இந்த வலையில் தேடவும்

Wednesday, February 9, 2011

கலைடாஸ்கோப்-7

லைடாஸ்கோப்-7 உங்களை அன்புடன் வரவேற்கிறது

தயவு செய்து ஒப்பிடாதீர்கள்
========================

நான் ஒரு லேட் பிக்-அப் கேஸ்..'டியூப் லைட்' என்று கூட வேறு விதமாகச் சொல்லலாம்..ஆதி சங்கரர் மர மண்டைகளுக்கு ஏறட்டும் என்று மூன்று முறை 'பஜ கோவிந்தம்' என்று சொல்வாரே..நமக்கெல்லாம் மூன்று முறை இல்லை, ஏழெட்டு முறை சொன்னால் தான் கொஞ்சமாவது மண்டையில் இறங்கும்..சில பேர் ரொம்ப சீக்கிரம் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு ரொம்ப சீக்கிரம் மறந்து விடுவார்கள்..சில பேர் டியூப் லைட் என்று பெயர் வாங்கினாலும் ரொம்ப காலத்திற்கு நின்று எரிவார்கள்..இதை ஏன் சொல்கிறேன் என்றால் எனக்கு பதினோறாம் வகுப்பில் நடந்த ஒரு சம்பவம்..நான் இயற்பியல் பாடத்தில் ரொம்ப கம்மியாக மார்க் வாங்கியிருந்தேன்..(ஜஸ்ட் பாஸ்) இயற்பியல் வாத்தியார் என்னைக் கூப்பிட்டு முதல் மார்க் வாங்கியிருந்த ஒரு மாணவியின் பேப்பரைக் காட்டி "ஆன்சர் சீட் -ன்னா இப்படி இருக்கணும்' என்றார்..நான் குற்ற உணர்ச்சியுடன் எட்டிப் பார்த்ததில் அதில் முத்து முத்தான கையெழுத்துடன் நேர்த்தியான படங்கள், ஸ்கெட்ச் பென்னால் அன்டர்-லைன் எல்லாம் செய்யப்பட்டிருந்தது..அந்த ஆசிரியர் இந்த ஒப்பீட்டை ஒரு நல்ல நோக்கத்துடனேயே செய்திருக்கலாம் (அடுத்த முறை நான் நல்ல மார்க் வாங்க வேண்டும் என்று) ஆனால் அன்று அந்த நிகழ்ச்சி என்னை மிகவும் பாதித்தது..தாழ்வாக உணர வைத்தது..கொஞ்சம் முதிர்ச்சி அடையாத வயது என்பதால் ஒரு தவறான முடிவுக்கும் என்னை யோசிக்க வைத்தது..

இதே மாதிரி பின்னாளில் கார்-டிரைவிங் வகுப்புக்குச் சேர்ந்த போது..ஒரு வாரம் ஆகியும் ஸ்டியரிங் பாலன்ஸ் வரவில்லை..கார் வேறு பிரேக்கை விட்டுக் கிளச்சை ரிலீஸ் செய்வதற்குள் ஆ
ப் ஆகி கடுப்பைக் கிளப்பியது ..அதற்கு அந்த டிரைனர் (கன்னடத்தில் )"ஒரு பொண்ணு சேர்ந்து நாலு நாள் தான் ஆச்சு..இப்ப அது நாலாவது கியர் வரை மெயின் ரோட்லயே ஒட்டுது" என்றார் சலித்துக் கொண்டு..இப்போது ப்ளாக் எல்லாம் எழுதும் அளவு முதிர்ச்சி (??) அடைந்து விட்டதால் அவர் கூறியதை ஹி ஹி..இந்தக் காதில் வாங்கி அந்தக்...

இதை ஏன் சொல்கிறேன் என்றால் எந்த சூழ்நிலையிலும் உங்கள் குழந்தைகளையோ மாணவர்களையோ கணவரையோ மனைவியையோ பிறருடன் ஒப்பிடாதீர்கள்.."பக்கத்து பிளாட் சுந்தரைப் பாருங்க உங்களுக்கு அப்பறம் ஜாயின் பண்ணார்...ப்ரமோஷன் வாங்கி, பாரினுக்கும் போயிட்டார்' என்றோ "அந்த மனோகர்-காயத்ரி ரெண்டு பேரையும் பாரு..கல்யாணம் ஆன ஒரு வருஷத்துலயே ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெத்துக் குடுத்துட்டா" என்றோ இப்படி ஒப்பிடுதல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்..நீங்கள் நல்ல நோக்கத்துடனேயே, அல்லது விளையாட்டுக்குக் கூட இந்த ஒப்பிடுதலை செய்தாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு இது மனதில் ஆறாத காயமாக மாறி விட வாய்ப்பு இருக்கிறது..

