இந்த வலையில் தேடவும்

Tuesday, February 1, 2011

கலைடாஸ்கோப்-6


லைடாஸ்கோப்-6 உங்களை வரவேற்கிறது

வைகறைத் துயில் எழு
====================

இன்றைக்கு நம் இளைஞர்களிடம் குறைந்து வரும் (அல்லது அடியோடு அழிந்து விட்ட) பழக்கங்களில் ஒன்று அதிகாலையில் எழுந்திரித்தல்..நிறைய இளைஞர்கள் காலை ஆறு மணி , ஐந்து மணியை எல்லாம் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை என்கிறார்கள். (கல்யாணம், கிரகப்பிரவேசம் போன்ற விசேஷங்களில் சீக்கிரம் எழுந்து கொண்டதோடு சரியாம் ) ஆபீசில் வேலை எல்லாம் முடிந்து இரவு வீடு வந்து சேர்வதற்கு லேட் ஆகி விடுவதும் இதற்கு ஒரு காரணம்..பேச்சுலர்கள் தூங்குவதற்கே இரவு ஒரு மணி ரெண்டு மணி ஆகி விடுகிறது..வெள்ளிக்கிழமை என்றால் கேட்கவே வேண்டாம்.. பார்ட்டி, படம் என்று காலை மூன்று மணி, நான்கு மணி கூட ஆகலாம்... யாரோ ஒரு அறிவியல் அறிஞரை அவரது நண்பர் "நாளைக்குக் காலையில் ஐந்து மணிக்கு வாருங்கள் " என்று சொன்னதற்கு அவர் "பார்க்கிறேன், அவ்வளவு நேரம் விழித்திருக்க முடியுமா என்று" என்றாராம்...அதிக நேரம் கண் விழித்திருப்பதைக் காட்டிலும் காலையில் சீக்கிரம் எழுந்து கொள்வது கொடுமையானது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள் ..ஆன்மீகமும் அறிவியலும் மக்களை சீக்கிரம் எழுந்து கொள்ளச் சொல்லி ரொம்பவே ஐஸ் வைக்கின்றன..ஆன்மிகம் அப்போது பிரம்ம முகூர்த்தம் நடப்பதால் தேவதைகள் நடமாடுவார்கள் என்கிறது;அறிவியல் அதிகாலையில் ஓசோன் மூலக்கூறுகள் அதிகம் இருப்பதால் உடலுக்கு நல்லது என்கிறது. யார் என்ன சொல்லாலும் நாமெல்லாம் காலை ஐந்து மணிக்கு மேல் இதமான குளிரில் போர்வையை இன்னும் நன்றாக இழுத்திப் போர்த்திக் கொண்டு தூங்கும் சுகத்தை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என்றே தோன்றுகிறது..இப்போது மட்டும் அல்ல ..ஆண்டாள் காலத்திலேயே அவள் "எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ , நீ ஊமையோ , செவிடோ, ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாயோ " என்று பாடி வருத்தப்படும் அளவுக்கு கும்பகர்ணன்கள் (கர்ணிகள்) இருந்திருக்கிறார்கள்..என்ன தான் சொன்னாலும் சீக்கிரம் எழுந்து கொண்டால் அந்த நாளே அழகாகத்தான் இருக்கிறது. நீண்ட நேரம் கிடைத்தது போலத் தெரிகிறது..ஆபீஸ் பஸ் வந்து விடுமே என்ற அவசரத்தில் டிபனை வாயில் அடைத்துக்கொண்டே இன்னொரு கையில் சாக்ஸ் போட்டுக் கொண்டு கஷ்டப்பட வேண்டாம் பாருங்கள்..ஒரு மாறுதலுக்காக இனிமேல் வாரத்தில் ஒருநாளைக்காவது சீக்கிரமாக ஆறு(?) மணிக்கெல்லாம் எழுந்து கொண்டு விஜய் டி.வி யில் "மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே" கேட்டுப்பாருங்கள்..That will make your day ..

