இந்த வலையில் தேடவும்

Wednesday, November 3, 2010

நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்- 15நண்பர்கள் பீட்டரும் பேடியும் (Paddy ) ஒரு நாள் ஒரு ஒயின் ஃபெஸ்டிவலுக்கு சென்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்....சிறிது அளவுக்கு அதிகமாகவே குடித்து விட்டிருந்தனர்....

"பீட்டர், நாம் நம் டவுனுக்கு பக்கத்தில் வந்து விட்டோமா?" என்று கேட்டான் பேடி...

"அப்படிதான் நினைக்கிறேன்....காரில் நிறைய பேரை நாம் இடிப்பதால் நாம் டவுனுக்குள் நுழைந்து விட்டோம் போல தோன்றுகிறது" என்றான் பீட்டர்....

"ஐயோ, அப்படியானால் மெதுவாக ஓட்டு...நிதானமாக ...பார்த்து......மெதுவாக ஓட்டு...." என்று கத்தினான் பேடி...

"டேய், நீ என்ன சொல்ற..நீதானே காரை ஓட்டிட்டு இருக்கற" என்றான் பீட்டர்...


^^^^


கடலில் சென்று கொண்டிருந்த ஒரு கப்பலின் கேப்டன் தனது மூன்று துணை கேப்டன்களை அவசரமாக அழைத்தார்....

"இதைப் பாருங்கள்....இந்த கப்பல் இன்னும் சிறிது நேரத்தில் மூழ்கி விடும்....யாரிடமும் சொல்லாதீர்கள் ...என்னிடம் மூன்று பேர் தப்பிக்கும் அளவு ஒரு சின்ன விசைப் படகு உள்ளது...சத்தம் இல்லாமல் பின் வழியாக இறங்கி விடலாம்...ஆனால் என்னுடன் இரண்டு பேர் தான் கூட வர முடியும்....உங்களை ஆளுக்கு ஒரு கேள்வி கேட்பேன்...சரியான விடை சொன்னால் தான் என்னுடன் வர முடியும்" என்றார்....

"சரி" என்றனர் அவர்கள்.....

முதல் ஆளைப் பார்த்து " பனிப்பாறை மோதியதால் கடலில் மூழ்கிய கப்பலின் பெயர் என்ன?" என்றார்

"டைட்டானிக்"

"கரெக்ட்..."

இரண்டாவது ஆளைப் பார்த்து "அதில் எத்தனை பேர் பயணம் செய்தனர்" என்றார்.....

"ஆயிரத்து ஐநூற்று இரண்டு பேர்"

"சரி..." என்ற அவர் மூன்றாவது ஆளைப் பார்த்து "அவர்களின் பெயர்கள் என்ன" என்றார்.....

~சமுத்ரா