இந்த வலையில் தேடவும்

Thursday, December 9, 2010

ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் எவ்வளவு ரூபாய்?

ஆபீசில் நிறைய வருடம் சர்வீஸ் (?) செய்ததால் ஒரு ரிஸார்ட்டிற்கு holiday package கொடுத்திருந்தார்கள்... (ஊட்டியில்) ஊட்டியில் சீசன் இல்லாததால் அமைதியாக இன்னும் அழகாக இருந்தது...ஆனால் ஏனோ மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமான அந்த ஊரின் பஸ் நிலையம் மாத்திரம் "இது தமிழ் நாடு பஸ் ஸ்டாண்ட் தான்" என்று பார்த்தவுடனேயே சொல்லும் தரத்தில் இருந்தது...மழை வேறு வந்து பார்க்க பரிதாபமாக இருந்தது ...கூப்பிடும் தூரத்தில் தான் உதகை ஆட்சியர் அலுவலகம்...ஒருவேளை அவர் குளிரடிக்கிறது என்று தூங்கிக் கொண்டிருக்கிறார் போலும்....எல்லாம் நன்றாகவே இருந்தது...எனக்கு இன்னும் புரியாத விஷயம் இந்த ரிசார்ட்டுகள் அடிக்கும் 'நாகரீகக்' கொள்ளை...இரண்டு சான்ட்விச்கள் சாப்பிட்டதற்கு முன்னூறு ரூபாய் என்று பில் வந்தது..என்ன தான் உலகத்தரத்தில் சான்ட்விச் தயாரித்தாலும் அதற்கு நூற்றைம்பது ரூபாயா? அறையில் தண்ணீர் பாட்டில் வைக்கப் பட்டு அதன் மேலே "pick me for Rs .30 /-" என்று எழுதியிருந்தது..ஆனால் அது சாதாரணமாக விற்கப்படும் ஒரு லிட்டர் பதினைந்து ரூபாய்க்கான பாட்டில்...அது எப்படி முப்பது ரூபாயானது என்று தெரியவில்லை...அதே போல் பத்து ரூபாய்க்கு விற்கப்படும் லேஸ் போன்றவற்றை வைத்து விட்டு 'pick me for Rs .15 /"...! 'கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்' என்பது போல ஆடம்பரமான உங்கள் ரிசார்டுகளில் நுழைந்து விட்டதால் சாதாரண பொருட்கள் கூட இரண்டு மடங்கு மதிப்பு வாய்ந்தவையாக மாறி விட்டனவா? இது எதனால் ? அங்கே வந்து தங்கும் எல்லாரும் பத்து ரூபாய் , இருபது ரூபாய்க்கெல்லாம் கணக்குப் பார்க்காத வெள்ளைக் காலர் professionals என்பதாலா?? நாகரிகம் கருதி "என்னப்பா ஒரு சான்ட்விச் நூற்றைம்பது ரூபாயா? இது என்ன (அ) நியாயம் ?" என்று யாரும் வாய் திறந்து கேட்க மாட்டார்கள் என்ற தைரியமா?