ஒரு அட்வைஸ்
==============

நீங்கள் வீட்டு கம்ப்யூட்டரையோ ஆபீஸ் கம்ப்யூட்டரையோ தொடர்ந்து உபயோகிப்பவர்களாக இருந்தால் அதில் உங்கள் 'யூசர்-நேம்' மற்றும் 'பாஸ்வேர்ட்' களை அப்பயே நினைவில் வைத்திருக்கும் படி கொடுத்திருப்பீர்கள்..இது ஒருவிதத்தில் சௌகரியம் என்றாலும் அடிக்கடி அவற்றை கிளியர் செய்து விட்டு மீண்டும் கொடுங்கள் ..வீட்டையோ அலுவலகத்தையோ விட்டு வெளியில் இருந்து எங்கேனும் நீங்கள் அவசரமாக 'மெயில்' பார்க்க வேண்டி வரும் போது உங்கள் பாஸ்வேர்டின் ஒரு எழுத்து கூட ஞாபகம் வராமல் போகக்கூடும்..எனக்கு சமீபத்தில் அப்படி தான் நடந்தது..

பொ.க
=====

* பெங்களூருவில் பொதுக் கழிப்பிடங்களில் நம்பர் ஒன் போக காசு வசூலிப்பதில்லை..பொதுக் கழிப்பிடங்களும் மிகவும் சுகாதாரமாக இருக்கின்றன. கோயம்புத்தூர் காந்திபுரம் பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள பொதுக் கட்டணக் கழிப்பிடங்களையும் இந்த நேரத்தில் நினைத்துக் கொள்ளத் தோன்றுகிறது..அநியாயத்திற்கு இரண்டு ரூபாய் மூன்று ரூபாய் கேட்கிறார்கள்..உள்ளே போய்ப் பார்த்தால் அவசரமாக வந்ததும் நின்று விடும் அளவு 'Maintenance ' இருக்கிறது..வெளியூரில் இருந்தோ வெளிநாட்டில் இருந்தோ யாராவது நம் 'வந்தாரை வாழ வைக்கும்' (?) தமிழகத்திற்குள் நுழைந்தால் அவர்களை முதலில் உள்ளே வரவேற்பது இந்த மாதிரியான 'அக்-மார்க்' பொதுக் கழிப்பிடங்கள் தான்..புகழ் பெற்ற சுற்றுலாத் தளங்களிலும் பொ.க .இந்த லட்சணத்தில் தான் இருக்கின்றன..கோடிக்கணக்கில் செலவு செய்து தமிழ் மாநாடு நடத்துபவர்களுக்கு இந்த அடிப்படையான விஷயங்கள் தெரியாதது ஆச்சரியமாக இருக்கிறது..

இன்னொரு விஷயம்..உலகத்தின் சிறந்த ஓவியர்களும், கவிஞர்களும் தங்கள் திறமையை ஏன் பொ.க. வின் கதவுகளோடும் சுவர்களோடும் மட்டும் நிறுத்திக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை..குறைந்த பட்சம் ஒரு ப்ளாக்- ஆவது ஆரம்பிக்கலாமே?

நான் யார்?
========

சில துணி விளம்பரங்கள் "YOU ARE WHAT YOU WEAR " என்று கூவுகின்றன..மேற்கத்திய தத்துவஞானமே "YOU ARE WHAT YOU THINK " என்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
டெஸ்கார்டசின் I THINK THEREFORE IAM என்ற புகழ் பெற்ற வாக்கியத்தை நீங்கள் கேட்டிருக்கலாம்..(நான் நினைக்கிறேன்..அதனால் நான் இருக்கிறேன்) அதாவது நான் இருக்கிறேனா? இல்லையா? என்று உங்களுக்கு சந்தேகம் வந்தால் அந்த சந்தேகமே, அந்த நினைப்பே நீங்கள் இருப்பதற்கான அடையாளம்..இதையே 'நியூட்ரீஷியன் ' என்று அழைக்கப்படும் உணவு வல்லுனர்களிடம் கேட்டால் YOU ARE WHAT YOU EAT என்பார்கள்..பேச்சாளர்களிடம் கேட்டால் YOU ARE WHAT YOU SPEAK என்பார்கள்..எனக்கென்னமோ இவை எல்லாம் வியாபாரத் தந்திரத்திற்காக உருவான வாக்கியங்கள் என்று தோன்றுகிறது..நான் யார் என்று குறிப்பிட்டு எப்படி நம்மால் சொல்ல முடியும்? அதிகபட்சம் YOU ARE NOT WHAT YOU THINK YOU ARE என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.
.
ஒரு விண்ணப்பம்
=================

ஃபேஸ் புக்கை முகப்புத்தகம், முகநூல், வதன கிரந்தம் என்றெல்லாம் தயவு செய்து அழைக்காதீர்கள்..தமிழ் நாட்டை சேர்ந்த யாராவது
பேஸ் புக்கை கண்டுபிடித்திருந்தால் (?) அந்த நன்றிக்காக இந்த மாதிரியான லூசுத்தனமான மொழிபெயர்ப்புகளைப் பொறுத்துக் கொள்ளலாம்.நாம் முகப்புத்தகம் என்று சொல்லித் தான் தமிழை வாழ வைக்க வேண்டும் என்பதில்லை..அதே மாதிரி நாம் மொழிபெயர்க்காவிட்டால் கல்தோன்றி மண் தோன்றும் முன்னே தோன்றிய தமிழ் நாளைக்கே வழக்கொழிந்து போய் விடும் என்ற ஆபத்தும் இல்லை..

