஒவ்வொரு பெண்ணுக்கும்
வாழ்வில்
இரண்டு பள்ளிப் பருவங்கள்....
தான் குழந்தையாக பள்ளி செல்லும் போது ஒன்று
தன் குழந்தை பள்ளி செல்லும் போது மற்றொன்று...


* *அன்று மொபைலில்
உன் அழைப்பு வரவேண்டும் என்று எதிர்பார்தேன் !
அழைப்பும் வந்தது!
ஒன்பது மணி தானே பேசலாம் என்றேன்
பதினொரு மணிக்கு அழைப்பு முடிந்தது...
இன்று மொபைலில்
உன் அழைப்பு வர வேண்டாம் என்று எதிர்பார்க்கிறேன்
அழைப்பும் வருகிறது...
ஒன்பது மணி தானே, வந்து விடுகிறேன் என்கிறேன்...
ஒன்பது ஒன்றுக்கு அழைப்பு முடிகிறது....


~சமுத்ரா


No comments: