இந்த வலையில் தேடவும்

Sunday, February 6, 2011

ஓர் ஆணின் புலம்பல்!

பெண்ணாகப்
பிறந்து விட்டோம் என்று
வெறுமனே
பொய்யாகப்
புலம்பாதீர்கள்!

பேரனின் குழந்தைக்குப்
பெயர் வைக்கும் விழாவைப்
பார்க்கும்
பேறு
உங்களுக்கு தான் வாய்த்திருக்கிறது!

எங்கே போனாலும்
லேடீஸ்
பஸ்ட் என்கிறார்கள்...

ரேஷன் கடையைத்
தவிர
உங்களுக்கான
வரிசைகள் எல்லா இடங்களிலும்
குட்டையாகத் தான்
இருக்கின்றன..

நீங்கள் ஏறும் போது
பேருந்துகள்
அவசரமாக நகர்வதில்லை..

உங்களுக்கான
இருக்கைகள்
முன் பக்கத்திலேயே இருக்கின்றன
பின் சீட்டுப் பயணத்தின்
முதுகு வலிகள் உங்களுக்கு இல்லை..

வெளியூருக்குப்
போகும் போதோ
வேலைக்கு முதன் முதலில் போகும் போதோ
அப்பாவோ
அண்ணனோ
கணவனோ
கூட வருவார்கள்..

கூட்டம் நிறைந்த
மளிகைக் கடைக்குப் போனாலும்
'மேடம் நிக்கறாங்க பாரு
மொதல்ல கொடுத்து அனுப்பு"!

கப்பல்
கவிழ்ந்தாலும்
உங்களைத்தான் முதலில்
படகுகளில் ஏற்றுகிறார்கள்..

டைப் ரைட்டிங்கோ
கார் ட்ரைவிங்கோ
உங்களுக்கு ஒரு
சிநேகம் கலந்த மரியாதையுடன்
சொல்லித் தருவார்கள்..

பாரம்பரியமிக்க
கோவில்களில்
நுழையும் போது
மேல்சட்டை
துறக்க வேண்டிய
அவசியம் இல்லை..

நீங்கள் கைகாட்டும் நபரை
அடித்துப் போட
பொது ஜனமும்
மகளிர் காவல் நிலையங்களும்
தயாராக இருக்கின்றன..

அலுவலகம் கிளம்பும்
அவசரத்தில்
ரேசர்
கன்னத்தைக் கிழிக்கும்
அவஸ்தைகள் உங்களுக்கு இல்லை..

பெண்ணாகப்
பிறந்து விட்டோம் என்று
வெறுமனே
பொய்யாகப்
புலம்பாதீர்கள்!


முத்ரா

17 comments:

ஷர்புதீன் said...

ஹ ஹ ஹ ஹா

ரேவா said...

ஓர் ஆணின் புலம்பல்!உங்கள் ஆதங்கம் புரிகிறது நண்பா...

கவிதை நல்ல இருக்கு நண்பா

tamilan said...

சுட்டியை சொடுக்கி படிக்கவும்


===>
பெண்கள் மிருகங்களை விட கேவலமானவர்களாமே?
அறியாத அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் மறைக்கப்பட்ட தகவல்கள்..
இந்து மதம் பெண்களை மிருகங்களை விடக் கேவலமாக கருதுவதை சான்றுகளோடு அதற்கான காரணத்தை பார்ப்போம்..


.

முனைவர்.இரா.குணசீலன் said...

அட!!
காலம் மாறிடுப்போச்சே!!

# கவிதை வீதி # சௌந்தர் said...

உண்மைதான்...
கவிதை அருமை...
நண்பரே.. முதலில் தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்..
நானும் பதிவு செய்கிறேன்..

சி.பி.செந்தில்குமார் said...

<<<<கப்பல்
கவிழ்ந்தாலும்
உங்களைத்தான் முதலில்
படகுகளில் ஏற்றுகிறார்கள்..

sema செம நக்கல்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உண்மை உண்மை உண்மை........!

அரசன் said...

சரியான புலம்பல்கள்தான் ...
வரிகளும் அப்படியே எதார்த்தமா இருந்துச்சி ///
வாழ்த்துக்கள்;

Nagasubramanian said...

என்னமோ போங்க. ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை

Chitra said...

well, that is one side of the story....மறுபக்கமும் இருக்கே...

கனாக்காதலன் said...

:)

மதுரை சரவணன் said...

//கூட்டம் நிறைந்த
மளிகைக் கடைக்குப் போனாலும்
'மேடம் நிக்கறாங்க பாரு
மொதல்ல கொடுத்து அனுப்பு"!//

unmaiyai uraikkum kavithai. iruppinum maruppakkaththaiyum paarththu kavithai eluthavum.

சமுத்ரா said...

இப்படி கண்டிப்பாக 'இன்னொரு பக்கத்தையும் பாருங்கள்' என்று கமெண்ட் வரும் என்று எதிர்பார்த்தேன்..

உதாரணமாக:

உங்களால்
ஓடும் பஸ்ஸில் கூட
சுலபமாக ஏறி விட முடிகிறது..

பஸ் ஸ்டாண்டில் அவன் ஒரு
மாதிரி பார்க்கிறான்
என்று
அவசரமாக புடவையை சரி செய்யம்
அவஸ்தைகள் உங்களுக்கு இல்லை..

well every coin has two sides ..

மைந்தன் சிவா said...

உண்மை தான்..................................உண்மை தான்...

ஜீ... said...

உண்மை பாஸ்! உண்மை!!

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

I agree completely... :-))

தக்குடு said...

well said dude!...:)

@ chitra akka - //well, that is one side of the story....மறுபக்கமும் இருக்கே...//

chitra akka, yella sidelaiyum oreyy story thaan..:P