இந்த வலையில் தேடவும்

Tuesday, March 1, 2011

பிறப்பின் கவிதைகள்

இன்று பிறந்த நாள் என்பதால் காலையில் சீக்கிரம் ஆறுமணிக்கெல்லாம் (?) எழுந்திரித்து குளித்து விட்டு கதவின் வெளியே தேவர்கள், கந்தர்வர்கள் யாராவது துந்துபி முழங்க கையில் மாலையோடு நின்றிருக்கிறார்களா என்று எட்டிப் பார்த்த போது அப்படி யாரும் நின்றிருக்கவில்லை..face bookல் இருந்து சில வாழ்த்துக்கள் வந்தன.அவ்வளவு தான்
வேறொன்றும் பெரிதாக நடக்கவில்லை..சரி சில கவிதைகளையாவது எழுதலாம் என்று..

mutation
==========

தவறு செய்து விட்டாய் என்று
பேசும்
மானேஜரிடம்
சொல்லத் தோன்றுகிறது
செல்கள் படியெடுப்பதில் செய்த தவறுகளில் தான்
மனித இனமே பிறந்தது என்று ...

பத்தாம் கிரகம் தாய்
================

பிறந்த நாள் அன்று
கிரகங்கள் நாம் பிறந்த தேதியில் இருந்தது
போலவே இருக்குமாம்..
அம்மா கூட
நான் பிறந்த தேதியில் இருந்த மாதிரியே
இன்றும் இருக்கிறாள்!

க்ளோனிங்
===========

ஆண்களே இல்லாமல்
குழந்தை பிறப்பதைத் தவறு என்னாதீர்கள்!
காலம் காலமாக ஜன்ய ராகங்கள்
தாய் ராகம் ஒன்றில் இருந்து மட்டும்
பிறந்து வருகின்றன..

பிறவா வரம் தாரும்
==================

பிறவா வரம் தாரும் என்று
ஒரு சமயம் பாடுகிறான்
புல்லாய்ப் பிறவி தர வேண்டும்
என்று
ஒரு சமயம் புலம்புகிறான்
இப்படிப்பட்ட பக்தனை வைத்துக் கொண்டு
என்ன செய்வான் பரமன்?

பிறப்பொக்கும்
============

பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்...
பள்ளியில் சேர்க்கும்
வரை..

மன்மத லீலையை..
=================

முயலகன் வந்தான்
காலில் மிதிபட்டு மறைந்து போனான்...
அனலாசுரன்
பொசுக்கப்பட்டான்..
அவன் கதை அதோடு முடிந்தது..
சாம்பலான முப்புரங்கள்
உயிர்ப்பித்தது வந்ததாய் செய்தி ஒன்றும் இல்லை..
கஜமுகாசுரன் கூட
ஆடையாகி அழிந்து போய் விட்டான்
ஆனால்
காமன் மட்டும்
எரிந்து போனாலும் கூட
இன்னும் பிறப்பித்துக் கொண்டிருக்கிறான்..


ரிஷிமூலம்
==========

ரிஷி மூலம் பார்ப்பது
எவ்வளவு அபத்தமானதோ
நதி எங்கே பிறந்தது
என்று தேடுவது
எத்தனை முட்டாள்தனமானதோ
இசை எப்படிப் பிறக்கிறது
என்று யோசிப்பது
எத்தனை பொருளற்றதோ
அதே போல் தான்
ஒரு
கவிதையின் பிறப்பை ஆராய்வதும்.
இதயத்தை வருடும் ஒரு
கவிதையைப் படித்தால்
இனிமேல்
அதன் சொற்களால் ஆசிர்வதிக்கப்பட்டு
அதன் பொருளில் நீராடி
எழுத்துக்களில் மூழ்கி விடுங்கள்!


முத்ரா9 comments:

செல்வராஜ் ஜெகதீசன் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் சமுத்ரா.

தொடர்ந்து எழுதுங்கள்.

# கவிதை வீதி # சௌந்தர் said...

அனைத்து கவிதைகளும் அருமை..
வாழ்த்துக்கள்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

அனைத்து திரட்டிகளிலும் இணைப்பு கொடுங்கள்..

vasu said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...... முதற்கவிதை அருமை....

கனாக்காதலன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள். கவிதைகள் அருமை. குறிப்பாக கடைசிக் கவிதை.

ராஜ ராஜ ராஜன் said...

ரொம்பவே அழகு...
எல்லா கவிதைகளும்... கருத்துகளும்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

என் தாமதமான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

கவிதைகளும்... அருமை...

hareaswar said...

காலம் காலமாக ஜன்ய ராகங்கள்
தாய் ராகம் ஒன்றில் இருந்து மட்டும்
பிறந்து வருகின்றன..
===================
well.. nottai solla vantutaan nu ninaikatheenga... janya ragangal thaai ragathilentu pirantatunu entha madayan sonnathu...

karaharapriya vazhakathirku varuvatharku munnadiyae madhyamathi iruntatu.. natabairavi varathuku muntiyae bairavi, anandha bhairavi laam iruntatu..

pls summa thaai janyam nu pera matum vechutu mudivu pannatheengalaen... kind request.

Pryor said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...... முதற்கவிதை அருமை....