இந்த வலையில் தேடவும்

Tuesday, August 23, 2011

கலைடாஸ்கோப் -35

லைடாஸ்கோப் -35 உங்களை வரவேற்கிறது

[
போன க.கோ. மரணம் ஞானம் என்று போர் அடித்து விட்டேன். எனவே இதை ஓரளவு ண்மா தர முயற்சி செய்கிறேன்]


ஒன்று
=====

சில சமயம் ஆபீசில் "BULK EMAIL " என்று அழைக்கப்படும் செயின் ஈமெயில்கள் வரும்.'தயவு செய்து என்னை இந்த லிஸ்டில் இருந்து எடுத்து விடுங்கள்' என்று ஒவ்வொருவரும் பதில் அளித்து இன்-பாக்ஸையே
கணத்தில் நிரப்பி விடும் அளவுக்கு இருக்கும். இப்போது இந்த trend (?) நம் ஜிமெயில் ID யிலும் வந்திருக்கிறது என்று தோன்றுகிறது.

சில பேர் இருக்கிறார்கள். தங்கள் ப்ளாக்கில் ஏதாவது எழுதி விட்டு ஏதோ உலக இலக்கியம் படைத்து விட்ட லெவலுக்கு நினைத்துக் கொண்டு அதை தனக்குத் தெரிந்த பதிவர்களுக்கு ஈமெயில் செய்கிறார்கள். சரி அவர்கள் தான் ஏதோ ஆர்வக் கோளாறில் அனுப்பி விட்டார்கள், ஜிமெயில் தான் நிறைய STORAGE அளிக்கிறதே அது பத்தோடு பதினொன்றாக இருந்து விட்டுப் போகட்டும் என்று சிலர் விடுவதில்லை. 'இந்த வேலை எல்லாம் என்னிடம் வேண்டாம், நீ எழுதியதை ஏதோ HARRY POTTER ரிலீஸ் ஆகும் போது முண்டியடித்துக் கொண்டு போய் வாங்கிப் படிப்பார்களே, அந்த லெவலுக்கு நான் படிக்க விரும்பவில்லை. நீ என்னை 'நான் எழுதியதைப்படி' என்று வற்புறுத்த வேண்டாம்' என்று காட்டமாக REPLY ( REPLY ALL ) செய்கிறார்கள். Professional Ethics என்று அழைக்கப்படும் அலுவலக நன்னடத்தைகளில் ஒரு கம்பெனி கற்றுத் தரும் ஒரு விஷயம்:- கூடுமான வரை மின் கடிதங்களுக்கு REPLY ALL ஐத் தவிருங்கள் என்பது. உங்களுக்கு அனுப்பியவருக்கு மட்டும் பதில் அனுப்புங்கள். (முக்கியமாக சண்டை போடும் போது) தேவையில்லாமல் எல்லாரையும் சேர்த்து அவர்களை எரிச்சல் அடையச் செய்யாதீர்கள் ! அதனால்தானோ என்னவோ கீ-போர்டில் REPLY செய்வதற்கு CTRL +R உம் REPLY ALL செய்வதற்கு CTRL +SHIFT +R உம் இருக்கிறது.(இரண்டாவது ஷார்ட் கட் கொஞ்சம் கஷ்டமாம் !)

இன்னொரு விஷயம்: உலகில் மிக அற்புதமான படைப்புகள் விளம்பரம் செய்யப்படுவதில்லை. (IOW , மோசமான சமாச்சாரங்களுக்கு தான் இந்த வயசிலும் என் சுறுசுறுப்புக்கும் ஆரோக்யத்திற்கும் இது தான் காரணம் என்றெல்லாம் அபத்தமான விளம்பரங்கள் தேவை)ஆனால் விளம்பரமே இல்லாவிட்டாலும் தேன் நிறைய உள்ள மலர்களை எப்படியோ வண்டுகள் தேடிவந்துவிடுவதைப் போல அவை ஒருநாள்
வெளிச்சத்துக்கு வரும். கணிதமேதை ராமானுஜம் மிக அற்புதமான கணிதத் தேற்றங்களை அழுக்குப் பேப்பர்களில் எழுதி யாருக்கும் காட்டாமல் ஒளித்து வைத்திருந்தாராம்.பிக்காஸோ போன்ற ஓவியர்கள் தங்கள் ஓவியங்களை சாப்பாட்டுக்காக பழைய சாமான் கடைகளில் போட்டு காசு வாங்கி இருக்கிறார்கள். நாம் என்னடா என்றால் நமீதா அழகா நயன்தாரா அழகா என்றெல்லாம் எழுதிவிட்டு அதை ஊரெல்லாம் பிரகடனம் வேறு செய்கிறோம். எனவே ஒரு வேண்டுகோள்: நீங்கள் நன்றாக எழுதினால் கண்டிப்பாக பார்வையாளர்கள் வருவார்கள்.உங்கள் எழுத்துத் தேன் வாசக வண்டுகளை தானே சுண்டி இழுக்கும் .பல்க் மெயில்களை அனுப்பி தேவையில்லாமல் சிலரின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ளாதீர்கள்.