ஒவ்வொருவரும் தனிப்பட்டவர்கள்..தனித்துவமானவர்கள் என்பதை நாம் உணர வேண்டும்..அவன் அப்படி சொல்லிட்டான் நான் சாதிச்சு காட்டறேன் பாரு ..இயற்பியல்ல அணு அண்டம் அறிவியல் எழுதற அளவு உயர்ந்து (??) காட்டறேன்..கார் ரேசுல முதல்ல வர அளவு (இது உண்மை இல்லைங்க :) ) கார் ஒட்டிக் காட்டுறேன் ஒன்று உங்கள் ஒப்பிடுதலை பாசிடிவ்வாக எடுத்துக் கொள்பவர்கள் மிகக் குறைவு..

எனவே எல்லாரையும் அவர்கள் தனித்துவத்தை உணர்ந்து நடத்துங்கள்..நின்று போன கடிகாரமும் கூட ஒரு நாளுக்கு இரண்டு தடவைகள் சரியான நேரம் காட்டும் என்பதை மறந்து விடாதீர்கள்..

காதல்
======

காதலர் தினம் வருகிறது...அடுத்தவாரம் முழுவதும் எந்த ப்ளாக்கையும் ஓபன் பண்ணுவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்..எனக்கு இந்த காதல் கவிதைகள் என்றாலே அலர்ஜி..நிறைய பேர் (எத்தனை பேர் என்பதெல்லாம் ராணுவ ரகசியம்) உங்கள் ப்ளாக்கில் காதல் கவிதைகளை ஏன் எழுதுவதில்லை? என்று கேட்கிறார்கள்..நான் ப்ளாக் ஆரம்பித்த போது (என்னவோ அம்பானி ரிலையன்ஸ் ஆரம்பித்த மாதிரி சொல்றேனா? ஓகே கூல் டவுன்) செய்து கொண்ட இரண்டு உறுதிகள் ஒன்று: அரசியல் எழுதுவதில்லை இரண்டு: காதல் எழுதுவதில்லை..ஆனால் அரசியலை அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுத வேண்டி வந்து விட்டது..ஆனால் இரண்டாவது உறுதியில் நான் உறுதியாக இருக்கிறேன்..காதல் கவிதைகளை எதிர்பார்த்து சமுத்ராவின் ப்ளாக்குக்கு நீங்கள் வந்திருந்தால் தயவு செய்து ஒன்று BACK பட்டனை அழுத்தவும்..இல்லை file-exit என்று அழுத்தி மூடி விடவும்..

மறுபக்கம்
=========

FACE BOOK அக்கவுண்டை ஓபன் பண்ணிப் பார்த்தால் என்னை விட எல்லாரும் சந்தோசமாக இருப்பது போல் தோன்றுகிறது..எல்லாரும் ஈறுகள் தெரிய சிரித்துக் கொண்டும், பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டும், வெளிநாடு ஒன்றில் பின் புலத்தில் பனியோ, துலக்கிய சாலைகளோ, வானளாவிய கட்டிடங்களோ தெரிய போஸ் கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள்..என்னுடன் படித்த பாதி பேர் வெளிநாடு போய் விட்டார்கள்..பொறாமை எல்லாம் இல்லை..
FACE BOOK போன்ற சமூக வலைத்தளங்கள் எப்படி மனிதனின் சார்புடைய , முகமூடி அணிந்த முகங்களை மட்டுமே காட்டுகின்றன என்று எண்ணிப் பார்க்கிறேன்..இந்தப் பெண் எப்போதும் இப்படித்தான் சிரித்துக் கொண்டும், கொண்டாடிக் கொண்டும் இருப்பாள் என்ற தவறான முடிவுக்கு நாம் வருவதற்கான வாய்ப்புகள் இதில் அதிகம்..ஒரு கதை நினைவில் வருகிறது..ஒரு பையனும் பெண்ணும் கம்ப்யூட்டர் மூலமாகப் பழக்கமாகிறார்கள்..தினமும் சாட்டிங்...போட்டோ எல்லாம் அனுப்பிக் கொள்கிறார்கள்..பின்னர் நேரில் சந்திப்பதாக முடிவெடுத்து ஒரு நாள் சந்திக்கிறார்கள்..ஏனோ அது சரியாக வரவில்லை..என்னுடன் தினமும் சாட் செய்யும் ரோஹித் நீ இல்லை என்கிறாள் அவள்..என்னுடன் சாட் செய்யும் அல்பனா நீ இல்லை என்கிறான் அவன்..இரண்டு பேரும் அவரவர் குடித்த காபிக்கு அவரவர் காசு கொடுத்து விட்டுப் பிரிந்து செல்கிறார்கள்..

