கலைடாஸ்கோப்-36 உங்களை வரவேற்கிறது
ஒன்று
======
'கஜல்' பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? (காஜோல் அல்ல ! ) சூபி மற்றும் அரேபிய இசைக் கவிதைகள் அவை.உலகில் முதல் காதல் தோன்றிய போதே முதல் காதல் கவிதையும் தோன்றியிருக்க வேண்டும். மனிதன் எத்தனையோ விதமான காதல் கடிதங்களை எழுதி இருக்கிறான். புறா, அன்னம், காக்கை (?) , மனம், மேகம், நண்பன், டீக்கடைப் பையன், அந்தணர், போஸ்ட்மேன் ,வேலைக்காரி என்று காதல் கடிதங்களுக்கு எத்தனையோ விதம் விதமான ஊடகங்களை உபயோகப்படுத்தியிருக்கிறான்.மர இலை, காகிதம், பனை ஓலை,ரயில் பெட்டி, பள்ளிக்கூட நோட், வான்மேகம் என்று எழுதுவதற்கு நிறைய பொருட்களை உபயோகித்திருக்கிறான்.
'ஆத்தா அத்தோரமா வாரியா' என்பது கூட காதல் கடிதம் தான்.கண்மணி அன்போடு காதலன் என்பதும் கா.க தான். (வெவ்வேறு மன நிலைகளில்) கமல் பாறைகளுக்கு இடையே நின்று கத்துவது போல 'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல'. இன்றும் கூட காதல் என்பது நாகரீகப்படுத்தப்பட்ட காமம் தான் என்று சில பேரும் காதல் என்பது உடலைத்தாண்டிய ஒரு தெய்வீக உணர்ச்சி என்று சில பேரும் சண்டை போட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.'பிராய்ட்' போன்ற மேற்கத்திய சிந்தனையாளர்கள் 'அன்பாவது, தெய்வீகமாவது, மண்ணாவது, மனிதனின் MOTIVE வே காமம் தான். எல்லாம் ஹார்மோன் செய்யும் கூத்து தான்' என்று சொல்வார்கள்.ஆனாலும் உடலைத்தாண்டிய ஏதோ ஒன்று சூட்சுமமாக இருக்கவே செய்கிறது என்று தோன்றுகிறது. கடவுளிடமும் காதல் கொள்ள முடியும். சூபீக்கள் கண் மூடி கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடத் தன்னை மறந்து கஜல்களைப் பாடும் போது ஆகா 'காதல் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்' என்று தோன்றும். இப்போது காதலை திரைப்படங்கள் வியாபாரத் தந்திரமாக ஆக்கி விட்டன.கப்பல் மூழ்கிய கதையில் கூட சைக்கிள் கேப்பில் ஒரு காதலைப் புகுத்தி விடுகிறார்கள்! ஒருவரை ஒருவர் தொடாமல் பாட்டுப்பாடுவதும் மரங்களை சுற்றுவதும் 'ஓல்ட் பேஷன்' ஆகி விட்டது. இன்றைய பெரும்பாலான காதல் பாட்டுகள் 'மியாவ் மியாவ்' 'தீத்தி' 'மச்சி மச்சி' என்றெல்லாம் தெய்வீக வார்த்தைகளை உபயோகப்படுத்தி எழுதப்படுகின்றன.
காதல் கடிதங்கள் பெரும்பாலும் அந்நியன் விக்ரம் எழுதுவது போல ஒருதலைக் காதல் சார்ந்ததாகவே உள்ளன. இதே போல தான் 'கஜல்' களும். தன்னை விட உயர்ந்த நிலையில் உள்ள ஒருவர் மீது கொள்ளும் காதல்! இவை (காதலின் ) வலியையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே வெளிப்படுத்தும். தெய்வீகத்தின் உடனான காதல் தான் மனிதனை முழுமை செய்யும் என்கிறார்கள். மனிதர்களுடன் நாம் கொள்ளும் காதல் , டீக்கடைக் காதல், ரயில் பயணக் காதல், கல்லூரிக் காதல் இவை எல்லாம் நம்மை கிடைமட்டத்தில் முன்னேற்றலாமே தவிர (HORIZONTAL PROGRESSION ) நம்மை உயர்ந்த மட்டத்துக்கு (VERTICAL ) உயர்த்தாது.