இரண்டு
=======

நம் வாழ்க்கையில் சில பொருட்கள் நிரந்தரமாக 'காணாமல்' போய் விடும். வெளிநாட்டில் இருந்து பெரியப்பா வாங்கி வந்த வாட்சோ, முதன் முதலில் ஸ்கூலில் பரிசுவாங்கிய புத்தகமோ ,தசாவதார செட்டில் வாமனர் பொம்மையோ இப்படி எத்தனையோ பொருட்கள்;LOST FOREVER !. சில சமயங்களில் இந்த உலகம் ஒரு மெகா கம்ப்யூட்டராக இருக்கக்கூடாதா
என்று தோன்றுகிறது.ஏதாவது ஒன்று காணாமல் போய் விட்டால் FIND என்று கொடுத்து அதைக் கண்டுபிடித்து விடலாம். ஏதாவது தப்பு செய்து விட்டால் UNDO என்று அழுத்தி 'இங்கே எதுவுமே நடக்கலை' என்று ஹாயாக இருக்கலாம். வாழ்க்கையில் தேவையில்லாத நினைவுகளை, 'நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா' என்று யாரோ ஒருவர் என்றோ நம்மைத் திட்டியதை SHIFT +DELETE கொடுத்து நிரந்தரமாக நினைவில் இருந்து அழித்து விடலாம்.
வாழ்க்கையில் ஒரு நிகழ்வை BACKUP எடுத்துவைத்துக் கொண்டு பின்னர் எதிர்காலத்தில் RESTORE செய்து அனுபவிக்கலாம்..ஆனால் வாழ்க்கை ஒரு கம்ப்யூட்டர் அல்ல. NOT EVEN CALCULATOR ! அதனால் தானோ என்னவோ வாழ்வில் சில சுவாரஸ்யங்கள் இன்னும் எஞ்சி இருக்கின்றன.நாம் செத்துப் போனாலும் ரீ-சைக்கிள்-பின்னில் இருந்து திரும்ப வரவழைத்துக் கொள்ளலாம் என்றால் அதில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும்? அப்போது மனிதர்களின் மதிப்பே போய் விடும். (இப்போதே 'பெருசுகளை' யாரும் மதிப்பதில்லை!)

ஒருவேளை இந்த உலகம் (கடவுளின்) மெகா கம்ப்யூட்டராக இருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக அல்லது அதிர்ஷ்டவசமாக மனிதனுக்கு அதன் கண்ட்ரோல்கள் என்ன என்று இதுவரை தெரியவில்லை.

[சைடு பிட்: இப்போது கூகிளில் வெந்நீர் வைப்பது எப்படி என்பதில் இருந்து விண்வெளி ஓடம் செய்வது எப்படி என்பது வரை எல்லாம் கிடைக்கின்றன. இன்டர்நெட் காலத்திற்கு முன் எழுத்தாளர்கள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஒரு சிறிய தகவல் வேண்டும் என்றாலும் கூட ஒரு நூலகத்துக்கு சென்று எல்லா புக்கையும் கலைத்து அமர்க்களம் செய்து 'இந்த மாதிரி கேஸ் எல்லாம் எங்கிருந்து தான் வருதோ' என்று லைப்ரரியனின் சலிப்பை சம்பாதித்துக் கொள்ள வேண்டி இருந்திருக்கும்! கூகிளுக்கு கோடி நன்றிகள் ]

