இந்த வலையில் தேடவும்

Wednesday, December 15, 2010

நூறாவது பதிவு!

இது ஒரு மிகப் பெரிய சாதனையா என்று கேட்க வேண்டாம்...என்ன செய்வது? நாமெல்லாம் டெஸ்ட் மாட்சில் நூறு ரன் அடித்து விட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ள முடியுமா? இல்லை நூறு படங்களில் நடித்து விட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ள முடியுமா? இது மாதிரி ஏதாவது மொக்கை பதிவுகளை எழுதி நூறு நூறு என்று தம்பட்டம் அடிக்க வேண்டியிருக்கிறது...


பதிவுக்குப் போகும் முன்னால் நூறாவது பதிவு என்பதால் ஒரு விஷயத்தைப் பற்றி பேசலாம்..(எல்லா பதிவுலயும் கருத்து சொல்வோம்ல??) 'Hundredth Monkey effect ' என்று அழைக்கப்படும் 'நூறாவது குரங்கு விளைவு' ...உயிரியல் அறிர் டாக்டர். லையால் வாட்சன் (
(1938-2008) தனது ஆராய்ச்சிக்காக ஜப்பான் தீவுகளில் வாழும் குரங்குகளை கவனித்துக் கொண்டிருந்தார்..ஒரு குறிப்பிட்ட தீவில் வாழும் குரங்குகள் 'sweet potato ' என்று அழைக்கப்படும் ஒருவித கிழங்கை சாப்பிடுவதற்கு முன் கடலில் கழுவி விட்டு சாப்பிட்டன...இது ஒன்றும் அதிசயம் இல்லை தான் ..ஆனால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள குரங்குகள் (நூறு என்று வைத்துக் கொள்வோம்) இந்த பழக்கத்தைக் கற்றுக் கொண்ட பின் இந்த செய்தி உடனடியாக மற்ற தீவுகளில் உள்ள குரங்குகளுக்கும் எப்படியோ 'டெலிபதிக்' காக எட்டி விடுகிறது...மிக மிக அதிக தூரத்தில் உள்ள, கடலால் பிரிக்கப்பட்ட தீவுகளில் உள்ள குரங்குகளும் இந்த 'கழுவி சாப்பிடும்' பழக்கத்தை ஆரம்பிக்கின்றன...அந்த தீவில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை (100 ) அடையப்பட்டதும் இந்த பழக்கம் மற்ற தீவுகளுக்கும் பரவுகிறது.. இது எப்படி சாத்தியம் என்று இதுவரைக்கும் கண்டுபிடிக்கப்படவில்லை...இது பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த லையாலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கை எய்தி விட்டார்...டெலிபதிக்கு ஒரு முக்கிய உதாரணமாக விளங்கும் இந்த நிகழ்ச்சி உலகத்தில் நாகரீகங்கள் இந்த முறையில் பரவி இருக்கலாமோ என்று நினைப்பதற்கும் வழிவகுக்கிறது...
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அதை இங்கிலிபீசுல படிச்சுக்கங்க "Hundredth Monkey Phenomenon means that when only a limited number of people know of a new way, it may remain the conscious property of these people. But there is a point at which if only one more person tunes-in to a new awareness, a field is strengthened so that this awareness is picked up by almost everyone!"

சரி பதிவுக்கு வருவோம்..

பதிவுலகில் நூறு பதிவுகள் எழுதுவது கொஞ்சம் கஷ்டம் தான் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து ..குறிப்பாக எதை வேண்டுமானாலும் எழுதலாம் (கிறுக்கலாம்) என்று நினைக்காமல் ஏதாவது உபயோகமாக எழுதலாமே என்று நினைப்பவர்களுக்கு... இதை எடுத்து சொன்னால் பெரும்பாலும் அடிக்க வருகிறார்கள்...பதிவுலகம் சீரியஸ் ஆக எழுதுபவர்களுக்கானது அல்ல (அதையெல்லாம் 'தமிழ் முரசு' மாதிரி 'இதையெல்லாம்- கூட- படிக்கிறார்களா' டைப் பத்திரிக்கைகளில் எழுதிக் கொள்ளுங்கள்) என்றும் Blogging என்பது ஒரு விதமான வடிகால் என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள்...எவ்வளவோ விஷயங்கள் தமிழில் அழகாக எடுத்து சொல்ல இருக்கும் போது பதிவர்கள் பெரும்பாலானோர் தங்களின் வட்டத்தை சுருக்கிக் கொண்டு உபயோகம் இல்லாத so -called 'மொக்கை' பதிவுகளில் 'வடை' 'வடை' என்று
துரதிர்ஷ்ட வசமாக பேசிக் கொண்டு உள்ளார்கள்...அத்தி பூத்தாற்போல யாராவது சில உருப்படியான விஷயங்களை சொல்ல வந்தால் பெரும்பாலும் ஆதரவு கிடப்பதே இல்லை..