ஒன்று
======
'கஜல்' பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? (காஜோல் அல்ல ! ) சூபி மற்றும் அரேபிய இசைக் கவிதைகள் அவை.உலகில் முதல் காதல் தோன்றிய போதே முதல் காதல் கவிதையும் தோன்றியிருக்க வேண்டும். மனிதன் எத்தனையோ விதமான காதல் கடிதங்களை எழுதி இருக்கிறான். புறா, அன்னம், காக்கை (?) , மனம், மேகம், நண்பன், டீக்கடைப் பையன், அந்தணர், போஸ்ட்மேன் ,வேலைக்காரி என்று காதல் கடிதங்களுக்கு எத்தனையோ விதம் விதமான ஊடகங்களை உபயோகப்படுத்தியிருக்கிறான்.மர இலை, காகிதம், பனை ஓலை,ரயில் பெட்டி, பள்ளிக்கூட நோட், வான்மேகம் என்று எழுதுவதற்கு நிறைய பொருட்களை உபயோகித்திருக்கிறான்.
'ஆத்தா அத்தோரமா வாரியா' என்பது கூட காதல் கடிதம் தான்.கண்மணி அன்போடு காதலன் என்பதும் கா.க தான். (வெவ்வேறு மன நிலைகளில்) கமல் பாறைகளுக்கு இடையே நின்று கத்துவது போல 'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல'. இன்றும் கூட காதல் என்பது நாகரீகப்படுத்தப்பட்ட காமம் தான் என்று சில பேரும் காதல் என்பது உடலைத்தாண்டிய ஒரு தெய்வீக உணர்ச்சி என்று சில பேரும் சண்டை போட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.'பிராய்ட்' போன்ற மேற்கத்திய சிந்தனையாளர்கள் 'அன்பாவது, தெய்வீகமாவது, மண்ணாவது, மனிதனின் MOTIVE வே காமம் தான். எல்லாம் ஹார்மோன் செய்யும் கூத்து தான்' என்று சொல்வார்கள்.ஆனாலும் உடலைத்தாண்டிய ஏதோ ஒன்று சூட்சுமமாக இருக்கவே செய்கிறது என்று தோன்றுகிறது. கடவுளிடமும் காதல் கொள்ள முடியும். சூபீக்கள் கண் மூடி கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடத் தன்னை மறந்து கஜல்களைப் பாடும் போது ஆகா 'காதல் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்' என்று தோன்றும். இப்போது காதலை திரைப்படங்கள் வியாபாரத் தந்திரமாக ஆக்கி விட்டன.கப்பல் மூழ்கிய கதையில் கூட சைக்கிள் கேப்பில் ஒரு காதலைப் புகுத்தி விடுகிறார்கள்! ஒருவரை ஒருவர் தொடாமல் பாட்டுப்பாடுவதும் மரங்களை சுற்றுவதும் 'ஓல்ட் பேஷன்' ஆகி விட்டது. இன்றைய பெரும்பாலான காதல் பாட்டுகள் 'மியாவ் மியாவ்' 'தீத்தி' 'மச்சி மச்சி' என்றெல்லாம் தெய்வீக வார்த்தைகளை உபயோகப்படுத்தி எழுதப்படுகின்றன.
காதல் கடிதங்கள் பெரும்பாலும் அந்நியன் விக்ரம் எழுதுவது போல ஒருதலைக் காதல் சார்ந்ததாகவே உள்ளன. இதே போல தான் 'கஜல்' களும். தன்னை விட உயர்ந்த நிலையில் உள்ள ஒருவர் மீது கொள்ளும் காதல்! இவை (காதலின் ) வலியையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே வெளிப்படுத்தும். தெய்வீகத்தின் உடனான காதல் தான் மனிதனை முழுமை செய்யும் என்கிறார்கள். மனிதர்களுடன் நாம் கொள்ளும் காதல் , டீக்கடைக் காதல், ரயில் பயணக் காதல், கல்லூரிக் காதல் இவை எல்லாம் நம்மை கிடைமட்டத்தில் முன்னேற்றலாமே தவிர (HORIZONTAL PROGRESSION ) நம்மை உயர்ந்த மட்டத்துக்கு (VERTICAL ) உயர்த்தாது.