இந்த வலைத்தளங்கள் நம்மைப் பற்றி எவ்வளவு பொய்யாக வெளியுலகுக்கு PROJECT செய்கின்றன?

விகடனில் சமுத்ராவின் தொடர்கதை ஆரம்பம்
=======================================

ஹலோ பாஸ்...ஒரு நிமிஷம்..அடுத்த பகுதிக்குப் போயிடாதீங்க...என்னை பத்திரிக்கைகளுக்கு எழுதலாமே என்று நிறைய பேர் கேட்கிறார்கள்..(எத்தனை பேர் என்பது மீண்டும் ராணுவ ரகசியம்) எழுதலாம் தான்..'வணக்கம். ன் பெயர் சமுத்ரா..நான் ஒரு பதிவர்..எனக்கு நூறு FOLLOWERS இருக்கிறார்கள்.கீழே உள்ளே
ன் கதையை..'என்றெல்லாம் சின்னப் பிள்ளைத் தனமாக ஒரு பத்திரிக்கைக்கு கடிதம் எழுத வேண்டுமா என்று யோசிக்கிறேன்..மேலும் பதிவுலகம் என்ற ஆனந்த சமுத்திரத்தில் திளைத்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு பத்திரிகை உலகம் என்ற குட்டைக்குள் குதிரை ஓட்ட வேண்டுமா என்றும் தோண்டுகிறது..

யாருக்கு யார் ஓட்டுப் போடுவது
==========================

என்னைப் போன்ற உலகின் சிறந்த சிந்தனையாளர்கள் (ஓகே again cool down ..நான் ஒரு டியூப் லைட் என்று சொன்ன போது மட்டும் சும்மா இருந்தீங்கல்ல?) என்ன சொல்கிறார்கள் என்றால் ஓட்டுப் போட்டு ஒருவரை தேர்ந்தெடுப்பது என்பது தவறான ஒன்றாம்...ஒரு நாட்டின் பிரதமரையும் , முதலமைச்சரையும் யார் தேர்ந்தெடுக்கிறார்கள்? கல்வியறிவு இல்லாத, அரசியல் என்றால் என்ன என்று தெரியாத, சட்டம் தெரியாத , இலவசங்களுக்கு மயங்கும் மக்கள்...இதை எப்படி சிறந்த ஜனநாயக முறை என்று சொல்லலாம் என்று கேட்கிறார்கள்..ஓட்டுப் போடுவதற்கு பதினெட்டு வயது ஆனால் மட்டும் போதும் என்பதை மிகக் குறைந்த தகுதி என்கிறார்கள்..குறைந்த பட்சம் ஒரு டிகிரியாவது வாங்கியிருந்தால் தான் ஓட்டுப் போட முடியும் என்ற மாதிரி ஏதாவது சட்டம் வர வேண்டும் என்கிறார்கள்..யார் ஓட்டுப் போட்டால் என்ன என்கிறீர்களா?ஆமாம் I agree .. இங்கே தேர்தலில் பாம்பும், பூரானும், தேளும் போட்டி போடுகின்றன.. எதற்கு விஷம் குறைவோ அதைத் தேர்ந்தெடுக்க வேண்டியது தான்..

நூறு
====

மறந்தே போய் விட்டேன்...இந்த ப்ளாக்குக்கு(
ம்) நூறு FOLLOWERS கிடைத்திருப்பது சந்தோஷம்..'நூறு பாண்டவர்கள்' என்று ஆரம்பித்து ஒரு கவிதை எழுதலாம் என்று நினைத்திருந்தேன்..ஆனால் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்பதால் கடைசி நேரத்தில் கைவிட்டு விட்டேன்..ANYWAYS , ன் கிறுக்கல்களையும் பின் தொடரும் அந்த நூறு பேருக்கு மனமார்ந்த நன்றிகள்..நூறாவதாகச் சேர்ந்தவருக்கு (யார் அந்த பக்ரா???) ஸ்பெஷல் ன்றிள்...