மூன்று
=======

EMPLOYERS எனப்படும் வேலை கொடுப்பவர்களுக்கும் EMPLOYEES எனப்படும் வேலை செய்பவர்களுக்கும் எப்போதும் ஒரு 'குளிர் யுத்தம்' நடந்து கொண்டே இருக்கிறது என்று தோன்றுகிறது. இருவரும் ஒத்துப் போனதாக சரித்திரமே இல்லை.பொங்கலுக்கு சுண்ணாம்பு அடிக்க நம் வீட்டுக்கு வரும் முனியம்மாவில் இருந்து .பி.எம் CEO வரை எல்லாருக்கும் இது பொருந்தும். வேலை செய்பவர் எப்போதும் தான் சம்பளத்துக்கு அதிகமாகவே வேலை வாங்கப்படுவதாக நினைக்கிறார். வேலை கொடுப்பவர் தன் தொழிலாளிக்கு அவன் செய்யும் வேலைக்கு அதிகமாகவே சம்பளம் கொடுப்பதாக நினைக்கிறார்.சம்பளமும் வேலையும் வைக்கப்படும் தராசு எப்போதும் சமன் செய்யப்படுவதே இல்லை.பார்க்கப்படும் கண்களைப் பொறுத்து ஒரு பக்கம் எப்போதும் கீழே இருக்கிறது.மேலும் நமக்கு எப்போதும் நாம் அடுத்தவரை விட அதிக வேலை செய்வதாக தோன்றுகிறது."அவன் பெரும்பாலும் சீட்டிலேயே இருப்பதில்லை; காலை பதினொரு மணிக்குதான் ஆபீசுக்கு வருகிறான்; வேலை செய்யும் நேரத்தில் பாட்டு கேட்கிறான்; சிகரெட் பிடிக்க வெளியே போகிறான்.அவனுக்கு மட்டும் அதிக சம்பளம் ..நான் மாடு மாதிரி ராத்திரி பத்து மணிவரை ப்ரோக்ராம் எழுதுகிறேன் (மாடு எங்காவது ப்ரோக்ராம் எழுதுமா??) எனக்கு இன்னும் அதே சம்பளம் ".இந்த லெவலுக்கு புலம்பாத தொழிலாளிகளே இருக்க முடியாது என்று சொல்லலாம்.

எஜமான விசுவாசம் இன்று கம்பெனிகளில் (குறிப்பாக .டி யில் ) வெகுவாகக் குறைந்து கொண்டு வருகிறது. உன்னை நம்பியா நான் எம்.பி.ஏ படித்தேன்? நீ இல்லாவிட்டால் இன்னொருத்தன் என்ற மனநிலையில் தான் இன்று பெரும்பாலான தொழிலாளிகள் இருக்கிறார்கள். 'ஒரு இல், ஒரு சொல், ஒரு வில்' என்று வாழ்ந்த ராமன் இன்று ஐ.டி கம்பெனியில் வேலை செய்தால் 'ஒரு கம்பெனி' என்ற கொள்கையோடு வாழ்வானா என்பது சந்தேகம் தான்.ஆயிரம் ரூபாய் அதிகம் தந்தால் தனக்கு இதுவரை படியளந்த கம்பெனியை தூசி உதறுவதுபோல உதறி விட இவர்கள் தயாராக இருக்கிறார்கள். சில பேர் வெளிப்படையாகவே I WORK FOR MONEY; IF YOU WANT LOYALTY, HIRE A DOG என்று பிரிண்ட்-அவுட் எடுத்து ஒட்டி
வைத்திருக்கிறார்கள்.

அந்த காலத்தில் கம்பெனிகள் சிறியதாக இருந்தன; வாய்ப்புகள் குறைவாக இருந்தன; அதில் வேலை செய்பவர்கள் இருபது வருடம், முப்பது வருடம் என்று ஒரே ஆபீசில் வேலை பார்த்தார்கள்.மானேஜர், டைப்பிஸ்ட், குமாஸ்தா, ஆயா,பியூன்,டீ பையன் என்று எல்லாருக்கும் இடையே ஒரு மெல்லிய அன்னியோன்னியம் இழையோடியது.ஆனால் இன்று கம்பெனிகள் பெருத்து விட்டன.வாய்ப்புகளும் அதிகரித்து விட்டன. கம்பெனியில் 'யாரோ வருவார் யாரோ போவார்' என்ற நிலை தான் நிலவுகிறது. ஒரு BELONGINGNESS , இது என் ஆபீஸ், இது என் நிறுவனம் என்ற உணர்வு இன்றி ஞானிகள் போல ஒட்டியும் ஒட்டாமல் இருக்கிறார்கள். போன வாரம் வேளையில் சேர்ந்த ஒரு SO CALLED FRESHER இந்த வாரம் இன்று தான் இந்த ஆபீசில் என் கடைசி நாள் (என்னவோ பத்துவருடம் பகலிரவு பாராமல் சர்வீஸ் செய்த லெவலுக்கு பக்கம் பக்கமாக) என்று இ-மெயில் அனுப்புகிறான். கலிகாலம்!