தெய்வீகத்தின் உடனான காதலில் வலிகள் அதிகம்.மனிதக் காதலியாவது நாலு நாள் பின் தொடர்ந்தால் ஐந்தாம் நாள் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பாள். தெய்வம் அவ்வளவு சீக்கிரம் RESPOND செய்யாது.அந்தப் பக்கத்தில் இருந்து பதில் வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.மனிதக் காதலுக்கு ஒன்றோ இரண்டோ அல்லது அதிகபட்சம் சின்னத்தம்பி குஷ்பு போல மூன்று சகோதரர்கள் வில்லன்களாக இருக்க முடியும். ஆனால் தெய்வீகக் காதலுக்கு ஐம்புலன்கள் , மனம் ,புத்தி, அகங்காரம் என்று ஏகப்பட்ட வில்லன்கள். நாம் இறைவனை நோக்கி கொஞ்சம் நூல் விட்டாலே பயங்கர ஆயுதங்களைத்
தூக்கிக் கொண்டு அடிக்க வந்து விடுவார்கள் அவர்கள்!.என்ன தான் இருந்தாலும் கடவுள் மேல் கொள்ளும் காதல் ஸ்பெஷல் தான். அஜித்தும் தேவயானியும் கட்டிய காதல் கோட்டைகள் சில காலங்களில் மக்களின் மனங்களில் இருந்து இடிந்து விழுந்து விடும். மீராவின் பஜன்களும் ஆண்டாளின் பாசுரங்களும் உலகம் உள்ள வரை வாழ்ந்திருக்கும்.
அப்துல் ரகுமான் தமிழில் அழகாக கஜல்கள் எழுதி இருக்கிறார். ஆனால் பாடுபொருளாக இறைவனைத் தேர்ந்தெடுக்காமல் காதலியைப் பார்த்து எழுதுகிறார். அந்தப் புத்தகத்தின் பெயர் 'மின்மினிகளால் ஒரு கடிதம்' . புத்தகம் கிடைத்தால் வாங்கிப் படித்துப் பாருங்கள்..இதயத்தை உருக்கும் கவிதைகள் அவை.
ஆம்..
என் இருப்பே நீயென்று இருக்கிறேன் நான்
நான் இருப்பதே தெரியாமல் இருக்கிறாய் நீ
தன்னையே நினைத்து சூரியகாந்தி ஒன்று
மலர்ந்து வாடி, வாடி மலர்ந்து,மலர்ந்து வாடி
மருகுவதே தெரியாத சூரியன் போல வலம் வருகிறாய் நீ
என் குரல் நாண் எழுப்பும் ஒலி -உன்
பிரம்மாண்டக் கதவுகளைத் தாண்டாமல்
வாசலிலேயே வாழ்விழந்து விடுகிறதா?
நான் ஏற்றிவைத்த சிறு விளக்கு
உன் தாரகைக் கண்களுக்கு தட்டுப்படவில்லையா?
நான் இசைத்த சுரங்கள் -உன்னை அடையுங்கால்
சுருதி குறைந்து இறுதி ஆகின்றனவா?
உன்-
உலகுக்கு என்னை உருப்பெருக்கிக் கொள்ளும் வில்லை
என்னிடம் இல்லை.
நீயே
உன்னை சிறியதாக்கிக் கொண்டு-இந்த
சிறியவனைத் தேடி வா, சீக்கிரம்!
-ஹி ஹி இது சமுத்ராவின் கஜல்!
