இந்த வலையில் தேடவும்

Tuesday, February 8, 2011

இன்டர்வியூ

இன்டர்வியூ ஒன்றுக்குக்
கிளம்பிக் கொண்டிருந்தேன்..

"இந்த சட்டை ராசியே இல்லை
வேற போட்டுப் போ"
என்றாள் அக்கா..

"கம்பெனியப் பத்தி
எல்லா டீடெயில்ஸையும்
வெப்- சைட்ல
பாத்துட்டியா" என்றான் அண்ணன்..

"சரியா பஸ் புடிச்சு
டைமுக்குப் போய்ச் சேரு "
என்றார் அப்பா...

"இப்பெல்லாம் ஜாவாலதான்
ஜாஸ்தி கேள்வி
கேட்கறாங்களாம்" என்றான் தம்பி...

ஒரு
நூறு ரூபாயை அதிகமாகக் கொடுத்து
"பசியோட வராதே
வர்றப்ப
ஏதாவது ஒரு நல்ல ஹோட்டல்ல
புல் மீல்ஸ்
சாப்பிட்டுட்டு வந்துரு "
என்றாள் அம்மா..

இதையும் படிக்கவும்..

சமுத்ரா

5 comments:

மைந்தன் சிவா said...

ஹிஹிஹி ரசித்தேன்..

வைகறை said...

அம்மா அம்மாதான்!

Nagasubramanian said...

superb!

Chitra said...

That is very nice.

எல் கே said...

அம்மா :))