எழுத்துக்கள் எத்தனை விதம்
=========================

ஒவ்வொரு மொழியின் எழுத்துக்களும் ஒரு விதத்தில் அழகு..கன்னட எழுத்துக்களை இந்திய எழுத்துக்களின் ராணி என்கிறார்கள்..அது என்னவோ உண்மை போலத்தான் தெரிகிறது..ஒவ்வொரு எழுத்தும் வயதுக்கு வந்த பெண்ணைப் போல நாணத்துடன் வளைந்து நெளிந்து... உதாரணத்திற்கு இதைப் பாருங்கள்..ನನ್ನ ಹೆಸರು ಸಮುದ್ರ
ஒவ்வொரு மொழியின் எழுத்துக்களுக்கும் ஒரு சிறப்பம்சம்..ஹிந்திக்கு அதன் மேல் போடும் கோடு..தெலுங்கிற்கு மேலே அடிக்கும் ஒரு 'டிக்' மார்க் ..நாம் தெலுங்கு, கன்னட எழுத்துக்களை ஜிலேபி என்று சொல்வது போல அவர்களும் தமிழ் எழுத்துக்களை ஜாங்கிரி, முறுக்கு என்கிறார்கள்..என்னை ஏதாவது எழுதச் சொன்னார்கள் '' என்று எழுதினேன்..இது கண்டிப்பாக முறுக்குக் குழலில் மாவை பிதுக்கிப் போட்டது என்றார்கள்...அப்புறம் 'ணோ' என்று எழுதினேன்..என்ன ஒரு ஹெட் போனைப் போட்டு விட்டு அப்புறம் ஒரு டிரைனைப் போடுறே? என்றார்கள்...FUNNY !

ஓகே உங்கள் தலை மிகவும் சூடாகி விட்டது..இப்போது ஒரு ஓஷோ ஜோக்

ஓஷோ ஜோக்
============

லிட்டில் ஹெர்னி படிக்கும் பள்ளிக்கு ஒரு நாள் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் வந்தார்..மாணவர்களைப் பார்த்து 'குழந்தைகளே, உங்களுக்கு சிறுகதை எழுதுவது எப்படி என்று சொல்கிறேன்..ஒரு சிறுகதை வெற்றி அடைய வேண்டும் என்றால் அதில் நான்கு விஷயங்கள் இருக்க வேண்டும் ஒன்று மதம், இரண்டு அரசியல், மூன்றாவது செக்ஸ், நான்காவது சஸ்பென்ஸ், என்றார்..

"யாராவது முயற்சி பண்ணறீங்களா"?

லிட்டில் ஹெர்னி உற்சாகமாகக் கை தூக்கினான்..

" go ahead "

இரண்டு நிமிடத்தில் பேப்பரை நீட்டினான்..அதில் ஒரே ஒரு வரி மட்டும் எழுதியிருந்தது..

"ஜார்ஜ் புஷ்சின் மனைவி கத்தினார்: ஜீசஸ்!, நான் மறுபடியும் கர்ப்பமாகி விட்டேன்..இந்த தடவை எந்த ராஸ்கல் இதைப் பண்ணான்னு தெரியலையே"?


முத்ரா


14 comments:

சி.பி.செந்தில்குமார் said...

போடு முத வெட்டை

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா.. நானா இருந்தா இதே பதிவை 4 பாகமா பிரிச்சுப்போட்டிருப்பேன்

சி.பி.செந்தில்குமார் said...

>>>
"ஜார்ஜ் புஷ்சின் மனைவி கத்தினார்: ஜீசஸ்!, நான் மறுபடியும் கர்ப்பமாகி விட்டேன்..இந்த தடவை எந்த ராஸ்கல் இதைப் பண்ணான்னு தெரியலையே"?kalakkal கலக்கல் ஜோக்

அப்புறம் 100 ஃபாலோயர்சூக்கு வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ said...

மொத்தமா அலசி போட்டுட்டீங்க போங்க.....
கவிதைய ரசிக்கனும்ய்யா....