[சைடு பிட்: நான் இன்று வரை கம்பெனி மாற்றவில்லை. ஆனால் மாதம் ஐநூறு ரூபாய் யாராவது அதிகம் தந்தால் என் உயிரினும் மேலான இந்த கொள்கையை மறு பரிசீலனை செய்யக்கூடும் என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்]


நான்கு
=======

ஏதோ ஒரு திரைப்படத்தில் வரும் ஒரு நகைச்சவை காட்சி: வடிவேலுவிடம் இருந்து டியூப் லைட் ஒன்றை வாங்கும் ஒரு ஆள் அதை கரும்பு போல கடித்து தின்ன ஆரம்பிப்பான். 'அவனா நீயி' என்று வடிவேலு கதற , அதுதான் அவனுக்கு லஞ்ச் என்றும் டின்னருக்கு நாலு குண்டுபல்பு தொட்டுக் கொள்ள சீரியல் பல்பு என்று அந்த அக்காட்சி நீளும். ஆனால் உண்மையிலேயே பல்புகள் ஆணிகள் பிளேடுகளை முழுங்கும் 'மகா முளுங்கர்கள்' இருக்கிறார்கள். சமீபத்தில் டி.வி.9 இல் சலீம் ஹைனி என்ற ஒரு ஆளைக் காட்டினார்கள்.நமக்கெலாம் கொஞ்சம் வேகாத அரிசியை சாப்பிட்டு விட்டாலே இரண்டு நாள் வயிறு வலிக்கிறது.இந்த ஹைனி பசித்தால் ஹோட்டலுக்கு போக வேண்டிய அவசியமே இல்லை. பல்பை பொடி செய்து மிக்சர்
போல சாப்பிடுகிறார். பென்சில், ரப்பர், ஒயர்கள், காகிதம், என்று எல்லாவற்றையும் ஒரு பிடி பிடிக்கிறார் ஹைனி. அவர் வயிற்றை ஸ்கான் செய்து பார்க்கும் போது அவருக்கு அபாரமான ஜீரண சக்தி இருப்பது தெரியவருகிறது.இன்னொருத்தர் தன் உடம்பில் ஒயர்களைப் பொருத்தி மிக்சி, டியூப் லைட், கிரைண்டர் எல்லாவற்றையும் ஓட வைக்கிறார். (சார், அப்படியே என் லேப்-டாப்பை சார்ஜ் பண்ணிக்கட்டா?) இந்த உலகத்தில் தான் எத்தனை விதமான மனிதர்கள் இருக்கிறார்கள்? உலகம் ஒரு மெகா ஜூ..

ஐந்து
=====
ஒரு ஹைக்கூ..

காலையில்
வேலைகளுக்கு இடையே
திடீரென வந்து போகிறது
நேற்றைய இரவின்
கனவு..

ஆறு
====

ஒரு வரைபடம்


ஏழு
====

ஓஷோ ஜோக்.