ரிஸார்டுகள் என்றில்லை...இன்னும் நிறைய இடங்களில் இது மாதிரி 'சொந்த விலை நிர்ணயித்தல்' நடக்கிறது...பெங்களூருவில் உள்ள 'forum ' மால் நான் வெறுக்கின்ற இடங்களில் ஒன்று...பெங்களூருவில் உள்ள எல்லாருமே லட்சாதிபதிகள் என்று நினைத்துக் கட்டப்பட்ட மால்களில் ஒன்று அது..அங்குள்ள PVR சினிமாவில் நாம் ஏதாவது கொரிக்க உள்ளே எடுத்துப் போனால் அதை வாசலிலேயே பிடுங்கி வைத்துக் கொள்கிறார்கள்...அங்கே விற்பதைத் தான் வாங்க வேண்டுமாம்...அங்கே ஒரு லிட்டர் தண்ணீர் முப்பத்தைந்து ரூபாய் சொல்கிறார்கள்..பாப் கார்ன் எண்பது ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது...இவற்றுக்கான விலையை யார் நிர்ணயிப்பது? எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம்...ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலின் உண்மையான விலை தான் என்ன? பன்னிரண்டு ரூபாயில் இருந்து முப்பது ரூபாய் வரை இது வரைக்கும் (கடைக்காரர் மூடுக்கு ஏற்ப) நான் பார்த்து விட்டேன்..நெடுந்தூரப் பயணங்களின் போது பஸ் பயணிகள் refresh செய்து கொள்ள நிறுத்துவார்களே அந்த ஹோட்டல்களிலும் இதே கதை தான், தங்கள் monopoly -ஐ சாதகமாக்கிக் கொண்டு விலையை கண்ட படி சொல்கிறார்கள்..(பயணிகளுக்கான ஒரே 'option ' அது தான் என்பதால்) ஒரு தடவை நான் அது போன்ற ஹோட்டலில் மாசா ஒன்று வாங்கினேன்... M .R .P யை விட மூன்று ரூபாய் அதிகம் சொன்னார் கடைக்காரார்..சும்மா வங்கிக் கொண்டு வந்திருக்கலாம்.. மாதவன் லெவலுக்கு "ஏன்?" என்று கேட்டதற்கு " அது தான் விலை,,,வாங்கறதுன்னா வாங்குங்க" என்று பதில் வந்தது...முழு இரவும் தாகத்துடன் பயணித்தது தான் மிச்சம்...

இந்த மாதிரி விஷயங்களை அரசாங்கம் ஏன் கண்டு கொள்வதில்லை? நுகர்வோர் நீதிமன்றங்கள் இங்கே வெறும் பெயரளவிலேயே இருக்கின்றன...வெளிநாடுகளில் இது போன்று நடந்தால் அந்த கடையின் மீது வழக்குப் போட்டு நிரந்தரமாக அதை மூடக்கூட செய்யலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்....இங்கு????

இந்த விஷயத்தால் பணம் படைத்த வியாபாரிகள் ஒரு புறம் அமோகமாக வளர்ந்து கொண்டிருக்க ஏழைகள் இன்னும் இன்னும் படு பாதாளத்திற்கு போய்க் கொண்டிருக்கிறார்கள்..ஒசாமா இந்தியா வந்து "இது ஏற்கனவே வளர்ந்த நாடு..எனவே எல்லாரும் நல்லா ரெஸ்ட் எடுங்க போதும் " என்று அரசியல் காரணங்களுக்காக ஒரு பிட்டைப் போட்டு சென்று விட்டார்... (ஒரு நாளைக்கு நானூறு கோடி ரூபாய் நம் வரிப்பணத்தில் 'பாதுகாப்புக்காக' செலவு செய்து அவர் மனைவி ஆடும் டான்சை வேடிக்கை பார்க்கிறோம்...இதற்கு மன்மோஹனும் அவரும் தொலை பேசியிலே பேசிக் கொண்டிருக்கலாலாமே?) வளர்ந்த நாடு யாருக்கு? 27 மாடிகளில் வீடு கட்டும் அம்பானிகளுக்கு....ஆயிரம் கோடிகளில் ஊழல் செய்யம் ராசாக்களுக்கு.... கல்மாடிகளுக்கு....

எனக்கு 'எக்கனாமிக்ஸ்' தெரியாது...பிடிக்கவும் பிடிக்காது... ஆனால் இந்த கேள்விகளுக்கு விடை தேடும் ஆர்வம் மட்டும் உள்ளது...யாராவது சொல்லுங்கள்...ஒரு பொருளுக்கான அல்லது சேவைக்கான விலை எதை வைத்து நிர்ணயிக்கப் படுகிறது? ஒரே பொருள், ஒரே சேவை என்றாலும் அதில் ஏன் இவ்வளவு வேறுபாடுகள்? உதாரணமாக கட்டிங் (குடி இல்லை முடி) ஒரு இடத்தில் முப்பது, ஒரு கடையில் ஐம்பது, ஒன்றில் நூறு...இந்த விஷயங்களில் அரசு தலையட முடியாதா?