ஒரு பொன்மொழி
===============

I think, therefore I'm single. ~Lizz Winstead ...புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்

வினை தான் என் செயும்?
=======================

* கர்நாடக முதலமைச்சர் "எனக்கு எதிர்கட்சிக் காரர்கள் பில்லி சூனியம் வைத்து விட்டார்கள்" என்ற
சரித்திரப் புகழ் வாய்ந்த ஒரு வசனத்தைப் பேசியிருக்கிறார். 'சகல கிரஹ பல நீனே" (நாள் என் செயும் வினை தான் என் செயும்) என்று பாடிய புரந்தர தாசர் வாழ்ந்ததும் கர்நாடகாவில் தான்..அறிவியல் தொழில் நுட்பத்தின் தலைநகரம் பெங்களூர் இருப்பதும் கர்நாடகாவில் தான்.அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்து கொண்டு இப்படி சின்னப்பிள்ளைத் தனமாக அவர் 'பேட்டி' கொடுப்பது சிரிப்பாக இருக்கிறது..


ரொம்ப கடுகடுப்பாக முகத்தை வைத்துக் கொள்ளாதீர்கள்..ஒரு ஓஷோ ஜோக்:

ஓஷோ ஜோக்
============

பேடி (Paddy ) ஒரு பாருக்கு சென்று நன்றாக குடித்து விட்டிருந்தான்...சரி வீட்டுக்குப் போகலாம் என்று சுதாரித்துக் கொண்டு எழுந்து நின்றான்...அப்படியே 'பொத்' தென்று கீழே விழுந்து விட்டான்..எப்படியோ ஊர்ந்து கொண்டே போய் பப்பின் வாசலை அடைந்தான்..பஸ் வருகிறது என்று எழுந்து நின்றான்...மீண்டும் பொத் என்று விழுந்து முகத்தில் அடிபட்டான்..எப்படியோ வீடு வந்து சேர்ந்து காலிங் பெல்லை அழுத்துவதற்காக நின்றான்..அப்போதும் தலைக்குப்புற விழுந்தான்..பெட் ரூமிற்கு சென்று கதவைத் திறக்க மீண்டும் எழுந்து நிற்கையில் மறுபடியும் விழுந்தான்..

அடுத்த நாள் காலையில் அவன் மனைவி "நேத்து நல்லா குடிச்சிட்டு வந்தீங்களா, இதே பொழப்பாப் போச்சு" என்று திட்டினாள்..

"உனக்கு எப்படி தெரிஞ்சுது நீ தூங்கிட்டு தானே இருந்த" என்றான் பேடி..

"பார்ல இருந்து போன் வந்துது..மறுபடியும் உங்க சக்கர நாற்காலிய அங்கேயே விட்டுட்டு வந்துட்டீங்களாம் "


முத்ரா

6 comments:

ஷர்புதீன் said...

i can wake up early, cant work in night time....
:)

arasan said...

அலசல் அருமை ....
சில விசயங்களை நானும் பின்பற்ற முயலுகிறேன் //
பதிவு நன்று

ரிஷபன் said...

வர்ண ஜாலம்!

Chitra said...

"YOU ARE WHAT YOU WEAR "

"ஆள் பாதி .... ஆடை பாதி" என்று சொன்னதை, தங்கள் விளம்பர யுத்தியால் எப்படியெல்லாம் மாற்றி விடுகிறார்கள்?

Philosophy Prabhakaran said...

பேஸ்புக் நிறுவனர் ரேஞ்சுக்கு இப்படி பீல் பண்ணுறீங்களே... அப்படி தமிழ்ப்படுத்தி அழைப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை...

bandhu said...

என்ன ஒரு எளிமையான தெளிந்த நடை! தேர்ந்த எழுத்தாளராகி வருகிறீர்கள்!