இரண்டு
======
சில பேருக்கு மருமகள் ஸ்வீட்டாக இல்லா விட்டாலும் காபி ஸ்வீட்டாக இருக்க வேண்டும்.காபியால் நிறைய கலவரங்கள் மூண்டுள்ளன. நிறைய உறவுகள் முறிந்துள்ளன. காபி சர்வீஸ் சரியில்லை என்று சில திருமணங்கள் கூட நின்று இருக்கின்றனவாம்.கல்யாண மண்டபத்தில் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரை மேளதாளம் முழங்க வரவேறகிறார்களோ இல்லையோ அவர்கள் 'லேன்ட்' ஆனதும் சுடச்சுட பில்டர் காபி கொடுத்தாக வேண்டும். காப்பிக்கு அடிமையான நிறைய பேரை பார்த்திருக்கிறேன். காப்பியும் ஒரு போதை தான் என்று தோன்றுகிறது. ஆபீசில் சிலருக்கு டான் என்று மூன்று மணி ஆனதும் காப்பி உறிஞ்சவில்லை என்றால் விரல்கள் நடுங்க ஆரம்பிக்கும்.நாம் காபிக்கோ டீக்கோ கொத்தடிமையும் கிடையாது 'காபியா , அய்யே, அந்தப்பழக்கம் எல்லாம் எப்போதும் இல்லை' என்று பில்ட்-அப் கொடுக்கும் பார்ட்டியும் கிடையாது. ஏதோ கொடுத்தால் குடிக்க வேண்டியது.அவ்வளவு தான். சில பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அடிக்கடி காபி என்னும் பெட்ரோல் போடவில்லை என்றால் வேலையே ஓடாது.அரை டம்ளருக்கும் குறைவாக காபி கொடுத்தாள் என்று சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு அப்போதே கிளம்பிய உறவுகளையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இப்போது காப்பியில் எத்தனையோ வெரைட்டிகள் வந்து விட்டன. கேப்புசினோ , எஸ்பிரெஸோ , காபி நிர்வாணா என்று தெய்வீகமான காப்பிகள் கிடைக்கின்றன. (குடித்துப் பார்த்தால் கிட்டத்தட்ட எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும்) நாயர் கடையில் கடன் வாங்கி சிங்கிள் டீயோ பை டூ டீயோ குடிக்கும் பேச்சுலர்கள் வாழும் இந்தத் திருநாட்டில் தான் நூற்று ஐம்பது ரூபாய் கொடுத்து பரிஸ்தாவில் ஒரு கப் காபி வாங்கிக் குடிப்பவர்களும் இருக்கிறார்கள்.மேல் நாட்டவர்கள் ஒரு XL சைஸ் காபி வாங்கி வந்து நாள் முழுவதும் உர் உர் என்று உறிஞ்சுவார்கள். என்னதான் சொன்னாலும் காபிக்கு உள்ள ஒரு மவுசு குறையாது என்றே தோன்றுகிறது. மேலும் என்றோ ஒரு நாள் ,யாரோ நமக்குப் போட்டுக் கொடுத்த காபியின் சுவை இன்னும் நாக்கிலேயே இருக்கும். அதைப் போல இன்னொரு முறை காபி கிடைக்காதா என்று ஏங்கும்.அப்படிப்பட்டவர்கள் 'என்னம்மா எனக்கு மட்டும் தான் கஷாயமா, அப்பா சும்மா தானே இருக்கார்..அப்பா: அதான் எனக்கு காப்பி கொடுத்திருக்காளே டா' என்ற மொக்கை ஜோக்குகளை நினைத்து தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.
காபி என்னும் குண்டு அண்ணனுக்கு கொஞ்சம் இளைத்த சகோதரன் டீ என்று தோன்றுகிறது. காபியை விட டீ ஒரு படி கீழே தான். 'சிங்கிள் டீக்கு சீக்கி அடிச்சவன் நீ' என்று சொல்கிறார்களே ஒழிய சிங்கிள் காப்பிக்கு என்று சொல்கிறார்களா? 'டீ + பன்' என்பதை ஏழைகளுக்கான டிபன் என்று சொல்கிறார்களே தவிர காபி + பன் என்று சொல்கிறார்களா? நாகரீகமான கடைகளை காபி ஷாப் என்று சொல்கிறோம். தெருக்கோடிக் கடையை 'டீக்கடை' 'டீக்கடை பெஞ்சு' என்று தானே சொல்கிறோம்? வறுமையை மிகைப்படுத்தும் எஸ்.ராமகிருஷ்ணன் டைப் கதைகளில் கோமதி சாக்கை விரித்து தூங்கிக் கொண்டிருந்த மகளை 'அடி கழுத எந்திரி ' என்று அடித்து எழுப்பி விட்டு டீ போட விறகு அடுப்பை மூட்டினாள் என்று எழுதுவார்களே தவிர காபி போட என்று எழுத மாட்டார்கள். 'டீ என்பது ஏழைகளின் காபி' என்று சொல்லலாமோ?
சரி. சாம்பார் , சட்னி இது இரண்டையும் காபி டீயுடன் சம்பந்தப்படுத்துங்கள் என்றால் நாம் எல்லாரும் சாம்பார்=காபி சட்னி=டீ என்று தான் சொல்வோம்.சாம்பார்-டீ, சட்னி-காபி என்று சொல்லமாட்டோம். ஏன்???? இதற்கு ஏதாவது சைக்காலஜி காரணங்கள் இருந்தால் படித்தவர்கள் சொல்லவும். பாமரன் யான் அடுத்த டாபிக்குக்கு 'எஸ்' ஆகிறேன்.