அடுத்த விஷயம் இந்த பஸ் சர்வீஸ்கள்...பெங்களூரில் இருந்து கோயமுத்தூர் செல்வதற்கு முன்னூறு ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கிறார்கள்...ஒரே தூரம் தான்...என்ன தான் ஏ.சி. , ஸ்லீப்பர் என்றெல்லாம் இருந்தாலும் இவ்வளவு வேறுபாடு இருக்குமா?

ஒரு சமுதாயம் என்பது எல்லாவிதமான பொருளாதார நிலைகளிலும் உள்ள மக்களை உள்ளடக்கியது.தினம் இருபது ரூபாய் சம்பாதிப்பவரில் தொடங்கி தினம் ஒரு லட்சம் ருபாய் சம்பாதிப்பவர் வரை...இப்படியிருக்க மக்களின் "வாங்கும் தன்மை" யாரைப் பார்த்து நிர்ணயிக்கப்படுகிறது? உதாரணமாக இன்றைக்கு மளிகைக் கடைகளும் 'அண்ணாச்சி' கடைகளும் வேகமாக சூப்பர் மார்கெட்டுகளால் 'replace ' செய்யப்பட்டு வருகின்றன...சூப்பர் மார்கெட்டுகளில் 'சில்லறை'யாக எதுவும் கிடைப்பதில்லை...ஒரு நாளைக்கு ஐம்பது ரூபாய் சம்பாதிக்கும் ஒருவரால் மளிகைக் கடைகளில் ஐம்பது கிராம் பருப்பு ஐம்பது மில்லி எண்ணெய் என்று வாங்கி ஒரு நாளை ஓட்ட முடிந்தது..சாப்ட்வேர் ஆசாமிகளை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட 'more' களிலும் 'spencers ' களிலும் ஐம்பது கிராம் பருப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை...

சண் டிவியில் தினமும் காலை ஒளிபரப்பப்படும் 'வாங்க பேசலாம்' (ராஜா மற்றும் பாரதி) நிகழ்ச்சியில் இதே கருத்தை ஒரு நாள் சொன்னார்கள்...இந்தியா முன்னேறி வருகிறது...சந்தோஷப்பட வேண்டிய விஷயம் தான்..ஆனால் இந்த முன்னேற்றம் 'சார்புடையதாக' வே இருக்கிறது..ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டுமே சைக்கிளில் இருந்து பைக்குக்கும் பைக்கில் இருந்து காருக்கும் முன்னேறி வருகின்றனர்...ஆனால் பெரும்பாலான மக்கள் இன்னும் பாத சாரிகளாகவே பின்தங்கி விட்டார்கள்...பெங்களூரு போன்ற நகரங்களில் எவ்வளவு மென்பொருள் பொறியாளர்கள் இருக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு கம்பெனி வாட்மேன்கள் , ஆபீஸ் பாய்கள், pantry பாய்கள் , துப்புரவு செய்பவர்கள் என்று எல்லாரும் இருக்கிறார்கள்...இவர்களும் நம் 'வளர்ந்து' வரும் இந்தியாவின் அங்கம் தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது...பஸ் கட்டணம் நானூறு ரூபாய் என்பதால் ரயில்களின் கடைசிப் பெட்டிகளில் ஹிட்லர் கேம்புகளில் அடைக்கப் பட்ட யூதர்கள் போல அவர்கள் பயணிக்கிறார்கள்...புறாக் கூடை விட சிறிய வீடுகளில் அடைத்துக் கொண்டு வாழ்கிறார்கள்..இவர்களெல்லாம் 'forum ' போன்ற மால்களை அரசு பேருந்துகளில் அடைத்துக் கொண்டு போகும் போது ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது தான்...