ஒரு ஜப்பானியன் இந்தியாவில் ஒரு டாக்சியில் ஏறி ஏர்போர்ட் சென்று கொண்டிருந்தான். அப்போது ஒரு ஹோண்டா அந்த டாக்சியை விரைவாக கடந்து சென்றது..அவன் பெருமையாக 'பார், ஹோண்டா , ஜப்பானில் செய்தது' என்றான். கொஞ்ச நேரம் கழித்து ஒரு டயோட்டா விரைவாக முந்திச் சென்றது. மீண்டும் அவன் பெருமையாக டிரைவரைப் பார்த்து 'பார்,
டயோட்டா ஜப்பானில் செய்தது' என்றான். சிறிது நேரம் கழித்து ஒரு மிசுபிஷி கடந்து சென்றது.மீண்டும் அவன் டிரைவரைப் பார்த்து 'பார், மிசுபிஷி ஜப்பானில் செய்தது' என்றான் பெருமையாக .டிரைவர் கொஞ்சம் எரிச்சல் அடைந்தான். ஏர்போர்ட் வந்ததும் டிரைவர் அவனை இறக்கி விட்டு, 'ஆயிரம் ரூபாய் கொடு' என்று கேட்டான். ஜப்பானியன், 'என்ன அநியாயம் இது , இங்கே இருந்து இங்கே வருவதற்கு ஆயிரம் ரூபாயா' என்று எரிச்சலுடன் கேட்டான். அதற்கு அந்த டாக்சி டிரைவர் 'பார், இந்த மீட்டர், ரொம்ப பாஸ்ட், இந்தியாவில் செய்தது' என்றான்.


முத்ரா


12 comments:

பத்மநாபன் said...

வண்ணம் நிறைந்த பதிவு....

ஷர்புதீன் said...

'ரங்'கீலா

Mohamed Faaique said...

:-)

bandhu said...

//அந்த காலத்தில் கம்பெனிகள் சிறியதாக இருந்தன; வாய்ப்புகள் குறைவாக இருந்தன; அதில் வேலை செய்பவர்கள் இருபது வருடம், முப்பது வருடம் என்று ஒரே ஆபீசில் வேலை பார்த்தார்கள்.மானேஜர், டைப்பிஸ்ட், குமாஸ்தா, ஆயா,பியூன்,டீ பையன் என்று எல்லாருக்கும் இடையே ஒரு மெல்லிய அன்னியோன்னியம் இழையோடியது.//
அப்படி இருந்த வாழ்க்கையை உதறிவிட்டு வந்தேன்.. அப்படியே இருந்திருக்கலாமோ?

Chitra said...

மோசமான சமாச்சாரங்களுக்கு தான் இந்த வயசிலும் என் சுறுசுறுப்புக்கும் ஆரோக்யத்திற்கும் இது தான் காரணம் என்றெல்லாம் அபத்தமான விளம்பரங்கள் தேவை



...... ஆஹா..... சந்தடி சாக்கில அஞ்சால் அலுப்பு மருந்துக்கு ஒரு குத்து விட்டுட்டீங்களே.... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....

Philosophy Prabhakaran said...

அனைத்து வண்ணங்களும் அழகு...

ப.கந்தசாமி said...

ரசித்தேன். பாராட்டுகிறேன்.

ஒரு குட்டு வைக்கலாமா? எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க முடியுமா?

HVL said...

//
ஒருவேளை இந்த உலகம் (கடவுளின்) மெகா கம்ப்யூட்டராக இருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக அல்லது அதிர்ஷ்டவசமாக மனிதனுக்கு அதன் கண்ட்ரோல்கள் என்ன என்று இதுவரை தெரியவில்லை. //
இருக்கலாம்! கற்பனையை ரசித்தேன்.

HVL said...

//'இந்த வேலை எல்லாம் என்னிடம் வேண்டாம், நீ எழுதியதை ஏதோ HARRY POTTER ரிலீஸ் ஆகும் போது முண்டியடித்துக் கொண்டு போய் வாங்கிப் படிப்பார்களே, அந்த லெவலுக்கு நான் படிக்க விரும்பவில்லை. நீ என்னை 'நான் எழுதியதைப்படி' என்று வற்புறுத்த வேண்டாம்' என்று காட்டமாக REPLY ( REPLY ALL ) செய்கிறார்கள். //

கொடுமை!

Katz said...

மரணத்தை பற்றி பதிவு எழுதினால் கூட மக்களுக்கு விருப்பம் இல்லையா?
என்ன கொடுமை?

Aba said...

// 'குளிர் யுத்தம்' //

சரியான பதம் பனிப்போர் என நினைக்கிறேன்..




//(மாடு எங்காவது ப்ரோக்ராம் எழுதுமா??)//
// ஞானிகள் போல ஒட்டியும் ஒட்டாமல் இருக்கிறார்கள்.//
// 'பார், இந்த மீட்டர், ரொம்ப ஃபாஸ்ட், இந்தியாவில் செய்தது' என்றான். //

LOL :))

aotspr said...

அருமையான பதிவு.உங்கள் பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com