இந்த வலையில் தேடவும்

Saturday, July 10, 2010

பிரபஞ்சத்தின் ஆதார விசைகள்- II


நீங்கள் உலகம் " பஞ்ச பூதங்களால் " ஆனது என்ற கருத்தைப் பெரும் பாலும் படித்திருப்பீர்கள். ஆனால் அறிவியல்இதனை ஏற்காமல் பூதம் பிசாசு எல்லாம் இல்லை, பார்த்து விடலாம் என்று அதிகப்ரசிங்கித் தனமாக பூதக்(?) கண்ணாடி வைத்துக் கொண்டு பொருட்களின் உள்ளேஎன்ன இருக்கிறது? என்று ஆராயத் தொடங்கியது. அப்படிப் பார்த்த போது, உள்ளே 'அணு' என்ற சமாச்சாரம் இருப்பதைக் கண்டது.
(இதை நாங்கள் வேத காலத்திலேயே சொல்லி இருக்கிறோம் என்று அடம் பிடிக்கக்
கூடாது )....அணு என்ற செங்கல்லால் தான் இந்த அண்டம் கட்டப்பட்டுள்ளது என்று ஒருதற்காலிக முடிவுக்கு வந்தது.

சில அதிருப்தி-வாதிகள் அணுவுக்குள்ளும் புகுந்து பார்த்து விடலாமே? என்ற கொலை வெறியுடன் உள்ளே சென்று நோக்கியதில் அணுக்கரு ஒன்றுஇருப்பதையும் அதில் 'ப்ரோடான்' மற்றும் 'ந்யூட்ரான்' என்ற சமாச்சாரங்கள்இருப்பதையும் கண்டனர். அது
மட்டும் இல்லாமல் அணுவின் பெரும் பகுதி வெற்றிடமாக இருப்பதையும்அணுவின் வெளி ஆரங்களில் 'எலக்ட்ரான்கள்' சுற்றி வருவதையும் ( பகவானை வலம் வரும் பக்தன் போல) கண்டு தெளிந்தனர். உள்ளே வாழும் இந்த 'ப்ரோடான்' கள் நேர் மின் விசை கொண்டவை. (உங்கள்வீட்டில் ஒரே சமயத்தில் பத்து பதினைந்து பெண்கள் இருந்தால்? (ஐயோ!ஒண்ணையே சமாளிக்க முடியலையே என்று யாரோ புலம்புவது காதில்விழுகிறது) சண்டைக்கு குறைவே இருக்காது இல்லையா? அதே போல இந்த 'ப்ரோடான்' கள் ஒன்றை ஒன்று விட்டு விலகிஓட முயற்சி செய்யும். அனால் அணுக் கருவுக்குள் செயல்படும் 'வலுவான அணுவிசை' (strong nuclear force) (விசை நம்பர் -1) அவற்றை நன்றாக FEVICON போட்டு ஒட்டி வைத்து
உள்ளது. இந்த விசையின் வரம்பு (range) மிகக் குறைவு என்றாலும் இதன் வலிமை
மிகப் பெரியது. (அதனால் தான் இந்த விசை நான்கு விசைகளில் முதலாவதாகவருகிறது)

இந்த விசை எவ்வளவு வலிமையானது என்றால் ஒன்றோடு ஒன்று ஒட்டி வாழும் ப்ரோடான் களை வலுக் கட்டாயமாகப் பிரிக்கும் போது பிரம்மாண்டமான விசை வெளிப்பட்டு ஒரு நகரத்தையே அழிக்கும் அளவு உருவெடுத்து விடுகிறது. (அணு குண்டு)
இந்த விசை மட்டும் இல்லை என்றால் (அல்லது கொஞ்சம் குறைவாகவோ அதிகமாகவோ இருந்திருந்தால்) நீங்களும் நானும் வந்திருக்க மாட்டோம்.