மூன்று
========
இந்த மாஸ்டர்பீஸ் மாஸ்டர்பீஸ் என்கிறார்களே, (நாமெல்லாம் எதை செய்தாலும் அது டம்மி பீஸ் என்பது வேறு விஷயம்) அதை செய்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது. மாஸ்டர்பீஸ் என்றால் அதை செய்து விட்டு நாம் அமைதியாகி விட வேண்டும். அதற்குப் பிறகும் இல்லை இதை விட சிறப்பாக செய்வேன் சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறுவேன் என்றெல்லாம் இறங்கினால் (என்ன பாஸ் இறங்கினால் எப்படி வானத்தை அடைய முடியும்? சாரி செயலில் இறங்கினால்) சித்தி சீரியலுக்குப் பிறகும் விடாப்பிடியாக நடித்து நம்மை எரிச்சல் அடையச்செய்யும் ராதிகாவின் நிலைதான் நமக்கும் ஏற்படும். சித்தி தான் ராதிகாவின் மாஸ்டர்பீஸ். இப்போதும் அதே மாதிரி தொடர்ந்து நடிப்பது வெறுப்பேற்றுகிறது. கண்களை சுருக்கிக் கொண்டு கெட்டவர்களைப் (?) பார்ப்பதும், தருமத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் என்று வசனம் பேசுவதும்....
இதன் மூலம் ஒருவரை முயற்சியே செய்யவேண்டாம் முன்னேறவே வேண்டாம் என்று சொல்லவரவில்லை. சில பேருக்கு அவரது வெற்றி வரைபடம் ஒரு உச்ச வரம்பை அடைந்ததும் தொடர்ந்து கீழே இறங்கி விடுகிறது.நாம் அவர்களிடம் அதிகமாக எதிர்பார்க்க வேண்டாமே என்று தான் சொல்கிறேன்.உதாரணம் ,இந்திய கிரிக்கெட் அணி. உலகக் கோப்பையை வென்றதால் மட்டுமே இந்தியா தான் கிரிக்கெட் சாம்பியன் சச்சின் தான் எங்கள் கடவுள், கிரிக்கெட் வீரர்கள் எல்லாரையும் பாரத ரத்னா(?) ஆக்குங்கள் என்றெல்லாம் கொஞ்சம் ஓவராக எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டோம். எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் போது நாம் படைக்கும் படைப்புகள் மூன்றாம் தரத்துடன் தான் இருக்கும். கன்னடத்தில் ஹீரோ கணேஷ் நடித்து சக்கை போடு போட்ட படம் 'முங்காரு மளே'! அதற்குப் பிறகு கணேஷ் நடித்த படங்கள் எல்லாம் அட்டர் ஃபிளாப்.இப்போது கன்னட சினிமாவின் காமெடி பீஸ் யார் என்றால் கணேஷ் தான். சில சமயம் சில 'காளான்' எழுத்தாளர்களின் புத்தகங்கள் திடீரென்று முளைத்து பிரபலமாகி
விற்பனையில் சாதனை படைக்கும். அதே மிதப்பில் அவர் எழுதிய இரண்டாவது படைப்பு சீண்டுவார் அற்றுப் போய்விடும்.
சில சிற்பிகள் தங்கள் மாஸ்டர்பீஸை வடித்து விட்டு உடனே தங்கள் விரல்களைத் தாங்களே வெட்டிக் கொண்டதாகக் கேட்டிருக்கிறோம். அபூர்வமான தங்கள் வாழ்நாளின் மாணிக்கமான பாடல் ஒன்று பிரசவித்ததும் தங்கள் நாவை அறுத்துக் கொண்ட பாடகர்களும் இருந்திருக்கிறார்கள். புத்தர்களைப் பிரசவிக்கும் அம்மாக்கள் இறந்து போய் விடுவார்கள் என்று சொல்வதும் இதனால்தான். ஒரு கட்டத்துக்கு மேல் கலைஞர்கள் பெருந்தன்மையாக தங்கள் துறைகளில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும். 'வில் வித்தையின் உச்சகட்டம் வில்லை வீசி எறிவது' என்பார்கள். இப்போது இந்தப்பக்குவம் எத்தனை
கலைஞர்களிடம் இருக்கிறது என்று தெரியவில்லை. தொண்ணூறு வயது ஆனாலும் கூட 'கலைஞர்'கள் திரை வசனம் எழுதுகிறார்கள்.இன்னும் பழைய நினைப்பில் அபஸ்வரமாகப் பாடி நம்மை கழுத்தறுக்கிறார்கள். இப்போதெல்லாம் கவிஞர் வாலியின் கவிதையைப் படிக்கும் போது பயங்கர எரிச்சல் தான் வருகிறது. ஜூ.வி யில் சமீபத்தில் வந்திருந்த வாலியின் ஒரு கவிதையைப் பார்த்து விட்டு அந்தப் பக்கத்தை கிழித்து விடலாமா என்று கூட தோன்றியது.