இந்த விதமான ஏற்றத் தாழ்வுகள் சமூகத்தில் குற்றங்களை அதிகரிக்கும்..லாவோ-த்சு (Lao Tzu )என்ற ஜென் ஞானியைப் பற்றிய செய்தி ஒன்று உண்டு...அவரை நீதிபதியாக இருக்கும் படி அரசன் கேட்டுக் கொள்கிறான்..அதற்கு அவர் மறுக்கிறார்...அரசன் வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளவே சரி "ஆனால் ஒரு நிபந்தனை , நான் நியாய நூல்களின் படியோ அரசியல் சட்டங்களின் படியோ தீர்ப்பு வழங்க மாட்டேன், மனசாட்சியின் படி மட்டுமே வழங்குவேன்" என்கிறார்....அடுத்ட நாள் ஒரு திருடன் ஒரு பெரிய பணக்காரன் வீட்டில் திருடிய போது கையும் களவுமாகப் பிடிக்கப் பட்டு நீதிமன்றம் கொண்டு வரப்படுகிறான்... அந்த பணக்காரனும் வருகிறான்...லாவோ-த்சு வழக்கை விசாரித்து பணக்காரனுக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனையும் , திருடியவனுக்கு நூறு வெள்ளி தரும் படியும் தீர்ப்பு சொல்கிறார்....எல்லாரும் "என்ன இது அநியாயம்" என்கிறார்கள் ...அதற்கு அவர் "இது தான் என் தீர்ப்பு, பணக்காரன் தான் உண்மையான திருடன்...அவன் ஊரில் உள்ள செல்வத்தை எல்லாம் தன்னிடமே குவித்துக் கொண்டான்.இது தான் உண்மையான திருட்டு.சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அந்த ஏழை செய்தது திருட்டு அல்ல" என்கிறார்...

ஏழ்மை காரணமாக ஒரு இளைஞன் குற்றம் செய்து விட்டால் இதே வழியை நம் அரசாங்கம் பின்பற்றுமா? துரதிர்ஷ்ட வசமாக பெரிய திருடர்களை மந்திரிகளாக நியமிக்கும் அரசாங்கம் ஒரு பாவமும் அறியாத இளைஞர்களை நடு வழியில் நிறுத்தி "லைசன்ஸ் இருக்கா, யார் நீ" என்றெல்லாம் கேட்டு சோதனை செய்கிறது ....

சமுத்ரா

9 comments:

T SEKAR said...

GOOD.

பொன் மாலை பொழுது said...

ஜன நாயகம் அப்படிதான் இருக்கும். அப்படி இருந்தால் தான் அது ஜன நாயகம்.
பணக்காரர்களும், வியாபாரிகளும், அரசியல் வாதிகளும் சேர்ந்து செய்துகொண்ட திருட்டு ஒப்பந்தம்.
ஜனங்களின் தலையில் கட்டியாகிவிட்டது. இனி ஒன்றும் செய்ய இயலாது.

NKS.ஹாஜா மைதீன் said...

நாகரிகம் கருதி "என்னப்பா ஒரு சான்ட்விச் நூற்றைம்பது ரூபாயா? இது என்ன (அ) நியாயம் ?" என்று யாரும் வாய் திறந்து கேட்க மாட்டார்கள் என்ற தைரியமா?


அதுதான் உண்மை நண்பரே....

Unknown said...

நல்லதோர் வீணை செய்தே அதை ................

cheena (சீனா) said...

அன்பின் சமுத்ர சுகி - யதார்த்தம் இது தான் - யாரெல்லாம் பயனடைகிறார்கள் தெரியுமா ? - ஒன்றும் செய்ய இயலாது. கோபம் கோபமாக வரும் . என்ன செய்வது ??? நாடு திருந்தாது - அரசுக்கு வேறு முக்கியமான வேலைகள் இருக்கின்றன.

யூர்கன் க்ருகியர் said...

என்ன அருமையான வாதங்கள் !
பகிர்வுக்கு மிக்க நன்றி !

தக்குடு said...

i enjoyed ur writing..:) good questions, but no answers ..:(

சமுத்ரா said...

takkudu, what is your gmail ID?

Unknown said...

peria kovila katti peria undiala vecha utturvinga

chinna kovila katti chinna undiala vecha pudichruvinga