இந்த விசையில்லாமல் மேலும் இரண்டு விசைகளும் அணுக்கருவுக்குள் செயல் படுகின்றன. அவை:

> ப்ரோடான் -ப்ரோடான் ஈர்ப்பு விசை (விசை நம்பர் -4)
> ப்ரோடான் - ப்ரோடான் மின் காந்த விலக்கு விசை (

விசை நம்பர் -2 )

ஆனால் நம் தாதா வலிய விசையின் முன்பு இந்த இரண்டும் Client -இடம் கை கட்டி நிற்கும் project manager போல வாலைச் சுருட்டிக்
கொண்டு இருக்க வேண்டியது தான்..... :)

'வலுக் குறைந்த அணுவிசை' (weak nuclear force) (
விசை நம்பர் -3) பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். too tired now...ஒரு சனிக்கிழமை அன்று (மணி 7. 00 pm)இந்த மாதிரி
விசயங்களை ஆபீஸ்- இல் உட்கார்ந்து கொண்டு எழுதுவது எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவும் please....


4 comments:

adhvaithan said...

proton proton attraction force ah.. athu enna putu matter.. :O:O suthama mudila.. peria peria vishayamlaam pesreenga...

Jegan said...

உங்கள் இடுகை நன்றாக உள்ளது. ஆனால் விஷயத்தை விட காமடி என்ற பெயரில் இடையிடையே நீங்கள் கிச்சுகிச்சு மூட்டுவது கொஞ்சம் ஓவராக உள்ளது. சுஜாதாவும் இப்படியெல்லாம் எழுதுவார். ஆனால் அளவாக இருக்கும். கொஞ்சம் too much.குறைத்துகொண்டால் இன்னும் நன்றாக இருக்கும்.
உதாரணம்:
(இதை நாங்கள் வேத காலத்திலேயே சொல்லி இருக்கிறோம் என்று அடம் பிடிக்கக்
கூடாது )...
( பகவானை வலம் வரும் பக்தன் போல) கண்டு தெளிந்தனர்.
(உங்கள்வீட்டில் ஒரே சமயத்தில் பத்து பதினைந்து பெண்கள் இருந்தால்? (ஐயோ!ஒண்ணையே சமாளிக்க முடியலையே என்று யாரோ புலம்புவது காதில்விழுகிறது) சண்டைக்கு குறைவே இருக்காது இல்லையா?

Aba said...

@ஜெகன் சார்,

சார், இதுமாதிரி நகைச்சுவையை இடையில் சொருகாமல் அறிவியல் பதிவு எழுதுவது கஷ்டம். அதை வாசிப்பது மிகக்கஷ்டம். புரிந்துகொள்வதற்குப் பதிலாக நாண்டுகிட்டுச் சாகலாம். கசப்பு மாத்திரையை வாழைப்பழத்தில் வைத்து கொடுத்தால்தான் நாம் சாப்பிடுவோம். இல்லாவிட்டால் வந்தி வரும். மாத்திரையும் வேஸ்ட்..

நகைச்சுவையற்ற அறிவியல் ஈரானியப் படங்கள் மாதிரி.. அந்தப் படங்களை ஒஸ்கார்காரனுகளும் ஈரானிய சென்சார் போர்டும்தான் பார்ப்பார்கள். நம்மை மாதிரி சாதாரண ரசிகனுக்கு பிடிக்காது. புரியாது. அதுபோல நகைச்சுவையற்ற அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகள். ஐன்ஸ்டீன்களும் நியூட்டன்களும் மட்டுமே படிக்கலாம். புரியலாம்.

சுஜாதா சார், சிறுகதையில் அறிவியல் கலந்தாரே தவிர அறிவியலைக் கதை வடிவில் தரவில்லை.

Aba said...

Musings ப்ளாக் படிப்பவராக இருந்தால், மற்ற வலைப்பதிவு அறிவியல் எழுத்தாளர்களும் இதே வழியைத்தான் கையாள்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வீர்கள்.