கணேஷ் said...

எல்லாமே ரெம்ப நல்லா இருக்குங்க..தொடர்ந்து நிறையா எழுதுங்க..

மைந்தன் சிவா said...

வாழ்த்துக்கள் நூறு போலோவேர்க்கு

கோநா said...

antha rohith kathai suyapulambal mathiri theriyuthu?

கனாக்காதலன் said...

Nice :)

சிவகுமாரன் said...

எல்லாம் நல்லா இருக்கு. ஆனா அந்த ஒட்டு போடும் விஷயம் ஏத்துக்க முடியாது. படிச்சவன்கன்னா ரொம்ப யோக்கியமா ?

காதல் கவிதைகள் மீது இத்தனை வெறுப்பு என் ?
(என் வலைப்பக்கம் வந்து விடாதீர்கள்.)

ஷர்புதீன் said...

wishes

Chitra said...

102 FOLLOWERS - Congratulations!!!!
:-)

Anonymous said...

ஒப்பிடுவதில்தான் பரிணமத்தின் அடிப்படை இருக்கிறது.
ஒப்பிடுவதில்தான் தரம் விளங்கும். தரத்தை அடையாளம் காண ஒப்பிடுதல் அவசியம். ஒப்பிடுவது தானே ஒலிம்பிக்ஸ்.

Abarajithan said...

//யாருக்கு யார் ஓட்டுப் போடுவது//

ஒரு அறிஞரின் கூற்றுப்படி, "உலகில் முட்டாள்களே பெரும்பான்மையாக இருப்பதால் பெரும்பான்மையைப் போற்றும் ஜனநாயகம் முட்டாள்தனமானது" என்னைப் பொறுத்தவரை இது உண்மைதான். அரசாட்சி முறையில், ஒரு இளவரசன்தனது தந்தையாலும், குடும்பத்தாலும் நன்றாக ட்ரைனிங் கொடுக்கப்பட்டே வளர்கிறான். அவனுக்கு தங்கத்திலும் அதிகாரத்திலும் குளித்து திகட்டிவிடும். அவன் அரசனாகும்போது, அரச வாழ்க்கையை ஜஸ்ட் ஒரு அன்றாட நிகழ்வாகவே எடுத்துக்கொண்டு நல்லாட்சி புரிவான்.

ஆனால் (இன்றைய இந்திய) ஜனநாயகத்தில் அதிகாரத்தில் எந்தவித அனுபவமும் இல்லாத, அன்றாட சோற்றுக்கு கஷ்டப்பட்ட நரிப்புத்தி கொண்டவர்களுமே தேர்ந்தெடுக்கப்படுவதால், அவர்கள் ஆட்சிக்கு வந்ததும், அதுவரை பார்த்திராத பணத்திலும் அதிகாரத்திலும் திளைத்து அவற்றை misuse செய்ய முற்படுகின்றார்கள்.

Abarajithan said...

எப்படியோ, உங்களுது "படித்தவர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை" திட்டம் சரியாகப்படவில்லை. இப்போதே ஏழை பாமரர்களை அரசு மதிப்பதில்லை.. அவர்களுக்கு ஓட்டுரிமை என்ற ஒன்று இருப்பதால்தான் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையாவது வீடுதேடி போய் காலில் விழுகிறார்கள். அத்தோடு கோடி கோடியாக கொள்ளையடித்தாலும் சில நூறுக்களாவது புல்லுக்குப் பொசியும் நீராக ஏழைகளைச் சேர்கின்றன. இல்லாவிடின் அதுமில்லாமல் மிகக் கேவலமாக பாமரர்கள் நடத்தப்படுவார்கள்.

அத்தோடு படித்தவர்களுக்கும் ஆளுக்கொரு லேப்டாப் இலவசம், தங்கநகை இலவசம் என்று அறிவித்தால் அவர்களும் எளிதில் விழுந்துவிடுவார்கள். ஆளுமையும் புத்திசாலித்தனமும் வீரமும் ஏட்டுப்படிப்பில் பெறும் டிகிரியில் துளியும் இல்லை. படித்தவர்கள்தான் பாமரர்களைவிட முட்டாள்களாகவும் கோழைகளாகவும் மனதளவில் மெலிந்தவர்களாகவும், ஏமாற்றுக்காரர்களாகவும் இருக்கிறார்கள்.