இந்த வலையில் தேடவும்

Wednesday, February 9, 2011

பதிவுலக மேனியாக்கள் ...

மேனியா என்றால் ஏதோ ஒன்றின் மீது ஏற்படும் பைத்தியக்காரத் தனமான வெறியாம்..உதாரணமாக தீயின் மீது ஏற்படும் வெறியை 'பைரோ மேனியா' என்பார்கள்..இந்த மேனியா உள்ளவர்கள் எங்கே போனாலும் இந்த இடம் அப்படியே தீப்பிடித்து எரிந்தால் எப்படி இருக்கும் என்று ஏடாகூடமாக ஆசைப்படுவார்களாம்..
அதே மாதிரி எங்கே எதைப் பார்த்தாலும் அப்படியே லவட்டிக் கொண்டு வரலாம் என்ற ஆசைக்கு 'கிலெப்டோ
மேனியா' என்று பெயர்..நூறு ரூபாய்க்கு காய்கறி வாங்கினாலும் கடைக்காரருக்குத் தெரியாமல் ஒரு கேரட்டை லவட்டுவதில் இன்பம் காண்பவர்கள் இவர்கள்..

இதே மாதிரி யோசித்துப் பார்த்ததில் பதிவுலகத்தில் கீழ்க்கண்ட மேனியாக்கள் இருப்பதாகத் தோன்றுகிறது..பிராக்கெட்டில் இருப்பது வேடிக்கைக்காக மட்டும்..:)


ஹாலுசினோ மேனியா

- பதிவு எழுதுவது போல கனவு காண்பது..இவர்களுக்கு ஆயிரம் FOLLOWERS சேர்ந்தது போல கனவு எல்லாம் வரும்...

அகோலுதோ
மேனியா

- டெய்லி காலையில் ஆபீஸ் வந்து முதல் வேலையாக யாராவது
FOLLOWER புதிதாகச் சேர்ந்திருக்கிறாரா என்று பார்ப்பது..

கிராஃபோ மேனியா

-டெய்லி ஏதோ ஒரு பதிவு எழுதிக் (கிறுக்கிக்) கொண்டே இருப்பது..( உ.தா:சமுத்ரா )

அமோபியோ
மேனியா

-தினமும் நாலைந்து தடவை ப்ளாக்கின் வடிவமைப்பை மாற்றுவது..அதைத் தூக்கி இங்கே போட்டு, இதை அங்கே போட்டு, புதிய Gadget add செய்து மெனக்கெடுவது

ஆன்டி ப்ரேசோ
மேனியா

- யார் எந்த விஷயத்தை சொன்னாலும் 'இது தப்பு' 'இப்படி இல்லை' 'தீர்ப்ப மாத்து' என்றெல்லாம் எதிர்த்து பின்னூட்டம் போடுவது

டோக்ஸா
மேனியா

-எல்லா ப்ளாக்குகளுக்கும் சென்று சகட்டு மேனிக்கு கமெண்ட் போடுவது (உ.தா: சித்ரா மேடம் :) )

காமைடோ
மேனியா

- வடிவேலுவின் வாரிசாக காமெடியை விடாமல் பிடித்துக் கொண்டு டெரர் காட்டுவது.. (பன்னிக் குட்டி, மங்குனி போன்றவர்கள் )

குடோஸ்
மேனியா

-எப்படியாவது பிரபலமாகி விட வேண்டும் என்ற வெறி..பதிவு எழுதியதும் எல்லாருக்கும் மெயில் அனுப்புவது..ஸ்டேடசில் போட்டுக் கொள்ளவது..பிற ப்ளாக்குகளுக்குசென்று எங்க கடைக்கு வாங்க என்று வெத்தலை பாக்கு வைத்து அழைப்பது..

பைரா மேனியா

- கருணாநிதி, சீமான், ஒரு அப்பாவிப் பதிவர், பார்ப்பனர்கள் என்று எல்லாரையும் நாயே பேயே என்று ஒருமையில் விளித்து , அட்டாக் பண்ணி கண்டபடிபதிவுகள் எழுதுவது

முத்ரா

10 comments:

Chitra said...

டோக்ஸா மேனியா

-எல்லா ப்ளாக்குகளுக்கும் சென்று சகட்டு மேனிக்கு கமெண்ட் போடுவது (உ.தா: சித்ரா மேடம் :) )


...... டாக்டர்..... அதுதான் எனக்கு பிரச்சனையா? What is டோக்ஸா?
Saturday and Sunday - no comments days ஆச்சே.... ம்ம்ம்ம்.... :-)

sakthistudycentre-கருன் said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்....

ஆனந்தி.. said...

டோக்ஸா மேனியா

//-எல்லா ப்ளாக்குகளுக்கும் சென்று சகட்டு மேனிக்கு கமெண்ட் போடுவது (உ.தா: சித்ரா மேடம் :) )


...... டாக்டர்..... அதுதான் எனக்கு பிரச்சனையா? What is டோக்ஸா?
Saturday and Sunday - no comments days ஆச்சே.... ம்ம்ம்ம்.... :-) //

ha ha..super

கக்கு - மாணிக்கம் said...

:)))))))

MANO நாஞ்சில் மனோ said...

//கிராஃபோ மேனியா

-டெய்லி ஏதோ ஒரு பதிவு எழுதிக் (கிறுக்கிக்) கொண்டே இருப்பது..( உ.தா:சமுத்ரா )//

அவ்வ்வ்வவ்வ்வ்வவ்.....

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ரொம்ப நல்லா இருக்கு தலைவரே

எல் கே said...

ஹஹாஹ் அருமை சமுத்ரா

@சித்ரா
:))

மைந்தன் சிவா said...

ஏன் இந்த கொலை வெறி??
ஹிஹி நமக்கு இதில ஒரு அரைவாசி இருக்கு..

கனாக்காதலன் said...

:)

ஷர்புதீன் said...

:)