அறிவியல் பற்றி ஏதோ நமக்கு தெரிந்ததை சொல்லலாம் என்று ஆரம்பித்த ஒரு தொடர் 'அணு அண்டம் அறிவியல்' ...இதை பாதியிலேயே நிறுத்த வேண்டி வந்தது...இயற்பியலைப் பற்றி சொல்வதற்கு நீ யார்? Ph .D யா? டாக்டரேட்டா ? என்று நீங்கள் கேட்கலாம் ...வாஸ்தவம் தான்...ஆங்கிலத்தில் 'appreciation without apprehension ' என்று சொல்வார்களே அது மாதிரி ஒரு விஷயத்தைப் பற்றி பேசி வியக்க 'apprehension ' (புரிதல்) இல்லாவிட்டாலும் 'புகழ்தல்','வியத்தல்' (appreciation ) போதும் அல்லவா? உதாரணமாக கர்நாடக இசையை முறைப்படி கற்றவர்களை விட அதை முறைப்படி கற்காமல் ஆர்வம் காரணமாக விருப்பத்துடன் அதைக் கேட்டு ரசிப்பவர்களால் மிக நன்றாக ரசிக்க முடியும்...[[எல்லாம் தெரிந்தால் அங்கே சுருதி சரியில்லை, இங்கே இந்த காந்தாரம் வராது, தாளம் பிசகி விட்டது என்றெல்லாம் யோசிக்கத் தோன்றுமே தவிர 'அவரெல்ல ஹிதரேனோ? நா நினகே அன்யனோ?" ( அவர்களெல்லாம் உனக்கு இதமானவர்கள்...நான் மட்டும் உனக்கு அன்னியனாகப் போய் விட்டேனா ?) என்று பாடகர் பாடும் போது பக்தியில் கண்ணீர் மல்கி மெய் மறப்பதற்கெல்லாம் அவகாசம் இருக்காது]]

'கணேஷ்' ஒரு suggestion சொன்னார்...அறிவியல் விஷயங்களை கட்டுரையாக எழுதாமல் கதையாக எழுதலாமே என்று..சரி அப்படியாவது ஆன்மீகமும் அறிவியலும் கலந்து கொஞ்சம் எழுதிப் பாப்போம் என்று ஆரம்பித்தது தான் 'மஹிதர் நீ மறைந்து விடு' தொடர்...ஆனால் அதையும் பாதியில் நிறுத்த வேண்டி வந்தது...ஓஷோ ஜோக்ஸ் எழுதினால் ஓரளவு நல்ல 'response' வருகிறது...ஆனால் you know அவர் சொன்ன பெரும்பாலான ஜோக்குகள் இங்கே பதிவிட முடியாத 'Adult only ' ஜோக்குகள்...:(

என் தாழ்மையான வேண்டுகோள் என்ன என்றால் பதிவுலக அனுபவஸ்தர்கள் புதிதாக எழுதுபவர்களை தயவு செய்து 'ஈகோ' பார்க்காமல் ஊக்குவிக்க வேண்டும்..(தவறு என்றால் அதையும் சுட்டிக் காட்டலாம்) தமிழ் மணத்தில் இணைக்கப்படும் பதிவுகளில் ஒரு என்பது சதவிகிதம் கேட்பாரற்று ஜீரோ கமெண்டுகளுடன் முடங்கி விடுகின்றன..ஒரு சில பதிவுகள் இருநூறு கமெண்டுகளுடன் இருக்கின்றன...என்னடா விஷயம் என்று கிளிக் செய்து பார்த்தால் அவை பெரும்பாலும் வெட்டி அரட்டைகளாக உள்ளன...ஆர்குட், பேஸ் புக், ட்விட்டர் இவைகளைத்
தொடர்ந்து இன்று வலை உலகத்திலும் அரட்டைக் கச்சேரியே அதிகமாக உள்ளது... சமீபத்தில் எனக்குத் தெரிந்து ஒருவர் 'ஜோதிடம்' பற்றி மெனக்கெட்டு நிறைய எழுதி வந்தார்...(பெயர் மறந்து விட்டது) யாருமே கண்டு கொள்ளவில்லை..."தயவு செய்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்' என்று கேட்டு கூட பார்த்தார்...உஹும்.. :(

இன்னொரு விஷயம்...நான் எந்த ப்ளாக்-இலும் follower ஆக இணைய வில்லை...கமெண்டு போடுவதும் மிக மிகக் குறைவு...(என்ன ஒரு தலைக்கனம் இவனுக்கு????) இப்படி இருந்தும் நான் ஏதோ கிறுக்கியதற்கு மதிப்பு கொடுத்து இணைந்த ஐம்பது 'followers ' களுக்கும் [ரெண்டு பதிவுகளுக்கு ஒரு follower :):) ], பின்னிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கமெண்டுகளுக்கும் மிக்க நன்றி நன்றி நன்றி!!!!

இன்னும் தமிழ்ப்பதிவுலகில் தொடர்ந்து எழுதுவதற்கு உங்கள் மேலான ஆதரவை எதிர்பார்க்கும்

சமுத்ரா

8 comments:

எல் கே said...

முதலில் வாழ்த்துக்களை பிடியுங்கள். இதை நான் உங்களுக்கு முன்பே சொன்னேன். சொன்னதுக்கு பெரிய சண்டை ஒன்றும் நடந்தது. அடுத்தவர்களை விட்டுவிட்டு, நாம் எழுதுவதை உபயோகமாய் எழுதுவோம்

NKS.ஹாஜா மைதீன் said...

வாழ்த்துக்கள்.....

கணேஷ் said...

வாழ்த்துக்கள் நிறையா எழுதுங்கள்...

எல்லாம் சரியாகும்...

ரஹீம் கஸ்ஸாலி said...

100-க்கு வாழ்த்துக்கள்

தினேஷ்குமார் said...

நூறு பலநூறாக வாழ்த்துக்கள்

அப்படியே என் நூறுக்கும் வாங்க

http://marumlogam.blogspot.com/2010/12/blog-post_3727.html

Unknown said...

வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!! :-)

Philosophy Prabhakaran said...

வாழ்த்துக்கள்.... ஆறும் மாதங்களில் நூறு பதிவுகள் எழுதுவது கடினமானதுதான்...

சமுத்ரா said...

வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள்!