சரி ஒரு சேம் சைடு கோல்.வாலியின் ஒரு பீஸ்:
எனக்குள் இருந்து
இன்னும் எழுது-
நீ தான் வேர்
நான் வெறும் விழுது!
நான்கு
=======
சின்ன வயதில் இருந்தே இந்த 'காது வலி' என்னைப் படுத்தி வந்திருக்கிறது.காது வலி வரும் போது பாட்டி 'இயர் பட்சில்' அமிர்தாஞ்சனை நனைத்து காதில் சொருகுவாள். சில சமயங்களில் தேங்காய் எண்ணெய் காய்ச்சி கூட ஊற்றி இருக்கிறாள் .கொஞ்ச நேரத்துக்கு 'கின்' என்று இருந்து பின்னர் 'விண் ' என்று மறுபடியும் வலிக்க ஆரம்பிக்கும். இப்போது கடந்த இரண்டு நாட்களாக கா.வ வடுத்தி வருகிறது. பாருங்கள் படுத்தி என்பதை வடுத்தி என்று தப்புத்தப்பாக எழுதுகிறேன். காதுகளைப் பிய்த்து அப்படியே எறிந்து விடலாமா என்று நினைக்க வைக்கும் வலி. சரி என்ன செய்வது காது வலித்தாலும் கலைடாஸ்கோப் வெளிவரும் என்று என் மனத்திடத்தை காட்ட வேண்டாமா? ஓகே ஓகே..கண் வலித்தால் பார்ப்பது கஷ்டம். கை வலித்தால் எழுதுவது கஷ்டம். மூக்கு வலித்தால் சுவாசிப்பது கஷ்டம். காது வலித்தால் கேட்பது கஷ்டமா? இல்லையே.காது கொஞ்சம் ஸ்பெஷல் போல இருக்கிறது.
ஒளி என்பதற்கு நாம் மையம் அல்ல,நாம் தான் முயற்சி செய்து அதை வெளியே செலுத்த வேண்டும் என்பதால் கண்கள் சீக்கிரம் சோர்வடைந்து விடுகின்றன.ஒலிக்கு நாம் தான் மையம். எல்லா ஒலிகளும் நம் முயற்சி இன்றியே நம்மை வந்து அடையும். ஹாயாக அமர்ந்திருக்கும் தாதாவிடம் அவனது அடிப்பொடிகள் சமர்த்தாக வந்து கலெக்சன் சமர்ப்பிப்பது போல! ஒளியின் திசை வெளிநோக்கியது.ஒலியின் திசை உள்நோக்கியது. 112 தந்த்ரா த்யானங்களில் ஒன்று ஒலியை கவனிப்பது. நமக்கு சுற்றிலும் கேட்கும் ஒலிகளை , நாய் குரைப்பதை, யாரோ இருமுவதை, வண்டி போவதை. பாத்திரம் கீழே விழுவதை,காக்காய் கத்துவதை அப்படியே மனத்தின் குறுக்கீடு இல்லாமல் கேட்பது. இது நமக்கு அமைதியைத் தருமாம். (ஞானத்தைக் கூட) காது வலி சரியானதும் இதை முயற்சி செய்து பார்க்கலாம் என்று இருக்கிறேன்.
ஐந்து
======
ஒரு ஹைக்கூ
கண்ணாடியில்
என்னையே
பார்த்துக் கொண்டிருக்கும் போது
திடீரென்று தோன்றுகிறார்-
என் அப்பா!
ஆறு
======
ஒரு ஓஷோ ஜோக்குடன் முடித்துக் கொள்கிறேன். அய்யோ காதுக்குள் தேள் ஊறுவது போல இருக்கிறது. என் ஆயிரக்கணக்கான வாசகர்களில் (சரி சரி கூல் டவுன்) டாக்டர்கள் யாரும் இல்லையா?
