இந்த வலையில் தேடவும்

Wednesday, December 15, 2010

நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்- 17

ஒரு ட்ரக் டிரைவர் ஹை-வே ஒன்றில் மிக வேகமாக ட்ரக்கை ஓட்டிக் கொண்டிருந்தான்..

அப்போது வலது பக்கம் திரும்பிப் பார்த்ததில் சாலையில் ஒரு ஆள் விநோதமாக மிக வேகத்தில் தன் பைக்கை ஓட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்...அதாவது பைக்கின் மேல் நின்று கொண்டு ஒரு காலால் பேலன்ஸ் செய்த படி அதி வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தான்...

பைக் ஆசாமி ஒரு சிகரெட்டை பாக்கெட்டில் இருந்து எடுத்து டிரக் டிரைவரிடம் "ஏய், தீப்பெட்டி இருக்கா? இருந்தா தூக்கிப் போடு" என்று கத்தினான்...

ட்ரக் டிரைவர் தீப்பெட்டியை அவனிடம் தூக்கிப் போட்டு "டேய் , சாவு கிராக்கி, பாத்துடா ,செத்து கித்து தொலையப் போற" என்றான்..

அதற்கு பைக் ஆசாமி "கவலைப்படாதே , ஒரு நாளைக்கு ஒரு சிகரெட்டு தான் குடிக்கறேன்" என்றான் ....

கோல்ட்பர்க்கின் மனைவி அவளது மரணப்படுக்கையில் இருந்தாள்...

அருகில் அமர்ந்திருந்த தன் கணவனைப் பார்த்து "என்னங்க, நான் செத்ததும், நீங்க கண்டிப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்" என்றாள்..

"சே, என்ன பேசற நீ, அப்படியெல்லாம் கனவிலும் நடக்காது" என்றான் கோல்ட்

"அப்படி சொல்லாதீங்க...நான் போனதும் காலம் பூராவும் நீங்க தனியா கஷ்டப்படணுமா?"

"உன்னைத் தவிர வேறு யாரையும் நான் நெனச்சுக் கூட பார்க்க மாட்டேன்...."

"கொஞ்சம் யோசிங்க....."

"இல்லை...உன் இடத்துல யாரையும் என்னால பார்க்க முடியாது..உன் நினைவிலேயே காலத்தை ஓட்டுவேன்...."

"ப்ளீஸ், உங்க புது மனைவிக்கு என் டிரஸ்சை எல்லாம் குடுத்துருங்க"...

"புரியாமப் பேசாதே, நான்சி உன்ன விட கொஞ்சம் குண்டு, உன்னுது மாட்சே ஆகாது! "


சமுத்ரா

6 comments:

ஜீ... said...

ஏற்கனவே வாசித்து மறந்திருந்தேன்! நினைவூட்டி விட்டீர்கள்! நன்றி! :-)

cheena (சீனா) said...

அன்பின் சமுத்ரசுகி - ரெண்டு ஜோக்குமே சூப்பர் - நசுன்னு முடிவு - ஓஷோ த கிரேட் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

VELU.G said...

ஹ ஹ ஹ ஹ ஹ ஹா

க.மு.சுரேஷ் said...

:)

tamil blogs said...

தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://tamilblogs.corank.com/

Mercertgdk said...

அன்பின் சமுத்ரசுகி - ரெண்டு ஜோக்குமே சூப்பர் - நசுன்னு முடிவு - ஓஷோ த கிரேட் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா