இந்த வலையில் தேடவும்

Monday, February 28, 2011

கலைடாஸ்கோப்-9

லைடாஸ்கோப்-9 உங்களை வரவேற்கிறது

நான் விரும்பும் இந்தியா
=====================

சிவாஜி நகரில் இருந்து கிளாஸை முடித்து விட்டுத் திரும்பும் போது 'சின்ன சாமி' ஸ்டேடியம் கண்ணில் பட்டது..நிறைய போலிஸ்காரர்கள் நின்றிருக்க மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு டிக்கெட் வாங்கிக் கொண்டிருந்தனர்..போன வாரம் டிக்கெட் வாங்கும் களேபரத்தில் அடி-தடி எல்லாம் நடந்ததாம்..

இன்று இளைஞர்கள் தேசப் பற்றை வெளிப்படுத்த கிரிக்கெட் ஒன்று மட்டுமே (மிஞ்சி) இருப்பது வேதனையான விஷயம்.மேலும் டி.வி.யில் விளம்பரங்கள் 'கம் ஆன் இந்தியா' (for what ???!) என்று கூவுகின்றன..
சில பேர் இந்த கிரிக்கெட் சீசனைப் பயன்படுத்திக் கொண்டு எப்படியெல்லாம் காசு பார்க்கலாம் என்று யோசிக்கிறார்கள்..(ஜட்டியில் கூட உலகக் கோப்பை லோகோ போட்டு ஸ்பெஷல் என்று விற்கிறார்கள்!) ..நான்கு சுவர்களுக்குள் அடைந்து கொண்டு
இந்தியா சிக்ஸர் போட்டால் கத்துவதும், வெடி வெடிப்பதும் தான் தேசபக்தி என்று ஆகி விட்டது..

இந்தியாவைப் பற்றிப் பெருமைப்பட இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பதை ஏனோ நாம் மறந்து விட்டோம்...ஓஷோ வின் 'நான் விரும்பும் இந்தியா' (INDIA my love ) என்ற புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா? அதிலிருந்து ஒரு quote

"நீங்கள் வேறு எந்த ஒரு நாட்டுக்கும் போகலாம்.அங்கெல்லாம் மிகவும் சரியான முறையில் அந்த மக்களையும் நாட்டையும் கண்டு கொள்ளலாம்-அதனுடைய வரலாற்றையும்,அதன் கடந்த காலத்தையும் கூட-ஜெர்மனியில்,இத்தாலியில்,பின்லாந்தில்,பிரான்சில்..ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில் நீங்கள் அங்கு செய்ததைப் போல செய்ய முடியாது.மற்ற நாடுகளை வகைப்படுத்திப் பார்ப்பது போல, இந்தியாவைப் பார்க்க முடியாது.நீங்கள் ஏற்கனவே அதன் மையப் புள்ளியைத் தவற விட்டு விட்டீர்கள்.ஏனென்றால், அந்த நாடுகளுக்கு ஓர் ஆன்மீக மரபு இல்லை..அவை ஒரு புத்தரையோ, ஒரு மகாவீரரையோ,ஒரு நேமிதாதாவையோ,ஒரு ஆதி நாதாவையோ,ஒரு கபீரையோ உருவாக்கவில்லை..அவை விஞ்ஞானிகளை உருவாக்கியிருக்கின்றன..எல்லா வகையான திறமையாளர்களையும் உருவாக்கியிருக்கின்றன. ஆனாலும் புதிரான இருண்மைத் தன்மை (mysticism ) இந்தியாவுக்கு மட்டும் உரியது.அந்தத் தன்மையில் இந்த நிமிடம் வரை இந்தியா அப்படியே தான் இருக்கிறது"