பெர்னி அவன் மனைவியுடன் தன் நண்பன் மோரிஸ் அளித்த விருந்து ஒன்றுக்கு சென்றிருந்தான். விருந்தின் போது தன் மனைவியை அடிக்கொரு முறை 'மானே, தேனே, செல்லம், கன்னுக்குட்டி, டார்லிங், புஜ்ஜியம்மா, டியர், ஸ்வீட் ஹார்ட் என்றெல்லாம் அழைத்துக் கொண்டிருந்தான். விருந்து முடிந்ததும் மோரிஸ்-ஸின் மனைவி ஆர்வம் தாங்க முடியாமல் "உங்களுக்கு கல்யாணம் ஆகி நான்கு வருடம் ஆகிறது.இன்னும் உங்கள் மனைவியை இப்படி செல்லமாக அழைப்பது வியப்பாக இருக்கிறது"என்றாள்.. பெர்னி மெல்ல அவளிடம் குனிந்து 'ஆக்சுவலி நான் அவ பேரை மறந்துபோய் மூணு வருஷம் ஆகிறது' என்றான்.
சமுத்ரா
16 comments:
தெய்வீகத்தின் உடனான காதலில் வலிகள் அதிகம்.மனிதக் காதலியாவது நாலு நாள் பின் தொடர்ந்தால் ஐந்தாம் நாள் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பாள். தெய்வம் அவ்வளவு சீக்கிரம் RESPOND செய்யாது.அந்தப் பக்கத்தில் இருந்து பதில் வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
ஹா.. ஹா.. காதலி உடனே சொல்லி விட்டால் த்ரில் போய் விடும்.
படிக்க ஆரம்பித்ததும் கடைசி பாரா வரை சுவாரசியமாக்கியது உங்கள் எழுத்து நடை.
// காதல் என்பது உடலைத்தாண்டிய ஒரு தெய்வீக உணர்ச்சி //
சுத்த பேத்தலாக இருக்கிறது... மேற்கத்திய சிந்தனையாளர்கள் சொல்வது தான் சரி... மனோதத்துவ நிபுணர்களும் அதையேதான் சொல்கிறார்கள்...
இன்றும் கூட காதல் என்பது நாகரீகப்படுத்தப்பட்ட காமம் தான் என்று சில பேரும் காதல் என்பது உடலைத்தாண்டிய ஒரு தெய்வீக உணர்ச்சி என்று சில பேரும் சண்டை போட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
..... psychology vs physiology
:-)))
மூன்று - சிந்திக்க ; ஐந்து - ரசிக்க.
கஜல் அருமை நண்பரே
/உன்-
உலகுக்கு என்னை உருப்பெருக்கிக் கொள்ளும் வில்லை
என்னிடம் இல்லை.
நீயே
உன்னை சிறியதாக்கிக் கொண்டு-இந்த
சிறியவனைத் தேடி வா, சீக்கிரம்! /
நீங்கள் காதல் கவிதை எழுதினாலும் அறிவியல் இருப்பது போல் புலப்படுகிறது.
இந்த வரிகள் சென்ற பதிவின் சிறியது,பெரியது பற்றி கூறுவது போல் ஒரு பிரமை.
சிலேடையில் எழுதப்பட்டதா.இல்லை எனக்கு மட்டும் தோன்றுகிறதா!!!!!
எப்படி எனினும் வாழ்த்துக்கள்.
நன்றி
//கண் வலித்தால் பார்ப்பது கஷ்டம். கை வலித்தால் எழுதுவது கஷ்டம். மூக்கு வலித்தால் சுவாசிப்பது கஷ்டம். காது வலித்தால் கேட்பது கஷ்டமா? இல்லையே.காது கொஞ்சம் ஸ்பெஷல் போல இருக்கிறது//
:):):)
இந்தக் காது வலியால் நானும் ரொம்ப பாதிக்கப் பட்டிருக்கிறேன். ரொம்ப கொடுமை..
\\காப்பியும் ஒரு போதை தான் என்று தோன்றுகிறது.\\ சந்தேகமே வேண்டாம், இது போதைதான்.
