இந்த வலையில் தேடவும்

Monday, September 20, 2010

அணு அண்டம் அறிவியல் -2a


அன்பர்களே! அணு அண்டம் அறிவியல் இரண்டாம் பாகத்திற்குப் போகும் முன் 'அலை' களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்:


அறிவியல் 'துகள்' என்பதைக் கீழ்க்கண்டவாறு கூறுகிறது:
ஒரு சமயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இருக்கும் ஒன்று
அலை என்பதை "ஒரு சமயத்தில் ஒரே இடத்தில் குவிந்து இருக்காமல் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பரவி இருக்கும் ஒன்று" என்கிறது...

மாக்ஸ்வெல் (1831 -1879 )என்ற இயற்பியல் அறிஞர் சக்தியானது மின் காந்த அலைகளாகப் பரவுகிறது என்று கண்டறிந்தார்.....(ஒளி உட்பட)
இந்த அலைகளுக்கு இரண்டு முக்கியமான பண்புகள் உண்டு:அவை:

மேலே உள்ள படத்தைப் பார்க்கவும்:(படம் 1 ) (படங்கள் சிறியதாக இருந்தால் அவற்றைக் கிளிக் செய்யவும்)

1 . அலை நீளம் (wave length ) : ஓர் அலையின் இரண்டு முகடுகளுக்கு இடையே உள்ள தூரம்.....உதாரணமாக நாம் கண்ணால் காணக் கூடிய ஒளி அலைகளின் அலை நீளம் 0 .5 x 10 ^ -6 மீட்டர்
அதாவது ஒரு செண்டி மீட்டர் தெரியுமா? (கிட்டத் தட்ட ஒரு இன்ச்) அதை விட இருபதாயிரம் மடங்கு சிறியது....

2 . அதிர்வெண் (Frequency ) :ஒரு வினாடிக்கு அந்த அலை எத்தனை முறை அதிருகிறது என்று சொல்லும் எண் ....நம் ஒளி அலைகளின் அதிர்வெண்: 10 ^15 ஆகும்,....பத்துக்குப் பின்னால் 15 சைபர் போட்டுக் கொள்ளுங்கள்...ஒரு வினாடிக்கு அத்தனை முறை அது அதிர்கிறது.... (சும்மா அதுருதில்ல?)

படம் இரண்டைப் பார்க்கவும்....இது மின் காந்த அலைகளின் பரவலைக் குறிக்கிறது.....(electro magnetic spectrum )








மிக அதிக அலை நீளம் உள்ள அலைகள் 'ரேடியோ' அலைகள் என்றும் மிகக் குறைந்த அலை நீளம் உள்ளவை 'காமா' கதிர்கள் என்றும் அழைக்கப் படும்... அளவுகளை ஒப்பிட வேண்டும் என்றால் ரேடியோ அலைகள் (நீளம்) ஒரு கட்டிடத்தின் சைசுக்கு இருக்கையில் காமா கதிர்கள் அணுக்கரு அளவு இருக்கும்....(நாம் காணும் ஒளியின் அளவை ஒரு நுண்ணுயிரியின் அளவோடு ஒப்பிடலாம்) ஒரு பொருள் நம் கண்ணுக்குத் தெரிய வேண்டும் என்றால் அதன் அளவு கட்புலனாகும் ஒளியின் (visible light ) அலை நீளத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.... அதனால் தான் அணுக்கள் எல்லாம் நம் கண்களுக்குத் தெரிவதில்லை.... மேலும் கட்புலனாகும் ஒளியின் வெவ்வேறு அலை நீளங்கள் தான் நமக்கு வெவ்வேறு வண்ணங்களாகத் தெரிகின்றன... அதாவது குறைந்த அலை நீளம் என்றால் ஊதா.. (படம் 3 )
அதிகம் என்றால் சிகப்பு...மேலும் ஓர் அலையின் அலை நீளம் அதிகம் என்றால் அதன் அதிர்வெண் குறைவாக இருக்கும் என்றும் தெரிந்து கொள்ளுங்கள்....






சமுத்ரா


3 comments:

மீ.அருட்செல்வம், மாநில செயலாளர். said...

உருப்படியான பதிவு, மறுமொழிய எதிர்பாக்காம தொடர்ந்து எழுதுங்க.

Radhakrishnan said...

பாராட்டுகள், நன்றாக இருக்கிறது.

govinthan said...

அதாவது ஒரு செண்டி மீட்டர் தெரியுமா? (கிட்டத் தட்ட ஒரு இன்ச்)??? is it not 2 1/2 cm?