பில்ட்-அப்பா நிஜமா?
==================

இந்த IT கம்பெனிகளில் இருப்பவர்கள் கொடுக்கும் பில்ட்-அப்புகளில் ஒன்று "when I was in US " "When I was in Canada " என்றெல்லாம்..
(When I was in hometown என்று யாருமே சொல்வதில்லை!)உண்மை என்ன என்றால் அவர்கள் ஒரு மூன்று மாதம் பிசினஸ் விசாவில் போய் வந்திருப்பார்கள்..அதை வைத்துக் கொண்டு அடுத்த பத்து வருடத்திருக்கு "ச்சே, இது எல்லாம் ஒரு நாடா...கனடாவில் எல்லாம் கார் ஓட்டிட்டு வர்றவங்க நம்ம கிராஸ் பண்றப்ப நிறுத்தி, "நீங்க போங்க சார்/மேடம் " அப்படின்னு புன்னகைப்பாங்க " என்று கொஞ்சம் த்ரீ-மச்சாக அலட்டிக் கொள்வது.

அடுத்து பத்திரிக்கைகளில் சிலர் பேட்டி கொடுக்கும் போது சமீபத்தில் என்ன புத்தகம் படித்தீர்கள்? என்றோ என்ன திரைப்படம் பார்த்தீர்கள்? என்றோ கேட்டால் வாயில் நுழையாத ஏதோ ஒரு ஆங்கிலப் பேரைச் சொல்வது..(டமில் எல்லாம் படிக்கமாட்டோம்!)என் சந்தேகம் என்ன என்றால் உண்மையிலேயே முழுப் புத்தகத்தையும் படித்திருப்பார்களா இல்லை முதல் பக்கம் கடைசிப் பக்கம் மட்டும் படித்து விட்டு இந்த
பில்ட்-அப்பா என்பது தான்..

ரெண்டு பெரும் ஒரே கேஸ்
=======================

இனிமேல் வாயாடிகள் என்று பெண்களை யாராவது சொன்னால் சொன்னவரிடம் சண்டைக்குப் போகலாம்.சமீபத்திய ஆய்வு ஒன்று என்ன சொல்கிறது என்றால் ஆண்களும் பெண்களுக்கு நிகராக 'வள வளா கொழ கொழா' என்று அரட்டை அடிக்கிறார்களாம்....சப்ஜக்ட் கொஞ்சம் வேறுபடுமே தவிர அரட்டைக் கச்சேரியில் ரெண்டு பேரும் சளைத்தவர்கள் இல்லையாம்..என்ன, பெண்கள் 'திருமதி செல்வத்துல வாசுவ அவன் மாமனார் வீட்ட விட்டு வெரட்டிட்டாறாமே? ' என்று அரட்டினால் ஆண்கள் கடைசி ஓவரில் முனாப் படேல்-ஐ எறக்கி இருக்கக் கூடாதுப்பா' என்று அரட்டலாம் அவ்ளோதான் ..

இன்னொரு விஷயம் இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் தான் குண்டாக இருக்கிறார்களாம்..(ஜிம் போக வெட்கமாயிருக்கும் ) அது என்னவோ கல்யாணம் ஆன பிறகு பெண்கள் பலருக்கு beauty conscious குறைந்து தான் விடுகிறது...அக்கா, கல்யாணத்திற்கு முன்பு fair -n -lovely இல்லாமல் வெளியே போகவே மாட்டாள்..தினமும் சந்தனம் அரைத்துக் கொடுக்கச் சொல்லி முகத்திற்குப் பூசிக் கொள்வாள்..கடலை மாவு எடுத்துக் கொண்டு பாத் ரூம் போனால் வெளியே வர ஒரு மணி நேரம் ஆகும்..இப்போது கல்யாணம் ஆகி குழந்தைகளும் வந்து விட்ட பிறகு மூன்று நிமிடத்தில் ஏதோ ஒரு சோப்பை எடுத்து தேய்த்துக் கொண்டு அவசர அவசரமாக வெளிவருகிறாள் !

