ஊருக்குப் போகையில்
பாட்டிக்கு ஒரு
எம். எல். வி காசெட்...
தம்பிக்கு ஒரு
டி-ஷர்ட்...
அக்காவுக்கு ஒரு பர்ஸ்...
அக்காவின் குழந்தைக்கு
ஒரு பிரவுன் கலர்
குரங்கு பொம்மை...
அப்பாவுக்கு ஒரு
சுஜாதா புத்தகம்....
பெரியம்மாவுக்கு சுகர்-ஃப்ரீ ....
இத்தனையும் வாங்கிச் சென்றேன்..
அம்மாவைப் பார்த்து
உனக்கு ஏதும் வாங்கி வரவில்லையே என்றேன்....
'என் மகன் -
சம்பாதித்து
இத்தனையையும் வாங்கி வருகிறான்
என்ற சந்தோஷத்தை
எனக்கு வாங்கி வந்திருக்கிறாயே
என்றாள் அம்மா....
~சமுத்ரா
3 comments:
It reminded me of my mom.Gud one!!
அதுதாங்க அம்மாங்கிறது!
ப்ச் ... நெஞ்சை தொட்டுட்டீங்க சார் , நீங்க சொன்ன மாதிரி உங்கள் உங்கள் இதயத்தை மட்டும் அல்ல என் இதயத்தையும் கணக்க வைத்தது , அம்மாவின் அன்புக்கு ஈடே இல்லை சார் , அறிவியலுக்கே சவால் விடும் அன்பு சார் அது
Post a Comment