\\இந்திய கிரிக்கெட் அணி. உலகக் கோப்பையை வென்றதால் மட்டுமே இந்தியா தான் கிரிக்கெட் சாம்பியன் சச்சின் தான் எங்கள் கடவுள், கிரிக்கெட் வீரர்கள் எல்லாரையும் பாரத ரத்னா(?) ஆக்குங்கள் என்றெல்லாம் கொஞ்சம் ஓவராக எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டோம்.\\ இந்தியாவில் உலகக் கோப்பையை நடத்தியதால் ஜெயிச்சனுங்க, இங்கிலாந்தில் நடத்தியிருந்தால் முதல் ரவுண்டிலேயே வெளியே வந்திருப்பானுங்க, ஆனாலும் நம்மாளுங்க அவனுங்களை தலை மேல தூக்கி வச்சிக்கிட்டு அடிக்கிட்டுத்தான் இருப்பானுங்க. இவனுங்க, உடலுக்கு ஆரோக்கியம்[?] தரும் பெப்சி விளம்பரத்தில் நடிப்பதற்கே பாரத ரத்னா கொடுக்கணும். டெண்டுல்கர் இன்னொரு வீணாப் போனவன். என்னைக்கும் அணி ஜெயிக்கிறதுக்கு ஆடாதவன். சொந்தப் பணத்தை பெருக்குவதற்கு ஹோட்டல் அது இதுன்னு எல்லாம் பண்ணிகிட்டான், கார் இறக்குமதிக்கு வரி கட்டாதவன், சமீபத்தில் தன்னை நடிகன் என்று சொல்லி [அமிதாப் தன்னை விவசாயி என்று சொன்ன மாதிரி!!] ஏதோ பணம் ஏமாத்தியிருக்கான். நம்ம சனம் இவனுங்களுக்கு முக்கியத் துவம் கொடுப்பதை விடுற அன்னைக்குத்தான் நாடு உருப்படும்.
உலகுக்கு என்னை உருப்பெருக்கிக்கொள்ளும் வில்லை
என்னிடம் இல்லை. வில்லை...?You mean tablet.?
பழனியில் காதுக்கென்றே ஒரு ஸ்பெஷல் சித்தமருத்துவர் இருக்கிறார் என்று கேள்வி..!!
:))
காது வலிக்கு டாக்டரைப் பாருங்க..
கண்ணாடியில்
என்னையே
பார்த்துக் கொண்டிருக்கும் போது
திடீரென்று தோன்றுகிறார்-
என் அப்பா!
--
சில சமயங்களில் சமுத்ராவின் பதிவுகளோடு நாட்கள் ஆரம்பிப்பது சுகம்
காத்து வலிக்கு நல்ல மருத்துவர்:
சாமிகிரி சித்தர்
04222473291
04222234215
9444701221
இது தொலைக்காட்சியில் பார்த்து குறித்தது, [வெகு வருடங்களுக்கு முன்னர்], காத்து கேளாத நிலையில் உள்ளவர்களையும் குணப்படுத்துகிறார். அவர் முகத்தைப் பார்த்த போது அவர் உண்மையான மருத்துவர் என்று மனதில் தோன்றியது, முயற்சித்துப் பார்க்கவும்.
புஜ்ஜியம்மா? கேள்விப்படாத term of endearment.
நல்ல நகைச்சுவை. காதுவலிக்கு மருத்துவம் பார்த்தால் கண்வலியில் கொண்டுவிடப்போகிறது, கவனம் :)
தளத்த்தின் அகலத்தை குறைத்தால் நல்லா இருக்கும். உங்களுக்கு காது வலிக்கிறது. படிக்கும் எங்களுக்கு கண் வலிக்கிறது :)
ஓஷோ ஜோக், அவரை மிஞ்ச ஆளில்லை :)
காதலை காமமென்றால் அடிக்க வருவார்கள்... நான் துணை ஆசிரியராக இருக்கும் அனுபவ ஜோதிடம் தளத்தில் இல்லறம் எனும் தலைப்பில் எழுதிவருகிறேன். நேரமிருந்தால் பார்க்கவும்...
கட்டுரைக்கு தேவையான ஓவியம் வேண்டுமானால் என்னை அணுகவும்... இல்லை நீங்களாகவே முயற்சி செய்கிறேன் என்றால்... வாழ்த்துக்கள்... தொடர்ந்து வரைந்து ஓவியனாக மாறுங்கள்...
கேரிகேச்சர் குறித்தும் ஒரு கலைடாஸ் பண்ணுங்க ( பண்ணித்தமிழ் :))
வாருங்கள் இங்கே... கேரிகேச்சர்
. வில்லை...?You mean tablet.?
It means 'Lens'!
Post a Comment