மாமழை போற்றுதும்
===================

மழைக்கு மனிதர்களின் சைக்காலஜியுடன் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது..எத்தகைய இறுக்கமான சூழ்நிலையையும் மழை மாற்றி விடுகிறது..அதுவும் சீசன் இல்லாமல் எதிர்பாராமல் வரும் மழை..(போன வாரம் வந்ததே?)மழைக்கு ஏதோ ஒரு மர்மமான அழகு இருக்கிறது..வில்லியம் வாட்டர்(?)வே என்ற கவிர் மழையை ஒரு கவிதையுடன் ஒப்பிடுகிறார் பாருங்கள்..

Or, how rain sprinkles
our entire universe
like words of an infinite poem
expressed in esoteric verse
by hand of unknown origin

மழை வந்தால் நீங்கள் சலித்துக் கொள்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு வயசாகி விட்டது என்று அர்த்தம்..

Just for laughs (gags )
=================

சில சமயங்களில் போகோ டி.வி பார்பதே மேல் என்று தோண்டுகிறது..அடுத்தவர் என்ன நினைத்துக் கொள்வார் என்று யோசிக்காமல் இனிமேல் போகோ பார்க்கவும்..அது நம்மை குழந்தைகளின் உலகுக்கு அழைத்துச் செல்லும்..ராத்திரி எட்டு மணிக்கு
Just for laughs (gags ) பார்த்திருக்கிறீர்களா?

அதில் அமெரிக்கர்களின் கற்பனைத் திறனும், நகைச்சுவை உணர்வும் வியக்க வைக்கிறது..உதாரணமாக, கடையில் நீங்கள் பில் கவுன்டரில் நின்றிருக்கும் போது எல்லாரும்
(முன்பே பேசி வைத்துக் கொண்டு) திடீரென்று சிலை போல உறைந்து போகிறார்கள்...நீங்கள் சாலையில் நடந்து போகும் போது ஒரு பாட்டி உங்களிடம் நெருங்கி 'இந்த பாட்டிலின் மூடியைத் திறந்து குடுங்க ப்ளீஸ்" என்கிறது..நீங்களும் கஷ்டப்பட்டு, பல்லில் கடித்து, தரையில் இடித்து அடித்து அதைத் திறந்து கொடுத்ததும் 'தாங்க்ஸ்' என்று சொல்லி விட்டு அதில் உள்ள தண்ணீரை எல்லாம் கீழே ஊற்றி விடுகிறது பாட்டி..ஒரு மாலில் நீங்கள் நடந்து போகும் போது உங்கள் கண்ணாடியை சுத்தம் செய்து தரவா என்று கேட்கிறார் ஒருவர்..ஓசி என்றதும் நீங்களும் கழற்றிக் கொடுக்கிறீர்கள்..கண்ணாடியைத் துணியில் சுற்றி (வேறு ஒரு டப்பா கண்ணாடி அது) ஒரு சுத்தியலை எடுத்து அதை நங் நங் என்று அடிக்கிறார்...எடுத்துப் பார்த்தால் கண்ணாடி சில்லு சில்லாக உடைந்து விடுகிறது..:)

இது போன்ற நிகழ்ச்சிகள் இந்தியாவில் அவ்வளவாகப் பிரபலமாகாதது ஏன் என்று யோசிக்கிறேன்..இந்தியர்கள் சீரியஸ் ஆன ஆசாமிகளா
மாறிக் கொண்டு வருகிறார்களா?
கடைசியில் இது எல்லாம் டிராமா தான் என்று சொல்லும் வரைக்கும் நாம் பொறுமையாக சிரித்துக் கொண்டு இருப்போமா என்று தெரியவில்லை.."டேய் சைக்கோ என் கண்ணாடியையா ஒடச்ச, நாயே ' என்று சில பேர் இங்கே அவர் சட்டையைப் பிடித்து விடும் அபாயம் இருக்கிறது

probability theory :)
==================
the probability of not receiving a call increases with every ring..

போன போஸ்டில் ஒரு வரைபடத்தை மறந்து விட்டேன்..அது கீழே...வழக்கம் போல கடைசியில் ஒரு ஓஷோ ஜோக்:

ஓஷோ ஜோக்
============
ஒரு பெண் தன் பையனுடன் கடற்கரையோரம் நடந்து போய்க் கொண்டிருந்தாள்..அப்போது திடீரென்று ஒரு பெரிய அலை வந்து அந்தப் பையனை உள்ளே இழுத்துச் சென்று விட்டது..அந்தப் பெண் அழ ஆரம்பித்தாள்..வானத்தை நோக்கிப் பிரார்த்தனை செய்தாள்: "கருணையின் உருவான கடவுளே..என் குழந்தையைத் திரும்பத் தாருங்கள்..நான் இனிமேல் உங்களுக்கு உண்மையானவளாக நடந்து கொள்வேன்..வாரம் தவறாமல் சர்ச்சுக்கு வருகிறேன்..என் கணவரை ஏமாற்ற மாட்டேன்..இன்கம் டாக்ஸில் தில்லு முள்ளு பண்ணே மாட்டேன்..தயவு செய்து
என் குழந்தையைத் திரும்பத் தாருங்கள்.."

அப்போது திடீரென்று இன்னொரு அலை எழுந்து வந்து அவள் பையனைத் துப்பியது ..

அவனை அப்படியே அணைத்துக் கொண்டு அவள் மீண்டும் மேலே வானத்தைப் பார்த்துக் கூறினாள் : "இவன் ஒரு புதுத் தொப்பி போட்டிருந்தானே?"


சமுத்ரா

5 comments:

ஆனந்தி.. said...

வழக்கம்போலே கலைடாஸ்கோப் சூப்பர் :)) சின்னசாமி ஸ்டேடியம் இல் மேட்ச் நடக்கும்போது அல்சூர் ஏரியாவே களைகட்டும் சமுத்ரா..கவனிச்சிருக்கிங்களா? அதுவும் 20 /20 உலககோப்பையை முதல் தடவை நம் இந்தியா ஜெயித்தபோது அந்த ஏரியாவில் நைட் பூராவும் திருவிழா தான்..ஒவ்வொரு வீட்டிலும் லட்டு டப்பா கொடுத்துட்டு போனாங்க...:))

ஓகே...அந்த வாயாடன் :)) நியூஸ் புதுசு தான்..:))

அந்த மழை பாட்டு...தென்..ஓஷோ ஜோக் எல்லாமே சூப்பர்...:))

Chitra said...

கடைசியில் இது எல்லாம் டிராமா தான் என்று சொல்லும் வரைக்கும் நாம் பொறுமையாக சிரித்துக் கொண்டு இருப்போமா என்று தெரியவில்லை.."டேய் சைக்கோ என் கண்ணாடியையா ஒடச்ச, நாயே ' என்று சில பேர் இங்கே அவர் சட்டையைப் பிடித்து விடும் அபாயம் இருக்கிறது

probability theory :)


... Our concept of sense of humor is totally different from theirs. They know how to laugh at themselves. :-)

சென்னை பித்தன் said...

//அடுத்து பத்திரிக்கைகளில் சிலர் பேட்டி கொடுக்கும் போது சமீபத்தில் என்ன புத்தகம் படித்தீர்கள்? என்றோ என்ன திரைப்படம் பார்த்தீர்கள்? என்றோ கேட்டால் வாயில் நுழையாத ஏதோ ஒரு ஆங்கிலப் பேரைச் சொல்வது..(டமில் எல்லாம் படிக்கமாட்டோம்!)//
காதலிக்க நேரமில்லை படத்தில்”we don't see tamil films,only english films" என்று சொல்வது போல்!

Jegan said...

Oshoவின் ஓஷோ வின் 'நான் விரும்பும் இந்தியா' புத்தகம் படிச்சிருக்கேன். ஒட்டு போட்டுஉட்டேன் சமுத்ரா.

ஷர்புதீன் said...

:)
entry